Monday, July 24, 2006

வாழ்க சனநாயகம் - 2

திரு நாகை சிவா அவர்கள் வாழ்க சனநாயகம் என ஒரு அருமையான் பதிவை இன்று வெளியிட்டார்கள். அதில் அவர் தங்கத்தலைவ்ரைப் பற்றி சிலாகித்திருந்தார்.

இங்கே நான் தானைத் தலைவர், திரா'விட' குடிதாங்கி பகுத்தவறிவின் பரிணாம வளர்ச்சி, கலைஞர் கருணாநிதி அவர்களின் சனநாயாகத்தைப் பற்றி சிலாக்கிக்கிறேன்.

நிருபர் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, என் எல் சி விவகாரத்தில் மத்திய அரசை நிர்பந்தித்ததைப் போல் பெட்ரோலியப் பொருட்களின் வரியை குறைக்கச் சொல்லி மத்திய அரசை நிர்பந்தித்து ஏழை மக்களுக்கு உதவலாமே?

கருணாநிதி: வரியா வர்ர்ரியா நீயும் நானும் போரட்டத்தில் குதித்து தீ குளிக்கலாம் வர்ர்ரியா?


ஆஹா என்ன தமிழ்.... என்ன வார்த்தை பிரயோகம்.... அந்த கால ஆதிகேசவனல்லவா இன்றைய கலைஞர்.. தீக்குளிக்க பத்திரிக்கை நிருபர், பதவிக்கு மகனும் பேரனும்.

இதுதான் சனநாயகம்... சனநாயக வாழ்த்துக்கள் அவ்வப்போது தொடரும்..


பி.கு.

நன்றி துக்ளக்

கால்கரி நெரிசல் (Calgary Stampede)-Updated


இந்த வருடம் Calgary Stampede அல்லது பசுப்பையன்களின் திருவிழாவிற்கு சென்று எடுத்தப் படங்கள்.

மாடுபிடிக்கும் விளையாட்டிற்கு என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. மாடுகள் பாவம் என்னைப் பார்த்து மிரண்டுவிட்டதால்.

மேலே படத்தில் என் சீடனின் சாகசம்.



சும்மா ஜாலியாக ஒரு கச்சேரி


மாடு பிடிக்கும் போட்டியில் நடுவராக நான் அமர்ந்து எடுத்த போட்டோ
மாட்டுச் சந்தையில் ................

என்னுடைய வருங்கால வாகனம்

Photobucket - Video and Image Hosting

என்னைப் பார்த்ததும் பயத்தால் புறம்முதுகு காட்டும் பயந்தாங்கொள்ளிக் குதிரை

Photobucket - Video and Image Hosting

அக்குதிரையின் முன் வீரத்துடன் நிற்கும் நான்......(ஹி..ஹி...)
என் வீரத்தைக் கண்டு வியக்கும் வெள்ளைக்காரக் குழந்தைகள்

மேடையில் மக்களை ஹிப்னாடிச தூக்கத்தில் ஆழ்த்திய என் சீடனின் சாதனை

வீர நடை நடந்து.......


கனேடிய இராணுவ வீரனுக்கும்,வீராங்கணைக்கும் ஆலோசனை வழங்கும் கால்கரி சிவா


சில கலர் படங்கள்....

Photobucket - Video and Image Hosting

என்ன வெயில்...என்ன வெயில்........


Photobucket - Video and Image Hosting


நாய் தோலில் காலணி............................



Photobucket - Video and Image Hosting

சமத்தில்லைய்யா....சாப்ப்பிடு...அப்பதான் சாக்லெட் வாங்கி தருவேன்......



Photobucket - Video and Image Hosting
ரெண்டு பேரும் குட்பாய்ஸ்..... மம்மு சாப்திட்டு மாடு பிடிக்க போகணும் ஒ.கே



பின்குறிப்பு : சில படங்கள் இணையத்தில் சுட்டவை. என்னுடைய புது state-of-the-art காமிராவை என் மகன் சுட்டுவிட்டுதால்..என்னுடைய புராதான காமிராவில் எடுத்தப் படங்கள். ஆகையால் என் முழுத்திறமையும் காட்ட முடியவில்லை :)

Friday, July 14, 2006

இரண்டே இரண்டு வீரர்களுக்காக....

இரண்டே இரண்டு வீரர்களுக்காக இஸ்ரேல் லெபனானை தாக்குகிறது. லெபனானின் தீவிரவாத அமைப்பான ஹெஸ்பொல்லா இரண்டு இஸ்ரேலிய இராணுவவீரர்களை கொல்லவில்லை கடத்திதான் இருக்கிறது. அதற்காக லெபனானின் மீது விமான தாக்குதல் இஸ்ரேல் நடத்தியுள்ளது. மேலும் ஹெஸ்போல்லாவை அடக்கும் வரை ஓய்வதில்லை என சூளுரைத்துள்ளது

வழக்கமாக வரும் புளுகல் புலம்பல் லெபனான் அரசாங்க மிடமிருந்து. "எங்களுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கு சம்பந்தமில்லை. ஆனால் ஹெஸ்பொல்லா எங்கள் நாட்டில் உள்ளார்கள் அவர்கள் இருக்கும் ஏரியா எங்களின் அதிகாரத்தில் இல்லை".

புஷ்ஷிடம் லெபனான் கதறல். உலக நாடுகளின் தோளில் சாய்ந்து கண்ணீர்

ஏதோ வழக்கமாக கேட்கும் வசனமாக இருக்கிறாதா?

அதாங்க நம்ம முஷ்ராப் அடிக்கடி புலம்புவார்.

"எங்கள் நாட்டில் தீவிரவாதிகளே இல்லை ஆனால் அவர்கள் இந்திய எல்லையை தாண்டியவுடன் இந்தியாவின் ஆளாதிக்கமும் ஆணவமும் அவர்களை தீவிரவாதிகளாக மாற்றிவிடும். அதற்கு நான் பொறுப்பா?"

இந்த உளவாளி ஜெனரலுக்கு நம் நாட்டு அறிவுசீவி பத்திரிக்கைகள், டீவிகள் நல்ல கவரேஜ் தரும்.



இஸ்ரேலின் சீற்றம் அறச்சீற்றம்........

நம்மாட்கள்.........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Wednesday, July 12, 2006

மும்பை நண்பரிடமிருந்து வந்த கடிதம்

திரு I.A.J. என்னுடன் கல்லூரியில் பயின்ற நண்பர். பழகுவதற்கு இனிமையானவர். இவர் தற்சமயம் முமபையில் வசிக்கிறார். இவரும் இவரின் குடும்பத்தினரும் நலம். ஆனால் இவருடன் வேலைப் பார்ப்பவர்களில் இருவர் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் மாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் தீவிரவாதிகளுக்கு பார்வர்ட் செய்த மெயில் இதோ

---------------------------------------------------------------------------------------------
Dear Terrorist,

Even if you are not reading this we don't care.
Time and again you tried to disturb us and disrupt our life - killing innocent civilians by planting bombs in trains, buses and cars.

You have tried hard to bring death and destruction, cause panic and fear and create communal disharmony but everytime you were disgustingly unsuccessful.

Do you know how we pass our life in Mumbai? How much it takes for us to earn that single rupee? If you wanted to give us a shock then we are sorry to say that you failed miserably in your ulterior motives.

Better look elsewere, not here.We are not Hindus and Muslims or Gujaratis and Marathis or Punjabis and Bengaliies. Nor do we distinguish ourselves as owners or workers, govt. employees or private employees. WE ARE MUMBAIKERS (Bombay-ites, if you like). We will not allow you to disrupt our life like this.

On the last few occassions when you struck (including the 7 deadly blasts in a single day killing over 250 people and injuring 500+ in 1993), we went to work next day in full strength.

This time we cleared everything within a few hours and were back to normal - the vendors placing their next order, businessmen finalizing the next deals and the office workers rushing to catch the next train. (Yes the same train you targetted)

Fathom this: Within 3 hours of the blasts, long queues of blood donating volunteers were seen outside various hospital, where most of the injured were admitted. By 12 midnight, the hospital had to issue a notification that blood banks were full and they didn't require any more blood.

The next day, attendance at schools and office was close to 100%, trains & buses were packed to the brim, the crowds were back.The city has simply dusted itself off and moved one - perhaps with greater vigour.

We are Mumbaikers and we live like brothers in times like this. So, do not dare to threaten us with your crackers. The spirit of Mumbai is very strong and can not be harmed.

Please forward this to others. U never know, by chance it may come to hands of a terrorist in Afghanistan, Pakistan or Iraq and he can then read this message which is specially meant for him!!!With Love,From the people of Mumbai (Bombay) "

------------------------------------------------------------------------------------------------

இதுதான்யா வீரம்

Monday, July 10, 2006

நீங்கள் தேவதூதரா? - இறுதி பதில்


முகமது இவர்தான் கடவுளின் கடைசி தூதர்.

இவருக்கு 9 மனைவியர்.

தூதருக்கு இது சரி.

அந்த காலத்தில் ஒருவரின் மதிப்பு அவர் மணந்த/புணர்ந்த பெண்களின் எண்ணிக்கையில் இருந்தது.

இவரைத்தான் கடவுள் அவரின் கடைசி தூதுவராக தேர்ந்தெடுத்தார் .

இந்த மனிதர் பெண்களை ஒரு கால்நடைகளைப் போல் நடத்தினார். பெண்களை மனித இனமாகவே மதிக்கவில்லை இவர். ஆனால் இது ஒன்றும் இல்லை அவருடைய வாழ்க்கையைப் பார். எத்தனை கொலைகள் எத்தனை போர்கள். கடவுளின் வார்த்தைகளைப் பரப்ப மனிதர்களை கொன்றுக் குவித்தார். அமைதி மார்க்கத்தைப் பரப்ப கொலைகள்.


இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் என்று பொருள்.

முகமதுவின் வாளில் அமைதி என் மார்க்கம் (Peace is my Message) என எழுதியிருக்கும்.

ஆனால் அங்கே ஒரு நிபந்தனை நீ முகமதிஸத்திற்கு, இஸ்லாத்திற்கு மாறினால் அமைதி உனக்கு. இல்லையென்றால் அவர் உன்னை கொன்று மேலும் நீ பாவங்கள் புரியாமல் இருக்க உனக்கு அவர் உதவுவார்.

உன் நன்மைக்காக உன்னைக் கொன்று அன்பை செலுத்தும் அன்பின் உருவம் அவர்.

அவர் அருகிலா எனனை அமர சொல்கிறாய்?


பரசுராமர் ஒரு அன்ஸாவதாரம். அதவாது அவர் முழுமையான அவதாரமல்ல.

இரண்டாவது முக்கியமான அவதாரம் இராமர். இவர் இந்தியா முழுவதும் வணங்கபடும் ஒரு முழு முதல் கடவுள்.

(இராமயணமத்தை டிவீயில் போட்டு ராவும் நேரத்தில் நீ வடபழனியில் கோழி வாங்கினதை மறந்து விட்டாயா சிவா?

மறக்கவில்லை ஓஷோ, அப்போது தான் கோழிக் கடையில் கூட்டம் கம்மியாக் இருக்கும்.)


ஏன் அவ்வாறு அவர் வணங்கபட்டார்? தந்தையின் முட்டாள் தனமானக் கட்டளையை சிரமேற்று அடிபணிந்ததால்.

கலாசாரத்திற்கு, தந்தைக்கு, முன்னோருக்கு, இறந்த காலத்திற்கு இறந்தவர்க்கு இவர்களுக்கு அடிபணிந்ததால் இந்துக்கள் இவரை தெய்வமாக்கினர்.

இவரின் மனைவி சீதா இவரைப் பின் தொடர்ந்தார். இந்தியாவில் பெண் என்பவள் தனக்கென்று ஒரு மனமில்லாமல் கணவனை நிழலாக பின் தொடரவேண்டும். அப்போது தான் அவள் நல்லவள் இல்லையேல் விபசாரி.

அவள் நிழலாக ராமரை பின் தொடர்ந்தாள் ஆனால் ராவணனால் கவரப்பட்டாள். ராமர் 3 வருடங்கள் தேடி ஆடகளை சேர்த்து போரிட்டு சீதையை மீட்டார். மீட்டவுடன் உடனையாக சேர்த்துக் கொண்டாரா என்றால் அதுதான் இல்லை.

அக்னி பிரவேசம் அவளின் கறபை சோதிக்க. இவரின் கற்பை யார் சோதிப்பது. ஆண் பெண்ணின் கற்பைப் பற்றி கேள்வி கெட்காலும் ஆனால் பெண் பேசக்கூடாது.

அக்னி ப்ரவேசம் என்பது என்ன ஒரு மடத்தனமானது.

நீ 2 +2 = 4 என்று கூறினால் நான் நம்பமாட்டேன். அந்த விளக்கில் கையை வை. அந்த் தீ உன் விரலை சுடாவிட்டால் 2+2=4 இல்லையேல் 6. இந்த அளவிற்கு மடத்தனமானது அந்த அக்னிப் பரீட்சை.

சரி ஊருக்கு வந்தார்கள் மக்களுக்கு சந்தேகம். உடனே ராமர் சீதையை காட்டுக்குத் துரத்தினார். மக்களின் நம்பிக்கையின்மை அதிகாரத்திற்கு கேடு. ஆகையால் தான் சீதையை காட்டுக்குத் துரத்தினார் ராமர். இவர் ஒரு அரசியல் வாதி ஒரு மூன்றாந்தர அரசியல் வாதி. இவரைத் தான் இந்துக்கள் தெய்வமாக வண்ங்குகின்றனர்.

இவரும் பூரணவதாரம் இல்லை.

இந்துகளின் பரிபூரண அவதராம் கிருஷ்ணரை போல் பலே கில்லாடி யாருமில்லை.

முகமதுவிற்கு 9 மனைவிகள் தான் அதைக் கேட்டு ஆச்சரியமடைந்தாய் ஆனால் கிருஷ்ணருக்கோ 16000 மனைவிகள்.

நான் இதைக் கதை என்று நினக்கவில்லை. உண்மையென்றே கருதுகிறேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் ஹைதரபாத் நிஜாமிற்கு 500 மனைவிகள் இருந்தனர். 5000 வருடங்களுக்கு முன் சற்றே அதிகமாக் அதாவது நிஜாமை விட 32 மடங்கு அதிகமான மனைவியர் கொண்டிருந்தார் கிருஷ்ணர். இது சாத்தியம். அனைவரையும் சட்டபடி மணந்தாரா என்றால் இல்லை. கள்ளத்தன்மாக....

இவர்தான் பூரண அவதாரமாக இந்துக்களால் கொண்டாடப் படுகிறார்.

இவர்களுடன் இருக்க நான் விரும்பவில்லை.

நான் உன்னை போல் ஒரு மனிதனாக இருப்பதையே விரும்புகிறேன்.

என்னைச் சங்கடத்தில் மாட்டிவிடாதே.

நான் தேவதூதராக இருக்கவேண்டுமென்றால் யேசுவைப் போல் தண்ணீரில் நடக்கவேண்டும். கலீலீ ஏரியில் பாறைகள் எங்கிருந்தன என்பது யேசுவிற்கு தெரிந்திருக்க வேண்டும். தண்ணீரில் எப்படி நடக்க முடியும்

நான் அற்புதங்கள் நடத்திக் காட்டவேண்டும். அற்புதங்கள் இல்லாமல் நான் எப்படி தேவதூதன் ஆக முடியும்?.

என்னுடைய நணபர் ஒருவர் கல்கத்தாவில் இருந்தார். இவர் ஒரு சூபி. ஒரு நாள் இவர் ஹௌரா ஸ்டேசனில் ஒரு அற்புதததை நடத்திக் காட்டினார். இவரிடம் டிக்கட் கேட்ட டிடிஈ இடம் இவர் டிக்கட் காட்டமுடியாது என அடம்பிடித்தார்.

டிக்கட் பரிசோதகர் இறங்க சொன்னார்.

என்னை கழுத்தைப் பிடித்து தள்ளினால்தான் இறங்குவேன் என்றார்.

டிடிஈ யும் அவ்வாறே செய்தார்.

இந்த சூபி ப்ளாட்பாரத்தில் இறங்கி நான் இல்லாமல் வண்டி எவ்வாறு நகரமுடியும் என சவாலிட்டார். இந்த டிடிஈ மன்னிப்பு கேட்டால் ஒழிய வண்டி நக்ராது என்று சூழுரைத்தார்.

இஞ்ஜீனியர்கள் எவ்வள்வு முயன்றும் வண்டி நகரவில்லை.

கூட்டம் கூடியது ரகளை நடந்தது.

கடைசியில் டிடிஈ மன்னிப்புக் கேட்டதும் வண்டி நகர்ந்தது.

என்ன அற்புதம் . அவர் வங்காளம் முழுவதும் பிரபலமானர், அவர் செய்த அற்புதம் என்னவென்றால் அந்த டிடிஈ, டிரைவர் மற்றும் எஞ்ஜினியர்க்கு லஞ்சம் அளித்ததே.

என்னால் அற்புதங்களை நடத்த முடியாது. அற்புதங்கள் என்றைக்குமே நடந்ததில்லை.

இயற்கை உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றும் கொடுத்ததில்லை.

உனக்கும் எனக்கும் யேசுவிற்கும் மோசஸிற்கும் கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும் இயற்கையின் விதிகள் ஒன்றே.

அற்புதங்கள் செய்பவர் இயற்கையை மட்டும் ஏமாற்றவில்லை உன்னையும் தான்.

இயற்கைதான் எல்லாமே அதற்கு மேல் எதுவும் இல்லை.

இயற்கையுடன் இசைந்து வாழ்.

இயற்கையுடன் இரண்டற கல

காலையில், மாலையில், இரவில், இன்பத்தில், துன்பத்தில், வாழ்வில், சாவில் இயற்கையுடன் இசைந்திரு முழுவதுமாக..

சரியா சிவா

சரிதான் ஓஷோ

முற்றும்.........

இதன் ஆங்கில மூலம் இங்கே

Friday, July 07, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.4


சவூதியில் தணிக்கை கடுமை மற்றும் முட்டாள் தன மானது. அருகில் உள்ள காசட் கவரை பாருங்கள். இதில் கமலஹாசனும் ராதாவும் நடன மாடுகிறார்கள். ராதாவின் உருவம் கருப்பு மையால் அழிக்கப் பட்டுள்ளது. கருப்பு மையால் படத்தை அழித்தால் உள்ளே உள்ள பாடல்கள் மாறி விடுமா.

இதே போல்தான் வாரபத்திரிக்கைகளிலும், தினபத்திரிக்கைகளிலும் ஆங்காங்கே கருப்பு மை இருக்கும். அது

ஒரு ஆணும் பெண்ணும் அருகில் இருந்தாலோ இல்லையேல் இந்து கடவுள்களின் படங்கள் இருந்தாலோ உடனே அழித்து விடுவர்.

சரி வீடியோ காசெட்டுகள். கமலஹாசனும் கௌதமியும் அருகருகில் வந்தால் போதும் திரையில் ஒரு பூ வந்துவிடும். இதெல்லாம் என்னை மாதிரி அப்பாவியாக வெளியே கடையில் வாங்கும் ஆட்களுக்குத்தான் . அங்கிருக்கும் பிலிப்பினோ நண்பர்களை அணுகினால் குப்பை குப்பை யாக நீலப் படங்கள் கிடைக்கும். நான் ஏன் இந்த காசெட் படத்தினைப் போட்டேன் என்பதற்கு விளக்கம் பின் குறிப்பில்


திரு வடுவூர் குமார் அவர்கள் என்னுடைய முந்தைய பதிவில் இட்ட பின்னூட்டம்

சிவாஅந்த அமைச்சருக்கு ஒரு பெரிய வாழ்த்து கொடுங்க.அருமையான சிந்தனை.தான் வாழ அடுத்தவனை உபயோகப்படுத்தும் போதே அவனுடைய நலன்களை பார்பவரை மனிதனாக பார்க்கமுடியவில்லை.அதற்கு மேலாகத்தான் பார்க்கவேண்டும்."சமுதாய நலனே முக்கியம்"-என்ன வார்தைகள்.மனதை நெகிழ வைக்கின்றன.


குமார்,

இந்த பேட்டியைக் கேட்கும் போது எனக்கு அபுதாபியில் என் நண்பருக்கு காரியதரிசியாக இருந்த அம்மையாரின் ஞாபகம் வந்தது. இவருடைய பெயரை அனிதா என்று வைத்துக் கொள்வோம். அனிதாவிற்கு 5 வயது இருக்கும் போது அவருடைய அப்பா அபுதாபிக்கு குடிபெயர்ந்தார். அப்போது அமீரகம் என்ற நாடு இல்லை. அபுதாபி, துபாய் சார்ஜா போன்ற நாடுகள் சிறு சிறு ராஜ்ஜியங்களாக் இருந்தன. (1960களில்) அப்போதெல்லாம் அங்கே இந்தியா ரூபாய்கள் புழக்கத்தில் இருந்தன. இன்னும் சில் வயதான அரேபியர்கள் பணத்தை ரூபாய் என்றுதான் அழைப்பார்கள்.

அனிதாவின் குடும்பம், நண்பர்கள் என நாளடைவில் ஒரு சின்ன சமுதாயமே இங்கே குடியேறினர். இவர்கள் கோவாவை சேர்ந்தவர்கள். அனிதா அங்கேயே இவரைப் போல் வந்த வரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர் அங்கேயே பள்ளிப் படிப்பை படித்து கல்லூரிப் படிப்பிற்கு மட்டும் இந்தியாவிற்கு வந்து சென்றவர்.

இவருக்கு இந்தியாவில் வேறு யாரும் இல்லை. இவர் அங்கெ வாழ்வது கடந்த 35 வருடங்களாக. இவருக்கு அபுதாபி என்ற காங்கீரீட் காடுகளின்றி வேறெதுவும் தெரியாது. இவரின் குழந்தைகளும் அவ்வாறே. ஆனால் இவர்கள் இன்னும் இந்திய குடிமக்களே. கடந்த 35 வருடங்களாக் இவருக்கு இல்லையேல் இவரின் கணவ்ருக்கு தொடர்ந்து வேலைக் கிடைத்து வருகிறது. இவரும் இவரின் கணவ்ரும் சாதரண வேலையில் தான் இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் சேர்ந்து வேலை போனால் , இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் .

இருந்தால் வேலையில் இரு இல்லையேல் வெளியெறு. இதுதான் அரபு நாடுகளின் கொள்கை

இவர்கள் எங்கு போவர்கள். இரண்டு தலைமுறைகள் அநநாட்டிற்கு செய்த ஊழியத்திற்கு நன்றி கடன் இதுதானா. இவரைப் போல் அமீரகத்தில் சில ஆயிரம் பேர்களாவது இருப்பார்கள் என்பது என் ஊகம். இவர்கள் உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள்

பின் குறிப்பு.

திரு ஆசாத் அவர்களே, மேலே உள்ள காசெட்டின் படம் பாருங்கள். கமலஹாசன் பாடல்கள், ரஜினி பாடல்கள், திரையில் கர்நாடக இசைப் பாடல்கள், எம் ஜி ஆர் பாடல்கள், சிவாஜி பாடல்கள், சோக பாடல்கள், டப்பாங்குத்து பாடல் கள் என தாம்சன் கம்பெனியினர் காசெட்டுகள் வெளியிட்டனர். நேற்று என் வீட்டு பேஸ்மெண்டை குடைந்ததில் இந்த காசெட் கிடைத்தது. எம் ஜி ஆர் காசெட் இருக்கும் . இங்கில்லையென்றால் சென்னையிலோ மதுரரையிலோ என் வீட்டில் இருக்கும் இருக்கும் கிடைத்தவுடன் வெளிய்டுவேன்


திரு கேவி ராஜா அவர்களே, என் மனைவியை இஸ்லாமிய முறைபடி உடை அணிந்து போட்டோ எடுக்க சொன்னது உண்மை. அந்த போட்டோவும் என்னிடம் உள்ளது. மேலும் என் குடும்பத்தினருடன் எடுத்த போட்டோக்கள் ஆகியவைகள நான் வெளியிட விரும்பவில்லை. அந்த மெண்டல் கேஸ் உங்கக் குடும்பத்தினரை கேவலப்படுத்தியது மறந்துவிட்டதா.

பொய் என் இரத்ததில் இல்லை

தொடரும்.....

Thursday, July 06, 2006

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 4

Photobucket - Video and Image Hosting


யேசு சிலுவையில் அறைய பட இரண்டாவது காரணம் அவரே தான். சிலுவையில் அறைய போகும் விஷயம் அவருக்கு தெரிந்திருந்தது. அவருடைய இறுதி விருந்தில் அவரே கூறுகிறார் மறுநாள் தன்னை சிலுவையில் அறையபோவதாக.

தப்பித்திருக்கலாமே...... அப்போது அவருக்கு வயது 33 தான். சாகும் வயதா அது. வாழவேண்டிய வயதல்லவா ஏன் முயற்ச்சிக்கவில்லை. சாவை நோக்கி அவரே நட்ந்தார்... அதற்குதான் அவருக்கு சிலுவை..

கொலைக்கும் வன்முறைக்கும் என்றைக்கும் நான் உடந்தை இல்லை யேசு நல்லவர் அவர் பாட்டிற்கு அவர், 30 வருடங்கள் நாகரீக உலகமான எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் பிரயாணம் செய்து அரைகுறையாக கற்றுக் கொண்டதை 3 வருடங்கள் தான் போதித்தார்.

நானாயிருந்தால் ஏதோ மனம் பிறழ்ந்தவர் பிதற்றுகிறார் என் விட்டிருப்பேன். மீண்டும் ரோமனியர்களிடம் அடிமையான் இந்த யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்து அவரை தெய்வமாக்கி விட்டார்கள்..

யேசு என்ன கற்று தந்தார். உன்னை போல் உன் எதிரியையும் நேசி என்றார். முதலில் ஒருவர் தன்னை தானே நேசிக்கவேண்டும்.

எதிரியை நேசிப்பது சுலபம். அவ்வாறு நேசித்தால் நீ உயர்ந்தவனாக கருதபடுவாய். அந்த கருத்துக்காக உன்னால் எதிரியை நேசிக்க முடியும்.... தன்னைதானே நேசிப்பது மிக கடினம்.

நீ நீயாக இருக்கவே விரும்பவில்லை. அதாகவேண்டும் இதாகவேண்டும் இவனை போல் முன்னேறவேண்டும் என எப்போழுதுமே நினக்கிறாய்.

நீ நீயாகவே இருக்க விரும்பாத போது எப்படி உன்னை நீயே நேசிக்கமுடியும்..

யேசு சொல்கிறார் வெறுக்காதே அன்பை செலுத்து என்று இதையே இவருக்கு முன் வந்த புத்தரும் மகாவீரரும் லவோ சூ வும் கூறினார்கள்.

ஆனால் நான் சொல்கிறேன் அன்பும் வெறுப்பும் வேறு வேறு அன்று
இரண்டும் ஒன்றே.

அன்பு தலைகீழானால் வெறுப்பு.

அன்பு மறைந்தால் வெறுப்பும் மறையும்.

அன்பில்லாத இடத்தில் வெறுப்புக்கு என்ன வேலை?

இதை யேசு உணரவில்லை.

புரியாமல் அவர் வெளிஉலகத்தில் கற்று வந்ததை கிளிப் பிள்ளை போல் மீண்டும் மீண்டும் சொன்னார்.

அவர் பேச்சில் அவரே மயங்கி தான் ஒரு தேவதூதர் என அழைத்துக் கொண்டார்..

இந்த நினைப்புதான் அவர் சிலுவையில் அறைய பட இரண்டாவது காரணம்....


என்னைப் பார்த்து நீங்கள் 25 வது தீர்த்தாங்கரரா என வினவிகின்றனர்.

ஜைன மதத்தில் 24 தேவதூதர்கள் தான் இருப்பர் என அசைய முடியாத் ஒரு மூட தனமான நம்பிக்கை.

இந்த கடைசி தூதுவர்கான போட்டியில் புத்தரும் இருந்தார் என்பது தான் கவலையான சேதி. இந்த விஷய்த்தில் நான் புத்தரை மதிக்கவில்லை. இவரும் மஹாவீரரைப் பற்றி கிண்டல் செய்தார் அந்த 24 வது தூத்ர் போட்டியில் வெற்றி பெற.


மஹாவீரர் மட்டும் ஒழுங்கா? அவருக்குமுன் மஹாக்கலி கோசல் என்று ஒரு துறவி இருந்தார். அவர் ஒரு விபாசாரியின் வீட்டில் இறந்தாராம் அவர் இறக்கும் தருவாயில் நான் கடைசி தூதுவனில்லை மஹாவீரர் தான் உண்மையான தூதுவர் என் அந்த விபசாரியிடம் சொல்லிவிட்டு இறந்தாராம். இதைச்சொன்னது யாருமில்லை மஹாவீரரே தான். யார் அந்த விபசாரி? சாகும் தருவாயில் கோசல் ஏன் அங்கு செல்லவேண்டும்? அதைப் பற்றி சொல்லவேயில்லை. எல்லாம் பதவிக்காக தான்.

இந்த மாதிரி தேவதூத பதவி எனக்கு தேவையில்லை.. நான் சாதரண மனிதன் ...சிவா.. நான் நானாக இருக்கிறேன் ... நீ...-நீயாக இரு

ஒஷோவே இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா?

சிவா மேலும் சொல்வேன் கேள்

பரசுராமரை இந்துக்கள் ஒரு அவதாரமாக நம்புகிறார்கள்.

பரசுராமர் தன் தாயரை கொலை செய்தார் ஏனென்றால் அவருடைய தந்தையார் அவரின் மேல் சந்தேகம் கொண்டதால்..

எந்த கணவன் மனைவியிற்கிடையில் சந்தேகமில்லை. ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை இல்லாதால் தானே திருமணம் என்ற சட்ட பந்தம் இருக்கிறது. இல்லையென்றால் காதல் ஒன்றே போதுமே..

யாரும் காதலை நம்புவதில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. காதல் ஒரு மலரை போல் உண்மையானது. ஒரு நாள் மலரும் மணம் பரப்பும் பிறகு வாடி இறந்துவிடும். காகிதப் பூக்கள் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை. இந்த காகித பூக்கள் தான் திருமணம் என்ற சட்ட சம்பிரதாயம். காதல் சில நாட்களில் மறைந்து விடும். சட்டம் நிலைத்து நிற்கும்.
அங்கே காதல் இருப்பது போல பாசாங்கு இருக்கும். பாசங்கு எங்கு இருக்கின்றதோ அங்கே சந்தேகங்கள் கொடிக்கட்டிப் பறக்கும்.

உண்மையான காதலர்கள் இதை உணர்வார்கள். அங்கே அழகுணர்ச்சி மிகுந்திருக்கும். அந்த உணர்ச்சிகள் அவர்களை முழுமையாக்கும். அவர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பிறகு எல்லாம் முடிந்துவிடும். உண்மைக் காதலர்கள் ஒருவருக்கொருவர் கடமைப் பட்டிருப்பார்கள். அவர்கள் சணடையிடுவதில்லை. ஒருவருக்கொருவர் சில தெய்வீக தருணங்களைத் தந்திருப்பார்கள். இதை எப்போதும் நினந்திருப்பர். நல்ல நண்பர்களாக பிரிவர்.

காதலிருந்தால் எல்லாம் அழகாக இருக்கும் . காதலில்லையேல் எல்லாம் அசிங்கமாக இருக்கும். காதலில்லாத கணவன்/மனைவி வாழ்வது என்னென்று சொல்வது. விபசாரத்திற்கும் இதற்கும் வேறுபாடில்லை. திருமணம் என்ற சம்பிரதாயம் இந்த விபசாரத்தை சட்டமாக்குகிறது.

இயறகையாகவே பரசுராமரின் தந்தைக்கு அவரின் மனைவியின் மேல் சந்தேகமிருந்தது. ஏனென்றால் அவள் அதி அழகானவள்.

ஒரு நாள அவள் தூங்கும் போது அவள் தலையைக் கொய்ய அவருடைய தந்தை ஆணையிட்டார். தந்தையின் ஆணைக்கு அடிபணிவது தனயனின் கடமை என இந்து மதம் சொல்கிறது. அடிபணிதல் ஒரு நல்ல குணாதிசய்ம என் இந்து மதம் மட்டுமில்லை எல்லா மதங்களும் கூறுகின்றன.

ஆனால் நான் சொல்கிறேன். புரட்சி செய். புரட்சி தான் என் மதம்

அடிபணிய வைப்பது மததலைவர்களின் , அரசியவாதிகளின், கொடுங்கோலர்களின் சதி. அப்போது தான் அவர்கள் பிழைப்பு நடக்கும். அப்போது தானே மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும்

பரசுராமர் அவர் தந்தையின் வார்த்தைக்கு அடிபணிந்து பெற்ற தாயின் கொலை செய்து மாபெரும் பாவத்தை செய்துவிட்டார். பெற்றதாயை கொல்ல எந்த ஒரு கொடியனுக்கும் மனது வராது.

அதன் பிறகு அவரது தந்தையார் அவனை ஒரு கொடிய கொலைக்காரனாக மாற்றிவிட்டார். அவருடைய தந்தையார் ஒரு முனிவர் அவருக்கும் அரசருக்கும் தகறாரு வந்ததால் சத்திரிய குலத்தையே அழிக்க்கும் பட் மகனுக்கு உத்தரவிட்டார். மகனும் தந்தைக்கு அடிபணிந்து எல்லா சத்திரியர்களையும் 36 முறை அழித்தார்.

இவர் தனிமனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான், ஹிட்லர், ஸ்டாலின்(கருணாநிதியின் மகனல்ல), முசோலினி, மாசேதுங் இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளவிட அதிகம்.

சத்திரியா குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர்.
இவர் கடவுளின் அவதாரமென்றால் சாத்தானின் அவதாரம் யார்?

நான் நிச்சயமாக இந்த கேடு கெட்ட மனிதர்களைப் போல் இல்லை. நான் ஒரு சாதரணன்..

மேலும் சொல்வேன் சிவா...


தொடரும்.........

Wednesday, July 05, 2006

பரிசு பொருட்கள்

இந்தியாவிற்கு ஒவ்வொரு முறை விடுமுறைக்கு போகும் போதும் நண்பர்களுக்கும் உறவினருக்கும் பரிசு பொருட்கள் வாங்குவதில் மண்டை காயும். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் இந்த கவலையெல்லாம் இல்லை. ஆனால் இப்போது இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைப்பதால் எதை வாங்குவது என்று மண்டையை குடைந்து வாங்க வேண்ட்யுள்ளது. எனக்கு தெரிந்து நான் கிழே பட்டியல் இட்டுள்ள பொருட்கள் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். வலைப் பதிவு நண்பர்களே உங்களுக்கு தெரிந்தவைகளை பட்டியல் இடுங்களேன்.


1. பாட்டரி இல்லாத ப்யூஸ் ஆகாத டார்ச் லைட் .

இந்த டார்ச் லைட்டை 30 விநாடிகள் குலுக்கினால் சுமார் 5 நிமிடங்கள் எரியும். இதன் பல்ப் ப்யூஸ் ஆகாது. அடிக்கடி பவர் கட் ஆகும் ஊரில் உள்ளவருக்கு இது ஒரு நல்ல பரிசு





2. எல்லாவற்றையும் திறக்கும் ஆயுதம்

வீட்டில் பாட்டில் மூடி திற்க்கவில்லையா, ஷவர் ஹெட் கழட்டமுடியவில்லையா, சில குழாய்கள் கழட்டமுடியாமல் அடம் பிடிக்கின்றனவா. இதோ ஸ்ட்ராப் ரெஞ்ச். இது பிளம்பர் மற்றும் மெக்கானிக் நண்பர்கள் உறவினர்களுக்கு ஒரு உபயோகமான பொருள்



3. சூரிய சக்தி அலங்கார விளக்குகள்.

இந்த விளக்குகள் சூரிய சக்தியால் இயங்குகின்றன. பகல்முழுவதும் சூரிய வெளிச்சதில் மின்சாரம் உற்பத்தி செய்து இதில் உள்ள பாட்டரியை சார்ஜ் செய்யும். இரவானதும் தானக விளக்குகளை ஏற்றி அலங்காரம் செய்யும். தோட்டம், மொட்டை மாடி, வெராண்டா ஆகிய் இடங்களில் இதைப் பொருத்தலாம். வயரிங் தேவையில்லை


4. காரில் AC பவர்

இந்த converter காரின் 12V DC ஐ 120/230 AC ஆக மாற்றிவிடும். இதை வைத்து
லாப் டாப் மற்றும் DVD player களை இயக்கலாம். குழந்தைகள் வீடியோ கேம் ஆடலாம்

Photobucket - Video and Image Hosting

Tuesday, July 04, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.3

இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முனனிருந்த அடிமை முறையைக் காணலாம். உங்களின் எஜமானின் ஆதரவில்லாமல் ஒரு வேலையும் நடக்காது. அவரின் விருப்பத்திற்கு எதிராக வேறு வேலை மாற்றவோ அல்லது வேலையை விடவோ முடியவே முடியாது.

இவைகளைப் பற்றி 10.3 ல்


போன பதிவின் கடைசி வரிகள் மேலுள்ளவை.

இனி.....


அல்கோபார் நகரில் என் ப்ளாட்டுக்கு அருகில் உள்ள ப்ளாட்டில் என் நண்பர் ஒருவர் தங்கி இருந்தார். இவரது பெயரை ஜான்சன் என்று வைத்துக் கொள்வோம். இவர் என்னைப் போல் ஒரு பொறியாளர். மிகப்பெரிய அமெரிக்க கம்பனியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். இவர் அருகிலுள்ள ஒரு ரிபைனரி கட்டுமாண பணிக்களுக்காக அடிக்கடி சைட்டிற்கு செலவது வழக்கம். காலையில் சென்றால் மதியம் 4 மணிக்கு வீடு திரும்புவார்.

ஒரு புதனன்று அவருடைய மாமனார் திருச்சியில் ஒரு விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என ஆபிஸிற்கு போன் வந்தது. (நாங்கள் அங்கிருந்த காலங்களில் (1992-1997) எங்கள் வீடுகளில் போன் கிடையாது. செல்போனும் அப்போது இல்லை.). இது அவருக்கும் அவரது மனைவிற்கும் மிக அதிர்ச்சி தந்த செய்தி. இவர் உடனடியாக கிளம்ப வேண்டும். சவூதியின் சட்டபடி அந்நாட்டிலிருந்து வேளியேற Exit -Re-Entry Visa வாங்க வேண்டும். இந்த மாதிரி அவசரத்திற்கு இந்த விசா விமான நிலையத்தில் வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது (என்னே கருணை.... அரசாங்கமும் , மன்னரும் அன்பே உருவானர்கள்).. ஆனால் இந்த விசா வாங்க உங்களின் எஜமானரின் உத்தரவும் அதனுடன் உங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு உங்களின் மேய்ப்பாளரும் விமான நிலையத்திற்கு வரவேண்டும் . அப்போது தான் இந்த விசா கருணைக்கொண்டு தருவார்கள்.

ஜான்சன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவருடைய வெள்ளைகார மானேஜரை சந்தித்து உத்தரவையும் பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு அவருடைய மேய்ப்பாளரை தேடியிருக்கிறார். புதன் வார இறுதி அல்லவா, அவர் ஒய்வெடுக்க எஸ்கேப் ஆகியிருந்தார். அவரின் வீட்டைக் கண்டுபிடித்து போனால அங்கும் அவரில்லை. அவரில்லாமல் காரியம் நடக்காது. இருந்தாலும் முயற்சிக்கலாம் என நாங்கள் விமான நிலையதிற்கு முயற்சித்தோம்....ம்ம்ம்ம்ம்ம்.. மேய்பாளன் இல்லாமல் பேசவே முடியாது என்று விட்டார்கள். சரி வெள்ளைக்காரனை கூட்டிபோனால் காரியம் நடக்கும் என முயற்சித்தோம்... அப்போது அங்கே உள்ள அன்பே உருவான அரேபியர்கள் "என்ன மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறீகள் எதாவது குற்றம் செய்துவிட்ட ஓட நினைக்கிறீர்களா? " என கேட்டதில் ஜான்சன் உடன் சென்ற நண்பர்களும் அந்த வெள்ளைக் கார மானேஜரும் நொந்து சோகத்துடன் வீடு திரும்பினோம். அந்த சகோதரி அழுத அழுகை.........

நினைத்த நேரத்தில் சொந்த நாட்டிற்கு கூட திரும்ப முடியாத 2 மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை மிகக் கஷ்டமானது தான்

லேபர் காம்ப் அதாவது தொழிலாளர் முகாம்....

வரிசையாக கட்டைபெட்டிகளால் ஆன புறாக் கூடுகள் போல் வீடுகள்.. இதில் ஒவ்வொரு அறையிலும் 4 முதல் 6 பேர்கள் இரண்டடுக்கு கட்டில்கள். இதில் தான் தொழிலாளிகளின் வாழ்க்கை

ஒரு மாதமா..இரண்டு மாதமா... இல்லை இல்லை அவர்கள் அங்கு வாழும் வரை இது தான் அவர்களின் இருப்பிடம் (சுமார் 4 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை).

இவர்கள் நகரத்திற்கு அருகில் இருந்தால் சிறிதே பொழுது போகும்.


சில முகாம்கள் பாலைவனத்திற்கு நடுவில். சில சகோதரர்கள் அவர்கள் வாழ்ந்த 5 வருடங்களில் நகரத்தைப் பார்த்தது சுமார் 4/5 முறைதான்.

இதைப் பற்றிக் கேட்டால் "இங்கே அவர்கள் வந்தது வேலை செய்யதான்.. அவர்களுக்கெதுக்கு பொழுது போக்குகள்" என அரேபிய முதலாளிகள் கூறுவார்கள்.

இவர்களின் வாழ்க்கை மிகக் கடினமானது தான்


சரி நாகரீகத்தின் தொட்டில் அமீரகத்தில்...

லேபர் காம்ப் ஒரு தனி ஏரியாவில் கட்டி அவர்களை அங்கேய தங்க வைத்திருக்கிறார்கள். தினமும் இவர்களை ஒரு குப்பை லாரி போல் ஒரு லாரியில் ஏற்றி வேலைக்கு கூட்டி சென்று கூட்டி வ்ருவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு துபாயில் மட்டும்...இந்த மாதிரி லேபர்களை லாரிகளில் அழைத்து செல்லகூடாது என சட்டமிட்டு ப்ட்டாளிகளின் அன்பு தோழர்கள் என தங்களை வெளிபடுத்திக் கொண்டார்.

அமீரகத்தில் Exit -Re-Entry Visa தேவையில்லை ஆனால் பெரும்பாலான லேபர்களின் பாஸ்போர்ட் அவர்களின் மேய்ப்பாளர்களிடம் தான் இருக்கும். அவருடைய கருணை இல்லாமல் அவரால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது.

பெரும்பாலான வெள்ளை காலர் தொழிலாளிகளின் பாஸ்போர்ட் அவர்களின் கையில் தான் இருக்கும். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேறலாம். ஆனால் வேலை மாறவேண்டுமானால் அவருடைய எஜமானரின் ஒப்புதல் தேவை. இந்த காலங்களில் பன்னாட்டு கம்பெனிகளும் அரசாங்க கம்பெனிகளும் இந்த ரிலீஸ்களை வழங்கி அவர்கள் நாகரீகத்தின் தொட்டில் என பறை சாற்றுகின்றனர்.


இந்த இடத்தில் ஒரு சின்ன Comparison. கனடாவில் எண்ணை வளம் எடுக்க ஏராளமான தொழிலாளர்கள் தேவை படுகின்றனார். ஆனால் இவர்களின் குடியேற்ற சட்டங்கள் பொறியாளர்களையும், படித்த வெள்ளைகாலர் தொழிலாளிகளை மட்டும் அனுமதிக்கிறது.

ஒரு வானொலி பேட்டியில் இங்குள்ள மனித வள மேம்பாட்டு அமைச்சரிடம் நாமும் மத்திய கிழக்கு நாடுகளை போல் கூலி தொழிலாலர்களை அழைத்து வங்து செய்து பொருளாதாரத்தை உயர்த்தலாமே என கேள்வி கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : "நாமும் அரபுநாடுகளை போல் இந்தியாவிலிருந்தும் சைனாவிலிருந்தும் லேபர்களை அழைத்து வரலாம். ஆனால் அவர்களுடன் அவர்களின் குடும்பம் வரும். அதனால் அதிக வீடுகள் கட்டவேண்டிவ்ரும். பள்ளி கூடங்கள், மருத்துவ மனைகள், டாக்டர்கள், ஆசிரியர்கள்... என எல்லா வசதிகளும் செய்ய நாளாகும். அந்த லேபர்களை வேலை வாங்கி விட்டு அவர்கள் குடும்பம் மற்றும் மற்ற வசதிகள் இல்லமால் வாட நாம் சகல வச்திகளுடன் வாழ நம் மனம் வழி தருமா.

நம் சமுதாயம் அரபு சமுதாயத்தை போன்ற பிற்பட்ட சமுதாயம் இல்லை. நாம் காலத்தில் பின்னோக்கி செல்வது உசிதமில்லை. பொருளாதாரத்தை விட சமுதாய நலனே முக்கியம்"

இதுவல்லவோ மனித நேயம்..

சரி கனடாவில் லேபர் காம்ப் இல்லையா? இருக்கிறது.

அதே போல கட்டை புறா கூடுகள்.

ஆனால் அறைக்கு ஒருவர், டெலிபோன், டிவீ, இணையம் போன்ற வசதிகள்.

வார கடைசியில் குடும்பத்தினரை சங்திக்க தனி விமானம். நகரத்தில் கிடைக்கும் சம்பளத்தைவிட 25% முதல் 50% அதிக சம்பளம் போன்ற வசதிகள் .

இதுதான் மனித நேயம்..

அரேபியாவில் இருப்பது ஆளாதிக்கம்...பணத்திமிர்....



தொடரும்.....