Sunday, January 14, 2007

இந்த கதையையாவது குமுதம் வெளியிடுமா?

முன்குறிப்பு : பிரபல எழுத்தாளர் சுஜாதா ஒரு சப்பை மாட்டரை வைத்து கதை எழுதபோக, பாலபாரதி, குழலி மற்றும் குப்புசாமி செல்லமுத்து எதிர்வினை ஆற்றினார்கள். இந்த மாதிரி சூடான விவாதங்களில் கலந்து கொண்டாலாவது இங்கே, கால்கரியில் வெப்பம் பூஜ்யத்திற்கு மேல் போகுமா என்ற வீபரீத சோதனை செய்யதான் இந்த கதைகள்.

என்னுடைய இரண்டு கதைகளின் முதல் கதை இது. இரண்டாம் கதை நாளை

இங்கே என் ஜாதி, என் உறவினர்களின் ஜாதி மற்றும் நண்பர்களின் ஜாதி பற்றி ஜாலியாக விமர்சனம் செய்யலாம். எனக்கு கோபம் வராது எனென்றால் நான் மானமிகு சிவா அல்ல சாதா சிவா தான்.

தலைமை செயலகம்

"அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது" என்றார்.

கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

அடிதாங்க முடியாத பிராமண மாமனாரை என்னி கண்ணீர் விட்ட கலைச்செல்வியின் கைத்தொலைபேசி சிணுங்கியது

"ஹலோ" இங்கே குழலி ஆரம்பித்திருந்தார் ... இனி நான்

"ஹலோ கல்ஸ்ம்மா. ஐ யாம் டாடி ஸ்பீக்கிங்" என்றது மறுமுனை.

தலைமை செயலகத்திலிருந்து கலைச்செல்வியின் தந்தையும் தமிழகத்தின் உள்துறை செயலாளருமான திரு. இனியன் IAS.

கலைச்செல்விக்கு ஆச்சரியமாய் இருந்தது கிரிஷை கட்டிக் கொண்டதிலிருந்து கொஞ்ச நஞ்சம் இருந்த தொடர்பையும் வெட்டிக்கொண்ட அப்பாவா என்று.

திருமதி வசந்தி இனியனும் IAS அதிகாரிதான். மண்டபத்தில் அகதிகள் முகாமின் கமிஷனர். ஆனால் கலைச்செல்வி 9 ஆம் வகுப்பு படிக்கும் போது விவாகரத்து பெற்று தனியாக சென்று விட்டார்கள். சிறு வயது முதல் போர்டிங் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை கலக்டர் பங்களாவிலும் கழித்த கலைச்செல்விக்கு கடி ஜோக் அடித்து தயிர்சாதம் சாப்பிட்டு தினம்தினம் வீட்டிற்கு போகும் கிரிஷ் ஐ பிடித்துவிட்டது. கலைச்செல்வியும் கிருஷ்ணமூர்த்தியும் லாப் பார்ட்னர், புராஜெக்ட் பார்ட்னாராகி ஒரே கம்பெனியில் வேலைக்கு போய், சிங்கபூரில் முதல் முத்தம், மையாமி பீச்சில் அதிக பட்ச அந்நியொந்நியமாகி சென்னையில் ரிஜிஸ்டர் கல்யாணமாகிவிட்டது. அதற்கப்புறம் இனியன் ஐ ஏ எஸ் செய்த தகிடுதங்கள் இவர்களை பிரிக்க முடியவில்லை. அவரும் ஒரே பெண்ணை மறந்து பல அரசியல் செய்து உள்துறை செயலர் அகிவிட்டார். பிற்பட்ட வகுப்பை சேர்ந்த இவரை உள்துறை செயலர் ஆக்கி ஆளும் கட்சி முதல்வர் நல்ல பெயரை மக்களிடம் பெற. இனியன் முதல்வருக்கு சலாம் வைத்து பல கோடிகளை சேர்த்தார். ஆனாலும் மகள் ஒரு பிராமண பையனைக் கட்டிக் கொண்டது இவரை அவ்வப்போது உறுத்தியது

" அமெரிக்கா போகிறாயா?" என ஆங்கிலத்தில் ஆரம்பித்தார் இனியன். இனியன் மகளிடம் ஆங்கிலத்தில்தான் எப்போதும் பேசுவார். அதற்கு " ஆமாம் டாடி ஒரு வாரம் போஸ்ட்போன் செய்துவிட்டேன்" என ஆரம்பித்து அவர் மாமனரின் விபத்தை விவரித்தாள்.

"ஒ ஷிட் என் சம்பந்தி சின்ன கடை வைத்து நடத்தும் ஏழை ப்ராமணனா? வாட் எ ஷேம் கல்ஸ்.
வாட் இஸ் ராங்க் வித் யூ?
இப் யூ டிரை யு கேன் லிட்டரலி ரூல் திஸ் ஸ்டேட் லைக் ஐ டு.

நான் இன்று இரவு உன் அபார்ட்மெண்ட்டுக்கு வந்து பார்க்கிறேன்" என்று போனை அணைத்தார்.

கலைக்கு மிக சந்தோஷம். இன்று மாமனார் ஏற்றுக் கொண்டார். அப்பா வீட்டிற்கு வருகிறார். மிக நல்ல நாள் போகும் வழியில் ஆழ்வார்பேட்டை கார்னரில் உள்ள சாம்கோ ஓட்டலில் அப்பாவிற்கு பிடித்த பரோட்டா பாயாவை வாங்கி கொண்டு அபார்ட்மெண்ட்டிற்கு போனால் அங்கே கலையின் அம்மா திருமதி வசந்தி இனியன். தன் பரிவாரம் சூழ நின்று கொண்டிருந்தார்.

கலையை கண்டதும் கட்டிபிடித்து உச்சி மொந்து நலம் விசாரித்தார். கிருஷைப் பார்த்து நல்ல செலக்க்ஷன் தான் என நற்சான்றிதழ் வழங்கினார். இளந்தம்பதிகள் இருவருக்கும் சீர்வரிசைகளாக பற்பல பரிசு பொருட்களை வழங்கினார்.

"கல்ஸ் வீ ஹவ் டேக்கன் எ இன்பார்ட்டெண்ட் டிசிஸன் டுடே" என்ற வசந்தியை இடை மறித்து "மம்மி அப்பா இங்கே இப்போ வரப்போறார்' என தயங்கி தயங்கி கலை சொல்ல, வசந்தி 'எனக்கு தெரியும்" என மர்ம புன்னகை புரிய 'வீ ஹவ் டேக்கன் எ இன்பார்ட்டெண்ட் டிசிஸன் டுடே" என்று புன்னகையுடனே இனியன் வந்தார். ஆங்கிலத்தில் பேச்சு வார்த்தை தொடர்ந்தது.

"கல்ஸ் நமக்குன்னு ரிஷர்வேஷன் இருக்கு உனக்கு மூளையும் இருக்கு நீ ஐ ஏ எஸ் எழுதி பாஸ் பண்ணிவிட்டால் உனக்கு மிக பெரிய போஸ்ட் கிடைக்கும். மாப்பிள்ளையையும் கலப்புத் திருமணம் செய்தவர் என சொல்லி ரிசர்வேஷனில் ஐ ஏ எஸ் ஐ எளிதாக வாங்கிவிடலாம். அப்புறம் உங்களுக்கு புல் செக்ரியூட்டி இருக்கும். உன் மாமனார் மாதிரி ரோட்டில் அடிவாங்க அவசியம் இருக்காது. போலீஸ் முதல் ரவுடிகள் வரை நம் கையில் இருப்பார்கள் என இனியன் சொல்லிக் கொண்டே போக " டாடி ஸ்டாப். முதலில் மம்மியும் நீங்களும் விவாகரத்தானவர்கள். உங்களின் விவாகரத்து அந்த காலத்தில் மீடியாக்களில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால்..." என்று சொன்னவளை நிறுத்தி வசந்தி தொடர்ந்தார் " அதெல்லாம் செடடப். அந்த கட்சி வந்தால் நான் செயலர். இந்த கட்சி வந்தால் இவர் செயலர். சுவீஸ் வங்கியில் 200 கோடி ரூபாய் எங்களால் சேர்க்க முடிந்தது இதனால் தான்" என்றால்

கலைக்கு மூச்சு சிலகணம் நின்றது. ஆனால் கிரிஷ் லாப்டாப்பில் தீவிரமாக டைப் செய்து கொண்டிருந்தான்

இனியன் தொடர்ந்தார் " இந்த 200 கோடி 1000 கோடி ஆக வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் IAS அதிகாரிகள் ஆக வேண்டும். நீங்கள் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள் என தெரியும். அதனால்..." என சொல்லி சில பேப்பர்களை மேஜையில் போட்டார் இனியன்.

"இது உங்கள் கம்பெனியிலிருந்து உங்கள் இருவருக்கும் டெர்மினேஷன் லெட்டர். ஆகையால் அமெரிக்கா கிடையாது.
இது உங்கள் பாங்க் அக்கௌண்ட் ப்ரீஸ் செய்ய சொல்லி இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டிலிருந்து லெட்டர். ஆகையால் உங்களுக்கு செலவிற்கு பணம் எடுக்க முடியாது, உங்கள் கிரடிட் கார்டுகள் முடுக்கப்பட்டு விட்டன.
இந்த பார்ம்கள் யுபிஎஸ்சி விண்ணபங்கள். பூர்த்தி செய்தாகிவிட்டது. கையெழுத்திடுங்கள்" என உறுமினார்.

அவருடைய கோல்ட் ப்ரேமையும், சபாரி சூட்டையும் தடித்த உருவத்தையும் பார்க்கும் போது கிருஷ்க்கு பயமாய் இருந்தது. அமைதியாக கையெழுத்து போட்டான். கலை கத்தினாள் வழக்கம் போல் ஆனால் கிருஷ்ஷின் கண்ணைப் பார்த்தவுடன் அவளும் அமைதியாக கையெழுத்திட்டாள்.

பிறகு நால்வரும் அமைதியாக உணவருந்தினர். அப்போது கிருஷ் "அங்கிள் நாங்கள் இருவரும் பங்களூருக்கு என் நண்பனின் கல்யாணத்திற்கு போகணும். உங்கள் கவர்மெண்ட் கார் ஏற்பாடு செய்கிறீர்களா?" என தயங்கி தயங்கி கேட்டான். அவரும் சந்தோசமாக சரி என சொல்லி அரசு அதிகாரிகளை இளம் தம்பதிகளை தனியே விட்டு சென்றனர்.

அவர்கள் போனதும் கலை கிருஷைப் பார்த்து "என்ன சதிடா?" என்றாள்.

"கலை நீ உன் பெற்றோரருடன் காரசாரமாக விவாதிக்கும் போது. உன் தந்தை செய்த காரியங்களை ஆன்லைனில் நம் கம்பெனி சேர்மனிடம் பேசி தெரிந்து கொண்டேன். அவர் உன் தந்தையை எதிர்த்து நமக்கு உதவ தயாராய் இல்லை. ஆகையால் நம் கஸ்டமர் ஆன மைக்ரோசாப்டில் மைக் டிரெம்பிலியிடம் பேசினேன். அவர் நம்மை விட முடியாது என்றும். மிக நல்ல சம்பளத்தில் சியாட்டிலில் வேலை என்றும். டிக்கட்டுகள், பணம் ஆகியவை பெங்களூரில் உள்ள அவர்களின் ப்ராஞ்சிற்கு அனுப்புவாதாகவும் சொன்னார். பங்களூரில் உங்கப்பாவின் பப்பு வேகாது என. நாளை உங்க அப்பா அனுப்பும் காரில் ஏறி பெங்களூர் சென்று அங்கிருந்து அமெரிக்கா" என கண்ணடித்தான்

"கிரிஷ் நீ நோஞ்சானாய் இருந்தாலும் பல கில்லாடி" என அவனை மார்புடன் அணைத்தாள். மையாமியில் நடந்தது ஆக்க்ஷன் ரீப்ளே செய்யபட்டது அடையாரில்

19 comments:

said...

"அன்புள்ள குமுதம் பத்திரிக்கை நிருவாகிக்களுக்கு" என்று ஒரு பதிவுப் போடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் :-) நேற்றுவரை டவுட்டே வரவில்லை, ஆனா இப்ப போகிற போக்கைப் பார்த்தால், எல்லாவற்ரையும் தொக்குத்து போட்டாலும் போடுவார்கள். அவிங்களுக்கு மேட்டர் வேணாமா? நாலு பக்கம் தேத்தலாமே? அடுத்து யாருங்க :-)))))

said...

சாதா மானமிகு சிவாவாக இருந்தால் கவலையே இல்லை.

சதா மானமிகு சிவாவானால் தான் பிழைப்புவாத சாதிப் பிரச்சினையே :-))

said...

சுஜாதாவின் கதைக்கு எதிர்வினை ஆற்றியவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

"வெயில்" திரைப்படத்தை பார்த்துவிட்டு, அதற்கும் ஒரு எதிர்வினையாக "நிழல்" எனும் திரைப்படத்தை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.(சுத்த தமிழ் தலைப்பு. வரி விலக்கு நிச்சயம்)

said...

ஆஹா.. ஆரம்பிச்சுட்டீங்களா..

இது கூட ரொம்ப நல்லா இருக்கு..அடுத்த பாகம் யாரு எழுதப் போறாங்க..?

said...

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

சுஜாதாவின் மஹா சப்பையான ஒரு கதை சிலரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள்.

உங்கள் கதையில் காரம் கொஞ்சம் கம்மியோ? ஆனால் சாரம் அதிகம்.

said...

கலைச்செல்வியின் அடிதாங்க முடியாத பிராமண மாமனாரின் கதி ????

said...

சிவா,
This is really a brilliant continuation of the original story !

கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க ! ஜமாயுங்க :)

//"கிரிஷ் நீ நோஞ்சானாய் இருந்தாலும் பல கில்லாடி" என அவனை மார்புடன் அணைத்தாள். மையாமியில் நடந்தது ஆக்க்ஷன் ரீப்ளே செய்யபட்டது அடையாரில்
//
Very Nice ;-) இது தான் 'சிவா' punch-ஆ ???

எ.அ.பாலா
***************************

said...

இப்போ உங்க டர்னா? நடத்துங்க. பாகம் 2 வேற வருதுன்னு சொல்லி இருக்கீங்க. அதையும் பார்க்கலாம்.

said...

உஷா, அவங்களுக்கு பிசினஸ்தானே. சுஜாதாவே கற்றதும் பெற்றதும் பகுதியில் எழுதுவார் என நினக்கிறேன். சாதி ப்ரச்னையை பொதுவில் ஆராய்வதும் நல்ல பிசினஸ்தான்

said...

அன்பு, உங்களின் அன்பு என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது. கலைச்செல்வியின் மாமனார் கடையையும் ப்ளாட்டையும் விற்றுவிட்டு மடிப்பாக்கம் பக்கம் ஒதுங்கிவிட்டார். மகன்/மருமகள் அனுப்பும் மாதம் 200 டாலரில் முன்னைவிட வசதியாக வாழ்கிறார். அடுத்த வருடம் கலைச்செல்வியின் டெலிவரிக்கும் பேபி சிட் செய்வதற்கும் தம்பதி சமேதரராய் சியாட்டில் வருகிறார்

said...

//சதா மானமிகு சிவாவானால் தான் பிழைப்புவாத சாதிப் பிரச்சினையே :-))
//

ஹரி, உங்கள் வார்த்தை விளையாட்டுகள் அருமை

said...

ஹரி, வெயிலை டவுன்லோட் செய்யமுடிகிறதா என பார்க்கிறேன்.

said...

நடோடி, நம் வலைப்பதிவர்களில் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் அதிகம். எழுதுவார்கள்

said...

ஓகை சார், காரம் ஜாஸ்தி போட்டால் அதிகம் என சொல்கிறீர்கள் கம்மியானால் அதற்கும் குறையா? :)

அடுத்த கதை சரியான காரம்/சாரத்துடன்

said...

எ.அ. பாலா, மிக்க நன்றி. கதைக்கு பார்முலா. ஒரு சண்டை, செண்டிமெண்ட் அப்புறம் கவர்ச்சி அப்பதானே பிஸினஸ் ஆகும்

said...

nice one.

waiting for the next part.!

இந்த டிவோர்ஸ் ஆன தம்பதியினர் கட்சி மாறி தலமைச் செயலர் பதவியைப் பிடிக்கும் லாஜிக்கை எங்கே பிடித்தீர்கள் ?

said...

அதீத கற்பனை...

said...

வஜ்ரா, இந்த அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் அதிக ஊழல் பேர்வழிகள் என்பது என் அபிப்ராயம்.

பெரும்பாலன அதிகாரிகள் முக்கியமாக கோட்டாவில் வருபவர்கள் ஆங்கிலத்தில் வீட்டில் பேசுபவதை பார்த்திருக்கிறேன்.

பெரும்பாலான அதிகாரிகள் மிகுந்த பணக்காரர்களாகவும் ஆணவம் மிகுந்தவர்களாகவும் உள்ளதை பார்த்திருக்கிறேன். அந்த வகையில் கொஞ்சம் கற்பனைவை விரித்ததின் விளவு.

said...

சாத்வீகன், இது அதித கற்பனை அல்ல. என் அனுபவத்தில் இனியன் போன்ற அதிகாரிகளை பார்த்திருக்கிறேன்.