Monday, January 15, 2007

இந்த கதைக்கு சான்ஸே இல்லை

.கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.
அடிதாங்க முடியாத பிராமண மாமனாரை என்னி கண்ணீர் விட்ட கலைச்செல்வியின் கைத்தொலைபேசி சிணுங்கியது

"ஹலோ" இங்கே குழலி ஆரம்பித்திருந்தார் ... இனி என்னுடைய இரண்டாவது கதை

தென்காசி

டேலிபோனில் வந்த செய்தி பேரிடியாக இறங்கியது கலைச்செல்விக்கு. உடனே மூர்ச்சையானாள். அடிபட்ட மாமனாரும் எழுந்து அவளை கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்துக் சென்றனர். அவளை ஆசுவாசப்படுத்தி சிறிது தண்ணீர் தந்தவுடன் "பெரியப்பா....." என அழுதாள்.

எல்லாரும் அவளை அழவிட்டு சிறிது அழுகை அடங்கியவுடன். அவள் பெரியப்பா தென்காசியில் சில மதவெறியர்களால் கொலை செய்யபட்ட விவரம் தெரிந்தது. வெஸ்ட்மாம்பலத்தை கட் செய்து தென்காசியில் ரோல் ஆகிறது காமிரா.

ஏகாம்பரமும் சிதம்பரமும் சகோதரர்கள். சிதம்பரம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒரு அதிகாரி. ஏகாம்பரம் முக்கண்ணி அம்மன் சன்னிதி தெருவில் ஒரு பாத்திரக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

சிதம்பரத்தின் ஒரே பெண் கலைச்செல்வி.

ஏகாம்பரத்தின் ஒரே பெண் இந்துமதி என்கின்ற இந்து.

இந்து கலைச்செல்வியை விட பத்து வயது மூத்தவள். அவளுக்கு 6 வயது இருக்கும் போது அவளுக்கு கடுமையான ஜீரம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

ஏகாம்பரமும் அவரின் மனைவி கற்பகமும் இந்துவுன் மேல் உயிரையே வைத்திருந்தனர். ஆஸ்பத்திரியில் இரவு பகல் பாராமல் குழந்தையின் அருகிலேயே இருந்தனர். இந்து மூன்றாம் நாள் வாந்தி எடுத்தாள். அதில் சில இரத்த துளிகள் காணப்பட்டன. கற்பகம் துவண்டு விட்டாள். டாக்டர்கள் பல பரிசோதனைகள் செய்து இந்துவின் வயிற்றில் வலப் புறத்தில் ஒரு கட்டி இருப்பதை அறிந்தனர். தென்காசியில் மேற்க்கொண்டு வசதியில்லாததால் மதுரைக்கோ சென்னைக்கோ குழந்தையை கொண்டு செல்லவேண்டுமென டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். ஏகாம்பரமும் கற்பகமும் குழந்தையை சென்னையில் சைல்ட் டிரஸ்ட் ஆஸ்பத்திருக்கு அழைத்து சென்றனர். அங்கே டாக்டர் ராஜன் உதவியிடன் டாக்டர் நாத் என்ற ரேடியாலிஜிஸ்டைப் பார்த்தனர்.

குழந்தையின் வயிற்றில் வலப்புறத்தில் கிட்னிக்கும் லிவருக்கும் இடையில் ஒரு கட்டி ப்ரீயாக மிதக்கிறது என்பதை டாக்டர் நாத் உறுதி செய்தார். உடனே அங்கே இருந்த பீடியாட்ரிக் ரீனல் சர்ஜன் டாக்டர் பதியிடம் டாக்டர் ராஜன் அனுப்பினார். டாக்டர் பதி சற்று கறார் பேர்வழி. ஆம் இது கட்டிதான். இது கான்சர் கட்டியாக வாய்ப்புகள் அதிகம். இது லிவருடன் இணந்திருந்தால் குழந்தைக்கு ஆயுள் கம்மி ஆனால் இது கிட்னியுடன் இணந்திருந்தால் ஒரு கிட்னியை எடுத்துவிட்டு பிழைக்க வைத்துவிடலாம் என்றார் சற்றும் தயங்கமால். கான்சர், ஆயுள் கம்மி, ஒரு கிட்னி எடுத்தல் போன்ற வார்த்தைகளை கேட்ட கற்பகத்திற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மார்பின் இடது புறம் சிறிது வலி ஏற்பட்டது. இருவரும் மீண்டும் டாக்டர் ராஜன் அறைக்கு சென்றனர். அவர் பேஷண்டுகளின் வலியை உணர்ந்தவர். சிறிது ஆறுதலாக பேசி உங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள் என சொல்லி ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தார்.

ஏகாம்பரம் கடைத்தெரு முக்கண்ணி அம்மனை மனமுருக வேண்டினார். அம்மா என் குழந்தையைக் காப்பாற்று என்று மனமுருக வேண்டினார். ஆபேரஷன் நடந்தது.

அந்த வயிற்றுக் கட்டி எந்த பாகத்தோடும் இணையாமால் அந்தரத்தில் இருந்தது. இது ஒரு அதிசயம் ஆனால் உணமை. அந்த கட்டியை ஆராய்ச்சி செய்ததில் அது கான்சர் இல்லை ஆனாலும் சந்தேகம் என வந்தது. குழந்தை இந்துவை மாதம் ஒருமுறை அடுத்த 5 வருடங்களுக்கு பரிசோதனை செய்யவேண்டும் என டாக்டர்கள் கூறிவிட்டனர். ஒவ்வொரு மாதமும் குழந்தையை சோதனை செய்யும் போதும் கற்பகத்தின் இதயம் மேலும் பலவீனமடைந்தது. குழந்தை இந்து நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்தாள். கற்பகம் இதயம் பலவீனம் அடைந்து ஒரு நல்ல நாளில் மூச்சை நிறுத்தினாள். ஆபேரசன் செய்து 5 ஆம் வருடம் டிசம்பர் 6 ந்தீ எல்லா டெஸ்ட்டுகளையும் செய்து இந்துவிற்கு ஒன்றும் இல்லை என டாக்டர்கள் அறிவித்துவிட்டனர். ஏகாம்பரமும் முக்கண்ணி அம்மனுக்கு நன்றி செலுத்தி ஒவ்வொரு வருடமு டிசம்பர் 6ந்தீ பொங்கல் வைத்து கொண்டாடுவேன் என வேண்டிக்கொண்டார்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 ந்தீ கொண்டாட்டம் வளர்ந்தது,

ஏகாம்பரத்தின் வியாபாரமும் வளர்ந்தது.

இந்து வளர்ந்து டாக்டராகி அட்லாண்டாவில் உள்ள சிடிசி யில் வைரஸுக்கும் கான்சருக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருக்கிறாள்.

அப்போது அந்த கடைத்தெருவில் சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிப்போன சுந்தர் சலீமாக திரும்பி வந்து பெரிய பாத்திரக் கடையை வைத்திருந்தார். அவர் முக்கண்ணியம்மன் கோவில் பின்னால் இருந்த கிரவுண்டில் தொழுகை நடத்த ஆரம்பித்தார்.

ஏற்கனவே ஏகாம்பரத்தின் வியாபாரத்தின் மேல் பொறாமை கொண்ட சலீம் அவரின் டிசம்பர் 6 ந்தீ கொண்டாட்த்தை விரும்பவில்லை. ஒரு நாள் அவரிடம் டிசம்பர் 6 ந்தீ இந்து எழுச்சி நாளா என கேட்க ஏகாம்பரமும் ஆம் என்னுடைய அருமை மகள் இந்து எழுந்த நாள் இந்து எழுச்சி நாள் தான் என்று அந்த வருடம் மிக விமரிசையாக கொண்டாடினார். சலீமுக்கு வெறி ஏறியது. அந்த வெறி ஏகாம்பரத்தை கொலை செய்யும் அளவிற்கு போனது.

வெஸ்ட் மாம்பலம் மீண்டும்.

சிதம்பரம் போனில் "செல்வி போயிடும்மா அமெரிக்காவிற்கு போயிடு . நீ வேலைப்பார்க்கும் கம்பெனிகளில் கூட குண்டு வைத்துவிடுவார்கள் இந்த வெறியர்கள். இந்துவோடு பத்திரமாக இரு. நாங்களும் இந்துவாக பத்திரமாக இருக்க இந்துவின் நாட்டிற்கு வந்துவிடுகிறோம்" என்று கதறினார்

10 comments:

said...

இதுல உள்குத்து இருக்குன்னு என் ஃப்ரண்டு சொல்றான், உண்மையாவா?

said...

இத்தனை கதைகளையும் குமுதத்தில் வெளியிட வேண்டுமானால் ஒரு சிறப்பிதழ் தான் போடவேண்டும் சிவா:)

said...

இது கதையா....

கதையென்று நினைத்து தெரியாமல் வந்துவிட்டேன்.... மன்னிக்கவும்.

"மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு" பழமொழி ஏன் என் நினைவுக்கு வருகிறது என்று புரியவில்லை.

said...

உங்க ப்ரண்டு சொல்றார்ன்னா சும்மாவா

said...

ஆமாங்க செல்வன்.

said...

சாத்வீகன், இது கதையல்ல 95% நிஜம்.

said...

அடுச்சு ஆடுங்க.
சூப்பர் கதை.
ஆனா கதை மாதிரி தோன்றவில்லை
நிஜமாகவே தினம் தினம் நடக்கும் விழயங்களை தோல் உரித்து காட்டி இருக்கிறீர்கள்

said...

கால்கரியாரே,

சின்ன வயசில் ஓடிப்போன சுந்தர் சலீமாகத் திரும்பி வந்து பாத்திரக்கடை வைப்பது. என்பது போன்ற சமாச்சாரங்கள், வியாபாரம் செய்யும் OBC க்களை இஸ்லாமியருடன் direct confrontation ல் வைக்கிறது என்பது background truth என்று நினைக்கிறேன் சரியா ?

அது டிசம்பர் 6 இல்லை என்றாலும் வியாபார நோக்கில் ஏதாவது சண்டைகள் வரத்தான் செய்யும். ! உடனே மொட்டைத்தலை, முழங்கால், முடிச்சு என்று வந்துவிட்டார் சாத் Weak அன்.

said...

OBC,direct confrontation and background truth

வஜ்ரா, இந்த மாதிரி பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் என்னை போன்ற தற்குறிகளுக்கு தெரியாதுங்க :)

கதை எழுத ஆரம்பிசா தானா வருதுங்க. எல்லாமே முற்காலத்தில் பிரபல திரைப்பட இயக்குனர்களிடம் இருந்த பழக்கம் தான்

said...

கால்கரி கதைகள் அருமை, உள்குத்து பிரமாதம். இன்னும் தொடர்ந்து இது போன்று கதைகள் எழுதுங்க தலைவா.

கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார் - பாரதி