இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கால்கரியின் வலைப்பதிவாளர்களான என்னையும் திரு வெளிகண்டநாதரையும் அழைத்து மேடையில் பேசவிட்டு மரியாதை செய்தார்கள்.
என்னுடைய பேச்சு ஒரு நிமிடம் இருந்தது (எனக்கு கொடுக்கப்பட்ட நேரமே அவ்வளவுதான்).
நம்ம நாதர் சூப்பரா தூள் கிளப்பிவிட்டார். கார்ப்பரேட் ஸ்டைலில் ஒரு ப்ரசெண்டஷன் அவரின் ட்ரேட் மார்க் திரைப்பட டிரெய்லர்கள் என சூப்பராக இருந்தது அவரது பேச்சு.

பிறகு பாடல்கள், பட்டிமன்றம் என விழா களைக்கட்டியது.
விழாவில் நமக்கு வேண்டிய "சரக்குகளும்" ஆடு கோழிக் கறிகளும் வாரி வழங்க பட்டன.
போண்டா, மசால் வடைகள் இல்லை. ஆனால் சாம்பார், ரசம், அப்பளமிருந்தது
இந்த விழாவின் விஷேசம் என்னவென்றால் தமிழ் மக்கள் பல நாட்டிலிருந்து வந்து கால்கரியில் குடியேறியவர்கள் வந்திருந்தார்கள். தமிழர் என்றதும் நம்முட்டைய சிந்தனை இந்தியா இலங்கை உடன் நின்றுவிடும். ஆனால் கால்கரியில் மலேஷியா, சிங்கபூர், மேற்கிந்தீயதீவுகள் மட்டுமில்லாது கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்து இருந்தது மிக சிறப்பாய் இருந்தது.
வலைப்பதிவாளர்களை கண்டு கொண்ட கால்கரி தமிழ் மன்றத்தை சார்ந்த திருவாளர்கள் ஜே ஆறுமுகா, சரவணமூர்த்தி, பரம் பரமநாதன், ரங்கா சேஷாத்திரி, பஞ்ச் பஞ்சலிங்கம் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விழா முடிந்ததும் நண்பர்கள் சேர்ந்து "மாம்பழம்.. மாம்பழம்.." பாட்டுக்கு போட்ட ஆட்டம் சூட்டைக் கிளப்பியது


18 comments:
கலக்கலாக நேரத்தை கழித்திருக்கிறீர்கள் என சொல்லுங்கள்.
அந்த ஒரு நிமிடத்தில் என்ன பேசினீர்கள் என்று சொல்லவில்லையே?
செல்வன் சொன்னதைத்தான் நானும் கேட்க வந்தேன்.
சிவா, அவ்வளவு தூரம் வந்தும் பேசக்கூட முடியாத அளவு வேலை. மாப்பு சாமி!
கல்கேரி சிவா,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
/* தமிழர் என்றதும் நம்முட்டைய சிந்தனை இந்தியா இலங்கை உடன் நின்றுவிடும். ஆனால் கால்கரியில் மலேஷியா, சிங்கபூர், மேற்கிந்தீயதீவுகள் மட்டுமில்லாது கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்து இருந்தது மிக சிறப்பாய் இருந்தது. */
நல்ல மகிழ்ச்சியான செய்தி. பிறந்த தேசம் வேறானாலும் நாம் தமிழர்கள். எம் மொழி தமிழ் எனும் உணர்வு தானே எம் எல்லோரையும் இணைக்கிறது. இப்போது எமது அடையாளம் மாறிவிட்டதே!:)) நாம் எல்லோரும் தமிழ்க் கனேடியர்கள் அல்லவா? :))) இனியும் நாம் ஈழத்தமிழர், தமிழகத் தமிழர் என எப்படிக் கூற முடியும்?:))))
சிவா, அறிய வேண்டும் எனும் ஆவலில் கேட்கிறேன். கல்கேரியில் எமது மக்கள்[தமிழர்] தொகை எவ்வளவு இருக்கும்?
வெளிகண்ட நாதருக்கும் என் வாழ்த்துக்கள்.
அதுசரி, ஒரு நிமிடத்தில் நீங்கள் என்னய்யா பேசினீர்கள்?:)))
செல்வன், இ.கொ. மற்றும் வெற்றிக்கு நன்றி. நான் பேசிய பேச்சின் ட்ரான்ஸ்கிரிப்ட் இதோ:
இந்த உலகத்திலேயே மிக கொடுமையான விஷயம் என்னான்னா ஒரு எழுத்தாளனே பேச சொல்றதுதான்.
இப்படி சினிமா வசனங்களை மேடையில் பேசி பிலிம் காட்ட வாய்ப்பளித்த கால்கரி தமிழ் கல்சுரல் அசோசியனுக்கு நன்றி.
நான் கால்கரி சிவா என்று ஆரம்பித்தேன்.
உடனே ரஸ்யாவிலிருந்து ஒருவர் "இன்னாப்பா இது கால்லே கரி. படா குன்சா இருக்கே. எப்படியோ நல்லா எழுதினா சரி" என்றார்
"தாங்கள் கரிகால் சோழனின் வாரிசா? சொந்த ஊர் தஞ்சாவூரா" என்று சவூதியிலிருந்து ஒருவர் கேட்க
இல்லீங்க நான் மதுரே அப்பிடின்னேன் . அப்புறம் மதுரைக்காரய்ங்க வந்து ஒரே அளப்பரே பண்ணிப்பூட்டாங்க
கொத்து பரட்டோ செய்வது எப்படி என இலவசக் கொத்தனார் என ஒரு ஆசாமி எழுதப்போக அதுக்கு சால்னா என்ற சைட்டிஷ் பற்றி ஒரு சமையல் குறிப்பு நான் எழுத அப்புறம் மதுரைக்கே உரிய ஜிகர்தண்டா என்ற பானத்தை பற்றி நான் மேலும் எழுத ஒரே ஜாலியா இருந்தது.
இதெல்லாம் நடந்தது எங்கே என கேக்கிறீங்களா?
எல்லாமே இண்டர்நெட்டிலே தாங்க
இண்டெர்நெட்டிலே ப்ளாக்கர் களின் சம்ராஜ்ஜியம் இப்ப கொடிக்கட்டி பறக்குது.
இந்திய மொழிகளில் அதிகம் ப்ளாக்கர் இருப்பது தமிழில்தான் என்கிறது ஒரு குறிப்பு.
நான் எழுத ஆரம்பிச்சி சரியா ஒரு வருடம் ஆகிவிட்டது. அதைக் கொண்டாடுவதற்கு இந்த விழா தான் என ஓவரா பில்டப் தரவிரும்பவில்லை.
இந்த ப்ளாக் என்றால் என்ன ? அதற்கு தமிழில் என்ன பெயர்?
கம்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி?
தமிழ் ப்ளாக்கில் உலாவரும் சிறப்பு வார்த்தைகள் என்ன?
என்பதைப் பற்றி மிக விரிவாக பேசி விளக்கம் அளிக்க கால்கரியிலிருந்து வெளிகண்டநாதர் என்ற பெயரில் எழுதும் இன்னொரு ப்ளாக்கர் திரு உதயகுமார் இங்கே இருக்கிறார்.
இனி ...ஓவர் டு உதயகுமார்
//நாம் எல்லோரும் தமிழ்க் கனேடியர்கள் அல்லவா? :))) இனியும் நாம் ஈழத்தமிழர், தமிழகத் தமிழர் என எப்படிக் கூற முடியும்?:))))
சிவா, அறிய வேண்டும் எனும் ஆவலில் கேட்கிறேன். கல்கேரியில் எமது மக்கள்[தமிழர்] தொகை எவ்வளவு இருக்கும்?
//
வெற்றி, மிக சரி மொழியால் நாம் இணைகிறோம். கால்கரியில் சுமார் 600 முதல் 1000 பேர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். விழாவிற்கு சுமார் 300 பேர் வந்திருந்தனர்.
விளம்பரம், இடவசதி, நிதிவசதி ஆகியவை மிகவும் கம்மி.
கால்கரியில் இந்தியர்கள் என்றால் பஞ்சாபிகள்தான்.
ஒரே ஒரு சவுத் இந்தியன் ரெஸ்டாரண்ட் உள்ளது.
//அவ்வளவு தூரம் வந்தும் பேசக்கூட முடியாத அளவு வேலை. மாப்பு சாமி!
//
எந்த ஓட்டல் என் சொல்லியிருந்தால் நானே பிடித்திருப்பேனே
பாப்பார பயலுகளா கூடினாங்களா?
விடாது கருப்பு,
என்னை மாதிரி தலித் பசங்களும் கூடினாங்க.
யப்பா இங்கே ஜாதிகள் இல்லை. மதங்கள் இல்லை. தமிழ் மட்டும் தான் உண்டு.
தாங்க் காட், ஒன்னே மாதிரி மெண்டல்கள் இங்கே இல்லே.
//கொத்து பரட்டோ செய்வது எப்படி என இலவசக் கொத்தனார் என ஒரு ஆசாமி எழுதப்போக //
பேசுன ஒரு நிமிஷத்துலேயும் நம்மளைப் பத்தி ஒரு வரியா?!!! தெய்வமே, புல்லரிக்குது!!
வாழ்த்து(க்)கள் சிவா.
இ.கொ.,
கொத்து பரோட்டா இப்பதிவுலகை புரட்டி போட்ட பதிவல்லவா
துளசி மேடம் , நன்றி
சிவா,
கனடாவிலி இருக்கும் நீங்கள் உங்களோட பிளாக்கில் பதிவிட்ட சால்னா ரெசிப்பியின் வெஜிடேரியன் வேரியெஷனைப் பிரிண்ட் அவுட் எடுத்து, ( இஸ்ரேலில் இருக்கும் வஜ்ராவின் வெங்காயம் மசித்துச் சேர்க்கும் தகவல் பின்னூட்டத்துடன்)
குவைத்தில் நாங்கள் சமைத்துச் சுவைத்த என்பது மாதிரியான சுவையான இணைப்பைத் ஏற்படுத்தித் தருவது தமிழா? இல்லை ஜாதியா?
விடாது கருப்பாகச் சிந்திப்பதை சிலர் விடுத்தால் தமிழால் இன்னும் எல்லாவிதங்களிலும் பரஸ்பரம் தகவல்கள் பரிமாறி பிளாகிங்கால் மேம்படலாம்.
நல்ல மாலைநேர நிகழ்வு என்று சொல்லுங்கள்!
* *
அந்த மாம்பழம் பாடல் எங்கே கிடைக்கும் ? ஆன்லைண் லிங்க் ஏதும் கிடைக்குமா ?
//சுவையான இணைப்பைத் ஏற்படுத்தித் தருவது தமிழா? இல்லை ஜாதியா?
விடாது கருப்பாகச் சிந்திப்பதை சிலர் விடுத்தால் தமிழால் இன்னும் எல்லாவிதங்களிலும் பரஸ்பரம் தகவல்கள் பரிமாறி பிளாகிங்கால் மேம்படலாம்.
//
ஹரிஹரன், எனக்கு சில எதிரிகள் கிடைத்தாலும் நிறைய நண்பர்களே கிடைத்துள்ளார்கள் தமிழ் வலைப்பதிவுகளில். அந்த எதிரிகளும் என்னை நேரில் சந்தித்தால் அவர்களை நண்பர்களாக மாற்ற என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மொழியால் கூடும் போது நாம் பார்ப்பது புன்னகைகளையும் இதயங்களையும்தான்.
சில மணிநேரங்கள் கவலைகளை மறந்து சிரித்திருந்தோம்
ரவி, இளைஞர்கள் கொண்டுவந்த பாடல். ஒரே டப்பாங்குத்து சத்தம். போக்கிரி என்ற தமிழ் படத்தில் வந்த "கெட்ட" பாடல் என சொன்னார்கள்.
அங்கே ஆட்டத்திற்குதான் முக்கியத்துவம் பாடலுக்கு இல்லை. இந்த பாடலுக்கு குதித்தவர்களிடம் கேட்டு இதைப் பற்றி மேற்கொண்டு சொல்கிறேன்
வீடியோக்களைப் பார்த்தேன். கொத்ஸு பரோட்டாவையும் சால்னாவையும் கூட விட்டுவைக்கலியே? :-) தமிழில் தட்டச்சு செய்யவும் பதிவிடவும் எல்லாரையும் ஊக்குவிச்ச உங்க அரும்பணிக்கு வாழ்த்துக்கள்.
சேதுக்கரசி, எல்லா புகழும் வெளிகண்ட நாதருக்கே. அவர் மிக அதிகமாக உழைத்து அந்த பிரஷண்டேஷனை செய்தார்.
Post a Comment