Saturday, April 21, 2007

தமிழ்மண விலகல்


இது அரவிந்தன் நீலகண்டனின் பதிவிலிருந்த நியாயமான கேள்விகள்


1. தார்மீக அடிப்படை நண்பர்கள் என்பவர் யார் யார் ?


2. தார்மீக நண்பர்கள் அடிப்படையில் பாலபாரதி ரவுடிக் கும்பலுக்கு எந்த விதமான தகவல்கள் அளிக்கப் பட்டன?


3. அமெரிக்க நீதித்துறை மூலமாக வந்தால் தருவீர்களா ? பாதிக்கப் பட்ட எந்த பதிவரும் அமெரிக்க போலீசை அணுக முடியும்.


4. தமிழ் மணத்தின் கருவிப் பட்டை எந்த எந்த தகவல்களை ரகசியமாக சேமிக்கிறது, பின்னூட்டம் இடுபவர்களின் ஐ பி போன்ற தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் சேமிக்கிறதா? இதற்கும் பதில் இல்லையென்றால் அமெரிக்க போலீஸின் உதவி நாடப் படும்


5. மிரட்டல் செய்த ப்ளாக் மெயில் செய்த நபர்களை முகமூடி கேள்வி கேட்டால் காசிக்கு கோபம் ஏன் வருகிறது ? இருவருக்கும் என்ன கள்ள உறவு ?

6. தமிழ் மண நிர்வாகிகளில் பலரும் இதற்கு முன்பாக பல பெயர்களில் மிரட்டல் ஆபாசம் முதலிய வேலைகளைச் செய்து வந்தவ்ர்களா இல்லையா?


தமிழ் மணத்தில் சேர்ந்திருக்கும் பதிவர்கள் உடனடியாக தமிழ் மணத்தின் ஸ்கிரிப்டை நீக்குவது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது இல்லையென்றால் ப்ளாக்மெயில் ரவுடிகளால் புத்தகக் கடைகளில் வைத்து மிரட்டப் படுவீர்கள். வலைப் பதிவர் கூட்டங்களில் உங்கள் பேச்சும் போட்டோவும் ரகசியமாக ரெக்கார்ட் செய்யப் படும் ஆபத்தும் உள்ளது. மொத்தத்தில் உங்கள் உயிர் மானம் மரியாதை எல்லாவற்றையும் இதில் சேவதன் மூலம் இழக்க நேரிடும்மேலும் கேள்விகள் வரும் //


இதற்கான பதில்



//தமிழ்மணம்-பதிவர்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை ஒன்றே பதிவர்கள் தமிழ்மணத்தில் இணைவதற்கும், தமிழ்மணம் பதிவர்களை இணைத்துக்கொள்வதற்கும் அடிப்படை. இதைத் தவிர தமிழ்மணத்தைப் பொறுத்தவரையில் வேறெந்த காரணமும் இல்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கையிழந்த பதிவர்கள் தமிழ்மணத்தில் தொடர்வது அவர்களின் மனவமைதியையும் கெடுக்கும். தமிழ்மணத்தின் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும். //


நானும் "தார்மீக காரணங்கள்" என்றால் என்ன என கேட்டிருந்தேன். அதற்கான பதில் பரஸ்பர நம்பிக்கை மட்டும்தான் என்றால், எனக்கு நம்பிக்கை இல்லை.

மேலும் நாங்கள் அளிப்பது இலவச சேவைதானே என்ற ஆளாதிக்க மன்பான்மையில் எனக்கு உடன்பாடில்லை.


அடிமையாக சிலவருடங்கள் அரேபியாவில் வாழ்ந்ததினால் சுதந்திரத்தின் அருமையை அறிந்தவன் நான். ஆகையால் ஆளாதிக்கம் செய்யும் தமிழ்மணத்திடம் அடிமையாக இருக்க விரும்பவில்லை.

மேலும் அரபு அடிமைகளின் கூடாரமாக மாறிவரும் தமிழ்மணத்தில் அடிமைகளின் எஜமான விசுவாச கூச்சலும் சுதந்திரன்களுக்கு விடுக்கும் மிரட்டல்களும் அதிகமாக ஒலிக்கின்ற தமிழ்மணத்திலிருந்து என்னை முழுமையாக நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நான் தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை கழட்டிவிட்டேன். அதேபோல் தமிழ் மணமும் அவர்களின் பதிவர் பட்டியலிருந்து என் பெயரை 24 மணிநேரத்திற்குள்ளோ அதற்கு அப்பாலோ நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

என் பதிவை தொடர்ந்து படிக்கும் 342 பேருக்கு நன்றி. 342ல் 12 பேருக்கு தமிழ்மணம் என்றாலே என்னவென்று தெரியாது. என் பதிவை மட்டும் தெரியும் :).

என் பதிவுகள் தொடரும். என் எழுத்துகளை அடுத்த லெவலுக்கு ஆங்கிலத்திலும் ப்ரஞ்சிலும் தொடர இருக்கிறேன்... என் அரேபிய அனுபவங்களை ப்ரெஞ்சில் என் நண்பர் ஒருவர் மொழிபெயர்க்கிறார்.
வலைப்பதிவுகளின் வழியே நட்பை பேணுவோம், பயங்கரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் ஒதுக்குவோம்...

16 comments:

said...

??????????????????????:((((((((((((

said...

இதென்ன கொடுமை?

தமிழ்மணம் ஐ.பி விவரம் கொடுத்தாங்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கா இல்ல அவங்களே ஒப்புக் கொண்ட விஷயமா இது?

சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க, பதிவரின் ஐ.பி காவல் துறை சேர்ந்தவர்களுக்குக் கொடுப்பதில் தவறில்லை.

ஆனால், கேட்ப்பவர்க்கெல்லாம் (நண்பர்கள்?) ஐ.பி அப்படிக் கொடுப்ப்பது சரியான் செயல் அல்ல.

விவரங்கள் தெளிவாக தெரிந்தபின், நீங்கள் தமிழ்மண விலகலை முடிவு செய்திருக்கலாம்.

இந்த போலி வீஷயங்களால் பெரிய இடர்பாடுகள் நிகழும்போது, தமீழ்மணத்துக்கும் சட்டப் பிரச்சனைகள் வரும். அதிலிருந்து அவர்களை காத்துக் கொள்ள அவர்கள் கையாளும், சில 'filtering' நியாயமானதுதான்.

said...

வருத்தமளிக்கும் முடிவு சிவா. உங்கள் மனவேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது இல்லை என்றாலும் சிறிதுநாட்கள் கழித்து முடிவை நிச்சயம் மறுபரிசீலனை செய்யுங்கள். தமிழ்மணத்தில் இல்லை என்றாலும் தேன்கூட்டில் கண்டிப்பாக தொடருங்கள். தமிழ்மணத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் பதிவுகளை படிக்க கண்டிப்பாக நான் தினமும் வருவேன்.

said...

கீதா மேடம் இதில் கேள்வியும் இல்லை வருத்தபட வேண்டிய விஷயமும் அல்ல.

பேட்நியூஸ் இந்தியா, என் அவநம்பிக்கை என்னை விலக வைத்தது. அவ்வள்வுதான். என் ப்ளாக்குகள் தொடரும்.

செல்வன், நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி. தேன்கூட்டில் தொடர்கிறேன்.

said...

சிவா

மிகச் சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள். இவ்வளவு விபரமாக எழுதும் பேட் நியூஸ், செல்வன் போன்றவர்கள் ஒன்றுமே நடவாதது போல உங்களத் தமிழ் மணத்தில் தொடர வேண்டும் என்று சொல்வது அநியாயம். அவர்கள் மனசாட்சியை அவர்கள் கேட்டுக் கொள்ளட்டும்.

நீங்கள் மட்டும் அல்ல, நேசகுமார், அரவிந்தன், அருணகிரி போன்ற அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு விட்டார்கள். தார்மீக நண்பர்கள் என்றால் யார் அவர்களுக்கு என்ன தகவல் கொடுத்தீர்கள் என்று அதற்கு இன்று வரை பதில் இல்லை. வக்காலத்து வாங்கும் செல்வனும், பேட்நியூஸும் பதில் வாங்கிக் கொடுத்தால் மகிழ்ச்சியே. பதிவர்களின் தகவல்களைத் திரட்டி ரவுடிகளிடம் கொடுத்தீர்களா இல்லையா என்று கேட்டதற்கு இன்று வரை பதில் இல்லாத நிலையில் சிவா போன்று சோற்றில் உப்புப் போட்டுத் தின்னும் எவரும் எடுத்திருக்கும் முடிவைத்தான் சிவா எடுத்திருக்கிறார். அது போன்ற குறைந்த பட்ச மானம் மரியாதை கூட இல்லாமல் அப்படியாவது நாம் பிழைக்கத்தான் வேண்டுமா என்று அவரை அங்குத் தொடரச் சொல்பவர்கள் மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்கள். சிவா எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வாங்கிக் கொடுத்து விட்டு அதன் பின் சிபாரிசுக்கு வாருங்கள் செல்வன் அவர்களே. ஒரு அநியாயம் நடக்கிறது, ஒருவர் மிரட்டப் பட்டு ப்ளாக் மெயில் பண்ணப் பட்டு வருகிறார் அதற்கு உதவியாக ஒரு திரட்டி செயல்பட்டிருக்கிறது, அதைப் பற்றி கேட்கக் கூட உங்களுக்குத் தைரியம் இல்லை, துணிவாகக் கேட்கும் ஆளையும் கேட்காதே என்கிறீர்கள். நீங்கள் எல்லாம் நக்சலைட்டுகள் பற்றி இனிமேல் கண்டித்து எழுதினால், மன்னிக்கவும் அது எனக்குப் போலியாகத்தான் தோன்றும்

அன்புடன்
ச.திருமலை

said...

சிவா

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பேன். நீங்கள் செய்தது மானம் ரோஷம் உள்ள சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிடும் அநியாயத்தைக் கண்டவுடன் எதிர்க்கும் குணமுடைய தார்மீகக் கோபம் உள்ள எவரும் செய்யக் கூடியதே. டோண்டு போல மானம் மரியாதையை இழந்து நாலு பேர், கூட வந்து படிப்பார்களே என்று பாராமல் மானம் இழந்து மதி இழந்து ஒட்டிக் கொண்டு இராமல் மரியாதையுடன் வெளி வந்தது பாராட்டுக்குரிய செயல். தொடருங்கள்

அன்புடன்
ச.திருமலை

said...

சிவா,

உங்கள் கருத்துக்களை உரத்துச் சொல்லியிருக்கிறீர்கள். கண்டிப்பாக உங்கள் முடிவுகள் தீர்மானமாகவும், தெளிவாகவும் இருக்கும். உங்களைப் போன்ற நன்கறியப் பட்ட, பக்குவம் வாய்ந்த தமிழ்ப் பதிவர் ஒருவராலேயே புறக்கணிக்கப் பட்டிருப்பதற்கு தமிழ்மணம்.காம் வெட்கப் படவேண்டும், வருத்தப் படவேண்டும்.

உங்கள் புதிய எழுத்து முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

// வலைப்பதிவுகளின் வழியே நட்பை பேணுவோம், பயங்கரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் ஒதுக்குவோம்... //

எல்லாப் பதிவர்களும் இந்தக் கருத்தை எதிரொலிக்க வேண்டும்.

said...

The recent happenings in the tamizhmanam world is really depressing. Instead of promoting constructive activities, tamizhmanan has degraded in to unncessary fights characteristic of tamizh people. I will continue to read your nice blogs. Please continue posting informative blogs.
regards
Suresh R

said...

Suresh, Thanks for your spoort

said...

On what basis you said Tamilmanam gave the IP. even if that is the case it is right cause the girl is shown in a bad light and we know who were all behind the scene and the government will pursue the matter legally. Tamilmanam is not a scapegoat for anybody!

said...

வருத்தம் அளிக்கும் முடிவு சிவா.

said...

now that you have come out of that abrahamic thamizmanam why do you need comment moderation etc., ?

i am removing it and leaving the comments open in my blog.

said...

இது தமிழ்மணம் கொடுக்குமா கொடுக்காதா என்பதைக் குறித்ததல்ல. ஒருவரை தமிழ்மணம் அவரது விவரங்களை கொடுத்ததாக கூறி மிரட்டியதாக செய்திகள் கசிகின்றன. இதனை வதந்திகள் என கொள்வோம். ஆனால் என்னைக்குறித்து எவனும் ஒரு ஐயப்பாட்டைக்கூட எழுப்பக்கூடாது என தமிழ்மணம் குதித்த குதி நாசிகளின் குள்ளத்தாரா நடையோடு ஒப்பிடப்பட வேண்டியது. வெட்கமில்லாமல் பதிவர்களின் ஐபியை வாங்க ஏதுவாக டெக்னோ பத்வா போடும் தமிழ்மணம், பதிவர்களிடம் 'சிறந்த பதிவு' என பதிவு பிச்சை வாங்கி பிறகு அரசியல் சார்புள்ள பூங்காவில் ஒரு அரசியல் சார்புள்ள பதிவுகளை தொகுத்தளித்த பாசிச எத்துவாளித்தனமும் நினைவிருக்கிறது. எனவே பாசிச தமிழ்மணத்தை வெறுத்தொதுக்குவதில் தவறில்லை.

said...

சிவா,

உண்மைத்தமிழன் பதிவில சொன்னதுதான் இங்கேயும். இந்த மாதிரி பட்டை போடுரது குழந்தைத்தனமா தோணுது. உங்களுக்கு ஒத்தும் வரலை. தமிழ்மணம் மேலெ உங்களுக்கு இருக்கிற கோபத்தை சில இடங்களில் ஏற்கனவே சொல்லி விட்டீர்கள் என நினைக்கிறேன். பட்டையில் கோபம் தெரியவில்லை. ஆத்திரம் தான் தெரிகிறது. And it is jarring. தயவு செய்து பட்டையை விலக்கி விட்டு உங்கள் பதிவுகளை தொடருங்கள்.

சுவாமி

said...

சிவா,

உங்கள் முடிவு சரியே. ஆனால் தொடர்ந்து தமிழ்மணம் படித்து வரும் நடுநிலையாளர்கள்(யாராவது இருந்தால்), அங்கு பரப்பப்பட்டு வரும் புரட்டுக்கள்(அரபு அடிமைவாதம், பிராமண எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு (எல்லாம் எதிர்ப்பாகவே உள்ளதே, ஆதரவாக எதுவும் இல்லையா?)) உண்மை என்று நம்பிவிடக்கூடும் அல்லவா? அதுதான் கவலையளிக்கிறது.

இலவச blog aggregating tools எதுவும் உள்ளதா. அவ்வாறாயின் அதுபோல ஏதும் நம் போன்ற ஒத்த கருத்துக்களுடையோரால் நடத்த முடியாதா?

said...

Swami, You are correct. After coming out of thamizmanam aggregator that picture was irrelevant here. I removed it.