கீழூள்ள இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்தன. இவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தென்ன பயன். மிகவும் கொடியவர்களாகல்லவா இந்த கேவலப் பிறவிகள்.
சக மனிதரை அடிமையாக வைத்து கொடுமைப் படுத்த எவ்வள்வு குரூரமனம் வேண்டும்.
ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட பெண் தப்பிவந்து போலீஸிடம் புகார் செய்கிறார். கோடீஸ்வரர் வீட்டில் போலீஸ் அதிரடி ரெய்டு செய்கிறார்கள். குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 17 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை சிறைவாசம். அடிமையாக இருந்தவருக்கு கணிசமான நஷ்ட ஈடு கிடைக்கும் இங்கே அடிமைகளுக்கு நியாயம் கிடைக்க வழி உண்டு.
இன்னொரு நாட்டில் அடிமையின் மனைவி இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு கண்ணீர்கடிதம் அனுப்புகிறார். இந்திய தூதரகம் தலையிட்டும் போலிஸுக்கு போக முடியவில்லை. தன்னார்வல தொண்டு நிறுவனத்திடம் முறையிடுகிறது. அவர்கள் அடிமையாக இருந்தவரை கண்டுபிடித்து எஜமானரை கைது செய்கின்றனர். இங்கே எப்போது நீதி கிடைக்கும் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்
எனி வே அடிமைகள் விடுதலை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே....
பணிப்பெண்களை அடிமையாக நடத்திய கோடீஸ்வர இந்திய தம்பதியர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் இரண்டு இந்தோனேசிய பெண்களை அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப்படுத்திய கோடீஸ்வர இந்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்கா, நியூயார்க் நகரில் மிகவும் வசதியானவர்கள் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர் மகேந்தர் சபானி என்ற இந்தியர். இவரது மனைவி வர்ஷா. கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த இவர்கள் வாசனைப் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது வீட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு பெண்கள் வேலை செய்து வந்தனர். இந்த இரு பெண்களையும் இந்திய தம்பதியினர் அடிமைகளைப் போல் நடத்தி வந்துள்ளனர். அவர்களை பல்வேறு வகையிலும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இவர்களின் கொடுமையில் இருந்து தப்பிவந்த ஒரு இந்தோனேசியப் பெண், இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்திய தம்பதி வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு அடிமையாக இருந்த மேலும் ஒரு பெண் மீட்கப்பட்டார். உடனடியாக போலீசார், மகேந்தர் சபானியையும், அவரது மனைவி வர்ஷாவையும் கைது செய்தனர். நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்திய தம்பதிக்கு 17ல் இருந்து 22 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.இதுபற்றி அரசு தரப்பு வக்கீல் டெமட்ரி ஜோன்ஸ் கூறுகையில், மிகவும் நாகரீகமான இடத்தில் குடியிருக்கும் நபர்கள், நாகரீகமற்ற, மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. மகேந்தரின் மனைவி வர்ஷா, இந்தோனேசிய பெண்களை, காலை நான்கு மணியில் இருந்து நள்ளிரவு வரை வேலை செய்யும்படி கொடுமைப் படுத்தியுள்ளார். அவர்களுக்கு தேவையான உணவுகளை கொடுப்பது இல்லை. சமையல் அறையில் துõங்கும்படி வலியுறுத்தி உள்ளார், என்றார்.அமெரிக்காவின் நியூஸ்டே என்ற பத்திரிகை அரசு தரப்பு வக்கீலை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மகேந்தரின் மனைவி வர்ஷா, இந்தோனேசிய பெண்களை துடைப்பத்தால் அடித்து துன்புறுத்தி உள்ளார். அவர்களின் காதுகளின் பின்புறத்தை கத்தியால் வெட்டியுள்ளார். சூடான நீரை அவர்கள் மீது ஊற்றியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மெத்தைப் படிகளில் 150 முறை ஏறி இறங்குமாறு கூறியுள்ளார், என்றார்.
----------------------------------------------------------------------------------------
சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை; இந்திய தொழிலாளிக்கு ஏற்பட்ட கொடுமை
சென்னை: தனக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளியை ஒன்றரை ஆண்டுகளாக சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டனர்.சவுதி அரேபிய நாட்டில் தமாம் அருகே குரைசி பகுதியை ஒட்டி உள்ள பாலைவன கிராமத்தில் அந்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான ஆட்டு பண்ணை இருந்தது. அப்பண்ணையில் பணியாற்ற மராட்டிய மாநிலம் லத்துõர் அருகே சிவானி பகுதியைச் சேர்ந்த தின்கர் வர்க்லா என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு மேற்கண்ட அராபியர் வழங்கிய விசாவில் சென்ற தின்கர் அங்கு ஆடுகளை மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.அவர் அங்கு சென்ற பிறகு தனது மனைவிக்கு அடிக்கடி கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு பேசி வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவனிடம் இருந்து மனைவிக்கு கடிதமோ தொலைபேசி அழைப்போ வராததால் அதிர்ச்சி அடைந்த மனைவி இதுகுறித்து கணவரது ஸ்பான்சரான அராபிய நபரை தொலைபேசியில் அழைத்து விசாரித்தார். அதற்கு அவரோ," நீங்கள் குறிப்பிடும் பெயரில் இங்கு யாரும் வேலை செய்யவில்லை. அந்த பெயர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என்று கூறினார்.இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தின்கரின் மனைவி இதுகுறித்து பிரதமர், வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர், மாநில முதல்வர் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பினார். அம்மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தமாம் பகுதியில் உள்ள இந்திய துõதரகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி, அங்குள்ள இந்திய துõதரக அதிகாரிகள் ரியாத் பகுதியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இதுகுறித்து விசாரித்து தின்கர் எங்கு எப்படி உள்ளார் என விசாரித்து உதவுமாறு கேட்டுக் கொண்டது.அதன்படி பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தீவிர முயற்சியால் பாலைவன பண்ணையில் பாழடைந்த கட்டடத்தின் கழிவறை அருகே இரும்பு சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் தின்கர் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து குரைசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்புகாரின்படி போலீசார் விரைந்து சென்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடந்த தின்கரை விடுவித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் அப்பண்ணையில் சரிவர வேலை செய்யாததால் அவரை ஸ்பான்சர் செய்த அராபிய நபர் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் தின்கர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி குரைசி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் தின்கரை கைது செய்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இவ்வழக்கை விசாரித்த கோர்ட் தின்கரை நிரபராதி என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்து விட்டது.ஆனால், அவரை கோர்ட் விடுவித்ததை பொறுக்க முடியாத அராபிய நபர் அவரை தனது பண்ணை வீட்டில் சங்கிலியால் பிணைத்து அடிமையை போல் நடத்திவந்தார். அவருக்கு தினமும் ஒருவேளை மட்டும் ஒரு ரொட்டி (குபூஸ்) மற்றும் ஒரு டம்ளரில் தண்ணீர் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவ்வாறு அவர் கொடுமைக்கு உள்ளானார். அவரை கொடுமைக்குள்ளாக்கிய அராபிய நபரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Wednesday, May 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
உண்மைதான் மிகவும் கஷ்டமான செய்திகள்.
இந்த நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட கருத்துக்களும் இப்படிப்பட்ட செயற்பாடுகளும் இருப்பது வருந்தத்தக்கது.
ரெண்டு நாடுகளிலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறார்கள். முடிவு எப்பொழுது எப்படி வருகிறது எனத்தான் பார்க்க வேண்டும்.
Post a Comment