சூடான கத்தி வெண்ணையில் இறங்குவது போல் இறங்கியது.
ஒரு பாட்டிலின் விலை சுமார் 200 டாலர்கள். பல சமயம் வாங்க போய் வாங்கமால் அந்த விலைக்கு இரண்டு அல்லது மூன்று பாட்டில்களை வேறு கலர் லேபிள்களில் வாங்கி வந்திருக்கிறேன்.
காசுதான் அதிகமே தவிர ஞாயிறு காலையில் எழ முடியவில்லை கோடையிடி போல் தலைவலி. ஆனால் வீட்டம்மாவிற்கு வாக்கு தந்தபடியில் அவர்கள் வாலேண்டியர் செய்யும் விழாவிற்கு செல்ல நேரிட்டது.
அந்த விழாவைப் பற்றிய பதிவுதான் இது.
நான் பார்த்த எல்லா இந்திப் படத்திலும் இந்த விழா நடக்கும். நம்ம கமலகாசன் நடித்த நாயகன் படத்திலும் வரும் ஹோலி தான் அந்த விழா.
நடந்த இடம் ஹூஸ்டன், டெக்ஸாஸ் அமெரிக்கா.
நிறங்களின் பண்டிகையில் நிற வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கொண்டாடியது ஆனந்தமாக இருந்ததது. அந்த ஊதா லேபிள் தந்த தலைவலியை போக்கடித்திருந்தது.
இதுவும் ஒரு புராணக் கதையை பேஸ் பண்ணிய பண்டிகைதான். பிரஹலாதன் கதையிலிருந்து ஆரம்பித்து இந்த பண்டிகை ஆண்டாண்டு காலமாக நம் இந்திய மக்களால் கலர் கொட்டி கோலாகலமாக கொண்டாடபடுகிறது.
இந்த விழாவின் ஒரு வேரியஷனை பாரதிராஜவின் கிராமங்களில் “மஞ்சக் குளிச்சி...” எனக் கொண்டாடுகிறார்கள்.
அந்த விழாவில் எடுத்த சில படங்கள்:
வண்ணங்களைக் கொண்ட்டாடும் அமெரிக்க சீனர்கள் :
நிறங்களில் ஆனந்தம் காணும் அமெரிக்க இளம் வயதினர்:
வண்ணங்களில் விளையாடும் தங்கமுடி குழந்தைகள் :
மக்களுடன் கொண்டாடும் வெள்ளைக்கார கருப்பு நாய்
இந்து ஸ்டாலில் வெனிஜுவாலா நாட்டுப் பெண்
இந்திப் படபாடலுக்கு மானாட மயிலாடும் குழந்தைகள்
மெக்ஸிகோ நாட்டு யுவ/யுவதிகள்
கலர்கள்
அநியாயத்திற்கு கலர்கள்
ஆட்டம் போடும் யுவதிகள்

தன் பங்கிற்கு கலர் அடித்துக் கொண்ட பூக்குட்டிப் போன்ற நாய்க்குட்டி
இப்படி ஒரு கும்பல் எல்லாவற்றையும் ஆனந்தமாக கொண்டாடி மகிழும் போது மற்றொரு கும்பல் இப்படிப் பட்ட விழாக்களை கொண்டாடகூடாது என கருப்பு/பச்சைக் கொடிப் பிடிக்கிறது.
தன் பங்கிற்கு கலர் அடித்துக் கொண்ட பூக்குட்டிப் போன்ற நாய்க்குட்டி
நாம் எப்போதும் கூத்தாடும் கும்பலுடன் இருப்போம்......

5 comments:
என்ன ஹோலியா பண்டிகை ம்ம்ம் அருமை
மக்கள் ரொம்ப ஆனந்தமா இருக்காஙக் போல
//எல்லாவற்றையும் ஆனந்தமாக கொண்டாடி மகிழும் போது மற்றொரு கும்பல் இப்படிப் பட்ட விழாக்களை கொண்டாடகூடாது என கருப்பு/பச்சைக் கொடிப் பிடிக்கிறது.//
இது யாருண்ணே?
:-)
// நாம் எப்போதும் கூத்தாடும் கும்பலுடன் இருப்போம்......//
:-) அவ்வாறே ஆகுக
ஐயா ஒரு குருப் அவிங்க தலைவனோட் பிறந்த நாளே பிரியாணி போட்டு கொண்டாறாங்க
இன்னொரு குரூப் அதெல்லாம் பண்ணா ஹராம் என அப்போஸ் பண்றாங்க
Color Coloraa irukkunga
Post a Comment