Wednesday, May 02, 2007

நீமோவின் துணை(வன்)(வி)

எங்கள் நீமோவிற்கு துணையாக ரமோ வீட்டிற்கு வந்தாகிவிட்டது. ரமோ 21/2 மாதக் குழந்தை. இன்னும் ஒரு ஆணிற்குறிய அடையாளங்களை காட்டவில்லை. பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பெண்ணாக இருந்தால் நீமோவின் தோழி, ஆணாக இருந்தால் தோழன்.

மரகதமும் வெண்மையும் பழுப்பும் கலந்த கலவை ரமோ. பயங்கர சுட்டி.
ரமோ வந்ததிலிருந்து நீமோ ஒரு சவலைக் குழந்தைபோல் இருக்கிறது. ரமோவிடம் பேசக்கூடாது, ரமோவை தூக்க கூடாது என்ற ஒரே அலம்பல் மற்றும் அடம் பிடிக்கிறது.

நீமோ மற்றும் ரமோ இவைகளுடன் வாழ்க்கை சுவாரசியமாய் உள்ளது.

Thursday, April 26, 2007

சில விளக்கங்கள்..மேலும் சில சந்தேகங்கள்....

நான் தமிழ்மணத்தை விட்டு விலகிவிட்டேன். இத்துடன் முடிந்தது கதை. இதனால் அவர்களுக்கும் நட்டமில்லை எனக்கும் நட்டமில்லை. மீண்டும் மீண்டும் மக்கள் வந்து பின்னூட்டங்கள் இடுவதினால் இந்த பதிவு

பரஸ்பர நம்பிக்கை இல்லாததால் நான் தமிழ்மணத்தை விலகினேன் என சொல்லியும் சிலர் சில வார்த்தைகளை வைத்து கடுந்தமிழில் எழுதி ஜல்லி அடிக்கிறார்கள்.

அவர்களுக்கு விளக்கம் இதோ:

தமிழ்மணம் Personal identity ஐ தந்திருப்பார்களோ என நேசகுமார் ஐயத்தினை கிளப்பினார்.

அதற்கு பதில் தமிழ்மணத்திடமிருந்து வந்தது : //எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.//

இங்கே அவர்களின் செயல்பாடு என்பது Personal identity ஐ தருவது என அர்த்தம் கொள்ளவேண்டும்

எப்போதுமே இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். வார்த்தைகளை மட்டும் தனித்தனியே எடுத்துப் பார்த்தால் விகல்பம்தான் மிஞ்சும்.நான்

Personal identity ஐ தருவதையும் ஆட்சேபிக்கவில்லை, தார்மீக காரணம் என்றால் என்ன என்பதே என் கேள்வி.

என் கேள்விக்கு பதில் பரஸ்பர நம்பிக்கை என வந்தது.

அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் விலகிவிட்டேன்.


மேட்டர் ஓவர்.... ..

சில திரைமறைவில் நடந்தவைகளை இங்கே விளக்கவேண்டும்.

அனைவரும் நேசகுமாரின் இந்தப் பதிவை படித்திருப்பீர்கள்.

இதில் நேசகுமார் என்ன சொல்கிறார் என்றால் " இந்தப் பதிவை எழுதியபோதுதான் நண்பர்கள் கேட்டார்கள், இந்தப் புதிய (நேசமுடன்) பதிவை தேன்கூட்டில் இணைக்கவில்லையா என்று.
நான் இணைக்கவில்லை. அது போன்றே, தமிழ்.நெட்டில் யாரும் இணைத்தார்களா என்று தெரியவில்லை, நான் இணைக்கவில்லை. ஆனால், அங்கே தெரிகிறது என்பது அங்கிருந்து வந்து என் பதிவைப் படித்தவர்கள் சொல்லிய பின்புதான் தெரிந்தது.

தமிழ்மணத்தில் கூட நண்பர் ஒருவர் வற்புறுத்திக் கேட்டு எனது கடவுச்சொல்லை வாங்கி தமிழ்மண நிரலை இந்தப் பதிவில் இணைத்தார். பின்பும் நானாக முயன்று எனது எந்த பதிவையும் சேர்த்ததோ வகைப்படுத்தியதோ இல்லை. இன்றுவரை பின்னூட்ட பகுதியில் எனது பதிவு தட்டுப்படுகிறதா என்று கூட நான் தேடியதில்லை, கவலைப்பட்டதுமில்லை. தேவைப்பட்டால் நீங்களே ஐபியெல்லாம் கூட பார்த்து இது சரியா தவறா என்று தெரிந்து கொள்ளலாம்.

அந்த நண்பர் நான் தான் !!!!...... அவரிடம் கடவுசொல்லை வாங்கி தமிழ்மண கருவிப்பட்டையை இணைக்காலம் என நினைத்தேன். அதற்கு முன் தமிழ்மண முகப்பில் உள்ள உரலை இட என பெட்டியில் நான் இணைத்தேன். தமிழ் மணம் இதை ஏற்றுக் கொண்டு அவரின் பதிவை காட்டியது.

இதற்கு பிறகு நான், அரவிந்தன், ஜடாயு, ம்யூஸ் மற்றும் வஜ்ரா தமிழ்மணத்திலிருந்து வெளிவருகிறோம்.

அதற்கு பின் ஸ்பெஷல் ஆப்பு பதிவில் பின்கண்ட செய்தி வருகிறது.


அரவிந்த நீலகண்டனின் சகோதரன் பெயர் நம்பி மெய்கண்டன்.
இந்த நாய் 23/12, # 4, 5th Main Road, Kasurba Nagar Adyar, hennai, Tamil Nadu 600020 என்ற முகவரியில் ப்ளாஸ்மா கன்சல்டன்சி வைத்து இருக்கிறான். அந்த நாயின் ஈமெயில் முகவரி
nambi@vsnl.com
ப்ளாஸ்மா கன்ஸல்டன்சிக்கும் நீலகண்டனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தால் இன்னும் நாற்றம் அதிகமாகும். பல அதிர்ச்சிகள் வெளியாகும். இதுபற்றி இன்னொரு நாளில் எழுதுவேன். ஆனால் இந்த கம்னாட்டி நாய் காக்கி அரை டிராயரைப் போட்டுக்கொண்டு பாப்பான்களோடு சேர்ந்து RSS வாழ்க என கத்திக்கொண்டு இருக்கிறான்.


இன்னுமொரு முக்கிய செய்தி. செளராஸ்டிர ஜாதியில் பிறந்த கால்கரி சிவா என்பவனிடம் அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார் ப்ளாக்குகளுக்களின் பாஸ்வேர்டு உள்ளது. அவனே பின்னூட்டங்களை கனடவிலிருந்து அனுமதிக்கிறான்.

இந்த செய்தி வந்த பிறகு நான் முதலில் செய்தது என்னுடைய ISP Provider ஐ கூப்பிட்டு என்னுடைய கணிணியை யாரவது ஹாக் செய்கிறார்களா என கேட்டன். அவர்களும் பல டெஸ்ட்களை செய்துவிட்டு இருநாட்கள் கழித்து என்னுடைய கம்யுட்டரை அக்ஸஸ் செய்தவர்களின் லிஸ்டை தந்தார்கள். அந்த லிஸ்ட் சாதரணமானதுதான் சந்தேகபடும் படியான அக்ஸஸ் யாரும் செய்யவில்லை .

என் சந்தேகம் இப்போது என்னவென்றால் "எனக்கும் நேசகுமாருக்கும் தமிழ்மணத்திற்கும் மட்டும் தெரிந்த விஷயம் ஆப்பிற்கு எப்படி கிடைத்தது?.

மூன்று பாஸிபிளிட்டீஸ்:

ஆப்பு என்பவர் நானாக இருக்கவேண்டும்

அல்லது நேசகுமாராக இருக்கவேண்டும்

அல்லது தமிழ்மண நிர்வாகத்தில் இருக்கவேண்டும்.

இவைகள் என் ஊகங்கள்தான்.... சந்தேகங்கள்தான்.....

எனது ஆய்வுகள் தொடரும்...

என்னுடைய ஐபி அட்ரஸ் என்ன என்னுடைய போஸ்டல் அட்ரஸ்கூட தர தயார்

ஆட்டோ ஆஸிட் கத்திவெட்டு என்ற பயமில்லை.

என்னுடைய கருத்து சுதந்திரத்திற்காக நான் போராட ரெடி ஏனென்றால் பத்துவருடங்கள் அரேபியாவில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவன் நான். ஆகையால் என்னால் சுதந்திரத்தை நன்றாகவே அனுபவிக்க முடியும். அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க எனக்கு உத்தேசமில்லை.

Thursday, March 29, 2007

இளசுகளை ஊக்குவித்த பெருசுகள்

நான் வாழும் Alberta மாநிலத்தின் ப்ரொபெஷனல் அசோஷியனின் பெயர் The Association of Professional Engineers, Geologists and Geophysicists of Alberta (APEGGA). இங்கே சாதரணமாக பி.ஈ அல்லது பி.டெக் படித்துவிட்டால் தங்களை எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ள முடியாது. APEGGA வில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு ப்ரஸ்ஸர் நான்கு வருடங்கள் EIT (Engineer-in-Traning) ஆக இருக்க வேண்டும் . பின்னர் Professional Ethics என்ற நன்னடத்தை பரீட்சை எழுதி பாஸ் செய்யவேண்டும், தாங்கள் வேலைப்பார்த்த கம்பெனிகளிடமிருந்து நல்ல ரெபரன்ஸ் இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால் தான் Professional Engineer என்ற பட்டத்தை தருவார்கள்.

அந்தப் பட்டம் கிடைத்த பிறகு பெயருக்கு பின்னால் P.Eng. போட்டுக் கொள்ளலாம், எஞ்ஜினியர் என அழைத்துக் கொள்ளலாம். அடியேனுக்கு அந்த பட்டம் கிடைத்து விட்டது.

APEGGA வும் University of Calgary யும் சேர்ந்து நடத்திய விழாவில் பங்கு கொள்ள நேற்றைக்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் என்னை போன்ற பெருசுகளிடம் பேசி எஞ்ஜினியர் வேலை எத்தகைய்து என அறிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்.

சுமார் 50 பெருசுகளும் 300 சிறிசுகளும் 50 ஆசியர்களும் கலந்து கொண்ட நிகழ்சி. இதுவே மாணவர்களின் ஆண்டு விழாவாகவும் கொண்டாடப் பட்டது.

வெளிநாட்டு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்வது முதல் முறை. மிக வித்தியாசமாக இருந்தது.

ஆங்கிலத்தாய்/ப்ரெஞ்ச் தாய் வாழ்த்து /இறைவணக்கம் இல்லை. விழாவின் தலைவர் வருகைக்கு கட் அவுட்டுகள், தலைவர் இதோ வந்துவிட்டார், வந்து விடுவார், வந்து கொண்டே இருக்கிறார் என்ற அறிவிப்புகள் இல்லை. விழாவின் மையப் பேச்சாளார் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி. சுமார் 32 வயது நிறம்பியவர். சர்வதேச மோட்டார் சைக்கிள் ரேஸ் இஞ்ஜினியர். உலக மோட்டார் சைக்கிள் ரேஸ் வட்டாரத்தில் புகழ் பெற்றவர். தான் கலந்து கொண்ட பந்தயங்கள், சென்ற நாடுகள், புகழ் பெற்ற வீரர்கள், அவரை ஸ்பான்ஸர் செய்த கம்பெனிகள் என பவர் பாய்ண்டில் படம் காட்டி பேசி கொண்டே போனார். எனக்கு சிறிது அலுப்புத் தட்டியது. என்ன ஓவர் அலம்பல் ஆக இருக்கே என. பிறகு அவர் மோட்டர் சைக்கிள் ரேஸ் எஞ்ஜினியரிங்கள் உலகத்தில் முதுகலை பட்டம் அளிக்கும் கல்லூரி ஸ்பெயினில் இருப்பதாக குறிப்பிட்டார். சிறிது சுவாரசியம் வந்தது. இதற்கெல்லாம் பட்டம் அதுவும் முதுகலை என்பது ஆச்சரியமல்லவா. அந்தக் கல்லூரியில் அவருக்கு இடமும் கிடைத்துள்ளது என்பதையும் தெரிவித்தார். முத்தாய்ப்பாக "உங்கள் ஆசை எதுவோ அதில் உங்களை தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஹாபி எதுவோ அதுவே உங்கள் காரியர் ஆக்கி கொள்ளுங்கள். அப்போதுதான் தினம் தினம் காலையில் உற்சாகமாக அலுவலகத்திற்கு செல்லுவீர்கள். உங்கள் வேலை உங்களின் மன உற்சாகத்தையும் தருவதால் நிச்சய வெற்றி உங்களுகுண்டு. நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாக ஆகுங்கள்" என முடித்தார். நல்ல பேச்சு.

பிறகு மாணவர்கள் தாங்கள் ஒருவருடத்தில் செய்த அசட்டுதனங்களை வீடியோ போட்டுக் காட்டினார்கள்.

வித்தியாசமாக மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.

நான் அமர்ந்திருந்த டேபிளில் ஒரு சீன இஞ்ஜினியர், இரண்டு வெள்ளைக்கார ஆசிரியர்கள், ஒரு சிங்கள மாணவன், ஒரு பிலிப்பினோ மாணவி மற்றும் ஒரு பங்களாதேச மாணவி அமர்ந்திருந்தனர். சர்வதேச அரங்கில் வேலை செய்வது எப்படி இருக்கும் என என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். அருகிலிருந்து டேபிளிலிருந்து ஒரு வெள்ளைக்கார இளஞர் கலந்து கொண்டார். "இஞ்ஜினியர் ஆனால் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?" எனக் கேட்டார்.

80களில் இந்தியாவில் ப்கழ் பெற்று இருந்த வசனத்தை சொன்னேன். அது "40 வயதிற்குள் 40 லட்சம் சம்பாதிக்க வேண்டும்" என்பதே. அவர் "சம்பாதித்தீர்களா" என கேட்டார். நானும் "ஆம் சம்பாதித்தேன் ஆனால் நான் எதிர்பார்த்ததை விட 21/2 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்" என்றேன். அவன் கண்களில் எதிர்காலத்தைப் பற்றிய கனவு விரிந்தது.

அப்போது அந்த பங்காளாதேசத்துபெண் " இப்போது பொருளாதாரம் நன்றாய் இருக்கிறது. அதனால் எல்லாருக்கும் வேலைக் கிடைக்கிறது. ரிசஷன் காலங்களில் எஞ்ஜினியர்களுக்கு வேலை போய்விடுமே" என்றார்.

"கனேடிய P.Eng. களுக்கு சர்வதேச அரங்கில் நல்ல மதிப்பு இருப்பதால் உலகில் எங்கே பொருளாதாரம் நன்றாக இருக்கிறதோ அங்கே வேலைக்கு போங்கள். கடந்த 23 வருடங்களாக நான் வேலையை இழக்கவில்லை." என்றேன். அந்த பெண்ணின் கண்களிலும் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.

பெருசுகளாகிய நாங்கள் சிறுசுகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஏற்றிவிட்டு வெளி வரும் நேரத்தில் சிறுசுகள் ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

வாழ்க சிறுசுகள்

Thursday, March 15, 2007

சில செய்திகள்

1. பாகிஸ்தானிய தீவிரவாதி "நான் தான் எல்லாம் செய்தேன்" என ஒப்புதல் வாக்குமூலம். சவூதியை சேர்ந்த ஒசாமா பின் லாடன் பணம் தந்தார் என்றான் (புஷ் பாகிஸ்தான் தீவிரவாத போரில் ஒரு நண்பன் என பெருமிதம். தீவிரவாதத்தை ஒழிப்பதில் சவூதியின் பங்கு பெரிது என பாராட்டு - இது வருங்கால செய்தி)

2. கனடாவின் மக்கள் தொகை G-8 நாடுகளில் அதிக வளர்ச்சி. இன்னும் மக்கள் தொகை அதிகமாக வேண்டும் என அரசியல்வாதிகள் மக்களை கேட்டுக் கொண்டனர். மக்கள் தொகை 3.2 கோடியாக உயர்ந்தது (தமிழக மக்கள் தொகை மட்டும் 6.2 கோடி. கனடாவின் பரப்பளவு இந்தியாவின் பரப்பளவை விட சுமார் 7 மடங்கு அதிகம்)

3. தொப்பை உள்ள ஆண்களுக்கு மனநோய் வரும் வாய்ப்பு கம்மியென்று ஆய்வு முடிவுகள தெரிவிக்கின்றன- சி என் என் செய்தி (தொப்பை வளர பீர் குடிப்போம் மன நோயை தவிர்ப்போம்)

4. கருக்கலைப்பு தவறு, கர்ப்பதடை தவறு, பாதிரியார்கள் பிரம்மாசாரியத்தை கடைப்பிடிக்வேண்டும் என போப்பாண்டவர் மீண்டும் வலியுறுத்தல் (மக்கள் தொகையை கட்டுபடுத்த இளம் வயது கத்தோலிக்கர்கள் பாதிரியார் ஆவதை தவிர வேறு வழியில்லை என புலமபல்)

5. ஆன்மிக சிந்தனைக்கு பரிசு $1.5 மில்லியன்கள். கனடாவை சேர்ந்த ஆன்மிக தத்துவஞானி சார்லஸ் டெயல்ர்க்க்கு கிடைத்தது ( ஆசையை அழியுங்கள் என சொன்னவருக்கு கிடைத்து பரிசு நல்ல காரியங்களுக்கு பயன்படும். ஆனால் 1.5 மில்லியன் கிடைக்கும் என ஆன்மிகத்தில் இறங்கினால் விபரீதம் ஏற்படும்.)

6. ஈரான் மேல் பொருளாதார தடைவிதிக்க 6 நாடுகள் சம்மதம் ( ஆனால் ஈரான் அதிபர் குரங்கு மார்க் அணுகுண்டை வெடித்தே தீருவேன் என சூளுரை)

7. பழைய பேப்பர், பாட்டில்கள், கேன்களை ரீசைக்கிள் செய்ய மாதம் $21 மக்கள் கொடுக்கவேண்டும் என கால்கரி முனிஸிபாலிடி முடிவு.( அடபாவிங்களா சென்னையில் இந்த ஐயிட்டங்களை மாதக் கடைசியில் விற்று பீர்-பிரியாணி சாப்பிடுவோம்டா என டெபுடேஷனில் கால்கரிக்கு வந்த சாப்ட்வேர் இளைஞர்கள் புலம்பல்)

8. பாரத பிரதமர் வீட்டின் மேல் பறக்கும் தட்டுகள் காணப்பட்டன (நாம் நம் கணவனை நோக்கி வீசிய தட்டுகள் அவ்வளவுதூரம் எப்படி போயின என மனைவியர் கலக்கம்)

9. The Hindu வின் கருத்துக்கணிப்பிற்கு மாறாக சமீப தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதற்கு காரணம் காங்கிரஸ் மேலிருந்த இந்துக்களின் கோபம் என கண்டுபிடிப்பு ( இனி சோனியா காந்தி ரூ 5,000 தந்து இந்துவாக மாறுவார் என நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதி சாய் பாபவிற்கும், அமிர்தானந்தமயிக்கும் எவ்வள்வு தந்தார் என்பதை தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் அன்னை சோனியாவிற்கு அறிக்கைகள் சமர்பித்தனர். தென்னாப்ரிககாவிலிருந்து அமேசான் நதி நீரை கொண்டுவர சாய்பாபா உதவினால சோனியா மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என அந்த அறிக்கைகள் கூறின)

Friday, March 09, 2007

சாப்ட்வேர் எஞ்ஜினியர்ஸ் நோ டென்ஷன் ப்ளீஸ்

பொன்ஸின் இந்த பதிவு இதை எழுத தூண்டியது. அலுவலகத்தில் அதிக நேரம் தங்கி வேலைப்பார்ப்பதை பற்றி நல்ல கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த மாதிரி அதிகநேரம் அதிகம் தங்கி இருக்கும் மனப்பான்மை எங்கிருந்து தோன்றியது எனப் பார்த்தால் பள்ளியிலேயே ஆரம்பித்து விடுகிறது. முதல் ராங்க் வாங்கும் மாணவனும் 6 மணிநேரம் பள்ளி 6 மணிநேரம் டியூசன் என போவான். ஐஐடி கோச்சிங் அந்த கோச்சிங் என மேலும் மேலும் தன்னை வருத்திக்கொள்வான்.

கல்லூரி போனதும் அங்கேயும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸ், ஜி ஆர் ஈ, டோபல், சாப்ட்வேர் கம்பெனிகளின் எண்ட்ரன்ஸ் டெஸ்ட் பிரிபரஷன், அடிஷனல் சாப்ட் வேர் பயிற்சி என ஓயாத ஓட்டம்.

வேலைக்கு சேர்ந்ததும் டிரெய்னிங் அதில் முதல் ராங்க் வாங்க ஓட்டம். அதன் பிறகு வேலைக்கு வந்ததும் ஒரு வேலையை தந்தால் அந்த டெக்னாலஜி தெரியாவிட்டால் தனக்கு தெரியாது என சொல்பவர்கள் எத்தனை பேர்?

"சார்... சார்... எனக்கு எல்லாம் தெரியும் சார்" என மார்தட்டுபவர்கள்தான் அத்தனைபேரும்.

வேலை வந்தபிறகு அந்த டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு பிறகு வேலை செய்யவேண்டும். ப்ராஜெக்ட் மானேஜர் வேறு அப்பர் மானெஜ்மெண்டிடம் ஒரு ambitious டார்கெட்டை கொடுத்திருப்பார். இதனால் தான் மக்கள் லேட்டாக தங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது.

இங்கே ஒரு வெள்ளைக்காரனை ஒரு புது டெக்னாலஜியில் வேலை செய்ய சொன்னால் அவனுக்கு முதலில் அதில் பயிற்சி அளிக்கவேண்டும் அதன் பிறகுதான் வேலையை ஆரம்பிப்பான். அவன் சொல்லும் கால அளவு இந்திய ப்ராஜெக்ட் மானேஜர்கள் சொல்லும் கால அளவைவிட 4 மடங்கு அதிகம் இருக்கும். ஆனால் வேலைத்தரமாக இருக்கும் முழுமையாகவும் இருக்கும்.

இந்தியகம்பெனிகள் ஆழம் பார்க்கால் காலை விட்டுவிட்டு பிறகு இரவுபகல் பாடுபட்டு வேலைப்பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

"இந்த வயசில் வேலை செய்யாவிட்டால் எந்த வயசில் வேலை செய்ய்முடியும் அட்ஸஸ்ட் பண்ணிக்கிருங்க சார்" என்ற மெண்டலிட்டிதான் நம் ஆட்களின் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்

Thursday, March 08, 2007

பன்னாட்டு கம்பெனிகளில் பார்ட்டி கலாசாரம்

சமீபத்தில் சாப்ட்வேர் இஞ்ஜினியர்கள் குடித்து போதை மாத்திரை சாப்பிட்டு விட்டு செக்ஸ் பார்ட்டிகளில் கலந்து கொண்டு கைதானர்கள் என்ற செய்தியை வைத்து இரண்டு பதிவுகள் வந்துவிட்டன.

கடந்த 23 வருடங்களில் 18 வருடங்கள் (5 வருடங்கள் அரபு கம்பெனி) 2 மேலை நாட்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவன் என்ற வகையில் என் அனுபவங்கள் :

1980களில் இந்தியாவில் பன்னாட்டு கம்பெனிகள் 5 நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டியை வைப்பார்கள். இந்த மாதிரி பார்ட்டிகள் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். இது வழக்கமாக புத்தாண்டு/கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியாக இருக்கும். சில பார்ட்டி கேம்கள், பீர் முதல் விஸ்கி வரை இருக்கும். இங்கே குடித்துவிட்டு ஆட்டம் போடுபவர் மிக மிக கம்மி. அவ்வாறு ஒருவர் செய்தார் என்றால் அவரின் வேலை ஆட்டம் காணும் அல்லது அவரது வேலை ஆட்டம் கண்டிருக்கும். பெண்கள் கம்மி இந்த காலகட்டங்களில் அவர்கள் குடித்து பார்த்ததில்லை.

கஸ்டமர் எண்டெர்டெய்ண்மெண்ட் பார்ட்டிகள் அதிகம் இருந்தன. இதில் குடித்து ஆட்டம் போட்டவர்கள் கஸ்டமர்களே. கவனிக்கவும் கஸ்டமர்கள் அனைவரும் பாரத நாட்டின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள். சில ஜட்ஜ்களும் உயர் போலீஸ் ஆபிஸர்களும் மிகக் கீழ்தரமாக நடந்து பார்த்திருக்கிறேன். ஜட்ஜூகள் போலீஸ் அதிகாரிகள் பப்ளிக் இடங்களுக்கு வரமாட்டார்கள். ஆனால் போட்கிளப், ஜிம்கானா கிளப் போன்ற கிளப்களுக்கு வருவார்கள்

1990 களில் பார்டிகளின் அளவு எகிறியது. ஒவ்வொரு புராஜெக்ட் வெற்றிக்கும் பார்ட்டிகள் நடந்தன. பெண்கள் அதிகமாக வேலை செய்ய வந்தனர். அவர்களில் மிக சிலர் மறைவாக குடித்தனர். ஆபிஸில் காதலும் பாலுறவு தொடர்பும் வதந்திகளகாவே இருந்தது. இந்த காலகட்டத்தில் பன்னாட்டு கம்பெனிகள் லோக்கல் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜைகள் விமரிசையாக கொண்டாடப்பட்டன.

2000 களில் சரிபாதி பெண்கள் இருந்தனர். அலுவலகம் பாலுறவு தொந்தரவுகளை மன்னிக்கவில்லை. சம்பந்த பட்ட ஆணோ பெண்ணோ வேலையை இழந்தார்கள். ஆனால் காதல் ஆங்கீகரிக்கபட்டது.

நான் ஒரு பெண்ணை நேர்முக தேர்வு செய்து அவளுக்கு வேலை தந்தவுடன் அவள் என்னிடம் வந்து என்னுடைய காதலனும் இண்ஸ்ட்ருமெண்ட் இஞ்ஜினியர் அவனை வேலைக்கு எடுப்பீர்களா என கேட்டாள். உன்னுடைய காதலன் தகுதியானவன் என்றால் வேலைதருவதில் சிரமமில்லை என்றேன். பின்னர் அவளின் காதலனும் என்னுடைய அலுவலகத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்கள் திருமணம் நடந்தது. பெண் நெல்லூர் ஆண் லக்னோ.

கள்ளக் காதல்கள் வதந்திகளாகவே இருந்தது.

இங்கே கால்கரியில் மாதம் ஒரு முறை பீர் பார்ட்டி அலுவலகத்திலேயே உண்டு. ஆண்களும் பெண்களும் கலந்துக் கொண்டு ஜாலியாக பேசிவிட்டு குடித்துவிட்டு செல்வர். 2 கேன்களுக்கு மேல் குடித்துவிட்டால் வீட்டிற்கு போக வர டாக்ஸி டோக்கனும் கொடுத்துவிடுவார்கள் இங்கே.

இந்திய கம்பெனிகள் அதாவது இந்திய அரசாங்க கம்பெனிகள் இந்த மாதிரி பார்ட்டிகளை தருவதில்லை. ஆனால் மக்கள் பாருக்கு செல்லாமலா இருக்கிறார்கள். மது அருந்துவது ஒரு பொழுது போக்காக டென்ஷனை குறைக்கும் வழியாகிவிட்டது. அது கம்பெனியே வழங்கி மக்களை குஷி படுத்துகிறது. மதுவை குடித்தே ஆக வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை. அப்படியே மது குடிப்பவர்கள் 20 முதல் 25 % தான் மீதமுள்ளவர்கள் சைட் டிஷ்ஷை சாப்பிடுவதற்கும் பாஸை ஐஸ் வைப்பதற்கும் வருபவர்கள்

போதை மருந்து உட்கொள்வது மற்றும் கூட்டு பாலுறவு போன்றவை வெளிநாட்டிலும் நார்மலான வாழ்க்கை வாழ்பவர்கள் செய்யவில்லை.

ஆயிரகணக்கான பேர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறு சதவிகிதம் இந்த மாதிரி கெட்ட கொண்டாட்டங்கள் செய்வது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்ல.

Tuesday, March 06, 2007

ரிசர்வேஷனின் பரிணாம வளர்ச்சி

மத்திய 80களில் ரிசர்வேஷன் என்பது அநியாயமாக இருந்தது. ஒவ்வொரு ஊருக்கு ஒரு அளவில் ரிசர்வேஷன் . சின்ன ஊர்களுக்கு மிக சிறிய கோட்டா. பணக்காரங்களுக்கு ஈசியாக ரிசர்வேஷன். என்ன அநியாயம்ன்னா பணக்காரனாய் இருந்தால் ராஜ மரியாதையாக ரிசர்வேஷன். ரிசர்வேஷனின் பலனை அனுபவிக்க மக்கள் பட்ட பாடு இருக்கே அப்பா பயங்கரம். அந்த இடமே ஒரே புழுக்கம், வேர்வை நாற்றம் எனக் கூட்டம் அலை போதும்.




அட ......நான் ரயில்வே ரிசர்வேஷனைப் பற்றி பேசறேன்.


அந்த காலத்திலே பாண்டியனுக்கு ஒரு லைன், வைகைக்கு ஒரு லைன், ப்ர்ஸ்ட் கிளாஸுக்கு ஒரு லைன் படா பேஜாராய் இருக்கும். இந்த ரிசர்வேஷன் பண்ற நேரத்துக்குள்ளே கே.பி. டிராவல்ஸ் பஸ்ஸை பிடிச்சி ஊருக்கே போயிடலாம்.

என் நண்பர் ஒருவர் சி எம் சி என்ற கவர்மெண்ட் கம்பெனியிலே வேலை பார்த்துகிட்டு இருந்தார் அப்போ. அவர் வந்து கதை கதை யாய் சொல்லுவார். கம்யூட்டர் ரிசர்வேஷன் சாப்ட்வேர் பற்றி. முழு சாப்ட்வேரும் போர்ட்ரானில் எழுதினார்கள் முதலில் என்பார். சென்னை, பம்பாய், டில்லி மற்றும் கல்கத்தா நகரங்களில் உள்ள கம்யூட்டர்களை இணைக்க போவதாய் சொல்லுவார். நாங்களும் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்ப்போம்

அங்கிருந்து ஆரம்பித்தது நிற்கவே இல்லை. இப்போது ரயில்வே டிக்கட்டை வீட்டிலிருந்த படியே புக் செய்யலாம். சில சமயம் நான் கனடாவிலிருந்து என் தாயாராக்கு ரயில்வே ரிசர்வேஷன் செய்திருக்கிறேன்.

இதை ஆரம்பிக்கும் போது எத்தனை தடைகள். செங்கொடி தொண்டர்கள் முதலில் கம்யூட்டர் வந்தால் ஆள் குறைப்பு ஏற்படும் என்று கொடி தூக்கினார்கள்.

நடந்தது என்ன?

எந்த கவுண்டரிலும் எந்த டிரயினுக்கும் எந்த கிளாஸுக்கும் ரிசர்வேஷன் செய்யலாம் என சமத்துவம் வந்தது.

ஏஜெண்டுகள், லஞ்சம் பெருமளவு குறைந்தது.

எந்த ரயிலில் எந்த வகுப்பில் எந்த தேதியில் எவ்வளவு இருக்கைகள்/படுக்கைகள் உள்ளன என்பது மிக துல்லியமாக மக்கள் அறிய முடிகிறது.

இப்போது எந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலையும் தருகிறார்கள்.

எஸ் எம் எஸில் கூட ரயில்வே பற்றி அறிய முடிகிறது...

எத்தனை எத்தனை மக்கள் பயன் பெற்றார்கள்.

ஆக மொத்தம் ரயில்வே ரிசர்வேஷன் செய்வது ஒரு இன்ப அனுபவமாகவே உள்ளது.

சாபஷ்டா... சாப்ட்வேர் இஞ்சினியா..... உன் பணி தொடரட்டும்

Tuesday, February 27, 2007

AC-360


நேற்று ஆண்டர்ஸன் கூப்பரின் AC-360 நிகழ்ச்சியில் கணிசமான இடத்தைப் பெற்றது இரண்டு செய்திகள்

முதல் செய்தி இயேசு குடும்பத்தாரின் கல்லறைப் பற்றிய ஜேம்ஸ் காமரூனின் ஆவணப்படம். எழிலும் இதைப் பற்றி இரண்டு பதிவுகளை பதிந்துள்ளார். இந்த படம் கிருத்துவத்தின் ஆணி வேரை அசைக்கும் அளவிற்கு செய்திகள் கொண்டவை என விவாதித்தார்கள். இந்த விவாதத்தில் மத குருமார்கள், விஞ்ஞானிகள், நிருபர்கள் பங்கு கொண்டனர். விவாதம் ஒரு அறிவாளித்தனத்துடன் நடந்தது. இது இயேசுவின் எலும்பா? இதனால் கிருத்துவம் ஆட்டம் காணுமா என்பதில் என் கருத்து எதுவும் இல்லை. ஆனால் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் என்னை பொறாமை கொள்ள செய்தது. அமைதியாகவும் காரசாரமாகவும் விவாதித்தார்கள் வன்முறை வெடிக்கவில்லை.

ஆனால் நம் நாட்டில் ஜட்டியில் ராமர் படம் போட்ட பிரான்ஸ் கம்பெனிக்கு எதிர்ப்பு தெரிவித்து நம் நாட்டின் பஸ்ஸை உடைப்பார்கள்.

இஸ்லாமிஸ்டுகளுக்கு சொல்லவே வேண்டாம் முகமதுவின் படத்திற்கு செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமா? கடைசியில் என்ன நடந்தது எல்லாரும் அந்த படத்தைப் பார்த்தார்கள்.

டாவின்சி கோட் படத்தை தடை செய்தது நம் மத சார்பற்ற அரசு ஆனால் அதன் டிவிடி விற்பனையை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதித்தென்னவோ இதே அரசியல் வாதிகள்தான்

சரி, கிறிஸ்துமஸ் போதும் ஈஸ்டர் போதும் இந்த மாதிரி படங்கள் ஏன் வருகின்றன? எல்லாம் பணத்திற்கு தான். இந்த நேரங்களில் மக்கள் இயேசுவை நினைப்பார்கள் அப்போது இந்த மாதிரி படங்களை வெளியிட்டால் மில்லியன்களை சுலபமாக தேற்றலாம்.

இராண்டாயிரம் வருட இரண்டு பில்லியன் மக்களின் நம்பிக்கையை இந்த மாதிரி படங்கள் மாற்ற போவதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது.

ஆனால் இந்த மாதிரி விவாதங்கள் அவசியம் என்பது என் அபிப்ராயம் . உண்மைகளை அறிய மனித மனம் மேற்கொள்ளும் ப்ரயத்தனங்கள் எத்தனை.... எத்தனை.......


அடுத்த செய்தி மாவீரன், பேட்டை ரவுடி, கூலிக்கு மாரடிக்கும் முஷாரப்பைப் பற்றியது.


இது சற்று வீரமானது.

இதுவரைக்கும் 10 பில்லியன் டாலர்களை தந்துவிட்டோம் இந்த முஷாரப் ஏன் இன்னும் தீவிரவாதிகளை டெலிவரி செய்யவில்லை என சட்டையை பிடித்து கேட்கிறது இந்த ரிப்போர்ட்.

நம் தோழர் என்கிறோம், அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்த நாட்டை அவ்வளவாக நாம் கண்டிப்பதில்லை, பில்லியன்களை கொட்டி உதவுகிறோம் ஆனால் தீவிரவாதிகளை இவர்கள் நாட்டில் இன்னும் சகல வசதிகளுடன் வாழ்கிறார்கள். நம் வரிப்பணத்தில் இவர்கள் உண்டு களிக்கிறார்கள் நாம் என்ன இளிச்சவாயர்களா? என அமெரிக்கர்களை உசுப்பேத்துகிறார் ஆண்டர்ஸன்.

ஆண்டர்ஸன் கூப்பர் போன்ற தேசப்பற்றுமிக்க பத்திரிக்கையாளர்கள் நம்நாட்டில் இல்லாதது நாம் செய்த துரதிருஷ்டமே.

ஆண்டர்ஸன் கூப்பர் வாழ்க

Monday, February 26, 2007

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

மு.கு. : சாய் பாபா பற்றி பதிவு வந்ததும் அதற்கு எதிர் பதிவு என்னிடம் இருந்து வரும் என பல பதிவளார்கள் நினைத்தது எனக்கு தெரிந்தது. அதனால்தான் இந்த பதிவு.

சாரு நிவேதிதா தமிழ் எழுத்துலகில் பின்நவீனத்துவத்தை எழுதுவதில் முன்னோடி. இவரின் சென்னை அனுபவங்கள் விரும்பி படிப்பேன் ஏனென்றால் என் அனுபவத்தை படித்தது போலிருக்கும். இவரும் நான் அடிக்கடி சென்று வந்த பார்களைப் பற்றியும் உணவு விடுதிகளையும் பற்றியும் எழுதியுள்ளார். இவர் வீடும் சென்னையில் எங்கள் வீட்டிற்கு அருகில்தான். இவர் வாக்கிங் போவதை பார்த்திருக்கிறேன். இவரிடம் பேச நினைத்துண்டு ஆனால் இவர் அதை விரும்பவில்லை என ஒரு முறை எழுதியிருந்தார். அதனால் பேசவில்லை. இவர் எழுதும் பொலிவிய நாட்டு இலக்கியங்களும், இசைபற்றிய கட்டுரைகளும் மற்றும் இவரின் இணைய காதலிகளின் சாட்களும் என் மிடில் கிளாஸ் மூளைக்கு எட்டாது.

இவர் சாய்பாபாவைப் பற்றி எழுதிய கோணல்பக்கங்கள் படிக்கநேர்ந்தது. அதை தமிழ் உள்ளங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

அந்த பதிவில் அவர் கூறுகிறார் " "பாபா இதையெல்லாம் (மோதிரத்தை) சட்டைக்குள்ளிலிருந்து எடுக்கிறார்" என சில பகுத்தறிவாளர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன் அப்படியென்றால் பாபா ஒரு தங்க மலையை தன் சட்டைக்குள் வைத்திருக்கவேண்டும்"

சாய் பாபா பஜனைகள் பாடும் போது உபநிடத சுலோகங்களை பாடி முடிப்பார்கள். அதை சமசுகிருதத்தில் தந்தால் எதையும் தாங்கும் இதயங்கள் தாங்காதல்லவா ஆகையால் செந்தமிழில் இதோ

பொய்மையிலிருந்து உண்மைக்கு
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
மரணத்திலிருந்து முக்திற்கு

கடைசியாக சாருவிற்கு

0 டிகிரியிலிருந்து 180 டிகிரிக்கு

------------------------------------------------------------------------------------------------
பி.கு தலைவா சாரு, அடுத்த முறை நான் சென்னை வரும்போது என் போன்ற இலக்கிய தற்குறிகளுடன் பேசுவீர்களா?. தங்களுக்கு பிடித்த விரால் மீன் குழம்பு எனக்கும் பிடிக்கும் சாய் பாபாவும் பிடிக்கும்

Friday, February 16, 2007

ஆன்மிகம் ஆனந்தமானது...

இன்று சிவராத்திரி. சிறுவயதில் மதுரை தெற்காவணி மூல தெருவில் திரு குன்னக்குடி வைத்தியநாதரின் வயலின் இசையை இரவு முழுக்க கேட்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.

பிறகு அரேபிய பாலைவனத்தில் காபிரல்லாதவர்களின் நடுவில், மற்றவர்கள் பயந்து பயந்து இருக்க நான் ஆனந்தமாக இரவு முழுக்க சிவராத்திரி பஜனை மற்றும் அபிஷேகங்களை வீட்டில் நடத்தியிருக்கிறேன்.

பஜன் நடக்கும் போது அவ்வப்போது இஞ்சி ஏலக்காய் டீ, சுக்கு மல்லி காப்பிகளை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறேன்.

இன்றைய ராத்திரி கால்கரியில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பக்தர்கள் நடத்தும் பஜனையில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். ஸ்ரீஸ்ரீ " ஆன்மிகம் என்பது ஏன் இறுக்கமாக இருக்கவேண்டும். ஆனந்தமாக பாடி நடனமாடி சந்தோஷமாக ஆன்மிகத்தை பெறலாமே" என்று கூறுவார். பார்க்க ஸ்ரீஸ்ரீ பக்தர்கள் கொண்டாடும் வீடியோவை:




ஆன்மிகம் ஆனந்தமானது. நம்முள் இருக்கும் இறைவனை நாம் உணரும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது. பகலென்ன இரவென்ன அந்த ஆனந்ததிற்கு தடை கிடையாது. தங்கு தடையின்று ஆனந்த வெள்ளத்தில் நீந்த ஆன்மிகமன்றி வேறின்பம் ஏது இதைத் தான் முன்னோர்கள் பேரின்பனம் என்பார்களா?

இங்கே பாரதியாரின் பாடலை மனதிற்குள் பாடிக்கொண்டேன்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் -
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென்றொருநிலை சமைத்தாய் -
அங்கு முழுதினையுமுணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலைவகுத்தாய் -
எங்கள பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)

இந்த பாடலை என் அபிமான பாடகர் திரு உன்னிகிருஷ்ணன் குரலில் கேட்க
இங்கே

இசைக்குயில் பாடியதை கேட்க இங்கே

சின்னகுயில் மஹாநதி ஷோபனா பாடியதை கேட்க இங்கே

Friday, February 09, 2007

மனத்தளர்வு

தடைகள் இல்லாத பயணம் உற்சாகமாக இருக்கும். சோம்பல் இருக்காது. புத்துணர்வும் அமைதியும் நிறைந்த பயணமாக இருக்கும்.

அதே போல் தான் வாழ்க்கையும்.

மனத்தடைகள் இல்லாத வாழ்க்கை அற்புதமானது. மனத்தடைகள் நமக்கு எங்கிருந்து வருகின்றன. முதலில் வீட்டிலிருந்து பிறகு பள்ளியில், சுற்றம், நட்பு இவர்களிடமிருந்து. இதைத்தான் ஒஷோ "பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து காப்பாற்றுங்கள்" என்றார். உலகில் அனைவரும் தங்கள் மனத்தடைகளை மற்றவர்கள் மேல் திணிப்பதில் மும்முரமாக உள்ளார்கள்.

ஒரு சாரர் குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடன் இதை செய்யாதே அதை செய்யாதே என எல்லாவற்றுக்குக் தடை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு சாரர் மியூசிக், காரத்தே, கிரிக்கெட், ஹிந்தி, டியூசன் என ஓய்வில்லாமால் குழந்தையை ஓட்டிக் கொண்டே இருப்பார்கள். சதாகாலம் டென்ஷன்தான். இந்த பெற்றோர்கள் வெளிநாடு வந்தும் இங்குள்ள அமைதியான வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு பாட்ம் கம்மியாக இருக்கிறது என புலம்பி கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு வளரும் குழந்தைகள், ஓடி ஓடி அலைந்து அல்லாடி கூடிய சீக்கிரம் உடல் தளர்வடைவதை போல் மனதளர்வை சீக்கிரம் அடைகின்றனர். இதை மன அழுத்தம் அல்லது டிப்ரஷன் என்றும் அழைப்பர். (கிளினிக்கல் டிப்ரஷனுக்கு காரணம் மூளயில் சுரக்கும் சில இரசாயன திரவங்கள் சமநிலை தவறுவதால் ஏற்படுகிறது. இதற்கு மாத்திரைகள் மருந்துகள் உண்டு. அது வேறு விஷயம்.)

நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களயும் சந்தோஷமாக வைத்திருந்தால் மனத்தளர்விற்கு வாய்ப்பு ஏது?

மனம் தளர்வடையாமல் இருக்க சில யோசனைகள்:

1. உங்களுக்கு பிடித்த வேலையை அல்லது படிப்பை தேர்ந்தெடுங்கள்.

2. பிடித்தவேலை கிடைக்கவில்லை அல்லது மிக அசாதரண திறமை இல்லை என்ன செய்வது? வாழ ஒரு வேலை கிடைக்காமலா போய்விடும். கிடைக்கும். அங்கே சேர்ந்து அங்குள்ளவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.

3.உங்களுகாக உங்களுகாகவே ஒரு நாளில் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி தனியாக இருங்கள். தனிமையை அனுபவியுங்கள். மனம் ஓய்வு எடுத்துக் கொள்ளும். மகிழ்ச்சி தானக வரும்

4. எதிர்காலம் பற்றிய பயத்தை விடுங்கள். தாங்கள் செய்யும் வேலையை முழு மனதுடன் இன்றே செய்யுங்கள். எதிர்காலம் இன்று போல் நன்றாக தான் இருக்கும்

5. உங்கள் குழந்தைகள அவர்கள் மனம் போல் வளரவிடுங்கள். தவறான வழியில் போனால் மட்டுமே அவர்களை நல்வழி படுத்துங்கள். அதுவும் அன்பாக பேசி

இப்போது அனுபவம்:

கோபால் என்ன தான் முயற்சித்தாலும் கணக்கு வரவே இல்லை.
ஆனால் அழகாக படம் வரைவான். உங்களைப் பார்த்தால் உங்களை போட்டோ எடுப்பது போல் வரைந்துவிடுவான்.

பென்சில், சாக்கு, கரி ஏன் உளி கொண்டு கட்டையில் கூட வரைந்துவிடுவான். ஆனால் விட்டார்களா அவனை...... வீட்டில் கரித்துக் கொட்டிவிட்டார்கள். பக்கத்து வீட்டு பையன்கள் ஐஐடி பிட்ஸ் அண்ணா என போனபோது இவன் கரஸ்ஸில் லிட் படித்தான். ஆங்கிலத்திலும் நாம்மாளுக்கு புலமை அதிகம். அட்வர்டைசிங் கம்பெனியில் சின்ன ஆர்ட்டிஸ்ட் என ஆரம்பித்து காப்பி ரைட்டர் வரைக்கும் உயர்ந்தான். கம்யூட்டர் வந்தது அதில் கிராபிக்ஸ் அனிமேஷன் என தூள் கிளப்பி இவன் தவறவிட்ட, ஐஐடி அண்ணாவில் படித்த நண்பர்கள் சென்ற, அமெரிக்காவிற்கு சென்று அவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறான். இப்போது பெற்றோரும் சுற்றாரும் போற்றுகின்றனர். ஆனால் அவன் பட்ட அவமானங்கள் எத்தனை?

அப்பப்பா... சின்ன வயதில் அவனை அவன் வழியில் விட்டிருந்தால் அவன் இன்னும் சிறப்பாக வந்திருப்பான்.

மனத்தடைகளை களைந்து மனத்தளர்வுகள் இன்றி அமைதியான மகிழ்ச்சியான வாழ்கையை வாழுவோம்

பி.கு.

சுவாமி சுகபோதனந்தா, நித்தியானந்தா, சுகி.சிவம் போன்றவர்களுக்கு போட்டியாக வரவில்லை. ;))))

சிலா கார்பரேட் மொரேல் பூஸ்டர் செமினார்களில் பங்கு கொண்டதின் விளைவு.

எல்லா பசங்களும் நம் கீதை, யோகா, உபநிடதங்கள் இவற்றிலிருந்து தத்துவங்களை எடுத்து அழகாக கையாளுகின்றனர்.

5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கி நம் நாட்டின் தத்துவங்களை இவர்கள் மூலம் அறிந்து வியக்கிறோம்.

உம்ம்ம்..... "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கொங்கோ அலைகின்றாய் ஞான தங்கமே" என்ற பாடல் மனதில் ஓடியது

Tuesday, February 06, 2007

மனத்தடைகள்

சில பேருக்கு சில நேரங்களில் சில மனதடைகள் இருக்கும். மனத்தடை என்பது என்ன? ஆங்கிலத்தில் mental block என வைத்துக் கொள்ளலாம். ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது ஒரு உணவைப் பற்றியோ அல்லது சில பேரின் உருவங்களைப் பார்த்து அவர்களை பற்றியோ ஒரு மனத்தடையை ஏற்படுத்தி கொள்வார்கள்.

எனக்கு இந்த சூஷி பற்றி ஒரு மனத்தடை. அது வேகவைக்காத மீனால் ஆன உணவு பொருள் என்று. பொதுவாக ஸீ புட்களைப் பார்த்தலே அது நாறும் என்ற மனத்தடை எனக்கு உள்ளது.

என் அனுபவத்தில் நான் பார்த்த மனத்தடைகள் :

கடந்த வருடம் துபாய் ஏர்போர்ட்டில் சென்னை கனெக்டிங் பிளைட்டை தவறவிட்டு அடுத்த பிளைட்டிற்காக சுமார் 6 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது. கணிணியில் தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு தமிழ் இளைஞர் அறிமுகமாகமானர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஈமெயில் பார்க்க என் கணிணியைக் கொடுத்தேன். இலவசமாக உணவு கிடைத்தது. அங்கே நானும் அவரும் சென்று ஸ்டார்ட்டர்களான சமோசாவையும் ஒரு கிளாசில் ஜூஸும் எடுத்துக் கொண்டு அமர்ந்தோம். சமோசாவை நான் கடிக்க எத்தனிக்கும் போது. அந்த இளைஞர் நிறுத்துங்கள் என கத்திவிட்டார். ஏன் என்றேன் இது சிக்கன் சமோசா என்றார். அதனால் என்ன என்றேன். அவர் நீங்கள் சிக்கன் சாப்பிட மாட்டீர்களே என்றார். நான் உங்களைப் பார்த்து 1 மணிநேரம் தான் ஆகிறது. நான் சிக்கன் சாப்பிட மாட்டேன் என சொன்னமாதிரி எனக்கு ஞாபகமில்லையே என்றேன். இல்லை சார் உங்களைப்பார்த்தால் நான் வெஜ் சாப்பிடுபவர் மாதிரி இல்லையே என்றார். அவருக்கு நான் பிராமணராக இருப்பேன் என மனத்தடை. இந்த மாதிரி உருவ அமைப்பு உள்ளவர்கள் பிராமணர்களாகத்தான் இருப்பார்கள் என அவரின் மனத்தடை.

இன்னொருவர் இவர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். கரிய நிறம். இவருடன் ஹூஸ்டனில் ஒரு ஓட்டலுக்கு போனேன். நீ தண்ணியடி ஆனால் பாரில் வேண்டாம் ரெஸ்டாரண்டில் அடிக்கலாம் என்றார். நானும் சரியென்று ஒரு பீரும் சைட் டிஷ்ஷிற்கு சிக்கன் விங்க்ஸும் ஆர்டர் செய்தேன். அவர் சிக்கன் விங்ஸை என்னுடன் பகிர்ந்துக் கொள்வதாயும் குடிக்க கோக் பாட்டில் அல்லது கேனில் வேண்டும் கிளாஸில் வேண்டாம் என பல முறை அந்த பெண்ணிடம் கேட்டுக் கொண்டார். ஆர்டர் செய்தவுடன் அவர் தன்னை ஒரு டீ டொடலர் என்று சொல்லிக் கொண்டார். சிகரட் வாசனை ஆல்கஹால் வாசனை அறவே பிடிக்காது என்றார். அயிட்டங்கள் வந்தன அவருக்கு கோக் கிளாசில் வந்தது. மனிதர் கொதித்து விட்டார். சர்வரியும் அங்கே ட்ராப்ட் கோக் மட்டும் உள்ளது பாட்டிலோ / கேனோ இல்லை என்றார். கடைசியாக ஒரு பேப்பர் டம்ளரில் கோக்கை குடித்தார். நானும் ஏன்... ஏன் எனக் கேட்டேன். அவரிடமிருந்து வந்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. கிளாஸில் ஆல்கஹால் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்குமாம் அதனால் வெளியே வந்தால் கிளாஸில் எந்த பானமும் குடிக்க மாட்டாராம். எங்கு போய் முட்டிக் கொள்வது. ஆல்கஹால் தண்ணீரில் இரண்டற கலக்கும் குறைந்த வெப்பநிலையில் ஆவி ஆகிவிடும். இங்கே ரெஸ்டராண்டுகளில் கிளாஸ் பாத்திரம் கழுவும் மெசினில் நன்றாக கழுவி சுடு காற்றால் காயவைப்பார்கள். ஆல்கஹால் இருக்க வாய்ப்பில்லை. வேதியியலில் டாக்டர் பட்டம் வாங்கியவருக்கு நான் சொல்லத் தேவையில்லை. சிக்கன் விங்ஸ் சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த விங்க்ஸ் வைன் ஊற்றி சமைத்திருப்பார்கள் என்றேன். அவர் பேய் அறைந்தவர் போல் ஆகி விட்டார். ஆல்கஹாலைப் பற்றி அவரின் மனத்தடை சற்று அதிகம்.

நம் வலைப்பதிவுகளில் ஒருவர் இந்து மதத்தைப் பற்றி எழுதிவிட்டாலோ அல்லது கருப்புக் கொடி கேடிகளை தாக்கிவிட்டாலோ அவர் ப்ராமணராகத்தான் இருப்பார் என்பது சிலரின் மனத்தடை.

மனத்தடைகளே மனிதனின் முன்னேற்றத்திற்கான முக்கிய தடை கல்.

மனத்தடைகளை களைவோம் முன்னேறுவோம்

Saturday, January 27, 2007

குரு - ஒரு அருமையான திரைப்படம்

சினிமாக்களை சில நாள் ஆற அமர பார்ப்பதுதான் என் வழக்கம். பல பேர் குருவை பார்த்து விட்டு பயங்கரமான விமர்சனங்கள், விவாதங்கள் செய்துவிட்டார்கள்.

என் பங்குகிற்கு நான் செய்ய வேண்டாமா. குரு யார்? பணக்காரங்களிடமிருந்து பணத்தை எடுத்து ஏழைக் களுக்கு வாரி வழங்கும் வள்ளல். சிறு வயதில் கடுமையாக உழைத்து வளந்து பெரியவனாகி தன் காதலியை சந்திக்கிறான். அப்போது அவன் காதலியிடம் படும் பாட்டை இந்த பாடல் மூலம் முற்றிலும் வித்தியாசமாக் இயக்குனர் காட்டியிருக்கிறார்



ஹி ஹி புது ப்ளாக்கர் புது டெம்ப்ளேட் ஒரு டெஸ்டிங் தான்

Thursday, January 04, 2007

Bloody America.... yaar

வெளிநாட்டிலிருந்து நான் இந்தியா போகும் போது வங்கிகள், LIC, டெலிபோன் மற்றும் இதரவேலைகள் ஏதாவது ஒன்று இருக்கும். அந்தந்த அலுவலகங்களுக்கு செல்லும் போது என்னுடன் என் சகோதரியின் மகனை அழைத்து செல்வது என் வழக்கம்.

இந்த அலுவலகங்களில் அலைகழிப்புகள், லஞ்சம், மெத்தனம் ஆகியவைகள கடந்து வேலை முடிந்தவுடன் Bloddy India...yaar என அங்கலாய்ப்பது என் வழக்கம். அச்சிறுவனும் கேட்டுக் கொள்வான். அவனுக்கு வேண்டியது அவனுக்கு தேவையான் வெஜிடபுள் பப்ஸ், கேக் மற்றும் கோக் McRennet இல் கிடைத்துவிடும்.

சிறுவன் வளர்ந்தான், சாப்ட்வேர் நிபுணன் ஆனான். இரண்டு வருடங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப்பார்த்தான். H1B விசா கிடைக்கப் பெற்று அட்லாண்டாவில் லாண்ட் ஆனான்.

சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு அப்ளை செய்ய அமெரிக்க அரசாங்க அலுவலகம் சென்றான். அங்கே வேலைப்பார்க்கும் பெண்மணி உன் பெயர் மிக நீளமாக இருக்கிறது என்னுடைய கம்யூட்டரில் அடக்க முடியவில்லை. இமிகிரேஷனில் போய் உன் பெயரை மாற்றிக் கொண்டு வா என்றார்.

சிறுவனும் இமிகிரேஷனுக்கு ஓடினான். இமிகிரேஷனில் இருந்த அம்மணி பெயரல்லாம் மாற்ற முடியாது. பெயர் மாற்ற வேண்டுமென்றால் சட்டரீதியாக மாற்றிக் கொண்டு வா இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை சோசியல் செக்யூரிட்டிக்கு சென்று அப்ளை செய்து பார் என்றார்.

சிறுவன் மீண்டும் சோசியல் செக்யூரிட்டிக்கு போனான். அங்கே இருந்த இன்னொரு அம்மணி ஒன்றும் சொல்லாமல் அப்ளிகேஷனை வாங்கி அப்ரூவ் செய்துவிட்டார்.

சிறுவன் வெளியே வந்து McDonald இல் அமர்ந்து ப்ரென்ச்ஜ் ப்ரைஸ் மற்றும் கோக் வைத்துக் கொண்டு கைத்தொலைப் பேசியில் என்னை அழைத்து Bloody America.... yaar என பழித் தீர்த்துக் கொண்டான்

Wednesday, January 03, 2007

ஒரு அமெரிக்க அடிவருடியாகிய நான்.......

சதாமை தூக்கிலிட்டவுடன் தமிழ்பதிவர்கள் குமுறிவிட்டார்கள். ( பல அப்பாவி பெண்களை கற்பழித்து கொன்ற ஆட்டோ சங்கர் என்ற கிரிமினலை தூக்கிலிட்டபோதும் நம் தமிழினம் இவ்வாறுதான் குமுறியது)

புஷ்ஷை தூக்கிலிட அறைகூவல்கள்,

அமெரிக்காவிற்கு சாவல்கள் என தூள் கிளப்பிவிட்டார்கள்.

அப்பா.... என்ன வீரம்.

சரி இந்த பட்டியலை பாருங்கள்

98% குழந்தைகளுக்கு போலிய தடுப்பு ஊசிகள்...

4500 பள்ளிகூடங்கள்

80 லட்சம் புத்தகங்கள்

நாடளுமன்றத்தில் 25% பெண்கள்

19000 புது போலிஸ்காரர்கள்

18000 எல்லைப் படை வீரர்கள்

33000 புது தொழிற் முதலீடுகள்

நாட்டிற்கு வேலை செய்வதைவிட உயிர் மேலா என கேட்கும் புது ஆட்சியாளர்

இவையெல்லாம் சதாம் பதவியிலிருந்து அகன்ற பிறகு ஈராக்கிய மக்களுக்கு கிடைத்தது.

இதை தடுப்பவர்கள் யார்?

இனவெறி கொண்டு ஒருத்தரை ஒருத்தர் அடித்து சாவடிக்கும் மனிதர்களே.

இத்தகைய மனிதர்கள் சிறுபான்மையினரே.

அவர்கள் வெகுசீக்கிரம் ஒழிந்து ஈராக்கில் அமைதி நிலவ அமெரிக்க அடிவருடியாகிய நான்...

எல்லாம் வல்ல மனிதனை வேண்டுகிறேன்.

மிக அறிந்த மனிதனே உயர்ந்தவன்.

இந்த விடீயோ கிளிப்பும் ஒரு அமெரிக்க அடிவருடையது


Friday, December 29, 2006

இஞ்ஜூஸ் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை உல்லாசமாக போய் கொண்டிருக்கின்றன.

ஒரு நாள் என் மகனின் நண்பர்கள் பட்டாளம் கூடி எங்கள் வீட்டில் ஒரு இளமை கொண்டாட்டம் நடந்தது. கூடியிருந்த கும்பலில் இந்தியர், சீனர், வெள்ளையர், யூதர் மற்றும் அரேபியர் இருந்தனர்.

அனைவரும் பேஸ்மெண்ட்டில் அமர்ந்து கோக் குடித்து (பீர் குடிக்கும் வயதை யாரும் நெருங்கவில்லை) பீட்ஸா சாப்பிட்டு போக்கர் ஆடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து டிவி சத்தம் பெரிதாக கேட்க அதை விட இந்த இளைஞர்/ஞிகள் சிரிப்பலை காதைக் கடித்தது.

என்ன அவ்வளவு சத்தம் என போய் பார்த்தால்

இஞ்ஜூஸ் என்றால் என்ன?

ஐஸ்க்யூப் என்றால் என்ன?

ஹாலோபீனோ என்றால் என்ன?

ஃப்ரீக் என்றால் என்ன?

என ஒருவர் விளக்கம் அளிக்க அதைக் கேட்டு இந்த இளைஞர்/ஞிகள் குபீர் என சிரித்தனர்.

நீங்களும் சிரிங்களேன்........


Thursday, December 21, 2006

கிறிஸ்துமஸ் சீசன்

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எனக்கு சிறிது அதிகமாகவே இருந்தன(லோக்கல் கலாசாரத்துடன் கலக்கிறேனோ என்னவோ). கடந்த 3 வாரத்தில் 10 பார்ட்டிகள். அதாவது இரண்டு நாளைக்கு ஒரு பார்ட்டி.

பேர்தான் கிறிஸ்துமஸ் பார்ட்டி. ஆனால் அங்கே சற்றும் மதச்சாயம் இல்லை.

பீப்பாய் பீப்பாய் களாக திராட்சை மதுவும் பீர்களும் குடிக்கப் பட்டன. மாடுகளும் கோழிகளும் உண்ணப்பட்டன. பரிசு பொருட்களும் வாழ்த்துகளும் பரிமாறபட்டன. புதுப்புது நண்பர்கள் என வட்டம் பெரிதாகியது.

நேற்றைக்கு CNN இல் After Jesus என்ற ஒரு இரண்டு மணிநேர ஆவணத் திரைப்படம் காட்டப்பட்டது. அதில் புதுப்புது செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளித்தது. கிருத்துவம் பரவ காரணமே யேசுவிற்கு பின்னால் வந்த அவரின் சீடர்களான பீட்டரும் மற்றும் அறிவுஜீவியான பால் என்பவரும் தான். என்பது மிக ஆச்சரியம்.

மேலும் சில ஆச்சரியங்கள்

1. சில முந்திய காலத்து கிறித்துவர்கள் பல கடவுளர்களை நம்பினார்கள்

2. பல கோஸ்பெல்கள் புதிய ஏற்பாட்டில் சேர்க்கவேவில்லை

3. கிறிஸ்துமஸ் ஒரு வசந்தகால விழாவாகதான் இருந்தது பின்னர் குளிர்கால விழாவாக மாறியது

4. க்நாஸ்டிக்ஸ் (The Gnostics) என்ற பிரிவினர் ஏதோ தெய்வகுற்றத்தால் தான் மனிதனுக்கு இந்த லெளகீக ஆசைகள் வந்துவிட்டன என நம்பினர். இதை அழிக்க ஒரே வழி மனிதன் தன்னைதானே அறிந்தும் தன்னுள் இருக்கும் தெய்வீகத்தையும் அறிவதுதான் என்பதே . (இது நம் இந்து வேதங்களிலும் உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ள மையக்கருத்துக்கள்)

5. தத்தமது நம்பிக்கைகளை நிலைநாட்ட போர்கள், கொலைகள் கொள்ளைகள் நடந்தேறின முதல் 400 வருடங்களில்

6. முதல் நூற்றாண்டில் இருந்த அதே சந்தேகம் இன்னும் இருக்கிறது. அதாவது யேசு ஒருவர் இருந்தாரா அவர் இறந்து உயிர்த்தெழுந்தாரா என்பதே

இங்கே மக்கள் இந்தப் படத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை

இந்த ஆவணப்படம் இப்போது ஒளிப்பரப்பக் காரணம் பரபரப்பிற்குதான். இதேபோல் இந்தியாவில் ஒரு விழாக்காலத்தில் ஒரு மதக் காண்ட்ராவோர்ஷியல் ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தால் இந்தியாவில் கலவரம் வெடித்திருக்கும்.
அரசியல்வாதிகள் முதல் சமூகநீதி காவலர்கள் வரை தொண்டைக் கிழிய கத்திருப்பார்கள்.

அந்தத் திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவாகியிருப்பார்.

நாம் போகவேண்டிய தூரம் வெகுதூரம்....

Tuesday, December 19, 2006

ஈஸ்வர அல்லா தேரே நாம்

இன்று கூத்தாடி அவர்களின் பதிவில் ஒரு அனானிமஸ் ஒரு கவிதையை பின்னூட்டமிட்டிருந்தார்.

மிக நல்ல கவிதை அது.

யதார்த்தத்தை சுள்ளென்று உறையவைக்கும் கவிதை

அது பின்னூட்டத்தில் அமுங்கி போகலாமா?

அந்த கவிதையை முன் வைத்து இந்த பதிவு.

அனானிமஸ் அவர்களே உங்களுக்கு நன்றி.... நன்றி...நன்றி...


ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை


Thursday, December 07, 2006

ஒரு இராணுவ வீரரின் பார்வை

நேற்றைக்கு என்னுடைய ப்ராஜெட்டில் ஒரு புது மெம்பர் சேர்ந்தார். இவர் கனேடிய பொறியாளர். இராணுவத்தில் பணியாற்றிவிட்டு டிஸ்சார்ஜ் பெற்றுக் கொண்டு சிவிலியன் வாழ்க்கைற்கு திரும்பியுள்ளார். அவரின் முதல் சிவில் வேலை இது. மனிதர் கடோத்கஜனை போன்ற உடலுடனும் தீர்க்கமான பார்வையுடன், பொடியாக முடிவெட்டி இன்னும் இராணுவ வீரன் போல் காட்சிய்ளிக்கிறார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தஹாரில் பணிபுரிந்துள்ளார். அவருடன் மதிய உணவு உட்கொள்ளும் போது நடந்த விவாதத்தில் ஒரு பகுதி. இவருடை பெயரை பீட் (Pete) என்று வைத்துக் கொள்வோம்:

நான் : ஆப்கானிஸ்தானில் அநாவசியமாக் நம் படைவீரர்கள் மடிகிறார்கள். (இங்கே நம் என்று என்னை பீட்டுடன் கனேடிய அடையாளம் காணுகிறேன்)

பீட் : மரணம் என்பது எல்லாருக்கும் நிச்சயம். படை வீரர்களுக்கு அது மிக நிச்சயம். அந்த மன்பான்மை இருந்தால் தான் படை வீரானாக இருக்க முடியும்.

நான் : நான் சொல்லவருவது என்னவென்றால் பீட், நம் படைவீரர்கள் நம் நாட்டை காக்க மடிந்தால் அதற்கு அர்த்தம் இருக்கிறது ஆனால் எங்கோ இருக்கும் அப்கானிஸ்தானில் போய்....

பீட் : சிவா நீ மிக குறுகிய நோக்கில் பார்க்கிறாய். நாம் அங்கே போனது ஒரு சர்வதேச உடன்படிக்கையில் ஒரு பயங்கரமான தீவிரவாதியை பிடிக்க. தீவிரவாதி ஓடி ஒளிந்துவிட்டான் அவனை நம்பிய மக்களை அம்போ என்று விட்டு விட்டு. நாம் திரும்பி வந்துவிட்டால் அவன் திரும்ப வருவான். அவனைப் பிடித்த பின்னால் உடனே நாம் திரும்பிவிட்டால் அதுவும் தவறு. சோவியத் ஆப்கானிஸ்தானை விட்டவுடன் நாம் திரும்பியது எவ்வளவு தவறு. ஒரு தீவிரவாத சமுதாயத்தை அல்லவா உருவாக்கிவிட்டோம். அந்த பாவத்திற்கு ப்ராயசித்தம் செய்ய வேண்டும்.

அங்கே பிறந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கு நல்ல கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும். அவர்களை நல்ல மனிதராக ஆக்கி உலகில் தலை நிமிர்ந்து நடக்க வைக்கவேண்டும். அதற்கு 50/60 ஆண்டுகள் ஆகலாம்.

கல்வி ஒன்றே இந்த காலத்தில் முன்னேற வழிவகுக்கும்.

இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத உன் தேசம் வளரவில்லையா. மிக சிலர் மேற்கத்திய கல்வி மற்றும் விஞ்ஞானம் கற்றார்கள் முதலில். அவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்த்து மேலும் பலர் கல்வி கற்க முன் வந்தனர். உங்கள் நாட்டில் கல்வி கூடங்களில் இடம் கேட்டு போரட்டங்கள் நடப்பதைப் பார்த்து நான் பெருமை அடைகிறேன். (மிக விவரமான படைவீரர். நம் நாட்டின் ரிசர்வேஷன் பாலிஸி முதல் சாதி பிரிவுகள் வரை இவருக்கு தெரிகிறது). அவ்வாறு போரடுபவர் நிச்சயமாக முன்னேறுவர்.

ஆப்கானிஸ்தானில் கல்வி கற்றவர்கள் இல்லை. அங்கே கல்வி கற்று நல்ல வாழ்வு வாழியில்லாமல் கற்றவர்கள் வேறு இடத்திற்கு போய் விட்டார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வியின் மதிப்பு தெரியவில்லை. என் போன்றவர்கள் துப்பாக்கி ஏந்தி தற்கொலை படையினரை கொல்வது மட்டும் எங்கள் வேலையில்லை மேலும் தற்கொலைப் படையினர் உருவாவதை தவிர்ப்பதும் எங்கள் வேலை. அதன் முதல் படியாக அந்த இளம் பிஞ்சுகளின் மனதில் கல்வி என்ற ஞானத்தை ஏற்றுவதுதான். இந்த வாழ்க்கை எவ்வளவு இனிமையானது. நிகழ்காலம் எவ்வளவு சிறந்தது என்பதை அவர்களுக்கு உணர்த்தினால் போதும். என்னால் ஒரு குழந்தை தற்கொலைப் படைவீரன் ஆவதை தவிர்க்க முடிந்திருந்தால் அதுவே நான் படைவீரனாய் பணியாற்றியதின் பெரிய பயன்.

நான் : அமெரிக்க இராணுவத்தில் வேலைக் கிடைக்காத ஒன்றுக்கும் உதவாத இளைஞர்கள் தான் உள்ளனர் என்ற பத்திரிக்கை/டிவி செய்திகள் உண்மையா?

பீட் : (பீட்டின் முகம் சிவக்கிறது) அமெரிக்க டாப்லாய்ட்கள் செய்யும் பரபரப்பு செய்தி இது. (டாப்லாய்ட் என்பது நம் ஜுனியர் விகடன், ந்க்கீரன் போன்ற பத்திரிக்கைகள்) நான் அமெரிக்க இராணுவத்தினருடன் மிக அதிகமாக வேலை செய்தவன். அவர்களின் நாட்டு பற்று என்னை வியக்க வைக்கிறது. அவர்களின் ஜனாதிபதி தவறு செய்கிறார் என் தெரிந்தும் அவர்கள் அளப்பறிய தியாகங்களை செய்கிறார்கள் . குள்ளநரிகள் எங்கும் இருக்கும் அந்த சதவீதம் மிக சிறிது. அது நம்முடைய இராணுவமாக இருக்கட்டும் அல்லது அமெரிக்க இராணுவமாக இருக்கட்டும். ஒருவருக்கு விருப்பமில்லையென்றால் அவர் இராணுவத்தில் சேர அவசியமில்லை. அரசாங்கம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இராணுவத்தில் சேருபவர்கள் அவர்கள் விரும்பியே சேருகிறார்கள்.

அந்த நேரத்தில் அந்த உணவகத்தில் ஆல்பெர்ட்டாவின் (நான் வசிக்கும் மாநிலம்) முன்னாள் முதலைமச்சர் ரால்ப் கிளெய்ன் நாங்கள் அமந்திருந்த மேஜைக்கு அடுத்த மேஜைக்கு வருகிறார்.

ரால்ப் கிளெய்ன் சில நாட்களுக்கு முன் முதலைமச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். பீட் அவரிடம் சென்று தன்னை தானே அறிமுகம் செய்து கை குலுக்குகிறார். பிறகு என்னையும் அழைத்து ரால்ப் கிளெய்னிடம் அறிமுகப்படுத்தினார். நம் நாட்டில் முன்னாளோ இன்னாளோ என் போன்ற சாமனியர்கள் அருகில் போகதான் முடியுமா?

நான் : பீட் அங்கே மதபோதனைகளால் தான் மக்கள் மனம் மாறுகிறார்கள் என ஒரு கருத்து நிலவுகிறதே?

பீட் : சிவா... மனிதனுக்கு முதல் தேவை உணவு. அவன் பசி அடங்க எதையும் செய்வான். ஆப்கானில் உள்ள ஏழ்மையை இந்த அரபுகள் மதம் பக்கம் திருப்பி குளிர் காய்கின்றன. அதிகமான பணம் மூர்க்கனிடம் இருந்தால் அதுவும் ஆபத்தே.

உதாரண்மாக ஒசாமாவை எடுத்துக் கொள்வோம் அவன் ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உண்மையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என நம்பிக்கை இருந்தால் சீக்கிரம் அங்கே போகலாமே. இங்கே என்ன வேலை. அவன் அனுப்பிய தற்கொலை படையினர் ஒன்றும் சும்மா வேலை செய்யவில்லை பணத்திற்காக தான். தான் அழிந்தும் தன் குடும்பத்தினர் வாழவேண்டும் என்ற தியாக மனபான்மையை மதம் என்னும் விஷம் கொடுத்து வ்ரவைத்தனர். மதம் மட்டுமே காரணம் என்றால் பணம் எதற்காக?. ஆப்கானில் சாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் தரப் படுகிறது. தற்கொலை என்பது ஒரு வியாதி. எத்தனைத் தற்கொலைப் படையினரை தடுத்து அவர்களுக்கு மருத்துவம் செய்து சரி செய்திருக்கிறோம் தெரியுமா உனக்கு?


இப்போது நாம் பேசியதை பதிவாக போடட்டுமா என கேட்டேன். ஓ தாரளமாக நான் ஆப்கானில் எடுத்த போட்டோ வேண்டுமா என்றான். இல்லை தேவை என்றால் எடுத்துக் கொள்கிறேன் என்றேன். பீட் என் டீமில் எனக்கு இணையாக வேலை செய்பவ்ர். அவர் என் பதிவுகளுக்கு அடிக்கடி தீனி போடுவார்

Wednesday, December 06, 2006

கடவுள்

இன்று காலை அலுவலகம் வரும்போது ரேடியோவில் கேட்ட ஒரு "இன்றைய நாள் நல்ல நாள்" என்ற டைப்பில் ஒரு துணுக்கு

அந்த துணுக்கு இதோ:


ஆசிரியை : என்ன படம் வரைந்து கொண்டிருக்கிறாய்.

குழந்தை : கடவுளின் படம்

ஆசிரியை : கடவுளை உருவகப் படுத்த முடியாது. இதுவரை கடவுளை கண்டவர் யாருமில்லை.

குழந்தை : ஓ.கே. ஒரு 5 நிமிடம் காத்திருங்கள் நான் வரைந்து முடிந்தவுடன் என்னுடைய படத்தில் கடவுளைக் காணலாம்


இந்த துணுக்கு என் மனதில் பல சிந்தனைகளை தூண்டிவிட்டது.

உங்களுக்கு...?