குடும்பத்துடன் டோராண்டோ மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கோடை விடுமுறைக்கு சென்ற பயணக் கட்டுரை. (நட்சத்திர வாரத்தில் சொந்த கதைக்களை சொல்லி பந்தா அடிக்காவிட்டால் பிறகு வாய்ப்பு ஏது)
கால்கரியிலிருந்து டோரோண்டாவிற்கு விமான பயணம் சுமார் 4 மணி நேரம் இது அபுதாபி/சவூதி - சென்னையை விட அதிக நேரம்.
நானும் அமெரிக்க கஞ்ச பிஸினாரி NRI போல் மிக மலிவான விலையில் விமான டிக்கட் வாங்கினேன். விளைவு விமானம் காலை 6 மணிக்கு. இந்த தீவிரவாத மூதேவிங்க ஏதோ சொல்லபோயி எல்லாரும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்னமே விமான நிலையத்திற்கு வர சொல்ல 5 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டுமென்றால் வீட்டிலிருந்து 4.30 க்கு கிளம்ப வேண்டும். 4.30 மணிக்கு கிளம்பவேண்டுமென்றால் 3.30 மணிக்கு எந்திரிக்க வேண்டும். ய்ப்பா ...... ஏர்போர்ட்டுக்கு போயி களைத்துவிட்டோம்.
இணையத்தில் செக்-இன் செய்திருந்ததால் நேராக லக்கஜை பொட்டுவிட்டு என் பேவரிட் Tim Hortons காபியை அருந்தியவாறே செக்யூரிட்டிக்கு போனால் அங்கே இருந்த ஆபிஸர்ர் "சார் காபியை குடித்து விட்டோ அல்லது கொட்டிவிட்டோ போங்கள்" அடபாவிங்களா மெதுவா காபிகூட குடிக்க முடியவில்லையே ... நல்லாயிருப்பீங்களா நீங்க"
விமானத்தில் ஏறி அமர்ந்ததும். பசி வயிற்றை கிள்ளியது. சாப்பட்டுக் ஏங்கினால் அதுவும் இலவசம் கிடையாதாம். (இலவசமாக கொத்தனார்கள் மட்டும் தான் கிடைப்பார்கள்) பைசா கொடுத்து வாங்க வேண்டுமாம். நல்லவேளை பர்கர் கிங், சப் வே போன்ற சாண்ட்விச்கள் கடையில் விற்கும் விலைக்கே கிடைத்தது.
விமானம் இறங்கி லக்கேஜ்களை கவர்ந்து வாடகை கார் எடுத்துக் கொண்டு இந்த பிரமாண்ட நகரில் எவ்வாறு கார் ஓட்ட போகிறோம் என்ற நினைப்பில் map களை என் மனைவியிடும் தந்து வழிசொல் என்றேன். அவரும் குஷியாக வழி சொல்ல ஆரம்பித்தார்.
வலப்பக்கம் திரும்பவும் , திரும்பினால் அது கிழக்கு நோக்கி போகும் விரைவு வழி சாலை. வெய்ட் நாம் மேற்கு நோக்கி அல்லவா போகவேண்டும் ... ம்ம்ம்ம்ம் சுற்றுலாவிற்கு வந்து வழி தவறவிடுவதும் ஒரு சுகமே. ஒரு வழியாக சுற்றி மேற்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்து முதல் ஸ்டாப்...
மதிய சாப்பாட்டிற்கு சரவணபவன்
நல்ல சாப்பாடு நம்மூர் சுவையை கனடாவிற்கு கொணர்ந்துள்ளார்கள்.
மற்ற இந்திய/பாகிஸ்தானிய உணவுவிடுதிகளை போலில்லாமல் சுத்தமாக இருக்கிறது அவர்களின் பவன்.
பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லாயிருக்கு என் சொல்லும் வகையில் அவர்களின் காபி இல்லை.. ஆனால பரிணாம வளர்ச்சியுற்று காபியை அந்த டேஸ்ட்டுக்கு கொண்டு வந்து வந்துவிடுவார்கள்.
சரவண பவனின் வடை குளோசப்பில்
மிக நல்ல உணவு உண்டு விட்டு என் மகன் வழிக்காட்ட மேற்கு நோக்கி மேலும் பயணம்.
என் இடபுறத்தில் கடல் அளவிற்கு விரிந்த ப்ரமாண்டமான் ஏரி. அத்தனையும் நல்ல நீர். உலகில் உள்ள ந்ல்ல நீரில் 25% இங்குதான் உள்ளது என என் புள்ளிவிவர புலியாகிய் என் மகன் சொன்னான்.
வழியெங்கும் திராட்சை தோட்டங்களும் அதனால் "சரக்கு" ஆலைகளும் உள்ளன.
வெகு சீக்கிரமே நயாகரா நகரம் வந்துவிட்டது.
அங்கே உள்ள ஓட்டலில் ரூம் எடுத்துவிட்டு ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் அருவி தெரியும் என் ஆசையோடு பார்த்தால் கட்டிடங்கள் தான் தெரிந்தன. ஒட்டல் இருந்தது Falls View Boulevard ஆனால் அருவி இருப்பதோ River Road இல்.
ஒரு 5 நிமிட நடையில் அருவிகரைக்கு வந்துவிட்டோம்.
அருவிகள் விழுவதும் அதிலிருந்து எழும் நீர் துவாலைகள் நம்மை தழுவதும் மிக பரவசமான அனுபவ்ம் . அருவிகரையில் அலைகடலன மக்கள் கூட்டம். அந்த கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் நம் துணைக் கண்டத்தை சார்ந்தவர்கள். அதிலும் நம் மக்கள் கூட்டம் அதிகம். அருவியுன் அக்கரையில் அமெரிக்கா
அங்கிருந்து படகில் மக்களை அழைத்து அருவிக்கு மிக அருகில செல்கின்றனர். அந்த பயணத்திற்கு பெயர் Maid of the Mist என்பது. பட்கில் ஒரு மெல்லிய மழை கோட்டுக் கொடுத்து மெதுவாக கதைகளை சொல்லி கொண்டு அழைத்துச் செல்கின்றனர். கடைசியாக படகு அருவியின் நீர் அருகே சென்று ஆனந்த மழையில் நனைய விடுகிறார்கள். கீழே உள்ள படத்தில் வட்டமிட்ட பகுதியில் படகை காண்க
அந்த படகில் நான் பாடிய பாடல்
" ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே..
நயகாரா அழகை நாம் காண்பதற்கு வண்ணகிளியே"
அந்த படகின் பயணம் முடிந்தவுடன் குதிரை லாட அருவியின் பின்புறம் போய் பாருங்கள் என அழைப்பு வந்தது. சரி போய்விடலாம் என நடந்து..நடந்து... அந்த குகையின் வாசலை அடைந்தோம். குதிரை லாட அருவியின் பின் புறம் பாரைகளை குடைந்து அருவியை அதன் முதுகிலிருந்து காண வைக்கிறார்கள். அருவிக்கு மிக அருகில் அழைத்து சென்று அந்த நீரின் ஆவேச பாய்ச்சலை உணரவைக்கிறார்கள். அந்த நீரின் வேகத்தை காட்டும் படமும் வீடியோவும் கீழே
மறுநாள் நாங்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த ஜெட் போட் பயணம்.
நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் ஈரி என்ற ஏரி யிலிருந்து நீர் வீழ்ந்து சிறு நதி யாக ஓடி கனடாவின் ஒண்டாரியோ ஏரியில் கலக்கிறது. இந்த சிறு நதியின் ஓட்டம் மிக ஆக்ரோஷமானது, இதில் சுழிகள் நிறைய இருக்கும். இந்த நதி ஒரு இடத்தில் 90 டிகிரி வலமாக திரும்புகிறது. இந்த இடத்தில் சுழிகள் அதிகம். இந்த சுழிகளை ஆங்கிலத்தில் Rapids என அழைக்கிறார்கள். இதனி லெவல் 1 முதல் 6 வரை வகைப்படுத்திய்ள்ளார்கள் . 1 நெம்பர் சுழி இலகுவானது. 6 நெமபர் மரணசுழி. இதில் உள்ளே போனவர்கள் மீண்டதாக சரித்திரம் இல்லை. 6 நெம்பருக்கு அருகில் அழைத்து சென்றார்கள் ஆனால் 5 நெம்பர் சுழிக்கு உள்ளே சென்று மீண்டதுதான் த்ரில். படகின் பயணத்தில் நம் உயிர்க்கு மட்டும் தான் உத்திரவாதம் உடமைகளுக்கு அல்ல என்று சொல்லிவிட்டார்கள். படம் எடுக்க முடியவே முடியாது, இங்குள்ள படங்கள் அவர்களின் இணையதளத்திலிருந்து சுட்டது
முதல் மூன்று வரிசையில் அமர்வகளுக்கு அதிக பட்ச த்ரில் என்றார்கள். நாங்கள் அமர்ந்தது மூன்றாவது வரிசை.
5 ஆம் எண் சுழிக்குள் நுழையும் போது என்னை அடித்த அலையை மறக்க முடியாது. அலை அடித்து ஒய்ந்தவுடன் நான் முதலில் பார்த்தது என் மனைவியும் மகனும் பத்திரமாக இருக்கிறார்களா என்று. இவ்வளவு பெரிய நல்ல நீர் அலையை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
என்னை பொருத்தவரைஇந்த ஜெட் போட் பயணம்தான் நயாகராவின் மிக அதிக பட்ச அட்ராக்ஷன் . ஆகையால நண்பர்களே அடுத்தமுறை நயாகராவிற்கு போகும் போது இதனை தவறவிடாதீர்கள்.
இந்த ப்டகுகள் முன்புறம் தண்ணீரை உள்வாங்கி பின்புறம் பீச்சியடித்து முன்னேறும். மணிக்கு சுமார் 100கி.மீ வேகத்தில் செல்லும்
இவ்வாறு அமைதியாக ஆரம்பித்து.........
சுழியில் மூழ்கி.....
ஆ..உயிருடன் வெளியில்.....
இது இணையத்தில் சுட்ட வீடியோ. இந்த அளவிற்கு படம் எடுக்கும் காமிரா என்னிடமில்லை. இருந்திருந்தாலும் அந்த படகில் எடுத்து செல்லும் தைரியம் இருந்திருக்காது
படு ஆக்ரோசமாக பாயும் அலைகள்
இந்த பயணத்திற்கு அப்புறம் நயாகரா போதும் போதுமென்றாகி விட்டது. மற்றபடி எல்லா சுற்றுலாதளங்களின் இருக்கும் பூக்கடிகாரம். பறவைகள் சரணாலயம் (சிங்கபூரின் பறவைகள் பார்க்குடன் ஒப்பிடுகையில் இது ஒரு ஜூஜூபி) வழக்கமான சமாச்சாரங்கள்.
இதோ பேரிக்காய்......
இரவில் நயாகராவில் விளக்கேத்துகிறார்கள். படு செயற்கை வாணவேடிக்கையும் அமெச்சுரிஷ்
அதோ அமெரிக்கா.....
மறுநாள் அதிகாலையில் கனடாவின் பெரிய நகரமான டொரண்டாவிற்கு பயணம்.
டோரண்டோவில் என்னை அதிகம் கவர்ந்தது அங்கிருந்த தமிழ்.
நன்றி இலங்கை தமிழ் சகோதரர்களே.
ஆனாலும் சில தமிழ் கொஞ்சம் ஓவர் தான்.
உதாரணமாக ஒரு கடையின் பெயர் தளபாட அங்காடி. நல்லவேளை அங்கே பர்னிச்சர் பட்ம போட்டிருந்தார்கள் இல்லையென்றால் குமரனுக்கு போன் செய்து கேட்டிருக்க வேண்டும் அவரும் "தள" என்றால் பர்னி "பாட" என்றால் சர் இரண்டையும் சேர்த்தால் பர்னிச்சர் என் ஒரு பொழிப்புரை வழங்கியிருப்பார். :)
மேலும் சில தமிழர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். நம் தமிழர்களை போலதான் இலங்கை தமிழர்களும் என்று நினைத்தேன். அங்கிருந்த என் நண்பர் இலங்கை தமிழர்களுக்கு சென்னை தமிழ் பேச வராது அதனால் தான் ஆங்கிலம் என சொன்னார். மற்றபடி அவர்களுக்கு தமிழ்தான் உயிர் மூச்சு என்றார்.
டோராண்டோ இன்னுமொரு வட அமெரிக்க நகரம். ஒரு ஏரிக்கரை அல்லது ஆற்றங்கரை அல்லது கடற்கரை இதனருகே உயர்ந்த கட்டிடங்கள், ஒரு மிக உயர்ந்த டவர், மிக நெரிசலான தெருக்கள், பஸ்கள், பாதாள ரயில்கள், உலகத்தின் எல்லா இன மக்களும் அமைதியாக வாழும் வாழ்க்கை , வித வித் மான் உணவு கேளிக்கை விடுதிகள். நகரின் மத்தியில் ஒரு அமைதியான பூங்கா அகியவை தப்பாமல் இருந்தன. மற்றபடி டோராண்டோ ஒரு பிரமிப்பை என்னிடம் உருவாக்க வில்லை.
சி என் டவர்
அந்த டவரின் கண்ணாடி தளத்திலிருந்து.....
நம்மூரின் அஞ்சப்பர், வாங்க்ஸ் கிட்சன், சரவண பவன் போன்ற உணவ்கங்கள் உற்சாகமூட்டின. அஞ்சப்பரின் மதிய பபே மிக மலிவு 30 அய்ட்டங்கள் என்றார்கள் அதில் 27 மரக்கறி. அதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்.
சென்னயின் வாங்க்ஸ் கிச்சன் தரத்திலும், சுவையிலும், சேவையிலும் முதல் தரம் என நீரூப்பித்துள்ளார்கள்.
ஜெரார்ட் தெருவில் சீனர், அரேபியர், உப்கண்டத்தினர் வரிசையாக கடைகள் வைத்து அந்த தெருவில் தத்தமது நாட்டின் அசுத்தத்தை வெளிபடுத்தி வாழ்கின்றனர்.
எந்த ஒரு இடத்திற்கு போனாலும் எல்லாரையும் நிற்க வைத்து ஒரு முழுநீள Hi-Definition போட்டோ எடுக்கிறார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் வாங்கலாம். ஆனால் போட்டோ கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் . மறுக்க முடியாது. தீவிரவவத கண்காணிப்பு தான் காரணம்
இந்த சுற்றுலாவில் என்னை மிகவும் வேதனை அடைய செய்தது என் கிரடிட் கார்ட்டின் நிலைதான். பாவம் அதனை தேய்த்து தேய்த்து அதன் முதுகு தோலை உரித்துவிட்டார்கள். தெருவில் நடக்க மட்டும்தான் இலவசம் மற்ற எல்லாவற்றிற்க்கும் காசு காசு தான்.
கால்கரியில் கிடைப்பதற்கரிய சுவாமி விக்ரகங்கள், மாவாட்டும் இயந்திரம் ஆகியவைகளை வாங்கி மீண்டும் 4 மணிநேரம் பறந்து, 5 நாட்களுக்கு முன் பார்க் செய்த காரை கண்டுபிடித்து, ஏர் போர்ட்டை விட்டு வெளியே வந்து காலியான கால்கரி சாலையில் கார் 100 ஐ தொடும் போது பாடியே பாடல் "சொர்க்கமே என்றாலும் கால்கரி போல வருமா......
Tuesday, October 10, 2006
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
//குடும்பத்துடன் டோராண்டோ மற்றும் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு கோடை விடுமுறைக்கு சென்ற பயணக் கட்டுரை. (நட்சத்திர வாரத்தில் சொந்த கதைக்களை சொல்லி பந்தா அடிக்காவிட்டால் பிறகு வாய்ப்பு ஏது)//இது ரொம்ப ஜாஸ்தி! செந்தக்கதை எப்ப வேணாலும் எழுதலாம்! எழுதிப்பாருங்க! ரசிகர் கூட்டம் எக்கசக்கம் வரும்!
//அந்த கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் நம் துணைக் கண்டத்தை சார்ந்தவர்கள். அதிலும் நம் மக்கள் கூட்டம் அதிகம்.//
கிழக்கிலிருந்தால் நியூயார்க்/நயாகராவுக்கும், மேற்கிலிருந்தால் லாஸ் வேகாஸ்/க்ராண்ட் கேன்யனுக்கும் தீர்த்த யாத்திரை செல்வது இந்தியர்க்கு அழகாம்...
சிவா,
நல்ல பயணக்கட்டுரை. என் பணிமனையையும் படம் எடுத்துப் போட்டதற்கு மிக்க நன்றி. CN சிகரப் படத்தின் பின்புலத்தைப் பாருங்கள். TD Tower எனும் மாடிக்கட்டிடம் தெரிகின்றதல்லவா? அப்பகுதிதான்.
இந்த முதுகு பக்கத்தில் இருந்து பார்பது-இத்தனை நாள் தெரியாமல் இருந்தது.
ஜெட் போட்டா!! - குறித்துக்கொண்டேன்.
அந்த கண்ணாடி ஷாட் "சின் டவர்"- என்னுடைய முதல் வேலையில் இருக்கும் காலங்களின் கனவு பில்டிங்.
படம் எல்லாம் அருமை.
//"சொர்க்கமே என்றாலும் கால்கரி போல வருமா......//
நம்மூர மறந்துட்டீங்களே?
உலகத்தின் எல்லா இன மக்களும் அமைதியாக வாழும் வாழ்க்கை
ஹ்ம்ம்ம்ம்ம்ம்......
நாதர் பாய்ண்ட் நோட்டட்
ராயுடு சார், நயாகராவில் ஒரு சிவன் கோயில் க்ராண்ட் கேன்யானில் ஒரு முருகன் கோயில் வந்தால் இன்னும் நல்ல கூட்டம் வரும்
வெற்றி, நான் காரில் சுற்றினேன் அதனால் என் முழுகவனமும் ட்ராபிக்க்கில் இருந்தது. அடுத்தமுறை நடந்து சுற்ற வேண்டும்
குமார், அந்த பில்டிங் என்னை கவரவில்லை. காரணம் நான் போன அன்று கூட்டம் மிக அதிகம். தலைக்கு 35$ கட்டணத்திற்கு அங்கு ஒன்றுமில்லை
சிவமுருகன், அது சொர்க்க்க்க்கம் இது சொர்க்கம்
வைசா, பிஸினஸ் செய்வதில் அமெரிக்கர்களை மிஞ்ச முடியாது. போர் என்றாலும் லாபம்தான் அமைதி என்றாலும் லாபம்தான். எதிலும் லாபம் பார்ப்பதுதான் அவர்களின் குறிக்கோள்
ம்யூஸ், இங்கே அமைதியாக வாழவேண்டிய கட்டாயம். இங்கே மக்கள் துரத்துவது பணத்தைதான் கொள்கையை அல்ல. கடுமையான போட்டியில் குறைந்த விலையில் நிறைந்த தரம் மட்டுமே தாரக மந்திரம்.
சமீபத்தில் In the Name of God என்ற தலைப்பில் கிளின்டன் தலைமையில் சி என் என் ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில் பேசிய Simon Peres " பாலஸ்தீனத்தில் அமைதி திரும்ப வேண்டுமென்றால் அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்துங்கள்" என்றார்.
பணத்தை துரத்தும் மனிதனுக்கு மத இன வேறுபாடுகள் கிடையாது. அதுதான் வட அமெரிக்கா
இங்கிருக்கும் "தீவிரவாதிகள்" கூட பணம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள்
சூப்பரான கட்டுரை சிவா.
//இந்த சுற்றுலாவில் என்னை மிகவும் வேதனை அடைய செய்தது என் கிரடிட் கார்ட்டின் நிலைதான். பாவம் அதனை தேய்த்து தேய்த்து அதன் முதுகு தோலை உரித்துவிட்டார்கள்.//
செலவு செய்தால் கிரெட்கார்டு தேயத்தான் செய்யும்:))
செல்வன், ஆனாலும் அநியாயத்திற்கு காசு புடுங்குகிறார்கள். ஏர் போர்ட்டில் டிராலிக்கு காசு இரண்டு டாலர்கள். கால்கரியில் இலவசம்.
ஆற்றை தூரத்தில் இருந்து பார்க்க ப்ரீ ஆனால் அதன் கரைக்கு போக தலைக்கு 12 டாலர்
காரை நீங்கள் தங்கும் ஒட்டலிலேயெ பார்க் செய்ய நாளைக்கு 10 டாலர்
பாட்டிலில் அருவியின் நீரை அடைத்துவிட்டு விற்கிறார்கள். அதில் கலர் பொடி போட்டு லைட் போடும் போது பிடித்த நீர் என விற்கிறார்கள். அடபாவிங்களா, இந்த மாதிரி மார்கெட்ட்டிங் டெக்னிக்கும் இருக்கா என வியந்தேன். சாரி உங்களுக்கு இது தெரியாமலா இருக்கும்
"தெருவில் நடக்க மட்டும்தான் இலவசம் மற்ற எல்லாவற்றிற்க்கும் காசு காசு தான்."
சிவா!
எதிர் காலங்களில் மூச்சு விடுவது மாத்திரம் இலவசம்; மிகுதிக்குக் காசாக இருந்தால் ஆச்சரியமில்லை.
கால்கரி நினைவோடு போய் கால்கரி நினைவோடு வந்துள்ளீர்கள்.
யோகன் பாரிஸ்
யோகன், அதற்கும் காசு என் வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னையில் நீல்கிரீஸ் என்ற சூப்பர் மார்கெட்டில் பிஸ்லரி என்ற தண்ணீர்பாட்டிலை பார்த்தேன். இதென்ன புதியபானம் என அங்கிருந்த விற்பனையாளரிடம் கேட்ட போது அவர் தண்ணீர் என்றார். நானும் விடாமல் ஆடுநரி தண்ணீயா என்ன விலை என்றேன் அவர் ரூ3 என்றார். 3 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி யாரவது குடிப்பார்களா? அவ்வாறு குடிப்பவர்கள் மிக மிக பெரிய பணக்காரர்களாக் இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் இன்று குடிப்பதற்கு பாட்டில் வாட்டர் தவிர வேறதுவும் இல்லை என்ற நிலை இந்தியாவில்
மூச்சுக்கு வரி விதித்தாலும் வியப்பதற்கு இல்லை
உள்ளேன் ஐயா! நிறையா எழுதணும். நைட்டுக்கா வரேன். :)
நல்ல பயணக்கட்டுரை.
1995இல் நயாகராவை நானும் ரசித்தேன்.
நினைவுகளை மீட்ட வைத்தீர்கள்.
சிவா
அமெரிக்காவில் பெரும்பாலான விமான நிலையங்களில் டிராலிக்கு காசு வாங்குவார்கள்.(எங்கள் ஊரில் 1$)
காரை நிறுத்துவதற்கு 10$ நீங்கள் தங்கும் ஓட்டலிலேயே கேட்கிறார்கள் என்றால் அது நீங்கள் சொன்ன மாதிரி ஏமாற்று வேலை தான். சந்தையியலில் இதை பற்றி பிராஸ்பெக்ட் தியரி என ஒரு தத்துவம் உண்டு. அதன்படி அந்த 10 டாலரை தனியாக வாங்காமல் ஓட்டல் வாடகையில் சேர்த்து கொண்டிருந்திருக்க வேண்டும். அப்போது அது தெரிந்திருக்காது
கலர் தண்ணீரை விற்பது எல்லாம் ரொம்பவே ஓவர்:)). அது காசு பிடுங்கும் வேலை தான்.
என்ன கொத்தனார் ஆளைக் காணாம்.
டென்ஷன் படுத்துறீங்களே சாமி
சந்திரவதனா வருகைக்கு நன்றி
விமானத்தில் உணவை விற்கிறார்களா? பரவாயில்லையே?!
இது வரை மூன்று முறை நயாகரா சென்றிருக்கிறேன். ஆனால் இந்த ஜெட் போட்டைத் தவற விட்டுவிட்டேனே.
நீங்கள் எனக்குத் தொலைபேசிக் கேட்டிருந்தாலும் எனக்கு தளபாட அங்காடி என்றால் என்ன என்று தெரிந்திருக்காது. :-)
சி என் டவர் கண்ணாடி தரையில் இருந்து பார்த்தது நல்ல அனுபவமாக இருக்குமே?! :-)
//
வழியெங்கும் திராட்சை தோட்டங்களும் அதனால் "சரக்கு" ஆலைகளும் உள்ளன.//
அங்க தான் சாமி பிரமாதமான ஐஸ் ஒயின் கிடைக்கும். ஒரு பெட்டி பிடிச்சு போடலியா?
கோடையில் நான் போனபோது ஷெரட்டனில் தங்கினேன். சூப்பர் வியூ. அப்பறம் மிசிசாகாவில் பரார் என்று ஒரு பஞ்சாபி ரெஸ்டரண்ட் உள்ளது. என் வாழ்நாளில் அந்தமாதிரி பஃபே சாப்பிட்டதில்லை.
African Lion Safari போகவில்லையா? விலங்குகளெல்லாம் ஃப்ரீயாக் நடமாடிக்கொண்டிருக்கும். நம் காரை ஓட்டிக்கொண்டு போய் நிதானமாக பார்க்கலாம். நாங்கள் போன சமயம் ஒரு 10 சிங்கங்கள் எங்கள் காரை சுற்றி. போட்டோ எடுத்துக்கொண்டே 'காக்க காக்க கனகவேல் காக்க' என்று காரில் உட்கார்ந்திருந்தேன்!
அடுத்த கோடைக்கு வான் கூவர் வரலாமென்று எண்ணம். நல்ல அறிவுரை சொல்லுங்கள்.
//காரை நிறுத்துவதற்கு 10$ நீங்கள் தங்கும் ஓட்டலிலேயே கேட்கிறார்கள் என்றால் அது நீங்கள் சொன்ன மாதிரி ஏமாற்று வேலை தான்.//
செல்வன், நியூயார்க், நியூஜெர்ஸியில் இது சாதாரண நிகழ்வுதான். இடத்துக்கு அவ்வளவு டிமாண்ட். சிலவங்க சொல்லறாங்களே அது பத்தி எல்லாம் உங்களுக்கு நல்லா தெரியுமுன்னு! ;)
//என்ன கொத்தனார் ஆளைக் காணாம்.
டென்ஷன் படுத்துறீங்களே சாமி//
நேத்து வேற கொஞ்சம் வேலை, இன்னிக்கு இங்கதான் பிளான்.
குமரன் உங்களுக்கே தெரியாது என்றால் அது சங்ககாலத்து முந்திய தமிழாகதான் இருக்கும்
குமரன், அந்த கண்ணாடி மேல் நிற்கும் போது என் கால்கள் நடுங்கின. எனக்கு வெர்டிகோ கொஞ்சம் அதிகம்
ப்ளமிங்கோ, அதெல்லாம் இல்லாமலா. சும்மா சும்மா சரக்கை பற்றி பேசி தமிழ் இணையத்தில் என்னைப் பற்றி ஒரு குடிகார பிம்பம் உருவாகிவிட்டது . அந்த பிம்பத்தை கலைத்து புனித பிம்பத்தை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். அதனால் வாங்கிய பெட்டிகளின் கணக்கை சொல்லவில்லை :)
கால்கரியில் பஞ்சாபி ரெஸ்டாரண்டுகள் அதிகம் அதனால் டொராண்டோவில் அந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை.
லயன் சபாரியா? அது எங்கே? என் கவனதிற்கு வராமல் போய்விட்டதே :(
எங்கிருந்து எப்படி வான்கூவர் வரபோகிறீர்கள் என சொன்னால் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும்
உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/03/blog-post.html
அழைப்பிதழ்:
இன்றைய வலைச்சரத்தில் உங்களது வலைப்பூவினை, வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.
”செண்பகப்பூ - சுற்றுலாச்சரம்” என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் பற்றிய அறிமுகம் காணச் சுட்டி கீழே:
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_03.html
படங்களும் வீடியோவும் அருமை. நயாகரா என்பது தான் ஊர் பெயருமா? அவசியம் பார்க்க நினைத்துள்ள இடம் நயாகரா நீர்வீழ்ச்சி
டோரண்டோவில் என்னை அதிகம் கவர்ந்தது அங்கிருந்த தமிழ்.
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
Post a Comment