Friday, February 20, 2009

சூரிய நாய்கள்

கடந்த ஆறுமாதங்களாக கனடாவின் வடக்கே உள்ள எண்ணை எடுக்கும் மணற்குவாரியில் வேலை.


கிறிஸ்துமஸ் நியூ இயர் லீவில் பெரும்பாலோர் ஊருக்கு போய்விட நான் அங்கே வேலைப் பார்த்து கொண்டிருந்தேன்.

அன்றைக்கு கடும் குளிர். லாட்ஜிலிருந்து கார்பார்கிங்க்கு நடந்து வருவதற்குள் கண்ணில் இருக்கும் நீர் கூட உறைந்து கண்கள் வலித்தன.

அதிகாலை சுமார் 6.30 இருக்கும் கும்மிருட்டு இங்கே சூரிய உதயமே காலை 9 மணிக்கு பிறகுதான்.

காரை ஸ்டார்ட் செய்து காரின் வெப்பமானியை நோக்கியதில் வெப்பம் -45 என காட்டியது. என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகு குறைந்த வெப்பம் இதுதான்.


கண்ட்ரோல் ரூமிற்கு முன்னால் காரை பார்க் செய்து உள்ளே வந்து சூடான காபி அருந்தி கொண்டே மீட்டிங்க் அட்டெண்ட் செய்தேன். அங்கே எந்தெந்த பைப்புகள் உறைந்து உடைந்துள்ளன என விவரித்து கொண்ட்டிருந்தார்கள். எரிகோபுரத்தின் (Flare) மேல் சுமார் 3 டன் ஐஸ் உறைந்திருக்கிறது. அது எந்த நேரத்தில் உடையும் உடைந்தால் எங்கே விழும் விழுந்தால் என்னென்ன இயந்திரங்கள் பழுதாகும் என விவாத்திதோம்.


அதற்குள் மணி காலை பத்தாகியிருந்தது. அப்போது பப்ளிக் அனௌன்ஸ்மெண்ட் சிஸ்டத்தில் "வெளியே குளிர் -52 டிகிரி சி அவசியம் ஏற்பட்டால் ஒழிய யாரும் வெளியே போகவேண்டாம். இது கட்டளை " என அறிவித்தார்கள்


கட்டளை என்றாலே அதை மீற வேண்டும் போல் தோன்றும் எனக்கு புகைபிடிப்பாளர்கள் ரகசியமாக வெளியே போனார்கள். நானும் அவர்களுடன் போனேன்.



அங்கே நான் கண்ட காட்சி காணக்கிடைக்காத காட்சி.



மூன்று சூரியன்களை கிழக்கே அடிவானத்தில் கண்டேன்



ஆ என் வாய்பிளந்ததில் என் சிறு குடல் வரை உறைந்து விட்டது :)



புகை பிடிக்க வந்த நண்பர்கள் " அதுவா சிவா, இதை சூரியநாய் என்பார்கள்" என் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு புகை பிடிக்க போய்விட்டார்கள்.


அந்த காட்சியை போட்டோ எடுக்கலாம் என்றால் கையில் காமிரா இல்லை. செல் போன் காமிராவிலும் சரியாக பதிவாக வில்லை.


விக்கிபீடியாவில் கிடைத்த புகைபடம் கீழே உள்ளது.



17 comments:

said...

Wow....

Both for three suns and -52C

said...

ரொரான்றோவில் இருக்கிறீர்கள் என நினைத்தால் இது என்ன புதுக்கதை?

said...

அட!

said...

அற்புதம்!

said...

நன்றி குமரன்

said...

டொரண்டோ இல்லை சாமி, டொரண்டோ அருகில். ஆனால் வாழ்கை டொராண்டோ, ஹூஸ்டன் கால்கரி என்ற முக்கோணத்தில் அடங்கிவிட்டது. காலையில் எழுந்தால் எங்கே இருக்கிறோம் என அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது

said...

சிவா, சூடான் தானே

said...

superb writing... very nice...

said...

ஆமாம்! ஏன் இப்படி தெரிகிறது என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!

said...

வடூவூர் குமார்,

Sundog என்று விக்கிபிடீயாவில் தேடிபாருங்கள். எல்லா விவரங்களும் உள்ளன. அதனால் தான் விக்கிபிடீயா படம் என்று சொல்லியிருக்கிறேன்

said...

ரொரான்றோவில் இருக்கிறீர்கள் என நினைத்தால் இது என்ன புதுக்கதை?//அதானே

said...

என்ன மனிதரய்யா நீர்? சூர்ய குதிரையைப் பார்க்க வேண்டுமென்றால் தம் அடிக்க வேண்டுமெனச் சொல்லி இளைஞர்களைக் கெடுக்கிறீரே ?

said...

அதெப்படி மூணு சூர்யன் இருக்கறப்ப குளிரும்? லாஜிக்கே ஒத்து வரலியே?

said...

அதெப்படி மூணு சூர்யன் இருக்கறப்ப குளிரும்? லாஜிக்கே ஒத்து வரலியே?

said...

கண்ணில் இருக்கும் நீர் கூட உரைந்து போகும் என்ற ரீதியில் இது வரை யாருமே கடுங்குளிரை வர்ணித்ததில்லை.

said...

சகோதரி கோமா, கண்ணீர் உறைந்து கண்கள் வலிக்கும். அதற்க்கா அந்த குளிரில் அணியகூடிய விஷேச கண்ணாடிகள் இருக்கும். நான் சொன்னது வர்ணனை அல்ல. உண்மை. இந்த அளவிற்கு வர்ணிக்க தெரிந்தால் நல்ல கவிஞன் ஆகியிருப்பேன்.

கார்கில் ஜெய் அவர்களே, நான் புகைப்பவன் அல்ல. புகை பழக்கத்தை விட்டொழித்தவன்.

அந்த பகுதிக்கு வந்து பாருங்கள். கடுங்குளிரில் காற்றில் உள்ள ஈரபதம் முற்றிலும் பனியாகி கீழே விழ காற்று மிக உலர்ந்து இருக்கும். ஆகையால் சூரியனும் கடுங்குளிரும் சாத்தியமே.

said...

//கார்கில் ஜெய் அவர்களே, நான் புகைப்பவன் அல்ல// என்ன இப்படி சொல்றீங்க? நான் ஏதோ உங்கள மாதிரி எழுதவரல்லியேங்கற மனப் புகைச்சல்ல சும்மா தமாஷ்க்கு எழுதினேன்னு உங்களுக்குத் தெரியாதா? //எனக்கு சிகாகோ நகரத்திலேயே குளிர்கால இரவில் (-30C) சளி பிடித்து மூக்கிலிருந்து ஒழுகும் முன்னர் உறைந்துவிடும். மூக்கைத் திருகினால் உள்ளே பனிக் கம்பிகள் உடையும் சப்தம் கர கரவென்று கேட்கும். கண்ணில் உள்ள நீரும் எப்போதவது உறைந்து சில நொடிகள் blurred ஆக தெரியவும் செய்திருக்கிறது.