புதன் மதியம் 1 மணி. நல்ல வெயில். ஆபிஸிலிருந்து சிறிது சீக்கிரம் வந்து என் மகன் (அப்போது 5 வயதுக் குழந்தை) வருகைக்காக நிற்கிறேன். பஸ்ஸிருந்து இறங்கிய குழந்தை ஓடிப் போய் அருகில் இருந்த கடையில் நுழைந்து வெயிலுக்கு இதமாக ஒரு குளிர் பானத்தை எடுக்கிற்து. அதை திறக்கமுடியாமல் என்னிடம் உதவிக்கு வருகிறது. அவனுக்கு உதவும் பொருட்டு அந்த பாட்டிலை நான் திறக்கிறேன். அப்போது ஒரு முரட்டுக்கரம் என்னை தடுக்கிறது. தடுத்த முரட்டுகரங்களுக்கு சொந்தகாரர், நான் நண்பர் என நினைத்துக் கொண்டிருந்த அப்துல்லா. சூடான் நாட்டுக்காரர். அவர் கண்களில் கோபம் கொப்பளிக்க "எங்களை வெறுப்பெற்றுவதுதான் உன் குறிக்கோளா?. இது ரமதான் புனித நோன்பு மாதம் உனக்கு என்று தெரியாதா? . நாங்கள் பட்டினி கிடந்து அன்புடன் கடவுளை தொழும் வேளையில் நீ குளிர்பானம் அருந்தி எங்களை வெறுப்பேற்றுகிறாய். இதைப் பற்றி புகார் செய்தால் நீ இந்த நாட்டிலிருந்து இன்றைக்கே வெளியேறவெண்டியிருக்கும்" என்றார்.
நானும் "அப்துல்லா அமைதி... பசியெடுக்கும் போது. இந்த மாதிரி கோபம் வருவது இயற்கை. இந்த குளிர் பானம் என் குழந்தைக்கு எனக்கு இல்லை" என்றேன்.
பிறகு " ஆமா நீ புகார் செய்தால் நான் இந்தியாவிற்குதான் போவேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே....... நான் புகார் செய்தால் நீ சூடான் போக வேண்டியிருக்கும் எப்படி வசதி? " என்றேன். அவன் வழிந்த அசடு சூப்பர்
ரமதான் நோன்புகாலங்களில் பொது இடத்தில் சாப்பிடவோ, நீர் அருந்தவோ அல்லது புகைக்கவோ அனுமதி இல்லை. நீங்கள் முஸ்லிமாக இல்லாமல் இருந்தால் கூட.
பெரும்பான்மையானவர்களுக்கு நீங்கள் அடங்கி நடக்கவேண்டும். முஸ்லிம்களுக்கு 6 மணிநேரம் வேலை மற்றவர்களுக்கு 8 மணிநேரம்.
நீங்கள் மறைவான இடத்தில் உணவருந்தாலாம் ஆனால் உணவகங்கள் மூடியிருக்கும்.
அலுவலகத்தில் ஒரு தனி அறை இருக்கும் காபி அருந்த , புகைக்க ஆனால் வாசனை வெளியே வரக்கூடாது. வந்தால் விரதம் இருக்கும் நம்மாளுக்கு கோபம் வரும். அவர் விரதம் இருப்பதால் வேலை செய்யமாட்டார். நாம் வழக்கமாக வேலைசெய்ய வேண்டும் ஆனால் சாப்பிடக்கூடாது. அவர் இரவெல்லாம் முக்கு முக்கு என்று இனிப்புகளயும் பிரியாணிகளையும் முக்கிவிட்டு காலையில் தூங்கி வழிவார். அவர் தூங்கும் போது பட்டினிகிடப்பார் ஆனால் நாம் காபி அருந்தியோ புகைத்தோ அந்த வாசனையால் அவருக்கு எரிச்சல் தரக்கூடாது.
இதில் வேடிக்கை என்னவென்றால் சில பாகிஸ்தானியர்கள் கடைசி நாளன்று விரதம் இருந்தால் போதும் என நம்முடன் மூடிய அறைக்குள் காபி அருந்தியும் புகைத்தும் சகோதரத்துவத்தை நிலை நாட்டுவர்.
இப்தார் விருந்து என்பது இந்தியாவில் தற்போது பேமஸ். (கருணாநிதி அப்போ பாய் ஆகிவிடுவார். ஜெயலலிதா பீபீ ஆகிவிடுவார்)
இங்கே அரபு நாடுகளில் அலுவலகத்தில் ஓவ்வொரு டிபார்ட்மெண்ட் ஒவ்வொரு நாளைக்கு அழைப்பர்.
போகவில்லையென்றால் மதவதி என்று பெயர்கிடைக்கும். சரி போனால் "என்ன இன்னைக்கு டபுள் பிரேக்பாஸ்டா?" என நக்கல் இருக்கும்.
நான் இருந்த வாளகத்தில் நீச்சல் குளம் அருகே இந்த விருந்து நடக்கும். விருந்து முடிந்தபிறகு அந்த இடம் ஹடாரி படத்தில் பசியெடுத்த சிங்கங்கள் குதறிய வரிக்குதிரைகள் போல் காட்சியளிக்கும். அவ்வளவு களேபரம்
இரவு முழுவதும் கார்கள் கீரிச்சிடும் சத்தமும் மக்கள் நடமாட்டமும் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.
அரேபியர்கள் பட்டினி கிடக்கும் ரமதான் மாதத்தில் உணவு விற்பனை அதிகமாக இருபபது விந்தையுலும் விந்தை.
(ஒரு ஒப்புவமை: இந்தியாவில் காலை 6 மணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்கு பின்னும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்ககூடாது. சிறுபான்மையினரின் தூக்கம் கெடும் என்பதால்)
ரமதான் புனித வேள்வி நடப்பதால் பட்டினி கிடந்து நம் நண்பர்கள் கோபமாக இருப்பார்கள். ஆகையால அதைப் பற்றி பேசவேண்டாம் ...
சகோதரத்துவ்த்தை பேணும் அரேபியர்களின் விருந்தோமபலைப் பார்ப்பமோ?
அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தால் விருந்தளிப்பது வழக்கம். பதவி உயர்வு அரேபியர்களுக்குத் தான். நம்மாட்கள் டெக்னீசியனாக சேர்ந்து சீனியர் டெக்னீசியன்களாக ரிடையர் ஆவர்கள். இந்த விருந்தில் முஸ்லிம்/அரபிக்ளுக்கு தனியாகவும் மற்றவர்க்ளுக்கு தனியாக்வும் இருக்கும். அரேபியர்கள் கருஃப் என்ற பிரியாணியை பெரியதட்டில் வைத்து அதன் முன் வட்டமாக அமர்ந்து ஒரே தட்டில் உண்பர். நானும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட என் நண்பர்களின் அறிவுரைகளை புறக்கணித்து அந்த தட்டில் உண்பது வழக்கம். அவ்வாறு நான் அமரும் போது சரேலென்று விலகிய சில அரேபியர்களை நோட்டமிட்டேன். அவர்கள் விலக காரணம் நான் அந்த தட்டில் அமர்ந்ததால். பிறகு என்னுடைய எகிப்திய/சூடானிய/கென்ய நண்பர்களிடமிருந்து நான் அறிந்தது என்ன வென்றால் " உயர்குடிகள் அமரும் தட்டில் ஒரு திம்மியா அதுவும் இந்துவா" என விலகுவார்களாம்.
"யோவ் நாங்க தமிழர்கள் சொன்னால் உன் மண்டையில் ஏறாது" இது 25 வருடங்கள் அங்கே கொட்டைபோட்ட என் நண்பர்-தத்துவஞானி-வழிகாட்டி
சரி நம்மாட்கள் எப்படி விழாக்களை கொண்டாடுவர்கள் என்பது அடுத்து
தொடரும்.....
Friday, August 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
//(ஒரு ஒப்புவமை: இந்தியாவில் காலை 6 மணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்கு பின்னும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்ககூடாது. சிறுபான்மையினரின் தூக்கம் கெடும் என்பதால்)//
சிவா, இது சிறுபான்மையினரின் தூக்கத்துக்கு மட்டும் இல்லையே. வயதானவர்கள், குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் எல்லாருடைய தேவைகளையும் கருத்தில் கொண்டுதானே.
என்னைக் கேட்டால் இங்கு செய்வது போல் ஒரு இடத்தில் வெடிப்பதற்கான ஏற்பாடு செய்து விடலாம்.
இந்த விதி, தேர்தல் பிரச்சாரத்தை 10 மணிக்கு முடிக்கச் செய்யும் விதி, இது எல்லாம் நல்ல விதிகள்தானே.
ஒரு ஒப்புவமை: இந்தியாவில் காலை 6 மணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்கு பின்னும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்ககூடாது. சிறுபான்மையினரின் தூக்கம் கெடும் என்பதால்//
கோவை ரேஸ்கோர்சில் பகலில் வெடியும் நைட்டில் புஸ்வாணம்,ராக்கெட்டும் விடுவோம்.போலிஸ்காரன் முறைத்தபடி டர்,புர் என ஜீப்பில் சுத்துவான்.கண்டுக்க மாட்டான்:)))
கொத்தனார், ஆனால் ஜனவரி 1 க்கு விடிய விடிய ஆட்டம் வெடி போடுகிறார்களே அப்போ...
அதுசரி... மசூதியிலே தினம் தினம் காலங்காத்தலே சவுண்டு விட்ராங்களே அது?
மாதாகோயில்லே நடுநிசியிலே மணிஅடிச்சி கிறிஸ்துமஸ் கொண்டுகிறார்களே அது?
நியாயம்னா எல்லாருக்கும் ஒன்னுதானே சாமி
செல்வரே ஜாலி மூடில் காலைலே வெடி நைட்டு புஸ்வாணம் அதுவும் ரேஸ்கோர்ஸ் ரோடிலே. ரேஸ்கோர்ட் ரோடில் இருக்கும் பணக்காரங்க மேலே கை வக்க போலீஸ் என்ன கேணயா
செல்வரே ஜாலி மூடில் காலைலே வெடி நைட்டு புஸ்வாணம் அதுவும் ரேஸ்கோர்ஸ் ரோடிலே. ரேஸ்கோர்ட் ரோடில் இருக்கும் பணக்காரங்க மேலே கை வக்க போலீஸ் என்ன கேணயா//
ஹி..ஹி...டி.எஸ்.பி,கலக்டர் எல்லாம் வசிப்பது ரேஸ்கோர்ஸில் தான்.அவங்க பசங்களும் நாங்களும் சேந்துதான் வெடிப்போம்:)))
அமெரிக்கா/கனடாவில் எப்படி வெடி வெடிக்கிறார்கள் என்று எழுதுங்களேன். ஒரு கையில் ஊதுவத்தியும் மறுகையில் வெடியுமான அந்த வீர தீரங்களுக்கெல்லாம் அங்கு இடமில்லையாமே!
கொத்தனார், கொஞ்ச நாளைக்கு அப்பறம் அரசாங்கமே திடல்ல வெடிக்கும் எல்லாரும் பாத்துக்கலாம்னு சொல்லுவீங்க போலருக்கே.
சிவா,
என் கருத்துக்கள்.
//கொத்தனார், ஆனால் ஜனவரி 1 க்கு விடிய விடிய ஆட்டம் வெடி போடுகிறார்களே அப்போ...// தப்பு.
//அதுசரி... மசூதியிலே தினம் தினம் காலங்காத்தலே சவுண்டு விட்ராங்களே அது?// தப்பு
//மாதாகோயில்லே நடுநிசியிலே மணிஅடிச்சி கிறிஸ்துமஸ் கொண்டுகிறார்களே அது?// தப்பு
ஆடி மாதம் / மார்கழி மாதம் ஆனா ஸ்பீக்கர் கட்டி அம்மனை எழுப்பறாங்களே - தப்பு.
எல்லாம் அவங்க அவங்க இடத்துக்குள்ள இருந்த ஓக்கே, வெளியில் வந்து அடுத்தவங்களுக்கு இம்சையா இருந்தா தப்புதான்.
//கொத்தனார், கொஞ்ச நாளைக்கு அப்பறம் அரசாங்கமே திடல்ல வெடிக்கும் எல்லாரும் பாத்துக்கலாம்னு சொல்லுவீங்க போலருக்கே. //
புதரகத்தில் நிறைய இடங்களில் தனிப்பட்ட முறையில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. நீங்க சொல்லற கதைதான். அரை மணி நேரம் வெடிப்பாங்க. நல்ல சூப்பர இருக்கும். இந்த ஜூலை 4 பட்டாசு வெடிச்சதை யாரோ படம்பிடிச்சு குறும்படமாக் கூட போட்டாங்களே.
ந்யூயார்க்கில் மேஸீஸ் என்ற நிறுவனத்தார்தான் ஸ்பான்ஸர், ரெண்டு இடங்களில் வெடிப்பார்கள்.
சிறுபான்மையினரின் பட்டாசுகள் மிகவும் உயர் தரமானவை. அதில் ரயில் கூட பற்றி எறியும். அதற்கேற்ப தீபாவளி பட்டாசு அமையுமா?
அரேபிய அனுபவங்கள் சுவையாக இருக்கின்றன. என் அனுபவங்களை ஒத்திருக்கின்றன. (நானும் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று முதலில் எண்ணினேன். ஆனால், இங்கு நிலவும் சூழ்நிலையில் தயங்கியுள்ளேன்...)
மேலும் தொடரவும்
நன்றி
//எல்லாம் அவங்க அவங்க இடத்துக்குள்ள இருந்த ஓக்கே, வெளியில் வந்து அடுத்தவங்களுக்கு இம்சையா இருந்தா தப்புதான்//
Agreed. நான் விரதமிருந்தால் நீயும் இருக்கணும் என நிர்பந்திப்பது சரியா?
ஒரு பக்கம் இஸ்லாமில் வர்ணாசரமே இல்லை யென முழக்கம். மறுபக்கம் முஸ்லிம்கள் மட்டும் வாழும் மெக்கா மெதினாவில் லேபர் காம்ப்கள் ஏன்?
ஜயராமன், தயக்கம் ஏன்? உண்மைகள் எப்போதுமே அழிவதில்லை
வாயத் திறக்கும் முன்னால, நான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறேன்னு தோணுது...
பதிவில்: //(ஒரு ஒப்புவமை: இந்தியாவில் காலை 6 மணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்கு பின்னும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்ககூடாது. சிறுபான்மையினரின் தூக்கம் கெடும் என்பதால்)
பின்னூட்டத்தில்: //அதுசரி... மசூதியிலே தினம் தினம் காலங்காத்தலே சவுண்டு விட்ராங்களே அது?
//மாதாகோயில்லே நடுநிசியிலே மணிஅடிச்சி கிறிஸ்துமஸ் கொண்டுகிறார்களே அது?
//நியாயம்னா எல்லாருக்கும் ஒன்னுதானே சாமி
கல்யாணம், கருமாதின்னு எல்லாத்துக்கும் கண்ட, காணாத பாட்டுகளை காலையிலிருந்து போடற, "கள்" தோன்றிய காலத்திலிருந்து வரும் நம் "குடி" வழக்கம் சரிதானா?
அவர்கள் நாட்டில் அவர்கள் மத வழக்கங்களை நம்மீது திணித்தால் தப்பு தான். ஆனால், அதுக்கு உவமை வேறாய் இருந்திருக்கலாம். சிறுபான்மையினரின்...னு இல்லாமல், எல்லாருக்கும் பொதுவாக...
BTW, பசி பொறுக்கவே மாட்டாதவள் நான்:-) ஹிஹி, எங்க ஊர்ல, இரவு பன்னெண்டு மணிக்கு குறிப்பா "பொண்ணுங்க" இருக்கற வீட்டுல, தண்ணி கழுவி விடற ஓட்டைல வெளியில இருந்து வெடி வச்சுட்டு பசங்க ஓடிடுவாங்க:-)
உங்கள் அனுபவங்களை, உங்கள் முன்முடிவுகளோடேயே சொல்லுங்கள், வேண்டியதை அருந்தும் அன்னப் பறவைகளாகிக் கொள்கிறோம். உங்களின் பல பதிவுகளைப் படித்தவள் என்ற எண்ணத்தில் சொல்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.
கெக்கே பிக்குணி, நன்றி உங்கள் அறிவுரைக்கு. நானும் ஸ்டேட்மெண்டுகளை மட்டும் விட்டுக் கொண்ட்ரிந்தேன். சில அறிவுசீவிகளின் தவறான புரிதலால் இந்த comparative statements . தவறாக எண்ணவேண்டும்.
அதென்ன பேர் தட்டச்ச அசௌகரியமா இருக்குதே
சிவா, இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
சூடான் நாட்டு சேர்ந்தவருக்கு நல்ல சூடாக தான் பதில் சொல்லி உள்ளீர்கள்.
//பிறகு " ஆமா நீ புகார் செய்தால் நான் இந்தியாவிற்குதான் போவேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே....... நான் புகார் செய்தால் நீ சூடான் போக வேண்டியிருக்கும் எப்படி வசதி? " என்றேன். அவன் வழிந்த அசடு சூப்பர்//
நீங்கள் எதைப் பற்றி புகார் செய்வதாக அவரிடம் சொன்னீர்கள்?? அதற்கு அவர் ஏன் அசடு வழிந்தார்???
அட, உங்க பேரும் தான் இங்கிலீசு தமிளுன்னு இருக்குது!
பரவால்லீங்க, கெபி ன்னு என்னிய சொல்லலாம்:-)
நாகை சிவா, நன்றி அண்ட் விஷ் யு த சேம்
திப்பு, ரமதான் மதத்தில் பொதுவில் யாரும் ஊணவருந்தவோ நீர் அருந்தவோ கூடாது. ஏனென்றால் எல்லா அரேபியரும் விரதமிருந்தே ஆகவேண்டும். குழந்தைகள், வியாதிஸ்தர்கள் மற்றும் சிலருக்கு இதில் விலக்கு உண்டு.
அந்த சூடானியார் நான் தான் பொதுவில் குளிபானம் அருந்துகிறேன் என புகார் செய்தால் எனக்கு தண்டனை கிடைக்கும். அது என்ன தண்டணை? என்ன சட்டம்? நீதி வழுவாத கடவுளின் டைரக்ட் சட்டம் என்ன என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் பேச்சு வழக்கில் ஏதாவது தவறு செய்தால் "மச்சி நீ காலி உனக்கு டிபோர்டசன் தான்" என பேசுவது வழக்கம்.
அந்த வகையில் நடந்த உரையாடல் அது. ஒரு குழந்தையய் தடுத்த வகையில் அவனுக்கும் அந்த தடனை கிடைத்திருக்கும்.
என் "தண்டனை" இந்தியாவென்றால் அவனின் "தண்டனை" சூடான்
சௌதியை விட இந்தியா நல்ல நாடுதான், ஆனால் சூடான்?
ஆரோக்கியம் has left a new comment on your post "என் அரேபிய அனுபவ்ங்கள் - 10.5":
http://ennamopo.blogsome.com/2006/08/05/ebook/
ஒரு மின் புத்தகம் தயார் செய்திருக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
ஆரோக்கியம் சார் , படிச்சிட்டு சொல்றேன் சார்
நீ மாடு சாப்பிட மாட்டே, அதே மாதிரி மத்தவனும் மாடு சாப்பிட கூடாதுன்னு சொல்லுவியே, அது மாதிரி தான் மாப்ளே இது
அந்த சூடான் நன்பர் முகவரி கொடுத்தா நாகை சிவா மூலம் ஒரு கன்னி வெடி பார்சல் அனுப்புறேன்..
//உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்க கேவலமான தாழ்த்தப்பட்ட பார்ப்பனர்களால் மட்டுமே முடியும்!
//
திருப்பியும் மொதொ இருந்து ஆரம்பிச்சிட்டிங்களா?
யாரு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது என்பதை என் பழைய பதிவிகளை பார்த்துட்டு வாங்க ஆப்பு
மருது மச்சி, நான் பாதிநாள் சாப்பிடறதெ இங்கே தான்.
அதுசரி நான் சட்டம்போட்டு தடுத்தாலும் நீ போராடுவே. அதுக்கு உரிமை உனக்கு இருக்கு. இல்லேன்னா குண்டு வைப்பே
உங்க தாய் நாடு இஸ்லாம் கண்ட சொர்க்கம் அங்கே போய் பேசி பாக்கிறது பெரிய்ய்ய்ய ஆப்பு தாண்டி உனக்கு.
கால்கரி,
அந்த ஆப்பு ஒரு டூப்பு...உண்மையான ஆப்பு அல்ல...அவரைப் போல் வலைத்தளம் அமைத்து, அதில் கெட்டவார்த்தையில் எழுதாமல் துவேஷத்தைப் பிதற்றிவைத்திருக்கும் போலி ஆப்பு.
போலிகளை நாம் அனுமதிப்பது நல்லதல்ல.
//
நீ மாடு சாப்பிட மாட்டே, அதே மாதிரி மத்தவனும் மாடு சாப்பிட கூடாதுன்னு சொல்லுவியே, அது மாதிரி தான் மாப்ளே இது
//
மருது மச்சி..!!
இந்தியாவுல மாட்டுக்கறி கிடைக்கும்....அரேபியாவுல பன்னிக்கறி கிடைக்குமா?
யூத பயங்கர வாத நாட்டுல கூட பன்னிக்கறி கிடைக்கும்.
இஸ்லாமியர் "ஹலால்" concept ஏ யூதர் விவிலியத்திலிருந்து சுடபட்ட "கோஷர்" கான்செப்ட் தான்...!!
வஜ்ரா, ஆப்பை கழட்டி விட்டேன். நன்றி
//திப்பு, ரமதான் மதத்தில் பொதுவில் யாரும் ஊணவருந்தவோ நீர் அருந்தவோ கூடாது. ஏனென்றால் எல்லா அரேபியரும் விரதமிருந்தே ஆகவேண்டும். குழந்தைகள், வியாதிஸ்தர்கள் மற்றும் சிலருக்கு இதில் விலக்கு உண்டு.//
ஆமா!!!... நான் தெரியாமதான் கேக்குறேன்... நீ அந்த சூடானியை, குழந்தை மீது பழி சுமத்தியதை புகார் செய்து சூடானிக்கு தன்டனை கிடைக்கும் என்றால் அது நல்ல சட்டம் தானே... இத்தனைக்கும் அவன் ஒரு முஸ்லிம்.... பின்பு அந்த சட்டத்தின் மீது காழ்ப்புணர்வு??? ஆக, 10 வருடங்களுக்கு மேல் (10 x 365 = 3650) உனக்கு இந்த கொடுமை நடக்கும் போது (அரபிகள் ஆப்பு வைத்துக்கொண்டிருந்த போது) அதை பொறுத்துக்கொண்டு இருந்தாய்... வாவ்!!! என்ன ஒரு சகிப்பாலி.... கலக்கிட்டே சிவா!!!!...
திப்பு பாய், இங்கே சட்டம் பற்றி பேச்சல்ல அந்த சட்டத்தை மீறுபவனின் முட்டாள்தனத்தை பற்றிதான் பேச்சு, விரதன் இருங்கM இறைவனை தொழுங்கள் யார் வேண்டாம் என்றார்கள்.
நான் செயவ்து மாதிரி நீயும் செய்ய வேண்டும் எனக்கு அடங்கி போக வேண்டும். நான் விரதம் இருக்கும் போது நீ மட்டும் மறைவில் உண்ணலாமா என்ற வெறுப்பு.
அங்கே கடவுள் பக்தி என்பது சிலபேரிடம்தான் அவர்கள் அமைதியாக இருப்பார்கள்
மற்றவர்களுக்கு நான் பட்டினி இருக்கும் போது இந்த திம்மி எப்படி சாப்பிடலாம் என்ற மமதை.
என்றைக்காவது திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள மசூதிக்கு போயிருக்கிறீர்களா? அவ்வாறு போகும் போது தீபாவளி முடிந்து ஒரு வாரம் விரதம் இருப்பவர்களைப் பார்திருக்கீறீகளா? ஒரு வாரம் திரவம் மட்டும்தான் , ரமதான் போல் இரவில் பிரியாணி போன்ற சமச்சாரங்கள் இல்லை. பக்கத்து கடைகளிலிருந்து சாப்பாடு வாசனை தூக்கும் அதையெல்லாம் கடந்து பட்டினி கிடப்பார்களே அது பக்தி. அங்கே என்ன சாப்பாட்டிற்கு தடையா விதித்திருக்கிறார்கள்?
அப்படியே விதித்தாலும் உங்கள் தோழர்களான கருப்புக் கொடிக் காவலர்கள் விரதம் இருப்பவர்கள் முன் அமர்ந்து பிரியாணி தின்று அவர்களை வெறுப்பேற்றி உங்கள் ஓட்டை பிடுங்குவார்கள்
சகிப்புதன்மை என்பது நம் இந்தியர்களின் இரத்தத்தில் ஊறியது. அதுவே நம் பலவீனம் கூட.
இவ்வளவு சகிப்புதன்மையுடன் இருந்தவரை மாற்றியது உங்கள் புண்ணிய பூமியின் மைந்தர்கள் தான் திப்பு பாய்
அதுசரி ப்ராக்க்டிலாக பேசலாம், நான் அந்த சூடானியை பற்றி புகார் செய்திருந்தால் அவனுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கும். அவன் என் மீது புகார் செய்திருந்தால் எனக்கு தண்டணை வழங்கப்பட்டிருக்கும் அதுதான் பாய் அந்த ஊரு நியாயம்
//சவுதியில் நமக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை, ஷியாக்களுக்கும் இந்த நிலைதான். ஷியா நாடுகளில் ஷ¤ன்னி முஸ்லிம்களுக்கு இந்த நிலைதான். நாளை அகமதி முஸ்லிம்களுக்கென்று ஒரு நாடு அமைந்தால் அங்கு ஏனைய முஸ்லிம்களுக்கு இந்த நிலைதான்.
//
நேசகுமார், சவூதியில் உள்ள அராம்கோவில் நன்றாக வேலைப்பார்க்கும் அரேபியர்களில் அதிகமானவர் சியாக்கள்.
அவர்கள் வசிக்கும் Qatif என்ற ஏரியாவில் அடிப்படை வசதிகள் கம்மியாக இருக்கும்.
அங்கெ வசிக்கும் சியாக்களுக்கு சுன்னி முஸ்லிம்கள் மேல் அதிக கோபம் உண்டு. சியாக்கள் எண்ணை வளம் அவர்களுடையது என நினக்கின்றார்கள். சவூதியின் பெரும்பான்மையான எண்ணை வளம் அதன் கிழக்குப் பகுதியில் உள்ளது. கிழக்குப் பகுதியில்தான் சியாக்கள் அதிகம்.
yugan,
நீங்கள் துஸ்டரை கண்டு தூர விளகுவதற்கு முன்னர்...
tami.net ல் இருக்கும் எழுத்துரு மாற்றியை பயன் படுத்தி பின்னூட்டமிடுமாறு "கேத்துக் கொல்கிறேன்.."
யுகன், நாங்கள் தூரமாகத் தான் இருக்கிறோம். தாங்களும் உங்கள் படிப்பை முடித்துவிட்டு தூரமாய் விலகி விடுங்கள். அதிக துஷ்டர்கள் பக்கத்தில் இருக்கவேண்டாம்
//
அதுசரி நான் சட்டம்போட்டு தடுத்தாலும் நீ போராடுவே. அதுக்கு உரிமை உனக்கு இருக்கு. இல்லேன்னா குண்டு வைப்பே
//
இதுக்கு எல்லாம் குண்டு யாரு வெக்கிறான்னு கொஞ்சம் யோசி மச்சி. அது வேற யாருமில்ல. நம்ம பி.ஜே.பி.கார டோமருங்க தான். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பி.ஜே.பி. டோமருங்க உட்பட எல்லோரும் மாடு சாப்பிட்டு நல்லா உடம்ப கிண்ணுனு தேற்றி வெச்சிருக்கானுவ. நீ என்னடான்னா அத சப்பிடாத, இத சாப்பிடாதன்னுன் சட்டம் போட்டுகின்னு நேரத்த வீணாக்கிட்டிருக்கே
சிவா,
'என் அரேபிய அனுபவங்கள்' என்று எழுதும்போது ஏதோ தனிப்பட்டமுறையில் அரபியர் சிலரால் பாதிக்கப்பட்டவரின் வேதனை வெளிப்பாடு என்று நினைத்தேன். அனால் இந்தப் பதிவில்,
//(ஒரு ஒப்புவமை: இந்தியாவில் காலை 6 மணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்கு பின்னும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்ககூடாது. சிறுபான்மையினரின் தூக்கம் கெடும் என்பதால்)//
என்று எழுதியிருந்ததைப் படித்தபின் தான் இது அனுபவத்தின் வெளிப்பாடு இல்லை, காழ்ப்பின் வெளிப்பாடு என்று புரிந்தது.
ஏன் வெறுப்பை விதைக்கிறிர்கள்? பட்டாசு வெடித்தால் சுற்றுச் சூழல் மாசு படும் என்று அரசு கூறுவது எந்தச் சிறுபான்மையினருக்காக?
போகியன்று, இரவில் டயர் கொளுத்துவதைக் காவல் துறை தடை செய்கிறதே, அது நீங்கள் வெறுக்கும் சிறுபான்மையினருக்காகவா?
சங்கர்,நேசகுமார், ஜெயராமன்,டோண்டு இன்னும் இவர்களைப்போல் சிலர் உங்கள் பதிவில் வந்து பாராட்டிச் சீராட்டிச் செல்லுவதால் நீங்கள் மேலும்மேலும் ஒரு சமூகத்தின் மேல் வெறுப்பையும் காழ்ப்பையும் கொட்டுகிறீர்க என்றே எனக்குப் படுகிறது.
சிவா,
'என் அரேபிய அனுபவங்கள்' என்று எழுதும்போது ஏதோ தனிப்பட்டமுறையில் அரபியர் சிலரால் பாதிக்கப்பட்டவரின் வேதனை வெளிப்பாடு என்று நினைத்தேன். அனால் இந்தப் பதிவில்,
//(ஒரு ஒப்புவமை: இந்தியாவில் காலை 6 மணிக்கு முன்னும் இரவு பத்து மணிக்கு பின்னும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்ககூடாது. சிறுபான்மையினரின் தூக்கம் கெடும் என்பதால்)//
என்று எழுதியிருந்ததைப் படித்தபின் தான் இது அனுபவத்தின் வெளிப்பாடு இல்லை, காழ்ப்பின் வெளிப்பாடு என்று புரிந்தது.
ஏன் வெறுப்பை விதைக்கிறிர்கள்? பட்டாசு வெடித்தால் சுற்றுச் சூழல் மாசு படும் என்று அரசு கூறுவது எந்தச் சிறுபான்மையினருக்காக?
போகியன்று, இரவில் டயர் கொளுத்துவதைக் காவல் துறை தடை செய்கிறதே, அது நீங்கள் வெறுக்கும் சிறுபான்மையினருக்காகவா?
சங்கர்,நேசகுமார், ஜெயராமன்,டோண்டு இன்னும் இவர்களைப்போல் சிலர் உங்கள் பதிவில் வந்து பாராட்டிச் சீராட்டிச் செல்லுவதால் நீங்கள் மேலும்மேலும் ஒரு சமூகத்தின் மேல் வெறுப்பையும் காழ்ப்பையும் கொட்டுகிறீர்க என்றே எனக்குப் படுகிறது.
புலமாடன், ஒரு விஷயத்தை இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் அரேபியர்களிடம் கஷ்ட படவில்லை. அவர்களின் வழக்கங்களைப் பற்றி நான் பார்த்த பார்வை. என்னை அவ்வளவு சீக்கிரம் யாரும் கஷ்டபடுத்திவிட முடியாது.
ஏதோ நம் அரசாங்கம் சுற்று புற சூழ்நிலைப் பற்றி அதிகம் கவலை படுவது போலும் வருடத்திற்கு ஒரு தீபாவளி, ஒரு போகியில் மட்டும் கெடுவது போலவும் பேசுவது ஓட்டுக்காகத்தான் நண்பரே.
நாடே குப்பைக்கூளமாகவும் காற்று நச்சாகவும் காடுகள் அழிவதும் தினம் தினம் நடக்கிறது .
அதுசரி அரேபியாவில் பெரும்பான்மை முஸ்லிம்களான அரேபியர்கள் வேலைப்பார்க்க வந்த வேற்று மதத்தினரை காழ்புணர்ச்சியுடன் பார்க்கிறார்கள் என சொல்லும் போது வராத நீங்கள் இப்போது மட்டும் வந்து காழ்புணர்ச்சி கசப்புணர்ச்சி பேசுவது எந்த வகையில் நியாயம்.
சரி பட்டாசு போகி ஆடி மாச ஸ்பீக்கர், ஐயப்ப பூசை ஸ்பீக்கர், பிள்ளையார் ஊர்வலம் எல்லாவற்றையும் தடை செய்துவிடலாம்.
அதே சட்டத்தால் மசூதியில் ஒரு நாளக்கு 5 முறை சவுண்டு விடுவதை தடை செய்ய முடியுமா? இந்த கேள்வியும் காழ்புணர்ச்சியால் கேட்க படும் கேள்வியா?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே? இல்லை அதிலும் ஏதாவது கன்ஷசன் செய்யணுமா? உங்களுகு ஒண்ணு எனக்கு ஒண்ணு அப்படின்னு
// அரேபியாவில் பெரும்பான்மை முஸ்லிம்களான அரேபியர்கள் வேலைப்பார்க்க வந்த வேற்று மதத்தினரை காழ்புணர்ச்சியுடன் பார்க்கிறார்கள் என சொல்லும் போது வராத நீங்கள் இப்போது மட்டும் வந்து காழ்புணர்ச்சி கசப்புணர்ச்சி பேசுவது எந்த வகையில் நியாயம். //
நானும் துபாயில் வேலை பார்த்தவந்தான்.உங்களைப்போல் வெள்ளைகாலர் வேலை இல்லை. சாதாரண அடிமட்டத் தொழிலாளி. பாலைவனத்தினுள் சென்று வேலை பார்க்கும்போது( மின்சார இணைப்புக்கான கம்பி இழுத்தல்)அங்குள்ள அரபிகள் எந்த வித்தியாசமும் இன்றிப் பேரீச்சம் பழமும் தண்ணீரும் தந்ததுண்டு. வெளியிலும் எந்த வேருபாடும் காட்டியதில்லை. அதற்காக நான் எனது அரேபிய அனுபவங்கள் எழுதத் தேவையில்லை.
நீங்கள் காழ்ப்புணர்ச்சியில் எழுதுகிறீர்கள் என்பது, முன்பொரு முறை ட்ரைவிங் லைஸென்ஸ் பற்றிக் கூறியிருந்ததிலிருந்து தெளிவானது. எங்கள் கம்பெனியில் நாற்பது டிரைவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களே.
//சரி பட்டாசு போகி ஆடி மாச ஸ்பீக்கர், ஐயப்ப பூசை ஸ்பீக்கர், பிள்ளையார் ஊர்வலம் எல்லாவற்றையும் தடை செய்துவிடலாம்.
அதே சட்டத்தால் மசூதியில் ஒரு நாளக்கு 5 முறை சவுண்டு விடுவதை தடை செய்ய முடியுமா? இந்த கேள்வியும் காழ்புணர்ச்சியால் கேட்க படும் கேள்வியா?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே? இல்லை அதிலும் ஏதாவது கன்ஷசன் செய்யணுமா? உங்களுகு ஒண்ணு எனக்கு ஒண்ணு அப்படின்னு //
மிக நல்ல யோசனை.உடனடியாகச் செய்ய வேண்டும். நாட்டில் கலவரம் ஓய்ந்து அமைதி நிலவும்: சுற்றுச் சூழல் மாசுபடாது: ஒலி மாசு படாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். முதலில் அரசு அலுவலகங்களிலும் போக்குவரத்துத் துறையிலும் காவல் நிலையத்திலும் செய்யப்படும் ஆயுத பூஜையை நிறுத்த வேண்டும். ஏனெனில் அதுதான் பிள்ளையார் ஊர்வலத்டை அடுத்து வருகிறது. அதை ஏன் நீங்கள் உங்கள் பதிலில் விட்டுவிட்டீர்கள்?
புலமாடன், பேரீச்சம் பழமும் தண்ணீரும் தந்தார்கள் சரி மாதாமாதம் சம்பள்மும் வருடமானால் பிளேன் டிக்கட்டும் தந்தார்களா?
தற்பெருமைகாக அல்ல நான் சொல்ல போவது. ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் அப்போது தெருவில் வேலைப்பார்க்கும் பாட்டளி மக்களுக்கு நாங்கள் ஐஸ்மோர் (லபான்) விநியோகம் செய்வோம். அதற்கான லாஜிஸ்டுகள், பணம் ஆகியவை பின்புலத்தில் நாங்கள் செய்வோம் ஆனால் முன்னின்று விநியோகிப்பது மட்டும் ஒரு முஸ்லிம் அல்லது அரபி காராக இருப்பார்.
//நீங்கள் காழ்ப்புணர்ச்சியில் எழுதுகிறீர்கள் என்பது, முன்பொரு முறை ட்ரைவிங் லைஸென்ஸ் பற்றிக் கூறியிருந்ததிலிருந்து தெளிவானது. எங்கள் கம்பெனியில் நாற்பது டிரைவர்களும் முஸ்லிம் அல்லாதவர்களே.
//
அவர்கள் லைசன்ஸ் வாங்க பட்ட பாட்டை அவர்களிடம் கேட்டீர்களா?
அபுதாபி இருந்து 250 கிமீ தொலைவில் ருவைஸ் என்ற குக்கிராமம் உள்ளது. அங்கே தான் நான் வசித்தேன். அந்த குக்கிராமத்தில்(அதை ஒரு நகரம் என்று அரேபியர்கள் அழைப்பார்கள். அவர்களிம் அகராதியில் குக்கிராமம் என்றால் என்ன என்பது தெரியவில்லை)
செய்ப் என்ற பன்னாடையும் முபாரக் என்ற குரங்கும் லைசன்ஸ் வழங்க வருவார்கள் அங்கே ரோட்டில் ஒரு மணிநேரத்தில் 4 கார்கள் போனால் அதிகம் ட்ராபிக் என மக்கள் அலட்டிக்கொள்வார்கள். அங்கே காரை ஒரு செகண்ட் ஒட்டவிட்டு லைசன்ஸ் இல்லை என்பார்கள். நன்றாக ஒட்டி விட்டால் மதம் சொல்லி இல்லை என்பார்கள். நான் சொல்வது உண்மையா இல்லையா என்று அங்கே சென்று விசாரிக்கவும்.
அவ்வளவு தூரம் பயணம் செய்ய மனமில்லை என்றால் அபுதாபியில் சாலாம் தெருவில் உள்ள அல் பிர்தௌஸ் டவர் என்ற கட்டிடம் அருகில் மதியம் 3.30 முதல் 4 மணிக்குள் செல்லவும். அங்கே கம்பெனி பஸ்ஸிற்காக சில பேர் காத்திருப்பார்கள். அதில் ஒரு தமிழர் நிச்சயமாக இருப்பார். அவரிடம் என்னுடைய அனுபவத்தை சொல்லி இதுபோல் நடக்குமா என கேட்டு தெளிவடையவும்
ஆயுத பூசைக்குக்கும் ஆப்பு வைத்து விடலாம் புலமாடன்.
இதை நீங்களும் நானும் மட்டும்தான் செய்வோம் மற்றவர்கள்?
// பேரீச்சம் பழமும் தண்ணீரும் தந்தார்கள் சரி மாதாமாதம் சம்பள்மும் வருடமானால் பிளேன் டிக்கட்டும் தந்தார்களா?//
சிவா!
என்னுடைய பின்னூட்டத்தை முதலில் பொறுமையாகப் படித்து பதில் தாருங்கள். நீங்கள் பொறுமையின்றி, நான் சொன்ன விஷயத்தை கவனிக்காமல் பதில் எழுதுவதிலிருந்தே "காழ்ப்புணர்ச்சி" வெளிப்படுகிறது என்பது புரியவில்லையா?
நான் சொன்னது, 'பாலைவனத்தில் வாழும் அரபிகள் தண்ணீரும் பேரீச்சம் பழமும் தருவது' குறித்து.'பழம்' தந்தவனிடம் போய்ச் சம்'பளம்' கேட்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை.
//செய்ப் என்ற பன்னாடையும் முபாரக் என்ற குரங்கும் //
நல்ல பண்பான வார்த்தையில் சொல்வதில் இருந்து லைஸென்ஸ் கிடைக்காத வயிற்றெரிசலே வெளிப்படுகிறது.
//அவர்கள் லைசன்ஸ் வாங்க பட்ட பாட்டை அவர்களிடம் கேட்டீர்களா?//
கேட்டு, நமக்கும் லைஸென்ஸ் கிடைக்காதா என்று ஏங்கியதுண்டு. ஏனெனில் இரண்டாவது மூன்றாவது டெஸ்டுகளில் லைஸென்ஸ் கிடைத்தவர்கள் சந்தோசத்தோடு சொல்வது நமக்கும் ஆசையைத் தூண்டும்.
//அபுதாபி இருந்து 250 கிமீ தொலைவில் ருவைஸ் என்ற குக்கிராமம் உள்ளது. அங்கே தான் நான் வசித்தேன்//
குக்கிராம அனுபவம் மட்டுமே அரேபிய அனுபவம் ஆகுமா?
//ஆயுத பூசைக்குக்கும் ஆப்பு வைத்து விடலாம் புலமாடன்.
இதை நீங்களும் நானும் மட்டும்தான் செய்வோம் மற்றவர்கள்? //
நமது சர்ச்சை விஷயமே "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று நீங்கள் சொன்னதால் தான்.
எனவே அரசுதான் அரசு அலுவலகங்களில் ஆயுத பூசைக்கு ஆப்பு வைக்க வேண்டும். நீங்களும் நானும் ஒன்றும் செய்ய முடியாது.
//நல்ல பண்பான வார்த்தையில் சொல்வதில் இருந்து லைஸென்ஸ் கிடைக்காத வயிற்றெரிசலே வெளிப்படுகிறது.
//
வலைப்பதிவிற்கு நீங்க புதியவரா? வெய்ட் அண்ட் சீ
நானும் பண்பாடுதான் எழுதினேன். டமிளர்கள் என்னை திட்டியதில் இதுதான் பண்பான வார்த்தைகள். மற்றவை அசிங்கத்தின் உச்சம்.
லைசன்ஸ் கிடைக்காத எரிச்சல்தான் நிச்சயமாக. அதுவும் மதம் என்ற பெயரால்.
அப்பா என் குக்கிராம அனுபவம்தான் அரேபிய அனுபவமா என அறிவுத்தனமாக கேட்கும் புலமாடரே, என் நகர வாழ்க்கையை பார்க்கவில்லை போலிருக்கிறது.
நகரத்தில் அரேபியர்கள் இல்லை வந்தேறிகள் தான் மெஜாரிட்டி. குக்கிராமங்களில் அவர்கள் மெஜாரிட்டி அதனால் என் அனுபவம்தான் உண்மையான அரேபிய அனுபவங்கள்.
ஆயுத பூசைக்கு ஆப்பு வைத்துவிட்டு அதே சட்டத்தால் மசூதி நாய்ஸ்க்குக்கும்(Noise) ஆப்பு வைக்க வேண்டும்
மீண்டும் பொறுமையின்மையே உங்களிடமிருந்து வெளிப்படுகிறது.
கோயில் நாய்ஸ், அய்யப்ப நாய்ஸ் மார்கழி மாத நாய்ஸ் உட்பட அத்தனை நாய்ஸையும்தான் முன்னரே நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள். அதனை நான் ஒப்புக் கொண்டபின் மீண்டும் உங்கள் நாய்ஸ்(Noise) அதே விஷயத்தில் வருகிறதென்றால்...
பொறுமையில்லை அதனால் ஆத்திரம் வருகிறது.
புலமாடரே, அந்த நாய்ஸை வசதியாக மறந்துவிடுவீர்களோ என அவசரப்பட்டு விட்டேன். மறக்கவில்லை என்றால் சரி. எனக்கு அவ்வளவாக கோபம் வராது சார். அதிகமாக எருமை கறிசாப்பிடுவதால் வந்த விளைவு
Post a Comment