எல்லாரும் வலைப்பதிவில் காமிரா வாங்குறாங்க என் பங்ககுக்கு நானும் கைக்கு அடக்கமா ஒரு காமிரா வாங்கினேன் அதில் என் வீட்டு வானவில்
அவ்வளவு சின்ன காமிராவில் இந்த புகைப் படம் ஓகே இல்லையா?
தமிழ்லே எழுத ஆரம்பிச்சபிறக்கு அப்பப்போ வானம், மேகம், வானவில் , நதி போன்றவை அழகாக தெரிகின்றன. பயம் வேண்டாம் கவிஜ எனக்கு வராது
நம்ம கால்கரியின் வைகை அல்லது காவிரி அல்லது கங்கை, இந்த நதியின் பேர் வில் நதி (Bow River)
Sunday, August 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அமெரிக்கா போலவே கனடாவும் இருக்கே?வீடுகள் கூட எங்க தெரு மாதிரி தான் இருக்கு.ஒரு வித்யாசமும் தெரியலை.
செல்வன்,
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை.
அது சரி வானவில் பற்றி கமெண்ட் இல்லியா? அல்லது உ.கு வா?
ஸ்ப்ரிங்க்ளர் வானவில் நல்லாதான் இருக்கு. எத்தனையோ முறை இதை நம்ம வீட்டுலே பார்த்தும்கூட,
இப்படிப் படம் எடுக்கற ஐடியா எனக்குத் தோணவே இல்லை பாருங்க.
அந்த வில் ரிவர் அருமை. 'நல்ல கேமரா'தான்.
வானவில்லில் என்ன உ.கு வைக்க முடியும்?:)))
என்கிட்ட சுத்தமா இல்லாத ஒண்ணு இந்த கலையை ரசிக்கும் தன்மை.அதான் வானவில்லை விட்டுட்டு ரோட்டை பாத்துட்டு இருந்திருக்கேன்..ஹி..ஹி.
ஒளிக்கற்றைகள் தண்ணீர் வழியே பாயும்போது நிறப்பிரிகை ஏற்பட்டு 7 வண்ணமாக பிரிவதுதான் வானவில்.தற்செயலாக தோட்டத்தில் அது ஏற்பட்டு படம் பிடித்திருக்கிறீர்கள்.நல்லாருக்கு
தலப்பை பார்த்து ஏதோ குழந்தைப்படம் இருக்கும் என் நினைத்தேன்.
பரவாயில்லை வானவில்(குட்டி) நன்றாகத்தான் வந்துள்ளது.
என்ன கேமரா என்று சொல்லவில்லையே??
இந்த காமிரா தாங்க
சிவா நல்லா இருக்கு உங்க வானவில்
என் வானவில்லையும் நான் சீக்கிரம் என் பதிவுல் போடுறேன்.
நானும் சோனி குடும்பம் தான். நம்ம கிட்ட இருப்பது 7.2 mega pix than
:(
வடுவூர் குமார், எங்கள் வீட்டில் ஒரு குழந்தை வர சில வருடங்கள் ஆகலாம். என் மகனுக்கு 16வயது தான். அவன் திருமணதிற்கு இன்னும் நாள் இருக்கிறது
வானவில்லையே வீட்டுக்கு வரவழைத்த கால்கரியாருக்கு வாழ்த்துக்கள்.
:)
சிறில் நன்றி
வானவில் படம் எல்லாம் நல்லா தான் இருக்கு...
ஆனா பல 'கலர்' படம் காட்டினவரு இப்படி ஏழே கலர்ல படம் காட்டினா நல்லாவா இருக்கு? ;)
கப்பி, அடுத்த பயணம் நயாகராவை நோக்கி அங்கே கலர்கள் கிடைத்தால் படம் எடுத்து உங்கள் ஆசையை நிவர்த்தி செய்கிறேன். நீங்கள் நம்ம TCE ஜூனியர்
Post a Comment