துபாய் வாசி சுட்டார் அதனைக் காண இங்கே.
அதனைக் கண்டு நானும் ஆறு தோட்டாகளை என்னுடைய ரிவால்வாரில் வைத்து சுட்டேன்.
வாருங்கள் வலை நண்பர்களே சுடுங்கள்..
Wednesday, August 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்
28 comments:
இப்படிச் சுட சுட நீங்களும் சுடுவீர்கள் எனத் தெரியாது சிவா!
அப்படியே நீங்க சுடறது என்னன்னு சொல்லீட்டிங்கன்னா நல்லாருக்குமே (பஜ்ஜி மாதிரி தான் இருக்கு?).
துபாய்லே பஜ்ஜியே க்ரில் பண்ணுவாங்களா?
நீங்க தற்காலிக பிரம்மசாரி தான் பஜ்ஜியே எண்ணையில் இடணும் சாமி,
கோழியைதான் நெருப்பில் வாட்டணும்
பார்பெக்யூ தானே இது?
இங்கே இது ஒரு கலாச்சாரம் சிவா.நீச்சல் குளத்தின் அருகே ஞாயிறன்று மாலை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்பெக்யூ சாப்பிட்டு,பியானோ அல்லது வயலின் வாசித்தபடி பசும்பழம்,அரசமீனவன் வகையறாக்களை ஒரு கை பார்ப்பது இந்த ஊர் கலாச்சாரம்.
ஒரே கலக்கலா இருக்கும்.
செல்வன், ரொம்ப சரி.
Bar-be-que, Lawn Mower, Springler, Snow Shovel இவையெல்லாம் அத்தியாவசிய தேவைகள் இங்கே.
அதுவும் இறைச்சியை வாட்டுவது குடும்ப தலைவரின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. எனக்கு வீட்டில் ப்ரச்னையில்லை அவங்க சுத்த சைவம் நாங்க சுத்த அசைவம்
சிவா,
இது எல்லாம் ரொம்ப ஓவரு நானும் என்னமோ ஏதோன்னு வந்தேன். அல்லாரும் இப்படி கடிக்கிறாங்கப்பா தாங்க முடியலை ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//Bar-be-que, Lawn Mower, Springler, Snow Shovel இவையெல்லாம் அத்தியாவசிய தேவைகள் இங்கே.//
உண்மைதான்.ஞாயிறு மதியம் சட்டை போடாமல் பெர்முடா போட்டுக்கொண்டு லான் மூவின்க் செய்வது ஒரு சம்பிரதாயம்.
நாம் லான் மூவ் செய்யா விட்டால் நைசாக வந்து "உடம்பு சரியில்லையா" என கேட்பார்கள்.:)))
நான் வெளியூர் போய்விட்டு 3 வாரம் கழித்து வந்தேன்.வந்து பார்த்தால் பக்கத்து விட்டூக்காரர் என் வீட்டில் லான் மூவிங் செய்துகொண்டிருக்கிறார்.என் வீட்டு புல் அசிங்கமாக வளர்ந்தால் அவர் வீட்டுக்கு அழகு கெடும் என பயம் அவருக்கு:)))))
செல்வன், நான் நம் கலாசரப் படி லுங்கியை மடித்துக் கட்டி சட்டையில்லாமல் தான் நான் இந்த வேலைகளை செயவேன். சில விநோத பார்வைகளயும் என் மகனின் கண்டிப்பையும் கண்டுக்கொள்வதில்லை
சந்தோஷ், கால்கரிக்கு வாங்க நல்லா கடிச்சிட்டு போகலாம்
சிவா சார்,
வெறும் சைட் டிஷ் மட்டும்தான் இருக்கு? மெயின் மேட்டர் எங்க? இது வார இறுதி கூட இல்லையே ?
அப்புறம் இந்த கிரில் கரி போட்டு எரிக்குறதா இல்ல கேஸ்ல பண்ணுறத?
துபாய்வாசி
இத பாத்த உங்களுக்கு பஜ்ஜி மாதிரி தெரியுதா என்ன :-)))))))))))))
கார்த்திக், சமீபத்தில் எனக்கு நட்ந்த பிள்ட் டெஸ்டில் டாக்டர்கள் ஆச்சரியம் படும் படி என்னுடைய ட்ரைகிளிசரைட்ஸ் ஏறியிருந்தது. அதனால் மெயின் மே(வா)ட்டர் கட் ஒன்லி சைட் டிஷ் . பெக்-எக்-லெக் (Peg-Egg-Leg) இல் முதல் இரண்டும் அவுட். லெக்கில் அதிக ப்ரோட்டீன் இருக்கிறதாம் அதனால் வாரம் முழுவதும் புரோட்டீனை சாப்பிட்டு நலமாக வாழ முயல்கிறேன்
கிரில் காஸ்தான் . கரியில் தான் நல்ல சுவை வரும். அந்த ப்ளேவர் வர கரிபோல் இருக்கும் செராமிக் ப்ளாக்குகள் போட்டுள்ளேன்
சிவா உங்க கிரில் வித்தியாசமாக இருக்கு. எங்க வீட்டில காஸ் அடுப்புக்குக் கீழேயே ஓவனும், கிரில்லும் இணைந்த அடுப்பு இருக்கிறது.
நான் கோழிக்கால்(தோல் உரித்து ஆங்காங்கே கத்தியால் ஆழகாக கீரிவிட்டவும்), சக்தி தந்தூரிமசாலா, சில்லி சிக்கன் மசாலா, கொஞ்சம் தயிர் முட்டை வெள்ளைக்கரு கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற நன்கு வைத்து விடுவேன்.
பின்னர் கிரில்லில் போட்டு எடுத்தால் சுவை நன்கு இருக்கும். அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.
சிவா
//தோல் உரித்து ஆங்காங்கே கத்தியால் ஆழகாக கீரிவிட்டவும்//
தோல் உரித்து ஆங்காங்கே கத்தியால் ஆழமாக கீரிவிட்டவும்
அப்பாடா எழுத்துப்பிழையார் வருவதற்குள் மாற்றியாகிவிட்டது.
மகேஸ், நான் படத்தில் காட்டியுள்ளது outdoor Bar-B-Que. நீங்கள் சொல்வது வீட்டில் உள்ளே இருப்பது. அது குளிர்காலத்தில் உபயோகமாகும்.
அட உங்க ரெசிபி ஈசியாக் இருக்கே.
நான் செய்வது, மிளக்கய்தூள், உப்பு, மஞ்சள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோய் சாஸ், தயிர் இல்லையென்றால் லெமன் சூஸ் இதில் கோழியை சுமார் 12 மணிநேரம் ப்ர்ட்ஜில் ஊறவிட்டு க்ரீல் செய்ய வேண்டும். கோழியை கீறினால் மசாலா சரியாக பரவாது என சர்தார்ஜி நண்பர் சொன்னார்.
அடுத்து உங்க மெத்தட் தான்.
இதெல்லாம் வெளியே சொல்லாதீங்க உங்க காய்கறி வியாபாரம் படுத்துறும் ஹி..ஹி.. )))
நான் வந்தா மட்டும் சைவ வெள்ளி அது இதுன்னு படம் காமிச்சுட்டு, இப்போ இப்படியா?
ரொம்ப தெனாவட்டா ரெண்டு ரம் பதிவு போட்ட போதே நினைச்சேன், வீட்டில் அண்ணனுக்கு ஆப்பு அப்படின்னு. அதுக்கு நைஸா டாக்டர் சொன்னதா ஒரு ஐடியா பண்ணிட்டீங்களாக்கும்.
நல்லா இருங்க சாமி.
நான் காரம் விரும்பிச் சாப்பிடுவேன். எனவே நாம் சொன்ன ரெஸிபி காரமாக இருக்கும். சில்லி சிக்கன் மசாலாத்தூள் கொஞ்சமாகச் சேர்த்தால் காரம் குறைவாக இருக்கும்.
மேலும் தேவையான அளவு உப்பு சேர்க்க்க மறக்காதீர்கள்.
நான் கிரில்லில் பாயிண்ட் ஆறில் சுமார் 40 நிமிடங்கள் வைப்பேன்.
BBQ வில் கோழியில் இருக்கும் கொழுப்பு வெளியேறிவிடும். அதனால் நான் ஒரே நேரத்தில் 10 கோழி கால்கள் கூடச் சாப்பிடுவேன்.
நானும் "சுத்த அசைவம்" தான்.
காய்கறிக்கடை வைத்திருந்தாலும், மாடு, பன்றி தவிர சந்தர்ப்பம் கிடைத்தால் அனைத்தையும் சாப்பிடத் தயாராக இருக்கேன்.
லண்டன் சைனா டவுனில் சீன நண்பருடன் போய் தவளைக்கால் சாப்பிட்டு இருக்கேன். பாம்புக்கறி கேட்டேன் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
முயல், புறா, காடை இவைகள் எல்லாம் என் ஹிட் லிஸ்ட்.
//பெக்-எக்-லெக் (Peg-Egg-Leg) இல்
வார இறுதி வாழ்க்கையின் தத்துவத்தை என் போன்ற எளியவனும் புரிந்துகொள்ளும்படி எடுத்துரைத்த வள்ளல் வாழ்க வாழ்க
//அதனால் வாரம் முழுவதும் புரோட்டீனை சாப்பிட்டு நலமாக வாழ முயல்கிறேன்
பலே ! பலே!
//சமீபத்தில் எனக்கு நட்ந்த பிள்ட் டெஸ்டில் டாக்டர்கள் ஆச்சரியம் படும் படி என்னுடைய ட்ரைகிளிசரைட்ஸ் ஏறியிருந்தது.
சீக்கிரமே எல்லா நலமும் பெற்று, வழக்கம் போல் வார இறுதி வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.
அப்புறம் என்ன சோம பானங்களும் சுரா பானங்களும் மோதிகொள்ளட்டும்.
//அந்த ப்ளேவர் வர கரிபோல் இருக்கும் செராமிக் ப்ளாக்குகள் போட்டுள்ளேன்
கண்டேன் அந்த கரு நிறத்து அழகியை படத்தில் :-)
//கரியில் தான் நல்ல சுவை வரும்.
முற்றிலும் மறுக்க முடியாத உண்மை.
அடப்பாவி கொத்தனார், லெக்கெல்லாம் சாப்பிடும் பழக்கம் உண்டென்று சொல்லியிருந்தால் வெட்டியிருப்பேனே.
நீர்தான் முட்டை மட்டும் சாப்பிடும் எஜிடேரியன் ஆச்சே அப்புறம் எதுக்கு சார் லெக்
மகேஸ், முடிந்தால் சிங்கப்பூர் பக்கம் ஒரு முறை போய்வாருங்கள் நீங்கள் கேட்டவை அனத்தும் கிடைக்கும்.
அங்கே நானும் தவளைக் கால், ஆக்டோபஸ் போன்றவைகளை சாப்பிட்டுள்ளேன். பாம்பு கொஞ்சம் பேஜார் தான்
முயல் பாவம் சார்
புறா, காடை இவைகளை மதுரையில் சாப்பிடுள்ளேன்
கார்த்திக் எனக்கு பி ஈ எல் தத்துவத்தை தந்தது என் பழைய பாஸ்
calgary,
பார்பிக்யூ செய்வதில் தனி மகிழ்ச்சியே...அதுவும்...Camp fire கடலோரத்து Beach ல் என்றால் ஒரு தனி சுகமே...
கடைசியில் Marsh mellows !! ஆகா...!!
//பி ஈ எல் தத்துவத்தை தந்தது என் பழைய பாஸ்//
அரேபிய பாஸா?! ஹிஹி
மாயவரத்தான், நம்மூர் பாஸ்தான் இன்னும் அரேபியாவில்தான் இருக்கிறார். அவர் சென்னையில் ஒரு வி ஐ பி!!!
வஜ்ரா, மார்ஷ் மெல்லோ குழந்தைகள் அய்ட்டம் ஆயிற்றே
மகேஸ்,
>>> .... தோல் உரித்து ஆங்காங்கே கத்தியால் ஆழமாக கீரிவிட்டவும்
அப்பாடா எழுத்துப்பிழையார் வருவதற்குள் மாற்றியாகிவிட்டது.
<<<<
அவர் வரத் தாமதமானால் என்ன? தாங்கள் சரி செய்ததிலும் தவறு கண்டுபிடித்துப் பாராட்டு வாங்கும் மதுரைப் புலவன் நானிருக்கிறேனே !
தவறு: தோல் உரித்து ஆங்காங்கே கத்தியால் ஆழமாக கீரிவிட்டவும்.
சரி: தோல் உரித்து ஆங்காங்கே கத்தியால் ஆழமாக கீறிவிடவும்.
புதிய் விதிகளை எல்லாம் செய்யாதீர்கள் கால்கரியாரே...குழந்தைகள் ஐட்டம் என்றெல்லாம் இல்லை. பெரியவர்கள் ஐட்டம் என்று தான் இருக்கின்றது...
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய ஐட்டம் இருக்கு. ஆனால் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று ஒன்றும் மார்ஷ்மெல்லோ பாக்கெட்டில் எழுதவில்லை. :D
சுட்டு விட்டீர்கள் சரி.யார் சாப்பிடுவதாம்..? :)
நிலவு நண்பன், வாங்க சார் சேர்ந்து சாப்பிடுவோம்.
Post a Comment