மும்பை குண்டுவெடிப்பு பற்றி இப்பூவுலகின் சுவனமாகிய சவூதியில் அமர்ந்து கொண்டு சுவனப்ரியன் ஒரு புலனாய்வை நடத்தினார்.
Process of Elimination என்ற வகையில் என்ன மோடிவ் ஆக இருக்கும் என ஆராய்கிறார்.
அந்த மோடிவைப் பற்றிதான் என் கேள்விகள். முதலில் அவருடைய பதிவில் வந்த வாசகங்கள் இங்கே
ஒனறை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது குண்டு வைத்து இந்தியாவை பிரச்னைக்குள்ளாக்க முஸ்லிம்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? அவர்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கும் காங்கிரஸ் ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது. சமீபகாலமாக எந்த கலவரங்களும் நடைபெறவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அவசியம் என்று அரசும் சிந்திக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் எந்த முஸ்லிமாவது இது போன்று அதுவும் அப்பாவிகளை இலக்காக்கி குண்டு வைப்பதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? இதை எல்லாம் விரும்பாத இந்துத்வவாதிகளின் காரியமாகக் கூட இருக்கலாமே என்ற ரீதியில் ஏன் போலீஸ் சிந்திக்க மறுக்கிறது?
ஒனறை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது குண்டு வைத்து இந்தியாவை பிரச்னைக்குள்ளாக்க முஸ்லிம்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது?
இந்தியா வேறு இந்திய முஸ்லிம்கள் வேறா?அவசியம் வந்தால் குண்டு வைக்கலாமா?
அவர்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கும் காங்கிரஸ் ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது.
பாதுகாப்பு இல்லை என முஸ்லிம் நினைத்தால் குண்டு வைப்பது நியாயமா?
சமீபகாலமாக எந்த கலவரங்களும் நடைபெறவில்லை.
வடக்கே ஒரு மசூதியை இடித்தால் மேற்கே குண்டு வைப்பது சரியா?
முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அவசியம் என்று அரசும் சிந்திக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் எந்த முஸ்லிமாவது இது போன்று அதுவும் அப்பாவிகளை இலக்காக்கி குண்டு வைப்பதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது?
இட ஒதுக்கீடு தராவிட்டால் குண்டு வைத்து அப்பாவிகளை கொல்ல அவசியம் வருமா?
இதை எல்லாம் விரும்பாத இந்துத்வவாதிகளின் காரியமாகக் கூட இருக்கலாமே என்ற ரீதியில் ஏன் போலீஸ் சிந்திக்க மறுக்கிறது?
எத்தனை இந்துத்வா வாதிகளுடன் உறவாடியிருக்கிறீர்கள் அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிவதற்கு அல்லது தாங்கள் புலனாய்வு துறையில் நிபுணத்துவம் பெற்றவரா போலீஸ் எப்படி சிந்திக்க வேண்டுமென யோசனை சொல்வதற்கு
ஐயா முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அந்த விசாரணைக் கமிஷனைப் புகழ்வதும் பாதகமாக தீர்ப்பு வரும்போது அவர்களை நிந்திப்பதும் ஏனோ?
Wednesday, August 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சிவா,
கேள்வி கேக்குறது சுலபம். பதில் சொல்றது கஷ்டம் படிக்கிற காலத்துல இது கூட கத்துகலையா நீங்க. :)) என்ன ஒரு பின்னூட்டத்தை கூட காணோம் போடறமாதிரி எதும் இல்லையோ விடுங்க பொது வாழ்கையில இது எல்லாம் ஜகஜம்.
வாழ்க சனநாயகம்!!!!
வியாபாரி சார் . மிக்க நன்றி.
அவர் கருத்து சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. அதில் தவறே இல்லை. அவர் சொன்ன விதம் என்னை சிறிது விசனபடுத்தி விட்டது. என்னை விசனப் படுத்திய வார்த்தைகள் "இந்தியாவை பிரச்னைக்குள்ளாக்க முஸ்லிம்களுக்கு " இவைதான். இந்த வார்த்தைகள் என்னை சூரீர் என தைத்தது. அவர் இந்தியா வேறு இந்திய முஸ்லிம்கள் வேறு என நினைப்பது போல் எனக்கு பட்டது/படுகிறது. நான் இந்திய முஸ்லிம்கள் வேறு இந்தியர்கள் வேறு நினக்கவில்லை. அதன் விளைவே இந்த கேள்விகள்
Post a Comment