என்னை ஜோக்கர் என்றும் ஈவெராவை தெய்வமென்றும் சொல்லிக் கொண்டு நாலு புக்குகளை படித்து அறிவுசீவி ஆன விடாது கருப்பு அவர்களும்,
ஒரே ஒரு புக்கை மட்டும் கையில் வைத்துக் கொண்டு இறைவனையே டாவடிக்கும் இறைநேசன் அவர்களும்
என்னையும் மேலும் பார்பணர்கள் என அறிய்படும் மனிதர்களையும் வந்தேறிகள் வ்ந்தேறிகள் என அடிக்கடி வலைப்பதிவில் திட்டுவார்கள்.
அட நமக்குத்தான் அறிவே இல்லையே இந்த மகான்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ என சிலசமயம் நான் நினைப்பதுண்டு. இந்த ஆரியர்கள் வந்து ஏறியது 10000 வருடங்களுக்கு முன் அல்லவா? அப்படியென்றால் என் வயதென்ன 10045 ஆ.. இவ்வள்வு வருடங்கள் வந்தேறி உயிர் வாழ்கின்றேனா? இந்தியாவில் சட்டவிரோதமாகவா இவ்வளவு வருடங்க்கள் வாழ்ந்துவிட்டேன்? . இன்னும் 10000 வருடங்கள் இந்திய சிறையில் கழிக்க வேண்டுமா என பயம் வயிற்றை கவ்வி.. இந்திய குடியேற்ற உரிமை என்ன வென்று பார்த்தேன்.
சட்டம் இதை தான் சொல்கிறது:
1. 26 ஜனவரி 1950 அன்றோ அதற்க்கு பின்னோ ஆனால் 1 ஜூலை 1987 முன்னால் இந்தியாவில் பிறந்திருந்தால் பெற்றோர்கள் இந்தியர்களாக இல்லாமல் இருந்தால் கூட அவர் இந்தியரே
2. 1 ஜுலை 1987 லிருந்து 3 டிசம்பர் 2004 க்குள் இந்தியாவில் பிறந்து பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருந்தாலும் அவர் இந்தியரே
3. 3 டிசம்பர் 2004 க்கு பின் இந்தியாவில் பிறந்தது பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருந்து மற்றவர் சட்டவிரோதமாக வ்ந்தேறியாக இல்லாதவரக இருந்தால் அவர் இந்தியரே.
மேலும் பார்க்க நான் மேலே கொடுத்த சுட்டி.
ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் சட்டபடி விசா வாங்கி 12 வருடங்கள் வாழ்ந்தால் அவரும் இந்திய குடியேற்ற உரிமை பெறமுடியும்.
ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற்று தேர்தலில் நின்று பிரதமர் ஆக முடியுமா?
முடியும்.
அவர் பிறந்த நாட்டில் அதே சட்டமிருந்தால்.
இத்தாலியில் ஒரு குடியேற்ற உரிமை பெற்ற வெளிநாட்டவர் அமைச்சர் பதவிகளை பெற முடியாது. அதனால் தான் சோனியா காந்தி அம்மையார் இந்திய பிரதமர் ஆக முடியவில்லை. அவர் தியாகம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை
அமெரிக்காவில், இங்கிலாந்தில், சிங்கபூரில், கனடாவில், பெருவில் குடியேற்ற உரிமை பெற்ற வெளிநாட்டவர் அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர் / இருக்கின்றனர்
மேலே உள்ளது நம்ம ஆர்னால்டு. இவர் கலிபோர்னியாவின் கலைஞர். ஆமாங்க முதல்வர் அங்கே முதல்வரை கவர்னர் என்றழைப்பர்
இவர் பெருவின் முன்னால் அதிபர் பிஜிமோரி. ஜப்பானிய பெற்றோருக்கு பெருவில் பிறந்தவர். இவர் உழல் செய்து பக்கத்த்து நாடான சிலியில் தலைமறைவாக வாழ்கிறார். (என்ன பெருசு இவரை பிடிச்சாங்களா?)
இவர் முன்னாள் கனேடிய அன்புமணி அதாவது ஹெல்த் அமைச்சர். இவர் பெயர் உஜ்ஜால். இவர் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி பிறகு கனடாவில் செட்டிலானவர்
ஆகவே மெத்த படித்த மே(ல்)தாவிகளே வந்தேறி என்ற வார்த்தை பக்கத்து நாட்டிலிருந்து கள்ளதனமாக வந்து குண்டு வைக்கிறார்களே அவர்களுக்கு தான் பொருந்தும் எங்களுக்கு அல்ல.
எங்களை திட்ட வேறு வார்த்தைகள் இருக்கிறதா என் உங்கள் புத்தகங்களில் தேடுங்கள்.
Wednesday, August 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
59 comments:
//இவர் முன்னாள் கனேடிய அன்புமணி அதாவது ஹெல்த் அமைச்சர். இவர் பெயர் உஜ்ஜால். இவர் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி பிறகு கனடாவில் செட்டிலானவர்//
இவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்[NDP கட்சியில் இருந்த போது]
கனடாவில் வெள்ளையரற்ற ஒரே ஒருவர் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த பெருமை இவரைச் சாரும். பின்னர் NDP கட்சியிலிருந்து லிபரல் கட்சியில் இணைந்து சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தார்.
//மேலே உள்ளது நம்ம ஆர்னால்டு. இவர் கலிபோர்னியாவின் கலைஞர். ஆமாங்க முதல்வர் அங்கே முதல்வரை கவர்னர் என்றழைப்பர்//
ஆர்னல்டு அவர்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் படி, அமெரிக்காவில் பிறக்காதவர் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
அட...சட்டமெல்லாம் பேசிட்டீங்க.
நல்ல பதிலடி..
ஒரு சுதந்திர நாட்டில் இருந்துவிட்டு வந்தேறிகள் எனச் சொல்லிக்கொண்டிருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிரது. யாரோ பதிவில் கேட்டிருந்தார்கள், வெறும் வந்தேறிகளிடம் ஏமாறும் அளவுக்கு நம் முன்னோர்கள் முட்டாள்களாயிருந்திருக்கிறார்களா என்று.
வந்தேறுவதும், கொன்ரேறுவதும் எல்லாம் மன்னர் ஆட்சிக் காலத்திலே நடந்துகொண்டிருந்தது. இந்தியா என்று (இன்று இருக்கும் நிலையில்) ஒரு ஒற்றை நாடு இருந்திருக்கவில்லையே.
நமக்குப் புரியல. இதுக்குத்தான் புத்தகங்கள வாங்கிப் படிக்கணுங்கிறது வெறும் சட்டம் படிச்சா போதுமா?
;)
Pedro Pablo Kuczynski
பெருவின் முன்னாள் நிதி மந்திரி. போலந்து பெற்றோர்களுக்கு பிறந்து
அமெரிக்காவின் குடியேற்ற உரிமை பெற்றவர்.
Eliane Karp
பெருவின் முன்னாள் முதல் பெண்மணீ, அதாவது ஜனாதிபதியின் மனைவி.
பெல்ஜியம் குடிமகள்.
Del Pilar
பெருவின் இன்னாள் முதல் பெண்மணி, அர்ஜெண்டினா குடிமகள்.
இன்னமும் லிஸ்ட் போட்டால் நீண்டு கொண்டே செல்லும்.
அட..சில நாதாரிகள் உளறுவதற்கெல்லாம் வேலை மெனக்கெட்டு பதிவெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறீர்களே?!
//பக்கத்து நாட்டிலிருந்து கள்ளதனமாக வந்து குண்டு வைக்கிறார்களே அவர்களுக்கு தான் பொருந்தும் எங்களுக்கு அல்ல//
அதற்கு மறைமுகமாக சப்போர்ட் செய்யும் கபோதிகளுக்கு என்ன பேர்?!
ஆளும் வளரனும் அறிவும் வளரனும்
அதுதாண்டா வளர்ச்சி!
ஒன்னும் இல்லே... பாடல்!!!
சரி என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கோ..
//1. 26 ஜனவரி 1950 அன்றோ அதற்க்கு பின்னோ ஆனால் 1 ஜூலை 1987 முன்னால் இந்தியாவில் பிறந்திருந்தால் பெற்றோர்கள் இந்தியர்களாக இல்லாமல் இருந்தால் கூட அவர் இந்தியரே//
அப்போ 25 ஜனவரி 1950ல் பிறந்து இருந்தால் அவர் இந்தியர் இல்லையா? என்ன கொடுமைங்க இது?
//2. 1 ஜுலை 1987 லிருந்து 3 டிசம்பர் 2004 க்குள் இந்தியாவில் பிறந்து பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருந்தாலும் அவர் இந்தியரே//
4டிசம்பர் 2004ல் பிறந்தால் அவர் இஸ்ரவேலரா?
//3. 3 டிசம்பர் 2004 க்கு பின் இந்தியாவில் பிறந்தது பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருந்து மற்றவர் சட்டவிரோதமாக வந்தேறியாக இல்லாதவரக இருந்தால் அவர் இந்தியரே.//
பெற்றோர் இரண்டு பேருமே இந்தியராக இருந்தால்?
1045 வருடமா? கொஞ்சமாச்சும் மூளைய ஊஸ் பன்னுங்க கால்கரி. பொழைக்க வந்த பாட்டம், முப்பாட்டன், ஆயிரம் பாட்டன் கணக்கை எல்லாமா சேத்துப்பாங்க?
நான் முதற்பிறவியில் சிகாகோவில் இருந்தேன் விவேகாந்தர் தங்கியிருந்து இடத்துக்குப் பக்கத்தில் இன்று நான் தமிழகத்தில் இருக்கிறேன் நான் வந்தேறியா?
"அதற்கு மறைமுகமாக சப்போர்ட் செய்யும் கபோதிகளுக்கு என்ன பேர்?!"
தேசத் துரோகிகள், உண்ட வீட்டில் இரண்டகம் நினைப்பவர்கள், இழி பிறவிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எப்படியோ திராவிடஸ்தானில் நீங்கள் வந்தேறி குடிகள் தானே?:-D//
பிடில் உடம்பு எப்படி ஆபரேஷன் எல்லாம் முடிந்ததா?
திராவிடஸ்தான் என வட மொழியில் சொன்னால் எப்படி? திராவிடஸ்தானம் என டம்ளில் சொல்லுங்க
வெற்றி தகவலுக்கு நன்றி காங்கிரஸ் அடிபொடிகளும் அவர்களை தாங்கும் திராவிட தலைவர்களுக்கும் விளங்கமால இருக்கும். தியாகம் அது கிது வென்று அறிவுள்ள டமிளர்களூக்கு டாக் ஷோ நடத்துறாங்களே
ஆளும் வளரனும் அறிவும் வளரனும்
அதுதாண்டா வளர்ச்சி
ஐயா உனக்க்கு நீயே சொல்லிக் கொள்ளா வேண்டியது
வெள்ளை தாடிகளின் வேஸ்ட்களை படித்தால் இந்த மாதிரி தான் கேள்விகளை கேட்க முடியும், நான் கொடுத்த சுட்டியை நல்லா படிச்சிட்டு வாப்பு
எனக்கும் என் கூட வந்த பாய்களூக்கும் அரேபிய நாய் பிச்சையா போட்டான் அவன் மேல் நன்றிகொள்ள.
வேலை வாங்கிட்டுதான்பு காசு கொடுத்தான்
சிறில், இவர்கள் எதோ திராவிடத்தின் ஏகபோக உரிமையாளர்கள் போல் பேச்சும் மற்றவர்களை அரட்டுவதும் கிண்டல் பண்ணுவதும் எரிச்சல் கொள்ள செய்கிறது. எல்லாம் செஞ்சிட்டு அதோ வந்தேறி ஆளாதிக்கம் செய்கிறான் என கூச்சல் கூப்பாடு. நல்ல டமிளர்கள் இவர்கள்
பெருசு, இந்த லிஸ்டுகளை பார்த்து தான் நான் பெருவை பற்றி அதிகம் படித்தது. அங்கேயும் நம்மாள் இருப்பதை பார்த்து மிக மகிழ்ச்சி. ஒரு டூர் அடிக்கவேண்டும்
மாயவரத்தான், ஆபிஸில் சற்று வேலைகம்மி அதுதான் சற்று உரசி பார்க்கிறேன்
//
இவர் முன்னாள் கனேடிய அன்புமணி அதாவது ஹெல்த் அமைச்சர். இவர் பெயர் உஜ்ஜால். இவர் இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி பிறகு கனடாவில் செட்டிலானவர்
//
நம்மாளுக அங்கே போயி பெரிய பதவி வகிக்கும்போது சோனியா காந்தி இங்கே பிரதமர் ஆக கூடாதுன்னு ஒரு கூட்டம் கும்மாளம் போடுதே மாமூ, அத பத்தி நீ ஒன்னும் சொல்ல மாட்டியா?
அட மருது மாமு சொல்லிருக்கேன் நல்லாபடி மாமு. அதுகுள்ளா அர்ஜெண்டா பின்னூட்டம் போட்டா என்ன அர்த்தம்
///1045 வருடமா? கொஞ்சமாச்சும் மூளைய ஊஸ் பன்னுங்க கால்கரி. பொழைக்க வந்த பாட்டம், முப்பாட்டன், ஆயிரம் பாட்டன் கணக்கை எல்லாமா சேத்துப்பாங்க? ///
அப்போ உன் பாட்டன் முப்பாட்டன் அவன் பாட்டன் இவர்களையெல்லாம் சேர்த்து ஒன்னே கருங்குரங்கு என சொல்லாமா?
//
அதனால் தான் சோனியா காந்தி அம்மையார் இந்திய பிரதமர் ஆக முடியவில்லை. அவர் தியாகம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை
//
சோனியா காந்தி அம்மையார் இந்திய பிரதமர் ஆக எந்த தடையும் இல்லை என்று உச்சநீதி மன்ற தீர்ப்பை மறைக்கலாமா மாமூ. வழக்கம் போல உன் சித்து வேலைய காட்டிட்ட
யார் வந்தேறிகள்?
பூர்விகக்குடிகள் தவிர்த்து எந்த ஒரு நாட்டிலும் புதிதாக் குடியேறியவர்கள் வந்தேறிகள்.
இந்தியாவின் பூர்விகக் குடிகள் யார் என்று கணித்துவிட்டாலே போதும் , மற்ற அனைவரும் வந்தேறிகள்தான்.
இன்னும் கிராமங்களில் "இது பொழைக்க வந்த ஊருங்க , எங்க சொந்த ஊரு இது இல்லை" என்று சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.
அமெரிக்காவில் யார் வந்தேறிகள் என்பது மிகத் தெளிவாக இருக்கும்.
சிவப்பிந்தியர்கள் -->பூர்வீகக்குடிகள்.
மற்ற அனைவரும் -->வந்தேறிகள்.
அமெரிக்கா குறைந்த அளவே வரலாறு கொண்ட நிலம்.எனவே இதனை என்னால் சொல்ல முடிகிறது.
இந்தியாவின் வரலாறு பல காலங்கள் கொண்டது.அதை சொல்வதில் பாகுபாடற்ற ஆராய்ச்சி தேவை.
நீங்கள்
-யார் குடிமகன்?
-யார் குடியுரிமை பெறலாம்?
-அரசியல் சாசனப்படி யார் பதவி வகிக்கலாம்?
என்பதை வந்தேறிகளுடன் குழப்பிக் கொண்டு உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
மற்றபடி x வந்தேறியா Y வந்தேறியா என்ற விவாதத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை. வந்தேறி என்றால் என்ன என்பதற்கு மட்டுமே எனது விளக்கம்.
If you visit Tamil Nadu you will understand that the majority hates Brahmins to the most using all sorts of verbal comments. Same time you will also note, if a Brahmin eats Non-Veg or Smokes or Speaks Vulgour the same people of Tamil Nadu does not accept that, and will warn the guy to behave like a Brahmin and maintain the respect of the community. This shows the people who hate, actually keeps high value for the community. The keep humble when they see a brahmin in the temple and gives all sort of respect.
The reason is, even though they are hated, they still pray for the people who hate them and do poojas for the same. So people love them. Brahmins never get provoked. They don't react but act.
மருது, இதே சுப்ரீம் கோர்ட் ஆட்சி மாறினால் தீர்ப்பையும் மாற்றும்.
ஒரு பக்கம் சட்டம்/போலீஸ் நீதியை நிலைநாட்டவில்லை (மும்பை குண்டு புலனாய்வில்) கதறல் மறுபக்கம் அப்பழக்கில்லாத சூப்ரீம் கோர்டே சோனிய பிரதமர் ஆகலாம் என சொல்லிவிட்டது என பெருமிதம்.
இதை ஏற்றால் அதையும் ஏற்க வேண்டும் அதை மறுத்தால் இதையும் மறுக்க வேண்டும்.
என்ன புரியுதா மருது
//இந்தியாவின் பூர்விகக் குடிகள் யார் என்று கணித்துவிட்டாலே போதும் , மற்ற அனைவரும் வந்தேறிகள்தான்.//.
கல்வெட்டு,
நீங்க சொல்ற நியாயம் புரியுது, ஆனா ரெம்ப பழைய லாஜிக் அது.
பூர்வீக மக்கள்னா எப்படி.. தரையிலேர்ந்து முளைத்து வந்தவர்களா? இல்லையே. இன்னைக்கும் தமிழ் நாட்டுக்குள்ளேயே பலரும் பல இடங்களுக்கும் போய் பிழைப்பு நடத்துகிறார்கள். அவர்களில் முதல் தலைமுரையை வேணும்னா நாமா வெளியூர்க் காரண்ணு சொல்லலாம் ஆனா அங்கேயே பிறந்து வளர்ந்த ஆட்கைளையுமா அப்படி சொல்வது?
கல்வெட்டு, தங்களின் விளக்கம் அருமை. ஆம் யார் பூர்வகுடிகள் என பாகுபாடற்ற ஆய்வு தேவை. அதை அறிந்து அதைப் பற்றி புத்தகங்களை நூல் நிலையத்தில் வைத்துப் படிக்கலாம்.
அந்த பூர்வகுடிகள் கல்விஅறிவிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியிருந்தால் அவர்களுக்கு சலுகைகள் தருவதும் சரியே.
ஆனால் யார் பூர்வகுடிகள் யார் பிந்தங்கியவர் என சலுகைகள் பெற அடிதடி அல்லவா நடக்கிறது.
பூர்வகுடிகளுக்கும் குடிமகன்களுக்கும் வித்தியாசம் தெரிந்தே எழுதினேன்.
ஒரு நாட்டின் மேல் உள்ள பற்று மற்றும் அந்த நாட்டின் வளர்ச்சி பணியில் பங்கு ஆகியவைகளில் பூர்வகுடிகளும் வந்தேறிகளும் சேர்ந்தே உழைக்கின்றனர்
பிடில் சார், நன்றி சார்
உங்களை போல சேகுவாரா, நீட்சே போன்ற வரலாற்று நாயகர்கள் வருவது எனக்கு பெருமை அளிக்கிறது :)
ஹோசூர், வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள். நன்றி
வாழ்க சனநாயகம்!!!
வர வர உங்க பதிவுகளளயும், பின்னூட்டங்களையும் பார்த்தால் இது தான் சட்னு தோணுது
நாகை சிவா, புரிகிறது நன்றாக புரிகிறது
ஆரியன் வந்தான்: எங்களை ஆண்டான் என்று சொல்லிக்கொண்டு தங்களையும் தங்கள் குலத்தையும், சமுதாயத்தையும் அவமானப்படுத்திக்கொள்ளும் இந்த வெட்கங்கெட்டவர்களை என்ன சொல்வது? பத்தாயிரமோ, பத்து லட்சமோ எத்தனை நடந்தது, எப்படி நடந்தது என்று இவர்கள் தனக்கு நடந்ததாக சொல்லும் ஒரு அவமானத்தை வெட்கமின்றி பெருமையாக வேறு பேசிக்கொண்டு தாங்கள் உணர்வற்ற வெற்று மானங்கெட்டவர்கள் என்று தினசரி அறிவிக்கிறார்களே! கடவுளை கும்பிடும் நீங்கள் காட்டுமிராண்டிகள் என்று ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் 95 சதவீதத்தை காட்டுமிராண்டிகளாக்கி அதை அவர்களின் சமுதாயத்தை வைத்தே பெறுமைப்பட செய்ய முடியுமானால், இந்த இவர்களின் மூடத்தனத்தை என்ன என்பது?
தன் சமுதாயத்தையும், முன்னோர்களையும் அவர்களின் வரலாற்றையும் அவமானமாக கருதும் இவர்கள் தேசத்தின் அவமான சின்னங்கள்...
நன்றி
சிவா அண்ணே...
தமிழில் வந்தேறின்னா = வந்து குடியேறியவங்கன்னு அர்த்தம். கபைர் போலன் கால்வாய் வழியா இந்தியாவுக்கு வந்த பார்ப்பான்கள் 'வந்தேறிகள்தான்' என்பதில் பூர்வீக திராவிடக் குடிகளுக்குள் ஐயமில்லை.
சவ்தியில் வந்தேறியாக இருந்து பிறகு, துபாயில் வந்தேறியாகி கடைசியில் நீர் கனடாவில் வந்தேறியுள்ளீர். ஆக உம் பொழப்பு வந்தேறி பொழப்புதான். கனடாவைப்பொருத்த மட்டில் அங்கே இருக்கும் நீர் கனடாவுக்கு வந்தேறிதானய்யா. முதல்ல இத நீர் நம்பு.
எகிப்திலிருந்து வந்த ஆரிய பார்ப்பான்கள் வந்தேறி இல்லேன்னா பின்ன என்னவாம்?
அறிவு டீச்சர், தங்கள் தமிழ் பாடத்திற்கு நன்றி. வீட்டுப்பாடம் ஏதாவது இருக்கா?
இனிமே நீங்க வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது வந்தீங்கன்னா தெருவிற்க்கு வந்தேறி ஆகிவிடுவீர்கள். உங்க ஊரை விட்டு வெளியூருக்கு போகாதீர்கள் ஏனென்றால் அங்கே வந்தேறி ஆகிவிடுவீர்கள்
//எகிப்திலிருந்து வந்த ஆரிய பார்ப்பான்கள் வந்தேறி இல்லேன்னா பின்ன என்னவாம்?
//
நான் ரெடி எகிப்திற்கு போக...
அவங்கள அந்த இடத்தைவிட்டு காலி பண்ண சொல்லி பாருங்க சார்.
//நான் முதற்பிறவியில் சிகாகோவில் இருந்தேன் விவேகாந்தர் தங்கியிருந்து இடத்துக்குப் பக்கத்தில் இன்று நான் தமிழகத்தில் இருக்கிறேன் நான் வந்தேறியா?
//
சந்தேகம் என்ன? உங்க பதிவிலே ஆன்மிகம் பற்றி எல்லாம் எழுதுறீங்க.
நீங்க வந்தேறிதான்.
ஹா...ஹா...ஹா...
சிவா,
>>>>... சொல்லிக் கொண்டு நாலு புக்குகளை படித்து ... <<<<
அவர்கள் படிக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்துகொள்கிறீர்களா? அதுவும் நாலு புக்குகள். ஏதேனும் ஸரோஜா தேவியின் நாவலாக இருக்கப் போகிறது (அல்லது நக்கீரன் பத்திரிக்கையாகவோ, பகுத்தறிவு பகலவன்களின் உளறல்களாகவோ இருக்கலாம். ரொம்ப வித்யாஸமில்லை).
இந்திய அரசியல் சட்டம் பற்றி தாங்கள் எளிமையாகக் கூறியதையே புரிந்து கொள்ள முடியவில்லை.
பி.கு: பெங்களூரில் என் பக்கத்து வீட்டிலிருக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் காட்டியபோது அவள் அதன் அர்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொண்டாள். விளக்கவும் செய்தாள். (இங்கே தமிழ் மீடியங்கள் உண்டு.)
சதயம்,
உங்களின் கேள்விகள் வெகு நியாயமானவை? அவற்றில் எனக்கு நிச்சயம் உடன்பாடுண்டு
"வந்தேறிகளின் ஆதரவாளர்களாய் தங்களை இனங்காட்டிக் கொள்ளும் அன்பர்கள்....கடந்தகாலங்களில் நடந்த அத்துமீறல்களையும்..திணிப்புகளையும் நேர்மையாய் மறுதலிக்க முடியுமா?"
நிச்சயம் மாற்றவேண்டும் ஆரியர்களைப் பின் பற்றி வந்து கொள்ளை அடித்து போனதை மீட்க வேண்டும். மதம் மாற்றியவர்களை திருப்பி மாற்றவேண்டும். இடிந்த வழிபாடுதளங்கள் மீள வேண்டும்
யரோ சொல்வது போல் இருக்கிறதா? இந்துத்வாதிகளும் சங் பரிவாரங்களும் தான் சொல்கிறார்கள்.
அவர்கள் சொன்னால் கேவலம் திராவிடர்கள் சொன்னால் புரட்சியா?
இரண்டுமே கேவலம்தான்
இறந்த காலத்தை பேசி பேசி நிகழ்காலத்தை நரகமாக்கி எதிர்காலத்தை இழக்கிறோம்
பிடில், என்னசார் இப்படி கொடல் ஆபரேசன் பண்ணிக்கிட்டு ரெஸ்ட் எடுக்காமே கிசுகிசு எல்லாம் சொல்ரீங்களே. சாம்பு பக்கத்து பெட்டா? :)
அவர் வெறிவந்த உபயோகித்த வார்த்தைகள் பார்த்தீர்களா? அதில் தெரியவில்லையா மக்களின் தராதரம்
அதைவிட முனாஃப் என்ற மருதூபாய் அருமையான தனிமனித தாக்குதல் பண்ணியிருக்கார். சம்பளம் வாங்கி வேலை பார்ப்பது விபசாரமாம். இவரும் இவரது நண்பர்களும் சம்பளம் வாங்காமல் வேலைப் பார்த்து அவர்களின் எஜமானனின் மேல் உள்ள விசுவாசத்தை காண்பிப்பார்களாம்
அஹா சூப்பரப்பு உங்க தரம்.
//
கலாச்சார தாக்கம் என்பதைவிட பன்னெடுங்காலமாய் நடந்துவரும் ஒரு சாராரின் கலாச்சாரத் திணிப்பை எதிர்க்கும் அல்லது நிராகரிக்கும் அணுகுமுறையாகவே நண்பர் விடாது கருப்பின் கருத்துக்களை அணுகுதல் வேண்டும்.
வந்தேறிகளின் ஆதரவாளர்களாய் தங்களை இனங்காட்டிக் கொள்ளும் அன்பர்கள்....கடந்தகாலங்களில் நடந்த அத்துமீறல்களையும்..திணிப்புகளையும் நேர்மையாய் மறுதலிக்க முடியுமா?
//
சதயம்,
விடாது கருப்பு வின் கருத்துக்கள் அவ்வாறே பார்க்கின்றேன்...ஆனால் அவர் கருத்தை வைத்துக் கொண்டு இணயத்தில் இஸ்லாத்தினை பரப்ப நினைக்கும் முல்லாகள் செய்யும் சேட்டையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, திரு ஜெயராமனின் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள அதே கருத்துக்களை உங்களால் பார்க்க முடியுமா?
கடந்த காலத்தில் நடந்த ஜாதி அத்துமீரல்களுக்கு குருவாயூர் தேவஸ்தானம் முதல் சில பல இந்து மத குருக்கள் தலீத்களை ஒதுக்கியது தவறு என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதும் நடந்தேறியுள்ளது.
எந்த முல்லா, இஸ்லாத்தின் வருகையில் உடைக்கப்பட்ட கோவில்களுக்கு ஒரு முறையேனும் மன்னிப்பு கேட்டு இந்துக்கள் புனிதஸ்தலங்களான அயோத்யா, காசி, மதுரா வை விட்டுச் செல்ல ஒத்துக் கொண்டுள்ளார்? இஸ்லாமும் வன்தேறிய மதம் தானே...!! அவர்களுக்கு ஆதரவாளர்களாய் தாங்களை காட்டிக் கொள்ளும் அறிவாத்மாக்கள் இந்த கேள்வியைக் கேட்குமா அவர்களிடம்..!!? தலை துண்டாகிவிடும் என்று பயம் போல!!
//நான் ரெடி எகிப்திற்கு போக...//
இதுதான் வந்தேறியின் மனப்பாண்மைக்கு சாண்று.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு
வாழும் நாட்டின் மீதோ, மாநிலதின் மீதோ, மொழியின் மீதோ சிறிதளவும் பற்றில்லாமலிருக்கும் கூட்டமே வந்தேறிகள் கூட்டம்.
-அவ்வை
வரலாற்றை உற்று நோக்கினால் ஆரிய குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே ஊரில் தொடர்ந்து வசித்தது கிடையாது. இவர்களை மேய்ச்சல் இனத்தவர் (like gypsy) என அழைப்பர்.
இவர்களிடமே மேற்கண்ட வந்தேறியின் மனப்பாண்மை இருக்கும்
-வேல்-
//சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,தென்னாப்பிரிக்கா,அமெரிக்கா,லண்டன்,மத்திய கிழக்கு நாடுகள்,மும்பை,பெங்களூர் இங்கெல்லாம் தமிழன் போகவே இல்லையா?தலைமுறை,தலைமுறையாய் வாழவில்லையா?
எதையும் யோசித்து பிறகு பேசும்.
//
இதில் என் யோசனைக்கு என்ன இருக்கு! நீங்க தான் யோசிக்காம எழுதுறீங்க. நீங்க மேல சொன்ன இடங்களில் மிக அருகாமையில் உள்ள பெங்களூரில் தமிழர்களின் நிலை என்ன? வந்தேறிகளாகத்தான் நடத்த படுகின்றனர். இந்தனைக்கும் அவ்வூர் தொல்காப்பியர் கண்ட தமிழ் கூறும் நல்லுலகின் எல்லைக்குட்பட்டது.
மேலும், நீங்கள் சொன்னது போல் தமிழன் புலம் பெயர்ந்தாலும், தலைமுறை,தலைமுறையாய் வாழையடி வாழையாய் அந்த ஊரில் வாழ்வான். வந்தேறி கூட்டம் போல் தலைமுறைக்கு தலைமுறை பல ஊர்கள் மாறி நாடோடி வாழ்க்கை வாழ மாட்டான்.
-வேல்-
போலி டோண்டு, சாநக்கியன் போன்றவர்கள் என் பதிவில் வந்து நான் தான் பிடில் காஸ்ட்ரோ என்ற பெயரில் எழுதுவதாக குற்றம் சாட்டி வழக்கமான அசிங்கமான பின்னூட்டமிட்டார்கள்.
அதை பிரசுரிக்கவில்லை
ஐயா... பொய் என் ரத்தத்தில் இல்லை. பொய் பெயரில் எழுத எனக்கு அவசியமோ நேரமோ இல்லை
உங்கள் புனை பெயர்களை சொல்லி நேரடியாகதானே உங்களிடம் கேள்விகள் கேட்டேன்?
அதற்கு பதில் சொல்லாமால் ஆ ஊ என கெட்ட வார்தையில் திட்டி குதித்தால் அதற்கு பயந்து எழுதுவதை நிறுத்தமாட்டேன் . Infact அதுதான் எனக்கு மேன்மேலும் எழுத ஊக்க மளிக்கிறது
வேல் நோண்டி,
Time to start writing your crap in your own blog...!!
400 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு , முக்கியமாக கோவைக்கு வந்தேறியவர்கள் தான் நாங்கள்.
யார் வந்தேறியோ இல்லையோ...நான் நிச்சயம் வந்தேறி தான்.என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்.
கூக்கிள் எர்த்தில் கடலை பார்த்துவிட்டு குமரிகண்டத்தை கண்டுபிடிக்கும் இவனுகளை போயி சிரியஸா எடுத்துகிட்டு...உங்ககூட ஒரே தமாசா பொச்சு சிவான்னே.
ஏனுங்க வேல்பாண்டி, ஒங்க கொள்ளுத் தாத்தவோட அப்பாவும் மெட்ராஸிலதான் பிறந்து வளர்ந்தவராங்க?
//வேல் நோண்டி,
Time to start writing your crap in your own blog...!! //
தங்கள் கருத்துக்கு வந்தனம்.
//ஒங்க கொள்ளுத் தாத்தவோட அப்பாவும் மெட்ராஸிலதான் பிறந்து வளர்ந்தவராங்க?
//
தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
-வேல்-
தமிழ்நாட்டில் பிறந்தவர்கள்.
வேறு ஒரு ஊரிலிருந்து சென்னைக்கு வந்து ஏறுபவர்களும் வந்தேறிகள்தான்.
அதேபோல வந்தேறிகள் என்று இழிவுபடுத்தப்படுவோரும், உண்மையிலேயே வந்து ஏறியவர்களும் இவ்வுலகில் பிறந்த மனிதர்கள்தான்.
//மேலும், நீங்கள் சொன்னது போல் தமிழன் புலம் பெயர்ந்தாலும், தலைமுறை,தலைமுறையாய் வாழையடி வாழையாய் அந்த ஊரில் வாழ்வான். வந்தேறி கூட்டம் போல் தலைமுறைக்கு தலைமுறை பல ஊர்கள் மாறி நாடோடி வாழ்க்கை வாழ மாட்டான்.//
வேல்பாண்டி சார், அப்போ 10000 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறை யாக வாழும் ஆரியர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது எதனால்? உங்கள் தாழ்வுமனபான்மையினால்தான்.
சிங்கப்பூர், மலேசியா சென்று ஏறி வாழும் தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் அங்கே ஏன் இன்னும் முன்னேறாமால் அங்குள்ள பூர்வகுடிகளின் மேல் பழியை போட்டு விட்டு சும்மா இருக்கிறார்கள். இதை பற்றி பேச தனி பதிவுதான் போடவேண்டும்? (கவனிக்க : இலங்கையை இதில் சேர்க்கவில்லை. அங்கே நிலைமை வேறு)
அன்பின் சிவா!
//10000 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறை யாக வாழும் ஆரியர்கள்//
தவறான வரலாற்று குறிப்பு. இத்தேசத்தில் ஆரியர்கள் அவ்வளவு பழமையானவர்கள் கிடையாது.
//சிங்கப்பூர், மலேசியா சென்று ஏறி வாழும் தமிழர்களின் நிலை என்ன? அவர்கள் அங்கே ஏன் இன்னும் முன்னேறாமால் அங்குள்ள பூர்வகுடிகளின் மேல் பழியை போட்டு விட்டு சும்மா இருக்கிறார்கள்//
இது தவறான தகவல் குறிப்பு.
நீங்கள் சுட்டிய இரு நாடுகளிலும் பூர்வகுடியை (மலேய இனம்) விட தமிழர்கள் மிகவும் சிறப்பான முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்பதே உன்மை. மகாத்தீர் அவர்கள் மலேய இனம் மற்ற இனத்தை (தமிழர், சீனரை)விட பின் தங்கி இருப்பதை குறிப்பிட்டு ஒரு மேடையில் கண்ணீர் விட்டார்.
அன்பின் முஸ்,
//வேறு ஒரு ஊரிலிருந்து சென்னைக்கு வந்து ஏறுபவர்களும் வந்தேறிகள்தான்//
உண்மைதான். ஆனால் என்னுடைய முந்தைய பின்னுட்டத்தை நீங்கள் பார்க்கவில்லை போலும். அதை கீழே மீண்டும் இனைத்துள்ளேன்.
//வாழும் நாட்டின் மீதோ, மாநிலதின் மீதோ, மொழியின் மீதோ சிறிதளவும் பற்றில்லாமலிருக்கும் கூட்டமே வந்தேறிகள் கூட்டம்.
வரலாற்றை உற்று நோக்கினால் ஆரிய குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே ஊரில் தொடர்ந்து வசித்தது கிடையாது.//
-வேல்-
வேல்பாண்டி, பின்னோக்கி போகும்போது 1000 ஆண்டுகளுக்கும் 10000 ஆண்டுகளுக்கும் வித்தியாசமில்லை. கணக்கு போடும் போது ஒரு arbitrary value வைத்து கணக்கு போடுவோம் அந்த வகையில் இது சரியே. கார்பன் டேட்டிங் வைத்து பேச இது ஒன்றும் விஞ்ஞான ஆராய்ச்சி கூடமல்ல.
நான் தவறாக சொல்லிவிட்டேன் மலாய்களைவிட தமிழர்கள் மேல்தான் ஆனால் சீனர்களிடம் தோற்கிறார்கள் அந்த நாடுகளில்.
ஒவ்வொரு நாடாக ஒருவன் சென்றுக்கொண்டே இருந்தால் அவன் கேவலமானவனா?
செய்யும் தொழில்கேற்ப (உ.ம் சாப்ட்வேர்) பல நாடுகளுக்கு சென்று அங்கே வாழும் காலங்களில் அந்த காலசாரத்தை ஏற்று கொள்பவன் கேவலமானவனா?
இல்லை நான் தமிழன் என்னிடம் இந்தியில் பேசி என்னை கேவலபடுத்திவிட்டார்கள் என சொல்பவந்தான் தமிழனா?
//வாழும் நாட்டின் மீதோ, மாநிலதின் மீதோ, மொழியின் மீதோ சிறிதளவும் பற்றில்லாமலிருக்கும் கூட்டமே வந்தேறிகள் கூட்டம்.
//
மூன்றும் சேர்ந்திருக்க வேண்டுமா அல்லது மூன்றில் ஒன்று இருந்தால் போதுமா வந்தேறிகள் அல்ல என சர்டிபிகேட் வாக்குவதற்கு
//மூன்றும் சேர்ந்திருக்க வேண்டுமா அல்லது மூன்றில் ஒன்று இருந்தால் போதுமா வந்தேறிகள் அல்ல என சர்டிபிகேட் வாக்குவதற்கு //
சரியாக கேட்டீர்கள். நான் மேல் சொன்ன வந்தேறிகள் தேச/மாநில/மொழி அபிமானத்தை இப்படி சர்டிபிகேட் வாங்கிதான் நிருபிக்க முடியும். அவர்களிடம் தேச/மாநில/மொழி பற்றையெல்லாம் உணர்வுபூர்வமாய் காண முடியாது.
-வேல்-
வந்தேறிகளின் உணர்வை எப்படி அறிவீர்கள்?
ஊர் ஊராய் சுற்றும் நரிகுறவர்கள் வந்தேறிகளா? அவர்கள் ஈனப் பிறவிகளா?
//
நான் தவறாக சொல்லிவிட்டேன் மலாய்களைவிட தமிழர்கள் மேல்தான் ஆனால் சீனர்களிடம் தோற்கிறார்கள் அந்த நாடுகளில்.
//
ஐயா!
நான் கண்ட வரையில் சீனர்களுக்கு இணையாகத்தான் தமிழர்கள் இவ்விரு நாடுகளிலும் வாழ்கிறார்கள். தமிழர்களின் எண்ணிக்கைதான் குறைவு. வாழ்க்கை வசதிகளில் குறைவில்லை.
//ஒவ்வொரு நாடாக ஒருவன் சென்றுக்கொண்டே இருந்தால் அவன் கேவலமானவனா?
//
ஒரு இனம் தனக்கென ஒரு நாடு/மொழி இல்லாமல் வந்தேறிய இடத்தில் பூர்வகுடியை ஆள நினைப்பது அவலம்.
//, பின்னோக்கி போகும்போது 1000 ஆண்டுகளுக்கும் 10000 ஆண்டுகளுக்கும் வித்தியாசமில்லை. கணக்கு போடும் போது ஒரு arbitrary value வைத்து கணக்கு போடுவோம் அந்த வகையில் இது சரியே.//
சந்தடி சாக்கில் வேறு எதையோ வலியுறுத்துவது/சாதிப்பது போல தெரியுது!
-வேல்-
//வந்தேறிகளின் உணர்வை எப்படி அறிவீர்கள்? //
ஒரு நாட்டில் வாழும் மக்களில் ஆரியம் என்றும் திராவிடம் என்றும் பிரிவுகள் உள்ளதே எதனால். ஆரியரிடம் வந்தேறி மனப்பாண்மை இருப்பதனால்தானே?
-வேல்-
//நான் கண்ட வரையில் சீனர்களுக்கு இணையாகத்தான் தமிழர்கள் இவ்விரு நாடுகளிலும் வாழ்கிறார்கள். தமிழர்களின் எண்ணிக்கைதான் குறைவு. வாழ்க்கை வசதிகளில் குறைவில்லை//
தவறு சமீபக் காலத்தில் பி.ஆர் வாங்கிகொண்டு இந்தியாவிலிருந்த சென்ற தமிழர்கள் சீனர்களுக்கு இணையாக இருக்கிறார்கள்.
பல்லாண்டு காலமாக அங்கே வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் சீனர்களை விட மட்டமாக தான் வாழ்கிறார்கள்
இது என் ஆப்சர்வேஷந்தான்
//சந்தடி சாக்கில் வேறு எதையோ வலியுறுத்துவது/சாதிப்பது போல தெரியுது//
நிச்சயமாக இல்லை
ஆரியம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன?
மற்றவர்களை அடக்கி ஆளும் நாட்டண்மைகாரர்களும், பயமுறுத்தி அடக்கி ஆளும் ரவுடிகளும், அரசியவாதிகளும், அநியாய லாபம் சம்பாதித்து தொழிலாளர்களை அடக்கி ஆளும் வியாபாரிகளும், அப்பாவி மக்களை அதிகாரத்தால் அடக்கி ஆளும் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் இன்னபிற அடக்குமுறையாளார்கள் எல்லாம் ஆரியர்களா?திராவிடர்கள? வந்தேறிகளா? பூர்வகுடிகளா?
குரங்கு பூனைகளுக்கு ரொட்டி துண்டை பிறித்து கொடுப்பத கதையைத்தான் நீங்கள் திரும்ப சொல்லுகிறீர்கள். பூர்வகுடிகள் ஒருவரை ஒருவர் ஆள போட்டியிடலாம். வந்தேறிகள் அடக்கி ஆள நினைப்பதுதான் தவறு.
-வேல்-
//
சரியாக கேட்டீர்கள். நான் மேல் சொன்ன வந்தேறிகள் தேச/மாநில/மொழி அபிமானத்தை இப்படி சர்டிபிகேட் வாங்கிதான் நிருபிக்க முடியும். அவர்களிடம் தேச/மாநில/மொழி பற்றையெல்லாம் உணர்வுபூர்வமாய் காண முடியாது.
//
இந்திய தேசத்தின் விடுதலை 1947ல் கிடைத்தது பொய்யான சுதந்திரம் என்று பதிவு போடுபவர்கள்...
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியார் ...
இவர்களெல்லாம் வந்தேறிகள் தானே...?
அன்பு வேல்பாண்டி,
வாழும் நாட்டின் மீதோ, மாநிலதின் மீதோ, மொழியின் மீதோ சிறிதளவும் பற்றில்லாமலிருக்கும் கூட்டமே வந்தேறிகள் கூட்டம்.
வரலாற்றை உற்று நோக்கினால் ஆரிய குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே ஊரில் தொடர்ந்து வசித்தது கிடையாது.//
தங்களின் கருத்துப்படி பின் வருபுவற்றில் ஏதேனும் ஒன்றோ, அனைத்துமோ இருப்பின் அவர்களெல்லாம் தங்களது டிஃபனிஷன்படி ஆரியர்கள்:
1. வாழும் நாட்டின் மீதோ, மாநிலதின் மீதோ, மொழியின் மீதோ சிறிதளவும் பற்றில்லாமலிருப்பவர்கள்
2. தலைமுறை தலைமுறையாக ஒரே ஊரில் தொடர்ந்து வசிக்காதவர்கள்
கருத்து 1 பற்றி எனது கருத்துக்கள்:
தங்களின் கருத்தின்படி, வாழும் நாட்டின்மீது பற்றில்லாமல், தன்னை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயரிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்றும், அப்படியே சுதந்திரம் கிடைக்குமானால் தமிழ்நாட்டை மட்டும் ஆங்கிலேய ஆட்ஷிக்குட்பட்ட ஒரு தனிநாடாக வைத்திருக்க கடிதம் எழுதியவர் ஆரியர்.
தங்களின் கருத்துப்படி, மாநிலத்தின்மீது பற்றில்லாமல் தன்னுடைய எதிர்க்கட்ஷி அழிவதற்காககவும், தன்னுடைய கட்ஷிக்காரர்கள் மத்திய மந்திரி ஸபையில் பதவி பெறுவதற்காகவும் தமிழ்நாட்டின் நலங்களை ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் ஆரியர். தங்களை த்ராவிடர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை மட்டும் எதிர்த்து, மற்ற ஜாதியார் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாதவாறு இருந்து, மற்றவர்களையும் மோதவிட்டு, தமிழக அரஸியலே ஜாதி அரஸியல் என்பதாக மாற்றி, ஜாதிக்கலவரங்களுக்கு வித்திட்டவர்கள் எல்லாம் ஆரியர். தமிழன் என்று தெரிந்த பின்னால் அடுத்தபடியாக மனசு பேசுபவன் என்ன ஜாதி என்று தெரிந்துகொள்ளும்படியான சூழ்நிலை நிலவுகிறதே அதற்குக் காரணமானவர்கள் எல்லாம் இந்த ஆரியர்கள்.
தங்களின் கருத்துப்படி, மொழியின் மீது பற்றிருப்பதாகக் கூறிக்கொண்டு தன்னுடைய பிள்ளைகளையெல்லாம் தமிழ் வாஸிக்கக்கூடத் தெரியாமல் வளர்த்தவர்கள் எல்லாம் ஆரியர்கள். தமிழ் இலக்கியம், திரைப்படம் எல்லாவற்றிலும் புகுந்து நல்ல இலக்கியங்களோ, திரைப்படங்களையோ வரவிடாமல் செய்துவருபவர்கள் எல்லாம் ஆரியர்கள். (ஏதோ இலங்கைத் தமிழர்களின் தயவால் தமிழ் இலக்கியம் பிழைத்து வருகிறது.) ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு பெரிய கௌரவமாக நினைத்து எங்கும் ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்துவரும் மக்கள் ஆரியர். வேறு எந்த மாநிலத்தினரும் தன் மாநிலத்தாரைப் பார்த்தால் தன் மொழியில்தான் பேசுகின்றனர். இப்படி யூரோப்பிய கலாச்சாரத்தின்மேல் மோகம் வரவழைத்து, தமிழ் கலாச்சாரத்தை ஏளனப்படுத்தும் மனிதர்கள் ஆரியர். வீட்டில்கூட வேஷ்டி கட்டாமல், அரைக்கால் ட்ரவுஸரோடு அலைகின்ற ஒரு எதிர்காலத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள்.
கருத்து 2 பற்றி எனது கருத்துக்கள்:
தலைமுறை தலைமுறையாக ஒரே ஊரில் தொடர்ந்து வசிக்காதவர்கள் என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் தமிழர்கள் இல்லை நண்பரே. உயிரையும் மானத்தையும் காத்துக்கொள்வதற்காக மற்ற நாடுகளில் வாழும் வேதனையை அனுபவிக்கும் இலங்கைத் தமிழ் சகோதரர்கள் உட்பட.
என்னவோ ஒரு குறிப்பிட்ட ஜாதியார் பூர்வகுடிகள் இல்லை என்று கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? நாமெல்லாம் ஒன்று என்று கூறுகின்றபோது இல்லை என்று கூறுவதற்குக் காரணமான ரத்தவெறிக்குக் காரணம் என்ன? பொய்யான வரலாற்றுக் கதை புனைந்தாவது ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை அழித்துவிடத்துடிக்கும் ரத்தவெறிக்குப் பெயரென்ன? இனத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும் ரத்த வெறி பிடித்து அலைவது ஏன் சகோதரரே?
இது தமிழ்பண்பு இல்லை. யூரோப்பியரின் எச்சல் பிஸ்கட்டுகளுக்கு வாலாட்டுபவர்களின் பண்பு.
//பூர்வகுடிகள் ஒருவரை ஒருவர் ஆள போட்டியிடலாம். வந்தேறிகள் அடக்கி ஆள நினைப்பதுதான் தவறு.
//
ஒரு ஊரில் யார் வந்தேறிகள் யார் பூர்வகுடிகள் என யார் நிர்ணயப்பது.
வேல்பாண்டி, இதெல்லாம் ஓட்டு வாங்க சினிமா காரர்கள் செய்யும் மாய்மாலம்
இதில் நாம் சண்டையிண்டு சிண்டை பிய்த்துக் கொள்கிறோம்.
இன்று நம் சக மனிதர்களை மனிதராக மதிப்போம். அப்படி மனிதர்களை மனிதர்களா மதிக்காதவர்களை ஒதுக்குவோம் என்ற கோட்பாட்டில் வந்தேறி பூர்வகுடி என்ற பேதமே இல்லை என்பது தான் உணமை
Post a Comment