Saturday, May 22, 2010

ஃபேஸ் புக்கிலிருந்து...

ஃபேஸ் புக்கில் சில மாதங்களாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அளாவளவும் போது சத்தம் போட்டு சிரிக்கும் படியான சில வார்த்தை பரிமாற்றங்கள் நடைப் பெற்றன. அவற்றில் சில :


------------------------------------------------------------------------------
என் சகோதரர் : இன்றிரவு டைகர், தோசை பின்னே ஒரு ஆம்லேட்...

அவரின் நண்பர் : அடப்பாவி சிங்கப்பூர் காரர்கள் பற்பல கடலுணவுகளை உண்ணுவார்கள். நத்தை, தவளை, ஆமை, ஆக்டோபஸ், லாப்ஸ்டர், கிரா பிஷ் சாப்பிடுவார்கள். பாம்பையும் விட்டுவைப்பதிலில்லை. எப்போதிருந்துடா டைகர் போன்ற வனவிலங்குகளை சாப்பிட ஆரம்பித்தீர்கள். எப்படிடா டைகரை...

நான்: டைகரை ஒரு பெரிய்ய்ய்ய்ய கிளாஸில் ஊற்றுவார்கள்....

சிறிது நேரம் கழித்து நான் : கவனிக்கவும் டைகரை...டைகருடையதை அல்ல

சகோதரரின் நண்பர் : அய்யோ...அய்யோ...

----------------------------------------------------------------------------------

சகோதரனின் மகன் (வயது 11) : வர வர என் அண்ணன் வடகொரியனை போல் ஆகிவிட்டன்

அவனின் நண்பன் : ஏன் என்னாயிற்று?

சகோதரனின் மகன் : மிகவும் தனியாக இருக்கிறான்..யாரிடமும் பேசுவதில்லை..ரகசியமாக இருக்கிறான்

அவனின் நண்பன் : அவ்வளவுதானா..நானும் ஏதோ அணு ஆயுதத்தை அவன் தலையணக்கடியில் வைத்திருக்கிறான் என நினைத்துவிட்டேன்

------------------------------------------------------------------------------------

சகோதரனின் மகன் (வயது 11) : Justin Bieber ஒரு லெஸ்பியன் தான். பாட்டுகள் எல்லாம் பெண்களைப் பற்றிதான்

நான் : அவளின் செக்ஸுவல் ஓரியண்டேஷன் என்னவாக இருந்தால் என்ன? அவளின் பாட்டை கேள்

அவன் : ஐயோ பெரியப்பா...ஜஸ்டின் ஒரு ஆம்பிளை..இது ஒரு ஜோக்

நான் : ஹி ஹி வயசாயிடுத்துப்பா எனக்கு

-------------------------------------------------------------------------------------

சகோதரனின் மகன் : இந்த் ஃபேஸ் புக்கினால் எக்ஸாம் பணாலாகிவிட்டது....

நான் : அதற்கு முன்னால் ரொம்போ ஒழுங்கோ...

அவன் : ஐயோ பழி போட கூட நிம்மதியில்லை இந்த பேஸ் புக்கில்...

...................................................................................

ஃபேஸ் புக் ஸ்டேட்டஸ் அப்டேட்.... கால்கரி சிவாவும் ------மணம் புரிந்து விட்டார்கள்

என் மனைவியின் தோழி : வாழ்த்துக்கள் தோழி

சிறிது நேரம் கழித்து ஃபேஸ் புக் அப்டேட் கால்கரி சிவா தம்பதியருக்கு ----- மகனாகிறார்

என் மனைவியின் தோழி : ஆ..அதற்குள்ளா.....

-----------------------------------------------------------------------------------

என் நண்பர் : சண்டேன்னா ரெண்டா ? (இட்லிவடையின் ரசிகர்)

நான் : இல்லை மூன்று.

என் நண்பர் : அவை யாவை?

நான் : பெக்..லெக்..எக்..

------------------------------------------------------------------------------------

என் சகோதரர் (சிங்கபூரிலிருந்து) : ஆஹா..இன்றைய சிங்கிள் மால்ட் செம ஸுமூத்

அவர் நண்பர் (அமெரிக்காவிலிருந்து) : ஆஹா...இன்றைய பட் செம ஸுமுத்

நான் (கனடாவிலிருந்து ) : ஆஹா நேற்றைய இங்கிலாந்து காஸ்டர் ஆயில் இன்று காலையில் ஸுமூத் கக்கூஸில்

மற்ற இருவரும் : உவ்வே....


-------------------------------------------------------------------------------------

வேலை கிடைத்த சகோதரியின் மகன் : பம்..பம்பம்..பம்பம்..பம்பம்
அவனின் நண்பன் : நாட்டாமே எதிர்காலத்தை மாற்றி எழுது..
நான் : வெரிகுட்றா வெள்ளைக்காரா
அவனின் நண்பன்_2 : மச்சி செம இண்டெலிஜெண்டிலிடா நீயி
வேலை கிடைத்த சகோதரியின் மகன் : பம்..பம்பம்..பம்பம்..பம்பம்

எல்லாருக்கும் கம்பெனியின் பெயர் விளங்கிடிச்சி
-------------------------------------------------------------------------------------

நான் : நான் வரும் போது உனக்கு ஒரு ஆப்பிள் வாங்கிவரட்டுமா?
என் சகோதரனின் மகன் : 64ஜிபி இருக்கவேண்டும்
நான் : ஐயோ நான் பழத்தை சொன்னேன்
அவன் : ஐயோ நான் ஐபாடை சொன்னேன்
-------------------------------------------------------------------------------------

சகோதரனின் மகன் (சிங்கப்பூர்) : இன்றிரவு மரினா சான்ஸ் பேயில் டின்னர்
அவனின் நண்பன் (சீனன்) : என்னடா உங்க வீட்டுக் கீழே இருக்கிற ஹாக்கர் செண்டருக்கு புது பேரா?
சகோதரனின் மகன் : டேய் டுபுக்கு இது 5 ஸ்டார் ஓட்டல்ரா
அவனின் நண்பன் (சீனன்) : அழுக்கான ஒட்டல் தான் சுவையா இருக்கும்டா
சகோதரனின் மகன் : டேய் எங்க ஊர் முருகன் இட்லிக் கடையை பார்த்து வாய் பிளந்தவண்டா நீ உங்கிட்டே போயி சொன்னேன் பாரு..
-------------------------------------------------------------------------------------

சகோதரியின் மகன் : ஐயோ ஐயோ அய்யோய்யோ எல்லாம் போச்சி
நான் : என்னடா ?
சகோதரியின் மகன் : கடைசி ஹொப் சுறா அதுவும் ஊத்திக்கிச்சி இனி நான் டாக்டரை மாற்றனும்
நான் : என்னடா?
சகோதரியின் மகன் : நான் டாக்டர் விஜய் விசிறியாய் இருந்து டாக்டர் செல்டன் கூப்பர் விசிறி ஆகிவிட்டேன்
நான் : வெரி குட்றா வெள்ளைக்காரா
சகோதாரன் : எக்ஸ்குவிஸ் மீ யார் அந்த டாக்டர் செல்டன் கூப்பர்
நான் : டேய் பிக் பாங்க் தியரிடா இப்பதான் அமெரிக்காவில் சக்கை போடு போட்டிச்சி இனிமே சிங்க்பூருக்கு வரும்
சகோதரன் : சித்தி அண்ணாமலை கோலங்கள் போதுமய்யா பிக் பாங்க் தியரி வேண்டாம்ப்பா