Friday, June 30, 2006

Top 10

4 ஆட்டம் நடக்கும் போது வலையில் நானில்லை. 6 விளையாட்டுக்கு என்னை நாகை சிவா, செல்வன், தோண்டு ராகவன் மற்றும் வெளிகண்ட நாதர் ஆகியோர் அழைத்துவிட்டார்கள்.

இந்த 6 ஐயும் 4 ஐயும் சேர்த்து பத்தா போடலாமின்னு... .....

I. நான் உபயோகித்த / உபயோகிக்கும் எனக்குப் பிடித்த 10 வாகனங்கள்

1. TVS 50
2 Bajaj M50
3. Hero Honda
4.Hero Honda Street
5. Toyoto Cressida
6. Maruthi Zen
7. Nissan Sunny
8. Hyundai Santro
9. Honda Accord
10. Toyoto Sienna

II. எனக்கு பிடித்த வாங்கிய/வாங்க ஆசைபடும் எலக்ட்ரானிக் புதினங்கள்

1. பெரிய்ய்ய்ய்ய்ய் டீவி
2.MP3 player
3.PVR
4.Digital Camera
5.Garage Door opener
6.Car Remote Starter
7.GPS
8.PDA
9. Wireless Router
10. LapTop

III. வாழ்ந்த/பார்த்த பத்து நாடுகள்

1.Saudi Arabia
2. Bharain
3. Qatar
4. UAE
5.Singapore
6. Denmark
7.Malaysia
8. Indonesia
9 USA
10 Canada

IV. என்னை கவர்ந்த ஆன்மிக தலைவர்கள்

1. Osho
2. Sri Sri
3. Sri Satya Sai Baba
4. J.Krishnamurthy
5.Marshall Govindan
6. Dr.Deepak Chopra
7.Sivaya Subramanya
8. Ramana Maharishi
9. Vallalar
10. Aathi Sankarar

V . நான் விரும்பி சாப்பிடும் பதார்த்தங்கள் (இதுக்காக தானே இந்த பதிவே)

1. தந்தூரி சிக்கன்
2. பிரியாணி (சிக்கன் அல்லது மட்டன்)
3. பரோட்டா பாயா
4. இனிப்பு வகைகள் அனைத்தும்
5. Pizza
6. Steak (Lamb or Beef)
7. Kaboos and Hummus
8. முறுக்கு
9. KFC
10. இட்லி/தோசை

VI . நான் விரும்பும் பானங்கள்

1. காபி
2. ஜிகர்தண்டா
3. லெமன் சோடா
4. பீர்
5. விஸ்கி
6. PinaColoda
7.Coke
8.Masala Tea
9. Apple Cider (Non Alcoholic)
10. சுக்கு மல்லி காபி

VII. நான் பார்த்த / பார்க்க விரும்பும் சுற்றுலா மையங்கள்

1. நயாகரா நீர்வீழ்ச்சி
2. குற்றாலம்
3.இமய மலை
4. மலேசியாவில் லங்காவீ
5. யெல்லோஸ்டோன் பார்க்
6. ஆஸ்திரேலியாவின் தங்கக் கடற்கரை
7. நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை
8. கன்யாகுமரி
9. ரியோ டி ஜனீரோ வில் உள்ள யேசு சிலை
10. Route 1 Big Sur Highway

VIII. என்னைக் கவர்ந்த இசைக் கலைஞர்கள்

1. யேசுதாஸ்
2. SPB
3. TMS
4. PBS
5. பாலமுரளிகிருஷ்ணா
6. சுதா ரகுநாதன்
7. U. ஸ்ரீனிவாஸ்
8. குன்னகுடி வைத்திய்நாதன்
9. இளையராஜா
10. ரஹ்மான்

IX. என்னை கவர்ந்த எழுத்தாளார்கள்/பத்திரிகையாளர்கள்
1. சுஜாதா
2. ஸிட்னி ஷெல்டன்
3. Ken Follet
4. மலர் மன்னன்
5. நெய்பால்
6. ப்ரான்சுவா கோத்தியே
7. வர்ஷா போன்ஸ்லே
8. கார்ல் சேகன்
9. அலிஸ்டர் மாக்லீன்
10. ஸ்காட் ஆடம்ஸ்(டில்பெர்ட்டின் தந்தை)

X. கடைசியாக நான் அழைக்க விரும்பும் வலைப்பதிவாளார்கள். பின் வரும் குழுக்களாக

1. நல்லடியார், சுவனப்ரியன், நேசகுமார், ஆரோக்கியம்

2. முத்து(தமிழினி), தங்கமணி, ஜயராமன், செந்தழல் ரவி ம்யூஸ், சமுத்ரா, கார்த்திராமாஸ், அருணகிரி, மாயவரத்தான், பாஸ்டன் பாலா, இளவஞ்சி, முகமூடி

3. எஸ்.கே, ரோசாவசந்த், குமரன், ஞான வெட்டியான், ஜீரா, அரவிந்தன் நீலகண்டன்

4. இலவசக்கொத்தனார், சிபி, கைப்புள்ளே, பொன்ஸ், மகேஸ், கார்திக் ஜெயந்த், நாகை சிவா, பெருசு, தேவ், ஜீவ்ஸ், கோவி.கண்ணன், இராமநாதன்

5. ராமசந்திரன் உஷா, ஆஸிப் மீரான், நிலவு நண்பன், பெனாத்தல் சுரேஷ், துபாய் ராஜா,

6. வெளிகண்டநாதர், தெகா, $ல்வன், நா.கண்ணன், ரவி ஸ்ரீனிவாஸ், இராம கி, Simulation

7. பாலசந்தர் கணேசன், டி.செ. தமிழன், மதி கந்தசாமி

8. ஜோசப், த்ருமி. பத்ரி, உருப்படாத நாரயணன், ஆசாத், டோண்டு ராகவன், இகாரஸ் ப்ரகாஷ்

9. பத்மா அர்விந்த், துளசி கோபால், மதுமிதா, நிலா, சிவா, குழலி, கீதா சாம்பசிவம்

10. சுந்தர், , சுகா, வெங்கட் ரமணி, ஓகை நடராஜன்


மேலே உள்ள குழுக்களை என் வலைப் பதிவிற்கு அல்ல என் வீட்டிற்கே அழைக்கிறேன். எல்லா குழுக்களிலும் சிறில் அலெக்ஸ், வஜ்ரா ஷங்கர் ஆகிய இருவரும் இடம் பெறுவர்.

Thursday, June 29, 2006

வெட்டிப்பையல்..திடுக்கிடும் உண்மைகள்...

வெட்டிப்பையல் என்று ஒருவர் வில்லங்கமான விஷய்ங்களை கையில் வைத்துக் கொண்டு வலைப்பதிவில் நுழைந்திருக்கிறார்.

அவருக்கு என் நண்பர்களான நாமக்கல் சிபி, குமரன், வஜ்ரா ஷங்கர் ,
பொன்ஸ் மற்றும் நான் பின்னுட்டம் இட்டு ஊக்குவிக்கிறோம்.

தீடிரென்று அது நானாக் இருக்குமோ என எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.

இதனால் அறிவிக்கும் உண்மை என்னவென்றால் நான் அவர்(ன்) இல்லை

இவ்வளவு நாள் வனவாசம் போய் திரும்பி வ்ந்துள்ளேன். இனிமேல் என் இம்சைகள் தொடரும்.....

Friday, June 16, 2006

பல்டி அடிக்கும் (நயன்) தாரா


பல்டி அடித்த நயன்தாராவைக் கண்டு நாமக்கல்லார் உற்சாகம் அடைந்துள்ளார்.

அவரிடம் பல்டி அடிக்கும் தாராவின் படத்தை போடுங்கள் என்றேன்.

அவர் செவி சாய்க்கவில்லை. அதனால் என்னால் முடிந்த உதவி

தண்ணீருக்குள் பல்டி அடிக்கும் தாராக்கள்.... தாரா என்றால் வாத்து தானே

பிராமண எதிர்ப்பு நிறுத்தப் படவேண்டும்---ஒரு ஏக்கம்

திரு. ப்ரான்சுவா கோத்தியே (சரியான உச்சரிப்பு - நன்றி யோகன்) அவர்கள் ப்ரான்ஸில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு முழு இந்தியர்.

இன்றைய அவருடைய ஆதங்கம் ப்ராமண எதிர்ப்பு நிறுத்தப் படவேண்டுமென்பதே.

முழு ஆர்டிகிளையும் மொழிபெயர்க்க ஆசை. நேரமில்லாததால் சுட்டி இங்கே:http://ia.rediff.com/news/2006/jun/15franc.htm?q=tp&file=.htm

இவரின் எழுத்துக்களைக் கண்டு நான் வியந்ததுண்டு.

வெளிநாட்டில் பிறந்த இவருக்கு இந்தியா மேல் எவ்வளவு பாசம். இந்திய கலாசாரத்தில் ஆழமான அறிவு இவருக்கு உண்டு .

ப்ரான்கோ கோத்தியே என் மரியாதைக் குறியவர்

பி.கு.ஜுலை மாதம் முதல் வாரத்தில் இருந்து என் அனுபவங்கள் தொடரும்

Monday, June 12, 2006

பசுப்பையன்கள் திருவிழா விட்டுப் போன படங்கள்

சின்ன பசங்க திருவிழாவில் கலர் பார்க்ககவர்ச்சிப் பாட்டி.. கால்கரியில் தாத்தாக்களும் பாட்டிகளும் லவ்வுவதை சர்வ சாதரண்மாக பார்க்கலாம். இந்த பாட்டி தாத்தாக்களை கவர திருவிழாவில் தூள் ட்ரஸ்ஸில் ஆஜர்


இதற்கு மேல் படங்கள் இந்த வருட திருவிழாவிற்கு பிறகு....

Friday, June 09, 2006

பசுப்பையன்களின் திருவிழா.... கால்கரியில்

கௌபாய் திருவிழா அடுத்தமாதம் இங்கே நடக்கவிருக்கிறது. அதில் சில காட்சிகள். நான் அங்கு எடுக்கபோகும் படங்களுக்கு ஒரு ட்ரெய்லர்

எருமையை அடக்கும் வீரர் ...எருமைப் பையன்

முகமூடியால் நான் சுற்ற போகும் ரங்க ராட்டினம்

காலகரிக்கு வர இருக்கும் வலைப் பதிவாளர்களுக்கு விருந்து வைக்க என் நண்பர்கள் பிடிக்கும் மாட்டுக் கடா


வெள்ளைக்கார ராஜா தேசிங்கு.....


வயசு பசங்க ஜொள்ளுவிட ஒரு போட்டோ என்னை மாதிரி பெருசுகளுக்கு ஒரு போட்டோ என அப்லோட் செய்ய முயன்றேன் முடியவில்லை.

தீவிரவாதிகளே.. உஷார்.. நீங்கள் இருப்பது கனடா...

நல்ல செய்தி .

டோராண்டோவில் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப் பட்டு 17 பேர் கைது செய்ய பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டனர்.

இவர்களின் மீது சுமத்தப் பட்ட குற்றசாட்டுகள் .

1. பார்லிமெண்டை தகர்க்க சதி
2. அரசியல் தலைவர்களை பிணை கைதியாக பிடிக்கும் எண்ணம்
3. பிரதமர் ஹார்ப்பரின் தலையை துண்டிக்க திட்டம்
4. கனடாவின் டிவி நிலயத்தை கைப்பற்ற அல்லது தகர்க்க திட்டம்

கனடாவின் ரகசிய போலீசாரின் பலே திட்டத்தால் இவைகள் முறியடிக்கப் பட்டன.

தீவிரவாதிகள் இந்த திட்டங்களை தீட்டக் காரணம் ஆப்கானிஸ்தானில் கனேடிய படைகள் கட்டுமான பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

அப்படைகளின் எண்ணிக்கை வெறும் 2300 தான். இங்கே மக்களாட்சி நடை பெறுவது பொறுக்க வில்லை இந்த மடையர்களுக்கு.

கனடா இவர்களுக்கு இலவச உயர்தர பள்ளி கல்வி, இலவச உயர்தர மருத்துவம், வேலையற்ற இளைஞர்க்கு உதவி தொகை வழங்குகிறது.

இவர்களின் ஒரே குறை தாலிபான் போன்ற ஆட்சி முறை இங்கேயில்லை என்பதே.

இங்கே ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. ஒரு சாரார் இது புஷ்ஷூம் அவர் நண்பர் ஹார்பரும் செய்யும் சதி என வழக்கம் போல் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கத்துக்கு மாறாக இந்த குற்றசாட்டு உடனே எழுந்து விட்டது.

இன்னொரு சாரார் "புஷ்ஷும் ஹார்ப்பரும் ஓகே சதி செய்வார்கள். ஆனால் போலீஸ் படையில் உள்ள மொத்த பேரும் பொய் சொல்வார்களா? இந்த மாதிரி அபத்தமாக பேசி தீவிரவாதிகளுக்கு துணை போவதும் தீவிரவாததிற்கு ஒப்பானது" என்று வாதிடுகின்றனர்.

"இங்கே மைனாரிட்டிகளுக்கு என்ன குறைச்சல் அவர்களுக்கு மத உரிமை, குடியுரிமை, ஓட்டுரிமை உள்ளது. ஆனால் இவர்கள் எந்த உரிமையும் தராத காட்டுமிராண்டி அரசாங்கங்களுக்கு ஆதரவாக ஏன் செயல் படுகிறார்கள். இந்த நாடு பிடிக்காத பட்சத்தில் ஏன் வரிசையில் நின்று குடியுரிமை பெற்று இங்கே வந்து எங்கள் நிம்மதியை கெடுக்கிறார்கள்" என மக்கள் கேள்விகளை கேட்கின்றனர்.

பி.கு. துரதிருஷ்டமாக அந்த 17 பேரும் முஸ்லிம்கள். அதனால் பாதிப்படைய போவது அப்பாவி முஸ்லிம்களும் என்னுடைய குறுந்தாடியும்

Tuesday, June 06, 2006

அதோ அந்த பறவை...அனுபவ உரை

படம் : ஆயிரத்தில் ஓருவன் (1965)
பாடகர் : சௌந்தரராஜன் T M
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
வருடம் : 1965
நடிக/நடிகைகள்: முன்னாள் தமிழக முதல்வர்கள், நாகேஷ் மற்றும் பலர்

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(லலாலா லா...)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


அனுபவ உரை

துபாயில் பைரேசி ஆக்ட் வருவதற்கு முன் தாம்சன் காசெட்ஸ் என்ற ஒரு கம்பெனி இருந்தது. அவர்கள் நல்லப் பாட்லகளையெல்லாம் ஒரே காசெட்டில் ரிக்கார்ட் செய்து வெளியிடுவார்கள். காசெட்டுகளின் தரம் முதன்மையானது

இந்த காசெட்டுகள் சவூதி அல்கோபர் மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகும்.

மிக அதிகமாக விற்ற தமிழ் காசெட்டில் முதல் பாடல் இதுதான் .

அந்த மார்கெட்டில் நான் போகும் பொதெல்லாம் இந்த காசெட் ஒலிக்கும். காசெட் இன்னும் என்னிடம் உள்ளது.

ஆனால் காசெட் ப்ளேயர் தான் இல்லை அதனால் தான் இணைய சுட்டி இங்கே

Friday, June 02, 2006

திரு ஆசாத் அவர்களுக்கு.......

திரு ஆசாத் அவர்கள் என்னுடைய சவூதி அனுபவங்கள் பற்றி ஒரு தனிபதிவாக போட்டிருந்தார். அதை தேன்கூட்டில் கண்டேன். தமிழ்மணத்தில் இல்லை.

சிறிது தாமதமாக அவருக்கு பதில் அளித்தேன். என்னுடைய பதிலை தமிழ்மண நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


அவருடைய பதிவிற்கு இங்கே

திரு ஆசாத்(உச்சரிப்பு சரியா) அவர்களுக்கு. என்னைப் பற்றிய புரிதலுக்கு நன்றி. என்னுடைய உணமையான பதில்கள் இதோ

////அமெரிக்காவில் படித்துவந்து பிறகு அமெரிக்காவையே சாத்தான்1 என்று சொல்லுவதாக ஒரு சவூதி நண்பரைச் சொல்லும் சிவா அவர்கள், தானும் பத்தாண்டுகளாக சவூதிக்காக உழைத்துவிட்டு, பிறகு, இப்போது சவூதி அரேபியாவைக் குறைத்துப் பேசுவதற்காக இந்தப் பதிவுகளை இட்டிருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. //


எனக்கு சவூதியும் அபுதாபியும் என் வியாபரத்தில் ஒரு கஸ்டமர்களே. அவர்கள் எனக்கு திறமைகளையோ அல்லது வாழ்க்கையையோ தரவில்லை. ஆனால் அந்த அரேபியர்க்கு அமெரிக்கா , கல்வி, தொழில் நுட்பம் போன்றவைகளை தந்துள்ளது. எனக்கு கல்வியையும் அறிவையும் தந்த என் தாய் நாடு இந்தியா என் மகனுக்கு கல்வியையும் அறிவையும் தந்து கொண்டிருக்கிற கனாடா ஆகிய நாடுகளுக்கு நான் நன்றி உடையவனாக் இருக்கிறேன். அதே போல் இன்னொரு சக மனிதனும் இருப்பான் என நினைத்தேன். ஆனால் நன்றி என்ற வார்த்தை தான் அரேபியரின் அகராதியில் கிடையாதே. அதை எதிர்பார்த்து அவரை எடைப் போட்டது என் தவறு.

//பொட்டு வைத்திருப்பதால் முகத்தை மூடச் சொல்வதாகத் தோன்றுகிறது. உன்மையில் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை. பொட்டு இல்லாமலிருந்தாலும் அப்படித்தான். முஸ்லிமாக இருந்தாலும் அப்படித்தான்.//

அந்த நாட்டின் சட்டம்(எங்களுக்கு தர பட்ட அட்டவணையில்) பெண்கள் இறுக்கமாக உடை அணிய கூடாது. தலையை முக்காடிட்டு தலை முடியை மூட வேண்டும். முகம் பற்றி பேசவில்லை. மேலும் தம்மாம்/அல்கோபர் தெருக்களில் இவ்வாறு பல ஆயிரகணக்கான பேர்கள் போகும் போது எங்களை மட்டும் நிறுத்தியது பொட்டு அன்றி வேறு எது?

//'இந்த உத்தமர்கள்' என்று சிவா அவர்கள் குறிப்பிடுவது யாரை என்று விளங்கவில்லை. ஒட்டுமொத்த சவூதியினரைச் சொல்லியிருந்தாரென்றால்//

நான் உத்தமர் என்று சொன்னது நான் பழகிய சவூதியினரை அவர் முட்டாவாவா அல்லது அர்ட்னெரியா என தெரியாது. முட்டாவக்கள் மட்டுமல்ல அர்ட்னெரி சவூதிகளும் தம் பெண்டிர் சுத்தமென்றும் மற்றவர்கள் விபசாரிகளென்றும் (முக்கியமாக வெள்ளைக்கார பெண்கள். ஏன் அவ்வாறு நினக்கிறீர்கள் எனக் கேட்டதற்க்கு நீலப் படங்களைப் பார் அதில் யாராவது அரேபியாராக இருக்கிறார்களா அதனால் தான். அரேபியரிடம் இதை விட வேறு எதை எதிர்பார்ப்பது) என்னிடம் பேசியுள்ளனர். நான் ஜொள்ளிய கவர்ச்சிக் கன்னிகள் முட்டாவாக்களின் பெண்டிரா அல்லது அர்ட்னெரி சவூதியரா என விசாரிக்கவில்லை. அடுத்தமுறை நிச்சயமாக விசாரிக்கிறேன்.

திரு ஆசாத் அவர்களே உங்களுடைய் சந்தேகங்களை கேளுங்கள். நான் பதில் சொல்லுகிறேன். நான் தவறு செய்கிறேன் என்றுணரும் போது அதை தவறென்று மன்னிப்புக் கேட்கவும் நான் தயங்கியதில்லை