Sunday, April 30, 2006

தீவிரவாதிகளின் மற்றுமொரு வெறியாட்டம்

அப்பாவியான திரு சூரியநாரயணா அவருடைய கடமையை செய்ததற்கு, ஆப்கானிஸ்தானிய மக்களின் மேம்பாட்டுக்கு உதவ சென்றதற்கு அந்நாட்டு தீவிரவாதிகள் தந்த பரிசு தலைத்துண்டிப்பு.

ஆப்கானிய சகோதரர்களே உங்கள் நன்றி இதுதானா?

உங்களின் அரேபிய எஜமானர்களின் மூளைச் சலுவையில் இந்தியாவின் உதவியை மறந்ததும் ஏனோ.

திரு சூரியநாரயணா அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெஞ்சில் பாரத்துடன்

சிவா

Wednesday, April 26, 2006

குரங்கு - மனிதன்

இந்த பதிவிற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் சிறிதும் சம்பந்தமில்லை.

எனக்கு டார்வின் சித்தாந்த்தைப் பற்றி சிறிதும் தெரியாது.

என்னுடைய புத்தக அறிவு மிகக் கம்மி.

இது நான் படித்தப் ஒரு புத்தகத்தின் மொழிபெயர்ப்பே.


மானுடம் மேலும் வீழ்வதை தடுப்பது எப்படி? என்பது கேள்வி.


பதில் வருகிறது ஒரு வெடியாக.


மானுடம் வீழ்கிறதா?

இது ஒரு கப்ஸா.

உங்கள் மதகுருக்களின் வியாபரத் தந்திரம். "மானுடம் வீழ்கிறது. நாங்கள் தான் மேலும் விழாமல் தாங்கிக் கொண்டிருக்கிறோம்". என்று கடந்த 5000 வருடங்களாகக் சொல்கிறார்கள்.
5000 வருடங்களாக மீளாத மானுடம் இப்போது மீண்டதா. இல்லவே இல்லை.
அப்படியென்றால் அவர்கள் சொல்வது அத்தனையும் பொய்தானே.

சரி வீழ்வதைப் பற்றிப் பார்ப்போம்.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்ற டார்வினின் சித்தாந்தத்தை எடுத்துக் கொள்வோம். (டார்வின் பெயரைக் கேட்டாலே சில மதவாதிகள் எரிவார்கள்).

ஒரு மரத்தில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அதில் வலிமையான குரங்குகள் உயரே சென்று தங்கள் வெற்றியை நிலைநாட்டும். அவர்களின் கீழே அந்த குரங்குகளின் ஆசைநாயகிகளால் உருவான அந்தபுரம் இருக்கும். அதற்கும் கீழே அந்த வெற்றிப் பெற்றக் குரங்கின் அடிவருடிகள் இருப்பார்கள். அதற்க்கும் கீழே பலவீனமான குரங்குகள் இருக்கும். அந்த பலவீனமான குரங்குகளை விட பலவீனமான குரங்குகள் மரத்திலிருந்து கீழே வீழ்ந்தன.

அந்த வீழ்ந்த குரங்குகள் எழுந்து தனது இரண்டு கால்களால் நடந்து மனிதனாக மாறின. அப்போது மரத்திலிருந்த குரங்குகள் அவைகளை கிண்டல் செய்தன. சுதந்திரமாக மரத்தில் ஏறி துள்ளி விளையாடுவதை விட்டு இரண்டு கால்களால் தரையில் சர்க்கஸ் செய்கின்றனை என்று எள்ளி நகையாடின.

ஆக.... வீழ்தல் என்ற சொல்லுக்கே இங்கு இடமில்லை. வீழ்ந்தவன் தான் எழுந்து நடக்கிறான். வீழாத குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே உள்ளன. அவர்களைதான் இவர்கள் மேலும் வீழாமல்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களே குரங்குகளாக இருக்காதீர்கள். தடைகளை கடந்து மனிதனாகுங்கள்.

மனிதன் எப்பொழுதுமே வளர்கிறான். அவன் ஒரு போதும் வீழ்வதில்லை

சரியா? சிவா

சரிதான் ஓஷோ அவர்களே

திரு. மரிய குமாரன் அவர்களுக்கு........

புதிய வலைப்பதிவாளர் ம்ரியகுமாரன் அவர்களே வருக.

நீங்கள் என் பெயரில் இட்ட வலைப்பதிவை தேன்கூட்டில் கண்டேன், அதற்கு பின்னூட்டமுமிட்டேன். நீங்கள் இதுவரைக்கும் அதை publish செய்யவில்லை. அதனால் அதை இங்கு publish செய்கிறேன்

திரு மரிய குமாரனின் வலைப்பதிவு இதோ http://idiminnal.blogspot.com/

"மரிய குமாரன்,
நான் 1000 முறைக் கூறிவிட்டேன். வியாபாரத்தில் நன்றி தேவையில்லை மற்றும் நான் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல என்று. திரும்ப திரும்ப இதையே சொல்லி சொல்லி கொண்டிருந்தால் நான் இஸ்லாமிற்கு எதிராக மாறிவிடுவேன் அதன் பிறகு நான் சொன்னது எல்லாம் பொய் ஆகிவிடும் என கனவுகாணாதீர்கள்.நான் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல அல்ல அல்ல பல மூறை கூறிக் கொள்ளவும்.

சும்மா ரீல் விடாதீர்கள். அந்த நாட்டிற்கு போய் வேலை தேட எல்லாம் முடியாது. இங்கேப் பார்த்து வேலைக் கொடுத்து பிறகு அங்கெ சேம்பர் ஆப் காமர்ஸில் பெர்மிட் எடுத்து. அதைக் கொடுத்து ஏதோ ஒரு அமைச்சகத்தில் விசா எடுத்து. அது பம்பாய்க்கு வந்து. பிறகு மருத்துவ சோதனை முடித்து விசா ஸ்டாம்ப் ஆன பிறகு தான் அந்த நாட்டிற்கே போக முடியும். இங்கே வேலைக் கிடைக்காமால் விமானம் ஏறி அங்கே போய் வேலை தேடுவதெல்லாம் யுஏஇ ல் தான். சவூதியில் அல்ல. ஏஜந்த் என்ற நரிகளிடம் நம் சகோதரர்கள் ஏமாறும் சோகங்களை மறைக்காதீர்கள்.
சவூதியின் புதிய சட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த சட்டங்களை நல்ல கம்பெனிகள் பின்பற்றுகின்றன. நலிந்தவர்களுக்கு அங்கெ நடப்பவை பரவலாக இப்போது தெரிந்துவிடுவதால் அந்த சட்டம். இது சட்டத்தால் விடிவுகாலம் வந்துவிடாது. நம் சகோதரர்கள் சட்டபடி அவர்களின் உரிமைகளுக்காக போரட வேண்டும். அப்போதுதான் அங்கே விடிவுகாலம் பிறக்கும். துபாயில் சிறிது போராடி வெற்றி பெற்றுள்ளார்கள்"

Monday, April 24, 2006

ஒரு சவூதி அரேபியரின் சவூதி அனுபவங்கள்

நான் என்னுடைய அனுபவ்ங்களை எழுதும் போது யாரோ ஒரு நண்பர் இந்த சுட்டியைக் கொடுத்திருந்தார். http://muttawa.blogspot.com/ அதை இன்றுதான் பார்த்தேன்.

அதைப் பார்த்ததும் நம் தமிழ் நணபர்களிடம் அதைப் பகிர்ந்துக் கொள்ள ஆசை. நான் எழுதுவது எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த சவூதி பதிவாளார் புட்டு புட்டு வைக்கிறார்

என் மேல் வெறுப்பை உமிழும் தமிழ் இஸ்லாமிய சகோதரர்களே இதோ...... இதோ...... உங்கள் எஜமானர்களில் ஒரு மனிதாபிமானியின் வலைப் பதிவு.

இந்தியரை அன்பாக நடத்துக்கின்றனர் உறுதியுடன் கூறிய சுவனப்ப்ரியன் அவர்களே இதோ ... இதோ..... உங்கள் அன்பு சவூதி ச்கோதரர் படம் போட்டுக் காட்டுகிறார்.பெண் குழந்தைகள் முகம் மூடவில்லை என்பதற்க்காக அவர்களை தீ விபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் தடுத்து அக்குழந்தைகளைக் கொன்ற முட்டாவாகளின் அட்டுழியத்தை தாக்கிவிட்டு என்னை தாக்க வாருங்கள் பாருங்கள் இதை http://news.bbc.co.uk/2/hi/middle_east/1874471.stmசுட்டியைக் கொடுத்த நண்பருக்கு நன்றி....நன்றி... நன்றி.....

என் அரேபிய அனுபவ்ங்கள் - 9

மனித உரிமைகளைப் பற்றி அடுத்தப் பதிவில் அதற்கு முன் லைட்டான சப்ஜெக்ட்ஸ்

கார் ஒட்டும் உரிமம் பெறுவதுப் பற்றி:


சவூதியில் டிரைவிங் லைசன்ஸ் சுலபமாகக் கிடைத்துவிடும். ஒரு பெரிய மைதானத்தில் ஒரு வலம் வர வேண்டும். அதில் ஒரு மலை, ஒரு வலதிருப்பம் ஒரு இடதிருப்பம் ஒரு ஸ்டாப் போர்டு இருக்கும். கடைசியாகஒரு ரிவர்ஸ் பார்க்கிங். அவ்வளவுதான். நம்மாட்கள் எல்லாருக்கும் முதல் அல்லது இரண்டாவது முறை லைசன்ஸ் கிடைத்துவிடும். கார் ஓட்டும்போது கவனமாக் இருக்கவேண்டும். ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் ... ஐயோ... அதைப் பற்றி பின்ஆனால் அபுதாபியில் அது ஒரு பெரிய கொடுமை. முதலில் ட்ராபிக் சிக்னல்பற்றி ஒரு ஒரல் எக்ஸாம். பிறகு பார்க்கிங் மட்டும் ஹில் பார்க்கிங் டெஸ்டுகள், இதுவரைக்கும் தான் உங்கள் திறமை. அதன் பிறகு ரோட் டெஸ்டிற்கு வரவேண்டும். ரோட்டிற்கு வந்த பிறகு அந்த இன்ஸ்பெக்டரின் கருணைதான். ஒவ்வொரு டெஸ்ட்டிற்கும் இடைவெளி 2 மாதங்கள் இருக்கும்.

எனக்கு கார் ஒட்ட லைசென்ஸ் கிடைத்தது 13 முயற்ச்சிகளுக்கு பிறகு அதாவது சுமார் 26 மாதங்களுக்குப் பிறகு!!!. எனக்கு லைசன்ஸ் மறுத்ததிற்கு காரணங்கள் இதோ:

1. சரியான பயிற்சித் தேவை (சவூதியில் 5 வருட்ம் இந்தியாவில் பல வருட்ங்கள் கார் ஓட்டியவன் நான்)

2. கவனம் தேவை

3. பின் பக்கக் கண்ணாடியை அடிக்கடிப் பார்க்கவும்

4. அதிகமாக கண்ணாடிப் பார்க்கிறீர்கள். முன்னே பார்க்கவும்

5. வேகம் வேண்டும்

6. மிக வேகம்

7 மிக சரி ஆனால் இன்னும் பயிற்ச்சி தேவை

8. மிக சரி. உங்கள் பெயர் என்ன சிவாவா? அப்படியென்றால் இந்துவா? என்று வாயால் கேட்டுவிட்டு எழுத்தில் இன்னும் பயிற்ச்சி தேவை என குறிப்பு
9. மிக சரி அடுத்தமுறை இன்னும் நன்றாக ஒட்டவும்

10 . இந்துவா... அப்படியென்றால் கவனம் தேவை

11. கவனம் வேண்டும்

12. பயிற்ச்சி வேண்டும்

13. நன்றாக ஓட்டினீர்கள். நீங்கள் இஞ்ஜினீயாராக இருப்பதால் உங்களுக்கு லைசென்ஸ். உடனடியாக கார் வாங்கவேண்டும் சரியா?. மபுரூக்.

ஒவ்வொரு முறையும் 100/150 பேர்கள் வருவார்கள் 2 பேருக்குத்தான் லைசென்ஸ் கிடைக்கும். லைசென்ஸ் இருந்தால் தான் கார் வாங்கமுடியும்.

லைசென்ஸ் கிடைக்காததால் கார் வியாபாரம் படுத்தது. கார் வியாபாரிகள் மன்னரிடம் முறையிட்டனர். மன்னரும் மனமிறங்கி "யாரங்கே அனைவருக்கும் லைசன்ஸ் வழங்கு" என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி எனக்கு கிடைத்தது. எனக்கு லைசன்ஸ் கிடைத்த அன்று 25 பேருக்கு லைசன்ஸ் கிடைத்தது. சோ.....எனக்கு கிடைத்தது என்னுடைய திறமையினால் அல்ல. மன்னர் அளித்த பரிசால்.....

லைசென்ஸ் கிடைத்தபிறகு கார் வாங்கும் படலம் தொடங்கும். அரேபியர்கள் புது கார் பெரிய்ய்ய்ய்ய 4 வீல் ட்ரைவ் வாங்குவர்.

பிறகு மற்ற அரேபியர்கள் பழைய்ய்ய்ய்ய பெரிய வண்டி வாங்குவர். அவர்களின் தேவை அப்படி ஒவ்வொருவர்க்கும் மினிமம் 5 குழந்தைகள் இருக்கும்

இந்திய்ர்கள் கார் வாங்குவது மிக வேடிக்கையாக இருக்கும். முதலில் புதுசா பழசா என்று ஒரு வாக்குவாதம் செய்து ஒரு முடிவிற்கு வருவார்கள். பழசு என்றால் மெர்ஸிடஸ் பென்ஸ், BMW போன்ற கார்களைப் பார்ப்பார்கள்.

புதுசு என்றால் எல்லா கார்களின் விலைகளைக் கேட்டு கடைசியாக டொயோட்டா காம்ரி வாங்கிவிடுவர். ஆகையால் நீங்கள் ஒரு டொயோட்டா காம்ரி காரைப் பார்த்தால் அது ஒரு இந்தியருடையதாக இருப்பதற்கு அதிக சாத்தியம் உண்டு

Friday, April 21, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 8

சமய போலிஸ் அல்லது முட்டாவா (muttawa) இவர்களை சவூதியில் சந்திக்கலாம். மற்ற அரபு நாடுகளில் கண்களில் தென்படவில்லை. இவர்களின் வேலை முஸ்லிம்கள் ஒழுங்காக அவர்களின் சமய சடங்குகள் செய்கிறார்களா எனக் கண்காணிப்பதுதான். இதில் தப்பே இல்லை அந்த நாட்டின் மதம் அவர்களின் சட்டம் அவர்களின் ஆணை. ஆனால் இவர்கள் சட்டத்தை மீறுவதுதான் என்னுடைய பாய்ண்ட்.

நானும் என்னுடைய அமெரிக்க நண்பனும் ஒரு வெள்ளிக் காலையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சாமன்கள் வாங்கி காரில் ஏற்றிக் கொண்ட்ருந்தோம். இருவருமே அரைக்கால் சட்டை அணிந்திருந்தோம். அரைக்கால் சட்டை ஆண்கள் (அரபிகள் உட்பட) அணிவது சகஜம். அப்போது என் அமெரிக்க நண்பருக்கு சுரீல்லென்று பிரம்பால் முட்டிக்கு அருகே அடி. அவர் ஆஜானுபாகனவர். அவரை அடித்தவரை அவர் யாரென்று கூட பார்க்கவில்லை. திருப்பி பாளாரென்று அடித்தவரைக் கன்னத்தில் அறைந்த்துவிட்டார். அவர் விட்ட அடியில் அடிவாங்கியவர் ஒரு முட்டாவா. வ்லி தாங்கமல் அந்த முட்டாவா சுருண்டுவிட்டார். பிறகுதான் எங்களுக்கு விபரீதம் புரிந்தது. நல்லவேளை அந்த முட்டாவா அவருடைய பரிவாரங்களுடன் அங்கில்லை. நாங்கள் உடனடியாக காரைக் கிளப்பி வந்துவிட்டோம். அந்த முட்டாவா எங்களை பின் தொடர்ந்தார். எங்களுக்கு கதிக் கலங்கிவிட்டது. சரி என்ன நடக்கிறது பார்த்துவிடுவோம் எனக் காரை நிறுத்தினோம் . அவர் எங்களை அணுகி உங்கள் ஸ்பான்சர் யார் எனக் கேட்டார் நாங்கள் எங்கள் ஸ்பான்சர் பெயரைச் சொன்னவுடன். அவர் பயந்துவிட்டார். உடனடியாக பவ்யமாக அரை நிஜார் அணிவது இஸ்லாமிற்கு எதிரானது ஆகையால் இனிமேல் அணியாதிர்கள் என்று அறிவுரை சொல்லி. நான் உங்களை அடித்ததையும் நீங்கள் என்னை அடித்ததையும் வெளியே சொல்லவேண்டாம் எனக் கூறியவுடன். என் அமெரிக்க நண்பருக்கு உடனடியாக தைரியம் வந்துவிட்டது. அவரும் சலம்ப ஆரம்பித்தார். அவரை சாமதானப் படுத்தி அங்கிருந்து விலக்கிக் கொண்டுவருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.


அதன் பிறகு ஆண்களுக்கான உடை விதிகளைப் பற்றித் தெரிந்துக் கொண்டேன். ஆண்கள் முட்டிக்கு மேல் வரும் அரைக்கால் ச்ட்டையை விளையாட்டு மைதானத்தில் அணியலாம். ஆனால் கட்டிததுக்குள் அணிய கூடாது. நீச்சல் குளத்திலோ கடலிலோ குளிக்கும் போது முட்டிகால் மறைக்க கூடிய அரைக்கால் சட்டை அணிய வேண்டும் !!!!.


பெண்கள் தங்கள் உடலின் வளைவுகள் தெரியும்படி உடை அணியக் கூடாது. தலைமுடியை மறைத்துக் கொள்ளவேண்டும். இந்த விதியின் படி அபாயா அணிந்து தலையை மூடிய என் மனவியுடன் நான் வெளியே சென்ற போது ஒரு முட்டாவா பரிவார்ம் எங்களை நிறுத்தி என் மனைவியின் முகத்தை மூட சொன்னது. அவர் முகத்தில் அணிந்திருந்த பொட்டு அவர்களை உறுத்தியது. இந்த உத்தமர்களின் மனைவியரும் மகள்களும் சகோதரிகளும் சவூதி எல்லையை விமானம் தாண்டியவுடன் முகமூடிகளைக் களைந்து ஆங்கிலப் பட கவர்ச்சி கன்னிகள் ரேஞ்சுக்கு வலம் வந்து ஜொள் விருந்துப் படைப்பர்


ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை நடக்கும். அப்போது கடைகள் அனைத்தும் மூட வேண்டும். அப்போது தான் இந்த முட்டாவாகளுக்கு வேலை அதிகம். எல்லா முஸ்லிம்களையும் தொழ சொல்லி பிரம்பு கொண்டு துரத்துவார்கள். நான் முஸ்லிம் இல்லை என்று சொன்னால் விட்டு விட வேண்டும் அதுதான் சட்டம். ஆனால் நம் உத்தம்ர்கள் முஸ்லிமிலையா நீ என்று ஒரு அடி கொடுத்துவிட்டு போவார்கள். இவர்களிடம் நான் நிறைய முறை அடி வாங்கியிருக்கிறேன். (சில பேர் புன்னகை புரிவது எனக்கு தெரிகிறது).


ஏற்கனவே குடும்பத்தை பிரிந்து , ஒரே அறையில் 6/7 பேர்களாக வாழும் நம் ஏழை சாகோதரர்களின் லேபர் காம்பில் இந்த முட்டாவாக்கள் குத்தாட்டம் போடுவார்கள். சோதனை செய்கிறேன் என்ற பெயரில் இம்சை செய்வார்கள். அவர்கள் பெட்டியைக் குடைந்து குடும்ப போட்டோக்களை கிழிப்பது, புத்தகங்களை கிழிப்பது போன்றவை சர்வ சாதரணம்.

நான் அங்கிருந்த சமயம் சாடிலைட் சானல்கள் புதிது ஆனால் தடை செய்யப்ட்டது. இருந்தாலும் நம் பாகிஸ்தானிய சகோதரகள் அதை விற்பார்கள் . அதை கொண்டு வந்து வீட்டில் மாட்டிக் கொடுப்பார்கள். இந்த சாடிலைட் டிஷ்கள் கன்னா பின்னாவென்று பெருக ஆரம்பித்தன. இதைக் கண்ட முட்டாவாக்ளுக்கு ஒரே பொறாமை. இந்த டிஷ்களை துப்பாக்கிக் கொண்டு சுட ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த வடிவேல்த்தனமான முட்டாவாக்களின் செல்வாக்கு பணக்காரர்களிடம் செல்லுபடியாகவில்லை. பணக்கார சவுதிகளும் காம்பவுண்டில் வாசித்தவரும் சாடிலைட் டிவி மூலம் மேலைநாட்டு பலான படங்களை கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

இந்த முட்டாவக்களை அடையாளம் கண்டுக்கொள்வது எப்படி. இவர்களின் அங்கி கணுக்காலுடன் முடிந்துவிடும். தலையில் முக்காட்டை இறுக பிடிக்கும் கருப்பு திரிமணை இருக்காது. முன் நெற்றியில் தரையில் தலைவத்து தவறமால் தொழுகை செய்வ்தால் ஏற்பட்ட தழும்பு இருக்கும்.

இந்த சாடிலைட் டிவியை வைத்து ஒரு ஜோக்கான சம்பவம். அபுதாபியில் நான் இருந்த காலனியில் எல்லாருக்கும் கேபிள் டிவி இருந்தது. ச்ன் டிவி யும் இருந்தது. ச்ன் டிவி தீடிரென துண்டிக்கப் பட்டது. அதற்கு சொன்ன காரணம் காலையில் இந்து சமய பாடல்கள் ஒளிபரப்பபடுகிறதாம். ஆனால் உண்மையான காரணம் மிட்நைட் மசாலா நிறுத்தப்பட்டதால் சன் டிவி நிறுத்தப்பட்டது. மிட்நைட் மசாலவை ஒளிபரப்பி அரேபியருக்கும் தமிழ் கற்று தந்த சன் டிவி வாழ்க


மனித உரிமைகள் பற்றி அடுத்து.......

Thursday, April 20, 2006

அன்பை பெற எழிய வழிமுறை

அன்பை பெறுவதற்க்கு மூன்று அம்ச திட்டம் இதோ:

1. அழி

2. குறைகளை ஏற்றுக்கொள்

3. கொடு


1. அழி :

உன் இறந்த காலத்தை உன் எண்ணத்திலிருந்து அழி. உன் எண்ணங்களை உன் முன்னோர்கள், பெற்றோர்கள், தலைவர்கள், ஆசிரியர்கள், புராணங்கள் , வேதங்கள், மதங்கள் ஆகியோர் அடிமை ஆக்கி வைத்துள்ளனர். அந்த ச்ங்கிலிகளை உடைத்து விட்டு நீ நீயாக மாறு. உன் மனதை ஒரு வெற்றிடமாக்கு அப்போது தான் அது புது அன்பை பெற தயாராக நிற்கும்


2. குறைகளை ஏற்றுக் கொள் :


நீ அன்பு செலுத்த குறைகள் இல்லாத நிறையான மனிதனுக்காக நீ காத்திருந்தால் . நீ ஏமாறுவாய். உன் வாழ்நாள் முழுவதும் அவனுக்காக காத்திருக்க வேண்டியதுதான். குறைகள் இல்லாமல் மனிதன் பிறந்த்தும் இல்லை இனிமேல் பிறக்க போவதுமில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித் தன்மை வாய்ந்தவன். அவன் தனித்தன்மையுடன் அவனை ஏற்றுக்கொள்.


3. கொடு

Give the best you have and the best will come back to you. அன்பை பெற நீ அன்பைக் கொடு. நிபந்தனை அற்ற அன்பைக் கொடு. நீ கொடுத்தால் மற்றவர்களும் கொடுப்பார்கள். ஆகையால் கொடு.


என்ன சரியா நண்பர்களே?

என் அரேபிய அனுபவங்கள் - 7

கரடி


இது இவருக்கு நாங்கள் இட்ட செல்ல பெயர். இவர் தினமும் காலையில் எங்களிடம் சில டெக்னிகல் கேள்விகளைக் கேட்டு ஒரு காமெடி டைம் நடத்துவார். காமெடி டைம் நடத்துபவர் கவிஞர் கரடிமுத்து அல்லவா? அதை சுருக்கி கரடியாக்கிவிட்டோம்.

இவர் அரபு எமிரேட்டில் ராஸ்-அல்-கைமா என்ற நாட்டை சேர்ந்தவர். இவர் டெலிகம்யுனிகெஷன் துறையிலிருந்து எங்கள் துறைக்கு மாற்றலாகி வரும் போது அந்த துறையில் இருந்தவர்கள் கொண்ட்டாடினர் எனக்கும் ஜாக்கிரதையாக இரு அவன் ஒரு கடியன் என எச்சரிக்கை விடுத்தனர். நான் வழக்கம் போல இதை உதாசீனப் படுத்தினேன்.

கரடியை அன்புடன் அரவணைத்து என்னுடைய டிபார்ட்மெண்டிற்க்கு வரவேற்றேன். ராஸ்-அல்-கைமா அரபு எமிரேட்டில் மிகவும் பிந்தங்கிய நாடு. அங்கே மக்களின் முக்கிய தொழில் மீன் பிடிப்பது சிறு விவசாயம். அவ்வளவுதான். அங்கேயுள்ள இளைஞர்களுக்கு இந்திய இளைஞர்கள் ஒரு ரோல் மாடல். இந்தியர்கள் படித்துவிட்டு நம் அண்டைநாட்டில் இவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள். நாமும் படிப்போம் என்ற முனைப்போடு படிப்பார்கள். அரசாங்கமும் அவர்களுக்கு நல்ல உதவிசெய்யும். அந்த வகையில் சுமாராக படித்து அங்குள்ள I.T.I போன்ற பள்ளியில் படித்தவன் கரடி. அவன் தன்னை அமீரக இந்தியன் என சொல்லுவதில் பெறுமைக் கொள்வான். ஏனென்றால் உலகிலேயே அதிகமாக படித்தவர் இந்தியர் அமீரகத்தில் அதிகமாக படித்தவர் ராஸ்-அல்-கைமாவினர். ஆகையால் அவர்கள் அமீரக இந்தியர்கள் . இவனுக்கு நான் தொழிலை கைப்பிடித்துக் கற்றுக் கொடுத்தேன். இவனும் என்னை அன்புடன் நடத்தினான். இவன் தான் என்னிடம் அரேபியரிடமிருந்த சமூக ஏற்றதாழ்வுகளை விலாவாரியா விளக்கினான். முஸ்லிம் களிடேயே சுன்னி மற்றும் ஷியா என்று பிரிவு இருப்பது நமக்கு தெரியும். சுன்னி பிரிவில் மேலும் அவர்களுடைய பழங்குடியினர் பேரில் பல குழுக்கள் உள்ளன். ஒவ்வொரு அரேபியர்க்கும் அவருடைய பழங்குடி பெயர் அவருடைய சர் நேமாக இருக்கும். உதாரணம் : அல் சவுத், அல் -நயான், அல்-மக்டூம் போன்ற அரசக் குடும்ப பெயர்கள்.

நம் கரடி மீனவ குடும்பத்தை சேர்ந்தவன். சிறிது கலரும் கம்மி. ஆகையால் இவனை முன்னேற விடாமல் இவர்களில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள் இவனை நசுக்குவதை என்னிடம் சொல்லி புழுங்குவான். நாம் முன் பார்த்த மான் மேட்டுக்குடியை சேர்ந்தவன். கரடிக்கும் மானுக்கும் அடக்கடி சண்டை நடக்கும். இவர்களில் மேட்டுக்குடி பழங்குடியினர் படிப்பு இருக்கிறதோ இல்லையோ சிபாரிசால் இஞ்ஜீனியர், மானேஜர் என்று மேலே போய்க்கொண்டே இருப்பர். சிபாரிசை இவர்கள் வாஸ்தா என அழைப்பர். கரடி ஒத்த வயதுடையவன் கரடியைவிட படிப்பில் குறைந்தவன் மானேஜராக வந்து கரடியை அவன் பிறப்பு, ஊர், தொழில் காட்டி மட்டம் பேசும்போது கரடிக்கு பைத்திய்மே பிடித்துவிடும். காச் மூச் என்று கத்துவான். அப்போது அவனுக்கு ஆறுதல் சொல்லுவேன். எங்கள் நட்பு இறுகியது. நான் இவனுடன் நட்பாக இருந்ததால் அரேபிய மற்ற மேட்டுக்குடியினர் என்னை முறைத்தனர்.

இந்த நிலையில் கருப்பண்ணசாமி என ஒரு மானேஜர் வந்தார். இவருக்கு இந்த பெயர் வரக்காரணம் அவர் கருப்பாக இருப்பது நம்மூர் காவல் தெய்வங்களை போல் எல்லோரும் சரியான நேரத்தில் வருகிறார்களா கேட்டில் நின்று காவலாளி வேலைப் பார்ப்பது. அதனால் அவருக்கு அந்த பெயர்.

இவர் வந்தவுடன் மேட்டுக்குடி அரேபியர்கள் வேறு இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டோ அல்லது வேலையை விட்டோ போய்விட்டனர். இவரும் தன்னுடைய பதவிக்கு சற்றும் தகுதியில்லாத வேலைகளையும் சக தொழிலாளர்களை கண்ட மாதிரி அவமான படுத்தவும் செய்வார்.

இவர் பதவி மிக உயர்ந்த பதவி. நம்மூரில் சதர்ன் ரயில்வே ஜெனரல் மானேஜர் பதவிக்கு சமமானது. இவர் மேட்டுக்குடி அரேபியரை மிகவும் மோசமாக நடத்துவார். இந்தியர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இவர் ஒரு முறை தீடிரென்று தன் சகாக்களுடன் என் அறைக்கு வந்து "என்ன சதாகாலமும் கணிணியில் வேலைசெய்கிறாய்" என என்னை மிரட்டினார்'. நானும் சளைக்காமல் " கணிணி பொறியாளர் கணிணியில்தான் வேலை செய்ய வேண்டும். பம்பில் வேலைசெய்தால் ரிபைனரி வெடிக்கும் " என்று பதிலளித்தேன். இவன் பெரிய பாஷாவாக இருப்பான் போலிருக்கிறதே என்று அரபியில் சொன்னதை கரடி பிறகு என்னிடம் சொன்னான். நணபர்கள் என்னை பாஷா வாக்கிவிட்டனர்.

இந்த கருப்பண்ணசாமி வந்தவுடன் கரடியின் நிலை மாறிவிட்டது. கரடிக்கு பதவி உயர்வு வந்தவுடன் அவன் என்னிடமிருந்து விலக ஆரம்பித்தான். மேலும் கரடி ஊரை சேர்ந்த குசன் என்று எங்காளால் பெயரிடபட்ட ஒருவன் வந்த சேர்ந்தான். அமெரிக்கவில் ஏதோ பேர் தெரியாத கல்லூரியில் படித்தவன். குள்ள்மாக இருப்பான். அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவை சாத்தான் என்பான். ஆகையால் இவனுக்கு நாங்கள் குட்டிசாத்தான் என் பெயரிட்டோம். அது சுருங்கி குசன் ஆகிவிட்டது.

மேலே கருப்பண்ண சாமி கீழே குசன் வந்தவுடன் கரடி ஆளாதிக்க வேலையில் இறங்கிவிட்டான். நணபனாக இருந்தவன் என் மதம், என் நாடு இவைகளைக் காட்டி என்னை வெறுக்கவும் ஒதுக்கவும் ஆரம்பித்தான். இவன் செய்த இந்த துரோகம் தான் அரேபியரைப் பற்றி என்னை மேலும் படிக்க மற்றும் விசாரிக்கத் தூண்டியது.

ஓவ்வொரு பழங்குடியினரும் மற்றவர்களின் குலத்தொழிலைக் காட்டி வெறுக்கின்றனர். இவர்கள் கேவலமாக மதிக்கும் தொழில்கள் : மீனவர், கடற்க்கொள்ளைக்காரர், நாடோடிகள், காவல்காரர்கள், மேலும் பல. ஒருசில பழங்குடியினர் இன்னும் பாலைவனங்களில் நாகரீக வாசனையில்லாமல் அலைகின்ற்னர். ஆனால் இந்நாடுகளின் அரசர்களோ முப்பதாண்டுகளில் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிவிட்டோம் என மார்தட்டுகிறார்கள்

சவூதி தம்மாம் தங்க மார்க்கெட்டில் நம் ஆட்கள் தங்க வேட்டை நடத்தும் நேரத்தில் பிச்சை எடுக்கும் சவூதி பெண்மணியை நான் பார்த்துள்ளேன். ஆக அரேபியாவிலும் மக்கள் தத்தம் பிறப்பை வைத்து ஆளாதிக்கம்
செய்கின்றனர். ஆளாதிக்கம் செய்பவர் எந்த மதத்தை சேர்ந்தவராயினும் கண்டிக்க தகுந்தவர்களே.

அரேபியரிடம் உள்ள ஏற்றதாழ்வுகளைப் பற்றி நான் சொன்னது ஒரு tip-of-the iceberg தான். நம்மிடமுள்ள எல்லா சமுதாய அழுக்குகளும் அங்கேயும் உண்டு. மேலும் நம்மிடம் மறைந்துக் கொண்டிருக்கும் கொத்தடிமை முறை அங்கே expat labour என்ற பெயரில் ஜகஜோதியாய் எரிந்து கொண்டிருக்கிறது.

அடுத்து சமய போலீஸ்களைப் பற்றி......

Saturday, April 15, 2006

ஜாதிகளை ஒழிக்க எளிய வழிமுறை

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு அன்று ஒரு நெகடிவ் ஆன parody எழுதி நிறைய பேரின் மனம் நோக காரணமாயிட்டேன். மன்னிக்கவும். ஜாதிகளை ஒழிக்க நான் சொல்ல போவது நிச்சயமாக சீரியஸ் விஷயம் ஜோக் அல்ல.

புரட்சி. புரட்சிகள் நடந்தால் ஜாதி பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? விடாது. எத்தனை புரட்சிகள் நடந்துள்ளன? அவைகள் பிரச்னைகளைத் தீர்த்ததா? இல்லை. அதிகாரம் ஒரு சார்பாரிடமிருந்து மற்றவருக்கு மாறியது. பிரச்னைகள் ஒய்ந்தனவா? இல்லை.

மதங்கள் மாறினால் ஜாதிகள் மறையுமா? மாறாது மாறவே மாறாது.

அரசியல் தலைவர்கள், இயக்கத் தலைவர்கள் இவர்களால் மாற்ற முடியுமா?. எத்துணைத் தலைவர்கள் அறிஞர்கள் தோன்றிவிட்டார்கள் தங்களின் வாழ்நாட்களை தியாகம் செய்தார்கள். ஜாதிகள் ஒழிந்ததா? இல்லை இல்லவே இல்லை

அப்படியென்றால் ஜாதி ஒழிய என்னதான் வழி . அன்பு. அன்பு மட்டும் தான் ஜாதியை ஒழிக்கும். இந்த அன்பு செலுத்த மதம் வேண்டுமா? இயக்கம் வேண்டுமா? தலைவர் வேண்டுமா? இல்லை. மனிதன் தான் வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன் சக மனிதனை அன்புடன் நடத்தினால் போதும். அங்கே ஜாதிகள் மறையும் பேராசைகள் மறையும். அதிகாரமும் தாழ்வு மனபான்மையும் ஒழியும். மனிதன் இறைவனை விட வலிமையானவன் அவனிடம் அன்பிருந்தால் போதும் இறைவன் தேவையில்லை. மதங்கள் தேவையில்லை

ஆகையால் சக மனிதர்களே மனிதர்களை நேசியுங்கள்


பி.கு - 1 : திரு தங்கமணி அவர்களின்சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? என்ற பதிவிற்கு வந்த 279 பதிவுகளில் premalatha மட்டும் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார். அங்கு நடந்த கூச்சலில் இவருடைய வாய்ஸ் கேட்கவேயில்லை.

பி.கு - 2 : நான் மேலே கூறிய கருத்துகள் என் மரியாதை வைத்திருக்கும் சிலருடைய புத்தங்களில் படித்தது. என் மரியாதைக்குரியவர்கள் மலர்மன்னன் மட்டுமல்ல ஒஷோ, சாய்பாபா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் கூட

பின்னூட்டம் அளிக்க உதவி :

1. மிக நல்ல பதிவு தொடருங்கள் உங்கள் எழுத்து பணி

2. நீங்கள் அரேபியர் மேல் வைத்துள்ளது அன்பா? அங்கே ஒரு வேடம் இங்கே வேறுவேடமா? என்னே உங்கள் சமத்துவம்?

3. ஓஷோ ஒரு வடநாட்டுப் பார்பண செக்ஸ் சாமியார் , சாய்பாபா புட்டபர்த்தி பரட்டை மந்திரவாதி, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு தமிழ் பார்பனிய கார்பரேட் சாமியார். இவர்களின் கருத்தை பரப்பும் நீ தமிழின துரோகி

4. இந்து மதத்தை அழிப்பதுப் பற்றி பேசினாலோ பெரியார் பேரைக் கேட்டாலோ உங்களுக்கு ஏன் வேர்க்கிறது?

Thursday, April 13, 2006

இந்து மதத்தை அழிக்க எளிய வழிமுறை

இந்து மதத்தை ஒழித்தால் ஜாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும், இட ஒடுக்கீடுப் பிரச்னைகள் தீர்ந்துவிடும், இந்தியாவில் அமைதியும் ஆனந்தமும் நிலவும் என தமிழ்மணத்தில் பலரும் மாய்ந்து மாய்ந்து விவாதித்து தூகக்ம் கெடுகின்றனர். இந்து மதத்தை வெகு எளிதாக அளித்து விடலாம். அதற்கு சுலபமான வழி இதுதான்.

---------------------------------------------------------------------------------------

இந்தியாவில் இந்துகளுக்கு இட ஒடுக்கீடு 0% என்று சட்டம் கொண்டு வந்துவிட்டால் போதும். இந்துகள் எல்லோரும் வேறு மதத்திற்கு மாறிவிடுவர். அப்போது ஜாதி பிரச்னைகளும் இடஒடுக்கீடுப் பிரச்னைகளும் தீர்ந்த்விடும். இந்து மதமும் அழிந்துவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
-----------------------------------------------------------------------------------------

பின்னூட்டம் இட சில உதவிகள் : பின்னூட்டம் இட விரும்புபவர்கள் கீழ் கண்ட வாக்கியங்களை கட் & பேஸ்ட் செய்யலாம்

1 . வந்துண்டான்யா இன்னொரு "சோ"த்தன மான பார்ப்பணன்.

2. 10000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த
வந்தேறியின் நக்கலைப் பாருங்கள்

3. இந்த திமிர் பிடித்த பார்பணருக்கு ரிசர்வேஷன் கேலிக் கூத்தாக இருக்கிற்து. அடுத்த 10000 வருடங்களுக்கு இவர்களுக்கு பூமியில் இடம் தரக் கூடாது

4. இவர்களை திருத்த 10000 பெரியார்கள் போதாது.

5. தைரியமிருந்தால் இதை சவூதி அரேபியாவிற்கு வந்து சொல்லட்டும் கனாடா என்ற கேடுக்கெட்ட நாட்டிலிருந்து ஒரு நன்றி கெட்ட..... குரைக்கிறது.

6. மலர்மனனனின் அடிவருடி நீசன் நேசகுமாரின் நண்பன் இவனை செறுப்பால் அடிக்க மனிதநேயத்துடன் நம் சகோதரர்கள் ஒன்று சேரவேண்டும்.

Tuesday, April 11, 2006

பெண் விடுதலை

நான் இன்று லஞ்ச் பிரேக்கில் படித்து என் மனம் கவர்ந்த வாக்கியங்களை இங்கே தருகிறேன். முதலில் இதை மொழிப்பெயர்த்தேன். சரியாக வரவில்லை. அதனால் இதை ஆங்கிலேத்திலேயே வழங்குகிறேன். சிம்பிள் ஆங்கிலம்தான் ஆகையால் தமிழ்மண நண்பர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.


---------------------------------------------------------------------------------------------
The woman is not a measurement.

The woman is just like you.

Have you ever thought about the word "woman"?

It simply means a man with a womb.

She has something more than you.

If it is to be decided who is more, then the woman is more: she is a man with womb. And a womb is not an ordinary thing; it is something of immense value, because all life comes out of the womb. Man has always felt inferior to woman. Because he has felt inferior to woman, he has tried in every way to repress woman and make himself superior. It is a simple logic: only the inferior man wants to be superior. The superior is already superior, there is no question of wanting it. Unless man frees woman completely from all bondage -- religious, political, social -- he will never get rid of his own inferiority complex.


The freedom of woman is going to be the freedom of man too.

------------------------------------------------------------------------------------------------


இந்த மாதிரி எழுத ஒஷோவை விட்டால் யாரால் முடியும். 'பொய்மையிலிருந்து உண்மைக்கு.." என்ற நூலிருந்து நன்றி www.oshoworld.com

Wednesday, April 05, 2006

என் அரேபிய அனுபவங்கள் -- 6

------------------------------------------------------------------------------------
நான் முன்னரே சொன்னபடி நான் சந்தித்த நல்லவர்களைப் பற்றி பட்டியலிடுகிறேன்.


ஒரு நாள் அபுதாபியில் புதிதாக திறந்த ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்கு போயிருந்தேன். அது ஒரு வொர்க்கிங் டே. கூட்டம் இருக்காது. ஆனால் அன்று சற்று அதிகமாகவே போலிஸ் பாதுகாப்பு இருந்தது. நானும் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்று சில பொருட்களை வாங்கி விடு வெளியே வரும்போது நிறைய மக்கள் யாரையோப் பார்த்து கை அசைத்துக் கொண்டிருந்தார்கள். நானும் சற்று விலகி வந்து பார்த்தால் மறைந்த அபுதாபி மன்னர் திரு ஷேக் சாயித் அவர்கள் அந்த காம்ளெக்ஸை பார்வையிட்டும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு வாழ்த்தும் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கெடுபிடியோ பந்தாவோ இல்லை. இவர் மன்னர். இவர் சாகும் வரை நிரந்தர மன்னர். அந்த நாட்டில் 80% வெளிநாட்டினர். அவர் நினைத்திருந்தால் அந்த காம்ளெக்ஸை முழுவதுமாக அடைத்து விட்டு தனியாக அங்கு ஷாப்பிங்க் செய்திருக்க் முடியும். நம் நாட்டில் ' நிரந்தர' முதல்வர்களும் பிரதமர்களும் ஷாப்பிங் போனால் அந்த ஏரியாவே ஸ்தம்பிக்கும். மக்களுக்கு அன்று பயங்கர தாமதமும் தொல்லைகளும் நேர்ந்திருக்கும். அந்த மன்னரின் எளிமையும் மக்கள் மேல் கொண்டிருந்த பண்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அது மன்னருக்கு அழகு.அடுத்தவர் என்னிடம் பயிற்சிப் பெற்ற ஒரு பொறியாளர். இவருக்கு நாங்கள் வைத்தப் பட்டப் பெயர் மான். இவரின் இயற்பெயரைச் சொன்னால் ஹிந்தியில் குடை என்று அர்த்தம் வரும், குடையென்றாலே நமக்கு மான் மார்க் குடைகள் தானே ஞாபகத்திற்கு வரும். மேலும் டெக்னிகல் மீட்டிங்களில் இவர் மான் போல் மிரளுவார். ஆகையால் இவருக்கு மான் என்று பெயர். இவர் படித்தது 10 ஆம் வகுப்பு வரைதான். ஆனால் இவர் பொறியாளர். அதைப் பற்றிபின். இவரின் தந்தை அரச குடும்பத்தினர் வழிபடும் மசூதியில் முன் நின்று தொழுபவர். இவரின் சகோதரர் ஷாரியாத் நீதிமன்றத்தில் நீதிபதி. இவர் மானைப் போலவே அமைதியாகவும் எல்லாரிடமும் அன்புடனும் பழகுவார். எல்லாரையும் மரியாதையாக நடத்துவார்.அதிர்ந்து பேசமாட்டார். எல்லா மதத்தினருக்கும் மரியாதை செய்வார், ரமதான் நோன்பு இருக்கும் சமயத்தில் சாப்பாடு நேரம் வரும்போது நம்மை சாப்பிட சொல்லி அறையைவிட்டு வெளியே சென்றுவிடுவார். வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால் அன்புடன் விசாரிப்பார். ஆக மொத்தம் இவரிடம் மனித தன்மை இருந்தது.நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்ய மானேஜரை சந்திக்க சரியாக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கடைசியாக நான் பொறுமை இழந்து ராஜினாமாக் கடிதத்தை அவருடைய உதவியாளரிடம் தந்துவிட்டு வந்தேன், அங்கு முறைபடி ராஜினாமா செய்யவில்லையென்றால் ஒரு பெரிய தொகையை இழக்க நேரிடும். அரபிகள் நம் ஆட்களை இதில் ஏமாற்றுவது அதிகம், நான் அதிகம் கவலை பட வில்லை. வியாபரத்தில் லாபமும் நஷ்டமும் சகஜமல்லவா. ஆனால் அங்கெ பெர்சன்னல் டிபார்ட்மெண்டில் வேலை செய்த நம்மூர் காரர் ஒருவர், ஒரு சூடானி மற்றும் ஒரு அரேபியர் என்னை அன்புடன் அனுப்பி வைத்தனர். அவர்கள் நான் கனாடா சென்றபிறகு என் நண்பர்கள் மூலம் என்னை தொடர்பு கொண்டு என் பாஸ்போர்டைப் பெற்று போதிய பேப்பர் வொர்க்களை முடித்துக் கொடுத்தனர். இவ்வளவு நாள் நம்முடன் வேலை செய்தவற்கு இந்த உதவி கூட செய்யாவிட்டால் நாங்கள் நன்றிக் கெட்டவர் ஆகிவிடுவோம் என்றனர். இவர்கள் நல்லவர்கள் எனக்கு (இங்கு நான் பார்த்த நான் சந்தித்த எனக்கு உதவி செய்த மனிதர்களைப் பற்றிதான் பேசுகிறோம்)


இதன் பிறகு தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு அரேபிய பெண்மணி என்னை தொடர்புக் கொண்டு எனக்கு சேர வேண்டிய மிகப் பெரிய தொகைக்கு காசோலை அனுப்பி வைத்தார். அவர் கடைசியில் சொன்ன வார்த்தை என் நெஞ்சை தொட்டது. "னீங்கள் இங்கே வேலைப் பார்த்த காலங்களில் எங்களவர் உங்களை இகழ்ந்திருக்கலாம். உங்கள் சேவைக்கு நன்றி. உங்களுக்கு சட்டரீதியாக சேரவேண்டிய தொகையை அனுப்பிவிட்டேன். எங்கள் கம்பெனியிலிருந்து செல்பவர்கள் மகிழ்ச்சியாக செல்வதையே நாங்கள் விரும்புகிறோம்" என்று வாழ்த்தினார்.


ஒரு பாகிஸ்தானிய குழந்தைகள் டாக்டர் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அவர் தொழில் தர்மத்தை மதித்து இன/மத வேறுபாடுகளின்றி அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தார். அவர் அரேபியர்களையும் மற்றவரையும் வேறு படுத்த்தியதில்லை. அதனாலேயே அவரை வேலையிலிருந்து தூக்கினார்கள்.


அதன் பிறகு இந்தியர்கள். இந்தியர்கள் என்றால் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் இந்துகள். இந்துகள் என்றால் மேல் ஜாதியினர், கீழ் ஜாதியினர், தென்னாடவர் மற்றும் வடநாட்டவர். இவர்கள் எல்லோரும் என்னிடம் ஒரு உறவினர்களைப் போலப் பழகினர். நாங்கள் அரேபியாவை விட்டு வரும்பொழுது இவர்கள் திரளாக வந்து கண்ணீர் மல்க பிரியா விடைக் கொடுத்தனர்.

அரேபியாவில் இருந்ததால் எனக்கு நேர்ந்த நன்மைகளின் பட்டியல் இதோ:

1. அதிக பணம் (நல்ல லாபத்துடன் வியாபாரம் செய்ததால்)
2. குடும்பத்துடன் செலவழிக்க அதிக நேரம்
3. உலகம் முழுவதும் நண்பர்கள்

போதுமா நண்மைகள்.....


இப்பொது என் பதிவைப் பார்த்து பின்னூட்டம் இட்டவர்க்கும் தனி பதிவு பொட்டவர்க்கும் சில பதில்கள்

இறைநேசன் அவர்கள் அரேபியாவில் (சவூதி உட்பட) விபசாரம் செய்ய அரேபியர்க்கு வாய்ப்பே இல்லை அவர்கள் உத்தமர்கள். கேடுகெட்ட இந்தியாவில் அதிக விபசாரிகள் அலைவதால் அப்பாவி அரேபியர் கெட்டுவிட்டார் என சொல்கிறார். இறைநேசன் அவர்களே அல்கோபரில் மிகப் பெரிய கம்பெனிகளின் காம்பவுண்டகளில் விபசாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. சற்றே கண் திறந்து பாருங்கள். சட்டங்கள் எளியவர் மேல் தான் பாயும்.

அப்படியே சற்று அருகிலிருக்கும் பஹ்ரைன் சென்று பாருங்கள் விபசாரம் ஒஹோ என்று நடப்பதை. அந்த விபசாரிகளிடம் 1000 கணக்கில் ரியால்களை அள்ளி வீசுபவர், சவூதியில் எழை இந்தியனுக்கு ஒரு 400 ரியால் கூலி கொடுக்க மறுக்கும் உத்தம அரேபியர்.

வியாபார நாடு தூபாய்க்கு வாருங்கள் இங்கே நடக்கும் சதை வியாபாரம் உலகில் எங்கும் நடக்கவில்லை. எல்லாப் பொருட்களை இறக்குமதி செய்வது போல் இங்கே பெண்களை மேலை நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், லெபனான், எகிப்து சூடான் ஆகிய நாடுகளின்று இறக்குமதி செய்கிறார்கள். இவர்களின் வாடிக்கையாளர்கள் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை.


துபாயில் ஒரே கட்டிடத்தில் சிவன் கோவிலும் சீக்கியர்களின் குருத்துவாராவும் உள்ளது. அங்கே என்ன மதக் கலவரமும் சாதி கலவரமும் நடக்கிறாதா? எதெற்கெடுத்தாலும் ஏன் 10000 வருடங்களூகுப் பின் சென்று ஆரிய படையெடுப்பைப் பற்றி பேசுகிறீர்கள். இங்கே நடப்பது அரேபியாவில் என் அனுபவம் பற்றிய விவாதம் "இந்தியாவின் ஜாதியின் தோற்றமும் அதன் விளைவுகளைப்" பற்றி அல்ல.

மேலும் நான் கோவில் வேண்டுமென்று கேட்டது சவூதி மன்னர் இந்தியாவை தன் இரண்டாவது தாய் நாடு என்று சொன்னதால். அவர் அவருடைய நட்பு நாடுகளான அமெரிக்காவிற்கும் ப்ரிட்டனுக்கும் செய்து வரும் சலுகைகளைப் பட்டியலிட்டுருந்தேன் அதைப் பற்றி யாரும் மூச்சு விடவில்லையே ஏன்?என் அனுபவங்கள் தொடரும் .........

Monday, April 03, 2006

ஆம்..................................................................

மரங்களைப் பாருங்கள்..... ஆப்பிரிக்காவில் மரங்கள் மிக உயரமாக வளருங்கின்றன. அதே மரவகைகள் இந்தியாவில் மிக உயரமாக வளர்வதில்லை. எனக்கு ஆச்சரியம்! என்ன காரணம்? நான் காரணம் கண்டு பிடித்தேன்.

நெரிசலாக இருந்தால்தான் மரங்கள் உயரமாக வளரும். சிறிதளவு உயரத்திலேயெ கதிரொளி கிடைத்துவிட்டால், ஆறுதல் அடைந்துவிடுகின்றன. அதுதான் அவற்றின் வாழ்வு; ஆனந்தம்..

ஆப்பிரிக்கக் காடுகள் அடர்த்தியாக இருப்பதால், ஒவ்வொரு மரமும் கதிரொளி தேடி முடிந்த அளவு உயரம் போக முயல்கிறது. அப்படி போனால் தானே ஆனந்தமான காற்றும் கதிரொளியும் கிடைக்கும். அப்போதுதானே ஆனந்த நடனம் புரிய முடியும். இல்லாவிட்டால் மரணம்தான்.
இயற்கை முழுதுமே, சுக சௌகரியங்களை விரும்புகின்றது முடிந்தவரை. ஆனால், நமது மதங்கள், சுகசௌகரியங்களும், செல்வதிற்கும் ஆடம்பரங்களுக்கும் எதிராக பிராச்சாரம் செய்கின்றன.

"வறுமையில் நிறைவு கொள். நோயில் நிம்மதி அடை. சுரண்டல்களை சகித்துக் கொள். உயரப் போக ஆசைப் படாதே" என்றெல்லாம் மக்களிடம் சொல்வது இயற்கைக்கு மாறானது என்பது ஞானம் பெற்றவரின் பார்வை.

நாம் எல்லாம் சுமந்து கொண்டிருப்பது இயல்பிற்கு மாறுபட்ட நிலையைத்தான். உமக்குள் ஏற்படும் கிளர்ச்சி மட்டுமே இதை தெளிவாக உணர முடியும்.

தேவகீதா, வரலாற்றுக் கிளர்ச்சிகள் முழுவதுமே 'இல்லை' என்பதன் மீதே நிற்கின்றன என்கிறாய். அவை கிளர்ச்சிகள் அல்ல. சொல்லை மாற்று. எல்லாப் புரட்சிகளும் தான் 'இல்லை' என்பதை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவை எதிர்மறையானவை. எதற்கோ எதிரானவை. அழிவு தரக் கூடியவை. பழிவாங்கும் பண்பு கொண்டவை. கொடூரமானவை.

எனது கிளர்ச்சி நிச்சயமாக 'ஆம்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. அது இருத்தலுக்கு சரி சொல்வது; இயற்கைக்கு சரி சொல்வது; உனக்கே சரி சொல்வது. நமது மதங்கள் எதுவாக இருந்தாலும், நமது பழைய மரபுகள் எதுவாக இருந்தாலும் உனக்கு 'முடியாது' என்றே சொல்லும்;இயற்க்கைக்கும், இருப்பிற் 'இல்லை' அல்லது 'முடியாது' என்றே சொல்லும். அவையெல்லாம் வாழ்வெதிர்ப்பு நிலைபாடு கொண்டவை.

எனது கிளர்ச்சி, வாழ்வை ஏற்று உறுதிப் படுத்துவது. நான் ஆடிப்பாடி வாழ விரும்புகிறேன். இவவாறு வாழ்வின் மீது நம்பிக்கை கொள்வது, இயற்கைக்கு 'ஆம்' சொல்வது, இதன் மூலம் ஒரு புதிய பூமியை, ஒரு புதிய மனித குலத்தை உருவாக்க முடியும்.

இறந்த காலம் 'இல்லை'


எதிர்காலமே 'ஆம்'


'இல்லை'. 'முடியாது' என்ற எதிர்மறையில் நாம் நிறைய வாழ்ந்து விட்டோம்; நிறைய வேதனைகள் பட்டுவிட்டோம் மிஞ்சியவை துயரங்கள் மட்டுமே. காலைப் பொழுதின் பறவைகள் போல மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். மலர்களின் வண்ணங்கள் போலவும், கட்டற்று பறக்கும் பறவைகள் போலவும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இறந்த காலம் இன்றி, திறந்து கிடக்கும் எதிர்கால்ம் நோக்கிப் பயணம் செய்யவேண்டுமென்று விரும்புகிறேன். காரணம் நான் வாழ்வுக்குச் 'சரி' சொல்லி வரவேற்பவன். வாழ்வை மறுப்பவர்கள் எல்லாரும் எனக்கு எதிரானவர்கள். உலகம் முழுவதிலும் எனது 'ஆம்' , மனிதம் மீது திணிக்கப் படுகிற எல்லா மதங்களுக்கும் எதிரானது; கொள்கைகளுக்கு எதிரானது.எனது 'ஆம்' தான் எனது கிளர்ச்சி.

நீ 'ஆம்' சொல்வதே, உன் கிளர்ச்சி


ஆம் ஒஷோ அவர்களே.......

-------------------------------------------------------------------
நன்றி : ஆரம்பம் நீதான் என்ற புத்தகம், கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 ஆசிரியர் ஓஷோ தமிழில் கவிஞர் புவியரசு. www.kannadasan.com