Friday, April 21, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 8

சமய போலிஸ் அல்லது முட்டாவா (muttawa) இவர்களை சவூதியில் சந்திக்கலாம். மற்ற அரபு நாடுகளில் கண்களில் தென்படவில்லை. இவர்களின் வேலை முஸ்லிம்கள் ஒழுங்காக அவர்களின் சமய சடங்குகள் செய்கிறார்களா எனக் கண்காணிப்பதுதான். இதில் தப்பே இல்லை அந்த நாட்டின் மதம் அவர்களின் சட்டம் அவர்களின் ஆணை. ஆனால் இவர்கள் சட்டத்தை மீறுவதுதான் என்னுடைய பாய்ண்ட்.

நானும் என்னுடைய அமெரிக்க நண்பனும் ஒரு வெள்ளிக் காலையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சாமன்கள் வாங்கி காரில் ஏற்றிக் கொண்ட்ருந்தோம். இருவருமே அரைக்கால் சட்டை அணிந்திருந்தோம். அரைக்கால் சட்டை ஆண்கள் (அரபிகள் உட்பட) அணிவது சகஜம். அப்போது என் அமெரிக்க நண்பருக்கு சுரீல்லென்று பிரம்பால் முட்டிக்கு அருகே அடி. அவர் ஆஜானுபாகனவர். அவரை அடித்தவரை அவர் யாரென்று கூட பார்க்கவில்லை. திருப்பி பாளாரென்று அடித்தவரைக் கன்னத்தில் அறைந்த்துவிட்டார். அவர் விட்ட அடியில் அடிவாங்கியவர் ஒரு முட்டாவா. வ்லி தாங்கமல் அந்த முட்டாவா சுருண்டுவிட்டார். பிறகுதான் எங்களுக்கு விபரீதம் புரிந்தது. நல்லவேளை அந்த முட்டாவா அவருடைய பரிவாரங்களுடன் அங்கில்லை. நாங்கள் உடனடியாக காரைக் கிளப்பி வந்துவிட்டோம். அந்த முட்டாவா எங்களை பின் தொடர்ந்தார். எங்களுக்கு கதிக் கலங்கிவிட்டது. சரி என்ன நடக்கிறது பார்த்துவிடுவோம் எனக் காரை நிறுத்தினோம் . அவர் எங்களை அணுகி உங்கள் ஸ்பான்சர் யார் எனக் கேட்டார் நாங்கள் எங்கள் ஸ்பான்சர் பெயரைச் சொன்னவுடன். அவர் பயந்துவிட்டார். உடனடியாக பவ்யமாக அரை நிஜார் அணிவது இஸ்லாமிற்கு எதிரானது ஆகையால் இனிமேல் அணியாதிர்கள் என்று அறிவுரை சொல்லி. நான் உங்களை அடித்ததையும் நீங்கள் என்னை அடித்ததையும் வெளியே சொல்லவேண்டாம் எனக் கூறியவுடன். என் அமெரிக்க நண்பருக்கு உடனடியாக தைரியம் வந்துவிட்டது. அவரும் சலம்ப ஆரம்பித்தார். அவரை சாமதானப் படுத்தி அங்கிருந்து விலக்கிக் கொண்டுவருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.


அதன் பிறகு ஆண்களுக்கான உடை விதிகளைப் பற்றித் தெரிந்துக் கொண்டேன். ஆண்கள் முட்டிக்கு மேல் வரும் அரைக்கால் ச்ட்டையை விளையாட்டு மைதானத்தில் அணியலாம். ஆனால் கட்டிததுக்குள் அணிய கூடாது. நீச்சல் குளத்திலோ கடலிலோ குளிக்கும் போது முட்டிகால் மறைக்க கூடிய அரைக்கால் சட்டை அணிய வேண்டும் !!!!.


பெண்கள் தங்கள் உடலின் வளைவுகள் தெரியும்படி உடை அணியக் கூடாது. தலைமுடியை மறைத்துக் கொள்ளவேண்டும். இந்த விதியின் படி அபாயா அணிந்து தலையை மூடிய என் மனவியுடன் நான் வெளியே சென்ற போது ஒரு முட்டாவா பரிவார்ம் எங்களை நிறுத்தி என் மனைவியின் முகத்தை மூட சொன்னது. அவர் முகத்தில் அணிந்திருந்த பொட்டு அவர்களை உறுத்தியது. இந்த உத்தமர்களின் மனைவியரும் மகள்களும் சகோதரிகளும் சவூதி எல்லையை விமானம் தாண்டியவுடன் முகமூடிகளைக் களைந்து ஆங்கிலப் பட கவர்ச்சி கன்னிகள் ரேஞ்சுக்கு வலம் வந்து ஜொள் விருந்துப் படைப்பர்


ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை நடக்கும். அப்போது கடைகள் அனைத்தும் மூட வேண்டும். அப்போது தான் இந்த முட்டாவாகளுக்கு வேலை அதிகம். எல்லா முஸ்லிம்களையும் தொழ சொல்லி பிரம்பு கொண்டு துரத்துவார்கள். நான் முஸ்லிம் இல்லை என்று சொன்னால் விட்டு விட வேண்டும் அதுதான் சட்டம். ஆனால் நம் உத்தம்ர்கள் முஸ்லிமிலையா நீ என்று ஒரு அடி கொடுத்துவிட்டு போவார்கள். இவர்களிடம் நான் நிறைய முறை அடி வாங்கியிருக்கிறேன். (சில பேர் புன்னகை புரிவது எனக்கு தெரிகிறது).


ஏற்கனவே குடும்பத்தை பிரிந்து , ஒரே அறையில் 6/7 பேர்களாக வாழும் நம் ஏழை சாகோதரர்களின் லேபர் காம்பில் இந்த முட்டாவாக்கள் குத்தாட்டம் போடுவார்கள். சோதனை செய்கிறேன் என்ற பெயரில் இம்சை செய்வார்கள். அவர்கள் பெட்டியைக் குடைந்து குடும்ப போட்டோக்களை கிழிப்பது, புத்தகங்களை கிழிப்பது போன்றவை சர்வ சாதரணம்.

நான் அங்கிருந்த சமயம் சாடிலைட் சானல்கள் புதிது ஆனால் தடை செய்யப்ட்டது. இருந்தாலும் நம் பாகிஸ்தானிய சகோதரகள் அதை விற்பார்கள் . அதை கொண்டு வந்து வீட்டில் மாட்டிக் கொடுப்பார்கள். இந்த சாடிலைட் டிஷ்கள் கன்னா பின்னாவென்று பெருக ஆரம்பித்தன. இதைக் கண்ட முட்டாவாக்ளுக்கு ஒரே பொறாமை. இந்த டிஷ்களை துப்பாக்கிக் கொண்டு சுட ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த வடிவேல்த்தனமான முட்டாவாக்களின் செல்வாக்கு பணக்காரர்களிடம் செல்லுபடியாகவில்லை. பணக்கார சவுதிகளும் காம்பவுண்டில் வாசித்தவரும் சாடிலைட் டிவி மூலம் மேலைநாட்டு பலான படங்களை கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

இந்த முட்டாவக்களை அடையாளம் கண்டுக்கொள்வது எப்படி. இவர்களின் அங்கி கணுக்காலுடன் முடிந்துவிடும். தலையில் முக்காட்டை இறுக பிடிக்கும் கருப்பு திரிமணை இருக்காது. முன் நெற்றியில் தரையில் தலைவத்து தவறமால் தொழுகை செய்வ்தால் ஏற்பட்ட தழும்பு இருக்கும்.

இந்த சாடிலைட் டிவியை வைத்து ஒரு ஜோக்கான சம்பவம். அபுதாபியில் நான் இருந்த காலனியில் எல்லாருக்கும் கேபிள் டிவி இருந்தது. ச்ன் டிவி யும் இருந்தது. ச்ன் டிவி தீடிரென துண்டிக்கப் பட்டது. அதற்கு சொன்ன காரணம் காலையில் இந்து சமய பாடல்கள் ஒளிபரப்பபடுகிறதாம். ஆனால் உண்மையான காரணம் மிட்நைட் மசாலா நிறுத்தப்பட்டதால் சன் டிவி நிறுத்தப்பட்டது. மிட்நைட் மசாலவை ஒளிபரப்பி அரேபியருக்கும் தமிழ் கற்று தந்த சன் டிவி வாழ்க


மனித உரிமைகள் பற்றி அடுத்து.......

25 comments:

said...

//

இந்த சாடிலைட் டிவியை வைத்து ஒரு ஜோக்கான சம்பவம். அபுதாபியில் நான் இருந்த காலனியில் எல்லாருக்கும் கேபிள் டிவி இருந்தது. ச்ன் டிவி யும் இருந்தது. ச்ன் டிவி தீடிரென துண்டிக்கப் பட்டது. அதற்கு சொன்ன காரணம் காலையில் இந்து சமய பாடல்கள் ஒளிபரப்பபடுகிறதாம். ஆனால் உண்மையான காரணம் மிட்நைட் மசாலா நிறுத்தப்பட்டதால் சன் டிவி நிறுத்தப்பட்டது. மிட்நைட் மசாலவை ஒளிபரப்பி அரேபியருக்கும் தமிழ் கற்று தந்த சன் டிவி வாழ்க

//

cultural exchange என்றால் இது தான்!!

யுனிவர்சிடி ஹாஸ்டலில், மிட் நை மசாலா பார்பவர்கள், தமிழர்களைவிட வட நாட்டு மாணவர்கள்தான் அதிகம்...!! இதப் பார்தால் உனக்கு எனாடா புரியும் என்று கேட்டால், "கல்சுரல் எக்ஸ்சேஞ்"!! என்று பதில் கூறினார்கள்.

அது கல்சுரலா அல்லது அன்கல்சுரல் எக்ஸ்சேஞ்சா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஷங்கர்.

said...

Dear Siva

How come you survived in such a rotten wretched place for so many years?

Regards
Rajan

said...

சவுதி அரேபியன்களுக்கு சப்பைகட்டு கட்டுபவர்கள் கூறக்கூடும். "அவர்கள் நாடு அவர்கள் சட்டம், உங்களை யார் அங்கே போகச் சொன்னது என்று." ஒரு விதத்தில் உண்மையே.

அதே நேரத்தில் அங்கிருந்து வந்ததும் அவர்கள் போடும் குத்தாட்டங்களைப் பற்றி கூறி இங்கு இருக்கும் விஷயம் தெரியாதவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை கொடுப்பதும் நல்ல காரியமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//அவர்கள் பெட்டியைக் குடைந்து குடும்ப போட்டோக்களை கிழிப்பது, புத்தகங்களை கிழிப்பது போன்றவை சர்வ சாதரணம்.//

இதற்கும் ஏதாவது சப்பைக்கட்டு இருக்கும்.. இறைநேசன், நல்லடியார், சுவனப்பிரியன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் தீவிரமாக யோசித்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் ஏகத்துவ விளக்கத்துடன் ஆஜாராவார்கள்.
ஆரோக்கியம்
ennamopo.BLOGSOME.COM
Those who forget the past are condemned to repeat it.

said...

நல்ல பதிவு. எளிய தமிழில், இனிமையாக எழுதுகிறீர்கள். யாராவது பதிப்பகத்தார் முன்வந்து இதை நூலாக வெளியிட்டால் பலருக்கும் பயன்படும்.

இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடலாம்.

said...

திரு நேசகுமார் அவர்களே, என் எழுத்துகள் புத்தகமாக பதிப்பதற்கு உகந்தவை என்று நான் நினைக்கவில்லை. என் அனுபவம் மிக மிக சிறிது. என்னைவிட கொடுமைப் பட்டவர்கள் அதிகம் மேலும் அவர்கள் பட்ட கொடுமைகளும் கடுமையானவை. இவர்களைப் பேட்டிக் கண்டு புத்தகம் எழுதாலாம்

அன்புடன்

கால்கரி சிவா

said...

ராஜன்,

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் ஏன் அங்கு இருந்தேன் என்று சொல்கிறேன், அங்கே நான் 5 வருடங்கள் தாக்கு பிடித்தற்க்கு காரனங்கள்

1. தொழில் தர்மம் (Professional Ethics)

பொறியாளர்க்கு ஒரு தொழில் தர்மம் உண்டு. ஒரு ப்ரொஜக்ட் 4 முதல் 5 வருடத்திற்கு ஓடும். தொடங்கியவர் முடிக்க வேண்டும் என்ற தர்மம் இருக்கிறது. நான் என் தொழிலை மதிக்கிறவன். அதன் தர்மத்தில் அங்கு இருந்தேன்.

2. நட்பு :
எங்கோ சில நாட்கள் சந்தித்த ஒரு அமெரிக்கன் என் மேல் நம்பிக்கைக் கொண்டு அந்த அமெரிக்கக் கம்பெனியில் அழைத்தான். அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானேன். இப்போது அந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்குவதால் அவனுக்கு இப்போது நான் வேலை செய்யும் கம்பெனியில் அமெரிக்காவில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளேன்

3. பணமும் என்னுடைய காரியரும்

4. என்னுடைய பவர்புல் ஸ்பான்சர். அவருக்கு என்னால் அதிக லாபம். அவரால் எனக்கு அதிக பாதுகாப்பு. இல்லையென்றால் என்றைக்கோ என்னை கைமா பண்ணியிருப்பார்கள்

5. என்னுடைய பொறுமை

மேலும் நான் சொன்னவை சிறிதே. சற்று கண்திறந்து மனிதநேயத்துடன் நம் இந்திய சகோதரகளிடம் மனம் விட்டு பேசினால் மேலும் பல அநியாயங்கள் வெளிவரும் என்னால் முடிந்த அளவிற்கு பாதிக்கப் பட்டவற்கு ஆறுதல் சொன்னேன். அந்த நாடுகளில் உரிமைக்கு போராடவா முடியும்?

இணையத்தில் சொன்னாலே நம்மூர் சகோதரர்களே மனிதநேயத்துடன் என்னை செருப்பால் அடிக்கிறார்கள் அங்கே ....?

said...

ஹூம், ஊருக்கு தான் உபதேசம் பண்ணுவார்கள். நமக்கு தான் என்றில்லை. நம்மூர் இஸ்லாமியர்களையும் கூட அவர்கள் உண்மையான முஸ்லீம்களாக ஏற்றுக் கொள்வது கிடையாது. எனவே இவர்கள் ரெண்டுங்கெட்டான்களாக இங்கே பினாத்துகிறார்கள். இவற்றையெல்லாம் மறைக்கவே துள்ளி துள்ளி குதிக்கிறார்கள்.

said...

Siva,

please keep writing about arab idiots.

Thanks

canadian from Texas

said...

"அப்போது என் அமெரிக்க நண்பருக்கு சுரீல்லென்று பிரம்பால் முட்டிக்கு அருகே அடி. அவர் ஆஜானுபாகனவர். அவரை அடித்தவரை அவர் யாரென்று கூட பார்க்கவில்லை. திருப்பி பாளாரென்று அடித்தவரைக் கன்னத்தில் அறைந்த்துவிட்டார். அவர் விட்ட அடியில் அடிவாங்கியவர் ஒரு முட்டாவா. வ்லி தாங்கமல் அந்த முட்டாவா சுருண்டுவிட்டார். பிறகுதான் எங்களுக்கு விபரீதம் புரிந்தது. நல்லவேளை அந்த முட்டாவா அவருடைய பரிவாரங்களுடன் அங்கில்லை. நாங்கள் உடனடியாக காரைக் கிளப்பி வந்துவிட்டோம். அந்த முட்டாவா எங்களை பின் தொடர்ந்தார். எங்களுக்கு கதிக் கலங்கிவிட்டது. சரி என்ன நடக்கிறது பார்த்துவிடுவோம் எனக் காரை நிறுத்தினோம் . அவர் எங்களை அணுகி உங்கள் ஸ்பான்சர் யார் எனக் கேட்டார் நாங்கள் எங்கள் ஸ்பான்சர் பெயரைச் சொன்னவுடன். அவர் பயந்துவிட்டார். உடனடியாக பவ்யமாக அரை நிஜார் அணிவது இஸ்லாமிற்கு எதிரானது ஆகையால் இனிமேல் அணியாதிர்கள் என்று அறிவுரை சொல்லி. நான் உங்களை அடித்ததையும் நீங்கள் என்னை அடித்ததையும் வெளியே சொல்லவேண்டாம் எனக் கூறியவுடன். என் அமெரிக்க நண்பருக்கு உடனடியாக தைரியம் வந்துவிட்டது. அவரும் சலம்ப ஆரம்பித்தார். அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து விலக்கிக் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது."

எனக்கு மிக சந்தோஷம் அளித்த வரிகள் மேலே. சவுதி அரேபியன்கள் கோழைப் பசங்கள். கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

விமர்சனங்களை கன்டுகொள்ள வேன்டாம்.
பலர் என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலேயே கூட எழுதிகொன்டு இருக்கும் இடத்தில் உங்களை போன்றவர்கள் நிறைய எழுத வேன்டும்.

said...

good post...

even after knowing that you are a non-muslim they should not have beaten you..this is highly condemnable...

either you should have made that as a big issue or you should have immediately left the country...

write more

said...

Muthu and DD,

There is no way to represent this. The first hurdle is language. Then for each and everything you need your sponsor to represent you in court or in police station.

I have already explained why I did not leave the country.

said...

டோண்டு சார், இது 100% உண்மை. அரேபியர்கள் மிகப் பெரிய கோழைகள்.
நான் முன்னே சொல்லியிருந்தேன். உங்களுக்கும் ஒரு அரேபியருக்கும் வாக்குவாதம் வந்தால் அவர் அரபியில் சத்தம் போட்டு திட்டுவார். அவர் திட்டி முடிந்தவுடன் நீங்கள் அவரைவிட சத்தமாக தமிழில் திருக்குறள் சொன்னாலும் ஒடிவிடுவார்.

said...

Dear Siva

Thanks for your clarifications. I did not mean in that way. I posted that question in a sympathy only. I understand your professional compulsions. Atleast you are brave enough to tell the truths. When I was talking about issues like stoning to death, eye for an eye punishmentt and all our same Indian friends were justifying Saudi, Nobody liked the truths to be told. One even cracked a joke that Indians should be loyal to Saudi because Saudi opened seven seasons hotel in India. Keep telling your experiences. Let it open the eyes and minds of those who read it here.

Thanks
Rajan

said...

அந்த முக்கால் ஸாரி முட்டாள் பசங்களுக்காக ஒரு திருக்குறளை எதுக்கு வேஸ்ட் பண்ணனும்?

said...

//எனக்கு மிக சந்தோஷம் அளித்த வரிகள் மேலே. சவுதி அரேபியன்கள் கோழைப் பசங்கள். கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான்.//

என்னதான் எதிரி என்றாலும் அவன் இவன் என ஏக வசனத்தில் அழைப்பது மிருகத்தனம்! அதனைக்கூட நண்பர் கால்கரி சிவா ஏற்று ஜால்ரா போடுவது அபத்தத்தின் உச்சகட்டம்.

ஜாதி வெறி அதிகம் இருப்பதால் டோண்டுவை நான்கூட அவன், இவன் என ஏகவசனத்தில் அழைக்கலாம் என்று சொல்கிறீர்களா?

said...

சிவா

மிக அருமையாக எழுதுகிறீர்கள். சௌதியின் சட்டங்களைக் குறை கூறுபவர்களையும் சவுதியை விமர்சிப்பவர்களையும் நோக்கி நான் கேட்கும் கேள்வி இதெல்லாம் தெரிந்திருந்தும் அங்கு வேலைக்காக ஏன் செல்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் அதற்கு அழகாக பதில் கூறியதுடன் அங்கு செல்ல விரும்புவர்களுக்கு கலங்கரை விளக்கம் போன்ற பதிவுகளை எழுதுகிறீர்கள். உங்கள் பதிவுகளை சுயமுயற்சியின் சிறந்த வெளிப்பாடுகளாகவும், எச்சரிக்கை மணிகளாகவும், நேரடி அனுபவங்களின் தொகுப்பாகவும், ஒரு விதத்தில் சவால் நிறைந்த உண்மைக்கதை போலவும் எடுத்துக் கொள்ளவே இடமிருக்கிறது. ஒரு மதத்திற்கு எதிரான அல்லது ஒரு நாட்டிற்கு எதிரான பதிவுகளாக கொள்வதற்கு எள்ளளவும் இடமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

நடராஜன்.

said...

ஆறுமுகம்,

"நான் அரபியன்" என்று ஒருவர் தன்னை சொல்லிக்கொள்வதனாலேயே அரபியர் எவரும் திட்டப்படுவதில்லை. அரபியரல்லாத பிறரை அவமதித்து கொடுமைப்படுத்துவதாலேயே அவர்கள் திட்டப்படுகிறார்கள்.
தன் ஜாதி (அல்லது மதம் அல்லது இனம் இப்படி எல்லாம்தான்) இன்னதென்று ஒருவர் சொல்வதாலேயே அவர் திட்டுவதற்கு உகந்தவர் என்று ஆகி விடாது.
தன் ஜாதி இல்லை என்ற காரணத்தால் தன்னை விட மற்றவர் தாழ்ந்தவர் என்று சொல்லியிருந்தால் நீங்கள் அவரைத் திட்டலாம்தான்- டோண்டு உள்பட. அவர் அப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று சுட்டிக்காட்டினால் நன்று. மட்டுமன்றி, அரபியர் விஷயத்தில் அரபிய மக்களின் அரசே இத்தகைய அவமதிப்பைத் தன் நாட்டு சட்டம் என்று கொண்டிருப்பதால் அரபியர் அனைவருமே விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள். பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பிப்பவர் தனி மனிதனாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, திட்டத்தான் படுவார்கள்- அது சரிதான்.

said...

>>>>>ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை நடக்கும். ...... அப்போது தான் இந்த முட்டாவாகளுக்கு வேலை அதிகம். எல்லா முஸ்லிம்களையும் தொழ சொல்லி பிரம்பு கொண்டு துரத்துவார்கள்.<<<<<

>>>>>முன் நெற்றியில் தரையில் தலைவத்து தவறமால் தொழுகை செய்வ்தால் ஏற்பட்ட தழும்பு இருக்கும்.<<<<<


தொழுகை நேரத்தில் இவர்கள் எல்லாரையும் தொழுகைக்கு விரட்டிக்கொண்டிருந்தால் தரையில் தலைவத்து தவறமால் தொழுகை செய்வ்தால் ஏற்பட்ட தழும்பு எப்படி ஏற்படும்? இடிக்குதே.

மை எதுவும் தடவிக்கொள்வார்களோ?

>>>>அரேபியர்கள் மிகப் பெரிய கோழைகள்.....நீங்கள் அவரைவிட சத்தமாக தமிழில் திருக்குறள் சொன்னாலும் ஒடிவிடுவார். <<<<

இங்கே (இந்தியாவில்) நிறைய பேர் உலகிலேயே மிகப் பெரிய வீரன், தர்மத்தின் காவலன் என்று ஒஸாமா பின் லேடனைச் சொல்லிக் கொள்கிறார்களே.

ஒஸாமா திருக்குறள் படித்திருந்தால் இப்படியெல்லாம் இருப்பாரா?

said...

ம்யுஸ்,

தங்கள் வருகைக்கு நன்றி.

இவர்கள் எல்லாரையும் உள்ளே போக அடித்து ஆணையிட்டு பிறகு முன் நின்று தொழுகையை நடத்துவர். சாப்பிடமால் இருந்தாலும்கூட தொழுகையை விடமாட்டார்கள். இவர்களின் பக்தியில் ஒரு சிறு % இந்துகளுக்கு இருந்தால் போதும் நம் மதத்தைப் பற்றி பேச யாருக்கும் தைரியம் வராது.

ஒசாமாவும் மாபெரும் கோழையே அதானால் தான் ஒளிந்து கொண்டு சவுண்டு விடுவது போன்ற காரியங்களை செய்துக் கொண்டு "வீரனாக" வாழ்கிறான். தீவிரவாதிகள் அனைவரும் கோழைகளே.

said...

//
தொழுகை நேரத்தில் இவர்கள் எல்லாரையும் தொழுகைக்கு விரட்டிக்கொண்டிருந்தால் தரையில் தலைவத்து தவறமால் தொழுகை செய்வ்தால் ஏற்பட்ட தழும்பு எப்படி ஏற்படும்? இடிக்குதே.

மை எதுவும் தடவிக்கொள்வார்களோ?
//

இன்னெக்கு இவனுக்கு duty நாளைக்கு அவனுக்கு duty!! டெய்லியுமா கம்படுத்துகிட்டு சுத்திகிட்டு இருக்க முடியும்!!

ஷங்கர்.

said...

>>>>இவர்களின் பக்தியில் ஒரு சிறு % இந்துகளுக்கு இருந்தால் போதும் நம் மதத்தைப் பற்றி பேச யாருக்கும் தைரியம் வராது.<<<<<<

மத வெறி கொண்டு மனிதர்களை அழிக்கும் பக்திமானாக இருப்பதை விட, வீர சவார்கரின் நாத்திகம் எவ்வளவோ மேல்.

"அந்த" மாதிரியான பக்தி நம்மிடம் இல்லாததற்கு நான் அல்லாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.

said...

thamizhmanam should ban such writers who spread disharmony. such writings unnecessarily spoil the good relations india has with arab countries. imagine an india without petrol.

write your positive experiances. otherwise simply shutup.

said...

//thamizhmanam should ban such writers who spread disharmony. such writings unnecessarily spoil the good relations india has with arab countries. imagine an india without petrol.
//

கடவுளின் அடிமை அவர்களே, இந்தியாவின் வெளியுறவு கொள்கையை நிர்ணயிக்கும் அளவிற்க்கு என் எழுத்துகள் உள்ளதா? நன்றி...நன்றி...நன்றி

பெட்ரோல் இல்லாத இந்தியாவை நினக்கும் முன் இந்தியர் இல்லாத அரேபியாவை நினையுங்கள். இந்தியர் இல்லாவிட்டால் அரேபியர் பிச்சை எடுப்பது உறுதி