Tuesday, April 11, 2006

பெண் விடுதலை

நான் இன்று லஞ்ச் பிரேக்கில் படித்து என் மனம் கவர்ந்த வாக்கியங்களை இங்கே தருகிறேன். முதலில் இதை மொழிப்பெயர்த்தேன். சரியாக வரவில்லை. அதனால் இதை ஆங்கிலேத்திலேயே வழங்குகிறேன். சிம்பிள் ஆங்கிலம்தான் ஆகையால் தமிழ்மண நண்பர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.


---------------------------------------------------------------------------------------------
The woman is not a measurement.

The woman is just like you.

Have you ever thought about the word "woman"?

It simply means a man with a womb.

She has something more than you.

If it is to be decided who is more, then the woman is more: she is a man with womb. And a womb is not an ordinary thing; it is something of immense value, because all life comes out of the womb. Man has always felt inferior to woman. Because he has felt inferior to woman, he has tried in every way to repress woman and make himself superior. It is a simple logic: only the inferior man wants to be superior. The superior is already superior, there is no question of wanting it. Unless man frees woman completely from all bondage -- religious, political, social -- he will never get rid of his own inferiority complex.


The freedom of woman is going to be the freedom of man too.

------------------------------------------------------------------------------------------------


இந்த மாதிரி எழுத ஒஷோவை விட்டால் யாரால் முடியும். 'பொய்மையிலிருந்து உண்மைக்கு.." என்ற நூலிருந்து நன்றி www.oshoworld.com

9 comments:

said...

சிவா,

நல்லாதான் சொல்லி இருக்கார் ஓஷோ.

ஆனால் 'பெண் விடுதலை'யை இப்பப் பலபேர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க, பார்த்தீங்களா?

said...

பெண்மை என்பது அளவிற்கு அடங்காத ஒன்று. பெண் என்பவள் உங்களை போல எல்லா உணர்வுகளும் உரிமைகளும் கொண்ட ஒரு சக உயிர். இன்னமும் சொல்ல போனால் உங்களிடம் இல்லாத ஒரு விலைமதிப்பற்ற ஒன்று அவர்களிடம் உள்ளது. கர்ப்ப பை.

ஆண் , பெண்ணில் யார் உயர்ந்தவர்கள் என்ற அர்த்தமற்ற கேள்விக்கு கண்டிப்பாக கேள்வி கூற வேண்டுமானால் நான் பெண் என்றே கூறுவேன். ஆணிடம் இல்லாத விலை மதிப்பற்ற கர்ப்பபை அவர்களிடம் உள்ளது. கர்ப்ப பை ஒரு உயிர் உருவாகி, உலகத்திற்கு வெளிவர தயாராகும் வலிமை பெறும் இடம். கர்ப்ப பையிலிருந்தே நாம் அனைவரும் வருகிறோம்.

ஆண் என்பவன் பெண்களுக்கு தாழ்வாகவே தன்னை உணருகிறான். பெண்ணை விட தன்னை உயர்வாக காட்ட எல்லா விததிலுல் அவன் முயற்சி செய்து கொண்டுதான் வருகிறான். இதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம். எப்போதுமே தாழ்ந்தவையே தன்னை உயர்ந்தவையாக காண முயற்சிக்கும். உயர்ந்தது எதற்க்காக முயற்சிக்க வேண்டும். அது ஏற்கனவே அங்கே தான் இருக்கிறது. பெண்ணை சுற்றி தான் உருவாக்கிய எல்லா தடைகளையும் நீக்கும் வரை ஆணின் தாழ்வு மனப்பான்மை தொடரும்.

என்ன சீனியர் நல்லா இருக்கா என்னுடைய மொழி பெயர்ப்பு?

said...

சூப்பர் ஜூனியர், முதல் வரி மட்டும் கொஞ்சம்... பட் ஒகே நன்றி.

Are you still in Montreal?

Regards

said...

The woman is not a measurement.

பெண் என்பவள் வெறும் வளைவுகளின் அளவுகள் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்
Apply maouseover and look for photo to see the genuineness of the commenter.

said...

சிவா,
பெண் விடுதலை என்ற தலைப்பைக் காட்டிலும் பெண்ணின் பெருமை எனும் தலைப்பு மிகப் பொருந்தும் என நினைக்கிறேன். என்னுடைய இந்த எளிமையான மொழிபெயற்ப்பு பிடித்திருந்தால் பிரசுரிக்கவும்.

பெண் வெறும் 34 - 26 - 34 அல்ல.

பெண் உன்னைப் போன்றே ஒரு உன்னத உயிர்.

எப்போதாவது WOMAN எனும் ஆங்கில வார்த்தையை உற்று நோக்கியதுண்டா?

அது WO(MB)MAN எனத் தெரிவதைக் காண்.

அதன் பொருள் கர்ப்பப்பைக் கொண்ட மனிதன் என உணர்.

ஆக யார் உயர்ந்தவர் என ஒப்பிடப் பார்த்தால், அதிகம் படைத்தவர்தானே உயர்ந்தவர்?

ஆண் தாழ்வு மனப்பான்மை கொண்டவன். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்தான் பொதுவாக அடக்குமுறையாளர்களாகவும் இருப்பார்கள். ஆண் பெண்ணை அடக்குவதும் அதனால்தான். எனவே எப்போது ஆண், பெண் அடக்குமுறையை கைவிடுகிறானோ, அப்போதுதான் அவன் அவனுடைய தாழ்வு மனப்பான்மையினின்று மீள்வான்.

ஆகையால் மனிதர்களே, உண்மையில் பெண் விடுதலை என்பது ஆண் விடுதலையே!

எப்படி ஐயாவின் மொழிபெயற்ப்பு?

அன்புடன்,
சரவணன்

said...

ஆம் துளசி மேடம், சில பெண்கள் அதை தப்பாகவே புரிந்துக் கொண்டுள்ளார்கள். தங்கள் வருகைக்கு நன்றி. நீங்க அமெரிக்காவா நியூசிலாந்தா?

தோண்டு சார், நீஙக ப்ரொபெஷனல் டிரான்ஸ்லேட்டர். உங்க மொழிப் பெயர்ப்பு சூப்பர் சார். நன்றி

said...

தம்பி சரவணா, கொன்னுட்டேயேப்பா.....தமிழில் மட்டுமல்ல எதிலுமே அண்ணணை மிஞ்சியவனல்லவோ நீ. பிறந்த நாட்டிலும் புகுந்த நாட்டிலும் தமிழ் கொண்டு வாழ்பவன் நீ கொடுத்க்து வைத்தவன் .வாழ்க உன் தமிழ்.

said...

சிவா,

நான் உங்க பதிவுகளை எல்லாம் படிச்சுக்கிட்டுத்தான் வரேன். அருமையாவும், வெளிப்படையாவும் இருக்கு.
பின்னூட்டம்தான் அடிக்கடி கொடுக்கறதில்லை.(-:

நான் இங்கே நியூஸிலாந்து.

said...
This comment has been removed by the author.