அன்பை பெறுவதற்க்கு மூன்று அம்ச திட்டம் இதோ:
1. அழி
2. குறைகளை ஏற்றுக்கொள்
3. கொடு
1. அழி :
உன் இறந்த காலத்தை உன் எண்ணத்திலிருந்து அழி. உன் எண்ணங்களை உன் முன்னோர்கள், பெற்றோர்கள், தலைவர்கள், ஆசிரியர்கள், புராணங்கள் , வேதங்கள், மதங்கள் ஆகியோர் அடிமை ஆக்கி வைத்துள்ளனர். அந்த ச்ங்கிலிகளை உடைத்து விட்டு நீ நீயாக மாறு. உன் மனதை ஒரு வெற்றிடமாக்கு அப்போது தான் அது புது அன்பை பெற தயாராக நிற்கும்
2. குறைகளை ஏற்றுக் கொள் :
நீ அன்பு செலுத்த குறைகள் இல்லாத நிறையான மனிதனுக்காக நீ காத்திருந்தால் . நீ ஏமாறுவாய். உன் வாழ்நாள் முழுவதும் அவனுக்காக காத்திருக்க வேண்டியதுதான். குறைகள் இல்லாமல் மனிதன் பிறந்த்தும் இல்லை இனிமேல் பிறக்க போவதுமில்லை. ஒவ்வொரு மனிதனும் தனித் தன்மை வாய்ந்தவன். அவன் தனித்தன்மையுடன் அவனை ஏற்றுக்கொள்.
3. கொடு
Give the best you have and the best will come back to you. அன்பை பெற நீ அன்பைக் கொடு. நிபந்தனை அற்ற அன்பைக் கொடு. நீ கொடுத்தால் மற்றவர்களும் கொடுப்பார்கள். ஆகையால் கொடு.
என்ன சரியா நண்பர்களே?
Thursday, April 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
சிவா,
1. அரேபிய நினைவுகள் அழியட்டும்!
2. அரேபியரின் குறைகள் ஏற்றுக்கொள்ளப்படட்டும்!
3. அரேபியருக்கு உங்களின் அன்பு கொடுக்கப்படட்டும்!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
அன்புடன்,
சரவணன்
சரவணா,
அரேபிய நினைவுகள் அழியும் அனுபவத்தை சொல்லி முடித்த பிறகு
அரேபியரின் குறைகள் ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டது
அரேபியருக்கு அன்பு கொடுத்தாகிவிட்டது ஏற்றுக்கொள்ளத் தான் அங்கே யாருமில்லை
அன்புடன்
கால்கரி சிவா
முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே!
னீ கொடுத்தால் அவர்களும் கொடுப்பார்கள் என்கிறீர்கள்.
ஆனால், கொடுத்தேன்; ஏற்றுக்கொள்ள யாருமில்லை என்றும் சொல்கிறீர்கள்!
கொடுப்பதுதான் நம் வேலை!
ஏற்றுக்கொண்டார்களா, இல்லையா என்று பார்த்துக் கொண்டிராமல், பயணத்தைத் தொடருங்கள்!
எஸ் கே, மிக சரி . ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்று பார்க்கமால் பயணத்தை தொடருவதுதான் சரி
//1. அழி//
ஜாதி, மதம் என்ற பைத்தியம் அழியட்டும். இந்த பூவுலகில் அனைவரும் பிறப்பால் சமம் என்ற நிலை இந்த புண்ணிய பூமியில் உருவாகட்டும்.
//2. குறைகளை ஏற்றுக்கொள்//
நமக்குள் இருக்கும் குறைகளை தயங்காமல் ஏற்றுக் கொள்வோம். அதனை மாற்ற முயல்வோம்.
//3. கொடு//
வறியவர்க்கு நம்மால் இயன்றதைக் கொடுப்போம். அன்பைக் கலந்து ஊட்டுவோம். அப்படிச் செய்தால் இறைவன் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பான்.
போலியாரே, புரிந்துக் கொண்டதற்கு நன்றி
//ஜாதி, மதம் என்ற பைத்தியம் அழியட்டும். இந்த பூவுலகில் அனைவரும் பிறப்பால் சமம் என்ற நிலை இந்த புண்ணிய பூமியில் உருவாகட்டும்.//
aha......fake dondu sir pinnitinga ponga ....
ithai original dondu sir ethukuta innum superaha irrukum
-swamy red bull
ஸ்வாமி ரெட்புல் அவர்களே,
ஒரிஜினல் டோண்டு எனும் மிருகம் தான் இறக்கும் வரைக்கும் அதன் ஜாதி சார்புக் கொள்கைகள் இருந்து ஒருபோதும் பின் வாங்காது.
அதற்காக நான் வருந்தவில்லை. முன்னைவிட இன்னமும் ஆக்ரோஷமாக போரிடுவேன்.
தங்களின் கருத்துக்கு நன்றி.
Post a Comment