மனித உரிமைகளைப் பற்றி அடுத்தப் பதிவில் அதற்கு முன் லைட்டான சப்ஜெக்ட்ஸ்
கார் ஒட்டும் உரிமம் பெறுவதுப் பற்றி:
சவூதியில் டிரைவிங் லைசன்ஸ் சுலபமாகக் கிடைத்துவிடும். ஒரு பெரிய மைதானத்தில் ஒரு வலம் வர வேண்டும். அதில் ஒரு மலை, ஒரு வலதிருப்பம் ஒரு இடதிருப்பம் ஒரு ஸ்டாப் போர்டு இருக்கும். கடைசியாகஒரு ரிவர்ஸ் பார்க்கிங். அவ்வளவுதான். நம்மாட்கள் எல்லாருக்கும் முதல் அல்லது இரண்டாவது முறை லைசன்ஸ் கிடைத்துவிடும். கார் ஓட்டும்போது கவனமாக் இருக்கவேண்டும். ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் ... ஐயோ... அதைப் பற்றி பின்
ஆனால் அபுதாபியில் அது ஒரு பெரிய கொடுமை. முதலில் ட்ராபிக் சிக்னல்பற்றி ஒரு ஒரல் எக்ஸாம். பிறகு பார்க்கிங் மட்டும் ஹில் பார்க்கிங் டெஸ்டுகள், இதுவரைக்கும் தான் உங்கள் திறமை. அதன் பிறகு ரோட் டெஸ்டிற்கு வரவேண்டும். ரோட்டிற்கு வந்த பிறகு அந்த இன்ஸ்பெக்டரின் கருணைதான். ஒவ்வொரு டெஸ்ட்டிற்கும் இடைவெளி 2 மாதங்கள் இருக்கும்.
எனக்கு கார் ஒட்ட லைசென்ஸ் கிடைத்தது 13 முயற்ச்சிகளுக்கு பிறகு அதாவது சுமார் 26 மாதங்களுக்குப் பிறகு!!!. எனக்கு லைசன்ஸ் மறுத்ததிற்கு காரணங்கள் இதோ:
1. சரியான பயிற்சித் தேவை (சவூதியில் 5 வருட்ம் இந்தியாவில் பல வருட்ங்கள் கார் ஓட்டியவன் நான்)
2. கவனம் தேவை
3. பின் பக்கக் கண்ணாடியை அடிக்கடிப் பார்க்கவும்
4. அதிகமாக கண்ணாடிப் பார்க்கிறீர்கள். முன்னே பார்க்கவும்
5. வேகம் வேண்டும்
6. மிக வேகம்
7 மிக சரி ஆனால் இன்னும் பயிற்ச்சி தேவை
8. மிக சரி. உங்கள் பெயர் என்ன சிவாவா? அப்படியென்றால் இந்துவா? என்று வாயால் கேட்டுவிட்டு எழுத்தில் இன்னும் பயிற்ச்சி தேவை என குறிப்பு
9. மிக சரி அடுத்தமுறை இன்னும் நன்றாக ஒட்டவும்
10 . இந்துவா... அப்படியென்றால் கவனம் தேவை
11. கவனம் வேண்டும்
12. பயிற்ச்சி வேண்டும்
13. நன்றாக ஓட்டினீர்கள். நீங்கள் இஞ்ஜினீயாராக இருப்பதால் உங்களுக்கு லைசென்ஸ். உடனடியாக கார் வாங்கவேண்டும் சரியா?. மபுரூக்.
ஒவ்வொரு முறையும் 100/150 பேர்கள் வருவார்கள் 2 பேருக்குத்தான் லைசென்ஸ் கிடைக்கும். லைசென்ஸ் இருந்தால் தான் கார் வாங்கமுடியும்.
லைசென்ஸ் கிடைக்காததால் கார் வியாபாரம் படுத்தது. கார் வியாபாரிகள் மன்னரிடம் முறையிட்டனர். மன்னரும் மனமிறங்கி "யாரங்கே அனைவருக்கும் லைசன்ஸ் வழங்கு" என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி எனக்கு கிடைத்தது. எனக்கு லைசன்ஸ் கிடைத்த அன்று 25 பேருக்கு லைசன்ஸ் கிடைத்தது. சோ.....எனக்கு கிடைத்தது என்னுடைய திறமையினால் அல்ல. மன்னர் அளித்த பரிசால்.....
லைசென்ஸ் கிடைத்தபிறகு கார் வாங்கும் படலம் தொடங்கும். அரேபியர்கள் புது கார் பெரிய்ய்ய்ய்ய 4 வீல் ட்ரைவ் வாங்குவர்.
பிறகு மற்ற அரேபியர்கள் பழைய்ய்ய்ய்ய பெரிய வண்டி வாங்குவர். அவர்களின் தேவை அப்படி ஒவ்வொருவர்க்கும் மினிமம் 5 குழந்தைகள் இருக்கும்
இந்திய்ர்கள் கார் வாங்குவது மிக வேடிக்கையாக இருக்கும். முதலில் புதுசா பழசா என்று ஒரு வாக்குவாதம் செய்து ஒரு முடிவிற்கு வருவார்கள். பழசு என்றால் மெர்ஸிடஸ் பென்ஸ், BMW போன்ற கார்களைப் பார்ப்பார்கள்.
புதுசு என்றால் எல்லா கார்களின் விலைகளைக் கேட்டு கடைசியாக டொயோட்டா காம்ரி வாங்கிவிடுவர். ஆகையால் நீங்கள் ஒரு டொயோட்டா காம்ரி காரைப் பார்த்தால் அது ஒரு இந்தியருடையதாக இருப்பதற்கு அதிக சாத்தியம் உண்டு
Monday, April 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
சிவா சார்,
//இந்திய்ர்கள் கார் வாங்குவது மிக வேடிக்கையாக இருக்கும். முதலில் புதுசா பழசா என்று ஒரு வாக்குவாதம்
:-)))))) சத்தியமா சிரிச்சேன்.
//டொயோட்டா காம்ரி வாங்கிவிடுவர்
அது சரி ஊருக்கு ஊர் ஒரே கார்தான் சார். இந்த ஹோண்டா அக்காட் விட்டு போன மாதிரி இருக்கு உங்க ஊர்ல
கடைசியாக நீங்க என்ன கார் வாங்குனேன்னு சொல்லவே இல்லை. எல்லாம் ஒரு ஜெனரல் நாலேஜ்க்குத்தான் :-)
சிவா லைசென்ஸ் வாங்குவதில் நம்ம சாதனையை யாரும் முறி அடிக்க முடியாதூன்னு நினைச்சா நீங்க இப்படி பண்ணிடிங்களே சரி அமெரிக்க கண்டத்துல நம்மளை அடிக்க ஆளே கிடையாது(5 முறை பெயில் ஆனேன்.).
கார்த்திக்,
நான் ஒரு பழைய நிஸ்ஸான் சன்னி ஓட்டிக்கொண்டிருந்தேன்.
இங்கே அக்கார்ட் அங்கே காம்ரி. நானும் இங்கே ஒரு அக்கார்ட் வெச்சிருக்கேன்.
காம்ரியோ அல்லது அக்கார்டோ வாங்கமால் வேறு ஏதாவது வாங்கி விட்டால் சக இந்தியர்களின் பார்வையினால் நம் ஏதோ மிகப் பெரிய தப்புசெய்துவிட்டோம் என நினைக்கவைத்து விடுவர்.
அந்த காலத்திலெ செடக் ஸ்குட்டர் வாங்கின மன நிலை தான் நம் இரத்ததிலும் ஓடுது
சிவா, இந்த ஜப்பான் கார் வாங்கறதுக்கு நாம் முற்படுவது இந்தியாவிலேருந்து மாருதியில ஆரம்பமானது தான்!
சந்தோஷ், நீங்க அமெரிக்க கண்டத்தின் சாதனியாளர் என்பதில் சந்தேகமே இல்லை.
நான் அங்கே சாதனையாளன் அல்ல. எனக்கு முன் ஒரு ஸ்ரீலங்கா தமிழ்ச் சகோதரர் இருக்கிறார். அவர் சுமார் 8 வருடங்கள் கழித்து பெற்றார். அவர்தான் சாம்பியன் :))))
வெளிகண்ட நாதரே,
ஜப்பான் கார்கள் நல்ல கார்கள் தான். அவைகளை வாங்குவதில் தப்பே இல்லை. மேலும் இந்த கார்கள் வடஅமெரிக்காவிலேயெ தாயரிக்கப் படுகின்றன. இதன் தரம் அமெரிக்க கம்பெனிகார்களில் என் இல்லை என தெரியவில்லை.
Pontiac Vibe என்ற மடெல் Toyota Matrix தான். GM அவர்களிடம் வாங்கி விற்கிறார்கள்.
அதேபோல் Lexus கார்கள் Honda தொழிற்சாலையில் தயாரிக்கப் படுகிறது.
என்ன பிஸினஸ்மாடல் என்று புரியவில்லை.
வடஅமெரிக்காவில் புரியாத பிஸினஸ்களில் கார் பிஸினஸ் மற்றும் பிளேன் டிக்கட்டுகளின் விலை
பாஸ்,
லெக்ஸஸ் ஹோண்டா தொழிற்சாலையில்லை, டொயடா தொழிற்சாலையில் தயாராகிறது. ஹோண்டா தொழிற்சாலையில் தயாராவது அக்யூரா கார்கள்.
மற்றபடி, நாம் ஜப்பானிய கார் வாங்க காரணம், பராமரிப்பு செலவு குறைவு, நீண்ட நாள் உழைக்கும். அமெரிக்க கார்கள் 5 வருஷத்தில "transmission fail" ஆகிவிடும். ஜெர்மன்/யூரோப்பிய கார்கள் வைக்கிற செலவுக்கு, பொண்டாடியே பரவாயில்லைனு தோணும் :)
சிவா,
'இந்தியாவில் காரோட்டிப் பழக்கம் இருந்தால் உலகத்தில் எங்கேவேணாலும் ஓட்டிறலாம்'னு
நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
நாங்க லைசன்ஸ் எடுத்தப்ப, நான் முதல் முறையிலும் கோபால் மூன்றாவது முறையிலும் பாஸ்
ஆனோம். இங்கேயும் ( ஃபிஜியில்)ஹில் டெஸ்ட் உண்டு. வேகம் மிக அதிகம் என்று கோபால் ரெண்டுமுறை
ஃபெயில்:-)
24 வருசமா வண்டி ஓட்டுனாலும், இந்தியாவில் இதுவரை ஓட்டியதில்லை. பயம்தான். யாருமே லேன்லே
இருக்கறதில்லை. மொதல்லே லேனே இல்லை. அப்புறம் எங்கே?
பார்த்தா, எனக்கும் தெரியும். லெக்ஸஸ் - டொயொட்டா அக்யுரா- ஹோண்டா என்று.
காம்ரியும் கொரால்லாவும் அமெரிக்காவில் அதிகமாக விற்கும் கார் ஆதலால் டொயொட்டா பாக்டெரி படு பிஸியாம். லெக்ஸஸை தரமாக தயாரிக்க ஹோண்டாவிற்கு அவுட் சோர்ஸ் செய்திருக்கார்களாம் அதுதான் குழப்பமே.
துளசி மேடம், இந்தியாவில் கார் ஒட்டியிருந்த்தால் அந்த பழக்கக்தை முதலில் மறக்க வேண்டும். பிறகு புதிதாக கற்க வேண்டும்.
போன டிசம்பரில் சென்னையில் கார் ஒட்டினேன். நமக்கு நம் முன் செல்பவரின் psychology தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் செல்வது உங்கள் லேன் அவர் செல்வது அவரது லேன். அடுத்தவர் உயிர்ப் பற்றி கவலைப் படக்கூடாது. உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். அது ஒரு போர் முனை. ஆனாலும் கோடி கோடி மக்கள் அந்த போர் முனையில் தினம் தினம் உயிர் வாழ்வதும் ஒரு அழகுதான்
வித்தியாசமான அனுபவங்கள். கலக்குறீங்க சிவா.
Post a Comment