Wednesday, April 05, 2006

என் அரேபிய அனுபவங்கள் -- 6

------------------------------------------------------------------------------------




நான் முன்னரே சொன்னபடி நான் சந்தித்த நல்லவர்களைப் பற்றி பட்டியலிடுகிறேன்.


ஒரு நாள் அபுதாபியில் புதிதாக திறந்த ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்கு போயிருந்தேன். அது ஒரு வொர்க்கிங் டே. கூட்டம் இருக்காது. ஆனால் அன்று சற்று அதிகமாகவே போலிஸ் பாதுகாப்பு இருந்தது. நானும் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்று சில பொருட்களை வாங்கி விடு வெளியே வரும்போது நிறைய மக்கள் யாரையோப் பார்த்து கை அசைத்துக் கொண்டிருந்தார்கள். நானும் சற்று விலகி வந்து பார்த்தால் மறைந்த அபுதாபி மன்னர் திரு ஷேக் சாயித் அவர்கள் அந்த காம்ளெக்ஸை பார்வையிட்டும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு வாழ்த்தும் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கெடுபிடியோ பந்தாவோ இல்லை. இவர் மன்னர். இவர் சாகும் வரை நிரந்தர மன்னர். அந்த நாட்டில் 80% வெளிநாட்டினர். அவர் நினைத்திருந்தால் அந்த காம்ளெக்ஸை முழுவதுமாக அடைத்து விட்டு தனியாக அங்கு ஷாப்பிங்க் செய்திருக்க் முடியும். நம் நாட்டில் ' நிரந்தர' முதல்வர்களும் பிரதமர்களும் ஷாப்பிங் போனால் அந்த ஏரியாவே ஸ்தம்பிக்கும். மக்களுக்கு அன்று பயங்கர தாமதமும் தொல்லைகளும் நேர்ந்திருக்கும். அந்த மன்னரின் எளிமையும் மக்கள் மேல் கொண்டிருந்த பண்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அது மன்னருக்கு அழகு.



அடுத்தவர் என்னிடம் பயிற்சிப் பெற்ற ஒரு பொறியாளர். இவருக்கு நாங்கள் வைத்தப் பட்டப் பெயர் மான். இவரின் இயற்பெயரைச் சொன்னால் ஹிந்தியில் குடை என்று அர்த்தம் வரும், குடையென்றாலே நமக்கு மான் மார்க் குடைகள் தானே ஞாபகத்திற்கு வரும். மேலும் டெக்னிகல் மீட்டிங்களில் இவர் மான் போல் மிரளுவார். ஆகையால் இவருக்கு மான் என்று பெயர். இவர் படித்தது 10 ஆம் வகுப்பு வரைதான். ஆனால் இவர் பொறியாளர். அதைப் பற்றிபின். இவரின் தந்தை அரச குடும்பத்தினர் வழிபடும் மசூதியில் முன் நின்று தொழுபவர். இவரின் சகோதரர் ஷாரியாத் நீதிமன்றத்தில் நீதிபதி. இவர் மானைப் போலவே அமைதியாகவும் எல்லாரிடமும் அன்புடனும் பழகுவார். எல்லாரையும் மரியாதையாக நடத்துவார்.அதிர்ந்து பேசமாட்டார். எல்லா மதத்தினருக்கும் மரியாதை செய்வார், ரமதான் நோன்பு இருக்கும் சமயத்தில் சாப்பாடு நேரம் வரும்போது நம்மை சாப்பிட சொல்லி அறையைவிட்டு வெளியே சென்றுவிடுவார். வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால் அன்புடன் விசாரிப்பார். ஆக மொத்தம் இவரிடம் மனித தன்மை இருந்தது.



நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்ய மானேஜரை சந்திக்க சரியாக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கடைசியாக நான் பொறுமை இழந்து ராஜினாமாக் கடிதத்தை அவருடைய உதவியாளரிடம் தந்துவிட்டு வந்தேன், அங்கு முறைபடி ராஜினாமா செய்யவில்லையென்றால் ஒரு பெரிய தொகையை இழக்க நேரிடும். அரபிகள் நம் ஆட்களை இதில் ஏமாற்றுவது அதிகம், நான் அதிகம் கவலை பட வில்லை. வியாபரத்தில் லாபமும் நஷ்டமும் சகஜமல்லவா. ஆனால் அங்கெ பெர்சன்னல் டிபார்ட்மெண்டில் வேலை செய்த நம்மூர் காரர் ஒருவர், ஒரு சூடானி மற்றும் ஒரு அரேபியர் என்னை அன்புடன் அனுப்பி வைத்தனர். அவர்கள் நான் கனாடா சென்றபிறகு என் நண்பர்கள் மூலம் என்னை தொடர்பு கொண்டு என் பாஸ்போர்டைப் பெற்று போதிய பேப்பர் வொர்க்களை முடித்துக் கொடுத்தனர். இவ்வளவு நாள் நம்முடன் வேலை செய்தவற்கு இந்த உதவி கூட செய்யாவிட்டால் நாங்கள் நன்றிக் கெட்டவர் ஆகிவிடுவோம் என்றனர். இவர்கள் நல்லவர்கள் எனக்கு (இங்கு நான் பார்த்த நான் சந்தித்த எனக்கு உதவி செய்த மனிதர்களைப் பற்றிதான் பேசுகிறோம்)


இதன் பிறகு தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு அரேபிய பெண்மணி என்னை தொடர்புக் கொண்டு எனக்கு சேர வேண்டிய மிகப் பெரிய தொகைக்கு காசோலை அனுப்பி வைத்தார். அவர் கடைசியில் சொன்ன வார்த்தை என் நெஞ்சை தொட்டது. "னீங்கள் இங்கே வேலைப் பார்த்த காலங்களில் எங்களவர் உங்களை இகழ்ந்திருக்கலாம். உங்கள் சேவைக்கு நன்றி. உங்களுக்கு சட்டரீதியாக சேரவேண்டிய தொகையை அனுப்பிவிட்டேன். எங்கள் கம்பெனியிலிருந்து செல்பவர்கள் மகிழ்ச்சியாக செல்வதையே நாங்கள் விரும்புகிறோம்" என்று வாழ்த்தினார்.


ஒரு பாகிஸ்தானிய குழந்தைகள் டாக்டர் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அவர் தொழில் தர்மத்தை மதித்து இன/மத வேறுபாடுகளின்றி அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தார். அவர் அரேபியர்களையும் மற்றவரையும் வேறு படுத்த்தியதில்லை. அதனாலேயே அவரை வேலையிலிருந்து தூக்கினார்கள்.


அதன் பிறகு இந்தியர்கள். இந்தியர்கள் என்றால் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் இந்துகள். இந்துகள் என்றால் மேல் ஜாதியினர், கீழ் ஜாதியினர், தென்னாடவர் மற்றும் வடநாட்டவர். இவர்கள் எல்லோரும் என்னிடம் ஒரு உறவினர்களைப் போலப் பழகினர். நாங்கள் அரேபியாவை விட்டு வரும்பொழுது இவர்கள் திரளாக வந்து கண்ணீர் மல்க பிரியா விடைக் கொடுத்தனர்.

அரேபியாவில் இருந்ததால் எனக்கு நேர்ந்த நன்மைகளின் பட்டியல் இதோ:

1. அதிக பணம் (நல்ல லாபத்துடன் வியாபாரம் செய்ததால்)
2. குடும்பத்துடன் செலவழிக்க அதிக நேரம்
3. உலகம் முழுவதும் நண்பர்கள்

போதுமா நண்மைகள்.....


இப்பொது என் பதிவைப் பார்த்து பின்னூட்டம் இட்டவர்க்கும் தனி பதிவு பொட்டவர்க்கும் சில பதில்கள்

இறைநேசன் அவர்கள் அரேபியாவில் (சவூதி உட்பட) விபசாரம் செய்ய அரேபியர்க்கு வாய்ப்பே இல்லை அவர்கள் உத்தமர்கள். கேடுகெட்ட இந்தியாவில் அதிக விபசாரிகள் அலைவதால் அப்பாவி அரேபியர் கெட்டுவிட்டார் என சொல்கிறார். இறைநேசன் அவர்களே அல்கோபரில் மிகப் பெரிய கம்பெனிகளின் காம்பவுண்டகளில் விபசாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. சற்றே கண் திறந்து பாருங்கள். சட்டங்கள் எளியவர் மேல் தான் பாயும்.

அப்படியே சற்று அருகிலிருக்கும் பஹ்ரைன் சென்று பாருங்கள் விபசாரம் ஒஹோ என்று நடப்பதை. அந்த விபசாரிகளிடம் 1000 கணக்கில் ரியால்களை அள்ளி வீசுபவர், சவூதியில் எழை இந்தியனுக்கு ஒரு 400 ரியால் கூலி கொடுக்க மறுக்கும் உத்தம அரேபியர்.

வியாபார நாடு தூபாய்க்கு வாருங்கள் இங்கே நடக்கும் சதை வியாபாரம் உலகில் எங்கும் நடக்கவில்லை. எல்லாப் பொருட்களை இறக்குமதி செய்வது போல் இங்கே பெண்களை மேலை நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், லெபனான், எகிப்து சூடான் ஆகிய நாடுகளின்று இறக்குமதி செய்கிறார்கள். இவர்களின் வாடிக்கையாளர்கள் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை.


துபாயில் ஒரே கட்டிடத்தில் சிவன் கோவிலும் சீக்கியர்களின் குருத்துவாராவும் உள்ளது. அங்கே என்ன மதக் கலவரமும் சாதி கலவரமும் நடக்கிறாதா? எதெற்கெடுத்தாலும் ஏன் 10000 வருடங்களூகுப் பின் சென்று ஆரிய படையெடுப்பைப் பற்றி பேசுகிறீர்கள். இங்கே நடப்பது அரேபியாவில் என் அனுபவம் பற்றிய விவாதம் "இந்தியாவின் ஜாதியின் தோற்றமும் அதன் விளைவுகளைப்" பற்றி அல்ல.

மேலும் நான் கோவில் வேண்டுமென்று கேட்டது சவூதி மன்னர் இந்தியாவை தன் இரண்டாவது தாய் நாடு என்று சொன்னதால். அவர் அவருடைய நட்பு நாடுகளான அமெரிக்காவிற்கும் ப்ரிட்டனுக்கும் செய்து வரும் சலுகைகளைப் பட்டியலிட்டுருந்தேன் அதைப் பற்றி யாரும் மூச்சு விடவில்லையே ஏன்?



என் அனுபவங்கள் தொடரும் .........

18 comments:

said...

Hello Siva,
I've been reading your blog about your arabian experiences. There are many to blame for the miserable conditions including our government, local agents, ignorance about our own rights and people like you who had the means and knowledge but chose to keep quiet. I dont think any western country would allow their citizens to struggle abroad like this. We may not be able to change their attitude but we could have made some change by active campaigning - if not possible in saudi - at least in our home country. Work like this
http://www.tntj.net/event/Rpt_200603JordanWorkersTNTJ10.30.asp will be more helpful to to them than debating how arabs are like.
I know you've asked to include name and email address to get ones comment published. I've no idea how my name and emailid can add any weight to my opinion and i've no intention of publishing my name. Its up to you to publish this.

said...

Dear friend,

Yes, like Philipines our governement can set a minimum salary level and establish a cell at embassies to monitor. The agents in India to be punished mercilessly.

More than that if our labour force work hard in India like they work in middleeast, they make more money in India itself. For an example it is difficult to find a plumber or a carpenter or a electrician in Madras. I struggled myself. There are skilled workers available in middle east to work 7 days a week and 24hrs a day for Dhs 50 or less .

We can fight with them for our rights and for more money

said...

உங்களின் வேதனைகள் புரிகிறது. நன்றாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

ஆனால், ஆரியப் படை எடுப்பை கூறினால் உங்களுக்கு ஏன் வேர்த்து வடிகிறது?

said...

உங்களின் வேதனைகள் புரிகிறது. நன்றாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.ஆனால், ஆரியப் படை எடுப்பை கூறினால் உங்களுக்கு ஏன் வேர்த்து வடிகிறது?/

கொட்டைப்பாக்கு விலை என்ன என்று கேட்டால் கும்பகோணத்துக்கு போகும் வழி சொன்னால் கோபம் வருமா வராதா?அவர் எழுதுவதற்கும் ஆரிய படை எடுப்புக்கும் எள் முனை அளவாவது சம்பந்தம் இருந்தால் அதை எழுதலாம்.அவர் பதில் சொல்வார்.அதை பற்றி வாயே திறக்க மறுத்துவிட்டு வேறு எதை எதையோ பேசினால் சிரிப்பு தான் வருகிறது.சிவா எழுதுவது பொய் என வளைகுடாவிலிருக்கும் ஒருவர் கூட இதுவரை சொல்லவில்லை.அங்கிருந்து அவரை கண்டித்து திட்டுபவர்கள் கூட இதை ஏன் சொல்கிறாய் என தான் சண்டைக்கு வருகிறார்களே தவிர இது பொய் என சொல்லவே இல்லை.

said...

ஹலோ கருப்ஸ்

ஆரிய படையெடுப்பு நடந்தால் எனக்கு ஏன் வேர்க்க வேண்டும்? ஆரிய படையெடுப்பு ஆரியர், திராவிடர் பார்ப்பணர் கீழ்சாதி அதெல்லாம், அந்த காலமையா, அதைவிட்டு வேறு விஷயத்திற்கு வாங்கப்பா. ஆரிய படையெடுப்பே டூபாக்கூர்ன்னு ப்ரூவ் ஆயிடிச்சி தெரியுமா, ஐயா, உங்க நாலட்ஜை அப்க்ரேட் பண்ணுங்கப்பா.

அப்புறம் நானு மாட்டுகறி , பன்னிகறி , முதலை, ஆக்டோபஸ். தவளை, மான்கறி, முயல்கறி எல்லாம் சாப்டிருக்கேன், அதைப் பத்தியும் எழுதுலாமில்லே, இதெல்லாம் எப்படி சமைப்பதுப் பர்றி தனி பதிவே போடறேன் , நாங்க கறி சாப்பிட்டா கறி வெலெ ஏறிடுமின்னு பயமா?

said...

Siva,

I really dont understand why you want to mix up "aryan invasion" in your arabian postings??.

You are the one who is mixing up things.

You mentioned that // ஆரிய படையெடுப்பு ஆரியர், திராவிடர் பார்ப்பணர் கீழ்சாதி அதெல்லாம், அந்த காலமையா, அதைவிட்டு வேறு விஷயத்திற்கு வாங்கப்பா. //

Even last week the dalits were not allowed to participate in a temple festival near madurai. Please check that news.

said...

கால்கரி சிவா அவர்களே,

நீங்கள் கறி சாப்பிட்டதை எழுதினால் கறுப்பு அவர்கள் வேதனைப்படுவார். ஏற்கனவே மலர் மன்னன் மீன் சாப்பிடுவதற்காக இவர் ரொம்ப வருத்தப்பட்டு விட்டார்.

எவ்வளவுதான் பார்ப்பனர்களைத் திட்டினாலும் அவர்கள் மேல் மிக்க மரியாதை வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். நீங்களே பாருங்களேன் அவர் மலர் மன்னனைப் பற்றியத் தன் பதிவில் கீதா சாம்பசிவன் அவர்களிடம் பார்ப்பன குலத்தைப் பற்றி என்ன கூறுகிறார் என்று.

"கீதாசாம்பசிவம் அவர்களே, அந்த குலத்திற்கென ஒரு தனிமரியாதை உள்ளது. நான் நல்லவர் என்று சொல்லிக் கொண்டே இதெல்லாம் செய்வதால் அவரைப்பற்றிய எனது மதிப்பீடாக எழுதினேன்."

என்ன கறுப்பு அவர்களே, நான் கூறுவதில் ஏதேனும் தவறு உண்டா?

சிவா அவர்களே இப்பின்னூட்டம் உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதில் இனிமேல் சந்தேகம் இருக்கக் கூடாது (போட்டோ, எலிக்குட்டி சோதனையில் சரியான ப்ளாக்கர் எண் 4800161). ஆகவே இம்முறை தனிப்பதிவில் பின்னூட்டமெல்லாம் இடவில்லை. அந்த மூன்றாவது சோதனையை ப்ளாக்கர் இல்லாத பதிவுகளில் பின்னூட்டம் இடும்போது வைத்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ithu thaan 0.1% aa?????

mathsla pooliya neenga

neengalum cari sapidanum appo thane engaluku maatu(cow)cari keedaikum

udanee enaku muslim muthirai idathirgal

4 yrs b4 yelli cari sapitavargal naangal

naan kuwaitil ullathal en kudumbam maadu,addu sapiduhiragal(yelli alla)

allow pannuna pannuga illana poonga sir ungaluku pooruncha sari thaan

said...

விடாது க(வெ)றுப்பு அவர்களின் வழ்கையின் குறிக்கோள் பிராமணர்களைத் திட்டுவதும், ஏதோ இந்தியாவில் தற்போது நிலவி வரும் சமுதாயச் சூளலுக்கு அவர்கள் தான் காரணம் என்ற எண்ணத்தினால் வெழிப்படும் வெறுப்பை வலைப்பூவில் கொட்டித் தீர்பதும் தான்.

இவர்களைப் போன்றோர் தமிழ் நட்டில் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள், இவர்களைத் திருத்துவது நம் வேலை கிடையாது. இவர்களைப் பற்றி கவலைப் படாமல் தங்கள் அரேபிய அனுபவங்களைத் தொடருங்கள்.

நன்றி
ஷங்கர்.

said...

Dear Annonymous Sir, The aryan invasion theory was used by Mr.Irainesan in his blog named vanderikaLin puthiya kaNtupitippu and hence I talked about that.

said...

திரு அனானிமஸ் அவர்களே,

உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். 1960 களில் பஞ்சத்தால் மக்கள் எலிக்கறி சாப்பிட்டதாக என் தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது மீண்டும் கேள்வ் பட்டு வருந்துகிறேன்.

சீன மக்கள் என்ன சாப்பிடக் கொடுத்தாலும் அதை உண்பது நாம் அவர்களுக்கு தரும் மரியாதை. அந்த வகையில்தான் நான் பலவித மாமிசங்களை உண்ண முடிந்த்தது. ஆனால் இப்பொது நிலைமைகள் மாறி வருகிறது. எல்லா நாடுகளிலும் விஜிடேரியன் மற்றும் ஹலால் உணவு வகைகள் கிடைக்கின்றன. இந்தியர் ஒருவர் இருந்தாலும் அல்லது அரேபியர் ஒருவர் இருந்தாலும் விஜிடேரியன் மற்றும் ஹலால் உணவு வகைகள் அந்த விருந்துகளில் வழங்கப் படுகின்றன. பற்பல உணவுகளை தந்து சங்கடப் படுத்துவதில்லை

said...

உங்க போஸ்ட் எல்லாம் படிச்சிக்கிட்டுத்தான் வர்றேன். உங்க அரேபிய அனுபவம் கிட்டதிட்ட நம்ம மாதிரிதான். ஆனா வீணா சண்டை சச்சரவுல மாட்டிகிடாதீங்க, நல்ல எழுதறவங்களுக்கு எந்த stamp ம் விழுககூடாது. நீங்க நம்ம ஆளு, பக்கா Instrumentation இஞ்சினியரு, சொல்லப் போனா, இதெல்லாம் stray signals, எல்லாத்தையும் fiberக்கு மாத்துங்க, அப்பதான் இந்த noise எல்லாம் கம்மியாகும். தொடர்ந்து சுவாரசியமா எழுதுங்க.

said...

இரண்டு அப்செர்வேஷன்ஸ்!

1.அரசனைப்பற்றிய உங்கள் கருத்து. எனக்கு "அரசனெப் பார்த்தக் கண்ணுக்கு புருஷனெப் பார்த்தாப் பிடிக்காது. அரசனெப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா புருஷனெ நெஞ்சு மறக்காது" எனும் முதுமொழி ஞாபகம் வந்தது.

2. பிராமணன் கறி சாப்பிடுவது பற்றிய உங்கள் கருத்து. கறி ஏன் வருகிறது இங்கே? எனக்கு சோ வின் எங்கே பிராமணன் ஞாபகம் வந்தது.

ஆகவே, வண்டி சரியான பாதையில் மீண்டும் செல்லட்டும்

அன்பு,
சரவணன்

said...

வெளிகண்டநாதரே,

மிக்க மகிழ்ச்சி. நான் இந்த புராஜெக்டை தொடங்கிட்டேன் . முடிப்பது நம் தொழில் தர்மம் அல்லவா?.

ஆகையால் இதை முடித்துவிட்டு பிறகு "கிளி வளர்ப்பது எப்படி?" "கனாடாவில் குடியேறுவது எப்படி?" போன்ற பதிவுகள் போட்டு noise ஐ குரைக்கிறேன்.

கால்கரி பக்கம் வந்தா ஒரு சவுண்டு விடுங்க மீட் பண்ணலாம். இந்த siva.sutty@gmail.com அட்ரஸுக்கு ஒரு மெய்ல் தட்டி விடுங்க

Regards,

Siva

said...

ஷங்கர்,

நீங்க இப்ப இருக்கிற நாட்டைப் பற்றி எப்ப எழுதபோறீங்க?. அந்த நாட்டின் பேரைக் கேட்டாலே முகம் சுளிக்கும் நண்பர்கள் அதை எப்படி எதிர்க் கொள்வார்களென்று தெரியவில்லை

said...

சரவணா, புரியவில்லை. அரசர் நல்லவர் என்று என் கண்ணிற்கு பட்டது. அதில் என்ன தவறு. அவரைப் பர்றி சில புத்தகங்களைப் படித்து அவர் மேல் நல் அபிப்ராயாம் கொண்டுள்ளேன்

said...

கிரிஸன்,

னன்றி. நீங்கள் எப்படி பெருவிற்கு? நான் தென் அமெரிக்காவிற்கு இதுவரை சென்றதில்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்

said...

ஆறிய படையெடுப்பு பொய்யா? கனடவுல இப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறார்களா என்ன?