Monday, April 03, 2006

ஆம்..................................................................

மரங்களைப் பாருங்கள்..... ஆப்பிரிக்காவில் மரங்கள் மிக உயரமாக வளருங்கின்றன. அதே மரவகைகள் இந்தியாவில் மிக உயரமாக வளர்வதில்லை. எனக்கு ஆச்சரியம்! என்ன காரணம்? நான் காரணம் கண்டு பிடித்தேன்.

நெரிசலாக இருந்தால்தான் மரங்கள் உயரமாக வளரும். சிறிதளவு உயரத்திலேயெ கதிரொளி கிடைத்துவிட்டால், ஆறுதல் அடைந்துவிடுகின்றன. அதுதான் அவற்றின் வாழ்வு; ஆனந்தம்..

ஆப்பிரிக்கக் காடுகள் அடர்த்தியாக இருப்பதால், ஒவ்வொரு மரமும் கதிரொளி தேடி முடிந்த அளவு உயரம் போக முயல்கிறது. அப்படி போனால் தானே ஆனந்தமான காற்றும் கதிரொளியும் கிடைக்கும். அப்போதுதானே ஆனந்த நடனம் புரிய முடியும். இல்லாவிட்டால் மரணம்தான்.
இயற்கை முழுதுமே, சுக சௌகரியங்களை விரும்புகின்றது முடிந்தவரை. ஆனால், நமது மதங்கள், சுகசௌகரியங்களும், செல்வதிற்கும் ஆடம்பரங்களுக்கும் எதிராக பிராச்சாரம் செய்கின்றன.

"வறுமையில் நிறைவு கொள். நோயில் நிம்மதி அடை. சுரண்டல்களை சகித்துக் கொள். உயரப் போக ஆசைப் படாதே" என்றெல்லாம் மக்களிடம் சொல்வது இயற்கைக்கு மாறானது என்பது ஞானம் பெற்றவரின் பார்வை.

நாம் எல்லாம் சுமந்து கொண்டிருப்பது இயல்பிற்கு மாறுபட்ட நிலையைத்தான். உமக்குள் ஏற்படும் கிளர்ச்சி மட்டுமே இதை தெளிவாக உணர முடியும்.

தேவகீதா, வரலாற்றுக் கிளர்ச்சிகள் முழுவதுமே 'இல்லை' என்பதன் மீதே நிற்கின்றன என்கிறாய். அவை கிளர்ச்சிகள் அல்ல. சொல்லை மாற்று. எல்லாப் புரட்சிகளும் தான் 'இல்லை' என்பதை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவை எதிர்மறையானவை. எதற்கோ எதிரானவை. அழிவு தரக் கூடியவை. பழிவாங்கும் பண்பு கொண்டவை. கொடூரமானவை.

எனது கிளர்ச்சி நிச்சயமாக 'ஆம்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. அது இருத்தலுக்கு சரி சொல்வது; இயற்கைக்கு சரி சொல்வது; உனக்கே சரி சொல்வது. நமது மதங்கள் எதுவாக இருந்தாலும், நமது பழைய மரபுகள் எதுவாக இருந்தாலும் உனக்கு 'முடியாது' என்றே சொல்லும்;இயற்க்கைக்கும், இருப்பிற் 'இல்லை' அல்லது 'முடியாது' என்றே சொல்லும். அவையெல்லாம் வாழ்வெதிர்ப்பு நிலைபாடு கொண்டவை.

எனது கிளர்ச்சி, வாழ்வை ஏற்று உறுதிப் படுத்துவது. நான் ஆடிப்பாடி வாழ விரும்புகிறேன். இவவாறு வாழ்வின் மீது நம்பிக்கை கொள்வது, இயற்கைக்கு 'ஆம்' சொல்வது, இதன் மூலம் ஒரு புதிய பூமியை, ஒரு புதிய மனித குலத்தை உருவாக்க முடியும்.

இறந்த காலம் 'இல்லை'


எதிர்காலமே 'ஆம்'


'இல்லை'. 'முடியாது' என்ற எதிர்மறையில் நாம் நிறைய வாழ்ந்து விட்டோம்; நிறைய வேதனைகள் பட்டுவிட்டோம் மிஞ்சியவை துயரங்கள் மட்டுமே. காலைப் பொழுதின் பறவைகள் போல மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். மலர்களின் வண்ணங்கள் போலவும், கட்டற்று பறக்கும் பறவைகள் போலவும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இறந்த காலம் இன்றி, திறந்து கிடக்கும் எதிர்கால்ம் நோக்கிப் பயணம் செய்யவேண்டுமென்று விரும்புகிறேன். காரணம் நான் வாழ்வுக்குச் 'சரி' சொல்லி வரவேற்பவன். வாழ்வை மறுப்பவர்கள் எல்லாரும் எனக்கு எதிரானவர்கள். உலகம் முழுவதிலும் எனது 'ஆம்' , மனிதம் மீது திணிக்கப் படுகிற எல்லா மதங்களுக்கும் எதிரானது; கொள்கைகளுக்கு எதிரானது.எனது 'ஆம்' தான் எனது கிளர்ச்சி.

நீ 'ஆம்' சொல்வதே, உன் கிளர்ச்சி


ஆம் ஒஷோ அவர்களே.......

-------------------------------------------------------------------
நன்றி : ஆரம்பம் நீதான் என்ற புத்தகம், கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 ஆசிரியர் ஓஷோ தமிழில் கவிஞர் புவியரசு. www.kannadasan.com

2 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

""வறுமையில் நிறைவு கொள். நோயில் நிம்மதி அடை. சுரண்டல்களை சகித்துக் கொள். உயரப் போக ஆசைப் படாதே" என்றெல்லாம் மக்களிடம் சொல்வது இயற்கைக்கு மாறானது என்பது ஞானம் பெற்றவரின் பார்வை."

அவ்வாறு போதனை செய்பவர்களைப் பார்த்தால் அதையெல்லாம் அவர்கள் மற்றவர்களுக்குத்தான் கூறியிருப்பார்கள். தங்களுக்கு செல்வம் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் உணர்ந்து அவரவர் தத்தம் நலனைப் பார்ப்பதே சரியாக இருக்கும்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என்னுடைய இப்பதிவில் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்