Wednesday, April 26, 2006

குரங்கு - மனிதன்

இந்த பதிவிற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் சிறிதும் சம்பந்தமில்லை.

எனக்கு டார்வின் சித்தாந்த்தைப் பற்றி சிறிதும் தெரியாது.

என்னுடைய புத்தக அறிவு மிகக் கம்மி.

இது நான் படித்தப் ஒரு புத்தகத்தின் மொழிபெயர்ப்பே.


மானுடம் மேலும் வீழ்வதை தடுப்பது எப்படி? என்பது கேள்வி.


பதில் வருகிறது ஒரு வெடியாக.


மானுடம் வீழ்கிறதா?

இது ஒரு கப்ஸா.

உங்கள் மதகுருக்களின் வியாபரத் தந்திரம். "மானுடம் வீழ்கிறது. நாங்கள் தான் மேலும் விழாமல் தாங்கிக் கொண்டிருக்கிறோம்". என்று கடந்த 5000 வருடங்களாகக் சொல்கிறார்கள்.
5000 வருடங்களாக மீளாத மானுடம் இப்போது மீண்டதா. இல்லவே இல்லை.
அப்படியென்றால் அவர்கள் சொல்வது அத்தனையும் பொய்தானே.

சரி வீழ்வதைப் பற்றிப் பார்ப்போம்.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்ற டார்வினின் சித்தாந்தத்தை எடுத்துக் கொள்வோம். (டார்வின் பெயரைக் கேட்டாலே சில மதவாதிகள் எரிவார்கள்).

ஒரு மரத்தில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அதில் வலிமையான குரங்குகள் உயரே சென்று தங்கள் வெற்றியை நிலைநாட்டும். அவர்களின் கீழே அந்த குரங்குகளின் ஆசைநாயகிகளால் உருவான அந்தபுரம் இருக்கும். அதற்கும் கீழே அந்த வெற்றிப் பெற்றக் குரங்கின் அடிவருடிகள் இருப்பார்கள். அதற்க்கும் கீழே பலவீனமான குரங்குகள் இருக்கும். அந்த பலவீனமான குரங்குகளை விட பலவீனமான குரங்குகள் மரத்திலிருந்து கீழே வீழ்ந்தன.

அந்த வீழ்ந்த குரங்குகள் எழுந்து தனது இரண்டு கால்களால் நடந்து மனிதனாக மாறின. அப்போது மரத்திலிருந்த குரங்குகள் அவைகளை கிண்டல் செய்தன. சுதந்திரமாக மரத்தில் ஏறி துள்ளி விளையாடுவதை விட்டு இரண்டு கால்களால் தரையில் சர்க்கஸ் செய்கின்றனை என்று எள்ளி நகையாடின.

ஆக.... வீழ்தல் என்ற சொல்லுக்கே இங்கு இடமில்லை. வீழ்ந்தவன் தான் எழுந்து நடக்கிறான். வீழாத குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே உள்ளன. அவர்களைதான் இவர்கள் மேலும் வீழாமல்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களே குரங்குகளாக இருக்காதீர்கள். தடைகளை கடந்து மனிதனாகுங்கள்.

மனிதன் எப்பொழுதுமே வளர்கிறான். அவன் ஒரு போதும் வீழ்வதில்லை

சரியா? சிவா

சரிதான் ஓஷோ அவர்களே

8 comments:

said...

டார்வின் சித்தாந்தம் பற்றி நான் எழுதிய கட்டுரை இது சிவா.அமெரிக்காவில் இதுபற்றி பயங்கர விவாதம் நடைபெறுகிறது.குடியரசு கட்சியினர் பள்ளிகளில் டார்வினை சொல்லித்தரக்கூடாது என சொல்கிறார்கள்.:-(

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40604211&format=html

said...

அன்புள்ள சிவா,
உங்கள் எழுத்துக்களை நான் படித்து வருகிறேன்.
பாசாங்கு இல்லாமல் எழுதுகிறீர்கள். குறிப்பாக இந்த கட்டுரை அருமை. ஓஷொ விலிருந்து எடுத்தாள்கிறீர்களா?
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஜவஹர்.

said...

செல்வன், உங்கள் திண்ணைக் கட்டுரை மிக அருமை. எனக்கு டார்வின் தியரியில் ஆர்வம் வந்துவிட்டது. நூலகத்திற்கு சென்று சில புத்தகங்களை படிக்கவேண்டும்.

டார்வின் தியரியை பொய் என்று சொன்னவரை இன்றுக் காலை மீட்டிங் முடித்து ஒரு பிடி பிடித்துவிட்டேன்.

உங்கள்குக்கும் வெளிகண்டநாதருக்கும் நன்றி

said...

சிவா, ஒஷோவின் தததுவமான அதிகபட்ச மனித ஆசையை தீரும் வரை அனுபவித்தால், அடுத்த நிலை கடவுளை அடையும் முக்திநிலைன்னு சொன்ன கருத்துக்களை ஏங்க கொஞ்சம் எழுதக்கூடாது. அப்புறம் மக்களுக்கு இருக்கும் அந்த ஆசிரம கதைகள் தெரிந்து கொள்ள வசதியா இருக்குமே!
அப்புறம் பாம்பே போறப்பல்லாம் அந்தேரியில இருக்கிற ஓஷோ ஆசிரமம் கடக்கிறப்பெல்லாம் (எங்க கஸ்ட் ஹவுஸ் அது பக்கத்திலே தான்) உள்ள போய் என்னதான்னு பார்க்கனும்னு ஆசை! என்னமோ போகமுடியல்லை, நீங்க எழுதுங்களேன்!

said...

ஜவஹர் சார்,

ஓஷோவை நான் மானசீக குருவாக எற்று அவருடைய புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருப்பேன். பார்க்க www.oshoworld.com. அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் சம்மட்டி அடியாய் மனதில் விழும்.

அவர் பகவத் கீதைக்கு எழுதியுள்ள உரை மிக வித்தியாசமானவை. 3 புத்தகங்கள் படித்துவிட்டேன் மீதம் 7 புத்தகங்கள் உள்ளன.

தங்கள் வருகைக்கு நன்றி

said...

வெளிகண்டநாதரே,

ஒஷோவின் From Sex to Super Consciousness என்ற புத்தகத்தை படித்து வியந்திருக்கிறேன். அதைப் பற்றி எழுதினால் அதை தமிழ்மணம் ஏற்றுக் கொள்ளூமா என்று ஒரு ஐயம்.

எல்லாரும் லெப்டிலே போய் ரைட்லே போ என்றால் இவர் ரைட்லே போய் லெப்டில் போ என்பார்.

இவருடைய ஆசிரமங்களுக்கு போக எனக்கும் ஆசை இன்னும் வேளை வரவில்லை. என்னுஅடைய தற்போதைய கம்பெனியின் இந்திய ஆபரேசன் பூனாவில் உள்ளது. அடுத்தமுறை பூனா போகும் பாது ஒஷோதாமிற்கு நிச்சயமாக் சென்று அனுபவங்களை பகர்ந்து கொள்வேன்

அவருடைய எழுத்துகளை எல்லாரும் படிக்கவேண்டுமென்றுதான் அவருடைய வலைபதிவிற்கு ஒரு லிங்க் தந்துள்ளேன்.

said...

//ஆக.... வீழ்தல் என்ற சொல்லுக்கே இங்கு இடமில்லை. வீழ்ந்தவன் தான் எழுந்து நடக்கிறான். வீழாத குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே உள்ளன. அவர்களைதான் இவர்கள் மேலும் வீழாமல்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களே குரங்குகளாக இருக்காதீர்கள். தடைகளை கடந்து மனிதனாகுங்கள்.//

நன்று!

said...

Pot"tea" kadai,

நன்றி