நல்ல செய்தி .
டோராண்டோவில் தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப் பட்டு 17 பேர் கைது செய்ய பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டனர்.
இவர்களின் மீது சுமத்தப் பட்ட குற்றசாட்டுகள் .
1. பார்லிமெண்டை தகர்க்க சதி
2. அரசியல் தலைவர்களை பிணை கைதியாக பிடிக்கும் எண்ணம்
3. பிரதமர் ஹார்ப்பரின் தலையை துண்டிக்க திட்டம்
4. கனடாவின் டிவி நிலயத்தை கைப்பற்ற அல்லது தகர்க்க திட்டம்
கனடாவின் ரகசிய போலீசாரின் பலே திட்டத்தால் இவைகள் முறியடிக்கப் பட்டன.
தீவிரவாதிகள் இந்த திட்டங்களை தீட்டக் காரணம் ஆப்கானிஸ்தானில் கனேடிய படைகள் கட்டுமான பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
அப்படைகளின் எண்ணிக்கை வெறும் 2300 தான். இங்கே மக்களாட்சி நடை பெறுவது பொறுக்க வில்லை இந்த மடையர்களுக்கு.
கனடா இவர்களுக்கு இலவச உயர்தர பள்ளி கல்வி, இலவச உயர்தர மருத்துவம், வேலையற்ற இளைஞர்க்கு உதவி தொகை வழங்குகிறது.
இவர்களின் ஒரே குறை தாலிபான் போன்ற ஆட்சி முறை இங்கேயில்லை என்பதே.
இங்கே ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. ஒரு சாரார் இது புஷ்ஷூம் அவர் நண்பர் ஹார்பரும் செய்யும் சதி என வழக்கம் போல் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கத்துக்கு மாறாக இந்த குற்றசாட்டு உடனே எழுந்து விட்டது.
இன்னொரு சாரார் "புஷ்ஷும் ஹார்ப்பரும் ஓகே சதி செய்வார்கள். ஆனால் போலீஸ் படையில் உள்ள மொத்த பேரும் பொய் சொல்வார்களா? இந்த மாதிரி அபத்தமாக பேசி தீவிரவாதிகளுக்கு துணை போவதும் தீவிரவாததிற்கு ஒப்பானது" என்று வாதிடுகின்றனர்.
"இங்கே மைனாரிட்டிகளுக்கு என்ன குறைச்சல் அவர்களுக்கு மத உரிமை, குடியுரிமை, ஓட்டுரிமை உள்ளது. ஆனால் இவர்கள் எந்த உரிமையும் தராத காட்டுமிராண்டி அரசாங்கங்களுக்கு ஆதரவாக ஏன் செயல் படுகிறார்கள். இந்த நாடு பிடிக்காத பட்சத்தில் ஏன் வரிசையில் நின்று குடியுரிமை பெற்று இங்கே வந்து எங்கள் நிம்மதியை கெடுக்கிறார்கள்" என மக்கள் கேள்விகளை கேட்கின்றனர்.
பி.கு. துரதிருஷ்டமாக அந்த 17 பேரும் முஸ்லிம்கள். அதனால் பாதிப்படைய போவது அப்பாவி முஸ்லிம்களும் என்னுடைய குறுந்தாடியும்
Friday, June 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
//
துரதிருஷ்டமாக அந்த 17 பேரும் முஸ்லிம்கள். அதனால் பாதிப்படைய போவது அப்பாவி முஸ்லிம்களும் என்னுடைய குறுந்தாடியும்
//
மீசையுடன் குறுந்தாடி தானே...? மீசையில்லாமல் வைத்தால் தான் வம்பு!! :)
//
இவர்களின் மீது சுமத்தப் பட்ட குற்றசாட்டுகள் .
1. பார்லிமெண்டை தகர்க்க சதி
2. அரசியல் தலைவர்களை பிணை கைதியாக பிடிக்கும் எண்ணம்
3. பிரதமர் ஹார்ப்பரின் தலையை துண்டிக்க திட்டம்
4. கனடாவின் டிவி நிலயத்தை கைப்பற்ற அல்லது தகர்க்க திட்டம்
//
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யுரதுன்னா என்ன? இது தான்..
ஷங்கர், ஏர்போர்ட்டில் உள்ள காவல் அதிகாரிக்கு தாடி,குறுந்தாடி வைத்திருந்தால் அதிகமாக சோதிக்கவும் என கட்டளை உள்ளது. அங்கே மீசை பற்றிய குறிப்பு இல்லை. ஆகையால் அமெரிக்கா போகும் போதுதான் பிரச்னை இருந்தது. இப்போது திரும்பி வீட்டுக்கு வரும் போதும் பிரச்னை.
இல்லைங்க... நான் சவூதிக்கு செய்வது இரண்டகம் இவர்கள் செய்வது உரிமை நிலைநாட்டல்
தாடி எடுத்த பின்பாவது நிஜ போட்டோ போடுங்கள்.
கொத்ஸ், தாடி எடுத்தால் நான் இப்படிதான் இருப்பேன் என்பதால் தோராயமாக என் போட்டோ
//தாடி எடுத்தால் நான் இப்படிதான் இருப்பேன் என்பதால் தோராயமாக என் போட்டோ
தன்னடக்க தன்மான செம்மலே எனது பழைய வேண்டுதல் இன்னும் தொடர வேண்டுமா என்பதை சிறுகுறிப்பால் உணர்த்தவும்..
கனடாவில் இதனால் மத சண்டை வரும்னு தோணலை சிவா.கனடா மிகவும் அமைதி விரும்பி நாடு.
கார்த்திக் போதுமய்யா
செல்வன்,
நிச்சயமாக வராது.
ஆனால் இங்கும் இவர்கள் உருவாகிவிட்டார்களே என்பதுதான் என் கவலை
இவர்கள் கனடாவில் பிறந்தவர்களா அல்லது குடியேறியவர்களா(immigrants) சிவா?
ஆனா பிரச்சனைன்னா தலையை மண்ணுக்குள்ள விட்டுக்கற பார்ட்டி இல்லையே நீங்க. சரி இல்லை.
கண்ட்ரீ டார்ட்டாய்ஸ், போட்டோவை மாத்து.
செல்வன், விவரங்கள் தெரியவில்லை. நிறைய பேர் இங்கேயே பிறந்தவர்கள். இதில் 5 பேர் 18 வயதிற்கு கீழ்பட்டவர்கள். அதில் இருவர்கள் 15 வயது பாலகர்கள். கனேடிய சட்டப் படி 18 வயதிற்க்கு கீழ் உள்ள குற்றவாளிகளின் பெயரையும் போட்டோவையும் வெளியிடக் கூடாது!!!!
அந்த 15 வயது சிறுவர்கள் இந்து மதத்திலிருந்து இவர்களின் பெற்றோர்களுக்கு தெரியாமால் இஸ்லாமிற்கு மாறியிருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் என்ன இவர்களை சாதிக் கொடுமை செய்தார்களா.
ஒரு பாப் கல்சர் போல் தீவிரவாதம் ஆகிவிட்டது என உள்வியல் வல்லுனர்கள் வருந்துகின்றனர்
கொத்ஸ்,
இது சரியில்லை எப்பப் பார்த்தாலும் மாற்று மாற்று என சொல்லி அந்த எபெக்ட்லெ பொன்ஸ் காசு கொட்றதே நிறுத்திட்டு அவங்க ஓட ஆரம்பிச்சிட்டாங்க
யானைப் படம் போட்டதும் தப்பு. மாத்துன்னு சொல்லியாச்சில்ல. :)
//கண்ட்ரீ டார்ட்டாய்ஸ்//
இது புரிஞ்சுதா? என்னன்னு கேட்பீங்கன்னு பார்த்தேன்.
ஐயா, நான் கொஞ்சம் மண்டுதான் ஒத்துக்க்கிறேன். நாட்டாமே போட்டவே மாத்து என்று புரியாத அளவிற்கு மண்டு இல்லே
சிவா சார் இதுக்குத்தான் ஐக்யூ டெஸ்ட் வெச்சு கனடாவுக்கு இமிகிரேஷன்லாம் குடுக்கணுமுங்குறது. இந்த பசங்கல்லாம் அவனவன் ஊர்லயே இருந்துடுவாங்க. இவனுங்க கனடாவுக்கு வந்து நமக்கும் தொல்லை ஜாஸ்தியா போச்சுங்க. எத எப்ப பண்ணுவாங்கின்னு சொல்ல முடியல்ல. பாக்குறவன் நாமளும் இவனுங்களும் ஒரே ஜாதியான்னு மூஞ்சிய வெச்சு காம்பேர் பண்ணுறாங்க. கொஞ்சமாச்சும் மூள மேல இருந்தா இப்படில்லாம் பண்ணுவாங்களா பேசுவாங்களா. வந்த நாட்டுல பேசாம வாய மூடிக்கினு இருப்பமுன்னு இருப்பானுங்களா இல்லே இப்படில்லாம் அடாவடிதனம் பண்ணி அலட்டிக்குவாங்களா. சேன்னு போச்சு சார் இவனுங்களால
அனானிமஸ், நீங்க சொல்றதும் கரெக்டுதான். அவனுக்கு மூளையில்லை பண்றான். இந்த வெள்ளைக் காரனுக்கு எங்கே போச்சி. அவன் உருவத்திலேயெ நான் இருக்கிறதைப் பார்த்து என்னே சந்தேகத் தோடப் பார்ர்கிறான்
சிவா, இன்னொன்னு கவனிச்சீங்களா, இது லோக்கல் டெரரிஸம் மாதிரி எந்த அல்கைய்தா கனெக்ஷன் இல்லாம உருவான் திவிரவாதிகள்! எப்படி இவெங்கெல்லாம் மூளை சலவை செய்யப்பட்டு இந்த மாதிரி ஆகிறாங்கன்னு தெரியலை. நல்ல வாழ்க்கை வாழ்ந்து, இங்கேயே சமூகத்தின் ஒரு அங்கமா இருக்கிறவங்க எப்படி இப்படி மாறி போறாங்க, அதுவும் இஸ்லாம்ங்கிற பேர்லன்னு தெரியல்லை. இந்த லோக்கல் ஜிகாத் பத்தி ஒரு பதிவு போடனும் நினைச்சிக்கிட்டிருந்தேன் இந்த செய்திகள் வந்த நேரத்திலே, ஆனா டைம் தான் கிடைக்கிலை!
அனானிமஸ் சார்,
ஐ க்யூ, டோஃபல் எல்லாம் இருக்கு. அது நம்மளை மாதிரி ஸ்கில்டு வொர்க்கர் பிரிவில் வருவதற்கு.
இவர்கள் வருவது அகதிகள் பிரிவில். அவர்கள் நாட்டில் மனித உரிமையில்லை என சொல்லி ஒப்பாரி வைத்து இங்கே வந்து ... இப்படி உரிமைகள நிலை நாட்டுவதுதான் இவர்களின் வீரம்.
ஆனா. என்னைப் பார்த்து "அரேபியாவில் கொழுத்துப் போயி ஏதோ மூலையில் இருந்து கத்தும் இவனுக்கு பலங்கை நோக்கு இல்லை" என அறிவிசீவிகள் கொக்கரிப்பார்கள்
நாதர், இவங்களுக்கு மூளைசலவை செய்ய ஆட்கள் வெளிநாட்டிலிருந்து வருவதாக செய்திகள் வெளியகின்றன. அமெரிக்கா போல் இங்கும் விசா சட்டங்கள் கடுமையாக்கபடும்..ம்ம்ம்ம் என்னென்ன நடக்க போகிறதோ
அட போங்க சிவா சார். நா சொன்னது உங்களைப் பத்தி. அத வேற புரூப் பண்ணிக் காட்டணுமா?
மண்டுன்னு சொல்லலை. ஆனா அப்படியெல்லாம் கேட்கலைன்னா இப்படி ஒரு 4 பின்னூட்டம் வருமா? அதுக்காகத்தான்.
கொத்ஸ், நீங்க சொல்லலை ஆனா அது உண்மைதானே
எல்லாப் பயலும் பாப்பான் என்று கேள்விப் பட்டேனே உண்மையா சிவா?
// பாப் கல்சர் போல் தீவிரவாதம் ஆகிவிட்டது // Good point.
Among 17, I heard that one of them was a Hindu? Is it true?
From
A Hindu!
ஆமாம் அனானிமஸ். இவர்கள் வித்தியாசமான பார்பான்கள். பூணூலை எடுத்துவிட்டு, குல்லா வைத்துக் கொண்டு, மீசை எடுத்துவிட்டு தாடி வைத்துக் கொண்ட பார்பாண்கள்.
இன்னொரு அனானிமஸ் அவர்களே, அவர்களில் இருவர் மதம் மாறிய இந்துக்கள் என செய்தி தாள்கள் சொல்கின்றன. கோர்ட்டில் கேஸ் இருப்பதால் இவர்களுடைய முழு விவரங்கள் வெளி வராது.
நம்மூர் ஜுனியர் விகடன்/நக்கீரன்/ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிகைகளைப் போல் இங்குள்ள பெரும்பாலான ஜனரஞ்சக பத்திரிகைகள் அவர்களின் ஊகங்களை வெலியிடுவதில்லை.
மேலும் 18 வயதிற்கு குறைவான குற்றவாளிகளின் பெயர் மற்றும் போட்டகளை அவர்களின் எதிர்காலம் கருதி வெளியிடுவதில்லை
Siva,
Looks like we've got quite a few mullahs amongsts ourselves.Look at the toolbar.So many minus hits! :)
Funny they want to waste so much time on this....
Post a Comment