Friday, June 16, 2006

பிராமண எதிர்ப்பு நிறுத்தப் படவேண்டும்---ஒரு ஏக்கம்

திரு. ப்ரான்சுவா கோத்தியே (சரியான உச்சரிப்பு - நன்றி யோகன்) அவர்கள் ப்ரான்ஸில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு முழு இந்தியர்.

இன்றைய அவருடைய ஆதங்கம் ப்ராமண எதிர்ப்பு நிறுத்தப் படவேண்டுமென்பதே.

முழு ஆர்டிகிளையும் மொழிபெயர்க்க ஆசை. நேரமில்லாததால் சுட்டி இங்கே:http://ia.rediff.com/news/2006/jun/15franc.htm?q=tp&file=.htm

இவரின் எழுத்துக்களைக் கண்டு நான் வியந்ததுண்டு.

வெளிநாட்டில் பிறந்த இவருக்கு இந்தியா மேல் எவ்வளவு பாசம். இந்திய கலாசாரத்தில் ஆழமான அறிவு இவருக்கு உண்டு .

ப்ரான்கோ கோத்தியே என் மரியாதைக் குறியவர்

பி.கு.ஜுலை மாதம் முதல் வாரத்தில் இருந்து என் அனுபவங்கள் தொடரும்

19 comments:

said...

ஏன்னே திருப்பியும் புலிவாலப் புடிக்கிறீங்க.

said...

அண்ணே நான் எதைப் பிடித்தாலும் புலி வாலா. என் அடுத்தப் பதிவை பாருங்கள்

said...

சிவா அவர்களே,

ஃப்ரான்கோ கோத்தியே சரியான உச்சரிப்பு தான்...(தமிழ் படுத்தப் பட்ட ஃப்ரெஞ்சு உச்சரிப்பு..)

அவர் படைப்புக்கள் படித்து தெளிந்தவர்களில் நானும் ஒருவன். அது வரை அச்சு மற்றும் இதர ஊடகங்களில் பரப்பப்பட்ட அதே பொய்யை உண்மையென நம்பி அதுவே லிபரல் சித்தாந்தம் என்ரெல்லாம் எண்ணிக் கெட்டவன்...
தெரிந்து தெளிந்தால் நலம்...இவரைப் போன்ற இன்னோரு மாமேதை கொயென்ராட் எல்ஸ்ட். இவர் பெல்ஜிய அறிஞர்.

said...

Siva
I know a french guy has written about India, he has spent about 17 years in india to write. Is he the one ?I have read some portion of his book about three years back.I think some one should take time to translate this in tamil before some body else misinterpret.......

Following is the fact.....

"Dalits have considerably come up since 1947 in Indian society, that no nation in the world has done so much for its underprivileged (India had a Dalit President -- did the US ever have a Black President?). But the intellectual elite of India, which never mentions these facts, continues to hide its face in the sand like an ostrich, refusing to see the reality. "

Look at the american senate full of white people, look at the indian parliament we have people from all communities and from different countries........

said...

ஷிவா,

பார்ப்பன எதிர்ப்பு, திம்மித்துவவாதிகளின் கண்டுபிடிப்பான "பார்ப்பனீய" எதிர்ப்பு இவை எல்லாம் ஜாதிவெறியை, தீண்டாமையை அப்படியே வைத்திருக்க செய்துவரும் உட்டாலக்கடி வேலைகள்தான். புலி வருது, புலி வருது என்று சொல்லிக் கொண்டு ஆட்டு இறைச்சி சாப்பிடும் யுக்தி.

ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் பழி சொல்லிக்கொண்டு, எந்தக் காரணங்களுக்காக பழி சொல்கின்றனரோ அந்தக் காரணங்களை வளர்த்துக் கொண்டே போவதுதான் பிராமண எதிர்ப்பு.

இதற்குக் காரணம் பற்றி யோசித்ததில் எனக்குத் தோன்றுவது இதுதான்.

ஆங்கில அரசாங்கத்தை நிறுவவும், யூரோப்பிய மேலாண்மையை நிலை நிறுத்தவும் கிருத்துவ மதம் செய்துவரும் முயற்சிகள் பல. அம்மதப் பூசாரிகளுக்கு எதிரிகளாகத் தெரிந்தது ஹிந்து மதப் பூசாரிகளாகவும், அம்மதம் பற்றிய தத்துவங்கள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாளர்களாகத் தங்களை கருதிக் கொண்டவர்களாகவும் இருந்த பிராமணர்கள்தான். இவர்களை அழித்துவிட்டால் ஹிந்து மதத்தையும், ஹிந்து கலாச்சாரத்தியும், பெருமையையும், நாகரீகத்தையும் அழித்து விடலாம் என்று (தவறாகக்) கணக்குப் போட்ட கிருத்துவ மிஷனரிகள் உண்டாக்கிய பதம்தான் "பார்ப்பனீயம்".

அந்தக் கருத்தை உணராமல் உள்வாங்கிக் கொண்ட திம்மித்துவ பூஜாரிகள் அதே பாட்டை திருப்பிப் பாடிவருகின்றனர். உண்மையில் தீண்டாமையை அழிப்பதில் எல்லா ஜாதியிலும் உயர்ந்தவர்கள் பாடுபட்டிருக்கின்றனர், பார்ப்பனர்கள் உட்பட.

ஆனால், ஒருவர் பார்ப்பனர் என்பதற்காகவே இம்முற்போக்குவாதிகளை தங்களது கற்பனை விளக்கங்களால் திட்டிக் கதை எழுத்துவது மரபாகிவிட்டது. மேலும், இந்தக் கற்பனைகள் பற்றிக் கேள்வி எழுப்பினால் பக்கம், பக்கமாக அர்த்தமில்லாத வார்த்தைகளை வாந்தி எடுத்துத் தாம் ஏதோ பெரிதாக நிறுவி விட்டதாகவும் கருதிக் கொள்கிறார்கள். இப்படி எல்லாம் செய்தால் ஒரு பெரிய அறிவாளி என்ற பொதுப்படையான எண்ணம் நிலவி வருவதே இந்த "வெர்பல் டையோரியாவிற்குக்" காரணம்.

said...

சிவா

ஃப்ரான்கோ கோத்தியேவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள். வெளிநாட்டிலிருக்கும் - குறிப்பாக அமெரிக்க இந்தியர்களைப் பற்றியான - அவரது கட்டுரையை வாசித்து அசந்து போனேன். இதையெல்லாம் கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கொண்டு கல்லெறிந்து கொண்டிருக்கும் "இந்தியர்கள்" வாசித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

கொயென்ராட் எல்ஸ்ட்டை அறிமுகப்படுத்திய ஷங்கருக்கும் நன்றிகள்.

"பிராமண எதிர்ப்பு" "பார்ப்பனீயம்" ??? அது கிடக்குது கழுதை! நம்ம வேற உருப்படியா எதாச்சும் பண்ணலாமே!

said...

ம்யூஸ்,

ஸ்ரீஸ்ரீரவிசங்கரிடம் கேட்கப்பட்ட கேள்வி "ரிஷிமூலத்தைப் பார்க்க கூடாது என்பது ஏன்?"

அவருடைய பதில் "இது ஒரு ஜாதி வெறியினால் உருவான பழமொழி. ஏனென்றால் நிறைய ரிஷிகள் பிராமணர்கள் அல்ல"

இவரைப் போன்ற மகான்கள் சாதி ஒழிய தியான முறையை எல்லா இடங்களிலும் கொண்டு செல்கிறார்கள்.
ஆனால் இவரைப் பார்த்து கிண்டல் செய்யும் திம்மிகளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமே ஏற்படுகிறது

said...

Sundar, You are welcome

said...

சிவா,

தமிழ்நாட்டில் தலித் இலக்கியம் என்று அவர்கள் சொல்வதே - பிராமண எதிர்ப்பு பிரசாரம்தான் என்ற ஆகிவிட்ட நிலையில் - அவர்களை சொல்லிக் குற்றமில்லை - இலக்கியம் அல்லவா படைக்கிறார்கள்!

-ஜீவா

said...

frnçois னும் பெயரை "பிரான்சுவா" என உச்சரிக்க வேண்டும்.
யோகன் பாரிஸ்

said...

ஜீவா, உங்கள வருகைக்கும் தலித் இலக்கியம் பற்றிய விளக்கத்திற்கும் நன்றி

said...

யோகன், மாற்றிவிட்டேன். நன்றி

said...

ஜாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு ஜாதியை கெட்ட வார்த்தையால் திட்டும் நவீன ஜாதிவெறி நாய்களை திருத்துவது எப்படி?

said...

//அவர்கள் ப்ரான்ஸில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு முழு இந்தியர்//

அப்ப சோனியா காந்தி?

said...

மருதநாயகம், "சட்டப்படி" சோனியா காந்தி ஒரு இந்தியர்தான். அதில் என்ன சந்தேகம்.

said...

அருமையான பதிவு.போலி மதச்சார்பின்மை தலை விரித்து ஆடும் நேரத்தில் சிலராவது நேர்மையாக இருப்பதை கண்டால் சந்தோஷமாக இருக்கிறது

said...

Cho Sir, Thanks for visiting

said...

'வெர்பல் டையரியா' வாவ்!

ம்யூஸ் நீங்கள் கலக்குகிறீர்கள்.

தங்கள் படத்தை பார்த்தால் நீங்கள் சின்னபையன் என்று தெரிகிறது. தங்கள் பதிவுகளும் கருத்து ஆழமும் வியக்க வைக்கிறது. மேலும் இந்த சொல் பிரயோகம்.

வாழ்த்துக்கள்.

நான் francois வின் ஒரு கட்டுரையை பார்த்து வியந்து அதை பதித்தேன். அவரின் கட்டுரைகள் இந்தியாவின் நிஜ அக்கரையை காட்டுகின்றன

நன்றி

said...

ஜயராமன், கோத்தியே போன்ற ஆட்கள் நமக்கு அதிகம் தேவை