Tuesday, June 06, 2006

அதோ அந்த பறவை...அனுபவ உரை

படம் : ஆயிரத்தில் ஓருவன் (1965)
பாடகர் : சௌந்தரராஜன் T M
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
வருடம் : 1965
நடிக/நடிகைகள்: முன்னாள் தமிழக முதல்வர்கள், நாகேஷ் மற்றும் பலர்

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(லலாலா லா...)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


அனுபவ உரை

துபாயில் பைரேசி ஆக்ட் வருவதற்கு முன் தாம்சன் காசெட்ஸ் என்ற ஒரு கம்பெனி இருந்தது. அவர்கள் நல்லப் பாட்லகளையெல்லாம் ஒரே காசெட்டில் ரிக்கார்ட் செய்து வெளியிடுவார்கள். காசெட்டுகளின் தரம் முதன்மையானது

இந்த காசெட்டுகள் சவூதி அல்கோபர் மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகும்.

மிக அதிகமாக விற்ற தமிழ் காசெட்டில் முதல் பாடல் இதுதான் .

அந்த மார்கெட்டில் நான் போகும் பொதெல்லாம் இந்த காசெட் ஒலிக்கும். காசெட் இன்னும் என்னிடம் உள்ளது.

ஆனால் காசெட் ப்ளேயர் தான் இல்லை அதனால் தான் இணைய சுட்டி இங்கே

23 comments:

said...

நல்ல பாட்டு சிவா அண்ணா. விளக்கம் எல்லாம் சொல்லுவீங்கன்னு நெனைச்சேன். எந்த விளக்கமும் இல்லையா? :-)

said...

ஆச்சர்யம் தான் .. :) என்றைக்கும் இல்லாத திருநாளாக இன்று காலையிலேயே பாட்டு கேட்க .. அது இதே பாடலாகவே அமைந்துவிட்டது...! டிஎம்ஸின் கணீர்.. கண்ணதாசன் வரிகள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வாழ்த்துக்கள்

said...

மறக்க முடியாத பாட்டு சிவா.நன்றி

said...

முதல்ல போட்டோ போட்டு ஏமாத்தினீங்க. இப்போ பாட்டாப் போட்டா? நடத்துங்க ராசா. நடத்துங்க.

said...

சிவா, நான் பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்திலிருந்து 'கோடைகாலக் காற்றே..' என்ற பாடலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். பாடல் வைத்திருந்தால் மின்னஞ்சல் செய்யமுடியுமா?

said...

குமரன்,

விளக்கி இருக்கிறேனே.

இந்த வரிகளை கவனியுங்கள்

//இந்த காசெட்டுகள் சவூதி அல்கோபர் மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகும்.

மிக அதிகமாக விற்ற தமிழ் காசெட்டில் முதல் பாடல் இதுதான் .
//

said...

நடசத்திர செல்வன், படிபபை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து விட்டீர்களா? பின்னால் $ ஒட்டிக்கொண்டிருக்கிதே

said...

வாங்க சுகா, காலையிலே ஒரு மீட்டிங் பிரேக்லே ஒரு பதிவை படித்தேன். அது படித்தவுடன் இந்த பாடல்தான் ஞாபகம் வந்தது

said...

ஏமாறவன் இருக்கிறவரைக்கும் எதையாவது போட்டு ஏமாத்த வேண்டியது தானே.

said...

ஏமாறவன் இருக்கிறவரைக்கும் எதையாவது போட்டு ஏமாத்த வேண்டியது தானே.

said...

//இந்த வரிகளை கவனியுங்கள்//

ஹும். எனக்கெல்லாம் தெளிவா நேரடியா சொன்னாத் தானே புரியுது. :-( ஒன்னுக்கு ரெண்டு தடவை படிக்கணும் போல உங்க பதிவை எல்லாம். இல்லாட்டி புரிய மாட்டேங்குது. ஆனா ஒன்னு. சில பேரு பதிவெல்லாம் எத்தனை தடவை படிச்சாலும் புரியாது. உங்க பதிவை ரெண்டு தடவை படிச்சா போதும். :-)

said...

இனிய சிவா,

எம்.என்.நம்பியார் அவர்களையும் நீங்கள் 'மற்றவர்கள்' பட்டியலில் சேர்த்துவிட்டீர்களே அய்யா.

விட்டால் நான் குண்டுமணி, ஜெமினி பாலு என அடுக்கிக்கொண்டே போவேன். கூடவே அதில் (அந்தப் பாடலில்) எம்.ஜி.ஆர். வாசிக்கும் இசைக்கருவி harp தானே என்னும் ஒரு விவரத்தையும் சொல்லி, கூடவே அரேபிய அல்லது பாரசீகப் பின்னனியில் எடுக்கப்பட்ட படத்தில் ud (ஊத்) வாத்தியம்தானே பொருந்தும் அங்கே எப்படி எகிப்திய harp வந்தது என யாரோ என்றோ எழுப்பிய சந்தேகத்தையும் கேட்பேன் :)

அன்புடன்
ஆசாத்

said...

நடசத்திர செல்வன், படிபபை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து விட்டீர்களா? பின்னால் $ ஒட்டிக்கொண்டிருக்கிதே//

shiva,

There are 2 selvans in thamizmanam.So I added this $ behind my name

said...

மகேஸ், இந்தா பிடிங்க
http://www.musicindiaonline.com/p/x/p47gMgjom9.As1NMvHdW/

www.musicindiaonline.com இந்த சைட்டிலே எக்கசக்கமா எல்லா மொழியுலும் பாட்டு இருக்கிறது. டௌன் லோட் செய்ய முடியாது. உங்களை மாதிரி சாப்ட் வேர் பிஸ்தாக்கள் டௌன் லோட் செய்ய வழிக் கண்டுபிடிச்சா கொஞ்சம் சொல்லுங்க

said...

சிவா,Audio grabber சவுண்ட்கார்டிலிருந்து நேரடியாக MP3யாக மாத்திவிடலாம்.

said...

நீங்க என்ன எம்ஜிஆர் ரசிகரா?

said...

அடேடே, இந்தப் பாடலைத்தானே நான் எனது செல்பேசியின் ரிங் டோனாக வைத்திருக்கிறேன்.

ஒரு சென்னை கால் டாக்ஸியில் பயணம் செய்து கொண்டபோது செல்பேசி இப்பாடலை ஒலித்தது. ஓட்டுநர் ஆவலுடன் தனது செல்பேசிக்கும் அப்பாடல் வேண்டும் எனக் கேட்க அதை எவ்வாறு அவரது செல்பேசிக்கு மாற்றுவது என்பது எனக்கு தெரியாது என நான் கூறினேன்.

அவர் உடனே என்னை செல் பேசியின் மெனுவுக்கு செல்ல இன்ஸ்ட்ரக்ஷன்கள் கொடுத்து, ஸ்க்ரீனில் அப்பாடலின் ம்யூசிகல் நோட்ஸை வரவழைத்தார். பிறகு அதை அப்படியே தனது செல்பேசியில் காப்பி செய்து விட்டு, அடுத்த முறை வரும்போது எனக்கு போட்டுக் காட்டினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Hi Siva, very nice song. evergreen to hear.

said...

திரு ஆசாத் அவர்களே, கேட்ட அளவிற்கு பார்க்கவில்லை.

நாகேஷ் செய்யும் அங்க சேஷ்டைகள் மனதில் நின்றன.

நாகேஷ் பச்சைவிளக்கு என்ற படத்தில் சிவாஜி கேள்வி பிறந்தது இன்று என்ற அழகான பாடல் பாடும் போது செய்யும் அங்க சேஷ்டைகள்- டைரக்டரின் மிஸ்டேக்

எம் ஜி ஆர் ரின் கதாபாத்திரம் எகிப்திய அடிமையாக இருக்குமோ. யாலிழில் அதிக சத்தம் வராது

said...

சிறில், அது ஸ்பெஷல் கார்டா? என்னிடம் கோல்டன் ரெகார்ட்ஸ் னு ஒரு மென்பொருள் இருக்கு. அதுவும் மாற்றுகிறது

said...

வெளிகண்ட நாதர், நிச்சயமாக இல்லை

said...

தோண்டு சார், செல் போன்கள் நம்மூர் அளவிற்கு இங்கே மக்களை அடையவில்லை. ஒரு நாள் இங்கே ஒரு சூப்பர் மார்கெட்டில் ஹாண்ட்ஸ் ப்ரீ போட்டு பேசிக் கொண்டுருந்தேன். அங்கிருந்த ஒரு மூதாட்டி இதென்ன இவ்வளவு சிறிய போன் என ஆச்சரிய பட்டார். ஆனால் இந்தியாவில் என் தாயார் அயர்ன் பண்ணுபவரை SMS அனுப்பி அழைக்கிறார்.

பல விஷயங்களில் கனேடியரும் பின் தங்கியவரே

said...

தமிழ் மக்களை அதிகம் சென்றடைந்த திரைப்பாடல்களில் ஒன்று. என் மகள் இரண்டு வயதாக இருக்கும்போது இந்தப் பாடலைப் பார்த்துவிட்டு வீட்டுக் கதவின் திரைச்சீலையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு எம்ஜீயாரைப் போல் ஆடிக் காண்பித்தாள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பாடலும் காட்சியும். உங்கள் மனம் எந்த எண்ணத்திற்கும் அடிமையில்லாத ஒரு தருணத்தில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள். கடல் காற்று வீசும்.

ஓகை நடராஜன்.