Friday, June 02, 2006

திரு ஆசாத் அவர்களுக்கு.......

திரு ஆசாத் அவர்கள் என்னுடைய சவூதி அனுபவங்கள் பற்றி ஒரு தனிபதிவாக போட்டிருந்தார். அதை தேன்கூட்டில் கண்டேன். தமிழ்மணத்தில் இல்லை.

சிறிது தாமதமாக அவருக்கு பதில் அளித்தேன். என்னுடைய பதிலை தமிழ்மண நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


அவருடைய பதிவிற்கு இங்கே

திரு ஆசாத்(உச்சரிப்பு சரியா) அவர்களுக்கு. என்னைப் பற்றிய புரிதலுக்கு நன்றி. என்னுடைய உணமையான பதில்கள் இதோ

////அமெரிக்காவில் படித்துவந்து பிறகு அமெரிக்காவையே சாத்தான்1 என்று சொல்லுவதாக ஒரு சவூதி நண்பரைச் சொல்லும் சிவா அவர்கள், தானும் பத்தாண்டுகளாக சவூதிக்காக உழைத்துவிட்டு, பிறகு, இப்போது சவூதி அரேபியாவைக் குறைத்துப் பேசுவதற்காக இந்தப் பதிவுகளை இட்டிருக்கமாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. //


எனக்கு சவூதியும் அபுதாபியும் என் வியாபரத்தில் ஒரு கஸ்டமர்களே. அவர்கள் எனக்கு திறமைகளையோ அல்லது வாழ்க்கையையோ தரவில்லை. ஆனால் அந்த அரேபியர்க்கு அமெரிக்கா , கல்வி, தொழில் நுட்பம் போன்றவைகளை தந்துள்ளது. எனக்கு கல்வியையும் அறிவையும் தந்த என் தாய் நாடு இந்தியா என் மகனுக்கு கல்வியையும் அறிவையும் தந்து கொண்டிருக்கிற கனாடா ஆகிய நாடுகளுக்கு நான் நன்றி உடையவனாக் இருக்கிறேன். அதே போல் இன்னொரு சக மனிதனும் இருப்பான் என நினைத்தேன். ஆனால் நன்றி என்ற வார்த்தை தான் அரேபியரின் அகராதியில் கிடையாதே. அதை எதிர்பார்த்து அவரை எடைப் போட்டது என் தவறு.

//பொட்டு வைத்திருப்பதால் முகத்தை மூடச் சொல்வதாகத் தோன்றுகிறது. உன்மையில் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை. பொட்டு இல்லாமலிருந்தாலும் அப்படித்தான். முஸ்லிமாக இருந்தாலும் அப்படித்தான்.//

அந்த நாட்டின் சட்டம்(எங்களுக்கு தர பட்ட அட்டவணையில்) பெண்கள் இறுக்கமாக உடை அணிய கூடாது. தலையை முக்காடிட்டு தலை முடியை மூட வேண்டும். முகம் பற்றி பேசவில்லை. மேலும் தம்மாம்/அல்கோபர் தெருக்களில் இவ்வாறு பல ஆயிரகணக்கான பேர்கள் போகும் போது எங்களை மட்டும் நிறுத்தியது பொட்டு அன்றி வேறு எது?

//'இந்த உத்தமர்கள்' என்று சிவா அவர்கள் குறிப்பிடுவது யாரை என்று விளங்கவில்லை. ஒட்டுமொத்த சவூதியினரைச் சொல்லியிருந்தாரென்றால்//

நான் உத்தமர் என்று சொன்னது நான் பழகிய சவூதியினரை அவர் முட்டாவாவா அல்லது அர்ட்னெரியா என தெரியாது. முட்டாவக்கள் மட்டுமல்ல அர்ட்னெரி சவூதிகளும் தம் பெண்டிர் சுத்தமென்றும் மற்றவர்கள் விபசாரிகளென்றும் (முக்கியமாக வெள்ளைக்கார பெண்கள். ஏன் அவ்வாறு நினக்கிறீர்கள் எனக் கேட்டதற்க்கு நீலப் படங்களைப் பார் அதில் யாராவது அரேபியாராக இருக்கிறார்களா அதனால் தான். அரேபியரிடம் இதை விட வேறு எதை எதிர்பார்ப்பது) என்னிடம் பேசியுள்ளனர். நான் ஜொள்ளிய கவர்ச்சிக் கன்னிகள் முட்டாவாக்களின் பெண்டிரா அல்லது அர்ட்னெரி சவூதியரா என விசாரிக்கவில்லை. அடுத்தமுறை நிச்சயமாக விசாரிக்கிறேன்.

திரு ஆசாத் அவர்களே உங்களுடைய் சந்தேகங்களை கேளுங்கள். நான் பதில் சொல்லுகிறேன். நான் தவறு செய்கிறேன் என்றுணரும் போது அதை தவறென்று மன்னிப்புக் கேட்கவும் நான் தயங்கியதில்லை

8 comments:

said...

என்னுடைய பதிவு செட்டிங்க்கில் தவறு இருந்தது அதை மாற்றி விட்டேன்.

மன்னிக்கவும்

சிவா

said...

இனிய கால்கரி சிவா,

அராபியர்கள் மீதான உங்கள் கோபம் புரிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள் அய்யா.

ஆனாலும், சில நேரங்களில் நாம் நமது அனுபவங்களை விட்டு சற்றே வெளியே வந்து வேறு கோணத்திலும் விஷயங்களைப் பார்ப்பதில் தவறில்லையே.

இன்றைக்கு இந்திய - அரேபிய உறவுகள் பலப்பட்டு பன்முகத்தில் நாம் இயங்கத் துவங்கியிருக்கும் நேரத்தில் நமக்கு நடந்த கசப்பான சில அனுபவங்களை யாரோ அறிவற்றவர்கள் செய்த செயல் என்றும் ஒதுக்கலாம் அல்லவா?

படித்தவர் நீங்கள். பல நாடுகளை, மனிதர்களைக் கண்ட அனுபவம் உங்களுக்கு இருக்கும். ஒரு மனிதன் தவறு செய்வதால் சமுதாயத்துக்கே அந்த முத்திரையைக் குத்துவது சரிதானா என கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டுகிறேன்.

அவ்வளவே அய்யா.

அன்புடன்
ஆசாத்

said...

ஐயா, அவர் உங்களுக்கு பதில் அளித்துவிட்டாரே!

said...

திரு ஆசாத் அவர்களே, என் அனுபவங்களை சொல்லி வருகிறேன். முடிவுரையில் வேறு கோணத்தில் என்னுடைய எண்ணங்களை பதிய போகிறேன்.

என்னுடைய பதிவிற்க்கு கிடைத்த எதிர்வினை என்ன. ஒரு சாரர் நான் முஸ்லிம் மதத்தை சாடுகிறேன் என்றும் இன்னொரு சாரர் எல்லா முஸ்லிம்களும் இப்படிதான் என்றும் வாதிடுகிறார்கள்

நான் என்னுடைய கசப்பான அனுபவங்களை சொல்லும் போது மற்றவர்கள் அவர்களின் இனிய அனுபவங்களை சொல்லுவதுதான் சரியான மறுமொழி. ஆசிப் மீரான் பதிவில் வந்த பதில்களை நான் எதிர்பார்த்தேன்

எனக்கென்று மதங்களைப் பற்றி ஒரு கருத்து இருக்கும் அதை மனதில் வைத்துக் கொண்டு எனக்கு ஒரு அஜென்டா உள்ளது நான் பொய் சொல்லுகிறேன் என மக்கள் சொல்வது சரியாக படவில்லை.

மேலும் வலைப் பதிவாளர்களில் சிலரும் நண்பர்களில் பலரும். உறவினர்களும் என்னை எச்சரித்திருக்கிறார்கள். உங்கள் போட்டோவைப் போட்டு எழுதுகிறீர்கள். நீங்கள் இந்தியாவிற்கோ அரேபியாவிற்கோ செல்லும் போது உங்களுக்கு ஆபத்து வரும். ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று.

நான் அவர்களுக்கு சொன்ன பதில் என்ன தெரியுமா? இதோ "அரேபியரும் இஸ்லாமியரும் நம்மை போன்றவரே. ஊடகங்களில் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உங்கள் மனதில் ஒரு வித பயத்தை ஏற்படுத்திவிட்டனர். உங்கள் நினைப்பை மாற்றுங்கள்"

இதுவும் என் முடிவுரையில் இடம் பெற உள்ளது.

நான் எனது இந்து மதத்தில் மேல் நம்பிக்கை வைத்துள்ளேன். அதற்காக மற்ற மதத்தினர் இழிக்கவில்லை.

மற்ற மதத்தினர் இந்து மதத்தை இழிக்கும் போது அவர்களை கண்டிக்கவும் தவறுவதில்லை.

நான் என் தொடரை முடித்த பிறகு தவறுகளை சுட்டிக் காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்

said...

உங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் தொடர்ந்து உங்களுக்கு தோன்றியபடியே எழுதுங்கள். இது பலருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். சவுதிக்குச் செல்ல விரும்பும் ஒருவர் உங்கள் கருத்துக்களையும் படித்துவிட்டு எதிர் கருத்துக்களையும் படித்துவிட்டு மேலும் பலரிடம் ஆலோசனை செய்துவிட்டே ஒரு முடிவுக்கு வரட்டும். பலருக்கு துபாய்க்கும் சவுதிக்கும் வேறுபாடு தெரிவதில்லை. துபாயைப் பற்றி அறிந்து கொண்டு சவுதிக்கு வேலைக்குச் செல்வது இடர்ப்பாடகவும், சவுதியைப் பற்றி அறிந்து கொண்டு துபாய்க்கு செல்லாமலிருப்பது வாய்ப்பிழப்பாகவும் முடிய இடமிருகிறது.

said...

திரு ஹரிஹரன் அவர்களே, தங்களின் பின்ன்னூட்டமும் பதிவும் மிக வெளிப்படையாக இருக்கிறது. சந்தோசம்.

உங்களின் சென்னை அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன.

நம்முடையை திறமையை விற்கிறோம் என்ற புரிதலுக்கு நன்றி

said...

//இன்றைக்கு இந்திய - அரேபிய உறவுகள் பலப்பட்டு பன்முகத்தில் நாம் இயங்கத் துவங்கியிருக்கும் நேரத்தில் நமக்கு நடந்த கசப்பான சில அனுபவங்களை யாரோ அறிவற்றவர்கள் செய்த செயல் என்றும் ஒதுக்கலாம் அல்லவா?
//

Asad,

Are you aware that the recent warming up of relations between India and the Saudi Kingdom is due to America's nudges and winks?

The Saudi's will give us all the oil instead of Iran.Thats the plan.

It was rather funny to watch some Moslems(not you!) cursing America and praising Abdullah!

Abdullah is more of a American proxy than a Arabian King!

said...

சமுத்ரா, சரியாக சொன்னீர்கள். சவூதி ராஜ குடும்பம் அமெரிக்காவின் நண்பர்கள். மக்கள் ஒசாமாவின் விசுவாசிகள்.

நம்மூர் முகம்மதிய சகோதரர்கள் குழம்பியுள்ளார்கள்.

ராஜாவிற்கு சலாம் வைக்கிறதா இல்லை லோக்கல் எஜமானனுக்கு ஆமாம் போடுவதா என தெரியாமல் அல்லாடுகிறார்கள்