Wednesday, May 31, 2006

உன்னழகை கண்டு கொண்டால்.... ஒரு பதவுரை

படம் -பூவும் பொட்டும்
பாடகர் - பி.பி ஸ்ரீனிவாஸ்
இசை -கோவர்தனம்
பாடல் -உன்னழகை
உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கெ ஆசை வரும்
பெண்களுக்கெ ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வென்

நின்றால் கோயில் சிலை அழகு
நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு
நடந்தால் அன்னத்தின் நடை அழகு
நாடகமாடும் இடை அழகு
அழகில் இது புதுவிதமே
இறைவனுக்கே ரகசியமே
இறைவனுக்கெ ரகசியமே
வசந்தம் வந்தால் கொடிகளிலே
மலரும் மலர்கள் ஆயிரமே மலரும்
மலர்கள் ஆயிரமும் மங்கையின் மலர் போல் ஆவதில்லை
மலர் பறிக்கும் நேரமிது
பொழுது சென்றால் வாடிவிடும்
பொழுது சென்றால் வாடிவிடும்

அருமையான பாடல் இந்த பாடலை கேட்டுக் கொண்டே என் கணிணியை திறந்து இதற்கான பதவுரையை எழுத ஆரம்பித்தேன்.

(பாடல்களுக்கு பதவுரை எழுதுவது என்ன குமரனின் பிறப்புரிமையா. நாமும் முயற்சிப்போம் என).

வரிக்கு வரி எழுதாமல் conceptual ஆக எழுதாலாம் என நினைத்து முதலில் இந்த வரிகளை எடுத்தேன்

உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கெ ஆசை வரும்
பெண்களுக்கெ ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வென்

தினவெடுத்த தோள்களயும், பலம் பொருந்திய புஜங்களையும் மீசை அரும்பிய உன்னுடைய முகத்தையும் பார்த்தால் பெண்களுக்கே ஆசைவரும் ஆண்மகனை போல் இருக்கும் உன்னை கண்டால் எனக்கு பேதியாகிறது... என் காதலியே....

இனி அடுத்த பாராகிராப் ட்ட்ட்டைய்ங்.......... சப்பாத்திக் கட்டை தலையில் இடியாக இறங்குகிறது "யோவ் உனக்கு கட்டை போதாது. பிசா மாவை உருட்ட அந்த சூப்பர் மார்க்கெட்டில் பார்த்த இரும்பு உருளை வாங்கவேண்டும்" என கர்ஜிக்கிறது என் நல்ல பாதி அதாங்க Better Half...... (கொத்தனாருடன் சேர்ந்து தமிழ் நன்றாக வளர்ந்து விட்டது )

டிஸ்கிளைமர் : முழுவதும் என் சொந்தக் கருத்து அல்ல

24 comments:

said...

அடப்பாவி மனுசா...

said...

குமரன் ப்ளாக்கர் ப்ரச்னையால் படம் ஏறவில்லை.

உங்களை வம்புக்கு இழுத்ததிற்கு மன்னிக்கவும்

said...

என்னை வம்புக்கு இழுத்ததற்காக நான் அப்படி சொல்லவில்லை. நீங்கள் சொன்ன விளக்கத்திற்கு தான் அந்த மறுமொழி. :-) என்னை நீங்கள் வம்புக்கு இழுக்கவேண்டுமென்றால் எவ்வளவு வேண்டுமானால் வம்பிழுத்துக் கொள்ளுங்கள் சிவா அண்ணா. :-)

இந்த பிளாக்கர் படம் ஏற்றுக் கொள்ளாதது எனக்கும் இன்று நடந்தது. ஏனென்று தெரியவில்லை.

said...

கனடாங்கிறதால பிசா தடியோட தப்பிச்சிங்க, நம்ம மதுரையா இருந்தா உலக்கை தெரியும்ல உலக்கை..........

said...

//உன்னழகை
உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கெ ஆசை வரும் //

// தினவெடுத்த தோள்களயும், பலம் பொருந்திய புஜங்களையும் மீசை அரும்பிய உன்னுடைய முகத்தையும் பார்த்தால் பெண்களுக்கே ஆசைவரும் //

இது பெருந்திணை. தமிழ் இலக்கணப்படி

அன்பு,
சரவணன்

said...

மனசு அண்ணே, மதுரையில் இந்த மாதிரி எழுத்தெல்லாம் வீட்டிலே வச்சிக்கமாட்டேண்ணே

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

ஓகை சார், என்னுடைய செட்டிங்கில் தவறாக இருந்தது. அதை சரி செய்து விட்டேன்

சிரமத்திற்க்கு மன்னிகவும்

said...
This comment has been removed by a blog administrator.
said...

திரு ஓகை நடராஜன் அவர்களே,

நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கு நன்றி.

தரம் தாழ்ம்ந்த பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்.

சரவணா, ஜாதிகளைப் பற்றி பேச வேண்டாமே

said...
This comment has been removed by a blog administrator.
said...

சிவா
உங்கள் பதிவில் இடப்பக்கம் உங்கள் பழைய பதிவுகள் தெரிவதில்லை.அதனால் உங்கள் முந்தைய பதிவுகளை படிக்க வேண்டுமென்றால் ஆர்கைவிஸில் போய் தேட சிரமமாக உள்ளது.அதை கொஞ்சம் கவனியுங்கள்.

said...

சிவா சார்,

////போட்டாவில் இருப்பது நானாக இருக்க ஆசைதான்.

இந்த படத்தையும் வாத்தைகளையும் எப்பொழுது அப்டேட் செய்திர்கள் என்று தெரியவில்லை.. ஆனால் உங்களின் விருப்பம் நிறைவேற நான் கடவுளை மனமாற வேண்டிகொள்கிறேன்..

இந்த கமென்ட்டை இதற்க்கு முந்திய பதிவிலோ இல்லை லேட்டஸ்ட் பதிவிலோ போட்டு, பகுத்தறிவு பகலவன்களிடமும், இன்ன பிற முத்திரை தொழிலாளர்களிடமும் புகுந்து எழ விருப்பம் இல்லை :-)

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

செல்வன், சரி செய்ய முயற்சிக்கிறேன்.

said...

திரு ஓகை நடராஜன் அவர்களே,

அன்பு தம்பி சரவணா அவர்களே

ஜாதிகளைப் பற்றிய பின்னூட்டங்கள் நீக்கி விட்டேன்.

நகைச் சுவையாக ஏதாவது சொல்லலாமே

said...

கார்த்திக், நன்றி

said...

//தினவெடுத்த தோள்களயும், பலம் பொருந்திய புஜங்களையும் மீசை அரும்பிய உன்னுடைய முகத்தையும் பார்த்தால் பெண்களுக்கே ஆசைவரும் ஆண்மகனை போல் இருக்கும் உன்னை கண்டால் எனக்கு பேதியாகிறது... என் காதலியே....//

அய்யோ... கல்கேரி சிவாண்ணா,
என்ன அருமையான புதுமையான வித்தியாசமான விளக்கம்! ஆகா, நீவிர் புலவர். உங்கள் விளக்கத்தை வாசித்து வயிறு குலுங்கச் சிரித்தேன். இப்பிடி இன்னும் பல நகைச்சுவையான விளக்கவுரைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

said...

வெற்றி அண்ணே, இந்த மாதிரி நிறைய கைவசம் இருக்குது. ஒவ்வொண்ணா வெளியிடலாம் என வைத்துள்ளேன்

said...

//இந்த மாதிரி நிறைய கைவசம் இருக்குது. ஒவ்வொண்ணா வெளியிடலாம் என வைத்துள்ளேன//
சிவாண்ணே, இது ஒன்னு படிச்சுப்புட்டே தல சுத்தி நிக்கிறேன். இன்னு நிறயப் பதவுரை எழுதினால்... அய்யகோ!!