Friday, May 19, 2006

இலவசக் கொத்தனாரின் வாக்குறுதிகள் நிறைவேறின

கால்கரியில் தமிழ்பதிவுகளைப் பற்றி ஒரு திறனாய்வு விவாதம் நடத்த மே மாத மத்தியில் வருவதாக தேர்தலுக்கு முன் என்னிடம் வாக்குறுதி தந்திருந்தார்.

இலவச வாக்குறுதிகளை நான் நம்பவில்லை.

நேற்றுக் காலை தீடிரென்று ஒரு போன் கால்.

இலவசம் கால்கரியில் இருப்பதாகவும் மாலை 5.30 க்கு சந்திக்கலாம் என்றார். ஆ.. என் தமிழ் வளரப் போவதை அறிந்து ஆவலுடன் அவரை சந்திக்க சென்றேன்.

சென்ற இடத்தில் மேலும் ஒரு ஆச்சரியம். அவர் எனக்கு அளித்திருந்த இன்னொரு வாக்குறுதியும் நிறைவேற்றிவிட்டார்.

ஆம் கால்கரியில் கிடைப்பதற்க்கறிய அல்வா, முறுக்கு, சீடை மற்றும் தட்டை போன்ற அயிட்டங்களை தன் உயிரை பயணம் வைத்து கனடாவிற்க்கு கடத்தி தன்னுடைய வாக்கைக் காப்பாற்றிவிட்டார்.

பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு அவருடைய குடும்பத்தாருடம் எங்கள் வீட்டிற்கு வருகை தந்து என்னை பெருமிதம் அடைய வைத்தார்.

எங்கள் வீட்டு தோட்டத்தை எப்படி கொத்துவது என இலவசமாக ஆலோசனைகளை வழங்கினார்.

அவர் வழங்கிய ஆலோசனை: தோட்டட்திற்கு நன்றாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு நாமும் 'தண்ணீ" அடித்துக் கொள்ளவேண்டும்.
பிறகு மண்வெட்டியை எடுத்து தோட்டத்தைக் கொத்திவிடவேண்டும். மிக அருமையான ஆலோசனை.

அதன் பின் பக்கத்தில் உள்ள மலைவாசஸ்தலுத்துக்குப் போய் சீரிய முறையில் தமிழை எவ்வாறு வளர்ப்பது என்று சிந்த்திக்கப் போவதாக கூறினார். அங்கு போக பல வாடகை கார் கம்பெனிகளை அணுகி ஒரு காரும் இல்லாதால் பேருந்து சீட்டை காசுக் கொடுத்து பதிவு செய்தார்.

அதன் இரு குடும்பங்களும் கால்கரியின் தலை சிறந்த தென்னிந்திய உணவகத்திறுக்கு பயணமானோம்.

அங்கு போனவுடன் நகைசுவை கொத்தனார், துப்பறியும் கொத்தனாராக மாறிவிட்டார். உணவுப் பட்டியலைக் கண்டவுடன் தமிழ்நாட்டின் அரசியல் சதி கால்கரியில் தொடங்குகிறது என்று அந்த உணவுப் பட்டியலை தன்னுடைய டிஜிடல் காமிராவில் பதிந்துக் கொண்டார். பிறகு முக்கனிகளில் முதல் கனி இருக்கிறாதா என்று தெரிந்துக்கொண்டார்.

ஊருக்கு திரும்பியவுடன் மிகப் பெரும் ச்தியை அம்பலப் படுத்தப் போவதாக சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியவில்லை

மேஜையில் காலிபிளவர் பிரை வந்ததும் அதையும் க்ளிக்கித்துக் கொண்டார். ஒரு புதிய தமிழ் வார்த்தையை கண்டுபிடித்துவிட்டேன். அதைப் பதிவாகப் போட்டு 200 அடிக்க போவதாகவும் சொன்னார்.

உணவு முடிந்து வெளியே வந்து காரில் மேற்கு நோக்கி பயணிக்கையில் மணி இரவு 9.30 அப்போது தான் சூரிய அஸ்தமித்துக் கொண்டிருந்த்தது.

அதைப் பார்த்துக் கொண்டே நாம் சந்தித்து சில மணிநேரங்களே ஆனாலும் பல வருடங்கள் போல் இருக்கிறது என்றார்.
நானும் சிலிர்ப்புடன் ஆம் என்னே தமிழ்மண சேவை என்றேன்.

அப்போது இருவர் தலையிலும் டட் டைய்ங் என ஒரு குட்டு அவரவர்
மனைவியரிடமிருந்து....... ஏன்?

நாங்கள் குடும்பத்தை விட்டு சதா காலமும் லாப் டாப்பை பார்த்துக் கொண்டிருந்தால் சில வருடம் என்ன சிலு யுக பந்தங்களும் ஏற்படும் என இரு பெண்டிரும் கோரசாக சொன்னார்கள்


இன்று மாலை மலையிலிருந்து இறங்கி நேராக என் வீட்டிற்கு கொத்தனார் வருகிறார்.

அவருக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேறினவா என்று அவருடைய பதிவில் எதிர்ப்பார்க்கிறேன்

39 comments:

said...

சிவா,

கொத்ஸ் & குடும்பத்தைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.

ஆமாம். ஜிகர்தண்டா செஞ்சுடீங்களா?( விருந்தினருக்கு)

said...

சிவா,
கொத்தனாருக்கு ஜிகர்தண்டா தருவதாக வாக்குறுதி அளித்திருந்தீர்களே,அதை நிறைவேற்றினீர்களா இல்லையா?

said...

உங்க பக்க அறிக்கை (அதாங்க உங்க சைட் ரிபோர்ட்) வந்தாச்சு. அடுத்து கொத்ஸோட அறிக்கை எப்படி இருக்குன்னு பாக்கணும். :-)

said...

//தோட்டட்திற்கு நன்றாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு நாமும் 'தண்ணீ" அடித்துக் கொள்ளவேண்டும்.//

அப்பா, கொத்ஸோட தொல்லை கொஞ்ச நாள் விட்டதுன்னு பாத்தா, அங்க வந்து பிராண்டுறாரா???

சிவா, நீங்க பிழைத்து 'புல்' பார்மில் மீண்டு வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

//முறுக்கு, சீடை மற்றும் தட்டை //
என் வயிறெரிஞ்சு சொல்றேன். நீங்கள்லாம் நல்லா இருக்கணும். :)))))

said...

//தோட்டட்திற்கு நன்றாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு நாமும் 'தண்ணீ" அடித்துக் கொள்ளவேண்டும்.//

அப்பா, கொத்ஸோட தொல்லை கொஞ்ச நாள் விட்டதுன்னு பாத்தா, அங்க வந்து பிராண்டுறாரா???

சிவா, நீங்க பிழைத்து 'புல்' பார்மில் மீண்டு வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

//முறுக்கு, சீடை மற்றும் தட்டை //
என் வயிறெரிஞ்சு சொல்றேன். நீங்கள்லாம் நல்லா இருக்கணும். :)))))

said...

//தோட்டட்திற்கு நன்றாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு நாமும் 'தண்ணீ" அடித்துக் கொள்ளவேண்டும்.//

அப்பா, கொத்ஸோட தொல்லை கொஞ்ச நாள் விட்டதுன்னு பாத்தா, அங்க வந்து பிராண்டுறாரா???

சிவா, நீங்க பிழைத்து 'புல்' பார்மில் மீண்டு வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

//முறுக்கு, சீடை மற்றும் தட்டை //
என் வயிறெரிஞ்சு சொல்றேன். நீங்கள்லாம் நல்லா இருக்கணும். :)))))

said...

நீங்க பரவாயில்லீங்க தலைவா

யாராவது கூட சேரும்போதுதான குட்டு விழுது.நமக்கு கணிணியில தமிழ் எழுத்த பாத்தாலே விழுது.

அடுத்த முறை இந்தியா வரும்போது நல்ல வைரமோதிரம்
வாங்கி குடுத்துருங்க.

குட்டுப்பட்டாலும் வைரக்கையால் குட்டுப்படணும் சாமியோவ்.

said...

இது நிசமா சிவா

உங்க clustermap ல பாத்தா
CHILE,ARGENTINA, BRAZIL அப்படின்னு கண்ட மேனிக்கு பதிவு ஆயிருக்கு.

இங்கயெல்லாம் தமிழ் படிக்கறவுங்க இருக்கறாங்கன்னுநெனச்சாலே புல்லரிக்குது.

வாழ்க தமிழ்ச்சேவை.

said...

என்னா போங்க.. 'கால்கரி பிளாகர்ஸ் மீட்' அப்படீன்னு ஒரு பில்டப் கொடுத்து பதிவு போட்டிருக்க வேண்டாமா?!

said...

சிவா சார்,

ஜிகர்தன்டா, சால்னா & முட்ட பரோட்டா, அரச மீனவன் இது பத்தி ஒன்னும் சொல்லல ?

// அல்வா, முறுக்கு, சீடை மற்றும் தட்டை போன்ற அயிட்டங்களை தன் உயிரை பயணம் வைத்து

எப்படியும் உங்க ஊர்ல ஸ்னீபர் நாய்கள் அவரை பாத்திருக்கும்.. அதுனால கொத்ஸ் இங்க வரும் போது 100 ஊசி போட இங்க எல்லாரும் ரெடியா இருக்கோம் :-))))))))))

// பிறகு நாமும் 'தண்ணீ" அடித்துக் கொள்ளவேண்டும்

இத எதுக்கு முதல்ல செய்ய கூடாது ?..

// தமிழ்நாட்டின் அரசியல் சதி கால்கரியில் தொடங்குகிறது என்று அந்த உணவுப் பட்டியலை

//பிறகு முக்கனிகளில் முதல் கனி இருக்கிறாதா

இதுதான் க்ளூவா ?

// காலிபிளவர் பிரை வந்ததும் அதையும் க்ளிக்கித்துக் கொண்டார். ஒரு புதிய தமிழ் வார்த்தையை

இலக்கிய திறனாய்வு நடந்ததா ?

said...

துளசி மேடம், கொத்ஸின் வருகையால் உங்கள் தனி மடலுக்கு பதில் தாமதம் ஆகிறது

said...

செல்வன், வாக்கு நிறைவேறியது

said...

இராமநாதன், இன்று மலையிலிருந்து இறங்கிய கொத்தனார் சிறிது களைத்திருந்தார். களைப்பை தண்ணீர் அடித்து போக்கினோம்

said...

பெரு(சு), தனியாக இருந்தால் சப்பாத்திக் கட்டைதான், யாராவது கூட இருந்தால் சிறிது மரியாதை அவ்வளவுதான்

said...

பெரு(சு) அது நீங்கள் தான் என நினைத்தேன். நீங்கள் தான் அந்த ஊர்களுக்கு போகும்ம்போது படிப்பதாக நினைத்தேன்.

நிஜமாகவே தமிழர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்

said...

பெரு(சு) அது நீங்கள் தான் என நினைத்தேன். நீங்கள் தான் அந்த ஊர்களுக்கு போகும்ம்போது படிப்பதாக நினைத்தேன்.

நிஜமாகவே தமிழர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்

said...

மாயவரத்தான், அதெல்லாம் கொத்ஸின் வேலை. பில்ட் அப் தருவது 200 வாங்குவது எல்லாம்..

said...

பெரு(சு) வைரமோதிரம் அது இது ன்னு அனாசியமா ஏத்திவிட்டு செலவே ஏத்திரங்களே

said...

கார்த்திக், ஜிகர்தண்டா இருந்த்தது. தலைவர் தங்க கழுகு, அரசமீனவன் ஆகிய வெளிநாட்டு சரக்குகள் வேண்டாம் எனக் கூறிவிட்டதால். வெகு லோக்கல் சரக்கை வாங்கி தந்தேன். அதை தமிழாக்க தலைவர் சிந்தனையில் உள்ளர்.

இந்த வெள்ளி சைவ வெள்ளியாகி விட்டதால் கோழி/முட்டைகள் இல்லை :(

said...

//ஆம் கால்கரியில் கிடைப்பதற்க்கறிய அல்வா, முறுக்கு, சீடை மற்றும் தட்டை போன்ற அயிட்டங்களை தன் உயிரை பயணம் வைத்து கனடாவிற்க்கு கடத்தி தன்னுடைய வாக்கைக் காப்பாற்றிவிட்டார்.//
ஹு ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஏக்க பெரு மூச்சுங்க,
யாராச்சும் சூடான் பக்கம் வாங்கப்பா

said...

அடடா, நாகை சிவாவும் சூடான் சிவாவும் ஒரே ஆளா?

நீங்கள் ஒரு ப்ளைட்டை பிடித்து துபாய் போனால் போதுமே. அங்கே எல்லாம் கிடைக்கும்

said...

சிவாண்ணா,

இப்படி எல்லா விஷயத்தையும் பட்டுன்னு போட்டு உடைச்சிட்டீங்களே. ஒரு 36 இல்லைன்னாலும் 3-4 பதிவாவது போட வேண்டாமா?

அதுவும் மலையில் இருந்து இறங்கி வந்தபின் நடந்த சமாச்சாரங்களை ரெண்டே ரெண்டு பின்னூட்டத்தில் கவர் செஞ்சுட்டீங்களே.

இருங்க இருங்க. ஊருக்குப் போய் கவனிச்சுக்கறேன்.

said...

அல்வா வாம்மு ருக்காம் சீடையாம்
இல்லா தவனுக் கோரொட் டியும்
டீயும் தானே சொர்க்க் மென்றெ
வாழ்ந்தி ருப்பே னே.

நாளைக்கு முருக்கு சுடறதுக்கு முடிவு
செஞ்சுட்டோம்.

said...

வைர அட்டிகை, நெக்லஸ்,வைர ஒட்டியாணம்

இதுக்கு மோதிரம் பரவாயில்லதானே.

said...

இலவசம், தாங்களின் பதில் பதிவை படிக்க பொறுமையாகக் காத்திருக்கிறேன்.

said...

ஐயா பெரு(சு), முறுக்கு சுட்டமோ சாப்பிட்டோமா ன்னு இருக்கனும்.

அதைவிட்டு அகராதியில் இல்லாத ஒட்டியாணம், அட்டிகை எல்லாம் சொல்லி வயிற்றில் புளிக் கரைக்கீறிரே.

நீங்கள் கால்கரிக்கு வந்தால்.. ஐயா பயமாயிருக்கிறது :)

said...

இலவசம்,

இன்னைக்கு பிரேக்பாஸ்ட்டே அல்வாதான் அருமையாக இருந்தது.

said...

//வைர அட்டிகை, நெக்லஸ்,வைர ஒட்டியாணம் ..//

இங்கே யாருங்க அது, நம்ம ஷாப்பிங் லிஸ்டைக் காப்பி அடிக்கிறது?:-))))))))))

said...

ஐயோ..இதெல்லாம் கடைகளில் விற்பார்களா? அந்த கடைகளின் விலாசங்களை தாருங்கள். அந்த ஊர்களுக்கு வருவதை தவிர்க்கிறேன். கால்கரியில் இவைகளை விற்கும் கடைகள் கணவர்களூக்கு எதிரானவை என்று தடை செய்யப் பட்டுள்ளன :)

said...

ஆமாங்க! நாகை சிவா தான் இப்ப சுடானில் குப்பை கொட்டி கொண்டு இருக்கின்றேன்.
வேலை பளு அதிகமா இருப்பதால் எங்குமே நகர முடிவதில்லை. அப்படி, இப்படி சமாளிச்சு இந்த வார கடைசியில் தலைநகரத்துக்கு செல்கின்றேன்.(தற்சமயம் இருப்பது தார்பூர்-Darfur).
துபாய்க்கு அடுத்த மாதம் போகலாம் என்று ஒரு எண்ணம் உள்ளது.

said...

சிவா, கொத்தனார் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறியதைத் தான் போட்டிருக்கீங்க.. உங்க வாக்குறுதி எல்லாம் என்ன ஆச்சு?!!!

said...

//இன்னைக்கு பிரேக்பாஸ்ட்டே அல்வாதான் அருமையாக இருந்தது.//

எங்களுக்கு சமைத்து களைத்ததால் காலை உணவு இல்லை என வீட்டில் அல்வா கொடுத்ததைத்தானே இப்படி சொல்கிறீர்கள்!

said...

சிவாண்ணா,

நம்ம கால்கரி வலைப்பதிவர்கள் மாநாடு பற்றிய முதல் பதிவு போட்டாச்சு. சரியான்னு பார்த்துச் சொல்லுங்க.

said...

அகில உலக வருத்தப் படாத வாலிபர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று தற்போதைய ஆட்சியில் நிர்ந்தர் உணவு துறை முதலமைச்சராய் பதவியேற்று இருக்கும் அன்பின் ஆல்ப்ஸ் மலை பண்பின் பனி மலை.. இலவசங்களின் இமய மலை.. பரோட்டாப் பாவலர்... பின்னூட்டப் புயல்... (ஸ்ப்பா) ஆங்.. பதிவுலக முடிசூடா மன்னன்.. உலகம் சுற்றும் வாலிபன்....தமிழின உணவு தலைவர் கொத்ஸ் அவர்களின் கனடா சுற்றுபயண விவரத்தைத் தெளிவாக்ப் பதிவிட்ட கால்கரி சிவாவிற்கு அண்ணன் கொத்ஸ் பதிவுகளில் ரத்தத்தால் பின்னூட்டமிடக் காத்திருக்கும் இரு நூறு தமிழ் தொண்டர்களின் சார்பில் நன்றியத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு. இந்த ஒரு பின்னூட்டத்தை ஒரு 100 த்டவை வெளியிடுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் பேர்ல்ல வந்தப் பதிவுக்கு வெறும் 30 பின்னூட்டமா தாங்கமுடியல்ல...

said...

தேவு, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு நம்ம பதிவுக்கு வராம இருந்திராதே. அங்கயும் இன்னும் 100 வரலை! :)

said...

பொன்ஸ், என்னுடைய வாக்குறுதிகள் நிறைவேறினவா என அவருடைய பதிவிற்கு சென்று அவர் சதம் அடிக்க உதவுங்கள்.

said...

தேவ்,

யப்பா..யப்பா..

said...

கொத்ஸ்,
தப்பித் தவறி சிங்கைக்கு வந்தால், சிவாவின் தம்பி அடியேன் வீட்டிற்கு விஜயம் செய்யவும். நான் பொற்கழுகு, தங்கமீன்கொத்திக்கு மயங்குபவன் அல்லன். அடியேன் ஒரு நடைமனித ரசிகன். அந்த ஜானி நடைமனிதனையும் நீங்கள்தான் சுங்க வரியில்லா கடையிலிருந்து வாங்கி வரவேண்டும். உள்ளூரில் விலை மிக அதிகம்!

ஜானியுடன் வந்தால் விருந்து நிச்சயம்!

சியர்ஸ்,
சரவணன்

said...

ஐயோகோ, சரவணா, நீயும் குடிகாரனாக எப்போது மாறினாய். என்ன தைரியம் உனக்கு?

படவா, வைச்சிருக்கேன் உனக்கு