Tuesday, May 02, 2006

மக்களாட்சியும்..... முடியாட்சியும்......


இவ்வுலகின் முதல் தீவிரவாத நாடு, கொடுங்கோலன் புஷ் ஆட்சிசெய்ய்யும் இப்பூவுலகின் நரகம் என சிலரால் கருதபடும் அமெரிக்காவில் நேற்று முக்கிய நகரங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியேற்ற உரிமைகள் கோரி ஊர்வலமாக சென்றனர். அமெரிக்க தீவிர வாத அரசு இவர்கள் ஊர்வலம் செல்ல அனுமதித்து இவ்வுலகில் வேலைக் காரர்களுக்கும் உரிமை உண்டு என ஒரு மோசமான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இந்த முன்னூதாரணம் ஒரு கேவலம். மக்களை சுதந்திரம் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்கி அவர்களை நசுக்கியுள்ளது. உழைக்கும் தோழர்களுக்கும் உரிமை கேட்க வாய்ப்புத் தந்து ஜனநாயகம் என்ற நஞ்சு பரவ வழி வகுத்துள்ளது.




இப்பூவுலகின் சொர்க்கம், நாகரீகத்தின் தொட்டில், எங்கெங்கு நோக்கிலும் கண்ணாடி மாளிகைகளும் சுத்தமும் சுகாதாரமும் உள்ள நகரம் துபாய். இங்கே அன்பே உருவான மன்னரின் முடியாட்சி. இங்குள்ள அரேபியர்களோ ஒழுக்கசீலர்கள் அன்பின் உருவங்கள் எழைப் பங்காளர்கள். அவர்கள் இங்கே சட்டரீதியாக ஏஜெண்ட் என்ற தன்னலமற்ற சமூக காவலர்களின் உதவியால் வேலைக்கு வந்த இந்திய அடிமைகளுக்கு அருமையான பாடத்தை கற்றுக்கொடுக்கின்றனர்.

எஜமானனுக்கு அடங்கு.

தரவேண்டிய சம்பள பாக்கியை கேட்காதே.

தங்குவதற்கு நல்ல இடமோ பசிக்கு உணவோ கேட்டு உன் எஜமானனின் அன்பை இழக்காதே.

அவ்வாறு கேட்டால் உன் தாய் நாடகிய இந்திய நரகத்திற்கு திருப்பி அனுப்பபடுவாய்

உழைக்கும் அடிமைகளுக்கு நல்ல பாடத்தை அன்புடன் கற்று தரும் முடியாட்சி இவ்வுலகெங்கும் மலரட்டும்.


Thanks to Washington Post and GulfNews

16 comments:

said...

Siva,
Is it "Vancha Pukazhchi"?

I am not able to understand.

But, yesterday, I had a chance to hear a right wing talk radio; they are opposing these kinds of rallies in US that too for illegal. They are commenting very badly about illegal.

said...

சிவபாலன், ஆம் வஞ்சகப் புகழ்சி தான்.

அமெரிக்காவில் பலன் கிடைக்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் தட்டிக் கேட்க முடிகிறது.

அரேபியாவில் அது கூட இல்லை.

தரவேண்டிய சம்பளத்தைக் கேட்டு போரடிய நம் இந்திய சகோதரர்களை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது துபாய் அரசு.

இதை தட்டிக் கேட்கவில்லை சொல்லிக்காட்டினாலே போதும் மதம் ஜாதி என்று சொல்லி ஒரு கும்பல் வலைப்பதிவில் திட்டும்

said...

Yes I do agree with you.

said...

உங்க ஸ்டைலே தனி யாயிடுச்சே தலைவா!! என்று ஒரு ஜால்ரா அடிக்கலாம் போல் இருக்கிறது.

இருந்தாலும், அடக்கிக் கொண்டு,

நல்ல பதிவு, நாசுக்காக சொல்லி இருக்கிறீர்கள். எத்தனை பேர் எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்!

ஷங்கர்.

said...

சிவா,

மத்திய கிழக்கில் போராட வாய்ப்புகளும் மிக குறைவு தான். தொழிலாளர் உரிமை அந்த பகுதி நாடுகளில் வளரவேண்டியது காலத்தின் அவசியம்.

அதற்காக, ஊர்வலம் போகலாம் ஆனால் நவீன அடிமைகளாக இருங்கள் என்று சொல்கிற அமெரிக்க ஆதிக்க மனப்பான்மையை மெச்சுவது எந்த விதத்தில் நியாயம்? வீதியில் போராட உரிமை கிடைத்தால் போதும் என்பது, பாதிக்கப்பட்ட பல லட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கழுத்தில் கை வைப்பதாக படுகிறது. எல்லா நாடுகளிலும் இடம்பெயர்ந்த தொழிலாளர் நிலை வேதனையானது. குறிப்பாக unskilled labours (இந்த பெயரில் கூட நியாயம் இல்லை, யாருக்கு தான் திறன் இல்லை?)என அழைக்கப்படுபவர்கள் நிலை.

said...

திரு,

ஊர்வலம் போனவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்தவர்கள்.

இவர்கள் வேண்டுமென்று அமெரிக்கா அவர்களை அழைக்கவில்லை.

H1B விசா கொடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து வரபடுபவர்கள் நன்றாகதான் வாழ்கிறார்கள்.

சட்டவிரோதமாக வந்தவற்கே ஊர்வலம் செல்லும் வழி உள்ளது. உரிமை அடுத்து வரும். அதற்காக வழி பிறக்கும்.

சட்டபடி பேசி அரேபியாவிற்கு அழைத்து வந்து அங்கும் பேசியபடி சம்பளம் தராமல் மதம் காட்டி அடிமை முறை வளர்ப்பவர்கள் அமெரிக்காவை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என்பதுதான் என் வாதம்

said...

திருவுக்கு, அமேரிக்கா என்றாலே ஆகாது.

ஜனநாயகத்தில், அவரைப் போல் உள்ளவர்களையும் ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளது. ஆனால், இவர் பேசுவது போல் முடியாட்சியில் பேசிப் பார்தால் தெரியும். "யார் அங்கே, இந்த தேச விரோதியின் தலையைத் துண்டியுங்கள்" என்ற கட்டளை தான் வரும்.

(அது ஏனோ, ஒரு இஸ்லாமிய நாட்டில் கூட, கம்மியூனிஸ்டுகள், trade union னிஸ்டுகள், தொழிலாளர் புரட்சி செய்பவர்கள், இருப்பதில்லை!!?)

ஷங்கர்.

said...

//கால்கரி சிவா said...
திரு,

ஊர்வலம் போனவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்தவர்கள்.

இவர்கள் வேண்டுமென்று அமெரிக்கா அவர்களை அழைக்கவில்லை.//

அவர்கள் உரிமையற்ற மனிதர்களா? அமெரிக்காவிற்கு அவர்கள் அவசியம் இல்லையெனில் எதற்காக அவர்களை தங்க அனுமதித்துருக்கிறது அமெரிக்கா? மானிட பாசத்தாலா? குறைந்த கூலிக்கு அடிமை வேலை பார்ப்பது சட்டவிரோதம். உயர்ந்த ஊதியத்துக்கு சேவை செய்வது experts or skilled workers. முதலாளித்துவத்தின் நாற்றமெடுக்கும் தத்துவம் இது. மெக்சிகோ எல்லை தாண்டி இவர்களெல்லாம் வருமளவு அனுமதிக்காவிட்டால் அமெரிக்கா நாற்றமெடுக்க சில நாட்கள் போதுமானது அது தான் உண்மை. கசக்கலாம், இருந்தாலும் உண்மை அது தான்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//Sankar narayanan M.R said...
திருவுக்கு, அமேரிக்கா என்றாலே ஆகாது.

ஜனநாயகத்தில், அவரைப் போல் உள்ளவர்களையும் ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளது. ஆனால், இவர் பேசுவது போல் முடியாட்சியில் பேசிப் பார்தால் தெரியும். "யார் அங்கே, இந்த தேச விரோதியின் தலையைத் துண்டியுங்கள்" என்ற கட்டளை தான் வரும்.

(அது ஏனோ, ஒரு இஸ்லாமிய நாட்டில் கூட, கம்மியூனிஸ்டுகள், trade union னிஸ்டுகள், தொழிலாளர் புரட்சி செய்பவர்கள், இருப்பதில்லை!!?)

ஷங்கர்.//

சங்கர், நீங்களாக குத்திக்கொள்கிற அடையாளங்களுக்கு நான் பொறுப்பல்ல. அமெரிக்கா மட்டுமல்ல என்ற வல்லாதிக்கமும் அவசியமில்லை என்கிற ரகம் நான். நல்லது நடந்தால் பாரட்டவும் தயக்கமில்லை. முடியாட்ச்யிலும் என்னைப் போன்றவர்கள் இருந்து குரலெழுப்பியதால் தான் மக்களாட்சி தத்துவம் பிறந்தது என்கிறேன்.

இஸ்லாமிய, கம்யூனிஸ்டு, அடக்குமுறை நாடுகளிலும் தொழிற்சங்கவாதிகளும், மனித உரிமையாளர்களும் இருக்கிறார்கள். குரலெழுப்புகிறார்கள். அதை காதில் கேட்பதும், மறப்பதும் அவரவர் இயல்பை பொறுத்தது. உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் முடியாட்சி தத்துவம் சுமந்த நேப்பாள மன்னர் பட்ட பாடும் அதற்காக உயிர் கொடுத்த மக்களும்.

சீனா முதல் சிங்கப்பூர் வரையும் ஆப்பிரிக்கா முதல் இந்தியா வரையும் இந்த குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதனால் தான் உங்களுக்கும் எனக்குமான மனித உரிமை இன்னும் மிச்சமிருக்கிறது. மனித உரிமை அடிப்படையில் பார்க்கும் வேளை அமெரிக்கா எங்கே இருக்கிறது என மனதில் கேளுங்கள். உங்களுக்கு உண்மை விளங்கும்.

said...

//மெக்சிகோ எல்லை தாண்டி இவர்களெல்லாம் வருமளவு அனுமதிக்காவிட்டால் அமெரிக்கா நாற்றமெடுக்க சில நாட்கள் போதுமானது அது தான் உண்மை. கசக்கலாம், இருந்தாலும் உண்மை அது தான்//

தவறு, திரு.

மெக்சிகோ எல்லை மிகப் பெரியது அதை கண்காணிப்பதற்கும் சிரமம்.
இவ்வாறு வந்தவர்களை பிடித்து ஜெயிலில் வைப்பதற்கும் திருப்பி அனுப்பவும் ஏராளமான லாஜிஸ்டிக் ப்ரச்னைகள். இவர்களை அரசாங்கம் வேலைக்கு அமர்த்துவதில்லை.இவர்கள் வரியும் கட்டுவதில்லை ஆனால் இவர்கள் அந்நாட்டின் பள்ளி/மருத்துவ உதவிகளை பெறுகிறார்கள். இதுதான் உணமை.

இவர்கள் இல்லையென்றால் அமெரிக்காவின் சில வியாபாரிகளின் லாபம் குறையும் ஆனால் நாறாது.

கனடாவில் சட்டவிரோத குடியேறிகள் மிகக்குறைவு இங்கே என்ன நாறியாக் கிடக்கிறது.

//அவர்கள் உரிமையற்ற மனிதர்களா? //

அமெரிக்காவில் அவர்கள் உரிமை அற்றவர்களே

//குறைந்த கூலிக்கு அடிமை வேலை பார்ப்பது சட்டவிரோதம். உயர்ந்த ஊதியத்துக்கு சேவை செய்வது experts or skilled workers. முதலாளித்துவத்தின் நாற்றமெடுக்கும் தத்துவம் //

தன் இளமையை தொலைத்து படித்து பட்டம் பெற்று மூளை ஆபேரேசன் செய்யும் திறமை வாய்ந்த மருத்துவருக்கும், எந்த ஒரு முயற்ச்சியும் இல்லாமல் திறமைகளை வளர்க்காமல் சாதரண வேலை செய்யும் தொழிலாளருக்கும் ஒரே சம்பளம் தந்த சோவியத் என்ற சோஷலிச பூங்கா ஏன் சிதறியது? மேலும் சீனாவிலிருந்து தினம் தினம் மக்கள் தப்பித்து வருவதேன்?

உழைப்பு திறமை இவைகளுக்கு முதலாளித்துவத்தில் நிச்சயமாக மதிப்புள்ளது. இவைகளில் நம்பிக்கை இல்லாத கோழைகள் தான் சோஷலிச பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.

சோஷலிசம் படிக்க நன்றாக் இருக்கும் ஆனால் வாழ்க்கைக்கு உதவாது.

மெக்சிகோ நாட்டு சட்டவிரோதிகளின் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கர் ஆகிறார்கள்.

ஆனால் பல தலைமுறைகளாக அரேபியாவில் வாழும் இந்திய இஸ்லாமியர்கூட அங்கே உரிமைகல் பெற வழியில்லை

said...

//உழைப்பு திறமை இவைகளுக்கு முதலாளித்துவத்தில் நிச்சயமாக மதிப்புள்ளது. இவைகளில் நம்பிக்கை இல்லாத கோழைகள் தான் சோஷலிச பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.//

உழைப்பு என்பது உயர்கல்வியில் மட்டுமே மிச்சமிருப்பது போல நினைக்கும் உங்களுக்கு என்ன சொல்ல. உயர்கல்வி கற்க வாய்ப்பில்லாமல் உடல் உழைப்பால் தினமும் சமூகத்தை கட்டியெழுப்புபவர்கள் கோழைகளா? நான் எந்த இசமும் பேசவில்லை. மனித உரிமை பற்றி பேசுகிறேன். மனித உரிமைகளை அமெரிக்கா மீறுகிறது இந்த விடயத்தில் அதை விரிவாக தனி பதிவில் அலசுவேன். நன்றி!

said...

அமெரிக்காவில் நான் பார்த்த இன்னொரு சமத்துவம்.

குளுகுளு அறையில் அமர்ந்து ப்ரோகிராம் எழுதும் படித்த திறமையான software professional க்கு மணிக்கு 60 டாலர்கள் சம்பளம்

குளுகுளு லாரியின் காபினில் அமர்ந்து தினம் தினம் மெகா லாரி ஓட்டும் டிரைவருக்கும் மணிக்கு 60 டாலர்கள் சம்பளம்.


ஒரே ஒரு வித்தியாசம் software professional தினம் தினம் வீட்டுக்கு வருவார். லாரி டிரைவரோ மாதம் ஒரு முறை வீட்டுக்கு வருவார்.


இந்தியாவிலோ அல்லது அரேபியாவிலோ மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் லாரி டிரைவரைக் காட்டமுடியுமா?

said...

திரு,

//
முடியாட்ச்யிலும் என்னைப் போன்றவர்கள் இருந்து குரலெழுப்பியதால் தான் மக்களாட்சி தத்துவம் பிறந்தது என்கிறேன்.
//

உண்மை தான்.

//
இஸ்லாமிய, கம்யூனிஸ்டு, அடக்குமுறை நாடுகளிலும் தொழிற்சங்கவாதிகளும், மனித உரிமையாளர்களும் இருக்கிறார்கள். குரலெழுப்புகிறார்கள். அதை காதில் கேட்பதும், மறப்பதும் அவரவர் இயல்பை பொறுத்தது. உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் முடியாட்சி தத்துவம் சுமந்த நேப்பாள மன்னர் பட்ட பாடும் அதற்காக உயிர் கொடுத்த மக்களும்.
//

இரான், இஸ்லாமிய நாடு ஆன பின்பு அங்கிருந்த கம்யூனிஸ்டுகளை நடுத்தெருவில் வைத்து தூக்கில் இட்டார்கள்.

பாகிஸ்தான் உருவாக பெரும் பங்கு வகித்தது நம் கம்யூனிஸ்டுகள், ஆனால், பாகிஸ்தானில் கம்யூனிஸ்டுகள் காணாமல் போனது எப்படி?

நேபாளப் பிரச்சனை வேறு.

நானாக எல்லாம் முத்திரை குத்தவில்லை, நீங்கள் (என் பதிவில் ) அனுப்பிய பின்னூட்டத்தைப் பார்த்து தான் அப்படிச் சொன்னேன். நீங்கள் அமேரிக்காவின் ஒரு சில கொள்கைகளை மட்டும் தான் குறை சொல்கிறீர்கள் என்றால் சந்தோஷம்.

ஷங்கர்.

said...

//Sankar narayanan M.R said...

இரான், இஸ்லாமிய நாடு ஆன பின்பு அங்கிருந்த கம்யூனிஸ்டுகளை நடுத்தெருவில் வைத்து தூக்கில் இட்டார்கள்.//

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கையில் செல்ல காரணமாக இருந்த வல்லரசு விளையாட்டில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. தலிபன்கள் முதலில் செய்த அரசியல் படுகொலை அந்த நாட்டின் அதிபரை கொன்று விளக்கு கம்பத்தில் தொங்கவிட்டது. அமெரிக்காவிற்கு அன்று அது தீவிரவாதமாக தெரியவில்லை. அன்று தொடங்கி இன்னும் தொடர்கிறது...அமெரிக்காவும் இந்த விளையாட்டின் பின்னே இருப்பதில் பெருமை கொள்கிறது. இது வரலாற்று உண்மை. இங்கு இஸ்லாம் அல்லது வேறு இசங்கள் பற்றி பரிந்து பேச எனக்கு அவசியம் இல்லை. மனித உரிமையை அளவீடாக பார்க்கும் எனக்கு எந்த மதமும் அரசியல் கருத்தியலும் அடிமையாக வைத்திருப்பதை ஆதரிக்க மனதில்லை. சிவாவின் பதிவின் விளைவாக என் கருத்து அமைந்தது.


//பாகிஸ்தான் உருவாக பெரும் பங்கு வகித்தது நம் கம்யூனிஸ்டுகள், ஆனால், பாகிஸ்தானில் கம்யூனிஸ்டுகள் காணாமல் போனது எப்படி?//

இது உண்மையல்ல. முதலில் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது இந்து மகா சபையும் வீரசாவர்க்கரும். அதன் பின்னர் தொர்ந்த நிகழ்வுகளின் முடிவு பிரிவினை. பாகிஸ்தானில் கம்யூனிஸ்டுகள் இன்றும் செயல்படுகிறார்கள். தெரிந்துகொள்ள முயலுங்கள். சிவா பொறுத்தருள்ள உங்கள் பதிவின் நோக்கத்தை திசைதிருப்ப எனக்கு ஆர்வமில்லை.

//நானாக எல்லாம் முத்திரை குத்தவில்லை, நீங்கள் (என் பதிவில் ) அனுப்பிய பின்னூட்டத்தைப் பார்த்து தான் அப்படிச் சொன்னேன்.//

மேதாபட்கர் பற்றிய உங்கள் பதிவில் என் பின்னுட்டத்தை தவறாக புரிந்தீர்கள். தேவைப்படின் தனி மடலில் விவாதிக்கலாம்.

//நீங்கள் அமேரிக்காவின் ஒரு சில கொள்கைகளை மட்டும் தான் குறை சொல்கிறீர்கள் என்றால் சந்தோஷம்.//

அமெரிக்கா மட்டுமல்ல எந்த நாட்டினதும் தவறான இராணுவ, அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார கொள்கைகளை விமர்சிப்பது வளர்ச்சியின் தொடக்கம் என கருதுகிறேன்.

நன்றி சங்கர்! இந்த தலைப்பில் இத்துடன் முடிக்கிறேன்!

said...

திரு,

விவாதத்தை வேறு இடத்தில் தொடரலாம்.
தயவு செய்து இந்த சுயசரிதையைப் படிக்கவும்.

மோஹித் சென் எழுதிய A Traveller and the Road- " The journey of an Indian Communist".

உங்களுக்குத் தெரியாத (எனக்கும் தெரியாத) பல விஷயங்கள் இதில் கூறப்பட்டிருந்தது. (...பட்டிருக்கிறது).

மற்றுமொரு புத்தகம் திருமதி ராஜ் தாபர் எழுதிய (அவரது நினைவலைகள்) "All these Years".

இருவருமே, இந்திய கம்யூனிஸ்டுகள். நீங்கள் பாகிஸ்தானை உருவாக்க சாவர்கர் தான் காரணம் என்று கூறியதற்காகத்தான் இது.

நன்றி,
ஷங்கர்.