Monday, May 01, 2006

ஜிகர்தண்டா.. கனடாவில்....

மதுரைகாரங்களுக்கு ஜிகர்தண்டா என்றால் என்னவென்று தெரியும். ஜிகர்தண்டா வெயில் காலத்தில் உடலுக்கும் உள்ளத்திற்க்கும் குளிர்ச்சியளிக்கும் பானம்.

இது மதுரையில் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலம். மதுரையின் எல்லையை இன்னும் தாண்டவில்லை. பஞ்ஜாபிய லஸ்ஸியும் தந்தூரி சிக்கனம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.

ஆனால் நம் இட்லியும் அருமையான ஜிகர்தண்டாவும் இன்னும் பிரபலமடையவில்லை.

ஆபிஸ் பார்டிகளிலும் மற்றும் பாட் லக் பார்ட்டிகளிலும் நாங்கள் நம் இட்லி அண்ணாச்சியை அறிமுகப் படுத்தி அவரை பிரபலமாக்க முயற்ச்சிக்கிறோம்.

ஜிகர்தண்டா தயாரிப்பதற்கு முக்கிய பொருட்கள் : பால், நன்னாரி சர்பத் மற்றும் கடல் பாசி. பால் பலவிதமாக இங்கு கிடைக்கும். ஆனால் கடல்பாசி . அதுவும் பஞ்சாபி மற்றும் வட இந்திய கடைகளில் கிடைக்கிறது. இதை அவர்கள் கோந்த் கதிரா (Edible Gum) என்றழைக்கிறார்கள்.

அடுத்து நன்னாரி சர்பத். இதைத் தேடி நான் அலையாத இடமில்லை. சர்பத் தான் கிடைக்கவில்லை நன்னாரி வேர் (Sarasaparilla Root) கிடைத்தால் சர்பத் செய்துவிடலாம் என இங்குள்ள இயற்கை மற்றும் ஆர்கானிக் (Nature and Organic) உணவு கடைகளில் சென்று முயற்ச்சித்தும் பயனில்லை.

போனவாரம் ஒரு விளம்பரம் கண்ணில் அதுவும் தமிழில். கால்கரியின் முதலாவது தமிழ் மளிகைக் கடை. இங்கே எல்லாவகையான தமிழ், மலையாள, பிஜிய, ஈழ மற்றும் மலேசிய மளிகைகள் கிடைக்கும் என தமிழில் கொட்டை எழுத்துகளில் . கடையின் பெயர் நாகாஸ், 17 வது அவென்யு 52 வது தெரு தென்கிழக்கு கால்கரியில். வண்டியை அழுத்தினேன். அங்கே பக்கோடா, நம் மதுரை/மலையாள புரோட்டா, பச்சை மொச்சை பயறு முதலிய அரிய வகை அயிட்டங்கள் கிடைத்தன. அந்த கடையை நடத்துபவர் மலேஷிய தமிழர். அவரிடம் நன்னாரி சர்பத் இருக்கிறாதா எனக் கேட்டன். அவர் நன்னாரியா? அப்படியென்றால் என்ன என்று எதிர்க்கேள்வி கேட்டார். பிறகு நான் அங்குள்ள ஷெல்பில் கவனமாக நோக்கினேன். என் கண்ணில் Sarsaparilla Syrup என்று பட்டது அதன் கீழே சிங்கள எழுத்து அதற்கும் கீழே தமிழில் நன்னாரி சர்பத் என தமிழில் சின்ன எழுத்துகளில்.

ஆ கண்டேன் நன்னாரியை. உடனடியாக ஒரு பாட்டிலை வாங்கினேன்.

அந்த கடையில் இருந்த மலேஷிய சகோதரி இதை என்னவென்று தெரிந்துதானே வாங்குகிறீர்கள்? என வினவினார்.

ஏனென்றால் ஒருவர் தெரியாமல் வாங்கி பிற்கு செண்ட் வாசனை வருகிறது திருப்பி தந்து விட்டார் என்றார். நானும் இது நான் எதிர்பார்க்கும் சுவை இருந்தால் உங்கள் கடையில் உள்ள எல்லா பாட்டில்களையும் வாங்கிவிடுகிறேன் என்றேன். (நல்லவேளை அவருடைய கடையில் 5 பாட்டில்கள்தான் இருந்தன.)

அங்கிருந்து வடகிழக்கு கால்கரிக்கு சென்று பஞ்சாபிக் கடையில் கடல்பாசி வாங்கி வடமேற்கில் உள்ள என்னுடைய வீட்டிற்கு மூச்சிறைக்க கார் ஓட்டி வந்தேன்.

நன்னாரி சர்பத் மதுரையில் கிடைத்துக்கொண்டிருந்த ஒண்டிபிலி மற்றும் நந்தாராம் சர்பத்தின் சுவை மற்றும் தரமிருந்தது (மதுரை வலைப்பதிவாளர்களே இந்த சர்பத்துகள் இன்னும் கிடைக்கின்றனவா?)


ஜிகர்தண்டா செய்முறை :

கடல்பாசியை தண்ணீரீல் சுமார் 12 மணிநேரம் ஊறவிடவேண்டும். இது தண்ணிரீல் ஊறி இதன் கொள்ளளவு பல மடங்கு பெருகி வெண்மையாக ஊறிய சவ்வரிசி போல் ஆகி விடும்.

இதை ஒருகரண்டி ஒரு கிளாசில் போட்டு, ஐஸ் போட்டு அதற்கு மேல் வேண்டிய அளவு நன்னாரி சர்பத் சேர்க்கவேண்டும். பிறகு ஐஸ் பால் கொண்டு கிளாசை நிறைத்துவிட வேண்டும். அவ்வளவுதான். ஜிகர்தண்டா ரெடி. இன்னும் கொஞ்சம் சுவை வேண்டுமென்றால் இதற்கு மேல் வெண்ணிலா ஐஸ்கீரிம் அல்லது 33% விப்பிங் கீரிம் சேர்க்கலாம்.

இங்கே சம்மருக்கு (+8 டிகிரி செல்ஷியஸ்) மிக இதமாக இருந்தது.

கால்கரி வரும் வலைப்பதிவாளர்க்ளே உங்களுக்காக ஜில் ஜில் ஜிகர்தண்டா காத்துக் கொண்டிருக்கிறது. வாருங்கள் கால்கரிக்கு (வருவதற்கு முன் 12 மணிநேர நோட்டிஸ் தரவும் கடல்பாசி ஊற)

125 comments:

said...

எப்படியோ ஜிகர்தண்டா செய்து சாப்பிட்டு விட்டீர்கள். இப்போது திருப்தியா சிவா அண்ணா. மதுரைக்குச் செல்லும் போது கூட இப்போதெல்லாம் ஜிகர்தண்டா சாப்பிடுவதில்லை. அவர்கள் கிளாஸினைக் கழுவிய அதே வாளித் தண்ணீரில் மீண்டும் மீண்டும் கிளாசினைக் கழுவுவது இப்போதெல்லாம் பிடிக்கவில்லை. பிறந்ததிலிருந்து பார்த்தது தான் என்றாலும் இப்போது அது அருவருப்பாக இருக்கிறது. :-)

said...

சிவா குளு குளு பதிவு....

மருதைக்காரன் சரியா வந்துட்டேன் பார்த்தீங்களா:-))))))))))

said...

ஜிகர்தண்டா வாசனை அடிக்குதேன்னு வந்தா எனக்கு முன்பே மதுரக்காரவிய எல்லாம் வந்தாச்சு.
சிவா, இப்போ ஒண்டிப்புலி, நந்தாராம் எல்லாம் கிடைப்பதில்லை, ஜனதா மயம்தான்.
நீங்க செஞ்சதைச் சாப்பிட்ட மற்றவர்கள் (இதுவரை ஜிகர்தண்டா சாப்பிடாதவர்கள்)கொடுத்த சர்டிபிகேட் என்ன?

said...

குமரன்,
பார்சல் வாங்கி வீட்டுக்குப் போய்ச்சாப்பிடுங்கள். நீங்கள் சொன்ன பிரச்சனை இதில் கொஞ்சம் குறைவு..

said...

குமாரா, மதுரைக்கு போனா மதுரக்காரன மாறிடனும். நான் இதெல்லாம் கண்டுகிறதே இல்லை. ஒரு கைலி, ரப்பர் சப்பல் போட்டுக்கொண்டு போய் ஜிகர்தண்டா, நுங்கு பதினி, பனங்குருத்து, சுட்ட மக்காசோளம், தெருவோர புரோட்டாக் கடையில் புரோட்டா சால்னா மற்றும் மட்டன் பிரியாணி இவைகளை ஒரு கை பார்த்து விடுவேன். அப்படியே சைடு வெத்தலைப் பாக்கு கடையில் ஒரு குவார்ட்டரும் உண்டு அவ்வப்போது

என்ன பார்ர்க்கும் சொந்தகாரங்க மட்டும் பாரின் போனாலும் இந்த ரவுடி பய திருந்தவே மாட்டான் என்று புலம்புவார்கள்

said...

'காதல்' படத்திலே வர்ற ஜிகர்தண்டா தானே? எனக்கு தெரிஞ்ச 'மருத'காரன் ஒருத்தன 'அது என்னடா ஜிகர்தண்டா' அப்படீன்னு கேட்டேன். 'அது மாப்ளே.. அது ஒரு சூப்பரான மேட்டரு. அத எப்படி தயாரிக்கிறதுன்றது மருதக்காரய்ங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச 'சிதம்பர' ரகசியம்" (?!) அப்படீன்னு பீலா விட்டானே?!

said...

வாங்க முத்து, நீங்களும் மதுரையா.. அட துபாய்லே இருக்கீங்களா. மதுரையிலே எங்கே? துபாயிலே எங்கே? கராமாவா?

said...

மதுரைக்கு ஐந்தாறு முறை போயிருக்கிறேன் சிவா.மதுரை ஸ்பெஷல் உணவுகளை பற்றி கேள்விப்பட்டது முருகன் இட்லிகடையும் ஜிகர்தண்டாவும் தான்.முருகன் கடையில் கூட சாப்பிட்டுவிட்டேன்.ஜிகர்தண்டா எங்கே கிடைக்கும் என தெரியாமல் கடைசி வரை குடிக்க முடியாமல் போய்விட்டது.

உங்கள் புண்ணியத்தில் கால்கரியில் குடிக்க முடியும் போலிருக்கிறது.இதற்காகவே ஒரு நாள் அங்கே வரப்போகிறேன்.ஆனால் 8டிகிரி குளிர்(சம்மரில்) என பயமுறுத்துகிறீர்களே?இங்கெல்லாம் சம்மரில் 100 தாண்டிவிடும்.இந்தியா கெட்டது போங்கள்.

said...

தருமிசார், இன்னும் வெள்ளகார பசங்களுக்கு தரலே. தந்துவிட்டு அவர்களின் ரீயாக்ஷனை பதிவு செய்கிறேன்.

இட்லிக்கு ஒரு செர்பிய நண்பன் அடிமையாகிவிட்டான்.

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலுக்கு ஒரு ஈரானிய நண்பரும் ஒரு ப்ரிட்டிஷ் நண்பரும் அடிமையாகிவிட்டனர்.

நம்ம புளியோதரைக்கும் வெண்பொங்கலுக்கும் ஒரு டென்மார்க் நண்பர் அடிமை

உளுந்த வடை தேங்காய் சட்னிக்கு எங்கள் அலுவலகத்தில் அடிதடி தான்

சாப்படு நகரம் மதுரை என்று சும்மாவா சொன்னார்கள்.

said...

மாயவரத்தான், நான் காதல் படம் பார்க்கவில்லை. ஜிகர்தண்டாவிற்காக அதை டவுன்லோட் செய்யவேண்டியதுதான்.

மதுரகாரங்க இந்த மாதிரி பந்தா விடுவது வாடிக்கை. ஜாக்கிரதை :)

said...

செல்வன், மதுரையில் ஜிகர்தண்டா கிடைக்கும் இடங்கள்(மூன்று வருடங்களுக்கு முன் வரை)

1. மஞ்சனக் காரத் தெரு / தெற்குமாசிவீதி முக்கு

2. மஹால் வடம் போக்கிதெரு/தெற்குமாசிவீதி முக்கு

3. டி.எம் கோர்ட் அருகில் (ஐயகோ என்னுடைய அபிமான மெட்ராஸ் ஓட்டல் காணவில்லை)

4. அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் அருகில்.

தருமி சார் இப்போ எங்கெங்கெ?

4 வருடங்களுக்கு முன் வடம்போக்கித் தெரு ஜிகர்தண்டா பாய் "என்ன சிவா, கொஞ்ச நாள ஆளையப் பாக்கமுடியலே" எனக் கேட்டு அசத்திவிட்டார். நான் மதுரையை விட்டு 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதுதான் மதுரை பாசம் என்பது

5. கால்கரி வடமேற்கு

பயபடாதிங்க செல்வன். இங்கே 0 வந்தாலே +0 என்று சொல்லி ஒரு லேயர் உடையை கழட்டிவிடுவோம். சம்மரில் +30 முதல் +40 வரைக்கும் போகும் வாங்க சார் சீக்கிரம்.

said...

சிவா சார்,

இன்னும் ஒரு மதுரைகாரன் பிரசன்ட் சார்..எல்லீஸ் அண்ணா நகர், K.K நகர், எல்லீஸ் நகர், எஸ்.எஸ் காலனி சார்பில்..

எனக்கு தெரிஞ்சி இப்ப எல்லாம் ஜனதா சர்பத்ன்னுதான் ஒண்ணு இருக்கு. கடைசியா இங்க வரும் முன்னாடி செயின்ட் மேரீஸ் ஸ்கூல் பக்கம் ஜிகர்தண்டா குடிச்சதா ஞாயபகம். இந்த நன்னாரி சர்பத் எல்லாம் நான் சின்ன பயலா இருக்கும் போது தமுக்கம் அரசு பொருக்காட்சியில் குடிச்சது..

//தெருவோர புரோட்டாக் கடையில் புரோட்டா சால்னா மற்றும் மட்டன் பிரியாணி இவைகளை

உம்.. என்ன பண்ணுறது... இத படிச்சாலே காதுல புகைதான் வருது...ஒரு பார்சல் 2 chicago :-)

said...

சும்மாவே வரேன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இப்போ இது வேறையா? கட்டாயம் வரேன்.
நல்ல சூப்பரா ரெடி பண்ணி வையுங்க. ஆமாம். யாருக்கும் கொத்து பரோட்டா அறிமுகம் பண்ணலையா?

said...

நவபத்கானா தெரு/தெற்குமாசி வீதி முக்கு - இதனையும் ஜிகர்தண்டா கிடைக்கும் இடங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிந்து முதன்முதலில் ஜிகர்தண்டா கிடைத்தது அங்கு தான். அப்புறம் தான் மற்ற இடங்களில் கிளைகள் தொடங்கினார்கள். :-)

said...

மதுரைல ஜிகர்தண்டா கிடைக்கும் இடம் பற்றி இப்ப தெரிந்து என்ன பயன் சிவா?இந்தியா இனி எப்ப போவேனு தெரியாது.கால்கரி தான் பக்கம்.அங்கே தான் வரவேண்டும்.வருகிறேன்.எப்ப வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வந்துடுவேன்( This must be the most abused dialogue in that movie.:-)

நீங்கள் அமெரிக்கா வந்ததுண்டா?

said...

Dear Siva

Another Mauraiyaiite Aaajar here. I was a fan of Jil Jil Jigardhanda during school days, since my hygiene conscious teacher found me jil jil handed, she banned me from eating that. Even now when i see it, my teacher's spectacled angry face with roling eyes blinks in my mind. Now you stirred my past tastebud's passions. It is available still in so many mobile jil jil jigirdhanda shops across Madurai. In Kadhal movie, heroine would pester her dad to buy one for her. That dhadha would casually how much that jil jil walla makes each day. It was Rs.200 profit in that movie. See that movie, being a Madurai walla you will enjoy it every bit.

Karumbu juice, padhaneer served in palm leaf bowl and Ilaneers are my other favorites apart from Visalam and Rajendra cofee. Paruthip paal is another popular drink from Madurai.

Madurai was also famous for Paneer Soda, I dont think it is any more available in potti shops. Pepsi and Coke replaced all such native brands. Ginger Beer (not an alchoholic drink) is another excellent drink. Have you tried it? Try soda, lime with salt+sugar next time. Nagercoil people call it Boj.

When I visited my favorite Idli shop last year, everybody affectionly inquired why I am not to be seen now a days. Hmm, good old days of Madurai.

Thanks
Rajan

said...

கொத்தனார், வாங்க ரெடியா இருக்கு. கொத்து பரோட்டாவை எப்படி பண்ணுவது என்று ஆராய வேண்டியதுதான்.

உங்களுக்கு ஜிகர்தண்டா, இட்லி சம்பார், நீங்கள் நான் வெஜ் சாப்பிட்டால் தந்தூரி சிக்கனும் ரெடி. தண்ணி அடீப்பீர்கள் என்றால் நம்மூர் கிங் பிஷர் பியரும் ரெடி.

இந்தியாவில் இருக்கும்வரை இம்போர்டட் பியர், விஸ்கி போன்ற பானங்களும் பிசா, பர்கர் என பீட்டர்தன உணவுகளும், ஆங்கில பாட்டும் படங்களும் என பந்தா.

இங்கே வந்து அதே இம்பொர்டட் இந்திய பியர், ஜிகர்தண்டா, கொத்துபரோட்டா, தமிழ் பாட்டு, ப்ளாக் என பந்தா.

கொத்தனாரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்

சிவா

said...

செல்வன், வாங்க. நம்ம அன்னாத்தே அமெரிக்கருங்கோ(கூட பிறந்த அண்ணன்) இருப்பது கேரி, வட கரோலினாவில்

நான் போன ஜூனில் லாஸ் வேகாஸ் வந்தேன்.

ஹூஸ்டன் ஆஸ்டின் செய்ண்ட் லூயிஸ் விசிட் பாக்கி இருக்கிறது.

வரும் மாதங்களில் ப்ராஜெக்டை பொறுத்து.

நீங்க எங்கே?

said...

கார்த்திக், நம்ம இருக்கிற இடத்திக்கு நம்ம ஊரை கொண்டுவந்துவிட வேண்டியதுதான்.

ஆனால் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

மதுரையிலே எங்கே சார்.

said...

ஆராய்ச்சிக்காக நாடோடி போல் ஊர் சுற்றுவதே நம் பிழைப்பு.அடுத்த வாரம் முதல் இருக்கப் போவது கொலராடோவில்.

பக்கம் பக்கமாகத்தான் இருக்கிறோம் போல.போன சம்மரில் தெற்கு டகோடா வரை வந்தேன்.இன்னும் ஒரே ஒரு மாநிலம் தாண்டியிருந்தால் அல்பெர்டா.

சரி எப்படியும் என்றாவது சந்திப்போம்.3 மணி நேர பயணம் தானே?கோவையில் இருந்து மதுரைக்கு பஸ்ஸில் வர 4 மணிநேரம் பிடிக்கும்போது comparitively இது பக்கம் தானே?:-)))

said...

///ஆ கண்டேன் நன்னாரியை.////
சிவா,
கம்பரின் அனுமன் தோற்றார் போங்கள் :-).

said...

செல்வன், எனக்கும் டென்வர் வர வாய்பிருக்கிறது

said...

வரும்போது சொல்லுங்கள்.கட்டாயம் சந்திப்போம்.

said...

ராஜன்,

இப்படிக் கெளப்பிட்ங்களே. பருத்திக் கொட்டையை இப்பதேடி அலையனும் பருத்திப் பால் செய்ய.

ஜமைக்காவிலிருந்து ஒரு ஜிஞ்சர் பீர் இங்கெ கிடைக்கிறது. நல்ல காரம் டிரை செய்யவும்.

லெமன் சோடா சால்ட் அண்ட் சுகர் ஒரு அன்றாட ட்ரிங்க். என் மகன் அடிக்கடிக் குடிப்பான்.

மதுரை சென்ட்ரல் டாக்கீஸ் அருகில் கிடைக்கும் கரும்பு ஜூஸ் சூப்பர். இப்போது சென்னை வடபழனி சரவணபவனில் அருமையான கரும்பு ஜூஸ் கிடைக்கிறது. துபாய் மற்றும் அபுதாபியில் சப்பன் போக் என்ற சூவீட் கடைகளில் கரும்பு ஜூஸ் பிரபலம்

said...

முத்து, இலக்கியத்தை துணக்கழைத்து கொரங்கு என என்னை தாக்குகிறீர்கள்.

ஹா..ஹா.. சும்மா தாமஷுக்குத்தான்.

தமிழின் கதி க..தி.. கம்பனும் திருவள்
ளுவரும் என என்னுடைய தமிழ் வாத்தியார் சொல்லுவார். அந்த எஃபக்ட் தானுங்க

said...

//குமாரா, மதுரைக்கு போனா மதுரக்காரன மாறிடனும்//

சொன்னீயளே. இது பேச்சு! :)

க்ரைம் பிராஞ்ச் ரோடுல தள்ளுவண்டில ஜிகர்தண்டா வித்துக்கிட்டு இருந்தாய்ங்க. இப்ப எல்லாத்தையும் ஒன்வே ஆக்கிப்புட்டாய்ங்கள்ல? தள்ளுவண்டில்லாம் காணாம போயிருச்சி போல. நேதாஜி ரோடு முனியாண்டி விலாஸ்ல ஒரு முட்டை பொரோட்டாவும், ரெண்டு ஆம்லட்டு (வெங்காயம் தக்காளி போட்டு) ரெண்டு ஆப்பாயிலு சாப்டுட்டு, கீஷ்டு கானத்துல கேஸட்டு வாங்கிக்கிட்டு அப்படியே பொடி நடையா நடந்து ஜிகர்தண்டா இல்லாட்டி கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு நடந்து பெரியார் பாலத்து கீழ ரயில்வே க்ராஸிங்கத் தாண்டி ஜெய்ஹிந்து புரத்துக்கு நடந்தே போன காலம்லாம் ஞாவகத்துக்கு வருது சிவா!

இப்ப ஊருக்குப் போனாலும் "அக்கா" கடைல பொரோட்டா சாப்டாம வர்றதில்லைல்ல! :)

said...

சிவா அவர்களே!

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜிகர்தண்டா கோவையிலும் கிடைக்கிறது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே மதுரை இட்லிக் கடை என்று உள்ளது. அங்கே இதுவும் கிடைக்கிறது. சில மாதங்களுக்கு முன் பழனி சென்றபோது முதல் முறையாய் ருசித்தேன். பின்னர் கோவையிலும் தென்பட்டபோது உடனே வாங்கி அருந்தினேன்.

கோவையில் பாலக்காடு செல்லும் சாலையிலும் உக்கடம் தாண்டி சில கி.மீ தொலைவில் தள்ளுவண்டியிலும் வைத்து விற்கின்றனர். அவர்களிடம் வாங்கி அருந்தியபோது அதில் அடங்கியுள்ள மூலப் பொருட்கள், செய்முறைகள், மூலப் பொருட்கள் கிடைக்குமிடங்கள் பற்றியும் இதன் குளிர்ச்சி தன்மை, பயன்கள் பற்றியும் கூறினர்.

மதுரையில் இதன் மிகுதியான குளிர்ச்சித் தன்மையின் காரணமாக இதற்குள் ஐஸ் சேர்க்க மாட்டார்கள் என்றும் கூறினர். அதே போல் மூண்று வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கும் தருதல் கூடாது என்றும் எச்சரித்தனர்.

மற்றபடி கர்ப்பிணிப் பெண்கள் இதை அருந்துவது நல்லது என்றும் கூறினர்.
கடல் பாசியை நீரில் ஊறவைத்து தினமும் சிறிதளவு உண்டுவர பருமனான உடல் இளைக்கும்/தொப்பை குறையும் என்றும் கூறினர்.

நான் பேருந்து நிலையம் அருகில் செல்லும்போதெல்லாம் தவறாமல் அருந்துகிறேன்.

said...

//ஜிகர்தண்டா, நுங்கு பதினி, பனங்குருத்து, சுட்ட மக்காசோளம், தெருவோர புரோட்டாக் கடையில் புரோட்டா சால்னா மற்றும் மட்டன் பிரியாணி இவைகளை ஒரு கை பார்த்து விடுவேன்.//

சிவா, இந்த நுங்கு பதநீரும் கோவையில் கிடைக்கிறது. பனை ஓலையில் ஊற்றித் தரப்படும் பதநீர் இப்போதெல்லாம் வாரத்திற்கு மூன்று முறைகளுக்கு மேல் அருந்துகிறேன். சிறுவயதில் கிராமத்தில் இருந்தபோது ஒரு சொம்பு 25 பைசாவிற்கு என்று அருந்தியுள்ளேன். இப்போது ஒரு சொம்பு 5 ரூபாய் ஆகிவிட்டது.

said...

சுந்தர், நேதாஜி ரோடு முனியாண்டி விலாஸ் இதை ஞாபகப் படுத்தி காய்ந்து போன பர்கர் சாப்பிடுபவனை உசுப்பேத்திவிட்டீர்கள்.

said...

//கடல் பாசியை நீரில் ஊறவைத்து தினமும் சிறிதளவு உண்டுவர பருமனான உடல் இளைக்கும்/தொப்பை குறையும் என்றும் கூறினர்//

சிபி, இதை வீட்டில் காட்டினால் தினமும் ஜிகர்தண்டா நிச்சயம்

நன்றி

said...

கடந்த மாதம் பாலக்காடு சாலையில் ஜிகர்தண்டாவை என் மனைவிக்கு முதல் முறையாய் வாங்கி தரும்போதுதான் என் மனைவி விற்பவரிடம் இத்தனை விஷயங்களையும் கேட்டு சொல்ல வைத்தார். மற்றபடி நானெல்லாம் வாங்கி அருந்துவதோடு சரி! எனவே வீட்டில் இதை காட்ட தேவை இல்லை.

said...

அதே போல் இதை அருந்துவதால் உடலிற்கு அதிக அளவில் நீர் கிடைப்பதால் சிறுநீரகக் கற்களுக்கும் நல்லது என்றும் கூறுகின்றனர்.

said...

அன்புள்ள வலைபதிவாளர்களே,

ஜிகர்தண்டாவின் விளைவைப் பாருங்கள்.

நேற்றிரவு சூரியநாரயணாவின் சோகப் பதிவைப் போட்டுவிட்டு அடுத்த அரேபிய பதிவை போட கோபமாக அமர்ந்தேன்.

ஒரு கிளாஸ் ஜிகர்தண்டாவைக் குடித்ததும் ஜில்லென்று அதைப் பற்றி ஒரு பதிவு. அந்த ஜில் உலகம் முழுவதும் பற்றிக் கொண்டுவிட்டது.

என்னே ஜிகர்தண்டாவின் மகிமை.

ஜிகர்தண்டாவிற்கு ஒரு பேடண்ட் பதிந்து அதன் மூலம் வரும் வருமானத்தை மதுரை ஜிகர்தண்டா வியாபாரிகளுக்கு அளிக்கலாம்

said...

//என்னே ஜிகர்தண்டாவின் மகிமை//

ஆமாம். உண்மையோ உண்மை. இதுவரை உங்கள் பதிவுகளைப் பார்ப்பதோடு சரி என்று இருந்த என்னை பின்னூட்டமிட வைத்துவிட்டது பாருங்கள்.
:)

said...

சிபி, இந்த அகால வேளையில் என்ன செய்துக் கொண்டிருக்கீறீர்கள். நான் அலுவலகத்தில் அடுத்த மாதம் வரை டார்கெட் முடித்துவிட்டு பொழுதுப் போக்கிக் கொண்ட்டிருக்கிறேன்

said...

நான் என் அலுவலகப் பணிதான் செய்து கொண்டுள்ளேன். இரண்டு நாள் விடுமுறையை சொந்த ஊர் சென்று என்ஜாய் செய்தாயிற்று. நாளை டெலிவரி செய்யவேண்டியது இருக்கிறதே.

நீங்கள் கனடாவிலா இருக்கிறீர்கள்?
உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

said...

ஐயோ சிபி,

இதை என் வீட்டில் காட்டினால் எனக்கு ஜிகர்தண்டா தினமும் கிடைக்கும் என சொன்னேன்.

ராத்திரி இவ்வளவு நேரம் விழித்திருந்தால் தான் பேய்க் கதை எழுதவருமா?

said...

இன்று மதியமே கொஞ்சம் உறங்கியதால் இரவு விழித்திருந்தால் ஒன்றும் பிரச்னையில்லை. மேலும் வீட்டிலும் எனது துணைவியார் அவர்களுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே அலுவலகமே கதி என்று இருக்கிறேன். நானும் மாலையில்தான் நாமக்கல்லில் இருந்து புறப்பட்டேன். வந்து சேர்வதற்குள் 11.30 க்கு மேல் ஆகிவிட்டது.

மற்றபடி இப்போது பேய்க்கதையெல்லாம் எழுத வில்லை. குமர காவியம்தான் ஆரம்பித்த நிலையில் அப்படியே இருக்கிறது.

said...

//என்னுடைய மகனின் இயற்பெயர் சிபி !!! //

அப்படியா! மிக்க மகிழ்ச்சி! சிபி என்பது அருமையான பெயர். அதனால்தான் என் புனைப் பெயராக வைத்துக் கொண்டேன்.

said...

ஜிகர்தண்டாவுடன் சப்ஸா விதைகளையும் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டுப்பாருங்கள். சப்ஸா விதைகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயரோ?

அப்புறம் நம்ம தங்க ரீகல் தியேட்டர், அதன் எதிரே விற்கும் சூடான வழுக்கிக் கொண்டு போகும் அல்வா! மதுரையை நெனச்சாலே மனசு பறக்குதப்பா..

சிவகாசி கல்லூரியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் போது இரவு டவுன்ஹால் ரோட்டை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு அல்வா சாப்பிட்டுவிட்டுச் செல்வது வழக்கம், அப்படியே தங்க ரீகலில் ஜாக்கிஜான் படமும் பார்த்துவிட்டு... அடடா, என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கேம்ப்பா!!!!

கொத்தனாரே, நீங்களும் மதுரையா?

said...

சிவா சார்,

நமக்கு அண்ணா நகர்.. முந்தி ஸ்கூல் படிக்குறப்ப எல்லீஸ் நகர்.. பாலத்துக்கு அந்த பக்கம் / இந்த பக்கம்ன்னு 2 பக்கமும் இருந்திருக்கேன் :-). இந்த பதிவை படிச்சதும் நேதாஜி ரோடு ல இருக்குற முனியாடி விலாஸ் முட்டபரோட்டா, டபுள் ஆம்லேட், சால்னா, கோனார் கடை முட்டதோசை, கோரிபாளையம் அன்பகம் பிரியாணி, சுக்கா வருவல், தவிட்டு சந்தை பக்கம் இருக்குற இட்லி கடை & சுப்பர் சட்னி வகைகள், ஸ்ரீராம் மெஸ் எடுப்பு சாப்பாடு, திரு நகர் ரோட்டோர கடைல தின்னது, திருமங்கலம் ரோட்டு கடைல கிடைக்கிற சிலேன் பரோட்டா
, ஆரப்பாளையத்துல ஒரு கடை விடாம ஏறி இறங்குனது, மாணிக்க விநாயகர் முட்ட போண்டா, பாண்டியம் ஹோட்டல் பேஸ்ட்ரி -ஷாப் :-) (எதுக்கு ஸ்மைலின்னு சின்ன புள்ள தனமா யாரும் கேக்ககூடாது சொல்லிடேன்),.....

சொல்லி முடியிற லிஸ்ட்டா இது...

said...

கார்த்திக்,

மதுரை கோவில்களைப் பத்தி சொன்னாலும் பட்டியல் முடியாதுன்னு சொல்றீங்க. சாப்பாட்டைப் பத்தி சொன்னாலும் பட்டியல் முடியாதுன்னு சொல்றீங்க. இன்னும் இப்படி எத்தனை வகை சொல்லிமுடியாத பட்டியல்கள் கைவசம் இருக்கு? :-)

said...

//பாண்டியம் ஹோட்டல் பேஸ்ட்ரி -ஷாப் :-) (எதுக்கு ஸ்மைலின்னு சின்ன புள்ள தனமா யாரும் கேக்ககூடாது சொல்லிடேன்//

புரிஞ்சது ... மதுரைக்கு போன என் மகன் அங்கு போவான் ஹி..ஹி.. (என் மகனுக்கு 16 வயது)

said...

மகேஸ், சப்ஸா விதைகள் பஞ்சாபிக் கடைகளில் கிடைக்கிறது.

said...

//கொத்தனாரே, நீங்களும் மதுரையா?//

மகேஸ்,
நான் கல்லிடை (நெல்லை மாவட்டம்)

said...

//கொத்து பரோட்டாவை எப்படி பண்ணுவது என்று ஆராய வேண்டியதுதான்.//

உங்க கடையில மலேசியன் பரோட்டா கிடைக்கும். அதை வாங்கிக்குங்க.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடிசா நறுக்கி அதை கொஞ்சம் எண்ணை விட்டு, உப்பு, மிளகாய் பொடி, ஜீரா பொடி, மஞ்சள், மிளகுத்தூள் போட்டு வதக்குங்க. அப்புறம் கொஞ்சம் கறிவேப்பிலையையும் சேர்த்துக்குங்க. அப்புறம் ரெண்டு முட்டையை உடைச்சி விட்டு கிளறுங்க. அதுமேல நம்ம பரோட்டாவை சின்ன சின்னதா பிச்சு போட்டு நல்லா எல்லாம் ஒண்ணா சேரும் வரை கிளறி விடுங்க. அவ்வளவுதான்.

ஆகா, நானும் சமையல் குறிப்பு எழுதியாச்சு.

said...

சிவா,

ஏங்க, எட்டு டிகிரி யே ஜில் ஜில் தான்! அதுல ஜில் ஜில் ஜிகர் தண்டாவா....!!? மதுரைக்கு ஓகே! 38 டிகிரி சம்மர்லெ.


கீழ மர்கெட் வீதி/ காமராஜர் சாலை சந்திப்பில் இருக்கும் ஜிகர்தண்டாவை விட்டு விட்டீர்களே!!

//
நேதாஜி ரோடு ல இருக்குற முனியாடி விலாஸ் முட்டபரோட்டா, டபுள் ஆம்லேட், சால்னா, கோனார் கடை முட்டதோசை, கோரிபாளையம் அன்பகம் பிரியாணி, சுக்கா வருவல்,
//
கார்த்திக் ஜெயந்த், மதுரையா?

கோரிப்பாளயத்துல ஏது அன்பகம், கீழ வெளி வீதி அம்சவல்லிக்கும் முனிச்சலை சந்திப்பில் இருக்குறது தான் அன்பகம் மெஸ்!!

கேக்குரதுக்கே நாக்குல எச்சி ஊறுதே!! இதை எல்லாம் ஏங்க ஞாபகப் படுத்துரீங்க!! கனவுல எல்லாம் வரப்போகுது இப்போ!

சிலோன் புரோட்டா ன்னா வீச்சு புரோட்டா தானே!! ஆ ஹா!!

ஷங்கர்.

said...

//
அப்புறம் நம்ம தங்க ரீகல் தியேட்டர், அதன் எதிரே விற்கும் சூடான வழுக்கிக் கொண்டு போகும் அல்வா! மதுரையை நெனச்சாலே மனசு பறக்குதப்பா..
//

லாலா மிட்டாய்க்கடை அல்வா தானே!! வாயி வைத்தாலே வழுக்கிககொண்டு வயிற்றில் போய் விழுந்துவிடும்!!

//
அல்வா சாப்பிட்டுவிட்டுச் செல்வது வழக்கம், அப்படியே தங்க ரீகலில் ஜாக்கிஜான் படமும் பார்த்துவிட்டு... அடடா, என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கேம்ப்பா!!!!
//

யாருக்கு அல்வா கொடுக்குறிங்க! தங்க ரீகல் தியேட்டர்லெ இப்பல்லாம் ஜாக்கி சான் படமா போடுறாங்க!

ஷங்கர்.

said...

ஷங்கர்,

இரு மாதங்களுக்கு முன் -35 இப்போ +8. வேர்க்குதுப்பா

said...

குமரன்,

இப்படி லிஸ்ட் நம்ம ஊர் பத்தின பதிவு வரும்போது தானா வருது :-) . தவிர கடைல கொஞ்சமா வேலை வேற இருக்குறதுனால அந்த தொல்லை வேற இருக்கு. இந்த மாதிரி ஒரு பதிவு லீவு நாள்ல வந்தா எங்கையும் போகாம உக்காந்து எழுதி தள்ளிடுவேன்ல :-)

சிவா சார்,

// புரிஞ்சது ... மதுரைக்கு போன என் மகன் அங்கு போவான் ஹி..ஹி..

-ஆஹா.. இப்படி புடிச்சிடேங்களே :-). இருந்தாலும் நான் அங்க பேஸ்ட்ரி சாப்பிட மட்டும்தான் போனேன் அப்படின்னு சபைல தன்னடக்கத்துடன் சொல்லிகொள்கிறேன். நம்ம சிபியையும் அப்படியே இருக்க சொல்லுங்க

கொத்ஸ்,

முட்ட பரோட்டா மேல ஊத்துற சால்னாவுக்கு என்ன செஞ்சிங்க ? .அது இல்லாம 100 % ஆகாதே ?

சங்கர் நாராயணன்,

நானும் மதுரைதான் :-).. நீங்களும் மதுரையா ?

//கோரிப்பாளயத்துல ஏது அன்பகம்,

அந்த பாலத்துக்கு பக்கத்துல ஒரு பெட்ரோல் பங்க் வரும். அதுக்கு அடுத்த மாதிரி ஒரு ரோடு போகும். அந்த ரோட்ல இருக்கு.. சின்ன கடைதான்.. ஆனா டேஸ்ட் சூப்பர். அதோட பிராஞ்ச் கோரிபாளையம் பஸ்ஸ்டாப் என்.எம்.ஸ் பேக்கரிக்கு முன்னால இருக்கு.. அப்படியே தான்டி போனா அம்மா மெஸ்.

// கீழ வெளி வீதி அம்சவல்லிக்கும் முனிச்சலை சந்திப்பில் இருக்குறது தான் அன்பகம் மெஸ்!!

இது வேற. இதுவும் நல்லா இருக்கும் :-)

// சிலோன் புரோட்டா ன்னா வீச்சு புரோட்டா தானே

ஆமாம்.. அப்படியே வண்டிய கொஞ்சம் அழுத்துனா வரும் பர்மா கடை(விருதுநகர்ல) அங்க டேஸ்ட் வேற.. இந்த பரோட்டாவ 4 வாங்கி அதுல நல்லா மட்டன் சால்னாவ உத்திக்கிட்டு சைட்ல ஒரு புறா இல்ல காடை ரோஸ்ட் கூட சாப்பிடுங்க. நல்லா இருக்கும். ஆம்லேட் உங்க இஷ்டம்

said...

போலிடோண்டு ரசிகர் மன்றம் சார்பாக உன்னை கண்டனம் செய்கிறோம்.

போலிடோண்டு ரசிகர்மன்றம்,
கால்கரி,
கனடா.

said...

போலி தோண்டு ரசிகர்களே, ஜிகர் தண்டாவில் என்ன இருக்கிறது கண்டிக்க.

ஒரே ஒரு கிளாஸ் தான்பா அதுவும் நேத்திக்கு சாப்டது இன்னும் கோவம் வரலே.

அங்கெ 22 பேரை நிக்க வச்சு சுட்டாங்களே அதுக்கு வவுறு எரியுது. அதைக் கண்டிச்சிப் பதிவு போடுவேன்.

உங்க கண்டனம் எல்லாம் குப்பை. அதுக்கு வேற ஆளைப் பாரு. நான் மதுரக்காரன்டி

said...

உண்மையிலேலே சொல்லுறேங்க,தங்க ரீகலில் ஜாக்கிசான் படம் தான் பார்த்தேன். நான் மதுரையைச் சுற்றியது 1995 முதல் 1998ம் ஆண்டுவரை. அப்பல்லாம் தங்கரீகல் தியேட்டர் முன்னாலே ஜிகுஜிகுன்னு ஜிகுனாப்பேப்பர் வச்சு கட்அவுட் வச்சிருப்பாங்க. அத டவுன் பஸ்லேருந்து பார்த்தவுடனேயே, என் கால் தன்னப்போல அடுத்த ரயில்வே ஸ்டேசன் ஸ்டாப்புல இறங்கிரும்.

said...

எல்லாம் சொல்லி லிஸ்ட் போட்ட ஆளுக st.mary'sக்குப் பக்கத்தில், மிஷன் மருத்துவமனைக்கு எதிர்த்தாற்போல் உள்ல பர்மா இடியாப்பக் கடையை விட்டுட்டீங்களே...ஒருவேளை இது கொஞ்சம் லேட்டா லிஸ்ட்ல சேர்ந்த கடை என்பதாலோ!

said...

தருமி சார்,

மிஷன் ஆஸ்பத்திரி ஜெஸினா காண்டீன் மறைந்து தம் அடிக்க ஏதுவான இடம். இன்னும் இருக்கா?

பர்மா இடியாப்பம்? எனக்கு நினவுதெரிஞ்சு இல்லை

said...

ஊர் பெரியவங்களே வணக்கமுங்க ,

//பர்மா இடியாப்பக் கடையை விட்டுட்டீங்களே...

அந்த பக்கத்துல மிஷன் ஆஸ்பத்திரி முன்னால இருக்குற இட்லி கடைதான் எனக்கு தெரியும். அதுவும் இப்ப இருக்கான்னு தெரியல.. அதே மாதிரி அங்க ஒரு முனியாண்டி விலாஸ் கடையும் இருக்கும்..இன்னும் இருக்கான்னு தெரியல..

மகேஸ்,

தங்கரீகல்ல படமா.. தெரியும் பாஸு நீங்க என்ன சண்டை படத்தை பாத்திருபிங்கன்னு :-).இப்படித்தான் ஊருக்குள்ள ரொம்ப பேரு சொல்லிகிட்டு திரிவானுக..

சும்மா தாமஸு..

ஆனா அந்த போஸ்ட்டர பாத்து எமாந்து போகதீங்க சொல்லிட்டேன்..

said...

அதானே....எனக்கு விவரம் புரிஞ்சதே தங்க ரீகல் (ரீகல் தியேட்டரா இருக்கிறப்ப) போஸ்டரெல்லாம் பாத்து தானே....

போஸ்டரை மட்டும் தான் பாத்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க?

said...

//ஆனா அந்த போஸ்ட்டர பாத்து எமாந்து போகதீங்க சொல்லிட்டேன்..//

அனுபவம் பேசுதுடோய்.

said...

//அனுபவம் பேசுதுடோய். //

பின்ன! பேராசிரியருக்கு என்ன வயசு! வயசுக்கேத்த அனுபவம் இருக்காதா என்ன?

said...

//அனுபவம் பேசுதுடோய்.

//பின்ன! பேராசிரியருக்கு என்ன வயசு! வயசுக்கேத்த அனுபவம் இருக்காதா என்ன?


நான் மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் மாதிரி தான் இருந்திருக்கிறேன்னே தவிர வண்டியூர் முருகனா இருந்ததில்லை என்று மறுபடியும் சபையில் தன்னடக்கத்துடன் சொல்லி கொள்கிறேன்

said...

மதுர காக்கா , நன்றி

said...

//
அந்த பக்கத்துல மிஷன் ஆஸ்பத்திரி முன்னால இருக்குற இட்லி கடைதான் எனக்கு தெரியும். அதுவும் இப்ப இருக்கான்னு தெரியல.. அதே மாதிரி அங்க ஒரு முனியாண்டி விலாஸ் கடையும் இருக்கும்..இன்னும் இருக்கான்னு தெரியல..
//

2005 ல் (வீட்டிற்குச் சென்ற போது).

மிஷன் ஆஸ்பத்திரி இடியாப்பக் கடை, ஆஸ்பத்திரிக்கு எதிர் பக்கம் கடை போட்டு "யாவாரம்" ஜோரா நாடக்குது.

முனியாண்டி விலாஸ், பாண்டியன் கூட்டுறவு அங்காடிக்கு பக்கதுல கொஞ்சம் டீசண்டா கடைய மாத்தி இன்னும் அங்க தான் இருக்கு. அதே டேஸ்டு.

//
மிஷன் ஆஸ்பத்திரி ஜெஸினா காண்டீன் மறைந்து தம் அடிக்க ஏதுவான இடம். இன்னும் இருக்கா?
//

சிவா,
இன்னும் இருக்கு, அந்த கேண்டீன். மறைவான இடமும் இருக்கு.!!

இதெல்லாம் பார்க்கும் போது, மதுரை உணவுவிடுதிகள் ன்னு சிறப்பு பதிவு போடனும் போல இருக்கு, ஆனா இப்போதைக்கு டைம் இல்லை. இரண்டு மாதங்களில் மதுரை போக வாய்ப்பு இருப்பதால் போட்டோ உடன் பதிவு போடுகிறேன்.

ஷங்கர்.

said...

யாராவது எல்லா உணவு விடுதிகளையும் சேர்த்து ஒரு பதிவு போடுங்க..

சிவா, நான் இப்போ தான் சமீபத்துல மதுரை போனப்போ இந்த ஜிகிர்தண்டா சாப்பிட்டேன்.. ரொம்ப நல்லா இருந்துச்சு.. ஆனாலும் ஒரு சந்தேகம், இது வி யா? நா.வி யா? கடல் பாசி அது இதெல்லாம் சொல்றீங்களே.. (சாப்பிட்டதுக்கப்புறம் என்ன சந்தேகம்னு கேக்காதீங்க.. வி. யா இருந்தா, வீட்லயும் செஞ்சி பாக்கலாம் ;) )

said...

பொன்ஸ், கடல்பாசி 100% வி தான். இது மரத்திலிருந்து (எந்த மரம் என்று தெரியவில்லை) எடுக்கும் ஒரு பிசின்.
உங்கள் வலைப்பதிவிலிருந்து சென்னையில் இருப்பதாக தெரிந்துக்கொண்டேன். சென்னையில் கடல் பாசி கிடைப்பது அரிது. நீல்கீரிஸில் டிரை செய்யவு..

என்னுடைய சென்னை உணவு விடுதி அனுபவங்களை எழுதினால் அது சாரு நிவேதிதா வை காப்பி அடித்தது போல் இருக்கும். ;)

said...

பொன்ஸ், கடல் பாசிக்கு வேறு பெயர் வாதாங் கோந்து. நல்ல வெள்ளையாக இருக்கும், பழுப்பு நிறமாக இருப்பதை வாங்க வேண்டாம்.

said...

//(எந்த மரம் என்று தெரியவில்லை) எடுக்கும் ஒரு பிசின்//

சிவா, அது பாதாம் மரத்திலிருந்து எடுக்கப் படும் பிசின்தான்.
எனவே முழுக்க முழுக்க சைவமே!

said...
This comment has been removed by a blog administrator.
said...

என்ன சிவாண்ணா,

100 வராம விடப் போறது இல்லையா? :)

சரி நடத்திடுவோம்.

said...

கடல் பாசி "கடுக்காய்" போன்ற நாட்டு மருந்துகள் விற்கும் கடைகளில் கிடைக்கும் என்று அறிகிறேன்.

said...

இலவசம்,

நிங்கெள்ளாம் தோனி தலமுறை. பத்து ஒவர்லே 100 சாத்திடுவிங்க.

நாங்க கவாஸ்கர் ஜெனரேஷன். ஸ்லோதான்

said...

அண்ணா,

நான் வேகம் பத்தி எல்லாம் பேசலையே. உங்களுக்கு ஒரு எண்ட்ல நின்னு சப்போர்ட் தரேன்னு சொன்னேன். அவ்வளவுதான்.

said...

அந்தப் பக்கம் கொத்ஸ் இருக்காக!
இந்தப் பக்கம் சிபி இருக்காக!

வாம்மா 100!

said...

சிபி, அந்தப் பக்கம் அவரு இந்த பக்கம் நானு நீங்க என் by-runner ஆ. இல்லே ஆடரகேம் base ball ன்னா இன்னும் ஒருத்தர் வேணுமில்லே

said...

அட! நான் உங்க பை ரன்னர் தானுங்கோ!

said...

ஜிகர்தண்டா பற்றிய மேலதிக தகவல்கள் அறிய விரும்புவோர்

www.jigardhandaa_apr01.org/receipie

பார்க்கவும்.

:-)

said...

சிபி, நானும் நிஜமான சைட்டுன்னு ஏமாந்துட்டேன்

said...

¸¡ø¸Ã¢ º¢Å¡,

±ýɼ¡ þó¾ ¸¡ðÎô À ¬§Ç ¸¡½§Á «ôÀÊýÛ
§Â¡º¢îº¢ÕôÀ£í¸...§Äð ¬ Åó¾Öõ...´Õ ¯Â¢Ã ¸¡ôÀ¡ò¾ ÅóÐð"¦¼ý' À¡÷ò¾£í¸Ç¡...

¿¡§É ¾¡ý...

said...

என்னங்க என்னதான் நாம நல்ல பேட்ஸ்மனா இருந்தாலும் யாருமே பால் போடலைன்னா எப்படி? எதாவது ஒரு சொத்த டீமை கூட்டிக்கிட்டு வாங்க. காஜ் அடிக்கலாம்.

அப்படி யாருமே வரலைன்னா சிபி கிட்ட சொல்லுங்க, அவரு அந்த வெட்டிப்பசங்க சங்கத்திலேர்ந்து ரெண்டு பேரைக் கூட்டிக்கிட்டு வருவாரு.

said...

தெகா சார் சொன்னது என்னவென்றால்

கால்கர் சிவா

என்னடா இந்த காட்டு பய ஆளே காணமே அப்படின்னு யோசிச்சிருப்பீங்க... லேட் ஆ வந்தாலும் ஒர் உய்ர காப்பாத்த வந்து"டென்" பார்த்தீங்களா....

நானே தான்....

said...

//அப்படி யாருமே வரலைன்னா சிபி கிட்ட சொல்லுங்க, அவரு அந்த வெட்டிப்பசங்க சங்கத்திலேர்ந்து ரெண்டு பேரைக் கூட்டிக்கிட்டு வருவாரு.//

கொத்ஸ்,
இதான வாணாம்ங்கறது! ஏன் நீங்க போதாதா நீங்க சொன்ன அந்த சங்கத்திலிருந்து! நான் வந்து கூப்பிடணுமாக்கும்!

said...

சங்கமெல்லாம் நீர்தான் சிபி. நாங்களெல்லாம் கட்சி / கழகம். சொல்லிப்புட்டேன்.

said...

அய்யா இலவசம்,

சங்கங்கள் தான் முதிய கட்சி / கழகங்கனை அரியனையில் கழகங்களை தாங்கும் தூண் என்பதை மறக்கவேண்டாம். இந்த ரகசிய ஒப்பந்தம் இந்தனை சிக்கிரம் நீங்க மறந்தது எனக்கு ஆச்சர்யம் இல்லை.. என்னா வயசாகுதுல்ல அதான்

சும்மா ஒரு 3 பேரு சவுண்ட் விட்டா பத்தாது.

said...

சிவா,

நல்ல சுவரசியமாக இருந்தது!!

நன்றி

said...

ஆமாங்க சிவா. நான் சென்னைல தான் இருக்கேன்.

சென்னை கடலுக்கு இவ்வளவு பக்கத்துல இருக்கு, இங்க கடல் பாசி கிடைக்காதுன்னு சொல்றீங்களே!!

said...

//சென்னை கடலுக்கு இவ்வளவு பக்கத்துல இருக்கு, இங்க கடல் பாசி கிடைக்காதுன்னு சொல்றீங்களே!!
//

கடலுக்கும் இந்த கடல் பாசிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை பொன்ஸ்!

பாதாம் மரத்து கோந்துதான்(பிசின்) இந்த கடல் பாசி என்பது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இதை சிறைதளவு எடுத்து தண்ணீரில் ஊறப் போட்டாலே மிக அதிகமாக ஜிகர்தண்டாவில் கலந்திருக்கும் கடல் பாசி கிடைக்கும்.

முயற்சி செய்து பார்க்கவும். வாழ்த்துக்கள்.
கிடைக்காவிட்டால் சொல்லுங்கள்.

said...

//சிவா, அது பாதாம் மரத்திலிருந்து எடுக்கப் படும் பிசின்தான்.
எனவே முழுக்க முழுக்க சைவமே! //

அப்பாடா.. இந்த வாரம் நீல்கிரீஸ்ல போய்ப் பாக்க வேண்டியது தான்..

கொத்ஸ் கவனிக்க, இந்த செய்முறையை 'நானே' செய்வதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.. நீண்ட காலத் திட்டம் எல்லாம் இல்லாம :)

said...

//இந்த வாரம் நீல்கிரீஸ்ல போய்ப் பாக்க வேண்டியது //

நீல்கிரீஸ் எல்லாம் சந்தேகம்தான் பொன்ஸ்! நாட்டு மருந்து கடையில் முயற்சி செய்யுங்கள்!

said...

பொன்ஸ்,

நீங்க ஒரு ஜிகர்தண்டா குடுத்து ரங்கமணியை கவுக்கப் போடற திட்டம் எங்களுக்கு நல்லாவே தெரியும்.

said...

//நீங்க ஒரு ஜிகர்தண்டா குடுத்து ரங்கமணியை கவுக்கப் போடற திட்டம் எங்களுக்கு நல்லாவே தெரியும்.
//

அப்படி ஏதாவது 'சதி' தான் செய்யணும்.. ஆனா, இந்த முறை சோதனை முயற்சி.. அடுத்த முறை ரங்கமணிக்கு குடுக்கலாம்

said...

ரங்கமணி என்பவர் யார்?

said...

சிவா, கார்த்திக்,
மிஷன் ஆஸ்பத்திரி ஜெஸினா காண்டீன் மறைந்து தம் அடிக்க ஏதுவான இடம். இன்னும் இருக்கா?//
நாங்கல்லாம் ரொம்ப ராயல் பார்ட்டி தெரியுமில்ல. நாங்க திருட்டுத் தம் அடிக்கிறதெல்லாமே எங்கன்னு தெரியணும்னா இங்க வந்து பாருங்க!

முனியாண்டி இன்னும் அங்க தான் இருக்காரு.

said...

சிவா, கார்த்திக்,
"மிஷன் ஆஸ்பத்திரி ஜெஸினா காண்டீன் மறைந்து தம் அடிக்க ஏதுவான இடம். இன்னும் இருக்கா?" //
-- நாங்கல்லாம் ரொம்ப ராயல் பார்ட்டி தெரியுமில்ல. நாங்க திருட்டுத் தம் அடிக்கிறதெல்லாமே எங்கன்னு தெரியணும்னா அங்க போய் பாருங்க!

முனியாண்டி இன்னும் அங்க தான் இருக்காரு.

said...

தருமி, உங்க பதிவிலே ரீகல் தியேட்டரெல்லாம் இருக்கு. எனக்கு எங்க அப்பா நினைப்பு வந்துவிட்டது. அவர் ரீகல்/நியூ சினிமாவில் சிறிது காலம் டிக்கட் கவுண்டரில் வேலைச் செய்துக் கொண்டிருந்தார். அதனால் 'சீன்' இல்லாத எல்லாப் படங்களையும் ஓசியில் பார்த்துள்ளேன்

said...

95.சென்சுரி அடிக்க வாழ்த்துக்கள்

said...

96.சென்சுரியை நோக்கி

said...

97.மூன்றே ரன் தான் பாக்கி

said...

98.இரண்டு பின்னூட்டம் தான் வேண்டும் சென்சுரிக்கு

said...

99.வந்தாச்சு,வந்தாச்சு

said...

100 பின்னூட்டம் பெற்று சதம் அடித்த சிவாவுக்கு வாழ்த்துக்கள்

said...

//ரங்கமணி என்பவர் யார்?//

சதமடிக்க முயற்சி! வாழ்த்துக்கள்!

said...

//அப்படி ஏதாவது 'சதி' தான் செய்யணும்.. ஆனா, இந்த முறை சோதனை முயற்சி.. //


பொன்ஸ் கூட்டத்தாரின் சதியாலோசனைகள் அம்பலம்

said...

//நீங்க ஒரு ஜிகர்தண்டா குடுத்து ரங்கமணியை கவுக்கப் போடற திட்டம் //

வ.வா.சங்கத்தினருடன் சதியாலோசனையில் ப.ம.க.வினரும் உடந்தை என்பதற்கு இதுவே ஆதாரம்.

said...

இன்னும் ஒரே ஒரு ஃபோர் அடிச்சா போதும் சிவா! செஞ்சுரி ஆகிடும்!
எனிவே மறுபடியும் வாழ்த்துக்கள்!

said...

அட! நான் ஒரு சிங்கிள் அடிச்சிட்டனா? அப்போ இன்னும் மூணு இல்லையில்லை ரெண்டு (இது இல்லாமல்) அடிச்சா போதுமே!

said...

ம். பார்ப்போம் யாரு வந்து செஞ்சுரி அடிக்கப் போறாங்கன்னு!

கொத்ஸ், பொன்ஸ் யாருமே இல்லையா?

said...

சரி! அப்ப நானே அடிச்சிடறேன்! இந்தா பிடிங்க சிவா!

100! வாழ்த்துக்கள்!

ஜில் ஜில் ஜிகர்தண்டாவில் செஞ்சுரி போட்ட கால்கரி சிங்கமே! வாழ்க!

(சங்கத்துல ஐக்கியமாடனும் சொல்லிட்டேன்)

said...

108 அடிக்கவைத்த அனைவருக்கும் நன்றி. அதில் இலவசத்திற்கும் நாமக்கல்லும் செலவனுக்கும் நன்றி .... நன்றி.

said...

முதல் பின்னூட்டம் யார் போட்டது? அந்த ராசி தான் 100+ பின்னூட்டம் வாங்கியிருக்கு இந்தப் பதிவு. பேசாம நீங்க மதுரையைப் பத்தி மட்டும் பேசிக்கிட்டு இருக்கலாம். நல்ல வரவேற்பு இருக்கும். என்ன சொல்றேன்னு புரிஞ்சிருக்கும் இல்லையா சிவா அண்ணா? :-)

said...

குமரா, நீங்க ஆரம்பிச்சி வச்சிங்க 100 வந்தது.

புரியுது..புரியுது. புலி வாலை பிடிச்சிட்டேன் கூடிய சீக்கிரம் விட்டுடுவேன்.
அடுத்து மதுரை, மெட்ராஸ், கிளிதான்

said...

சிவாண்ணா,

நினைத்ததை சாதித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். ட்ரீட் எல்லாம் நேரில். கொத்து பரோட்டாவும் ஜிகர்தாண்டாவும் குடுத்து ஏமாத்தக் கூடாது. ஹிஹி.

said...

மதுரையை பற்றி மட்டும் எழுதினால் போதுமா?எங்கள் கோவையை பற்றியும் எழுத வேண்டுமாக்கும்.

said...

Free Mason (இலவச கொத்தானாரின் ஆங்கிலாக்கம்)

மரங்கொத்தி கிடைக்காவிட்டால் அதற்கு சமமான வேறு ப்ராண்ட் நிச்சயம் உண்டு. கால்கரியில் வீதிக்கு ஒரு சாரய கடை இருக்கிறது

said...

செல்வன், கோயம்புத்தூர் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை

said...

கால்கரி சிவாவை ஜிகர்தண்டா சிவான்னு மாத்திடலாம்.

said...

மகேஸ், ஜிகர்தண்டா பிரபலமானதுதான்.

நான் கால்கரியை பிரபலமாக்க முயல்கிறேன் ஹி..ஹி...

said...

//கால்கரி சிவாவை ஜிகர்தண்டா சிவான்னு மாத்திடலாம்.
//

ஜிகர்தண்டா சிவா!
என்ற பெயரை நான் வழிமொழிகிறேன்!

(புலிவாலை எப்போது விடுவீர்கள்?)

said...

நானும் பார்த்திபனை வழிமொழிகிறேன். இரண்டிலுமே. ஜிகர்தண்டா சிவா அண்ணா, எப்போது புலிவாலை விடப்போகிறீர்கள்? :-)

said...

என்னப்பா இது மதுர காரங்க எல்லாம் ஒண்ணு கூடி ஜிகர் தன்டாவ மதுரக்கே பட்டா போட்டு தந்துருவிங்க போல இருக்கே.இங்கே சிங்கார சென்னைலும் உண்டுங்கோ..... மரினா பீச் பக்கம் போனா நடமாடும் குளிர் பான வண்டில இருக்கும்.

அது சரிங்கண்ணா இம்மாம் பேசுரிங்க.... ஜல் ஜீரா போட்டு லேசா பாதி எலும்ச்சம் பழம் லாம் புழிஞ்சு விட்டு மசாலா தம்ஸ் அப்,பெப்ஸி,கோகா கோலா, குடிச்சு இருக்கிங்களாண்ணா.... ஆஹா இனிப்பும் புளிப்புமா இருக்கும் அது. செரிமானத்துக்கு ரொம்ப நல்லதுங்கண்ணா !பேல் பூரி, மசாலா பூரி சாப்பிட்ட பிறகு இத குடிச்சா நல்லா இதமா இருக்கும்! வட இந்திய சாட் நொறுக்கு தீனி கடைல கிடைக்கும் ,சோடா கூட வும் கலந்து சாப்பிடலாம்.எவெரெஸ்ட் மசாலா பொடி தயாரிப்புல ஜல் ஜீராவும் இருக்கு 20 ரூபா தாங்கண்ணா! வாங்கி நாமே தயார் பண்ணி குடிக்கலாம்.

ஒரு தடவை அடிச்சி பாருங்கண்ணா சொக்கிப் போய்டுவிங்க!

said...

சிவா சார்,

வ.வா.ச வாழ்த்துகிறது

*****************
போஸ்ட்டர்
*****************

ஜில் பதிவு போட்டு 100 அடித்த சிவா

வாழ்க !

புலி வாலை விட்டு சிக்கிரம் வருக !

வளமான பதிவுகளை தருக !

இப்படிக்கு,
கார்த்திக் - வட அமெரிக்கா கிளை


இன்னும் இந்த மாதிரி நிறைய மதுரை & சாப்பாடு பத்திய பதிவுகளை எழுதவும்

said...

வழக்கில் திடீர் திருப்பம் - நீதிபதி மாற்றப்பட்டதின் பின்னணி என்ன?

நீங்கள் புலிவாலை விட்டாலும் புலி வால் உங்களை விடாது போலிருக்கிறது!
ஜில் ஜீரா சோடா பற்றி இன்னும் 100 பின்னூட்டங்களில் விரிவாக விவாதிக்கல்லாம். ரொம்ப ஆரொக்கியமான விவாதம்தான்.

said...

குமரன் உங்கள் மீதும் வழக்கு சுமத்தப் பட்டுள்ளது.

வழக்கில் திடீர் திருப்பம் - நீதிபதி மாற்றப்பட்டதின் பின்னணி என்ன?

said...

சிவா நீ,
புலிவால் பிடித்த புத்திசாலி,
ஜிகர்தண்டா குடித்த சிந்தனைவாதி,
மதுரை கண்டெடுத்த மாமேதை

மேலும் எப்படியெல்லாம் சொல்லிக் கவுக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். :))))

said...

http://templevisitsofashok.blogspot.com/2007/05/trip-to-tiruppovanam-thirupuvanam.html

read this recent post of mine for jigardanda

said...

//நன்னாரி சர்பத் மதுரையில் கிடைத்துக்கொண்டிருந்த ஒண்டிபிலி மற்றும் நந்தாராம் சர்பத்தின் சுவை மற்றும் தரமிருந்தது (மதுரை வலைப்பதிவாளர்களே இந்த சர்பத்துகள் இன்னும் கிடைக்கின்றனவா?)//

என்ன கேள்வி கேட்டு புட்டிக...வெண்கல கடை தெருவுல கடைகுதுங்க.

said...

ஜிகர் தண்டா சூப்பர்,

வாங்க என் பக்கமும்,கொத்து பரோட்டா, முர்தபா கடல் பாசி, வகைகள் வித விதமாக சாப்பிடலாம்