Saturday, May 20, 2006

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 2


ஒஷோ தொடர்கிறார்....

எனக்கு ஒரு அருமையான நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. காலிப் ஒமார் என்று ஒருவர் இருந்தார். காலிப் என்பது முகமதியர்களின் போப். காலிப் ஒமார் ஒரு நல்ல மனிதர். பண்பாளர். இவர் சமயதலைவர் மட்டுமல்ல, அந்த பகுதியின் மக்களின் தலைவராகவும் இருந்தார். ஒரு நாள் அவருடைய படைவீரர்கள். ஒருவனை அழைத்துவந்தார்கள். அவன் செய்த தவறு அவன் தன்னை கடவுள் அனுப்பிய புத்தம் புதிய தேவதூதன் என கூறியது. ஒரு முஸ்லிம் நாட்டில் அவ்வாறு சொல்பவர்க்கு மரணதண்டனை நிச்சயம். முகமது நபிகளார் கடவுளின் கடைசி தூதர் என்பது முகமதியர்களின் அசையாத நம்பிக்கை. அந்த நாட்டில் இப்படி ஒருவனா?. காலிப் ஒமார் அவர்கள் அவனை ஒரு வாரம் சிறையில் அடைக்கும் படியும் அந்த ஒருவாரத்திற்குள் அவன் மனம் மாறிவிட்டால் அவனை விடுதலை செய்யுமாறும் இல்லையென்றால் தலையை கொய்யவும் உத்தரவிட்டார்.

ஒரு வாரம் சிறையில் அவனை மிக அதிகாமாக சித்திரவதை செய்தனர். அவனை நிர்வாணமாக்கி அடித்த அடியில் அவன் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தான். அவனை மற்றக் கைதிகளுடன் வரிசையாக ஒரு கம்பத்தில் கட்டினர்

காலிப் ஒமார் அவர்கள் அவனிடம் வந்து " இப்போதும் நீ கடவுளின் தூதுவன் என சொல்கிறாயா?" என வினவினார்.

அதற்கு அவன் " ஒமார், இப்போது தான் நான் கடவுளின் தூதர் என மேலும் நம்புகிறேன். ஏனென்றால் கடவுள் என்னிடம் உன்னை அடித்து துன்புறுத்துவார்கள் என ஏற்கனவே சொல்லியிருந்தார். ஆகையால் நான் கடவுளின் நிச்சயமான புதிய தூதுவன்" என்றான்

காலிப் ஒமார் வாயடைத்து நின்றுவிட்டார் . அப்போது பக்கத்து கம்பத்தில் இருந்த கைதி " ஒமார், அவனை நம்பாதே... நான் அவனை என் தூதுவனாக அனுப்பவே இல்லை" என்றான். இந்த கைதி தனனை கடவுள் என்றழைத்துக் கொண்டதால் ஒரு மாதமாக சிறையில் சித்திரவதைகளை அனுபவிப்பவன்.

இந்த மனிதர்கள் அதிகாரவெறி பிடித்த மனநோயாளிகள் இவர்களை ஆங்கிலத்தில் இவர்களை megalomaniac என்பார்கள். இவர்கள் எல்லாரையும் விட உயர்ந்த அதிகாரத்தில் இருக்கவேண்டும் என விரும்புவார்கள். இவர்கள் ஒரு நாட்டின் அதிபராகவோ, மன்னராகவோ, முதன் மந்திரியாகவோ இருக்க கனவு காண்பர். ஆனால் அது மிக கஷ்டமானக் காரியம். எவ்வளவு ஜகஜ்ஜால வேலைகள் செய்யவேண்டும் . அதிக போட்டிகளை தாண்டி வரவேண்டியிருக்கும். தேர்தல்கள், வாக்குறுதிகள், அலைச்சல்கல், அவமானங்காள், சிறைகள், விசாரணைக் கமிஷன்கள் இவ்வளவையும் தாண்டி தலைவன் ஆக வேண்டும்

ஆனால் தேவதூதர் ஆவதற்கு வெகு சுலபம். தேர்தல் இல்லை, யாருடைய உத்தரவும் தேவையில்லை.

நீங்கள் ஒரு புத்தக்த்தை எழுத வேண்டும் அதில் நீங்கள் தான் தேவதூதர் என உறுதி செய்ய வேண்டும்.

இங்கே ஒரு "சார்நிலை உண்மை" விவாதத்தை காண்லாம். பைனரி கணிதத்தில் சில தேற்றங்களை நீருப்பிக்க இந்த முறை பின் பற்றப் படுகிறது.

புத்தகம் உண்மையானது ஏனென்றால் இது ஒரு தேவதூதரால் எழுதப் ப்ட்டது. நீங்கள் தேவதூதர் ஏனென்றால் இந்தப் புத்தக்த்தில் உள்ளது.

இயேசுநாதர் ஒரு தேவதூதர் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் உள்ளது. இவர் தேவதூதர் என நீருப்பிப்பத்ற்கு கிறித்தவர்கள் புதிய ஏற்பாட்டை அணுகுவார்கள். ஆனால் புதிய ஏற்பாடோ யேசுவின் வார்த்தைகள் தான்.

Do you see the circular argument?


சிலுவையில் அறைந்து கொல்லக் கூடிய அளவிற்கு யேசு மோசமானவர் இல்லை. அவர் செய்த ஒரே குற்றம் அவர் தன்னை தேவதூதர் என்றழைத்துக் கொண்டது. அவர் தேவ்தூதர் என்றழைத்துக் கொண்டதால் யாருக்கும் ஒரு தீங்கும் நேரவில்லை. அவ்வாறு அழைப்பது அவரின் உரிமை.

ஆனால் யூதர்களுக்கு இது பொறுக்கவில்லை. இதில் உள்ள் தத்துவத்தையும் இதன் பின்னால் உள்ள் சரித்திரதையும் சற்று உற்று நோக்கவேண்டும்.

இயேசுநாதரை சிலைவையில் அறைய் காரணமாய் இருந்தவர் மோசஸ்.

நான் : என்ன ஒஷோ அவர்களே புதுசாய் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீகள்? இருவர் இருந்த காலங்கள் வேறு வேறு அல்லவா?

ஒஷோ: ஆம் சிவா, மோசஸ் யேசுவிற்கு 3000 வருடத்திற்கு முற்பட்டவர். ஆனால் நான் யாரும் சொல்லாததை சொல்கிறேன்.

யேசுவை சிலுவையில் அறையக் காரணம் மோசஸ்தான்.... அதற்கு இரு காரணங்கள் உள்ளன்.....

தொடரும்

17 comments:

said...

//இவர் தேவதூதர் என நீருப்பிப்பத்ற்கு கிறித்தவர்கல் புதிய ஏற்பாட்டை அனுகுவார்கள். ஆனால் புதிய ஏற்பாடோ யேசுவின் வார்த்தைகள் தான்.
//

புதிய ஏற்பாட்டின் மூன்று பகுதிகள் மத்தேயு மார்க் லூக்கா ஏசுவின் காலத்திற்கு பிற்பட்ட மனிதர்களால் எழுதப்பட்டது. ஜான் தந்து சுவிசேஷத்தில் கடைசி அத்தியாயத்தின் இறுதியில் அவர் எழுதிய அனைத்தும் ஒரு நண்பர் சொல்லக்கேட்டு எழுதியதாகவும் அது உண்மை என்று அவர் நம்புவதாகவும் எழுதியுள்ளார். புதிய ஏற்பாடு ஏசுவின் வார்த்தைகள் என்பது ஏற்புடைத்தன்று.

http://www.ntcanon.org/Carthage.canon.shtml

http://www.helsinki.fi/~merenlah/oppimateriaalit/text/english/newtest.htm

said...

Very Interesting.

எத்தனை அடிகள் விழபோகிறதோ தெரியவில்லை. :)


மொசஸ் கனெக்ஷனை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது.

said...

நேசகுமார்,

நான் ஒன்றும் புதிய விஷயத்தை எழுதவில்லை. ஒஷோவின் புத்தகத்தை மொழிப் பெயர்க்கிறேன். அதிலும் சில வரிகளை விட்டு விட்டு. அந்த வரிகள் மிக கடுமையானவை. அந்த வரிகளை மொழிபெயர்த்தால் நம் இஸ்லாமிய நண்பர்களின் மனம் நோகும்.

நம் நாட்டில் இன்றும் தெருவிற்கு தெரு சாமியார்கள் அல்லது தேவதூதர்கள் தோன்றுகிறார்கள் மறைகிறார்கள். அவர்களும் மெகாலொமானியக் களே.

said...

சூப்பர் சுப்ரா,

சுட்டிகளுக்கு நன்றி

said...

சமுத்ரா, எல்லா அடிகளும் ஒஷோவிற்கு. ஒஷோ இதற்காக அதிகப் பட்ச தண்டனையை அனுபவித்து விட்டார். இந்த அடிகள் சாதரணம்

said...

தொடர் நன்றாக உள்ளது!

நன்றி!

said...

With my request you have enabled the Anonymous comments.

Thanks from Saudi Arabia

said...

சிவா,

இந்தப் பதிவு நல்லா இருக்கே...

நபித்துவக் கேட்படு கட்டுடைக்கப் படவேண்டும்...

உங்கள் பதிவு அதைச் செய்யட்டும்.

வஜ்ரா ஷங்கர்.

said...

சிவா,

இந்தப் பதிவு நல்லா இருக்கே...

நபித்துவக் கோட்படு கட்டுடைக்கப் படவேண்டும்...

உங்கள் பதிவு அதைச் செய்யட்டும்.

வஜ்ரா ஷங்கர்.

said...

இப்படியெல்லாம் கூறும் ஓஷொவும் தான் ஒரு மெகாலோமேனியா.

நானறிவேன் உங்களின் பதில். தம்பி சரவணா, நீ பார்க்கவேண்டியது நிறைய உள்ளது. ஒஷொ ஒரு மகான்.

போங்கையா நீங்களும் உங்கள் வலைப்பதிவுகளும்.

சாதிக்க முடியாதவர்கள் போதிக்க வருகிறார்கள்!!

அன்பு,
சரவணன்

said...

சரவணா,

கோபம் வேண்டாம்.

போதிப்போம் முதலில் சாதிப்போம் பின்

போதனைகள் தேவையில்லாமல் சாதனைகளை செய்

said...

ஷங்கர், பெரிய பெரிய வார்த்தைகள் வேண்டாம்

said...

shankar,

not only nabithuvam, all exclusive concepts have to be opposed. all semitic religions thrive on this "i am the chosen one or my religion's founder is the chosen one" syndrome. these are all fascist ideologies.

said...

Raghu, All religions are opposed by him.

The sequel will tell all

said...

"நபித்துவக் கோட்படு கட்டுடைக்கப் படவேண்டும்..."

I second that.

said...

Siva
it is interesting
A Roolsroyce megalamania(vistor from another planet?)passing comments about other megalomaniacs(messengers and avatars).
keep it up.I love to hear is view on magic megalomania(saibaba)

said...

//I love to hear is view on magic megalomania(saibaba)
//

சாய்பாபா முட்டாள்களின் தலைவர்

மஹேஷ் யோகி அரைகுறை அறிவாளிகளின் தலைவர்

ஜே. கிருஷ்ணமூர்த்தி அறிவாளிகளின் தலைவர்

ஆக மக்கள் யாராக இருந்தாலும் தலைவர்கள் வேண்டும்.

நான் யாருடைய தலைவரும் இல்லை எனக்கும் யாரும் தலைவர் இல்லை. ஏனென்றால் நான் மேற்சொன்ன மனிதர்களின் வகையில் வரவில்லை. நான் சாதரண மனிதன்

இவைகள் கூட வேற்று கிரக வாசியின் வார்த்தைகள் தாம்