Friday, May 26, 2006

முழு அதிகாரமும் உங்கள் கையில்

வார இறுதி வந்தாகிவிட்டது.

மழையும் தொடர்கிறது.

ஆகையால் தோட்ட வேலையும் இருக்காது.

ஆகையால் அதிக நேரம் தொலைக் காட்சியின் முன் செலவிடபோகிறேன்.

இந்த தொலைகாட்சியின் பரிணாம வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்.

நான் முதன் முதலில் தொலைக் காட்சியைப் பார்த்தது "சமீபத்தில்" 1980ல் தான்.

மதுரையிலிருந்து சென்னைக்கு கல்வி சுற்றுலா வ்ந்த போது பணக்கார உறவினரின் வீட்டில் விலை உயர்ந்த ECTV சிங்கிள் சானல் கருப்பு வெள்ளை டிவி யை பார்த்து வாயை பிளந்திருக்கிறேன்.

பிறகு ரூபவாஹினிக்காக மதுரையில் மிக உயர்ந்த ஆண்டெனாவை ஏற்றி புதன் இரவில் தமிழ் படத்திற்க்காக காத்திருந்து திரையில் பொரிகளை பார்த்தது தான் மிச்சம்.

பிறகு சென்னைக் கல்லூரியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை கலரில் கண்டு மகிழ்ந்தேன்.

1984 இல் ஒரு அறிவியல் பொருட்காட்சியில் சில LED வைத்து ஒரு Oscilloscope உருவாக்கி காட்டி பரிசு வாங்கினேன்.

அந்த பொருட்காட்சியில் எதிர்காலத்தில் தொலைகாட்சிப் பெட்டிகளை சுவற்றில் தொங்க விடும் அளவிற்கு மெலிந்துவிடும் என நான் பேசிய போது என்னை ஏளனமாகப் பார்த்த பார்வைகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அது நிஜமாகி நானே ஒரு மெலிந்த டிவியை வாங்கும் போது என்னுடைய தீர்க்கதரிசனத்தை என் மனைவியிடம் சொல்லி நல்ல பெயர் வாங்கிக் கொண்டேன் (உண்மையில் அந்த காலத்தில் Scientific American பத்திரிக்கையிலிருந்து சுட்ட தீர்க்க தரிசனம் தான்)

பிறகு கேபிள் டிவி என்ற பல சானல் அற்புதமும் ரிமோட் கண்ட்ரோலும் வந்து டிவி பார்க்கும் சுதந்திரம் நமக்கு கிடைத்தது.

பிடிக்காத சானல்களை சட்டென்று மாற்றிவிடலாம்.

F டிவி மற்றும் மிட்நைட் மசாலக் களை காணும் போது பெற்றோர்கள் அல்லது மனைவியரிடமிருந்து தப்பிக்க ரீமோட் அருமையான சாதனம்.

இது ஒரு சின்ன அதிகாரம் தான்.

4 வருடங்களுக்கு முன் இன்னொரு பணக்கார உறவினரின் வீட்டில், அமெரிக்காவில், நமக்கு முழு அதிகாரமும் வழங்கும் டிவியைக் கண்டேன்.

இப்போது அந்த சாதனம் சாமனியர்களுக்கும் கிடைக்க ஆரம்பித்து விட்டது.


தை PVR (Personal Video Recoder) என்றழைக்கிறார்கள். அதன் பயன் என்ன? நீங்கள் டிவியை ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்யலாம், ரீவைண்ட் செய்யலாம், ப்ரீஸ் செய்யலாம்.மெகாதொடரில் கதாநாயகியும் வில்லியும் சந்திக்கும் போது ஜைங்..ஜைங் என பின்னனி இசையுடன் அவர்களை காமிரா சுற்றி சுற்றி வருவதை பொறுமையுடன் பார்க்க தேவையில்லை வேகமாக ஓட்டி விடலாம்

கிரிக்கெட்டில் கடைசி பந்து வீசும்போது போன் அல்லது யாரவது வந்து கதவு த்ட்டினால் பதற்றப் ப்டாமல் பதில் சொல்லிவிட்டு டிவியை ரீவைண்ட் செய்துப் பார்க்கலாம்

இதைப் போல் பல அதிகாரங்கள் உங்கள் கையில்

இது எவ்வாறு வேலை செய்கிறது.

பெரிய technology இல்லை. அந்த பெட்டியில் ஒரு hard disk இருக்கிறது. அது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டே உங்களுக்கும் காட்டுகிறது

உங்கள் நேரடி டிவி உங்களுக்கு சிறிது தாமதமாக அதாவது ஒரு நிமிடம் தாமதமாக தெரிகிறது.

அந்த நேரத்தில் தான் நீங்கள் முன் நோக்கியோ அல்லது பின் நோக்கியோ போய் உங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுகிறீர்கள்.

இந்தியாவிற்க்கு வ்ந்துவிட்டதா?

20 comments:

said...

இந்தியாவுக்கா?வந்த மாதிரி தெரியலை.

1984ல முதல் முதலா டீவி வந்துச்சு.சதிஷ் ஷர்மாவோட இந்தி ஜோக் தொடர் ஒண்ணு அப்ப ரொம்ப பிரபலம்.மொழி தெரியாட்டாலும் பாப்போம்.

அப்ப சித்ரகார்,பச்சோன்கேலியே,ன்னு பல புரொக்ராம்கள்.இந்தி தெரியாட்டாலும் உக்காந்து முழுக்க பாப்போம்.1989ல தான் சென்னை தொலைகாட்சி தெரிய ஆரம்பிச்சுதுன்னு நினைக்கிறேன்

said...

செல்வன்,

இன்று திண்ணையில் வெளியான உங்கள் கட்டுரைகள் அருமை.

said...

ரீவைண்ட் டெக்னாலஜி பத்தி சமீபத்துல விளம்பரம் கூட வந்துச்சே!! - இந்தியாவிலேயே. மத்ததெல்லாம் ஆச்சரியமாத்தான் இருக்கு!!

said...

நன்றி சிவா.நீங்கள் கூட உங்கள் கட்டுரைகளை திண்னைக்கு அனுப்பி வைக்கலாமே?

said...

//ரீவைண்ட் டெக்னாலஜி பத்தி சமீபத்துல விளம்பரம் கூட வந்துச்சே!! - இந்தியாவிலேயே. மத்ததெல்லாம் ஆச்சரியமாத்தான் இருக்கு!!

//

பொன்ஸ், இந்த சாதனதின் உள்ளேற்றப்பட்ட மென்பொருளை உங்களைப் போன்ற இந்திய மென்பொருள் வல்லுனர் உருவாக்கியிருக்கிற வாய்ப்புகள் அதிகம்.

நீங்கள் ஆச்சரியடும் வகையில் வேறு என்ன பார்த்தீர்கள் அமெரிக்காவில்

said...

நானும் அந்த கால் டி.வி. பத்தி எப்படி வாயை பொளந்துக்கிட்டு பார்த்தேன்ங்கிறதை இந்த Sex and The City - Readers Discretion Advised!! பதிவில எழுதி இருந்தேன் பாருங்க சிவா!
//பெரிய technology இல்லை. அந்த பெட்டியில் ஒரு hard disk இருக்கிறது. அது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டே உங்களுக்கும் காட்டுகிறது// இது மட்டுமில்ல, இந்த் டெக்னாலஜியோட தொடர்ச்சியா இதை இணையத்தில broacast பண்ணி அதை உங்க வீடுன்னு இல்ல எங்க வேணாலும் பார்க்கலாம் தெரியுமா? இந்த தொழில்நுட்பம் பத்தி எழுதலாமுன்னு இருந்தேன் நீங்க பதிவு போட்டுட்டீங்க, நல்லது.

அப்புறம் நேத்து ராத்திரி வந்து இறங்கறப்பேயே நல்ல மழை இங்கே! கவனிச்சேன், புல்லு வெட்ற வேலை மிச்சம் தான்:)

said...

மிக நல்ல பதிவு.

said...

//நீங்கள் ஆச்சரியடும் வகையில் வேறு என்ன பார்த்தீர்கள் அமெரிக்காவில்//
ஐ.. ஆச தோச.. அமெரிக்க ஆச்சரியம் எல்லாம் உங்க பதிவுல எழுதிட்டா என்பதிவில் என்ன எழுதறது?!! ஆசைதானே :)

said...

பொன்ஸ், ஆச்சரியங்களை உங்கள் பதிவிலேயே எழுதுங்கள். பரவாயில்லை. நான் வந்து பின்னூட்டமிருகிறேன்

said...

சிவா,
நல்ல பதிவு. அழகா எழுதியிருக்கீங்க.
PVR என் வீட்டிலும் உள்ளது வில்லியை பாஸ்ட் பார்வர்ட் பண்ண ஆசைதான்.. சன் டீவி இல்லையே...

said...

PVR எல்லாம் இப்போ தேவையில்லை...Media Centre PC வந்துருச்சுல்லெ...இந்தியால...!!

ஒரு TV tuner card உங்கள் மதர் போர்டில் குத்தினால், கேபிள் டீவி உங்கள் கம்ப்யூட்டரில்...ஒரு சில திருட்டு Software இருந்தால் மீடியா செண்டர் தான்...இதே போல் ரிமோட்டுடன் எல்லாமே செய்யலாம்...

Technology jump சுலபமாக நடக்கும்...3rd worldல்...(செல்போன் ஒரு சிறந்த உதாரணம்..)

வஜ்ரா

said...

ரிமோட்டிலிருந்துகொண்டு control செய்துகொண்டிருக்கும் "remote" -ஐக் control செய்ய ஏதெனும் வசதி உள்ளதா ?
:-)))

said...

ஷங்கர் said...
// ஒரு சில திருட்டு Software இருந்தால் மீடியா செண்டர் தான்//

திருடவேண்டாம். நான்Linuxல் mythtv
http://knoppmythwiki.org உபயோகிக்கிறேன்.

பத்மநாபன்

said...

//ரிமோட்டிலிருந்துகொண்டு control செய்துகொண்டிருக்கும் "remote" -ஐக் control செய்ய ஏதெனும் வசதி உள்ளதா ?//

ஏங்க அம்மிணி, உங்களுக்கு கல்யாணம் ஆகலையா? எங்க வீட்டுல அந்த ரிமோட் ரிமோட்டுக்கு பேரு - மனைவி!

said...

லதா, நீங்க என்ன திருப்பதிக்கே லட்டு மாதிரி கேக்கறீங்க.. ஆனா நிஜமாவே ரிமொட் அப்பப்போ தொலஞ்சுபோய் தொல்லையா இருக்கு. 'ரிமோஓஓட்' அப்படினு கத்தினா அது ஓடிவந்துரனும் ;)

said...

சிவா, இன்றய(29-May-2006) தினமலரில் உங்களின் இந்தப் பதிவு குறித்த செய்தி வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

said...

மகேஸ், மிக்க நன்றி

said...

http://www.dinamalar.com/2006may29/flash.asp

மூன்றாவது முறையாக தினமலரில் இடம் பிடித்தற்கு வாழ்த்துக்கள்

said...

சிவா, நன்றி.

said...

test