Monday, May 08, 2006

சால்னா

சமையல் குறிப்பு

சால்னா செய்ய தேவையானப் பொருட்கள்

தேங்காய் 1 மூடி பால் எடுத்துக்கொள்ளவும்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
தக்காளி 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ப்.மிள்காய் 6 நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
இஞ்சி பேஸ்ட் 1 தேக்கரண்டி
பூண்டு பேஸ்ட் 1 தேககரண்டி
கருவேப்பிலை 1சிறிது
கொத்தமல்லி தளை சிறிது
தனியா தூள் 4 அல்லது 5 தேக்கரண்டி
மஞ்ச தூள் 1/2 தேக்கரண்டி
மிள்காய் தூள் 1 தேக்கரண்டி
சீரக்தூள் 1 தேக்கறண்டி
உப்பு தேவையான அளவு

தாளிப்பதற்கு

ஏலக்காய் 3
கிராம்பு 4
பட்டை சிறிது
பிரிஞ்சி இலை 1
சோம்பு 1/2 தேக்கரண்டி
எண்ணை தேவையான ஆளவு

செய்முறை

அடுப்பில் ஒரு குக்கரைவைத்து அடுப்பை ஆன் செய்யவும். அதில் எண்ணையைவிட்டு காய்ந்த்வுடன், மேலை உள்ள் பொருட்களை போட்டு தாளிக்கவும். பிற்கு பச்சைகிள்காய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க்கவும். பிற்கு தக்காளியை சேர்க்கவும். தக்காளி வதங்கியவுடன். மேலே கூறிய அனைத்து தூள்களையும் சேர்த்து எண்ணையை கக்கும் வரை வதக்கவும்.. இத்துடன் கறிவேப்பிலை , தேங்காய் பால் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் . இது குருமா அளவிற்க்கு கெட்டியாக இல்லாமல் நீர்த்து இருக்கவேண்டும். இது பேஸ்

விஜிடேரியன் களுக்கு

இத்துடன் உருளைகிழங்கு முருங்கை காய் போட்டு வேகவிடவும்


புலால் உண்பவருக்கு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து வேகவிடவும்

இரண்டும் கெட்டவ்ர்க்க்கு 4 அவித்த முட்டைகளை போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும் சால்னாவில் ஒரு முட்டையை உடைத்து ஒரு முட்கரண்டியால் கலக்கிவிடவும்.

பி.கு.

நாட்டுக்கோழி வேண்டுமென்றால் corniche hen என்றுக் கிடைக்கும் மிக அருமையான சுவை.

எங்கள் வீட்டில் 2/3 நா.வி 1/3 வி ஆகையால் வி மற்றும் நா.வி கள் தைரியமாக வரலாம்

34 comments:

said...

இதென்ன மங்கையர் மலர் மாதிரி ஆகிட்டு இருக்கு தமிழ்மணம். இப்பதான் புரியது சமைப்பது தான் புருஷ லட்சணம் போல;)

said...

அண்ணா,

நாங்க 2/3 ரெண்டுங்கெட்டான். எங்க பையன் என்ன குடுத்தாலும் சாப்பிடுவார். ஒரு அட்வான்ஸ் நோட்டீஸ்தான். :)

said...

அண்ணா,

நாங்க 2/3 ரெண்டுங்கெட்டான். எங்க பையன் என்ன குடுத்தாலும் சாப்பிடுவார். ஒரு அட்வான்ஸ் நோட்டீஸ்தான். :)

said...

17 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்னா சும்மாவா? வீட்டுக்குப் போன உடனே சரி பண்ணிட்டீங்களே.

ஆமாம் மல்லிப்பூ கிடைச்சுதா? :)

said...

சிவா,

செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன்.

said...

சால்னா சமையல் குறிப்பு போட்டு மதுரை மண்ணின் மானம் காத்த எங்கள் அண்ணன், கால்கரியில் குடிகொண்டுள்ள சிவா

வாழ்க !

வாழ்க !!

வாழ்க !!!

இந்தியா போக முடியுதோ இல்லையே இந்த வருச கடைசிகுள்ள கனடாவுக்கு ஒரு டிக்கட்டை போட வச்சிடுவீங்க போலயே சிவா சார்..

இந்த வாரம் நைட் எல்லாம் ஒரே கனவு அது சால்னா மட்டும் தான்..

வெஜிடேரியன் சின்ன பசங்களா.. வாழ்க்கை டோட்டல் வேஸ்ட் சொல்லிடேன்

said...

சால்னாவை வி.யாகவும் செய்ய முடியுமா? இன்னிக்குத் தான் தெரியும்.. முயற்சி செய்ய வேண்டியது தான்..

said...

சிவா, பாலிடிக்ஸிலிருந்து நள பாகத்துக்கு மாறிட்டீங்க...வாழ்துக்கள்.

சால்னாவில், பொடியாக நறுக்கிய வெங்காயத்துக்கு பதிலாக, மிக்சியில் போட்டு அடிச்ச வெங்காயம் பயன்படுத்தலாம், சால்னா சூப்பரா வரும்.

தேங்காய் மூடி கிடைக்காத நாடுகளில், கோகுஸ் என்று, காய்ந்த தேங்காய் பொடி கிடைக்கும், அதை அப்படியே பயன்படுத்தினாலும் நலம்.

கரம் மஸாலா பொடி விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறேன்.

வஜ்ரா ஷங்கர்.

said...

//எங்கள் வீட்டில் 2/3 நா.வி 1/3 வி ஆகையால் வி மற்றும் நா.வி கள் தைரியமாக வரலாம்//
இப்போதைக்கு வர முடியாது. சுடானில் இருந்து கனாடா ரொம்ப தூரமா இருக்கு. கனடா வரும் போது நீங்க அழைக்கா விட்டாலும் உங்க வீட்டுல தான் சாப்பாடு. முக்கியமா சால்னாவுடன் ..........
அன்புடன்
நாகை சிவா

said...

//செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன்.//

இது என்ன அநியாயம். செஞ்சா கொத்துப் பரோட்டாவா செய்யுங்க. சொல்லிட்டேன்.

said...

வெளிகண்டநாதரே, இது மங்கையக்காரர்களின் மலர்.

ப்ளாக்கு எழுத சப்ஜெக்ட் கிடைக்காத போது சிறிது வயிற்ற்குக்கும் ஈயப்படும்

said...

இலவசனாரே, அப்ப 3/3 அண்ட் 3/3 ஆகிவிடும்

said...

இலவசனாரே, மல்லிப்பூ எல்லாம் தேவையில்லை கொஞ்சம் சீக்கிரம் போயி அவங்க வரதிற்கு முன்னாடி காபி கொடுத்தா சரியாடிச்சி

said...

வாங்க கார்த்திக் வித விதமா சமைசிட்டலாம்

said...

பொன்ஸ், எங்க வீட்டிலே எப்பவுமே எல்லாமே வி அண்ட் நா.வி யாக இருக்கும் . சிக்கன் பர்கர்லே கூட வி சிக்கன் பர்கர் இருக்கு தெரியுமா?

said...

சூடான் சிவா, வாங்க வாங்க

said...

ஷங்கர், யோசனைக்கு நன்றி. கரம் மசாலா போட்டா வாசனை ரொம்பதூக்கல இருக்கும்

said...

//இலவசனாரே, மல்லிப்பூ எல்லாம் தேவையில்லை கொஞ்சம் சீக்கிரம் போயி அவங்க வரதிற்கு முன்னாடி காபி கொடுத்தா சரியாடிச்சி //

புரியலியே??

said...

துளசி மேடம், ரிசல்டே சீக்கிரம் சொல்லுங்க. அதைக்காட்டி என்னுடைய மேம் சாப் கிட்டே நல்ல பெயர் வாங்கிறேன்

said...

//ப்ளாக்கு எழுத சப்ஜெக்ட் கிடைக்காத போது சிறிது வயிற்ற்குக்கும் ஈயப்படும்
//

:-)

said...

ம்ம். BOM, Process Sequence எல்லாம் ஓ.கே!

அடுப்பைப் பற்ற வைப்பதையும் கவனமாக சேர்த்திருக்கிறீர்கள்.

ஆங்காங்கே கொஞ்சம் எழுத்துப் பிழைகள்தான் தெரிகிறது. மற்றபடி சமையல் குறிப்பு டபுள் ஓ.கே!

said...

சிபி, குடிய சீக்கிரம் தவறில்லாமல் டைப்படிக்கிறேன்.

said...

சாரி கூடிய சீக்கிரம் என இருக்கவேண்டும்

said...

மகேஸ், அது ஒரு பெரிய்ய்கதை. நேத்திக்கு சால்னாவிற்காக எல்லாரும் ஆவலாக் காத்திருந்தார்கள். இவர்கள் பசியை அடக்க எங்க வீட்டுகார அம்மாவிற்கு அவங்க ஆபிஸ்ற்கு போன் செய்தேன். ஆபிஸ் நேரத்தில் சமையல் குறிப்பா அப்பைன்னு தாய்குலம் பொங்கிட்டாங்க. ஐயோ அவங்களை ஐஸ் வைக்க மல்லிப்பூவிற்கு எங்கே போவென்னு புலமிருந்தேன். மல்லிபூக்கு பதிலா. கொஞ்ச்ம் சீக்கிரம் கிளம்பி போயி அவங்க வரதுக்கு முன்னாடு காபி செய்துதந்து காக்கபிடித்து சால்னா சமையல் குறிப்பு. அப்பாடா...

ஜிகர்தண்டாவிற்கு உங்கள் மானேஜரின் ரீயாக்ஷன் எப்படி?

said...

சிவா சார் உங்க அழைப்புக்கு நன்றி..

இந்த வார கடைசியில் சிக்கன் குழம்புடன் சால்னாவும் செய்யபடும் என்று என்னுடைய மனநிலை கூறுகிறது..

***

// பொடியாக நறுக்கிய வெங்காயத்துக்கு பதிலாக, மிக்சியில் போட்டு அடிச்ச வெங்காயம் பயன்படுத்தலாம்,

இது வேலை செய்ய அலுத்தவன் செய்யிற வேலைன்னு நான் நினைச்சேன்..

***

தளபதி சிபி,

// சமையல் குறிப்பு டபுள் ஓ.கே!

அனுபவமோ ?.. எப்படி கண்டுபிடிப்பு :-) .. நான் சமையல் செய்ய ஆரம்பித்த புதிதில் அம்மா டேஸ்ட் செய்யும் போது அவங்க முகத்தை பார்த்தே என்னோட லட்சனத்தை கண்டுகுவேன்.. அப்புறம் கொஞ்ச மாசம் கழிச்சி அவங்க சொல்லுற வார்த்தைல இருந்து கண்டுகிட்டேன்..

BOM = Bill of material ?

Process Sequence ...கடவுளே இந்த வார்த்தைய கேட்காம ஒருநாள் கூட இருக்கமுடியாது போலயே :-)

said...

அடடா

கொத்ஸூ பரோட்டா ஒரு பக்கம்.
சால்னா இன்னொரு பக்கம்.
மீன்கொத்தி அந்தப்பக்கம்.

கோவை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல 7star அப்படின்னு ஒரு கடை இருந்ததுங்க.

காலெஜ்க்கு கட் அடிக்கிற நாள்ள, கையிலசில்லறை இருந்த நாங்க போற இடம் அது.

ஒரெ ஒரு மீன்கொத்திய வாங்கி ஆறு பேர்சமபந்தி போஜனம் செய்தது,
அங்கிருந்து பொடி நடையா central theater மக்கின்னாஸ் கோல்ட் பாத்தது.

ஒரே மலரும் நினைவுகள் தான் தலைவா.


இன்னிக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

" பெரு" மூச்சுதான் உட முடியுது.

said...

Babble ,

Here it is http://sivacalgary.blogspot.com/2006/05/blog-post.html

said...

//சிக்கன் பர்கர்லே கூட வி சிக்கன் பர்கர் இருக்கு தெரியுமா?
//
வி சிக்கன் பர்கரா?!! ஆகா.. இன்னும் வயற்றிற்கு ஈயும் பதிவுகள் நெறைய வச்சிருப்பீங்க போலிருக்கே!!

said...

கார்த்திக் ஜெயந்த்,
//
இது வேலை செய்ய அலுத்தவன் செய்யிற வேலைன்னு நான் நினைச்சேன்..
//

மிக்ஸியில போடனும்னாலும் வெங்காயத்த பொடியாக நறுக்கித்தான் ஆகவேண்டும். அரச்ச வெங்காயத்தால், சால்னாக்கு ஒரு "கன்சிஸ்டென்சி" கிடைக்கும்.

ஷங்கர்.

said...

//" பெரு" மூச்சுதான் உட முடியுது.//

பெரு சு நல்ல சிலேடை. மெக்கானாஸ் கோல்டு பார்த்த ஆளுன்னா எனக்கு சீனியரா இருப்பீங்க போலிருக்கு.

said...

பொன்ஸ், இங்கே(கனாடவில்) வி ஆக இருப்பது இது ஒரு பாஷன். வி என்றால் மரியாதையாகப் பார்க்கிறார்கள்.

டொஃபு என்ற பொருளைக் கொண்டு வி. சிக்கன் பர்கர், வி.ஹாம் பர்கர் கிடைக்கிறது. அதே டேஸ்ட் பட் கவுச்சி வாசனையில்லை.

O Nature என்பது பிராண்ட் நேம் உங்கள் நாட்டில் கிடைத்தால் டிரை செய்யவும்

said...

சால்னா விசயத்தில் நீங்கள் லேட் சிவா. ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே நானும் ஜெயக்குமாரும் கொத்துப் பொரட்டாவும், சால்னாவும் செய்து சாப்பிட்டு விட்டோம். மேலும் குஸ்கா, மட்டன் பிரியாணியில் நாங்கள் expert.

said...

மகேஸ், உங்க சால்னாவை கொஞ்சம் ஊத்துங்களேன் எப்படிருக்குன்னு பார்போம்

said...

//மகேஸ், உங்க சால்னாவை கொஞ்சம் ஊத்துங்களேன் எப்படிருக்குன்னு பார்போம் //

அடுத்த முறை இந்தியா போகும் போது ஒரு வாரம் லண்டனில் transit போடுங்கள். ஜமாய்சுடுவோம்.