Thursday, May 18, 2006

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 1


கேள்வி : அன்பின் ஒஷோ நீங்கள் ஒரு தேவதூதரா?

ஒஷோ : சிவா, நீ தமிழ் பதிவிற்க்குப் போய் ரொம்பவும் மாறிட்டேப்பா. அது என்னப்பா "அன்பின்" வழக்கமா நீ அன்புள்ள அல்லது திரு ஒஷோ அவர்களே னு தானே ஆரம்பிப்பே. சரி..... மாற்றம் மற்றும் தானே நிரந்தரம் .

உன் கேள்விக்கு பதில் இதோ :

இல்லை ..... நிச்சய்மாக இல்லை.

நான் மற்றும் இல்லை இதுவரைக்கும் யாரும் தூதராக இருந்ததுமில்லை இனிமேல் வரபோவதுமில்லை.

முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கவேண்டும் அதற்கப்புறம் தானே அவருடைய தூதர்களைப் பற்றி யோசிக்க முடியும் .

இத பார் என்னுடைய தட்டுக்கு அதான்பா flying saucer நேரமாகுது நான் இன்னொரு கிரகத்திற்கு போயி அங்கே ரோல்ஸ் ராய்ஸ் எல்லாம் வாங்கணும்.

உம் பிரின்டர்லே போயி பாரு ஒரு பதினாலு பக்க பதில் ஆங்கிலத்திலே இருக்கு. அதை தமிழில் மொழிபெயர்த்து ஒரு தொடரை ஓட்டு..... வரட்டா.....


ஒஷோவின் தொடரும்...தொடரும்

19 comments:

said...

என்ன சொல்ல வர்ரீங்கன்னு ஒண்ணுமே புரியலை சிவா.

said...

இது இன்னொரு புலி வாலா? இல்லை பசு வாலா? :-)

said...

செல்வன், வெய்ட் அடுத்த பகுதியில் புரியும். ஒஷோவின் 'From Unconsciousness to Consciousness' என்ற புத்தத்தை படித்ததின் விளைவு.

மேலும் ஒஷோவின் ஆசிரமத்தில்
“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”

என்று எழுதியிருப்பதாக திரு சுவனப்ரியன் அவர்கள் சொல்லிவிட்டார்கள். அந்த நினைவில் தான் பறக்கும் தட்டு போன்ற சமாச்சாரங்கள்

said...

Osho கடவுளே இல்லெண்டாரா?
சூப்பரு...


ஏதோ அடி போறீங்களே சிவா?

வஜ்ரா ஷங்கர்.

said...

Many Osho's books also have this statement. I have seen it.

“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”

said...

புலியா பசுவா என்று போக போகத்தான் தெரியும்.

இது வாலே இல்லை என நினைக்கிறேன்.

இதில் என்னுடைய க்ருத்து எதுவும் கிடையாது.

said...

ஷங்கர், ஒஷோவும் சரி புத்தரும் சரி கடவுள் இருக்கு என்று என்றுமே சொன்னதில்லை

said...

ஷங்கர், ஒஷோவும் சரி புத்தரும் சரி கடவுள் இருக்கு என்று என்றுமே சொன்னதில்லை//

அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?

“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”

said...

உங்களுக்கு ஓஷோவின் மேல் மரியாதை உள்ளது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது பக்தி என்கிற அளவை அடைந்துவிட்டதா என்பது தெரியாததால் என்னுடைய கருத்தைக் கூற சற்று தயங்குகிறேன். உங்களுடைய மனதிற்கு லேசாகவும் சுணக்கம் ஏற்படுத்துமானால் இப்பதிவை விலக்கி விடுங்கள்.

-------------------
ரஜனீஷ் உண்மையிலேயே ஒரு உண்மையான ஆன்மீகவாதி. ஆனால் ஓஷோ ? சற்று அரசியல் கலந்து விட்டது. எல்லா அரசியல்வாதிகளையும் எள்ளிய ரஜனீஷ் சந்திர மோஹன், நிர்பந்தங்களின் காரணமாக சில அரசியல்களையும், குப்பைகளையும் ஆதரிக்க வேண்டி வந்தது. அதற்கு அவரைக் குறை கூற முடியாது. அரசியல்வாதிகளின் அப்பாதுகாப்பு இல்லாவிட்டால் அவருடைய புரட்சிகரமான கருத்துக்களுக்காக அவரை சீக்கிரமே அழித்திருப்பார்கள்.

-ஜென்னைப் பற்றிய அவரது புரிதல் மிக ஆழமானது. விளக்கங்கள் எளிமையானவை. ஆனால் வேதாந்தத்தை பற்றிய கருத்துக்கள் தவறானவை என்பதை அவர் முன்னாலேயே உயர் ஞானிகள் நிருபித்திருக்கிறார்கள்.

உண்மையில் அவர் ஒரு நல்ல ஸ்காலர், பல்வேறு விஷயங்களை நன்கு தொகுத்து, மிக அழகாகப் பேசக்கூடியவர். ஒரு இசையை போன்றதொரு பேச்சு.

ஆனால் தன் பேச்சினால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை நன்கு அறிந்த அவர் மிக மிக சாதாரண விஷயங்களைக்கூட, மிகப் பெரிய விஷயம் போல உணர வைக்க அத்திறமையை பயன்படுத்திக்கொண்டார்.

பொய்மையும் வாய்மையிடத்து என்பதை சற்று அளவுக்கதிகமாகவே எக்ஸ்ப்ளாய்ட் செய்தவர்.

எதிலிருந்து அவர் தப்பித்தாரோ, அதற்குள் அவரை பின்பற்றுபவர்களை இழுத்து விட்டார்.

இதற்குக் காரணம் எல்லாவித (மன, ஆன்மீக) நிறுவனங்களையும் எதிர்த்த அவரே அந்நிறுவனமயத்திற்கு பலியானதுதான்.

said...

>>>“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”<<<

இவை அவரே தன்னுடைய சமாதியில் பதிக்கப்பட சொல்லிய கருத்துக்கள். கவி அழகு நிரம்பிய வார்த்தைகள். தத்துவ முத்துக்கள்.

said...

//வெய்ட்//

Roger that.

said...

கால்கரி சிவா,

இந்த தொடரை நான் வரவேற்கிரேன்!!

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!

said...

இவை அவரே தன்னுடைய சமாதியில் பதிக்கப்பட சொல்லிய கருத்துக்கள். கவி அழகு நிரம்பிய வார்த்தைகள். தத்துவ முத்துக்கள்.//

எனக்கு ஓஷோ பற்றி அதிகம் தெரியாது மியூஸ்.அவரை கடவுளாக நினைத்து வழிபடுகிறார்கள் அவர் பக்தர்கள் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். என்பது அதை உறுதிபடுத்துவது போல் இருந்தது.ஆனால் சிவா அவர் கடவுளை பற்றி ஏதும் சொல்லவில்லை என்று சொன்னதால் சற்று குழப்பம் வந்தது.

ஓஷொ பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.சிவாவின் பதிவில் உள்ள சுட்டியை நேரம் கிடைக்கும்போது படித்து தெரிந்துகொள்கிறேன்

அன்புடன்
செல்வன்

said...

சிவா,
//வெய்ட் அடுத்த பகுதியில் புரியும். ஒஷோவின் 'From Unconsciousness to Consciousness' என்ற புத்தத்தை படித்ததின் விளைவு.//

தங்களின் அடுத்த பதிவைப் படிக்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
நன்றிகள்.

said...

சதயம், நல்ல பாடல்

said...

ம்யூஸ், தைரியமாக சொல்லுங்கள். எனக்கு கோபம் வராது. ஆம்.... ரஜ்னிஷ் நல்லவர் ஆனால் ஒஷோ தடுமாறியவர். மனிதனின் கர்வம் தான் அவனுடைய வீழ்ச்சிக்கு காரணம். இதில் ஒஷோவும் அடக்கம்.

மாட்ரிக்ஸ் படத்தில் ஒரு வசனம் வரும் " என்னால் உனக்கு கதவை தான் காட்ட முடியும் ஆனால் கதவை திறந்து போவது நீயாக மட்டும் இருக்க முடியும்"

அதில் எனக்கு முழு உடன்பாடு. ஒஷோவும் இந்தக் கருத்தை நிறைய முறைக் கூறியிருக்கிறார்.
ஆன்மிக தேடல் மிக அந்தரங்கமானது அதில் ஒரு குருவின் பங்கு சுட்டிக் காட்டத்தான். ஆனால் மற்றவை நம்மிடம் தான்.

said...

//Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990//

ம்யூஸ், இதன் அர்தத்தை விளக்குகளேன்

said...

நேசகுமார்,

படத்தை நானும் என் மகனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்போம். இந்த வசனம் பகுதி 1 ல் நீயோ ஆரக்கிளை பார்ர்கும் போது வரும். மேலும் உனக்கு சொன்னது உனக்கு மட்டும் தான் என்று மார்பியஸ் கூறுவார்.

இரண்டாவது பகுதியில் நியோ ஆர்கிடெக்டை பார்ர்க்க செல்லும் போது இந்த வசனம் வரும்.

மிக அருமையான பட வரிசை.

ஒஷோ, ஒரிடத்தில் கூறுவார். "நான் பேசும் பேச்சு உங்களை கவரும் . அதன் கருத்தை உட்கொண்டு உங்களில் மாற்றம் வரவில்லையென்றால் அது வீண். அவ்வாறு மாற்றம் வராதவர் தளத்திற்கு நான் வரமுடியாது என் தளத்திற்கு நீங்கள் வரவேண்டும்" என்பார்.

சோகம் என்னவென்றால் உயர் தளத்திலிருந்த அவர் அமெரிக்காவில் வீழ்ந்தார்

வரும் பகுதிகளில் அவர் ஆப்ராமிய மதங்களை கடுமையாக சாடுகிறார்

said...

சிவா,

>>>> //Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990//

ம்யூஸ், இதன் அர்தத்தை விளக்குகளேன் <<<<

இதை அவரது தத்துவப்பார்வையின் பின்னிருந்து புரிந்து கொள்ள வேண்டும். மரணம் என்பது ஒருவன் சட்டையைக் கழட்டிபோட்டுவிட்டு வேறு சட்டையைப்போட்டுக்கொள்வது மாதிரிதான் என்கிற பகவத் கீதையின் அர்த்தத்தைத்தான் அவர் இங்கனம் அவருக்கேயுரிய நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார்.

ஆத்மாவானது பல உடல்களையும், அனுபவங்களையும் பெற்றவாறு பயணம் செய்தவாறே இருக்கிறது என்கிற கருத்தும்,

ஓஷோவிற்கு இந்த கருத்தின் மீது இருந்த நம்பிக்கை, அல்லது புரிதலை வெளிப்படுத்தவும்,

தனக்குப் பின்னால் தனது பக்தர்கள் அவரது மரணத்தை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதையும்,

அவருடைய மரணம் மட்டுமன்றி பொதுவாகவே மரணத்தை எப்படி அணுகுவது என்கிற கருத்தையும்,

மரணம் என்பது ஒரு அழகான அனுபவம் என்கிற அவரது கருத்தையும்,

இவரது வார்த்தைகள் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

வேலை சற்று அதிகமாகிவிட்டது. தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.