Thursday, May 04, 2006

இந்து-முஸ்லிம் பிளவை குறைக்கும் வழிமுறை

நேற்று இட்ட பதிவில் மிக நீண்ட தலைப்பு இருந்ததால் தொழிழ் நுட்பக் கோளாறு ஆகையால் மீண்டும் இந்த பதிவு




திரு அருணகிரி அவர்கள் என்னுடைய ஒரு பதிவிற்கு

"இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள பிளவை அதிகரிக்க வைப்பதில் மைனாரிட்டி ஓட்டு வங்கி அரசியலுக்குப் பெரும்பங்கு உள்ளது"

என பின்னூட்டமிட்டார்

நானும் "இதை தீர்க்க வழியே இல்லையா?" என நான் வினவி இருந்தேன்.

அதற்கு அவர்

மத அடிப்படையில் மெஜாரிட்டி ஒட்டு வங்கி ஒன்றாக அணி திரண்டால், மத அடிப்படையிலான மைனாரிட்டி ஓட்டு வங்கி irrelevent-ஆகும்.

ஆனால் இது மதரீதியாக மைனாரிட்டிகளை (மலேசியா, சிங்கப்பூர் போல)ஒதுக்குவதுபோல் ஆகும் என்பதால் கீழே காணும் பிற வழிகளையே நான் முதலில் நான் முன்வைப்பேன்.


மத அடிப்படையில் சென்சஸ் எடுப்பது, தனி உரிமையும் சலுகையும் தருவது, மத நிறுவனங்களுக்கு வெளிநாட்டுப்பண உதவி கிடப்பது இது போன்ற மத அடிப்படை சலுகைகள் மத ரீதியாக மைனாரிட்டிகள் பிரிந்து கிடப்பதை reward செய்கிறது. உடனடியாகச் செய்ய வேண்டியது:

1. மத அடிப்படையிலான கட்சிகளைத் தடை செய்ய வேண்டும். மத அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளோ, சலுகைகளோ அரசியல் கட்சிகள் தருவது சட்டத்தால் தடை செய்யப்பட வேண்டும்.

2. மத அடிப்படையில் reserved தொகுதிகள், மத அடிப்படையில் தனிச்சட்டங்கள் இவற்றை ஒழித்து விட வேண்டும். UCC-இன் அவசியத்தை சுப்ரீம் கோர்ட்டே பலமுறை வலியுறுத்தி உள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இல்லாத கேவலம் அழிய வேண்டும்.

3. எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களூம் அரசின் கீழ் வர வேண்டும். அல்லது எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களும் அந்தந்த மத நிறுவனக்களாலேயே நிர்வாகம் செய்யப்பட வேண்டும். இன்றுள்ளது போல் பாரபட்ச நிலை கூடாது.

4. மற்ற நாடுகளிடம் இருந்து நம் நாட்டு மத நிறுவனங்களுக்கு (including கல்வி நிறுவனங்கள்) வரும் பொருளாதார உதவி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அவற்றின் விரிவான தணிக்கை அறிக்கைகளுக்கு public access கிடைக்க வேண்டும்.

5. நியோகி அறிக்கையில் கூறியுள்ளபடி அனைத்து மாநிலங்களும் மத மாற்றங்களைக் கடுமையாகக் கண்காணித்து, lure/coercion/taking advantage of vulnerability போன்ற வகைகளில் வரும் மத மாற்றங்களையும், குறிப்பாக கூட்ட மத மாற்றங்களையும் தடை செய்ய வேண்டும்.

இவை நடக்காத சூழ்நிலையில் ரிலீஜியஸ் மெஜாரிட்டேரியானிசமே வழியென்று ஆகி விடும். அது நாட்டுக்கு அவ்வளவு நல்லதில்லை என நினைக்கிறேன்.


என பதில் அளித்திருந்தார்.

இது விவாதற்கு நல்ல தலைப்பாக இருக்கும் என என் நினைப்பு.

அவருடைய அனுமதியுடன் இந்த பதிவு

11 comments:

said...

ம்யூஸ் அவர்கள் இட்ட பின்னூட்டம்

அருணகிரி கொடுத்தவை அருமையான யோசனைகள். ஆனால் இது பொது சிவில் கோடின் வேறு வடிவம் என்று கூறி மதச்சார்பற்ற (?), இடதுசாரிகள் கண்டிப்பாக எதிர்த்து இவற்றை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள்.

அவர்கள் கையில்தான் இப்போது தீர்வுகளை செயல்படுத்தக் கூடிய சக்தி உள்ளது. இச்சக்தியை அவர்கள் வன்முறை மூலமும், ஓட்டு வங்கி மூலமும் பெற்றும், தக்கவும் வைத்துள்ளார்கள்.
# posted by Muse : 12:45 AM

said...

Siva,
here my views:
1.சலுகை - This is my base idea. We have to give reservation to Muslims in educational institution & govt. sector.
2. Economic status of Muslims to be imported.

I will give my explanation to my views, lit bit later.

said...

Siva, please correct it.

Correction:

Economic status of Muslims to be improved. (not imported)

said...

ம்யூசின் பின்னூட்டத்திற்கு நான் தந்த பதிலையும் இங்கே பதித்து விடுகிறேன்.

"muse,

இதிலுள்ள முரண் நயம் என்னவென்றால், இவை அனைத்துமே (4-இல் உள்ள public access to information தவிர) கம்யூனிச/இடது சாரி நாடுகளில் உள்ள நடைமுறையில் உள்ள சட்டங்கள்தான்!

இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற விஷயங்களை 50,60 ஏன் 70-களில்கூட (குறைந்தபட்சம்) பேசியாவது வந்தனர் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். பிறகு மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இஸ்லாமிய ஓட்டு வங்கி இந்திரா காங்கிரஸ் பக்கம் சாய்வதையும், தனது traditional rural மற்றும் அரிசன ஓட்டுக்கள் புதிய சாதி மற்றும் பிராந்திய கட்சிகளால் மேலும் பிரிக்கப்படுவதைக் கண்டு, வர்க்க அடிப்படை அணுகுமுறையைக் கைகழுவி மதச்சிறுபான்மை ஆதரவு என்று மாறி இன்று அடிப்படைவாத இஸ்லாமியத்தைக்கூட ஆதரிக்கும் ஓட்டுப்பொறுக்கிகளாய்ப் போய் விட்டனர்.

அடிப்படைவாத இஸ்லாத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் பொது எதிரி அமெரிக்கா என்பதால் கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு ஆதரவு தரும் அரிதார நாயகர்களாகவே இன்று நம் நாட்டு இடதுசாரிகள் உள்ளனர்- தான் பாலூட்டுவது ஒரு கொடிய விஷப்பாம்புக்கு என்ற வரலாற்று உண்மையைக்கூட அதிகார ஆசையில் வசதியாக மறந்தபடி. இந்த வரலாற்றின் ஈரம் மாறாத ரத்தச்சுவடுகளை சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் இன்றும் காண முடியும். கம்யூனிசம் மாறி இஸ்லாமிய நாடுகளாய் இவை மாறியதும் செய்த முதல் வேலை தேடித்தேடி கம்யூனிஸ்டுகளை விரட்டி தெருநாய்கள் போல சுட்டுக் கொன்று குவித்ததுதான்".

said...

À¡¸¢Š¾¡É¢Â ņ¡À¢¸û º£É¡Å¢ý ¯¨¸÷ À¢Ã§¾ºòÐìÌû ѨÆó¾¡ø ¯¼§É Áý ¾ñ¼¨É¾¡ý. «í§¸ þŠÄ¡¨Á §À¡¾¢ò¾ ¸¡Ã½òÐ측§Å º£É¡ ÀÄ À¡¸¢Š¾¡É¢Â÷¸¨Ç à츢ĢðÎÕ츢ÈÐ. º£É¡ þ¾¨É ¿ýÈ¡¸§Å À¢ÃÀÄôÀÎò¾¢ À¢ÃÃõ ¦ºÂ¢¸¢ÈÐ. «¾¡ÅÐ ±ø§Ä¡ÕìÌõ ±îºÃ¢ì¨¸. ÁÅ§É Å¡Ä¡ð椃 «ùÅûÇ×¾¡ý ±ýÚ. ¬É¡ø À¡¸¢Š¾¡Ûõ þ¾¨É ¦À⾡¸ §ÀÍž¢ø¨Ä. ¿õ °÷ ¸õäÉ¢ŠÎ¸Ùõ þ¾¨É §ÀÍž¢ø¨Ä.

º£É¡×ìÌ ±ôÀÊ ÓŠÄ£õ¸¨Ç ¯À§Â¡¸ôÀÎòÐ즸¡ûÅÐ ±ýÚõ ¦¾Ã¢Ôõ. «§¾ §Å¨Ç¢ø º£É¡×ìÌû Å¡Ä¡ðÊÉ¡ø ´ð¼ ¿Úì¸×õ ¦¾Ã¢Ôõ. ¯í¸û °÷¾¡ý À¢î¨ºì¸¡Ã ¿¡¼¡Â¢ü§È. ºç¾¢ «§ÃÀ¢Â¡, «¦Áâ측, ³§Ã¡ôÀ¡ ±ýÚ Â¡÷ À¢î¨º §À¡ð¼¡Öõ ¦Åð¸õ ¦¸ðΠ̨ÆÂÊòÐ ÅÆ¢Âò¾¡§É ¯í¸ÙìÌò ¦¾Ã¢Ôõ.


Editorial
The Hindustan Times
Thursday, July 8, 1999


The Chinese have always had the habit of shooting first
and asking questions afterwards when it came to dealing
with intrusions in their backyard. And it has been no
different this time as Beijing perfunctorily executed a
Pakistani infiltrator in its northwestern Xinjiang
Uyghur Autonomous Region. He was accused -- with good
reason, too -- of "fomenting trouble" in the ethnically
disturbed province.


China had launched a major offensive on Islamic
separatists and terrorists in its sensitive Xinjiang
province warning its Muslim neighbours to desist from
arming the extremists. Beijing has had to cope with a
geographic handicap in that the main towns of Xinjiang,
such as Taksu, Kuqa, Khotanj and Urmuchi, all straddle
the vital Karakoram highway that runs from Pakistan. Of
late, these towns have become a hotbed of armed Islamic
insurgency with frequent ambushes, grenade attacks, and
bombings being carried out against Chinese forces. It
could not have taken Chinese intelligence very long to
stumble on to the fact that most of the extremists were
Afghan mercenaries, and Tajik and Kirgiz rebels who
were trained in camps in Peshawar which were originally
started by the US Central Intelligence Agency. And once
Pakistan’s Inter Services Intelligence (ISI) inherited
these terrorist training schools, a regular trail was
probably laid to lead into Xinjiang where the Islamic
separatist movement could be armed and guided.


The Chinese angst at sporadic eruption of secessionist
violence in Xinjiang is understandable, considering the
region’s strategic importance to China. Beijing has
zealously guarded the uranium mines, nuclear and
missile test centres and oil fields of Xinjiang ever
since the People’s Liberation Army used the province as
a springboard to move into Tibet. All this explains the
violent decisiveness with which Beijing now seems to be
ready to put down ethnic militancy in Xinjiang. These
goings-on may also have a direct bearing on
subcontinental affairs. For Beijing may now choose to
look harder and closer at trouble spots such as Kargil
and Kashmir where Pakistani patronage to insurgents
routinely unleash mindless violence. That could explain
Beijing’s unusually cold response to Pakistani pleas
for its usual quota of moral and material support to
Islamabad.


Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

ஆரோக்கியம், தங்களின் தமிழ் வார்த்தைகளை யுனிகோடில் தயவு செய்து இடவும்

said...

பாகிஸ்தானிய வஹாபிகள் சீனாவின் உகைர் பிரதேசத்துக்குள் நுழைந்தால் உடனே மரண தண்டனைதான். அங்கே இஸ்லாமை போதித்த காரணத்துக்காவே சீனா பல பாகிஸ்தானியர்களை தூக்கிலிட்டுருக்கிறது. சீனா இதனை நன்றாகவே பிரபலப்படுத்தி பிரச்சாரம் செயிகிறது. அதாவது எல்லோருக்கும் எச்சரிக்கை. மவனே வாலாட்டினே அவ்வள்ளவுதான் என்று. ஆனால் பாகிஸ்தானும் இதனை பெரிதாக பேசுவதில்லை. நம் ஊர் கம்யூனிஸ்டுகளும் இதனை பேசுவதில்லை.

சீனாவுக்கு எப்படி முஸ்லீம்களை உபயோகப்படுத்துக்கொள்வது என்றும் தெரியும். அதே வேளையில் சீனாவுக்குள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியும். உங்கள் ஊர்தான் பிச்சைக்கார நாடாயிற்றே. சவூதி அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பா என்று யார் பிச்சை போட்டாலும் வெட்கம் கெட்டு குழையடித்து வழியத்தானே உங்களுக்குத் தெரியும்.
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

From Koothadi Nan

Koothadi Nan to me
More options May 3 (1 day ago)

//எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களூம் அரசின் கீழ் வர வேண்டும். அல்லது எல்லா மதத்தலங்களும், நிறுவனங்களும் அந்தந்த மத நிறுவனக்களாலேயே நிர்வாகம் செய்யப்பட வேண்டும். இன்றுள்ளது போல் பாரபட்ச நிலை கூடாது.

4. மற்ற நாடுகளிடம் இருந்து நம் நாட்டு மத நிறுவனங்களுக்கு (including கல்வி நிறுவனங்கள்) வரும் பொருளாதார உதவி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அவற்றின் விரிவான தணிக்கை அறிக்கைகளுக்கு public access கிடைக்க வேண்டும்.
//

எல்லா மதத்தலங்களையும் /நிறுவனங்களையும் அரசுடமையாக்குவது ஒத்துவராதது .ஆனால் கடுமையாக அவற்றின் வரவு/செலவுகளை தணிக்கைச் செய்வதும் அதைக கண்காணிக்க வ்ல்லுனர் குழுமத்தை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அமைப்பதும் சரியானது.

மத நிறுவனங்கள் /அதன் தலைவர்கள் வியாபரத்தில் பணம் முதலீடு செய்வதையும் தடுக்க வேண்டும் ..


4 வது point சரியானதே ,அது இஷ்கான் கோவில்களுக்கும் பொருந்தும் என நம்புகிறேன் .NRI's அவரவர் கோவில்களுக்கு நன்கொடைக் குடுப்பதும் கூடத்தான் ..


மத மாற்றம் ஒரு வியாபாரமாக் படுவது தவறு தான் ,மேற்கொண்ட பரிந்துரைகளை கடுமையாக நிறுவினாலே மதமாற்றத்தில் உள்ள பொருள் உதவி அடிப்பட்டுப் போகும்.

இந்து / முஸ்லீம் உறவை முன்னேற்ற இதை விட சில சிமிப்பிள் செயல்களைச் செய்யலாம் ,அதில் ஒன்று முஸ்லீம் ஏரியா /இந்து ஏரியா என்று இருப்பதை குறைப்பது ..

அப்புறம் சாதியை விட்டு விட்டீர்கள் ,சாதி அபிமானம் நம் நாட்டில் இருக்கும் வரை எதையுமே பண்ண முடியாது .

சாதியை ஒழிக்கவும் /சாதி அபிமானத்தை அடுத்தவர் மேல் உமிழ்வரைத் தண்டிக்கவும் சட்டம் வேண்டும் ..என்னைக் கேட்டால்
ஒன்று செய்யலாம் சொந்த சாதியில் கல்யாணம் செய்பவருக்கு எந்த சலுகையும் அரசிலிருந்து குடுக்கக் கூடாது .சாதிப்பேரிய்ல் எந்தச் சங்கமும் இருக்கக் கூடாது.


இதன் எல்லாக் கருத்தையும் நான் ஒத்துக் கொள்ளா விட்டாலும் இது தேவையான ஒரு நல்ல பதிவு சிவா..ஆனால் பலர் வந்து சாணி அடிக்கக் கூடும்..

said...

கால்கரி சிவா,

"From Koothadi Nan

Koothadi Nan to me
More options May 3 (1 day ago) "

இதற்கு என்ன அர்த்தம்?

இது உங்கள் கருத்து என்றால் உங்களுக்கும், வேறொருவரது பின்னூட்டமென்றால் அவருக்கும் இந்த பதில்:

"ஆனால் கடுமையாக அவற்றின் வரவு/செலவுகளை தணிக்கைச் செய்வதும் அதைக கண்காணிக்க வ்ல்லுனர் குழுமத்தை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அமைப்பதும் சரியானது".

இந்த வரவு செலவுகள் மற்றும் தணிக்கை என்பவை public disclosure-க்கு உட்படுத்தக்கூடியதாக இருத்தல் அவசியம்.

"அது இஷ்கான் கோவில்களுக்கும் பொருந்தும் என நம்புகிறேன் .NRI's அவரவர் கோவில்களுக்கு நன்கொடைக் குடுப்பதும் கூடத்தான் .."

எல்லாவற்றிற்கும்தான்.

"இந்து / முஸ்லீம் உறவை முன்னேற்ற இதை விட சில சிமிப்பிள் செயல்களைச் செய்யலாம் ,அதில் ஒன்று முஸ்லீம் ஏரியா /இந்து ஏரியா என்று இருப்பதை குறைப்பது"

முஸ்லீம் ஏரியா இந்து ஏரியா என்பதெல்லாம் சட்டத்தால் உண்டானதல்ல. அவற்றிற்கு சட்டம் தாண்டிய குழுக்கண்ணோட்டம், social clustering அடிப்படையிலான உளரீதியான பாதுகாப்புணர்வு போன்ற காரணிகள் உள்ளன. மதப்பிளவு குறைய வகை செய்தாலே இத்தகைய ஏரியா பிரிவுகளுக்கான தேவை குறைந்து நாளடைவில் மறையவும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்னுதாரணம் உண்டு. சாதிக்கொரு தெரு சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இருப்பதும் இத்தகைய குழுக்காரணங்களின் அடிப்படையில்தான். சாதித்தெருக்கள் பல பெரு நகரங்களில் மறைந்தது சட்டத்தினால் அல்ல. சட்டம் செய்யாததை சந்தைமயமாக்கலும் பொருளாதாரக்காரணிகளும் செய்தன- Law of unintended consequences என்பதன்படி. சாதித்தெருக்கள் தந்த பாதுகாப்புணர்வு அவசியமின்றிப்போனபோது சாதி வாரியான தெருக்களும் குறைந்து போயின. இதேபோல, மத ஏரியாக்கள் அவசியமில்லை என்ற நம்பிக்கை மிக்க சூழலை ஏற்படுத்துதலே அரசின் வேலை.

"சாதியை ஒழிக்கவும் /சாதி அபிமானத்தை அடுத்தவர் மேல் உமிழ்வரைத் தண்டிக்கவும் சட்டம் வேண்டும் .."

சாதி அபிமானம் மட்டுமல்ல, தனிப்பட்ட சாதிக்காட்டத்தை அடுத்தவர்மேல் உமிழ்பவரையும்கூட- அவர்கள் தனிமனிதனாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி- தண்டிக்கப்பட வேண்டும். இன்றுள்ள சாதி ஒழிப்பு சட்டம் reverse discrimination என்ற அடிப்படையில் சாதிப்பிரிவுகளை மேலும் வளர்க்கும் சட்டமாகவே உள்ளது. அதே போல இந்திய அரசியலில் இன்று மதச்சார்பின்மை என்பது, இந்து எதிர்ப்பு மற்றும் முஸ்லீம்/கிறித்துவ ஆதரவு என்ற ஒற்றை நிலையாய்த் திரிந்து சிறுபான்மை ஓட்டுவங்கியைக் குறிவைத்த நாணயமற்ற ஒரு பொய்மையாகவே கேவலப்பட்டுக்கிடக்கிறது. இவை மாற வேண்டும்.

அரசியல்வாதிகள் செய்யா விட்டாலும் 8% GDP வளர்ச்சி தொடர்ந்தால் இத்தகைய நல்ல மாற்றங்கள் வரக்கூடிய சூழல் உருப்பெறலாம் என்றே நினைக்கிறேன். ஏற்றத்தாழ்வு பலவற்றுடன் இன்று இவ்வளர்ச்சி இருந்தாலும், Rub off effect மூலம் பல சிறு நகரங்களுக்கும், பல்வேறு சமுதாயத்தளங்களுக்கும் இம்முன்னேற்றம் ஊடுருவுகிறது என்பதும் உண்மை. இத்தகைய முன்னேற்றம், அதுதரும் தன்னம்பிக்கை மற்றும் self-respect ஆகியவை இந்திய சமுதாயத்தில் பல நல்ல அடிப்படை மாற்றங்களை, சமூக நல்லிணக்கச் சூழல்களை கொண்டுவரவல்லவை. இச்சூழல்களை நன்றாக உபயோகப்படுத்தி நல்வழியில் நாட்டைக்கொண்டு செல்ல நல்ல தலைமை வேண்டும். சென்னில் ஒரு பழமொழி உண்டு: "When you are ready the master will appear before you" என்று. அதுபோல நல்ல நிலைக்கு நம் நாட்டவர் தயாராகையில் நல்ல நிலைக்கு இட்டுச்செல்லும் தலைவர்கள் நம் முன் "தோன்றுவார்கள்" என்று சொல்லத் தோன்றுகிறது.

said...

அருணகிரி, என்னுடைய பதிவில் அனானிமஸ் மற்றும் அதர்ஸ் பின்னூட்டமுடியாது. ஆகையால் கூத்தாடி நான் என்பவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய்ரிடுந்தார், அவருடைய கருத்தை அவருடைய ஈமெயிலை எடுத்துவிட்டு பதிந்துள்ளேன்.

கருத்து என்னுடையதல்ல. குழப்பத்திற்கு மன்னிக்கவும்

said...

மிக நல்ல யோசனைகள். ஆனால் அதைச் செயலாற்றும் அரசியல்வாதிகள் யாரும் இப்போது ஆட்சியில் இல்லையே. படிக்கும்போதே இப்படி எல்லாம் நடக்குமா என்ற கனவும் ஏற்படுகிறது. முக்கியமாக மத வழிபாட்டுத்தலங்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கினாலே போதும்.