Tuesday, May 23, 2006

இலவசக் கொத்தனாரின் வருகை ..நன்மைகள்.. புதையல்கள்

கொத்தனாரின் முதல் பதிவில் இப்படி எழுதியிருந்தார்

"அவரும் வேலை நேரம் வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு அப்புறமா வந்தார்."

இதில் உள்ள குத்தை பார்த்தீங்களா.

வேலையை முடித்துவிட்டு வந்தார் என எழுதுவதற்கு பதிலாக அலுவலகத்தில் "இருந்துவிட்டு" வந்தார் என்கிறார்.

இது ரொம்ப சரி நானும் இரண்டு வருடங்களாக் இந்த அலுவலக்த்தில் "இருக்கேன்"


அலுவலத்திலிடருந்து போனதால் அவரை அழைக்க என்னுடைய காரை எடுத்துப் போக வேண்டியதாயிற்று. வழக்கமாக் விருந்தாளிகளை அழைக்க என் மனைவியின் காரை எடுத்துக் கொண்டு போவேன்.

அது சுத்தமாக இருக்கும். காருக்குள் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதற்க்கு 3 வேளை பூஜையும் உண்டு.

ஆனால் என்னுடைய காரோ ஞாயிறு காலையில் இருக்கும் டாஸ்மார்க் கடைபோல்... பிச்சைக் காரன் வாந்தி எடுத்தைப் போல் குப்பையாக இருக்கும். இதில் விருந்தாளிகளை அழைத்துவருவதா என குற்ற உணர்ச்சியுடன் போனேன்.

ஆனால் கொத்தானாரோ "ஆ இந்த கார் இவ்வளவு சுத்தமா?" என ஆச்சரியப் பட்டார்.

கொத்தானார் சென்ற பிறகு நான் ஒரு முடிவோடு என் காரின் உள் புறங்களை சுத்தம் செய்ய கோதாவில் இறங்கி நன்றாக சுத்தப் படுத்திவிட்டேன்.

இதுதான் அவர் வந்ததால் விளைந்த நன்மை -1

சுத்தமாகும் கார்



இவ்வாறு சுத்தம் செய்யும் போது கிடைத்தப் புதையல்களின் விவரம் இதோ

1. 6 மாதங்களுக்கு முன் தொலைந்துபோன mp3 player - 1
2 திரையிசையில் பாரதியார் பாடல்கள் வட்டு - 1
3. வாங்கினவுடன் தொலைந்த கில்லட் ப்ளேட் - 1 காட்ரிட்ஜ்
4. பலமுறை உறைந்து உருகிய பீர் - 1 கேஸ்
5. நமத்துப் போன பாப்கார்ன் - 1 மினி சைஸ்

6. பிரான்ஸ் நாட்டுப் பொரியல் (French Fries) -1 மைக்ரோ மினி சைஸ்
7. கோழி எலும்பு - 2
8. சில்லரை நாணயங்கள் - 5 டாலர் மதிப்பிற்கு
9. காலி தண்ணீர் பாட்டில்கள் - 2

கொத்தனார் இலவசமாக வழங்கிய ஆலோசனையினால், ஒரு அரைவட்டத்தில் கொத்தி, ஒரு சிறு மதில் சுவர் கட்டி, புது புது ரோஜா செடிகள் நடப்பட்டன. இது நன்மை -2

இதைக் கொத்தும் போது புதையல் ஒன்றும் கிடைக்கவில்லை

44 comments:

said...

:) கலக்கல்..

said...

கொத்தனார் ஒரு இடத்துக்குப் போனா இத்தனை நன்மையா?!!

//இதைக் கொத்தும் போது புதையல் ஒன்றும் கிடைக்கவில்லை//
அது சரி.. கார்ல கிடைச்சதே ஏழு எட்டு வருசத்துக்குத் தாங்கும் போலிருக்கே!!! :)

said...

ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வந்ததை பற்றி 2 பதிவுகள் தான் போடப்பட்டது.

கொத்தனார் கால்கரிக்கு வந்ததை பற்றி 3 பதிவுகள் இதுவரை வந்தாச்சு.

கொத்தனார் ரேஞ்சே தனிதான்:-)))))

said...

//கொத்தானார் சென்ற பிறகு நான் ஒரு முடிவோடு என் காரின் உள் புறங்களை சுத்தம் செய்ய கோதாவில் இறங்கி நன்றாக சுத்தப் படுத்திவிட்டேன்.//

கொத்தனார் ஏறினதாலதான் கார் அசுத்தமாச்சுனு மறைமுகமா எதுவும் சொல்லலையே? :))

said...

tell me about it.

said...

இதுக்குத்தான் நல்ல அட்வைஸ் வரும்போது வுட்டுறக் கூடாதுன்றது:-)

said...

பராவாயில்லை சிவா, வீட்டையும் காரையும் இப்பவாது சுத்தம் பண்ணீங்களே!

அது சரி வாரா வாரம் புல்லு வெட்டிறீங்களா?

said...

/7. கோழி எலும்பு - 2//

பறவைக் காய்ச்சல் இருந்த கோழி எலும்பா அல்லது இல்லாத கோழி எலும்பா? அதுவும் இல்லாமல், இதில் ஒன்று அதில் ஒன்றா? விளக்கவும்! :0)

said...

:-)))))

said...

/ஆனால் கொத்தானாரோ "ஆ இந்த கார் இவ்வளவு சுத்தமா?" என ஆச்சரியப் பட்டார்.//

நெசமாத்தான் சொன்னாரா இல்ல இதுலையும் ஒரு குத்து இருக்குதா?

said...

//கொத்தனார் ஏறினதாலதான் கார் அசுத்தமாச்சுனு மறைமுகமா எதுவும் சொல்லலையே? :))//

ஆஹா. நான் போட்ட ஒரு வரி உள்குத்துக்கு இப்படி ஒரு பதி உள்குத்து பதிலா?

நல்லா இருங்க சாமி! :D

said...

//"ஆ இந்த கார் இவ்வளவு சுத்தமா?"

இது சத்தியமான உள்குத்துங்குறேன் :-).

//புதையல்களின் விவரம் இதோ

இப்படி ஒரு சின்ன லிஸ்ட்ட போட்டு என்ன குற்ற உணர்ச்சில தள்ளிட்டீங்களே சிவா சார்.

said...

//அலுவலத்திலிடருந்து போனதால் அவரை அழைக்க என்னுடைய காரை எடுத்துப் போக வேண்டியதாயிற்று. வழக்கமாக் விருந்தாளிகளை அழைக்க என் மனைவியின் காரை எடுத்துக் கொண்டு போவேன்.//

'இலவசக் கொத்தனாரை அழைக்கப்" என்பதைத் தானே சுருக்கமா "அலுவலத்திலிருந்து"ன்னு "சுருக்க"மாச் எழுதியிருக்கீங்க? :)

said...

செந்தழல் ரவி, நன்றி
நல்ல பெயர் செந்தழல் சூரியன் என்றல்லாவா இருக்கவேண்டும் :)))

said...

பொன்ஸ், ஆகையால் கொத்தனாரை அனைவரும் அழையுங்கள்

said...

செல்வன், இதுக்கே இப்படின்னா, இன்னும் அந்த பக்கத்து விஷயங்கள் நிறைய இருக்கே

said...

அருட்பெருங்கோ,

கிளப்பி விட்டுடிங்களே

said...

பட்ட், எதை சொல்வது

said...

துளசி மேடம், நீங்க எப்போ சொன்னிங்க காரை கழுவசொல்லி

said...

வெளிகண்ட நாதர்,

வீடும் ஒரு காரும் அவங்க பொறுப்பு. தோட்டமும் இன்னொரு காரும் எம்பொறுப்பு.

நம்ம இடம் எப்பவுமே இன்ஸ்ட்ருமென்ட் வொர்க் சாப் மாதிரியே இருக்கும்.

வெள்ளி கிழமை இரவே இந்த வார இறுதிக்குள் செய்ய வேண்டிய வேலைகள் அப்படின்னு ஒரு பட்டியலே வந்துரும்.

அது முடிச்சாதான் சாப்பாடே, இல்லேன்னா SubWay தான்.

புல்லு வெட்டுவதில் வல்லவன் நான்

said...

தூபாய்வாசி, இப்படி வயித்திலே புளி கரைச்சிட்டிங்களே. ஆபிஸில் காய்ச்சல்ன்ன்ய் டூப் விட்டு வீட்டிலே இருந்தாலும் அது பறவைக் காய்ச்சலா இருக்குமானெனு சந்தேகம் வரும் போலிருக்கே?

said...

குமரன், என்ன மௌன விரதமா, ஒரே சிரிப்பானா இருக்குதே

said...

சமுத்ரா,, அடுத்த பதிலைப் பார்க்கவும்

said...

கொத்தனார், அது நிஜமாவே குத்தா?

காரில் ஏறும் போது மன்னிக்கவும் சற்றே சுத்தம் குறைவாக இருக்கும் என்று நான் சொன்னதிற்கு நீங்கள் தம்பதி சமேதராரை எங்கள் காரை விட மிகச் சுத்தம் என சொன்னது மறந்துவிட்டது. என்காரில் ரகசிய டேப் ரிக்கார்டர் உள்ளது ;)

said...

கார்த்திக் உங்க லிஸ்ட் இதை விட பெரிதோ.

உடனடியாக சுத்தம் செய்யவும்.
ஆகஸ்டில் நான் ஆஸ்டின் வருகிறேன்.

நீங்கள் அந்தப் பக்கம் தானே

said...

சுந்தர், இதில் இப்படி ஒரு உள்குத்தா?

said...

சிவ சிவா

எத்தனை குத்தய்யா , ஆள் மாத்தி ஆள் உள்குத்து
வெளிக்குத்துன்னு மாத்தி மாத்தி குத்திக்கிறீங்களே.

முக்கியமா கிளற மறந்தது என்னவென்றால் கொத்ஸூ வின் பரோட்டாவோடு உங்க சால்னா
மேட்சிங் உட்டு பாத்தீங்களா.

said...

// என்னுடைய காரோ ஞாயிறு காலையில் இருக்கும் டாஸ்மார்க் கடைபோல்... பிச்சைக் காரன் வாந்தி எடுத்தைப் போல் குப்பையாக இருக்கும். இதில் விருந்தாளிகளை அழைத்துவருவதா என குற்ற உணர்ச்சியுடன் போனேன்.

ஆனால் கொத்தானாரோ "ஆ இந்த கார் இவ்வளவு சுத்தமா?" என ஆச்சரியப் பட்டார். //

சொந்தமாகச் செலவு செஞ்சு சூனியம் வச்சுக்கறதுன்னா இதுதானா கொத்ஸ் ?
:-))))))

said...

சிவா சார்,

அதுல நான் இது வரைக்கும் எதையுமே வெளிய எடுத்து போட்டததே இல்ல.. நம்மள நம்பி வந்தவுகளுக்கு அப்படி ஒரு ஆதரவு :-)

நான் இருக்குறது சிக்காகோவுல சார்..

said...

லதா அவர்களே, முதல் வரவிலேயெ மூட்டி விட்ரீங்களே. நானும் கொத்ஸும் சோழனும் பிசிராந்தையார் போன்ற நண்பர்கள் என அவருடைய பதிவில் நான் போட்டதை பார்க்கவில்லையா?

said...

பெருசு, சரியாக பாய்ண்டை பிடித்தீர்களெ

said...

கார்த்திக்,

சிகாகோக்கு வரும் போது கட்டயமாக ஏர்போர்ட்லேயே வாடகை கார் எடுத்துக்கிட்டு உங்களைப் பார்க்கிறேன்

said...

சாமி, எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகனும்.

முதல் மரியாதை யில் வரும் வசனம் என்று நினைக்கிறேன்.

பாயிண்ட புடிச்சத விடுங்க சிவா,

உண்மையச் சொல்லுங்க.

பரொட்டா+சால்னா+மீன் கொத்தி(கால்காரியில் வேற ப்ராண்ட்)
ஹெய்னிக்கன் இல்லாட்டி பட்வெய்ஸ்சர் வெச்சுக்கலாம்.

work-out ஆச்சா இல்லியா.

said...

சிவா சார்,

உங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியே.. கவல படாதிங்க ..

நீங்க வர்றதுகுள்ள கார் சுத்தம் செய்யபடும்.. நிஜமா ..

said...

பெருசு சார், நான் என்ன செய்தேன் என்பதை அவர்தானே சொல்லவேண்டும். நானே சொன்ன அது தற்பெருமையாயிடும் இல்லையா/

எனக்கு தன்னடக்கம் ஜாஸ்தி ஹி..ஹி...

அது சரி நீங்களும் ஒரு ட்ரிப் இந்த பக்கம் வந்து போகலாமே?

said...

//வெளிகண்ட நாதர்,

வீடும் ஒரு காரும் அவங்க பொறுப்பு. தோட்டமும் இன்னொரு காரும் எம்பொறுப்பு.//

பரவாயில்லை பொறுப்பை பகிர்ந்துக்கிறீங்க!
//அது முடிச்சாதான் சாப்பாடே, இல்லேன்னா SubWay தான்.// வெறும் பச்சக்காய்கறி பிரெட், தண்டனை ஜாஸ்தி தான் ;-)

said...

ஆஸ்டின் டெக்ஸாஸ் தானே சிவா?

வரும்போது ஒரு மடல் தட்டிவிடுங்கள்.தொலைபேசியிலாவது பேசலாம்

said...

//பெருசு சார், நான் என்ன செய்தேன் என்பதை அவர்தானே சொல்லவேண்டும். நானே சொன்ன அது தற்பெருமையாயிடும் இல்லையா//

அதுக்கு இன்னுமொரு பதிவு காத்திருக்கணும் போல இருக்கே.

said...

மாத்தி மாத்தி குத்திக்கலென்னா என்னய்யா தமிழன்? நல்லா குத்திக்கங்கய்யா. போங்கையா நீங்களும் உங்க வலைப்பூக்களும். மொக்க அருவாளாவுள்ளருக்கு? நாங்க மதுரக் காரனுங்கப்பு!

அன்பு,
சரவணன்

said...

//மாத்தி மாத்தி குத்திக்கலென்னா என்னய்யா தமிழன்? நல்லா குத்திக்கங்கய்யா. போங்கையா நீங்களும் உங்க வலைப்பூக்களும். மொக்க அருவாளாவுள்ளருக்கு? நாங்க மதுரக் காரனுங்கப்பு!

அன்பு,
சரவணன்//

ஐயா,

நாங்க எதோ சர்கஸ் கோமாளிகள் உடைந்தக் கட்டையைக் கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் அடித்துக் கொண்டு சிரிப்புக் காட்டுகிறோம். எங்க கையிலே அருவாளக் கொடுத்து ....அவ்வ்வ்வ்வ். நல்லாயிருங்கய்யா

ஆமா, மதுரைக்காரனுக்கு என்ன கொம்பா சாரி அரிவாளா மொளச்சிருக்கு

நாங்க கால்கரி தெரியுமா

said...

//பின்ன என்ன, தங்கக்கழுகும் இல்லை, மீன்கொத்தியும் இல்லை. சரி நம்ம சரக்குதான் இல்லை, உள்ளூர் சரக்காவது இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. கடைசியாக அவங்களே முடிவு செய்து தண்ணீரைப் போல இருக்கும் ஹெய்னிகன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.//
பாய்ண்டுக்கு வாங்கப்பு.
கொத்ஸூ ஒரு உண்மைய சொல்லிட்டாரு.
அடுத்தது பரொட்டா+சால்னா (கால்னா பெறாத மேட்டர்யா)
போட்டு ஒடயுங்கப்பா.
//நாங்க கால்கரி தெரியுமா //
கரிகால்சோழன் பரம்பரையாயிருக்குமோ.

//அதுக்கு இன்னுமொரு பதிவு காத்திருக்கணும் போல இருக்கே.//
கவுண்ட் ஏத்திகிட்டே போயிருவிங்களே.

said...

இன்னும் இது 50 வரலையா? அங்க கொத்தனார் இன்னும் பரோட்டாவுக்கு கொத்திகிட்டு இருக்காரு?!!

said...

அவர் சீனியர்.

said...

///இன்னும் இது 50 வரலையா? அங்க கொத்தனார் இன்னும் பரோட்டாவுக்கு கொத்திகிட்டு இருக்காரு?!!//

என்ன நாரதர் வேலையில் தனித்துவம் அடையறா மாதிரி இருக்கு?