Tuesday, May 02, 2006

பாரத பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்

மாண்புமிகு பாரத பிரதமர் Dr.மன்மோஹன் சிங் ஐயா அவர்களுக்கு, ஒரு சராசரி இந்தியக் குடிமகன் கண்ணீருடன் எழுதும் மடல்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும் 22 பேரை (ஒரு 9 வயது குழந்தை உட்பட) நம் எதிரிகள் வரிசையாக நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றதை.

இது நடந்து 48 மனிநேரமாகியும் உங்களிடமிருந்து அந்த எதிரிகளை ஒடுக்க ஒரு நடவடிக்கையும் இல்லை. ஏன்?

நம்மிடம் படைபலம் இல்லையா? தொழில்நுட்பம் இல்லையா? அல்லது நம் வீரர்களுக்கு தைரியமில்லையா?

ஐயா, எல்லாம் இருக்கிறது உங்களின் ஆணையைத் தவிர.

ஆணையுடுங்கள் நம் வீரர்கள் எதிரிகளை வென்று வெற்றியை உங்களுக்கு காணிக்கையாகத் தருவார்கள்.

நல்லாட்சி தந்தது போதும். நாமும் எதிரிகளுக்கு வல்லாட்சி எனக் காட்டும் தருணமிது.

அவர்களை ஓட ஒட விரட்டி அவர்கள் போகுமிடமெல்லாம் துரத்தி அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கவேண்டும். பாரதம் என்ற பெயர்க் கேட்டாலே எதிரிகள் கனவிலும் பயத்தால் உளறவேண்டும்.

சீக்கிய பரம்பரையில் வந்த சிங்கம் தாங்கள், உங்களுக்கா சொல்லவேண்டும்?

ஆனால் நீங்களோ உங்கள் எஜமானியம்மாவின் முன் முயல் போல் நிற்கீறீர்கள். அதிகாரம் இருப்பது உங்கள் கையில்.

உங்களை உங்கள் எஜமானியம்மா தடுத்தால் அவர்களையும் ஒதுக்கி வையுங்கள்

மக்களாகிய நாம் உங்கள் பக்கம்.

இன்னும் தயக்கம் ஏன்?

அன்புடன்

கால்கரி சிவா


cc to Mrs. Sonia Gandhi : Please allow Dr.Manmohan Singh to act on Terrorists

cc to The President of India : மேதகு பாரத ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, தங்கள் படித்த கல்லூரியில் படித்த ஜூனியரின் அன்பு வேண்டுகோள். தயவுசெய்து பாரத பிரதமருக்கு அறிவுரை சொல்லி எதிரிகளை அழிக்கச் சொல்லுங்கள்

12 comments:

said...

I endorse this letter.

said...

இந்த படிக்காத,பண்பில்லாத கோழைகளை அழிக்க,

படித்த,பதவியில் இருக்கும் சுயநல கோழைகள், வீரர்களாக மாற ஒரு இந்தியனாக எனக்கும் ஆசை தான்.

said...

யானும் அவ்வண்ணமே கோரும்!


[இப்ப இதுல ஒரு 'ஜெய்ஹிந்த்'-ஐ சேக்கலாம்னு நெனச்சேன்! அப்புறம் 'இப்படித்தானே பிரச்சினைகளை திசை திருப்பறாங்க; அத நாம செய்யக்கூடாது' அப்படீங்கற நெனப்பும் வந்தது! நெனப்புதானே பொழப்பைக் கெடுக்குது!]
பி.கு. இந்தப் பின் -பின்னூட்டம் வேணாம்னா, தயங்காம தூக்கிருங்க, கா.சிவா!

said...

சிவா,

பிரச்சனை ராணுவம் மூலம் தீர்க்கக்கூடியது அல்ல.மிகவும் சிக்கலானது.ஏனெனில் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது.போர் என வந்தால் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று அழித்துக்கொள்ளும் அளவுக்கு அபாயம் உள்ளது.

இதற்கு மன்மோகன் அரசு வேறு விதமாக தீர்வு கண்டு வருகிறது.அவ்வழியில் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.ஆனால் தாமதமாகும்.அதற்கு முட்டுக்கட்டை போடவே தீவிரவாதிகள் இம்மாதிரி செய்துகொண்டுள்ளனர்

said...

சிவா,
ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்? உங்க ஊர் புரட்சிக் கலைஞர் விசயகாந்த் இருக்காரு. அவர்ட சொல்லுங்க. பாகிஸ்தான் அணுகுண்டுகளை எல்லாம் தண்ணிக்குள்ள போட்டு அமுக்கி நமத்துப் போக வச்சிட மாட்டாரா.


//**
இது சும்மா தமாசுக்காக எழுதப்பட்டது.**//

said...

சிவா,கேட்பார் என்று நினைக்கின்றீர்களா? மத்தியில் ஆளுவது யாராக இருந்தாலும் (காங் அல்லது பாஜக) இந்தியா ஒரு சாஃப்ட் ஸ்டேட் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றார்கள்.


அடாவடியாக விமானத்தைக் கடத்திக் கொண்டுபோய், அதை தாலிபான் அரசின் துணையோடு பணயமாக வைத்து, படு பயங்கரத் தீவிரவாதிகளை விடுதலை செய்யச் சொல்லி மிரட்ட, உடனடியஆக பணிந்தது அன்றைய பாஜக அரசு. உலகில் வேறெந்த நாட்டிலும் ஒரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரே தீவிரவாதிகளையும் பணத்தையும் எடுத்துப் போய் அரசு என்ற பெயரில் நடந்த ஒரு காட்டுத்தர்பாரில் கொடுத்துவந்திருக்க மாட்டார்.


வெளியில் வந்தவுடன், பாகிஸ்தானில் மேடையேறி " என் முகத்தில் கரி பூசுங்கள் - ஏனெனில் இந்தியா இன்னும் அழிக்கப் படவில்லை" என் று கத்திய மவுலானா முகம்மது அசர் இன்னமும் அங்கிருந்து இந்திய முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு கட்டளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறான். இஸ்ரேல் பாணியில் அவனை தீர்த்துக் கட்டுவதை விடுங்கள், குறைந்த பட்சம் அவன் சுதந்திரமாக உலா வரும் பாகிஸ்தானின் மீது நிர்ப்பந்தங்களைக் கூட நம் அரசு ஏற்படுத்தவில்லை.


நாமே பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்காதபோது, மேற்கத்தய நாடுகள் எப்படி அவர்களை ஒதுக்கும். பாகிஸ்தான் தான் படீரென்று பல்டி அடித்து 'தீவிரவாதத்திற்கெதிராக முன்நிலையில் இருக்கும் நாடாக' தம்மை காட்டிக் கொண்டு, இந்திய முஸ்லிம்களை பயன்படுத்தி நாளொரு குண்டுவெடிப்பையும் பொழுதொரு படுகொலையையும் நிகழ்த்தி வருகிறதே.


அடுத்ததாக நமது இஸ்லாமிய சகோதரர்கள் எழுதுவார்கள், காஷ்மீரில் இருக்கும் இந்துக்கள் ஆரியர்கள், வந்தேறிகள். அவுரங்கசீப், கோரி,பாபர், ஷெர்ஷா, கஜினி முகம்மது வழிவந்தவர்கள் இந்நாட்டின் பூர்வ குடிகள் ஆகையினால் இவர்களை அவர்கள் விரட்டுவது சரியே என்று.


அவர்களுக்கு ஆதரவு தரும் இங்குள்ள அறிவுஜீவிக் கூட்டம் - பலவித போர்வைகளில்.


என்னத்தை சொல்ல. விதியைத் தான் நொந்துகொள்ள வேண்டும். இதற்குக் குருடர்களாகவாவது இருந்திருக்கலாம், குறைந்த பட்சம் நம்மை காமாலைக் கண்ணர்கள் என்று இவர்கள் சொல்வதற்காவது வழியிருந்திருக்காது அல்லவா, சுவனக் கனவுகளில் நிதர்சன அவலங்களை மறந்து களித்திருக்கலாம்.

said...

செல்வன்,


1998 வரை பாகிஸ்தானிடம் அணுகுண்டுக்கான ட்ரிக்கரிங் மெக்கானிஸம் கிடையாது. நாம் சோதனை நிகழ்த்தியவுடன் சீனாவுக்கு ஓடி கெஞ்சி வாங்கிவந்து வெடிக்க வைத்தார்கள்.


இப்போதும் கூட அவர்களது அணுகுண்டுகளின் உண்மையான நிலவரம் குறித்து பலவித அனுமானங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, அமெரிக்கா அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது என்பது.


அப்படியே இருக்கிறது, பாகிஸ்தான் அதைப்பிரயோகிக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அதன் பின்னரும் இந்தியா நிற்கும் (strategic depthன் காரணமாக). ஆனால், பாகிஸ்தான் உலகவரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும்.

உதாரணமாக, கார்கில் போரில் இந்தியா விழித்தெழுந்த பிறகு விமானங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் இராணுவத்தினரை அழிக்கத் துவங்கிய பின்னரும
பாகிஸ்தான் பதிலுக்கு தாக்கத் துவங்கவில்லை - காரணம் இந்த இம்பேலன்ஸ்தான். ஓடிச் சென்று அமெரிக்க உதவியை நாடினார்கள், ஹானரபில் ரெட்ரீட்டுக்காக.

ஆகையினால், நாம் இப்படியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

said...

நேசகுமார்,

காந்தஹாரில் நாம் மானத்தை இழந்த அன்று அருகில் அமர்ந்திருந்த ஒரு பங்காளாதேசி சிரித்த ஒரு எக்காள சிரிப்பு என் நெஞ்சில் இன்னும் நீங்காத ரணமாக உள்ளது.

உங்கள் கோபம் புரிகிறது.

உங்களின் பின்னூட்டத்தை படித்துவிட்டு சுயபச்சாதாபத்தால் சிறிது நேரம் கண்ணை மூடி "ஆண்டவா, இந்த தீவிரவாதிகளை ஒழிக்கக்கூடிய ஒரு அரசை என் தாய்நாட்டுக்குகொடு" என பிரார்த்தனை செய்தேன்.

என்னால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை

said...

செல்வன் சார்,

>>>>பிரச்சனை ராணுவம் மூலம் தீர்க்கக்கூடியது அல்ல.மிகவும் சிக்கலானது.ஏனெனில் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது.<<<<

தீவிரவியாதிகளின் மேல் தாக்குதல் நடத்தி அவர்களை இந்த நாட்டின் எல்லையிலிருந்து விரட்டினால் அது எப்படி பாகிஸ்தானின் நேரடி பிரச்சினையாகும்?

பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழையாமல் இந்தியா இந்த விலங்குகளை அழிக்கலாமே. அதற்கு ஏன் பிரதமர் (அதாவது ஆபிஸியல் பிரதமராக உள்ள ஸ்ரீ. மன்மோகன் சிங்) உத்தரவிடக் கூடாது?

என்னதான் பிஜேபியினர் ஹிந்துக்களை ஏமாற்றி வருபவர்களானாலும் தீவிரவாதிகளிடம் கண்டிப்பாக இருந்தனர்.

இப்போது பாருங்கள். இந்தியா முழுவது தீவிரவாதிகளின் வன்முறை வெறியாட்டத்தை. காங்கிரஸுக்கு தேவை காசுதான். அதற்காக மலத்தைகூட ரஸித்து உண்பார்கள்.

said...

தீவிரவியாதிகளின் மேல் தாக்குதல் நடத்தி அவர்களை இந்த நாட்டின் எல்லையிலிருந்து விரட்டினால் அது எப்படி பாகிஸ்தானின் நேரடி பிரச்சினையாகும்?பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழையாமல் இந்தியா இந்த விலங்குகளை அழிக்கலாமே. அதற்கு ஏன் பிரதமர் (அதாவது ஆபிஸியல் பிரதமராக உள்ள ஸ்ரீ. மன்மோகன் சிங்) உத்தரவிடக் கூடாது?////

அன்பின் மியூஸ்

காஷ்மீர் தீவிரவாதிகள் இருப்பது பாகிஸ்தானில்.அங்கே இருந்து வந்து குண்டு போட்டு விட்டு மீண்டும் எல்லை தாண்டி ஓடிவிடுகிறார்கள்.2000 அல்லது 3000 தீவிரவாதிகள் தான் இந்திய எல்லையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.இப்படி இருக்கும்போது அவர்கள் மீது இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்துவதெல்லாம் சாத்தியமில்லை.அணுகுண்டு பயத்தால் போரும் சாத்தியமில்லை.

இந்தியாவுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் பல்லை கடித்துக்கொண்டு இருப்பதுதான்.பாஜக அரசு வந்ததும் வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

1.பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக பணிய வைப்பது.சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி இந்தியா பாலிகார் அணையை கட்ட துவங்கியது.அந்த அணை கட்டப்பட்டால் இந்தியா நினைத்தால் அடுத்த வினாடியே பாகிஸ்தானுக்கு குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது.போரை விட வலிமையான ஆயுதம் தண்ணீர்.பாகிஸ்தான் இதை கடுமையாக எதிர்க்கிறது.ஆனால் அணை கட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

2.பாகிஸ்தானில் திருப்பி அடி கொடுப்பது.ஆப்கனில் 12 இந்திய தூதரகங்கள் ஈரட் முதலிய இடத்தில் ஏற்படுத்தப்பட்டு பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்துக்கு நிதியுதவி செய்தது.இப்போது பலூச் இயக்கம் கிட்டத்தட்ட ஒரு உள்நாட்டு போரையே பாகிஸ்தானில் ஏற்படுத்தியுள்ளது.வட மேற்கு பாகிஸ்தானில் பல இடங்கள் அரசு கட்டுப்பாட்டை விட்டு போய்விட்டன.

காங்கிரஸ் அரசு இந்த பிரச்சனையை அதே முறையில் வேறு விதத்தில் அணுகுகிறது.தற்போது காஷ்மீர் பிரச்சனை இரு அரசுகள் மத்தியில் தீர்க்கப்பட்டு விட்டது.வெளிப்படையாக இரு அரசுகளும் என்ன ஒப்பந்தம் எட்டப்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.எல்லை கட்டுப்பாடு கோட்டை எல்லையாக ஏற்பது, பாலிகார் அணை கட்டுவதை நிறுத்துவது,காஷ்மீர் எல்லையை மக்களுக்கு திறந்து விடுவது போன்றவை அந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துக்களாகும்.அமெரிக்கா தலையீடின் பெயரில் தான் இது சாத்தியமானது.

வாஜ்பாயி ஆரம்பித்ததை மன்மோகன் அரசு திறம்பட கையாள்கிறது.இந்தியா பாகிஸ்தான் இரு தலைவர்களும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்கு தேவைபடுவதால் காஷ்மீர் இப்போதைக்கு பிரசனை இல்லை.முஷாரப் போனபின் அல்லது அமெரிக்கா ஆப்கானை விட்டு விலகிய பின் என்ன நடக்கும் என சொல்ல முடியாது.

அப்போது இந்தியா பலூச்சையும், பாலிகாரையும் மீண்டும் தூசு தட்டும்.

reference:

1) http://outlookindia.com/full.asp?fodname=20060424&fname=InterviewMushahid+(F)&sid=1

2)http://www.hindu.com/2005/01/11/stories/2005011106871200.htm

said...

சிவா,

பாக் அனுகுண்டுகள் தயாரிக்க முடிந்தாலும் அவர்களின் யுரேனியம் செரிவூட்டுதல் தொழில்நுட்பம் இன்னும் மெச்சூயர் ஆகவில்லை.

இதனால் தான் ஏ.க்யூ.கானின் குண்டுகள் சாகாயில் வெடிக்கவில்லை என்கிறார்கள்.

ஈரானுக்கும்,லிபியாவுக்கும், வட-கொரியாவுக்கும் இந்த வேலை செய்யாத centrifugeகளை விற்று எமாற்றிவிட்டனர் நமது தம்பிகள்.

அப்புறம் இந்த மாதிரி படுகொலைகளுக்கு நம்ம ஆளுக திருப்பி பழிவாங்கிட்டு தான் இருக்காங்க.ஆனா வெளிய தெரியாது.

said...

//1998 வரை பாகிஸ்தானிடம் அணுகுண்டுக்கான ட்ரிக்கரிங் மெக்கானிஸம் கிடையாது. நாம் சோதனை நிகழ்த்தியவுடன் சீனாவுக்கு ஓடி கெஞ்சி வாங்கிவந்து வெடிக்க வைத்தார்கள்.
//

அன்பின் நேசகுமார்,

சீனாவிடம் இருந்து முன்பே அவர்கள் warhead டிசைன்களை பெற்றுவிட்டனர்.அந்த வார்ஹெட் டிசைனின் பெயர் மறந்து தொலைத்துவிட்டேன்.