Wednesday, May 24, 2006

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 3


ஏசு சிலுவையில் அறைந்துக் கொள்ளப்படுவதற்க்கு முதல் காரணம் :

மோசஸ்தான் முதன் முதலில் ஒரு தேவதூதர் வரப் போவதாக் அறிவித்தார். அந்த தூதர் வந்த மக்களின் பிரச்னைகளையும் துயரங்களையும் களையப் போவதாகச்சொன்னார்.

இது ஒரு பெரிய அரசியல் மோசடி.

யூதர்கள் எகிப்த்தில் அடிமைகளாக் இருந்தார்கள். இவ்வடிமைகளின் உன்னத தலைவர்தான் மோசஸ்.

மோசஸ் இந்த அடிமைகளுக்கு சுதந்திரத்தை வாங்கிதரபோவதாகவும் மேலும் யூதர்கள்தான் கடவுளின் செல்லக் குழந்தைகள் என நம்பவைத்தார்.

ஒரு வகையில் இந்த யூதர்கள் அந்த அடிமைத்தனத்தில் ஊறி அந்த வாழ்க்கைக்கு தங்களை பழக்கியிருந்தார்கள். அவர்களின் வாழ்க்கை ஒரு நரகமாய் இருந்தது. தினம் தினம் உழைப்பு. உழைக்காவிட்டால் எகிப்தியரிடம் கசையடி வாங்க வேண்டும்.

எகிப்தில் உள்ள மிகப் பெரிய ப்ரமிடுகளை கட்டியவர்கள் இவர்கள்தான். இப்போது கூட விஞ்ஞானிகள் வியக்கிறார்கள். இவ்வளவு பெரிய கற்களை இவ்வளவு இவ்வளவு உயரத்திற்க்கு கைகளால் தூக்கி சென்றது இந்த யூத அடிமைகளே. இந்த ப்ரமீடுகளைக் கட்டும்போது உயிர் விட்டவர் ஏராளம். ஒவ்வொரு எகிப்திய அரசனும் அரசியும் முடி சூடிக்கொண்டதும் அவர்களின் கல்லறையைக் கட்ட ஆரம்பித்துவிடுவர். இந்த கல்லறைகளைக் கட்டும் அடிமைகள்தாம் யூதர்கள்.

மோசஸ் மிக சாமர்த்தியமானவர். இந்த அடிமைகளிடம் போய் இந்த வேலைகளை செய்ய பிறந்தவர் நீங்கள் அல்ல. நீங்கள் உயர்குலத்தவர். கடவுளின் அருகில் இருக்கவேண்டியவர் என அந்த அடிமைகளை நம்ப வைத்தார்.

என்ன ஒரு மாற்றம் அடிமையிலிருந்து உயர்ந்த குலத்திற்கு.

மோசஸ் செய்தது ஒரு அற்புதம்.

வாக்குறுதிகள் தருவதற்கு சுலபம். அற்புதமான கனவுகளை தர, நம்பிக்கைகளை வளர்ப்பதற்கு வெகு சுலபம். ஆனால் அந்த கனவுளை நனவாக்குவது வெகு சிரமம்.

மோசஸ் இவைகளை வெகு சீக்கிரம் உணர்ந்தார்.

ஆகையால் யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றி அவர்களின் புண்ணிய பூமியை தேடி நடந்தார்.

பாலைவனத்தில் சில நாட்கள் அல்ல சில வாரங்கள் அல்ல 40 வருடங்கள்..

ஆம் 40 வருடங்கள் யூதர்களின் புண்ணிய பூமியை தேடி அலைந்தார்.

அவருடன் வந்தவர்களில் 3/4 வாசி பேர் இறந்துவிட்டனர்.

வழியில் சில குழந்தைகள் பிறந்து அவர்களும் வளர்ந்து விட்டார்கள்.

இவர்களின் புண்ணிய பூமியும் வரவில்லை இவர்களின் தேவதூதரும் வரவில்லை.

ஆனால் மோசஸ் நம்பிக்கையை மேலும் வளர்த்தார். நேற்று என்பது முடிந்து போன ஒன்று. இன்று என்பது தேய்ந்து விடும். நாளைதான் நல்ல காலம் பிறக்கும் என விடாது நம்பிக்கையை நெய் ஊற்றி வளர்த்தார்.

அந்த நாளை வரேவே போவதில்லை. ஆனால் நம்பிக்கை மட்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.

நாற்பதாண்டுகளின் பயணத்தில் சில பேர் நைசாக நழுவி ஒடிவிட்டனர். அவர்கள தான் தொலைந்து போன பழங்குடிகள் (The lost Tribe).

40 ஆண்டுகள் கடந்தும் இவர்கள் அந்த சொர்க்க பூமியை காணவும் இல்லை இவர்களின் தேவதூதர் வரவுமில்லை. மக்கள் சோர்ந்தனர்.

அந்த நேரத்தில் மோசஸும் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார்.

அவசர அவசரமாக இதுதான் நம்முடைய் இஸ்ரேல் என அந்த பாழாய் போன பாலைவனத்தை அறிவித்தார்.

அந்த மக்களுக்கு பெருத்த ஏமாற்றம். பாலாறும் தேனாறும் ஒடும் என்றல்லவா அழைத்து வந்தார் ஆனால் பாலைவனமாக இருக்கிறதே என நினைக்க ஆரம்பித்தனர்.

ஆனால் தேவதூதர் நாளை வந்து நம்மை மீட்பார் என நம்பிக்கை மட்டுமிருந்தது.

உடனே மோசஸும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கிறேன் எனக் கூறி அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்.

உண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

(அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார். காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மூக்கைப் பாருங்கள் அவர் யூத வழித் தோன்றல் என நிச்சய்மாகத் தெரியும்.)

அந்த யூதர்கள் எகிப்திலிருந்த்தை விட மோசமான நிலையில் வாழ்ந்தனர். ஆனால் தேவதூத நம்பிக்கை சுடர்விட்டு எரிந்தது.

ஏசுவிற்கு முன் சில பைத்தியகாரர்கள் தங்களை தேவதூதர் என சொல்லிக் கொண்டனர்.

தங்களின் சொல்லோணத் துன்பங்களை துடைக்க இந்த பைத்தியமா? இவனை நம்பினால் நம் நம்பிக்கை தகர்ந்துவிடுமே என அந்த "தேவதூதர்" களைக் கொன்றனர்.

இந்த நிலையில் ஏசு தன்னை கடவுளின் தூதுவர் என்றும் கடவுளின் மகனென்றும் கூறிக் கொண்டு வந்தது அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இருந்தது.

இது தான் ஏசு சிலுவையில் அறையப் பட முதல் காரணம்...

அதற்கு வித்திட்டவர் மோசஸ்தான்.

இரண்டாவது காரணம் ...

தொடரும்

32 comments:

said...

நல்ல பதிவு!

தொடரட்டும் உங்கள் நற்பணி!!

said...

தேவதூதர் கதை சொல்லீட்டீங்க, இதென் பின்புலம் என்னா?

said...

சிவபாலன், உங்களின் வழக்கமான பராட்டுதலுக்கு நன்றி

said...

வெளிகண்ட நாதர்,

தேவதூதர் என்ற கான்செப்ட் பற்றி தெரிந்துகொள்ளதான்

said...

வெளிகண்ட நாதர்,

தேவதூதர் என்ற கான்செப்ட் பற்றி தெரிந்துகொள்ளதான்

said...

>>>> யூதர்கள் எகிப்த்தில் அடிமைகளாக் இருந்தார்கள். <<<<

அப்போது எகிப்தியர்கள் பின்பற்றிய மதம்/மதங்கள் என்ன? அம்மதத்தின் கருத்துக்களும், பழக்கங்களும் என்ன? இவை பற்றிய் அறிய நாம் எந்த தகவல் ஊடகங்களை நம்ப வேண்டியுள்ளது? இம்மதத்தை அழித்தது யார்?

இவை இந்த தொடருக்குத் தொடர்பில்லாதவை. ஆனால், இந்த கட்டுரை எழுப்புபவை.

>>>> நாற்பதாண்டுகளின் பயணத்தில் சில பேர் நைசாக நழுவி ஒடிவிட்டனர். அவர்கள தான் தொலைந்து போன பழங்குடிகள் (The lost Tribe). <<<<

ஊட்டி போயிருக்கிறீர்களா?

>>>> (அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார். காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். ...) <<<<

பிற்காலத்தில் ஓஷோ (மோஸஸ் போல) வைத்த பல ரகசிய உண்மைகளில் மோஸஸ் தேடிய வாக்களிக்கப்பட்ட பூமி உண்மையில் காஷ்மீரே.

முதலில் கடவுளின் வாக்கு என்பதை பொய்யென கேலி செய்துவிட்டுப் பிற்காலத்தில் அந்த வாக்கை உண்மை என்கிற விதத்தில் பேசியது ஓஷோவின் தேய்மானத்தையும், தேவைகளையும் விளக்கும் ஒரு பார்வை.

said...

40 வருடகாலம் ஒருவர் தலமை ஏற்று அவர் மட்டும் சாகவில்லை என்றால் என்ன அர்த்தம்?

said...

aaaaaapppppaaaaada..

empaa osho ethavathu kilpansi matru sonna solupa ithu ellam romba pulipu

said...

ஏதோ ஒரு ஆங்கிலப் படம். பெயர் சட்டென்று நினைவில் மறுக்கின்றது. அதன் கதாசிறியர் ஓஷோதானோ என எண்ணத் தோன்றுகிறது. நல்ல விறுவிறுப்பான கதை. தொடரட்டும்.

அன்பு,
சரவணன்

said...

Muse,

உங்களிடம் கற்க நிறைய விஷயங்கள் உள்ளன. மேலும் மேலும் நல்ல விஷயங்களை உங்கள் பதிவில் எதிர்ப்பார்ர்கிறேன்

said...

//40 வருடகாலம் ஒருவர் தலமை ஏற்று அவர் மட்டும் சாகவில்லை என்றால் என்ன அர்த்தம்?//

அந்த காலத்திலும் கஷ்டப்பட்டது தொண்டர்கள் தான் என அர்த்தம்

said...

//aaaaaapppppaaaaada..

empaa osho ethavathu kilpansi matru sonna solupa ithu ellam romba pulipu //

ஒஷோ கில்பான்ஸி மாட்டர் சொன்னதாக சொல்லி ஊடகங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டன

said...

//ஏதோ ஒரு ஆங்கிலப் படம். பெயர் சட்டென்று நினைவில் மறுக்கின்றது. அதன் கதாசிறியர் ஓஷோதானோ என எண்ணத் தோன்றுகிறது. நல்ல விறுவிறுப்பான கதை. தொடரட்டும்.

அன்பு,
சரவணன்

//


அப்பு எனக்கே ஐஸா. நாங்க இருப்பது வடதுருவத்தின் அருகில்.

said...

ஆஹா சிவான்னே பிரமாதம்!


மோசஸ் ரொம்ப திறமைசாலி தான்.40 வருசம் தொண்டர்களை நம்ப வைக்கிறது பெரிய விசயம் தான்.

said...

நேசகுமார்,

நல்ல தகவல்கள்.

எப்படி இவ்வளவு விஷயங்களை படிக்கிறீர்கள்?

மேலும் ஒஷோ பெசியது ஒரு நக்கலுக்காகவே. தொடரில் அவர் இந்து, புத்த மற்றும் ஜைன மதங்களையும் சாடுகிறார்.

ஆனால் மோசஸைப் பற்றி நீங்கள் சொன்ன சரித்திர உண்மைகள் முழுவதும் சரி.

முகமது நபிகளை விமர்சிக்கவே விடுவதில்லை மேலும் அவரைப் பற்றி முரணாக பேசினாலேயே கலகம் மூழ்கின்றனவே

said...

//ஆனால் மோசஸைப் பற்றி நீங்கள் சொன்ன சரித்திர உண்மைகள் முழுவதும் சரி.//

அதெப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னான இயேசுவின் வரலாறே அல்லாடிக்கொண்டிருக்கிறது...

Survival of the fittest என்பது பரிணாமக் கொள்கை மட்டுமல்ல மனித வரலாற்றின் பின்னெலும்பே அதுதான். ஒவ்வொரு கட்டத்திலும் வல்லவன் எளியவனை அடக்கி ஆழ்வதும் வரலாற்றை தன் பக்கம் எழுதிக்கொள்வதும் நடந்து வந்திருக்கின்றன.

ஒஷோ சொல்வதுபோல எல்லா மதங்களும் இதற்குள் அடக்கம்...எல்லா மனிதனும், ஏதாவது ஒருவகையில், இதற்குள் அடக்கம்.

நபித்துவத்திற்கு அப்புறம் அவதாரக் கொள்கையா? நடத்துங்க சிவா. நல்லா போகுது தொடர்.

said...

Oh Yeah, Ben Hur is that movie...

Was Osho alive when that movie was first released?

"pOligaLai kandu EmArIdhIrgaL"

Cheers,
Saravanan

said...

சரவணய்யா,

ஒஷோ வாழ்ந்தது 1931 முதல் 1990 வரை.

பென் ஹெர் வரலாறு ஒஷோ பேசுவதும் வரலாறு.

இதில் எங்கையா பொய் வந்தது.

அடுத்து இராமயணத்தையும் தசாவதாரங்களையும் கிண்டல் செய்ய போகிறார்

said...

சிவாண்ணே!
உங்கள் ஒஷோ எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கிண்டல் செய்யட்டும். என்னுடைய ஆதங்கம் வேறு. நம்மவர்கள் பேசமட்டுமே செய்கிறார்கள்!

போலிகள் என்றேன். பொய்யெனவில்லை.

சிறிது தொலைவிலிருந்து பாருங்கள். உங்கள் ஓஷோ தான் தேவதூதன் என்று நாசுக்காக சொல்வதோ, தேவதூதர்களின் கதைகளைக் கேட்டு பொறாமையில் புலம்புவதோ புலப்படும்.

புலப்பட்டால் நலம்!

அன்பு,
சரவணன்

said...

சரவணய்யா,

தொடர் முடியட்டும் யார் போலி என்று புலப்படும் அது வரை தேவை பொறுமை

//நம்மவர்கள் பேசமட்டுமே செய்கிறார்கள்//


வேறு என்ன செய்ய வேண்டும் அல்லது செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்

said...

தகவலுக்கு...

பென் ஹர் ஒரு கற்பனைக் கதை ... வரலாறு அல்ல.

said...

எக்ஸாக்ட்லி, BEN HUR ஒரு சில வரலாற்று சம்பவங்களின் பின்னனியில் பின்னப்பட்ட நல்லதொரு கற்பனை. எனக்கு என்னவோ ஓஷோ அவ்வாறு ஒரு கற்பனை கதை பின்னியிருப்பதுபோல் தோன்றது. தொடர் நடக்கட்டும். என் முற்றுகையை நானும் வலுப்படுத்துகிறேன்.

அன்பு,
சரவணன்
பி.கு. என்னைப் பொருத்தவரை, தொல்பொருட் சுவடில்லா அனைத்து வரலாறும் கற்பனைக் கதைகளே.

said...

Thiru nesakumar avargaluku,

Please try to know the facts about Muhammad. Muhammad had led many wars. And more over if there war exists between India & Pakistan, will Our PM & their president take part in it?

Mansoor

said...

ஓஷொ எல்லாவற்றையும் கிண்டல் செய்வார் என்று படித்திருக்கிறென்...ஆனால் ஓஷொ எழுதியதை சிவா வாயிலாக இப்பொது தான் படிக்கிறேன். நல்ல தொடர். ஆபீசுக்கு லீவா?

வஜ்ரா ஷங்கர்.

said...

//if there war exists between India & Pakistan, will Our PM & their president take part in it?
//

மன்ஸூர் அவர்களே, 1400 வருடங்களுக்கு முன் அரசர்கள் போரில் பங்கு பெறும் வழக்கம் உண்டு

said...

Hi,

I would like to put forward certain points to correct some factual errors in the article regarding Egyptian history. It is now established in Egyptology, on the strength of archeological evidence, that Pyramids were not built by slaves. They were built by professional workers, who lived in townships near the respective pyramids. There are even incidences of these workers striking from work, demanding unpaid wages to be paid. So the Bibilical story about Jews being slaves who built Pyramids does not have any historiacl evidence. Nesakumar says in his comment that the Siddha concepts of body preservation after death was the precursor for the Egyptian customs. Egyptian Civilisation was quite ancient...we speak about 5000 years ago. Siddhars probably lived in the last few centuries (not withstanding the claims of 2-3000 years, the language used in their poems is unmistakable).

Sorry, I do not want to distract your article, keep going.

Gowrishankar

said...

கௌரி, நீங்கள் என்னுடன் படித்த 'யானை' என்ற கௌரி சங்கரா?

உங்கள் வாதம் சரியாக இருக்கலாம். ஓஷோவின் இந்தப் பேச்சு சரித்திரத்தைப் பற்றி அல்ல. தேவதூதர்களைப் பற்றிதான்

தங்கள் வருகைக்கு நன்றி

said...

கல்கரி சிவா சார் "நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 3" (http://sivacalgary.blogspot.com/2006/05/3_24.html) என்ற தங்கள் பதிவுக்கு என் பின்னூட்டம்

இது.

//மோசஸ்தான் முதன் முதலில் ஒரு தேவதூதர் வரப் போவதாக் அறிவித்தார். அந்த தூதர் வந்த மக்களின் பிரச்னைகளையும் துயரங்களையும்

களையப் போவதாகச்சொன்னார்.

இது ஒரு பெரிய அரசியல் மோசடி.//

இதில் என்ன மோசடி சார்...நல்ல செய்தி தானே.

//மோசஸ் மிக சாமர்த்தியமானவர்//

நீங்கள் சொல்வது போல் அவர் மிக சாமர்த்தியமானவராய் இருக்கவில்லை.
பைபிளில் யாத்திராகமம் 4:10 சொல்கிறது அவர் வாக்குவல்லவன் அல்ல; திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்று.ஒரு வேளை கடவுள் அவரை

மிக சாமர்த்தியமானவராக மாற்றியிருக்கலாம்.

//இவர்களின் புண்ணிய பூமியும் வரவில்லை இவர்களின் தேவதூதரும் வரவில்லை.//

இவர்கள் எதிர்பார்த்த தேவதூதரை பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.http://thoma4india.blogspot.com/2006/03/blog-post_07.html

//ஆனால் நம்பிக்கை மட்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.//
சரியாய் சொன்னீர்கள்.இன்றும் அந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு யூதரும்.

//அந்த நேரத்தில் மோசஸும் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார்.

அவசர அவசரமாக இதுதான் நம்முடைய் இஸ்ரேல் என அந்த பாழாய் போன பாலைவனத்தை அறிவித்தார்.//

இதெல்லாம் ஓவர் கதை.இப்படியெல்லாம் வரலாறில் எங்குமே இல்லை சார்.Sorry for that.பட் நல்லாஎழுதுரீங்க.really.உங்கள் எழுத்து திறமை அபாரம்.

//உடனே மோசஸும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கிறேன் எனக் கூறி அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்.

உண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டார்.//

நல்ல கதை சார்.தப்பித்து ஓடிய மோசஸை தான் இன்றைக்கும் யூதர்கள் கொண்டாடுகிறாக்களா?.கோழை அல்லது ஏமாற்றியவர் என தூசிக்க

மாட்டார்களா?சிந்திக்க வேண்டுகிறேன்.

//அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார்//
ஆனால் சார்,பைபிள் இப்படி சொல்கிறது.
உபாகமம்:34
5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன்

பிரேதக்குழியை அறியான்.
7. மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்;

//காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மூக்கைப்

பாருங்கள் அவர் யூத வழித் தோன்றல் என நிச்சய்மாகத் தெரியும்.)//

உண்மையிருக்கலாம்.ஆராய வேண்டும்.aBraham-Brahmin..Sara-SaraSWATHY...போன்ற ஆய்வுகள். :)

Any way good stuff.தொடரட்டும் தங்கள் தேடல்கள்.வாழ்த்துக்கள்.

said...

வணக்கம் தோமா சார், உங்களை போன்ற மூத்த பதிவாளர்கள் வருகை தந்தற்கு நன்றி.

ஐயா, எனக்கு சரித்திரங்களும் வேதங்களும் தெரியாது.

நான் ஓஷோ அவர்களின் புத்தகத்தை மொழிப் பெயர்க்கிறேன்.. அவ்வளவே..

அவர் மதங்களை மதத்தலைவர்களை மறுக்கிறார். அவருடைய சொற்பொழிவுகள் மனதை கவரும்.

சரித்திர உண்மைகளுக்கு முரணாக அவர் பேச்சு இருக்கலாம், ஆனால் அவருடைய கருத்துகள் என்னை கவர்ந்துள்ளன.

இவருடைய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நான் கொடுத்துள்ள சுட்டியில் உள்ளன.
தமிழில் அருமையாக மொழிபெயர்க்கப் ப்ட்ட புத்தகங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன.

said...

கால்கரி சிவா,
தங்கள் விளக்கத்துக்கு மிகவும் நன்றி.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

said...

சிவா,

நல்ல முயற்சி.

எனக்கு ஓஷோவை பற்றி உண்மையான அறிமுகம் கிடைத்தது ஒரு தியான வகுப்பில். அங்கே பல மாணவர்களுக்கு பாலியல் ரீதியான குற்ற உணர்ச்சிகள் மன அமைதிக்குத் தடையாக இருந்தன. அப்போது ஆசிரியர் "ஓஷோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று கேட்டார். அனைவரும் அவர் மோசமானவர் என்று நினைப்பதாகச் சொன்னோம். மேலும் அது எங்கள் சொந்தக்கருத்து அல்ல பிற ஊடகங்களின் மூலம் மட்டுமே அவரைப்பற்றி அறிந்திருந்தோம் என்பதை ஒப்புக்கொண்டோம்.

எனவே எங்களை அவருடையப் புத்தகங்களை படியுங்கள் அல்லது பேச்சைக் கேட்டுப்பாருங்கள் என்று சொன்னார். முதலில் அவருடைய பேச்சை ஒலி நாடவில் கேட்டேன். யாரிடமும் கேட்கமுடியாத சந்தேகங்களுக்கெல்லாம் அவரிடம் பதில் இருந்தது. அவருடைய தாக்குதல்கள் வெளிப்படையாக மதங்கள், மடாதிபதிகள், அரசியல்வாதிகள் மீதிருந்தாலும், அவை உண்மையில் தனிமனிதன் மேல் திணிக்கப்பட்ட சமூகக் கேடுகளுக்கு எதிரானதே.

எனக்கு மாப்பிள்ளைக் கொண்டாட்டம் (bachelor party) கொடுக்க வற்புறுத்திய அமெரிக்க நண்பர்களிடம், அவருடைய "காமத்திலிருந்து கடவுளுக்கு" (From sex to super consciousness) புத்தகத்தை கொடுத்தேன். அதை படித்துவிட்டு சொல்லுங்கள் வருகிறேன் என்றேன். புத்தகத்தைப் படித்த பின் அவர்கள்
அந்தப் பேச்சை நிறுத்தினார்கள்.

உங்களுடைய முயற்சியில் வலைபதிவாளர்களுக்கு அவரைப் பற்றி சரியான அறிமுகம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

said...

குலவுசனப்ரியன் அவர்களே,

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

From sex to super consciousness என்றப் புத்தகம் மிக நல்லப் புத்தகம்.
என்னைப் பொறுத்தவரையில் ஒஷோ தான் உண்மையான புரட்சித் தலைவர். நிஜமான பெரியார். மீதியெல்லாம் டூப்புகள்