Tuesday, May 16, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.1

சவூதி அரேபியாவிற்கு வழக்கமாக வெள்ளிக் கிழமை அதிகாலையில் விமானம் இருக்கும்.

இது தஹ்ரான் (நான் அங்கே இருக்கும் நாட்களில் தம்மாம் விமான நிலையம் இல்லை) போய் சேரும் போது மதிய உணவு நேரமாய் இருக்கும். மேலும் வெள்ளிக் கிழமை விசேஷ தொழுகை நாள். எல்லா அரேபியரும் உக்கிரமாக இருப்பார்கள்.

நாங்கள் பிளேனிலிருந்து இறங்கியவுடனேயே "எல்லா..எல்லா" என்று துரத்துவார்கள். ஏதோ ஆடு மாடுகளை துரத்துவதைப் போல்.

பிறகு இம்மிகிரேஷன் அங்கெ மற்றுமொரு அவமானம்.

அதைக் கடந்த பிறகு கஸ்டம்ஸ். உலகில் அதிக வெறுப்புடன் இருப்பவர்க்கு அந்த வேலைக் கொடுப்பார்கள் போலும். உங்கள் பெட்டியை தலைக்கீழாக கவிழ்த்து அதில் உள்ள எல்லாப் பொருட்களையும் குடைவார்கள். இவர்களின் புண்ணிய நாட்ட்டில் மது/போதை மருந்து போன்றவைகளை கடத்தி இவர்களின் நல் ஒழக்கத்திற்க்கு கேடு வந்துவிடுமென்ற பயம்.

மேலும் இந்து மத சின்னங்கள் கடவுளின் படங்கள் இவைகளை கண்டால் இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் சாமி வந்து ஆடுவார்கள். அவைகளை குப்பையில் எறிந்து திட்டி அவர்களின் "சகிப்பு" தன்மையைப் பறை சாற்றுவார்கள்.

ஒருமுறை என்னுடைய உறவினரின் திருமணப் போட்டோகளை வீசி ஏறிந்த அதிகாரி என்னிடம் சொன்ன காரணம் அதில் பெண்கள் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணியாமல் போட்டோ எடுத்துள்ளனர்.

நம் பெண்கள் புடவை அணிந்துள்ளது கூட அவருக்கு ஆபாசமாக தெரிந்தது யாருடைய தவறு.

பெட்டி சோதனை முடிந்ததும் அதை எடுத்துக் கொண்ட்டு போ என்று கத்துவார்கள். நான் பெட்டியை முக்கால் பாகம்தான் அடுக்கிக் கொண்டு போவேன். கூடவே சில பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வன். இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகளின் காட்டுக் கத்தலை தவிர்க்க. உடனடியாக பாக் செய்து இடத்தைக் காலி செய்துவிடுவேன்

இவர்களின் நாட்டுக்கு, இவர்களுக்கு உதவ வரும் வேலைக்காரர்களுக்கு, இவர்கள் காட்டும் மேன்மையான மனிதநேயம் இங்கிருந்து ஆரம்பமாகும்.

(முதன் முறையாக என்னுடைய தாயார் துபாய் வந்திருங்கிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரி அவரிடம் "எல்லா..எல்லா" என்று கத்தியிருக்கிறார். என்னுடைய தாயார் மிகவும் பயந்து போய் என்னிடம் வெளியே வந்து சொன்னார்கள். நான் அவருக்கு அளித்த பதில் "துபாய் காரர்கள் மிகவும் நாகரீகமானவர்கள்.....சவூதி மிக மோசமானவர்கள்" என்றேன். )

முதல் முறையாக சவூதி வருபவர் என்றால் நீங்கள் வெளியே வந்து மறுநாள் உங்கள் பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளப்படும் . உங்களை ஒரு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மலேரியாக்கான இரத்தம் பரிசோதனைச் செய்யப்பட்டு இரு வாரத்திற்க்குள் இக்காமா (Iqama) என்ற அடையாள அட்டை உங்களுக்கு அளிக்கப் படும்.

இது முஸ்லிம் களுக்கு பச்சை நிறத்திலும் மற்றவர்க்கு ப்ரௌன் நிறத்திலும் இருக்கும். இதில் உங்கள் புகைப்படம், உங்களின் ஸ்பான்சர் ,உங்கள் மதம் ஆகிய விளக்கங்கள் இருக்கும்.

உங்களுடைய குடும்பம் வந்த பிறகு உங்கள் மனைவியின் படமும் குழந்தைகளும் படமும் சேர்க்கபடும். உங்கள் மனைவி இஸ்லாமிய முறைப் படி முக்காடுப் போட்டு படத்தில் தோன்ற வேண்டும். உங்களுக்கு 9 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையும் இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்து அந்த ப்டத்தில் தோன்றவேண்டும்.

இதுதான் உங்களின் அடிமை சாசனம்.

இது உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக மாறிவிடவேண்டும்.

இது இல்லாமல் நீங்கள் வெளியே சென்றால் கைது ஆவதற்க்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு தனியாக அடையாள அட்டை கிடையாது. அவர்கள் அவர்களின் கணவருடன் தான் செல்ல வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு.

யாரிடமிருந்து? விபசாரத்தை கனவிலும் நினைக்காத பரிசுத்த தூயவர் அரேபியரிடமிருந்து.


பள்ளிக் குழந்தைகளின் பேருந்து நாங்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டிததின் எதிர்புறம் வரும். அவர்களை அழைத்து வர இந்த கட்டிடத்தில் உள்ள இந்தியப் பெண்மணிகள் சேர்ந்து நிற்பார்கள். குழந்தைகள் வந்தவுடன் அவர்களை அழைத்து வருவார்கள். ஒருமுறை என்னுடைய மகன் பஸ்ஸை தவறவிட்டுவிட்டான். அடுத்த பஸ்ஸில் வரக்கூடும் என என் மனைவி தனியாக நிற்க நேரிட்டது.

என் மனைவி இஸ்லாமிய முறையில் உடையணிந்து தலையில் முக்காடுக் கட்டி நின்றிருந்தும், தனியாக நிற்கும் ஒரு இந்திய அடிமைப் பெண்ணை ஒருவர் இல்லை 4/5 பேர்கள் காரை நிறுத்தி அழைதிருக்கிறார்கள். இவ்வளவும் அடுத்த பஸ் வரும் 15 நிமிடத்திற்குள். இது நடந்த நேரம் பகல் 12 மணிக்கு நடந்த இடம் நகரின் பிரதான சாலையில்.

இதே போல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருந்தால் அந்த ஆடவரின் முகம் பேர்ந்திருக்கும் ஈவ் டீஸிங்கில் கம்பி எண்ணியிருப்பர்.

ஆனால் நடந்தது சவூதி அரேபியா அல்லவா, அரேபியர்கள் ஒழுக்க சீலர்கள் அல்லவா, நம்முடைய பெண்கள் அடக்கமாக வீட்டிற்குள் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துவருவது போன்ற சாகச வேலைகள் செய்து அரேபியவர்களின் உணர்ச்சிகளை தூண்டலாமா? ஆகையால் தவறு நம்மிடத்தில் வைத்துக் கொண்டு அரேபியர்களை திட்டுவது உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் அன்றி வேரன்ன?

நவீன அடிமை முறைகள் பற்றி 10.2 இல்.....

21 comments:

said...

//மேலும் இந்து மத சின்னங்கள் கடவுளின் படங்கள் இவைகளை கண்டால் இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் சாமி வந்து ஆடுவார்கள். அவைகளை குப்பையில் எறிந்து திட்டி அவர்களின் "சகிப்பு" தன்மையைப் பறை சாற்றுவார்கள்.//

தற்போது காஷ்மீரத்தில் இது அரங்கேறி வருகிறது. வெகுவிரைவில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட சகிப்புத்தன்மையை பார்க்கலாம்.


Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

நேசகுமார் ஒரு இடத்தில் இப்படி பொருள்வரும் படி கூறி இருந்தார்: "ரவுடிப் பசங்க வீட்டுப் பெண்களை கிண்டல் செய்யும் போது, ரவுடிகளை திட்ட பயப்பட்டுக்கொண்டு, வீட்டுப் பெண்களின் முந்தானையய் சரி செய்யச்சொல்வது அது மட்டுமில்லமல், முந்தானை சரிந்ததினால் தான் அவன் கிண்டல் செய்தான் என்று நம்புவது".

இதில் ரவுடிகள் இஸ்லாமியர்கள். வீட்டுப் பெண் இந்து மதம், ரவுடியைத் தட்டிக் கேட்க தைரியமில்லாத சோப்ளாங்கி இந்து.

இப்படிப் பட்ட இந்துக்களுக்கு "சகிப்புத்தன்மையை" விளக்க இந்த பதிவு பயன்படட்டும்.
நம்புங்கள்! அப்படிபட்ட இந்துக்கள் நிரையவே இருகிறார்கள். (அவர்களை நான் திம்மிக்கள் என்பேன்)

வஜ்ரா ஷங்கர்.

said...

இது நடந்து 12 வருடங்கள் ஆகிறது..

Malaysiaவில் வேலை செய்துகொண்டு இருக்கும் போது,எனக்கும்,என்னுடைய மேல் அதிகாரிக்கும் நடந்தது.அவரும் இந்தியர் தான்.

ஏதோ பேசிக்கொண்டு இருக்கும் போது நடந்த உரையாடல்

நான்:சார் எனக்கு ஒரு Doubt, உங்கள் பெண்கள் ஏன் உடம்பு முழுவதும் மறைத்து ஆடை அணிகிறார்கள்?அது உங்கள் மதக்கட்டுப்பாடா அல்லது உங்கள் செளகரியத்திற்காகவா? என்றேன்.
உங்கள் மதம் அரேபியாவில் இருந்து வந்தது அங்கு உள்ள சீதோஷ்ண நிலமைக்கு தகுந்தவாறு அவர்கள் உடை அணிவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது.

அவர்:ஆம்,இது மதக்கட்டுப்பாடு தான்.இருந்தாலும்,பெண்கள் அணியும் ஆடைகளால் ஆண்கள் மோசமாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளதால்,அங்கி அணிந்துகொள்வது நல்லது என்றார்.

நான்:"நம் மாதிரி ஆண்கள் தவறு செய்துவிடுவோமோ என்ற பயத்தினால் அடுததவர்கள் மேல் ஏன் முக்காடு போடவேண்டும்,நாம் அல்லவா கண்ணை கட்டிக்கொள்ளவேண்டும்"என்றேன்.

இந்தக்கேள்வி அவரை மிகவும் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்.அதன் பிறகு எங்களுடைய realtionship
அவ்வளவு சிறப்பாக இல்லை.

சில சமயம் உண்மை பேசுவது கூட நல்ல நண்பர்களை இழக்கச்செய்துவிடும்.

said...

இவை இந்தியாவிலும் மெதுவாக பரவிகொண்டிருக்கிறது. என்ன வித்யாசம். இதை தங்களை முற்போக்குவாதிகளாக கற்பிதம் செய்துகொள்கிற ஹிந்துக்கள் செய்கிறார்கள்.

அப்புறம், இந்த "எல்லா, எல்லா" என்றால் என்ன?

said...

//குழந்தைகளை அழைத்துவருவது போன்ற சாகச வேலைகள் செய்து அரேபியவர்களின் உணர்ச்சிகளை தூண்டலாமா? ஆகையால் தவறு நம்மிடத்தில் வைத்துக் கொண்டு அரேபியர்களை திட்டுவது உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் அன்றி வேரன்ன?//
இது போன்ற பின்னூட்டங்கள் விரைவில் உங்களை தேடி வர வாழ்த்துக்கள்.
ஆரோக்கியம், இது போன்ற சகிப்புதன்மை நம் தமிழகத்தில் வராது என்பது என் நம்பிக்கை, என் வேண்டுதலும் கூட

said...

நேச குமார், உங்கள் பின்னூட்டம் பாதியில் நின்று விட்டதே ஏன்?

said...

ஆரோக்கியம், இல்லை இது தமிழ்நாடு வரை வராது.

said...

ஷங்கர், சற்றே கோபத்தை அடக்கிக் கொள்ளுங்கள்

said...

மியூஸ்..."Yalla!" என்பது அரபு மொழியில், நமது திருப்பதியில் கூவும் "ஜருகண்டி, ஜருகண்டி" தான்!! வேறேதுமில்லை...

இங்கு ஹீப்றூவிலும் அதே!! அப்படியே...ஆனால் அது கொஞ்சம் informal வார்த்தை.

வஜ்ரா ஷங்கர்.

said...

வடூவூர் குமார், முதல் வருகைக்கு நன்றி. உண்மையை சொல்லி நண்பர்களை இழப்பதில்லாமல் எதிரிகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.

யாரவது ஒருவர் உண்மையைச் சொல்லிதானே ஆகவேண்டும்

said...

சிவா அவர்களே,
புலிவாலை விட்டுவிடுவீர்கள் என நினைத்தேன். புலிவாலை உங்களால் விட முடியவில்லையா அல்லது புலி உங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறதா?
:))

said...

ம்யூஸ்,

எல்லா.. எல்லா என்றால் அரபியில் போ .. போ என்று அர்த்தம். சிலபேர் நம்மூரில் பிச்சைக் காரர்களையும் நாயையும் ஒரு வெறுப்புடன் போ போ என்று சொல்லுவார்களே அதைப் போல்தான் இதுவும்

said...

மகேஸ், புலிவாலை லாவகமாகத்தான் விடவேண்டும்

மேலும் as a Project Manager தொடங்கிய வேலையை செவ்வனே முடிக்கவேண்டும்

said...

இப்படிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும். மேலோட்டமாகப் பலருக்கு discrimination என்ற அளவில் தெரிந்திருந்தாலும், இப்படிப்பட்ட நேரடி சாட்சியங்கள்தான், எதிர்கொள்ள வேண்டிய அவமானங்கள் குறித்த உண்மையான ஒரு விழிப்பை ஏற்படுத்தும். பணம் சம்பாதிக்க அரபு செல்லும் இந்தியர்கள் அதற்காக செலவழிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் தெரிந்து கொள்வது மிக அவசியம். இதனை எப்படி புத்தகமாக வெளியிடுவது மற்றும் அதற்கு கால்கரி சிவாவின் ஆதரவு உண்டா என அறிய ஆசைப்படுகிறேன்.

said...

அருணகிரி,

என்னுடைய எழுத்துக்கள் ஒரு புத்தகத்திற்குறிய தகுதியுடையவை என நான் நினைக்கவில்லை. மேலும் என்னுடைய அனுபவங்கள் மிக சிறிதே.

said...

நாகை சிவா, வருகைக்கு நன்றி

சிவா, கால்கரி சிவா, நெருப்பு சிவா, சூடான் சிவா, நாகை சிவா என எங்கெங்கு நோக்கிலும் சிவாக்கள்

said...

ஆறுமுகம்,

உண்மை.

என்னுடைய மனைவி அங்கு நடத்திய குழந்தைக்களுக்கான ஸ்லோக கிளாஸுக்கு அதிக டிமாண்ட்.

ஆனால் சென்னையில் எங்கள் வீட்டில் நடக்கும் இந்த கிளாஸிற்க்கு படிப்பதற்கு யாருமில்லை

said...

இது குறித்த பல தரப்பட்ட சம்பவங்களையும் அனுபவங்களையும் தொகுத்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. உங்கள் எழுத்துகளில் கொஞ்சம் editorial changes தேவைப்படலாம். குறைந்தது ஒரு வலைப்புத்தகமாகவேனும் வெளிவருவது ஒரு நல்ல முதல் படியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

said...

//
நாகை சிவா, வருகைக்கு நன்றி

சிவா, கால்கரி சிவா, நெருப்பு சிவா, சூடான் சிவா, நாகை சிவா என எங்கெங்கு நோக்கிலும் சிவாக்கள்
//

எல்லாம் சிவமயம்!!

வஜ்ரா ஷங்கர்

said...

அருணகிரி,

தாங்களின் ஊக்கத்திற்க்கு நன்றி.

முகமூடி அண்ணே, தாடி வைத்த புத்தக ஆசிரியர்ன்னு என்னை திறானாய்வில் சேர்த்துப்பீங்களா

said...

>>> என்னுடைய எழுத்துக்கள் ஒரு புத்தகத்திற்குறிய தகுதியுடையவை என நான் நினைக்கவில்லை. மேலும் என்னுடைய அனுபவங்கள் மிக சிறிதே.<<<

அதை வாசகர்கள் முடிவு செய்யட்டுமே, சிவா.

எனக்கென்னமோ இவை ஒரு புத்தகத்திற்கு தகுதியுள்ளவையாகத்தான் தோன்றுகிறது. ஏதேனும் ஒரு பொது ஜன இதழில் வந்தால் இன்னும் சிறப்பான வரவேற்பை பெறும்.