Monday, May 29, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.2

அடிமை சாசனங்கள் எழுதுவதற்க்கு முன் அரசாங்கம் எத்தனை அடிமைகள் வேண்டும் என முடிவு செய்யும்.


இதற்காக ஒரு அமைச்சகம் உண்டு. கம்பெனிகள் அவைகளின் தேவைக்கேற்ப அமைச்சிகத்திடம் இத்தனை இஞ்சினியர்கள் , டாகடர்கள், குமாஸ்தாகள், டிரைவர்கள் வேண்டும் என அனுமதி கோருவார்கள்.

இவர்கள் சவூதிக்கு வந்தவுடன் அந்த கம்பெனியின் பொறுப்பில் வருவார்கள், இன்னொரு வார்த்தையில் அந்த கம்பெனியின் அடிமைகள்.

இவர்களின் விசா, அரசாங்க வேலைகள், இத்யாதிகளை கவனிக்க பப்ளிக் ரிலேஷன் ஆபிஸர்கள் இருப்பார்கள். இவர்களின் இன்னொரு பெயர் அடிமைகளை மேய்ப்பவர்.

இவரின் முக்கிய வேலையே வேலக்காரர்களின் நலத்தைப் பார்த்துக் கொள்ளதான். ஆனால் இவரோ கடவுளை விட அதிக பந்தா காட்டுவார்.

இவ்வாறு ஒரு முறை நான் நகரத்தில் கார் ஓட்டும் போது ஒரு சின்ன விபத்து.

நான் சென்ற கொண்டிருந்த வேகம் 20கிமீ மெதுவாக போகும் போது எனக்கு செங்குத்தாக தெருவில் சுமார் 60 கிமீ வேகத்தில் வந்த ஒரு பிக் அப்பை லேசாக என் வண்டியின் முன் பாகம் தொட்டது. அந்த பிக் அப் ஒரு சுற்று சுற்றி அங்கே பார்க் செய்திருந்த 5 கார்களை சேதப் படுத்தி விட்டது. நடந்த நேரம் இரவு 8 மணியளவில் நல்ல வேளை யாருக்கும் காயம் படவில்லை.

உடனடியாக் போலிஸ் வந்தாகி விட்டது, என்னுடை மானேஜர் ஜானும் போலிஸ் ஸ்டேசனில் ஆஜர். ஆனால் 'மேய்ப்பாளன்' ஐ மட்டும் பிடிக்க முடியவில்லை. இன்னொரு பார்ட்டி ஒரு அரேபியன் ஆகையால் அவனுக்கு 'மேய்ப்பாளன்' தேவையில்லை. 'மேய்ப்பாளன்' வரும் வரை என்னை லாக் அப்பில் போட்டுவிட்டார்கள் (சிறை கண்ட சிவா வாழ்க என தோழர்களின் குரல் கேட்கிறது). மறுநாள் காலை 'மேய்ப்பாளன்' வ்நது என்னை மீட்டான்.

இதுவே ஒரு புதன் இரவு நடந்திருந்தால் வியாழன் மற்றும் வெள்ளியன்று உள்ளே இருந்திருக்க வேண்டும்.

இதைப் பார்த்த என் நண்பர் ஒருவர். அவருடைய காரில் ஒரு தலையணையும் ஒரு போர்வையும் எப்போதும் வைத்திருப்பார். அவருக்கு அதில் தான் நல்ல தூக்கம் வருமாம்.

இன்னொரு நண்பர் ஒரு முறை அவருடைய குடும்பம் இந்தியாவிற்க்கு செல்ல விமான நிலையத்தில் வருகைகள் பகுதியில் அவர்களை இறக்கிவிட்டு காரை பார்க் செய்யும் போது ஒரு சின்ன இடி. இதற்க்கு இவர் சிறை செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அந்த குடும்பத்தினர்ப் பட்ட மனக் கஷ்ட்ம் ..... ஒன்றுமில்லை ........ நீங்கள் இவருக்கு நேர்ந்த கொடுமையை கேட்டால:

என்னுடைய் நண்பர் பெயர் ராவ் என்று வைத்துக் கொள்வோம். இவர் ஒரு சின்னக் கம்பெனியில் இன்ஸ்ட்ரூமெண்ட் டெக்மிஷியனாக வேலைப் பார்த்தார். இவர் ஒரு இந்து மேலும் ஒரு வெஜிடேரியன். இவருடைய கம்பெனியின் முதலாளி ஒரு உண்மையான் இஸ்லாமியர். இஸ்லாமியக் கொள்கைப் படி கார் இன்ஸுரன்ஸ் வாங்குவது தவறாம். ஆகையால் ராவிற்க்கு கார் இன்ஸூரன்ஸ் இல்லை.

இவர் ஒரு நாள் வேலை நிமித்தம் அருகில்லுள்ள ஊருக்கு போய் வரும்போது இவருக்கு பின்னால் வந்த ட்ரக் இவர் மேல் மோதி அது உருண்டு ட்ரக்கில் இருந்த அரேபிய கற்பிணிப் பெண் அங்கேயே உயிருழந்தார்

கோர்ட்டில் தவறு ராவ் மீதுதான் என தீர்ப்பு வந்தது !!!!!. இவர் இரத்தத் தொகை (Blood Money) 100,000 ரியாலை செலுத்திவிட்டு விடுதலைப் பெறலாம் . ஆனால் இவரின் முதலாளி ஒடி விட்டார்.

ராவ் சிறையில் சக கைதிகள் மற்றும் சிறைக்கு வருகை தரும் முட்டாவாக்களால் மதம் மாறினால் விடுதலை எனக் கூறி கட்டாயமாக் மதம் மாற்றப் பட்டார்.

இவருடைய் பெயர் அஹ்மத் ராவ் என மாற்றப் பட்டு பாஸ்போர்ட் இத்யாதி ஆவணங்களும் மாற்றப் பட்டன. சிறையில் கட்டயமாக புலால் உண்ண நிர்பந்திக்கப் பட்டார்.

இவருக்கு பின்னர் மன்னரின் 'மன்னிப்பால்' விடுதலைக் கிடைத்தது. ஆனால் ஒரு நிபந்தனை. இவர் 5 வருடங்கள் சவூதியில் இருந்து இஸ்லாமியக் கடைமை களை ஆற்றவேண்டும் எனக் கட்டளை.

பிறகு இவர் அரும் பாடு பட்டு இரண்டு வருடங்கள் கழித்து இவருடைய தாயாரின் உடல் நிலையைக் காட்டி இந்தியாவிற்கு வந்து இந்து மதத்திற்க்கு மீண்டார். இவர்தான் ஒருவகையில் நான் தமிழ்பதிவுகளில் எழுதக் காரணம். திரு சுவனப்ரியன் அவர்களின் ஒரு பதிவில் பதிலளிக்கப் போய் தமிழ்மணத்தில் புகுந்தேன்....


இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முனனிருந்த அடிமை முறையைக் காணலாம். உங்களின் எஜமானின் ஆதரவில்லாமல் ஒரு வேலையும் நடக்காது. அவரின் விருப்பத்திற்கு எதிராக வேறு வேலை மாற்றவோ அல்லது வேலையை விடவோ முடியவே முடியாது.


இவைகளைப் பற்றி 10.3 ல்

24 comments:

said...

கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்ப்பவர்கள் ராவுக்கு நடந்ததற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

said...

1) இத்தனை பேர் அங்க போறாங்களே இதெல்லாம் தெரிந்துதான் போறாங்களா? அல்லது கண் கெட்ட பிந்தான் சூரிய நமஸ்காரமா?

2) இவையெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் நிகழ்வுகளா? அல்லது இதைத்தான் எதிர்பார்க்கவேண்டுமா?

3) இந்த இரண்டிலும் உங்கள் அனுபவம் எப்படி?

said...

இந்த மத வெறியாட்டம் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் இன்று போல, முடிஞ்சா, டாவின்ஸிக் கோடு மாதிரி அந்த பக்கம் கதை கொஞ்சம் சொல்லுங்களேன் சிவா!

said...

என்ன சிவா இந்த மாதிரி பயமுடுத்துகிறீர்கள்??இப்போதுதான் கட்டுமானத்துறையில் நிறைய வேலை வருகிறது,போகலாமா என்ற யோஜனையில் இருந்தேன்.நிறைய யோசிக்க வேண்டும் போல் உள்ளதே!!

உங்கள் முந்தய பதிப்புகளின் மேல் எனக்கு ஒரு கண்தான்.

இப்பொழுதான் தமிழில் பின்னூட்டம் இட கற்றுக்கொண்டேன்.

said...

வடூவூர் குமார், என்னுடைய வார்த்தைகளைப் பார்த்து உங்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கத்தீர்கள்.

கார் இன்ஸுரன்ஸ் போன்ற சமாச்சாரங்களில் கவனமாக இருக்கவும்.

உங்கள் காண்ட்ராக்ட் ஐ நன்றாகப் படித்துவிட்டு கையொப்பமிடவும்.

கவனமாக இருக்கவும்.

நான் சொல்பவை தினசரி நடப்பவை அல்ல.

இவைகள் நான் இருந்த 10 வருடங்களில் நடந்தவை.

நான் துரஷ்டதிர்த்தமானவன். எனக்கு நடந்தவை உங்களுக்கு நடக்க வேண்டுமென அவசியமில்லை.

வேலை வீடு வேலை வீடு என இருந்தால் பிரச்னைகள் இல்லை.

என்னை போல் அனாவசியமாக ஊர் சுற்றாமல் இருந்தால் இவைகளை நீங்கள் சந்திக்கும் வாய்ப்புகள் குறைவு.

மேலும் சில உணர்ச்சிகளை காசுக்காக அடகு வைத்துவிட்டால் அரேபிய அனுபவங்கள் எழுத அவசியமிருக்காது.

உங்கள் வாழ்க்கையில் முடிவுகளை நீங்கள் தான் எடுக்கவேண்டும்

said...

கொத்தனாரே,

1. இந்த ரிஸ்க் பாக்டர் இருக்கிறதை தெரிந்தே நான் போனேன்.

2. இவைகள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் அல்ல ஆனால் அடிக்கடி நடப்பவை

said...

வெளிகண்ட நாதர், வேண்டாம் அவர்களின் சரித்திரம், மதங்களை எடுத்துப் பேச ஆரமித்தால் பிரச்னையில்தான் முடியும். அதற்காகத் தான் முதலிலேயெ டிஸ்க்ளைமெர்களை போட்டு விட்டேன்

said...

"வடூவூர் குமார், என்னுடைய வார்த்தைகளைப் பார்த்து உங்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கத்தீர்கள்"

பின்னே எதற்கு இந்த பந்தா பேச்சு எதாவது உருப்படியாக எலுதவம்.

பின்னே எதற்கு கனடாவில் இருந்து கொண்டு குப்பை கொட்டுகிறிர்.இந்தியாவில் ஜெண்டில் மெனாக? இருக்க வேண்டிதுதானே.

said...

அனானிமஸ் ஐயா, நான் என்ன ட்ரண்ட் செட்டரா? நான் சொல்வதை எல்லாரும் கேட்க வேண்டும் இல்லையென்றால்..... என சொன்னேனா.

ஐயா, கவனமாக இருங்கள். இங்கே வாழ இதையெல்லாம் தெரிந்துக் கொள்ளுங்கள் என்கின்றேன். இது தவறா?

அரபு நாடுகளில் சம்பள்ம் அதிகம் கிடைக்க காரணம் என்ன? வாழ்க்கைக் கஷ்டமாக இருப்பதால் தானே?

நான் கனடாவில் குப்பைக் கொட்டுவதாகவும் இந்தியாவில் ஜென் டில் மேனாக இருந்ததாகவும் யார் சொன்னது? இரண்டிலும் உண்மையில்லை

said...

முட்டாவாக்களை பற்றி கொஞ்சம் கேள்விபட்டுள்ளேன் ஆனால் அவர்களுக்கு மதம் மாற்றுவதும் ஒரு வேளை என்று தெரியவில்லை.

எத்தனை விதமாக யோசிக்கின்றனர் ஒருவனை மதம் மாற்ற!

said...

"இஸ்லாமியக் கொள்கைப் படி கார் இன்ஸுரன்ஸ் வாங்குவது தவறாம்"

கேனப்பயலுக!

said...

"இஸ்லாமியக் கொள்கைப் படி கார் இன்ஸுரன்ஸ் வாங்குவது தவறாம்"//

ஏன்?இது சரியா புரியலை.கார் இன்சூரன்ஸ் எடுக்க கூடாதுன்னு குரான்ல சொல்லிருக்கா?ஒரே குழப்பமா இருக்கே இது

said...

நன்றி சிவா.
ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.

said...

பின்னே எதற்கு இந்த பந்தா பேச்சு எதாவது உருப்படியாக எலுதவம்.
பின்னே எதற்கு கனடாவில் இருந்து கொண்டு குப்பை கொட்டுகிறிர்.இந்தியாவில் ஜெண்டில் மெனாக? இருக்க வேண்டிதுதானே.//

அவர் உருப்படியாகத் தான் எழுதுகிறார்.அரேபியாவின் உண்மையான முகத்தை வெளிச்சமிட்டு காட்டி அங்கு செல்லப்போகும் எத்தனையோ இந்தியர்களுக்கு அவரால் ஆன உதவியை செய்துள்ளார்.

அவர் எங்கே இருப்பது என்பது அவர் விருப்பம்.கனடாவிலும் அவர் ஜென்டில்மேனாகத் தான் இருக்கிறார்.

said...

"இஸ்லாமியக் கொள்கைப் படி கார் இன்ஸுரன்ஸ் வாங்குவது தவறாம்"

இது தொழிலாளிக்கு மட்டும்தானா, இல்லை முதலாளிகளுக்கும் சேர்த்தா? முதலாளிகளுக்கும் இல்லை என்றால், கார் ஆக்ஸிடண்ட் ஆனால் இந்த முதலாளிகளுக்கு அல்லாவோ, அல்லது அவரது தூதர் யாரவதோ பணம் தருவார்களா?

இம்முதலாளிகள் பெரும் பணக்காரர்களாகவிருப்பதால் இது போன்ற பணம் தேவையில்லாமல் இருக்கலாம். அங்கனமிருப்பின் இன்ஷூரன்ஸ் என்பதே அங்கு இருக்காது போலிருக்கிறதே.

said...

நீங்கள் சிரியான என்கிற படம் பார்த்தீர்களா....

பாகிஸ்தானிய ஏழை முஸ்லீம்கள் அரபு நாடுகளில் படும் பாடு, வேலை போய்விட்டால் எப்படி முட்டாவாக்கள் அவர்களை ஜிஹாதிற்கு பணிக்கிறார்கள் என்பதெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.

said...

வடூவூர் குமார், என்னுடைய இன்னொரு அனுபவம்:

1997'ச் நான் சவூதியிலிருந்து வரும் போது இனிமேல் அரபு நாடுகளுக்கு செல்ல போவதில்லை என்றுதான் இந்தியாவிற்கு திரும்பி வந்தேன்.

அபுதாபியில் இந்த கவர்மெண்ட் கம்பெனியில் அவர்களாக என்னை திரும்பக் கூப்பிட்டார்கள்.

நான் அங்கே உள்ள நணபர்களிடம் அங்குள்ள நிலைமையைக் கேட்டன்.

அவர்களும் யுஏஈ சவூதிபோலில்லை. நமக்கு நல்ல மதிப்பு. சமாதன பூங்கா, என சொன்னார்கள். அவர்களிடம் குறை இல்லை. அவர்கள் பார்வையில் என்னுடைய தேவையைப் பார்த்தது தான் குறை. அவர்களுக்கு சரி என்று பட்டது எனக்கு சரியாக இருக்கவில்லை.

தேவைகள் மாறலாம் உணர்ச்சிகள் வேறுபடலாம்

ஆகையால் என்னுடைய அனுபவங்களை ஒரு பக்கம் வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ரிஸ்க் பாக்டர். இந்த பிரச்னைகள் எப்படிக் கையாளலாம் என உங்கெளுக்கென்று ஒரு யோசனை இருக்கும். சிலவேளை இவைகள் உங்களுக்கு பிரச்னைகளாகவே தோன்றாது.

வாழ்த்துகள் வெற்றி பெற

said...

ம்யூஸ்,

சில பேர்கள் இன்ஸுரன்ஸ் வாங்குவதில்லை, வட்டி வாங்குவதில்லை. வங்கிகளில் இஸ்லாமிய அக்கௌண்ட் வைத்துள்ளவர்களுக்கு வங்கி வட்டிக் கொடுக்காது அதேபோல் அவர்களுக்கு வட்டியில்லா கடன் உண்டு.

இது நம் ஊர் முஸ்லிம்களுக்கும் உண்டா என்று தெரியவில்லை.

இருக்கும் பட்சத்தில் அங்கே
வட்டியில்லா கடன் வாங்கி இங்கே அதிக வட்டிக்கு விட்டு நம்மாட்கள் பணக்காரர் ஆயிருப்பர்

said...

ஷங்கர், நான் சிரியானா படம் இன்னும் பார்க்கவில்லை. டிவிடி இன்னும் வரவில்லை

said...

//இம்முதலாளிகள் பெரும் பணக்காரர்களாகவிருப்பதால் இது போன்ற பணம் தேவையில்லாமல் இருக்கலாம். அங்கனமிருப்பின் இன்ஷூரன்ஸ் என்பதே அங்கு இருக்காது போலிருக்கிறதே//

ம்யூஸ், கார் நீங்கள் வாங்கும் பட்சத்தில் கார் இன்ஸுரன்ஸ் கட்டாயம். உங்களின் எஜமானருக்கு அந்த க்ட்டாயம் இல்லை. சவூதியில் முக்கால் வாசி கம்பெனிகார் தான்

said...

விசிறி அவர்களே,

தங்களின் முதல் வருகைக்கு நன்றி. சொல்லிட்டேனே. என்னுடைய பழைய பதிவுகளை பாருங்கள்.

ஆனாலும் சுருக்கமாக:

நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்
நிறைய பணம் கிடைத்தது
நிறைய தமிழ்ப் படம் பார்க்கமுடிந்தது

உங்களின் கவிதைகள் உலகதரமாக உள்ளது.

said...

Dear Siva

Please read this interesting story and pass your comments on it.

http://ia.rediff.com/news/2006/may/31bsp.htm?q=tp&file=.htm

Thanks
Rajan

said...

ராஜன், நன்றி. என்னுடைய அடுத்த பாகம் இதைப் பற்றிதான்

said...

Dear Siva,

There is an article in Reader's digest(Indian Eddtion) on march 2005. The name of the article is "torure and terror in saudi arabia". It's a narration of Pat simphson (A proffessional, accused for a crime which he didn't commit). He spend his 2years in the dark corners of the Riyadh jails.. It's a very intresting article. People who wants to fly here shoud read it and think twice.

A Nameless friend....