Thursday, May 04, 2006

பகுத்தறிவாளர் பேச்சும் ... பார்ப்பணரின் பதிலும்

இரா.மோகன், தேனி

கே: ' பொழுதுபோக்க டி.வி இல்லாததால்தான், எழைகள் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர். மக்கள் தொகையை குறைக்கவே இலவச கலர் டி.வி. தரப்ப்படுகிறது- என்று கூறும் திராவிடக் கழக தலைவர் கி.வீரமணியின் கண்டுபிடிப்பு பற்றி?

ப : இதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. டெலிவிஷன் ஒரு கருத்தடை சாதனம் என்ற கண்டுபிடிப்பை வீரமணி கூறியிருக்கிறார். கலைஞர் இலவசமாகத் தருவது 'கருத்தடை சாதனமே தவிர, வெறொன்றுமில்லை' என்றும் கூறியிருக்கிறார்


நன்றி : துக்ளக்

33 comments:

said...

சும்மா நச்சுன்னு இருக்கு...அவர்கள் பாசறையில் பயின்றவர்கள் தானே..ஆங்கில மணி அதிகமா கொடுத்தால் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் அடிப்பவர் தானே 'வீர'மணி..அதாவது தமிழ் நாட்டுல தமிழனுக்கு பொழுது போலேனா 'அது' தானா ?? நல்ல பகுத்தறிவு கூட்டமய்யா..

மாயக்கூத்தன் கிருஷ்ணன்

said...

மாயா,

வருகைக்கு நன்றி. பகுத்தறிவு தலைவர்கள் கற்புக்காக போராடுவார்கள் 4 / 5 மனைவிகளை வைத்துக் கொண்டு

said...

அசிங்கமா பேசாதீங்க சிவா. தெரிஞ்சா பேசணும். 4/5 மனைவி என்பதெல்லாம் கிடையவே கிடையாது. ஒண்ணு தான் மனைவி. மத்ததெல்லாம் துணைவி (ஹிஹி..தமிளு..பூந்து வெளயாடுது!)

said...

கற்பு நிலை என்று சொல்ல வந்தால்
பெண்களுக்கு மட்டுமே என்று வைப்போம்

மறந்து விடாதீர்கள் சிவா! 3, 4 மனைவிகளை வைத்திருப்பதில் எந்தப் பண்பாடும் அழிந்துவிடவில்லை. ஒருத்தி 3, 4 ஆண்களுடனே உடலுறவு கொண்டால் தான் பண்பாடு அழிந்துவிடும்.

ஐவரை மணந்த பொதுமகள் பாஞ்சாலியின் பொய்க்கதையை ஊரெல்லாம் பரப்பும் ஆரிய பார்ப்பனர்களின் அடிவருடியான உங்களுக்கு திராவிடத் தலைவர்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. அதனைத் தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.

said...

என்ன சிவா அண்ணா. நான் தான் மேலே உள்ள பின்னூட்டம் போட்டேன். என் போலி இல்லை. அதனால் துணிவாக அனுமதியுங்கள். எல்லாம் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதால் வந்த விளைவு. :)

said...

குமரா, ஆபிசில் மீட்டிங்னு சொல்லி பிஸ்கோத், கோக் எல்லாம் கொடுத்து உக்கரா வச்சிட்டாங்க. அதுதான் லேட் மத்தபடி போலி எனக்கு போளி (கிறுக்கன் நன்றி)

said...

மாயவ, தமிளே கொஞ்ச்ம் அடக்கிங்க யாராவது டாக்டர் பட்டம் கொடுத்துருவாங்க.

ஆமா. உங்க ஊரிலே கிடச்ச கல்வெட்டுடைய எபெக்ட் என்னாச்சி?

said...

//மறந்து விடாதீர்கள் சிவா! 3, 4 மனைவிகளை வைத்திருப்பதில் எந்தப் பண்பாடும் அழிந்துவிடவில்லை. ஒருத்தி 3, 4 ஆண்களுடனே உடலுறவு கொண்டால் தான் பண்பாடு அழிந்துவிடும்.//

குமரன்..முதலில் நீங்கள் சீரியசாக சொல்வதாக நினைத்து மாங்கு மாங்கென்று நான் ஒரு பின்னூட்டம் டைப்படித்தேன். மீண்டும் ஒரு முறை உங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியினை படித்த பிறகே உங்களின் 'உள் குத்து' புரிந்தது. சூப்பர் ஆப்பு.

சிவா..கல்வெட்டை இப்போ தானே கண்டு பிடிச்சிருக்காய்ங்க... சீக்கிரம் என்னன்னு சொல்லிடுவாய்ங்க ஒன்னுமொரு 20 வருஷத்திலே.

said...

சிவா,

திராவிடர் கழகத்தின் ஏடான விடுதலையில் வந்த வீரமணியின் பேச்சு விபரம் இதோ. http://www.viduthalai.com/20060424/asi.html

"அடுத்து ஏழை மக்களுக்குப் பொழுது போக்கிற்காக வண்ணத் தொலைக்காட்சிகள் தரப்படும் என்று கலைஞர் அவர்கள் அறிவித்தார். பொருளாதார நிபுணர்கள் எழுதியிருக்கின்றார்கள். இந்தியாவில் ஜனத்தொகை கட்டுப்படுத்த வேண்டும். பெருகிக் கொண்டே போகிறது. அதற்கு என்ன காரணம் என்று எழுதினார்கள். ஏழைகளுக்கெல்லாம் ஒரே பொழுதுபோக்கு அந்த பொழுது போக்குதானய்யா. அதனால் தான் நிறைய குழந்தை பெற்றுக் கொண்டேயிருக்கின்றார்கள். ஏழைகளுக்குத்தான் அதிக குழந்தை பிறந்துகொண்டேயிருக்கிறது என்று எழுதினார்கள்.

ஏழைகளுக்கு கொஞ்சம் பொழுது போக்கு வேண்டுமே என்ற அந்த கண்ணோட்டத்தோடு பார்த்து கலர் டி.வி. கொடுப்போம் என்று கலைஞர் சொன்னார். அது கொடுக்கிறவரைப் பொறுத்தது. வாங்குகிறவரைப் பொறுத்தது."

இதை நம்புவதோ அல்லது துக்ளக்கை நம்புவதோ அவர் அவர் சார்ந்து இருக்கும் நிலையை பொருத்தது.

said...

ஐயோ! வீரமணியா இப்படியெல்லாம் உளறியிருப்பது...ஒரு திட்டத்தை ஆதரிக்க எதுவும் பேசுவதா! செம்மொழியில் "கலர் டீவி", தங்கத் தாலி என்றெல்லாம் இலவசக் கூச்சல்கள் நிறைந்த இந்தத் தேர்தலில் இவரது கூச்சல் வேற....வெறுப்பாய் இருக்கிறது.

said...

//ஐயோ! வீரமணியா இப்படியெல்லாம் உளறியிருப்பது...//

ஜிரா, என்னைக்கு வீரமணி பேசியிருக்கார் எப்பவுமே உளறல்தான்

பகுத்தறிவு என்றால் உளறல் என்பது என் தாழ்மையானக் கருத்து

said...

பகுத்தறிவு என்றால் உளறல் என்பது என் தாழ்மையானக் கருத்து//

பகுத்தறிவு என்பது நாத்திகமானால் அதுவும் ஒரு இறை தேடல்தான் சிவா.கடவுளை காண முடியாமல் தான் அவர்கள் நம்புவதில்லை.மிகச்சிறந்த பகுத்தறிவாளர்கள் நம்மிடையே உள்ளனர், தருமி, ரோசா வசந்த், ரவி சிரினிவாஸ் போல்.

நீங்கள் சொல்வது போலி மதசார்பின்மை என நினைக்கிறேன்.அது ஓட்டுக்காக அரசியல்வாதிகள் போடும் ஒரு வேஷம்.

said...

//பகுத்தறிவு என்றால் உளறல் என்பது என் தாழ்மையானக் கருத்து //

'தமிழ்நாட்டில்' என்று prefix சேர்த்துக் கொள்ளவும்

said...

//
கலைஞர் இலவசமாகத் தருவது 'கருத்தடை சாதனமே தவிர, வெறொன்றுமில்லை' என்றும் கூறியிருக்கிறார்
//

இன்றய தேதியில் ஒரு டீ.வி யின் விலை, குறைந்தது ௹ 5000 (இதுவே மிகக் குறைவான மதிப்பீடு தான்).

இது தான், மிக costly யான கருத்தடை சாதனம்.!!

அல்லது,

பைசா செலவின்றி, அரசு மருத்துவமனையில் தம்பதியர் இருவரும் கருத்தடை ஆப்ரேஷன் செய்து கொண்டு, "அந்த" பொழுது போக்கை சந்தோஷமாகத் தொடரலாம்!!

ஷங்கர்.

said...

//பகுத்தறிவு என்றாலே உளறலா//

அய்யகோ..படுபயங்கரமான பிளாக்குக்கு வந்திருக்கிறேனா?..சரி விடுங்கள்..


ஒரு தகவல்:

வீரமணி எப்போதும் பி.ஜெ.பிக்கு எதிரணிக்கு ஜீங்சா போடுபவர்:)

said...

செல்வன், தேடல் என்று வைத்துக் கொள்வோம். இறை தேடலே ஒரு இறுத்தலை நோக்கி தேடுவது தானே.

பகுத்தறிவு என்பது தமிழ்நாட்டில் (நன்றி மாயவரத்தான்) ஒர் உளறலே.
சில வார்த்தைகள் போதைதரும் அதில் ஒன்று 'பகுத்தறிவு' என்பது. அந்த மாதிரி சில வார்த்தைகளை வைத்துதான் இந்த திராவிட சம்சாரிகள் (சாமியாரின் எதிர்பதம்?) பல எத்தர்களை (பக்தரின் எதிர்பதம்?) ஏமாற்றுகிறார்கள். அற்புதர்கள் ஒரு வழி என்றால் பகுத்தறிவாளர்கள் எதிர்வழி ஆனால் இவர்களின் நோக்கம் ஒன்றுதான் அது "ஆளாதிக்கம்". பணம் இரண்டாம் பட்சம்தான். ("பணக்காரராய் இருப்பதற்கு கஷ்டமாயிருக்கிறது" -வேறு யார் நம்ம பில் கேட்ஸ் தான் இவ்வாறு சொன்னது. பில் கவலையை விடுங்கள் உங்கள் கஷ்டத்தை ஏற்றுக் கொள்ள இந்த தன்னலமற்ற கால்கரி ரெடி)

இவர்களை இனம் கண்டு நல்லவற்றை எடுத்துக் கொண்டு தீயவைகளை எறிவதுதான் பகுத்தறிவு என்பதும் என் தாழ்மையானக் கருத்து.

இலவசங்கள், அதிநவீன கருத்தடை சாதனங்கள்(டிவி), ரிசர்வேஷன், சிலைகள், அந்த சிலைக்களுக்கு மாலைகள், கற்பு, மானம், வீரம், பூணூல் அறுப்பு, நோன்பு கஞ்சிக் குடிப்பு போன்றவை பகுத்தறிவு என்றால் அவை உளறலே அன்றி வேறு என்ன?

//மிகச்சிறந்த பகுத்தறிவாளர்கள் நம்மிடையே உள்ளனர், தருமி, ரோசா வசந்த், ரவி சிரினிவாஸ் போல்.//

அவர்கள் மேல் என்னுடைய மரியாதை என்றைக்கும் உண்டு

said...

ஷங்கர், உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது என் ஊகம். அதற்க்குள் அவ்வளவு உஷாரா?! :)

said...

முத்து,

நான் ஒன்றும் பயங்கரவாதியில்லை. கவலை வேண்டாம்.

பகுத்தறிவு = உளறல் விளக்கம் மேலே

said...

//"பகுத்தறிவாளர் பேச்சும் ... பார்பணரின் பதிலும்" //
நல்ல அரசியால் பண்ணிறீங்க சிவா! எலெக்ஷன் டைம்ல தமிழ்நாட்ல இருக்கணும்!

said...

இந்த மாதிரி நிறையப் பகுத்தறிவு உளறல் எல்லாம் எத்தனை எடுத்துப் போட்டாலும் யாரும் ஒத்துக்கப் போறதில்லை.அதுதான் நியாயம் என்பார்கள்.

said...

நாதரே, நமக்கு அரசியல் வராதுங்க. வந்திருந்தா 7 வருஷத்துக்கு முந்தி லண்டன்லே ஒரு சீனியர் மானேஜ்மெண்ட்லே இருந்திருப்பேன். நான் சாதரண MCM (Middle Class Mama)or TPV (Thinnai Pechu Verar)

said...

என்னாது சின்ன புள்ள தனமா இன்னும் கலர் டி.வி பத்தி பேசுவீங்க.
இப்பொ அம்மா என்ன சொல்லி இருக்காங்க தெரியும்ல, "+2 பாஸான எல்லா மாணவ மாணவியருக்கும் கம்ப்யூட்டர் இலவசம்"
இதான் இப்போ ஹாட் டாபிக்.
அதப் பத்தி பேசுங்கப்பா???

said...
This comment has been removed by a blog administrator.
said...

ப்ரசன்னா,

இலவசம் என்பது அன்றாடம்.

அதனுடைய சைட் எபெக்ட் தான் சூப்பர் . டிவி = நிரோத்

கம்யுட்டர் = ?

அந்த சைட் எபெக்ட் பற்றிதான் பேச்சே

said...

//
என்னாது சின்ன புள்ள தனமா இன்னும் கலர் டி.வி பத்தி பேசுவீங்க.
இப்பொ அம்மா என்ன சொல்லி இருக்காங்க தெரியும்ல, "+2 பாஸான எல்லா மாணவ மாணவியருக்கும் கம்ப்யூட்டர் இலவசம்"
இதான் இப்போ ஹாட் டாபிக்.
அதப் பத்தி பேசுங்கப்பா???
//

ஆ ஹா!! தேவை இல்லாம 10 வருஷத்துக்கு முன்னாடி +2 பாஸ் பண்ணிட்டேனே, கோட்டடிச்சிட்டு இப்போ பாஸ் பண்ணிருக்கலாம் போல இருக்கே!!

"கலர் டீ.வி = காண்டம்" ன்னா யாருய்ய சின்னப் புள்ள தனம் ன்றது? ப "குத்து" அறிவுயா அது!!


ஷங்கர்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

நான் கூட பகுத்தறிவுன்னா ஏதோ ஒரு பெரிய விஷயம்னு நினைச்சிகிட்டிருந்தேன்.

:-)

said...

பார்ப்பணரில் இருக்கவேண்டிய இப்பன்னா எங்கேயோ போயிடிச்சே. தேடிப் பிடிச்சு உள்ள போட்டுடுங்களேன்.

அல்லது இதுக்கு ஏதாவது உள்ளர்த்தம் இருக்கா?

நடராஜன்.

said...

சிபி, "பகுத்தறிவு பார் Dummies" அப்படின்னு புக்கே போட்டு 1000 கணக்கான கோடிகள் சாம்பாதித்து விட்டார்கள்

said...

//பகுத்தறிவு பார் Dummies" அப்படின்னு புக்கே போட்டு 1000 கணக்கான கோடிகள் சாம்பாதித்து விட்டார்கள்//

:-)

நான் கூட "லெட் அஸ் பகுத்தறிவு"
(Let Us பகுத்தறிவு)ன்னு ஒரு புத்தகம் போடலாம்னு இருக்கேன்!

"பகுத்தறிவு ஃபார் பிகினர்ஸ்" கிடைக்குமா?

said...

ப் போட்டாச்சி

said...

சிபி, செய்ச்சி வந்துருவாங்கில்லே அதுக்கபுறம் பகுத்தறிவு பார் ஃபிரீதான். இன்னும் இரண்டு நாள்தான். யார் செய்ச்சாலும் ஃப்ரீதான்

said...

நாமக்கல் சிபி அவர்களே,

>>>நான் கூட "லெட் அஸ் பகுத்தறிவு"
(ளெட் ஊச் பகுத்தறிவு)ன்னு ஒரு புத்தகம் போடலாம்னு இருக்கேன்!

"பகுத்தறிவு ஃபார் பிகினர்ஸ்" கிடைக்குமா? <<<

என்னுடைய வலைப்பதிவில் கீழ்க்கண்ட லிங்கில் உங்கள் புத்தகத்திற்குத் தேவையான பல விஷயங்கள் உள்ளன.

http://bliss192.blogspot.com/2006/04/blog-post_27.html

அவற்றை வைத்து முதல் அத்தியாயம் அல்லது முன்னுரை எழுதிக்கொள்ளுங்கள்.