Thursday, May 18, 2006

உங்களின் மதிப்பு என்ன?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி " யாருக்கு இது பிடிக்கும்?" எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் "உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்" என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து "இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?" என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி "இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் "கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள் "

17 comments:

said...

நல்லாருக்கு சிவா.யார் சொன்ன குட்டி கதை இது?ஓஷோவா?

said...

Simply Beautiful!!!

said...

நல்ல பதிவுங்க!

said...

அப்படி போடுங்க.நல்லாயிருக்கு.
மனிதர்கள் மனம் அவ்வளவு சரியாக கணிக்கமுடியாது.கன நேரத்தில் முன்னும் பின்னும் போகக்கூடியது...ஊஞ்சல் போல.
ஆனால் ஆட்டுவது தான் யார் என்று தெரியவில்லை.

said...

அருமையான தன்நம்பிக்கையை வளர்க்கும் வார்த்தைகள்.

said...

நல்ல கதை.

சுய இழிவு செய்வதை பெருமையாக நினைப்பதே பழக்கமாகிவிட்ட தேசத்தில் இது போன்ற கதைகள் தெம்பு தருகின்றன.

said...

நல்ல கதை சிவா அண்ணா. ஆனால் பணமும் மனிதனின் மனமும் ஒன்றா? தாக்கினால் வலிக்கவும் புகழ்ந்தால் இனிக்கவும் செய்யத்தான் செய்கிறது.

said...

Poli has put a comment in Kasi's name. Please remove fully.

said...

Siva,

Excellent Post!!

Thanks

said...

சிவா,
நல்ல கதை. தன்னை மட்டுமல்ல பிறரை மதிப்பிடவும் இநதக் கதையை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.

இதுபோன்ற பதிவுகள் படிப்பதே இப்போது அரியதாகிவிட்டது. எல்லாம் திராவிடம் ஆரியம், இந்து முஸ்லிம் கிறித்தவம், என் சாதி ஒன் சாதி என போய்க்கொண்டிருக்கிறது.

என்றுதான் பதிவுகள் மணக்குமோ தெரியவில்லை.

said...

நான் சென்னையில் பணியில் சேர்ந்த போது திரு.விட்டல் என்பவர் induction வகுப்பு எடுத்தார். அவரும் இதே கதையைச் சொல்லி 500 ரூபாய் நோட்டைக் கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டார். எல்லோரும் அவர் எப்ப வகுப்பை முடித்துக் கொண்டு போவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அவரோ வகுப்பு முடிந்ததும் எல்லோரையும் சுனா.பானா வடிவேலு ரேஞ்சில் எல்லோரையும் அனுப்பிவிட்டு, குப்பைத் தொட்டியில் தேடிக் கொண்டிருந்தார்.

said...

நன்றி சிவா.
இக் கதையை நான் சில வருடங்களுக்கு முன் chennaionline.com எனும் இணையத்தளத்தில் படித்தேன். இதே போல் இன்னும் பல அருமையான கதைகள் இத் தளத்தில் உண்டு.

said...

சிவா,
இதோ chennaionline.com ல் வந்த கட்டுரை.
-------------------------------
A well-known speaker started off his seminar by holding up a $ 500/- note. In the room of 200, he asked, "Who would like this 500 note? Hands started going up. He said, "I am going to give this note to one of you but first let me do this."

He proceeded to crumple the note up. He then asked, "Who still wants it? Still the hands were up in the air. "Well, he replied, "What if I do this? And he dropped it on the ground and started to grind it into the floor with his shoe.

He picked it up, now all crumpled and dirty. "Now who still wants it?" Still the hands went into the air. "My friends, you have all earned a very valuable lesson.

No matter what I did to the money, you still wanted it because it did not decrease in value. It was still worth $ 500/-.

Many times in our lives, we are dropped, crumpled, and ground into the dirt by the decisions we make and the circumstances that come our way. We feel as though we are worthless. But no matter what has happened or what will happen, you will never lose your value.

You are special - Don't ever forget it.

[Source : chennaionline.com]

said...

செல்வன். இல்லை. ஒஷோ இவ்வளவு சாப்டா சொல்ல மாட்டார். பட்டன்று சொல்லுவார்

said...

எஸ் கே , ஜீவா

நன்றி

said...

வடூவூர் குமார், இவை நான் படித்தது தான் என்னுடைய படைப்பல்ல

said...

வெற்றி, சுட்டிக்கு நன்றி. நான் எடுத்தது வேறு இடத்திலிருந்து.
//வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்//

இந்த வரிகளை கவனியுங்கள்