Thursday, May 25, 2006

மதுமிதா அவர்களின் கவனத்திற்கு

வலைப்பதிவர் பெயர்: கால்கரி சிவா

வலைப்பூ பெயர் : கனடாவிலிருந்து.......

சுட்டி(url) : http://sivacalgary.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: Calgary

நாடு: Canada

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுள்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 15 பிப்ரவரி 2006

இது எத்தனையாவது பதிவு: 55

இப்பதிவின் சுட்டி(url): http://sivacalgary.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திரு சுவனப்ரியன் அவர்களின் வலைப்பூவில் என் நண்பருக்கு ஒருவருக்கு சவூதியில் நேர்ந்த கொடுமைகளைப் பற்றி வாதம் புரிய போய், தமிழில் தட்டச்ச திரு குமரன் அவர்கள் சொல்லித் தர போய், மற்ற நண்பர்கள் என் அரேபிய அனுபவங்களை ஏன் எழுதகூடாது ஊக்கம் தர என்னாலும் தமிழில் எழுத முடியும் என ஆச்சரியபட்டு ஆரம்பித்து விட்டேன். என்னுடைய முதல் பதிவான ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் க்கு தினமலரில் லிங்க் தந்தார்களா குஷி ஆகிவிட்டது

சந்தித்த அனுபவங்கள்: இனிமை.

பெற்ற நண்பர்கள்: உலகம் முழுவதும் நிறைய

கற்றவை: எழுதுவதற்கு நிறையப் படிக்க வேண்டும்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இன்னும் தெரியவில்லை

இனி செய்ய நினைப்பவை: வலைப்பூவில் பெற்ற நண்பர்களுடன் சேர்ந்து தாய் நாட்டில் அவதியுறும் மக்களுக்கு உதவ வேண்டும். எழுதுவதை செயலிலும் காட்ட வேண்டும்


உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

இயற்பெயர் : சிவா சுட்டி (சுட்டி என்பதும் என் குடும்பத்தின் இயற்பெயர் அதாவது சர்நேம்)

நான் ஒரு சாதரண மிடில் கிளாஸ் குடும்பத் தலைவன். என் ஒரே மகனின் படிப்பிற்க்காக மட்டும் கனடாவிற்க்கு புலம் பெயர்ந்தேன்.


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

வலைப் பூ என்பதே சுதந்திரமான நம் எண்ணங்களை சொல்லத் தானே. நான் உங்களுக்கு பிடிக்காத கருத்தை சொல்வதால் என்னை நீங்கள் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர் என்றும் மத ஜாதி அடையாளங்களை காட்டி ஒதுக்குவதும் தவறென்று நினைக்கிறேன்.

நான் தான் டாப்பு என்று சொல்வதில் தவறில்லை, ஆனால் மீதியெல்லாம் டூப்பு என சொல்லுவது நிச்சயமாக தவறு

15 comments:

said...

//நான் தான் டாப்பு என்று சொல்வதில் தவறில்லை, ஆனால் மீதியெல்லாம் டூப்பு//

சூப்பரரரரரர அப்பு!
சுருக்கமா சொன்னாலும் திருத்தமா சொல்லி இருக்கீங்க!!

I used to say-
if he(anyone) says that i am an intelligent(or smart). I am ready to accept. But if he says that i am the only intelligent(or Smart). F__K OFF...........

said...

என்னங்க சிவா. என் மென்பொருளை முயற்சி செஞ்சீங்களா? பத்து நிமிஷம் இருந்தா செட்டப் பண்ணிடலாம்.

said...

ரமணி, இன்று சாயங்காலம் செய்துவிடுவேன்

said...

உங்களுக்கு நல்லா இயல்பா எழுத வருது சிவா.இமேஜ் வட்டத்துக்குள் சிக்காமல் எழுதுகிறீர்கள்.எனக்கென்னவோ 100 பதிவு போட்டுட்டா நம்மை பத்தி முழுமையா எல்லாரும் தெரிஞ்சுக்குவாங்க,ஒரு இமேஜ் விழுந்துடும்னு தோணுது.

said...

//இமேஜ் வட்டத்துக்குள் சிக்காமல் எழுதுகிறீர்கள்.//
அப்படியா?!!

said...

100 பதிவு எல்லாம் உங்களுக்குத் தேவையாய் இருக்கலாம் செல்வன். நீங்க முத்திரை குத்த கொஞ்சம் தயங்கற ஆளா இருக்கும். ஆனா முத்திரைத் தொழிலாளர்களுக்கு 2 பதிவு சே சே 2 பின்னூட்டம் போதும்; வந்து குத்து குத்துன்னு குத்திடுவாங்க - முத்திரையைத் தான் சொன்னேன். :-)

அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் தொழிலாளர்களுக்கு வேண்டியது ஒரே ஒரு வார்த்தை தான். அது போதும்.

said...

பொன்ஸ் அக்கா

இமேஜ்னு சொன்னது சில பதிவுகளில் போனால் இன்னது தான் கிடைக்கும்னு எல்லாருக்கும் தெரிஞ்சுரும்.இந்த பதிவில் நகைச்சுவை மட்டுமே கிடைக்கும்,இதில் அரசியல்,இதில் ஆன்மிகம்,இதில் அங்கதம்,இதில் சமூகநீதி என வகைப்படுத்தப்பட்டுவிடும்.

சிவா பதிவில் ஜிகர்தண்டா முதல் ஓஷோ,கொத்தனார்,நீமோ என அனைத்து தலைப்பும் வருகின்றன.அதிகம் எழுத எழுத பதிவுகளில் வெரைடி காட்டுவது சிரமம்.

மற்றபடி -, + குத்துவதற்கு காரணம் வேறு வேண்டுமா என்ன?

said...

//சிவா பதிவில் ஜிகர்தண்டா முதல் ஓஷோ,கொத்தனார்,நீமோ என அனைத்து தலைப்பும் வருகின்றன.அதிகம் எழுத எழுத பதிவுகளில் வெரைடி காட்டுவது சிரமம்.//
ஓக்கே ஓகே :) புரியுது :)

said...

//
அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் தொழிலாளர்களுக்கு வேண்டியது ஒரே ஒரு வார்த்தை தான். அது போதும்.
//

சரியாகச் சொன்னீர்கள்...

Judge not, that ye be not judged. (Mathew 7:1) என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது...

வஜ்ரா ஷங்கர்.

said...

//
அதனால எத்தனை பதிவு எழுதுனாலும் சரி; முத்திரைத் தொழிலாளர்களுக்கு வேண்டியது ஒரே ஒரு வார்த்தை தான். அது போதும்.
//

சரியாகச் சொன்னீர்கள்...

Judge not, that ye be not judged. (Mathew 7:1) என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது...

வஜ்ரா ஷங்கர்.

said...

//2 பதிவு சே சே 2 பின்னூட்டம் போதும்; வந்து குத்து குத்துன்னு குத்திடுவாங்க - முத்திரையைத் தான் சொன்னேன். :-) //

இப்படி குத்த போயிதானே தமிழ் மணத்தில் குதிக்க வேண்டியதாகிவிட்டது

said...

செல்வன், நானும் கொஞ்ச நாள் மார்கெட்டிங் பண்ணினேன்.

இப்படி வெரைட்டிக் காட்டினால்தான் வியாபாரம் நடக்கும் எனக்கு நல்லாவே தெரியும்.

மேலும் "மாற்றம் மற்றும் தான் நிரந்தரம்" என்பதில் என் அசையா நம்பிக்கை

said...

பொன்ஸ், என்னுடைய இமேஜ் என்னவென்று நினைத்திருந்தீர்கள்

said...

ஷங்கர், எப்படி ஐயா பைபிளை இந்த அளவிற்க்கு மனப்பாடம் செய்துள்ளீர்கள்

said...

நான் பைபிள் படிப்பேன்...டோரா படிப்பேன்.....கார்ல் மார்க்ஸ் எண்ணங்களை தொகுத்து எழுதப்பட்ட "டாஸ் காபிடல்" கூட இந்த லிஸ்டில் சேர்த்துப்படிப்பேன்...

இதைவைத்துக் கொண்டு தானே எல்லா பாலிடிக்ஸும் நடக்கிறது.!

வஜ்ரா ஷங்கர்.