Tuesday, February 28, 2006


நீங்கள் நடிக்க வந்திருக்கவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?

வருடம் 1989

இடம் சென்னை

நேரம் சனிக்கிழமை முற்பகல் நேரம்

எனக்கு கல்யாணம் ஆகி 1 மாதம் தான் ஆகியிருந்தது. நான் கையில் ஒரு தமிழ் வார இதழில் ஒரு நடிகை போட்டோ உள்ள படத்தை விரித்து வைத்துக் கொண்டு பகல் கனவு கண்டுக் கொண்ட்டிருந்தேன். அப்போது என் மனைவி என் அருகில் வந்து சோகமாக கண்ணீர் தளும்ப " ஏன்னா நமக்கு கலுயாணமாகி 1 மாசம்தான் ஆயிருக்கு அதுக்குள்ளேயே இந்த நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்ரீங்களே இது நாயமா" என விசும்பினாள். நானும் " இல்லேமா இது ஒரு வித்தியாசமான பகற் கனவு சொல்றேன் கேளு" என ஆரம்ப்பித்தேன் அவளும் இன்ட்ரெஸ்டாக கேட்க ஆரம்ப்பிததாள் (கல்யாணமான புதில்லையா? அதனாதான்). " இந்த அக்ட்ரஸ்கிட்டே நீங்கள் நடிக்க வந்திருக்கவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்? என ஒரு கொஸ்டின் அதுக்கு அவளும் இஞ்ஜினியர் ஆகியிருப்பேன்னு பதில் சொல்லிருக்கா. இதே கொஸ்டினே என் கிட்டே வந்து நீங்க இஞ்ஜினியர் ஆகவில்லையென்றால் என்ன ஆகியிருப்பீர்கள் என்னு கேட்டா நான் என்ன சொல்லியிருப்பேன் என பகற்கனவு கண்டுக்கொண்ட்டிருந்தேன்" என்று சொல்லி நிறுத்தினேன். அவளும் "மிஸ்டர் சிவா, நீங்க இஞ்ஜினியர் ஆகவில்லையென்றால் என்ன ஆகியிருப்பீர்கள்?" என ஒரு நிருபர் போல் மோனோஆக்ட் கொடுத்தாள்.நானும் "சினிமாவில் சேர்ந்து ஒரு நல்ல டான்ஸ் மாஸ்ட்டர் ஆகியிருப்பேன்" என்றேன். என்மனைவி " ஆஹா, நிஜமாகவே வித்தியாசமானக் கற்பனைன்னா உங்களுக்கு. அன்னைக்கி பிங்க் கலர்லே பாண்டும் யெல்லோ கலர்லே சர்ட்டும் ஹை ஹீல்ஸ் சூவும் போடும் போதே நினைச்சேன் உங்களுக்கு இந்த மாதிரி டிபரண்டா ஏதாவது டாலேண்ட் இருக்கும்ன்னு. மல்டி டாலண்டட்ன்னா நீங்க" என சொல்லி அருமையான சிக்கன் 65 செய்து தந்தாள்


16 வருட்ங்களுக்கு பிறகு.........

வருடம் 2005

இடம் கால்கரி

நேரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம்

களைப்பாக ஆபிஸ்லிருந்து வீட்டிற்க்குள் நுழைகிறேன். என் மனைவி தீவிரமாக கூகிளில் எதையோ தேடிக்கொண்டே " இன்னைக்கி வீக் என்ட் டல்லா இருக்கிங்களே என்ன விசயம்" என்றாள். நான் " கனாடாவில் நான் இஞ்ஜினியர் இல்லையாம் டெக்னாலஜிஸ்ட்டாம். நான் இஞ்ஜினியர் ஆகனும்னா ப்ரொப்ஷனல் அஸோசியேஷன்லே ரிஜிஸ்தர் பண்ண வேண்டுமாம். அந்த புரஸீஜரை கொஞ்சம் பாரு" என்றேன். "சரி நீங்க போய் ட்ரஸ் பண்ணிட்டு வாங்கோ என்ன புரஸீஜர்ன்னு பார்த்து வைக்கிரேன்" என்றாள். நான் திரும்பி வந்தவுடன் என்னவள் என்னை பார்த்து மர்ம புன்னகை புரிந்து கொண்டே " ரிஜிஸ்ட்ரேஷனுக்கு மூணு ஸ்டெப் இருக்கு.

1 உங்க மார்க் லிஸ்டை யுனிவர்சிடியிலிருந்து கொடுக்கணும்,

2 நாலு பேருடைய ரெபரன்ஸ்,

3 Ethics and Law எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணனும்.

மொத ரெண்டும் ஈஸி. எக்ஸாமெல்லாம் எழுதி இந்த வயசிலே உங்களாலே பாஸ் பண்ண முடியாது So நீங்க கனவு கண்ட மாதிரி டான்ஸ் மாஸ்ட்டர் ஆயிடுங்க்கோ. கால்கரிலே நெறய டான்ஸ் ஸ்டூடியோ இருக்கு அன்ட் நிறைய வகன்ஸியும் இருக்கு" என நக்கல் செய்தாள்.

இந்த வயதில் இந்த தொப்பையுடன் டான்ஸா. அதெல்லாம் வேண்டாம்
படி சிவா.. படி என்று படித்து எக்ஸாமை பாஸ் செய்து விட்டேன் .
என்னுள் இருந்த டான்ஸ் மாஸ்ட்டரை எட்டி உதைத்து விட்டேன் என இறுமாப்பில் இருந்த என்னை நேற்றைக்கு வந்த லெட்ட்ர் என்னுடைய பிங்க் பாண்ட்டையும் யெல்லோ சர்ட்டையையும் தூரத்தில் காட்டுகிறது. அஸோஷியஷனிடமிரிந்து நான் சின்ன வயதில் எஞ்ஜினியரிங் எக்கானமிக்ஸ் படிக்கவில்லையாம் அதனால் இப்போது படித்து விட்டால் நான் இஞ்ஜினியராம் என்று லெட்டர் வந்திருந்தது.

இல்லையென்றால் நான் டான்ஸ் மாஸ்ட்டரா?

இப்போது என் தொப்பையைத் தூக்கிக் கொண்டு எனக்கும் என் மகனுக்கும் யுனிவெர்சிடியில் அட்மிஸனுக்கு அலைந்துக் கொண்டிருக்கிறேன்

ஆகையால் நண்பர்களே உங்களுக்குள் உள்ள திறமையைப் பற்றி சிறு வயதில் பீற்றிக் கொண்ட்டால், பிற்க்காலத்தில் அசடு வழிய நேரிடும். மனைவியற்க்கு ஞாபக சக்தி மிக அதிகம்.

Monday, February 27, 2006

வெளி நாட்டில் என்னை திகைக்க வைத்த கேள்விகள்

--------------------------------------------------------------------------


1. கனாடா விமான நிலையத்தில்
கனாடா குடியேற்ற அதிகாரி : இவர் உஙகள் மனைவியா?
நான் : ஆம்
கனாடா குடியேற்ற அதிகாரி : இவர் உங்கள் மகனா?
நான் : ஆம்
கனாடா குடியேற்ற அதிகாரி : உங்கள் மனைவியின் மகனும் தானே?நான் : ????

-----------------------------------------------------------------------------------------------
2. கனாடாவில் உள்ள அமெரிக்க தூதரகம்
அதிகாரி: உங்களுக்கு அணு/வேதியியல்/உயிரியியல் ஆயுதங்களை உருவாக்கவோ, இயக்கவோ தெரியுமா?

நான் : ????

--------------------------------------------------------------------------------------------

3. லாஸ் வேகாஸ் தெருவில்

தரகர் : அழகானா பெண்கள் உங்களுக்குக்காக காத்திருகிறார்கள். உங்களுக்கு விருப்பமா?

நான் : விருப்பமில்லை

தரகர் : அப்படியென்றால் கட்டழகு ஆண்கள் வேண்டுமா?

நான் : ????

----------------------------------------------------------------------------------------
கால்கரி விமான நிலையத்தில் 3 வாரங்களாக தொடர்ந்து வாரம் ஒருமுறை பக்கத்து சீட்டில் உடன் பயணிக்கும் 55 வயது மூதாட்டி : இன்று இரவு நாம் இருவரும் டின்னர் அருந்தலாமா?

நான் : ஏன்?

மூதாட்டி : அட லூஸூ நான் உன்னை டேட்டிங்க்கு அழைக்கிறேன்

நான் : நற.. நற..

அடுத்த வாரத்திலிருந்து வெஸ்ட் ஜெட்டிலிருந்து ஏர் கனாடாவிற்க்கு டிக்கட்டுக்களை மாற்றி என் கற்பைக் காப்பாற்றிக் கொண்டேன்

Saturday, February 25, 2006

பாலைவன ரோஜாக்கள்

பாலைவனத்தில் ரோஜக்கள் பூக்குமா? பூக்கும். நிறைய உரமிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு குழந்தையை போல் வளர்த்தால் அழகான ரோஜாக்களும் குண்டு மல்லியும் நன்றாக வளர்ந்து உங்கள் தோட்டத்தை அழகிய பூங்காவனமாக மாற்றும்.
நான் சொல்ல வருவது வண்ண வண்ண மலர்களைப் பற்றி அல்ல. மண்ணிற்க்கு அடியில் பூக்கும் மணல் ரோஜக்களைப் பற்றி. சௌதி அரேபியாவின் கிழக்கு மாநிலத்தில் 5 வருடங்கள் வாழ்ந்தேன். இங்குதான் உலகின் 1/4 பாகம் கச்சா எண்ணைக் கிடைக்கிறது.
என் நண்பர்களுடன் 4 வீல் ட்ரைவ் காரை எடுத்துக் கொண்டு பாலைவன சாவரி செய்வது தனி த்ரில். அப்பாலைவனங்களில் சுமார் 1 அடியிலிருந்து 3 அடி வரைத் தோண்டினால் மணலில் செய்த அழகிய ரோஜாப் பூக்கள் கிடைக்கும் மேலே உள்ளப் படத்தை காண்க.
இவை எப்படி உருவாங்கின்றன? சிறு விங்ஞான விளக்கம்:
கடல் நீர் சில சமயம் பொங்கி பாலைவனத்தில் புகுந்துவிடும். இந்நீர் வற்றி அதில் உள்ள ஜிப்ஸம் பொன்ற கனிமங்கள் மணலுடன் சேர்ந்து படிமங்களாக உருவாகும். அவை ரோஜா போல வடிவம் பெரும். இது இன்னும் ஒரு இயற்க்கையின் விளையாட்டு.


p.s. Picture from wikipedia

Tuesday, February 21, 2006

ஏன்.....ஏன்....ஏன்.....

----------------------------------------------------------------------------------


1. ஆதிசங்கரர் அத்துவைதத்தை போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?

2. நபிகளார் ஏகத்துவத்தை போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?

3. "லவ் ஆல் .. சர்வ் ஆல் (Love All...Serve All) " இதை ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்கள் போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?

4. "நான் மதங்களை எதிர்க்கவில்லை, மதத்தன்மையைத்தான் எதிர்க்கிரேன்" என்று ஓஷோ போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?

5 ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாசப் பயிற்ச்சியை போதிப்பதற்க்கு முன்னும் அவர் போதித்தற்க்கு பிறகும் அதைப் பற்றி போதித்தவர்களும் போதிப்பவர்களும் அநேகர், ஆனால் இவரை மட்டும் பல கோடி மக்கள் பின்பற்றக் காரணம் ஏன்?

Friday, February 17, 2006வாசித்தாலும்....வாசிக்காவிட்டாலும்...ஒரு மலையாளக் குறள்


என்னுடைய கொங்கணி மொழி பேசும் நண்பர் சொன்ன நெஞ்சில் நின்ற ஒரு மலையாளக் குறள். இதை இயற்றியது ஒரு புகழ்ப் பெற்ற மலையாள எழுத்தாளர். பெயர் ஞாபகம் இல்லை. அதன் தமிழ் ஆக்கம் இதோ.

வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் வளரும் வாசித்தால்
விளையும் வாசிக்காவிட்டால் வளையும்

வாசிப்பது = கல்வி பெறுவது


இதைத் தமிழ்ப் படுத்தியதும் அதே கொங்கணி நண்பர். அவருடைய மொழித் திறமையைக் கண்டு அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன். அவர் கொங்கணம், தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, மற்றும் அரபி மொழிகளில் சரளமாக பேசுவது தனி அழகு.

Thursday, February 16, 2006


ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்.......ராத்திரி வானத்தில் கோலமிடும்....
இயற்க்கையின் அற்புத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அதை பற்றி என்னுடைய அனுபவமும் சிறு விஞ்ஞான விளக்கமும்.
நான் கனாடா வந்தப் புதிதில் கால்கரிக்கு வடேக்கே 700 கி.மீ தொலைவில் உள்ள் பொர்ட் மக்முர்ரே என்ற ஊரில் உள்ள எண்ணைச் சுத்திகரிப்ப்பு தொழிற்ச்சாலையில் பணிப் புரிந்து வந்தேன். காலை 5.30 கம்பெனி பஸ் வரும். சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் தொழிற்ச்சாலைக்கு சென்று வ்விடலாம். குளிர் காலத்தில் சூரிய உதயம் காலை 9 மணிக்குத்தான். காலை 5.30 மணிக்கு வானம் கும்மிருட்டாக இருக்கும். குளிருன் கடுமையாக இருக்கும். நான் - 50 டிகிரி C வரை பார்திருக்கேன். ஒரு குளிர் கால காலையில் பஸ்ஸில் ட்ரைவர்க்கு அருகாமையில் அமர்ந்து பயணித்தப் போது அந்த அற்புதக்காட்சியைக் கண்டேன்.
திடீரென்று அடிவானத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வர்ணங்கள் தோன்றி சிறிது நடனம் ஆடி மறைந்தது. நான் கண்டது கனவா என்று ஆச்சரியம். பஸ்ஸின் பின் சீட்டை திரும்பி பார்த்தால் எல்லோருன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நானும் துணிந்து ட்ரைவரிடம் அந்த வர்ணகோலத்தைப் பார்தீர்களா? என கேட்டேன். அவரும் "ஓ அருமையான காட்சி....நீங்க ஊருக்கு புதுசா? இதை நார்த்ன் லைட்ஸ் அல்லது அரோரா போரீயாலிஸ் என்று அழைப்பார்கள்" என்று கூறி கவனமாக ஓட்ட ஆரம்பித்தார்.
ஆபிஸ் சென்றதும் "னார்த்ன் லைட்ஸ் அல்லது அரோரா போரீயாலிஸ்" என்று கூகுளினேன். நிறைய விவரங்கள் கிடைத்தன. அதில் கிடைத்த படம் ஒன்று மேலே உள்ளது.
கூகுளில் நான் படித்த விஞ்ஞான விளக்கம் இதோ:
இந்த நிகழ்வு சூரியனிடமிருந்து உருவாகிறது. சூரியனில் அன்றாடம் நடக்கும் வெடிப்பில் சில சூரியத் துகள்கள் சிதறி நொடிக்கு 300 முதல் 1000 கி.மீ வேகத்தில் பூமீயை நோக்கி பயணிக்கும். அத்துகள்கள் பூமியை நெருங்கும் போது , பூமியின் காந்த மண்டலம், இத்துகள்களை பூமியின் துருவங்களை நோக்கி திருப்பிவிடும். அவை பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும் பொது கொழுந்து விட்டு எரியும். அந்த ஒளித் துகள்கள் தான் அந்த அற்புத வர்ண ஜாலத்திற்க்கு காரணம்.
இந்த இயற்க்கையின் வண்ணக்கோலத்தை நார்வே, சுவீடன், கிரீன்லேண்ட், அலாஸ்க்கா, வட கனடா, வட ரஸ்யாவில் காணலாம்

Wednesday, February 15, 2006


சுதந்திரம்....

"தன்னைப் போல் ஒருவனை உருவாக்குவதும், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்:ளுவத்தும் மனித இயல்பு. மரணம் நிச்சயம். இதற்க்கு இடையே உள்ள பந்தம், பாசம், மதம், சம்பிரதாயம் போன்றவைகள் இச்சமுதாயத்தால் நம் மேல் திணிக்கப்பட்டவைகள்"
மேலே உள்ள வார்த்தைகள் ஒரு தத்துவஞானியொ அல்லது ஓஷோ போன்ற குருவோ கூறியிருந்தால். அஹா...அருமை என்று சொல்லி இந்த வாக்கியத்தை காலப்போக்கில் மறந்திருப்பேன். ஆனால் இவ்வார்தைகள் எனது 15 வயது மகனிடம் இருந்து வந்ததால் என் நெஞ்சில் பதிந்து விட்ட்து. டிபிககல் மிடில் கிளாஸ் மாமா போல் ஒரு நாள் டின்னெர் டேபிலிள் என் மகனுக்கு தாய் பாசம் தான் உயர்ந்தது என அட்வைஸ் செய்த போது, என் மகனிடமிருந்து கிடைத்த பதில். நானும் என் மனைவியும் பிறகு எதுவுமே பேசவில்லை.
டின்னெருக்குப் பின் அவனுடைய அறைக்கு சென்றேன். போன வருடம் வரை சிப்ஸும் பெப்ஸியும் சாப்பிட்டுக் கொண்டும், வீடியோ கேம் ஆடிக்கொண்டும், பீட்டெர் வீட்டுக்கொண்டும்,பாய்ஸ் திரைப்படத்தில் வரும் பையன்கள் போல் ட்ரெஸ் செய்து கொண்டும் இருந்தவன் எப்படி என்ற சிந்தனையுடன்.
என் மகனும் "நீ வருவே என்று எக்ஸ்பெக்ட் செஞ்ஜேன்" என கூறி பேச ஆரம்பித்கான். "ப்ரீடம் பா ப்ரீடம்.... இந்த ஊர் ஸ்கூல்லே ப்ரீயா திங்க் பண்ண சொல்றா. அபுதாபி ஸ்கூல்லே டீச்சர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வாந்தி எடுத்தால் 100 மார்க் வாங்கி விடலாம். அங்கே லைப்ரரி போனா நம்க்கு பிடித்த மாதிரி புக்ஸ் கிடைக்காது, இன்டெர்னெட்ல் சென்ஸார், ஸ்கூல்லே எப்போ பாரு பர்ஸ்ட் மார்க் வாங்குபவளிடம் கம்பேர் செய்து மற்றவர்களை கிண்டல் செய்வது இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை போதா குறைக்கு எனக்குப் பிடிக்காத அரபி கம்பல்ஸரி. அந்த அரபி டீச்சரின் இஸ்லாமிய போதனை என்ற டார்ச்சரை அனுபவித்து வந்தால், வீட்டில் பஜனை செய்ஞ்சி நீ டார்ட்ஜெர் பண்ணுவே. என்னை திங் செய்ய விட்டிங்களா. கனடாவிலே என்ன திங் பண்ண விட்றாங்க. எல்லாம் ப்ரீயாகிடைக்குது. போன வாரம் நீயும் நானும் லைப்ரரிக்கு போய் கார்ல் சேகனின் டெமன் ஹான்டட் ஒர்ல்ட் என்ற புக்கை எடுத்தோம்அதில் உள்ள வரிகள் தான் இவை" என விளக்கம் கூறி மேலும் தொடர்ந்தான் " அப்பா...நான் ஒரு ஏதிஸ்ட் ப்பா... எனக்கு எந்த மதத்திலும் நம்ப்பிக்கை இல்லை...எனக்கு சுதந்திரத்தில் நம்ப்பிக்கை இருக்கிறது" என்று கூறி என் முகத்தை நோக்கினான். நான் அதற்க்கு " சுதந்திரம் என்ற பெயரில் என் மத நம்பிக்கைகளை கிண்டல் செய்தால் எனக்குப் பிடிக்காது" எனக் கூறினேன்அதற்க்கு அவன் புன்னகைத்துவிட்டு, தொடர்ந்தான் " அப்பா... என்னுடைய ப்ரண்ட்ஸை பாருப்பா... போரிஸ் ஒரு ரஷ்யன்,, ஃப்லீக்ஸ் ஒரு சீனன் இவர்கள் இருவரும் என்னைப் போல் ஏதீஸ்ட்ஸ், அமோல்... இந்தியன் ஒரு ராம பக்தன்...மோனிக்கா ஒரு ஜு..அஹ்மத் ஒரு இஸ்லாமியன்..லூபோ ஒரு ஒரு செர்பியன் ஆனால் ஒரு இந்து உன்னை விட அவனுக்கு அதிக பஜனைகள் பாடத்தெரியும். நாங்கல்லாங் எல்லா ஃப்லீங்ஸையும் ரெஸ்பெக்ட் செய்ஞ்ச்சி ஃப்ரீயா இருப்போம் கவல படாதே"
நான் மேலும் பேச ஒன்றும் இல்லை. சுதந்திரதிற்க்கு இவ்வளவு சக்தியா என வியந்து கொண்டே ...படுக்கையில் புரண்டு காலை 4 மணிக்கு தூங்கி போனேன்

தலைக்கு 400 டாலர்

நான் 1978 க்கு பிறகு தமிழில் எழுதுவதை நிறுதிவிட்டேன்.எனனாடா பெரிய எழுத்தாளான் மாதிரி பேசுறான்னு பார்க்க்ரிங்க்காளா.... 1978லே பி யு சி படிக்கும் போது தமிழ் பரிட்சையில் கட்டுரை எழுதினேன் அப்புறம் எஞ்ஜினீயரிங் காலேஜ்லெ சேர்ந்து பீட்டர் ஆயிட்டேன். அதுக்கப்புரம் நட்சதிர பதிவாளர் சிவா கொடுத்த தைரியத்தில் இந்தக் கட்டுரை:
உலகில் வாழ்வதற்க்கு 3 வது சிறந்த நகரம் கால்கரி. முதல் நகரம் ஜுரீச், இரண்டாவது வான்கூவர்.
கால்கரி நகரம் கனாடாவில் உள்ள ஆல்பெர்டா மாநிலத்தின் வணிகத் தலைநகரம் ஆகும். அடியேன் கடந்த 2 வருடங்களாக வாழ்வது இங்குதான்.
கால்கரி டொரண்டோவிற்கு மேற்கே 3 மணி விமான பயண தூரத்திலும் அல்லது வான்கூவர்லிரிந்து கிழக்கே 1 மணி விமான பயண தூரத்திலும் உள்ளது. தெற்க்கே 3 மணி நேரம் காரில் பயணித்தால் அமெரிக்காவின் மாண்டெனா மாநிலத்தை அடைந்து விடலாம்
ஆல்பெர்டா மாநிலதில் உலகிலேயெ சவூதி அரேபியாவிற்க்கு அடுத்து அதிக அளவில் எண்ணை உள்ளது. இங்கு எண்ணை மணலுடன் கலந்து உள்ளதால் அதைப் பிரித்தெடுக்க அதிக செலவகும். சுமார் ஒரு பீப்பாய்க்கு 19 டாலர் செலவாகும். இப்போது எண்ணையின் விலை பீப்பாய்க்கு சுமர் 59 டாலர் அல்லது அத்ற்க்கும் மேல். ஆகையால் நிறைய புராஜெட்டுகள் வருகின்றன அதனால் என்னை பொன்ற பொறியாளர்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கிறது. நானும் அரபு நாட்டிலிருந்து "விடுதலை.....விடுதலை" என்று ஓடி வந்து விட்டேன். புஷ் இன்னும் 1 வருடத்தில் ஆல்பெர்ட்டாவை ஆக்கிரமிப்பு செய்வார் என கனேடிய மற்றும் அமெரிக்கப் பத்திரிக்கைகள் கார்ட்டூன் வரைகின்றன. வரும் வருடங்களில் ஆல்பெர்ட்டாவைப் பற்றி நிரைய செய்திகள் வரும். சௌதி சேக்குகள் இங்குள்ள பெரிய பெரிய ஹோட்டல்களை வாங்க ஆரம்பித்து விட்டார்கள். சீன மற்றும் நமது இந்திய அரசாங்கங்களும் எண்ணை மணலை வாங்க போட்டி போடுகின்றன...........
அது சரி தலைப்புக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்னயா சம்பந்தம்?
வெய்ட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்.......
2005 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஆல்பெர்ட்டா சுமார் 2 பில்லியன் டாலர்களை மிச்சம் பிடித்து விட்ட்து. அதை என்ன செய்வது என்று தெரியாமல் மக்களுக்கேத் தலைக்கு 400 டாலராக திருப்பித் தந்துவிட்டனர் இந்த ஊர் அப்பாவி அரசியல்வாதிகள்.........
(நம்ம ஊர் கரை வேஷ்டிகள் இந்த செய்தியை வெளியிட்டு நம் மக்களை உசுப்பி விடவேண்டாம் என தத்தம் டீவி சானல்களுக்கும் பத்திரிக்கைகளுக்கு ஆணையிட்டு விட்டு பாரில் "இந்த வெள்ளைக்காரனுக்கு அறிவே இல்லெயா.... எவனாவது கஷ்ட்டப் பட்டு வசூலிச்ச வரி பணத்தே மக்களுக்கே திருப்பிக் கொடுப்பாங்களா? செம மாய்க்காங்களா இருப்பாங்க போலிருக்கு" என என் ஆர் ஐ ரேஞ்சுக்குப் புலம்பிக் கொண்டிருந்தனர்)