Friday, February 17, 2006



வாசித்தாலும்....வாசிக்காவிட்டாலும்...ஒரு மலையாளக் குறள்


என்னுடைய கொங்கணி மொழி பேசும் நண்பர் சொன்ன நெஞ்சில் நின்ற ஒரு மலையாளக் குறள். இதை இயற்றியது ஒரு புகழ்ப் பெற்ற மலையாள எழுத்தாளர். பெயர் ஞாபகம் இல்லை. அதன் தமிழ் ஆக்கம் இதோ.

வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் வளரும் வாசித்தால்
விளையும் வாசிக்காவிட்டால் வளையும்

வாசிப்பது = கல்வி பெறுவது


இதைத் தமிழ்ப் படுத்தியதும் அதே கொங்கணி நண்பர். அவருடைய மொழித் திறமையைக் கண்டு அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன். அவர் கொங்கணம், தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, மற்றும் அரபி மொழிகளில் சரளமாக பேசுவது தனி அழகு.

4 comments:

said...

Hi Siva,

Did you work for Syncrude or Suncor?

-Bobby
Suncor
FortMac.

said...

புரியலையே சிவாண்ணா. கொஞ்சம் விளக்குங்களேன்.

said...

Bobby, I worked with Albian Sands and was a commuter.

Thanks for visiting my blog

Calgary Siva

said...

குமரன் தம்பி,

உங்களுக்கே புரியவில்லையா? ஆச்சரியம்..

கல்விக் கற்றாலும் கற்க்காவிட்டாலும் மனிதன் வளர்வான். கற்றவன் பசுமையான பயிர் போல் விளைந்து அனைவற்க்கும் உதவுவான். கற்க்காதவன் வளைந்த மரம் போல் பயனற்றுப் போவான்.