பாலைவன ரோஜாக்கள்
பாலைவனத்தில் ரோஜக்கள் பூக்குமா? பூக்கும். நிறைய உரமிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு குழந்தையை போல் வளர்த்தால் அழகான ரோஜாக்களும் குண்டு மல்லியும் நன்றாக வளர்ந்து உங்கள் தோட்டத்தை அழகிய பூங்காவனமாக மாற்றும்.நான் சொல்ல வருவது வண்ண வண்ண மலர்களைப் பற்றி அல்ல. மண்ணிற்க்கு அடியில் பூக்கும் மணல் ரோஜக்களைப் பற்றி. சௌதி அரேபியாவின் கிழக்கு மாநிலத்தில் 5 வருடங்கள் வாழ்ந்தேன். இங்குதான் உலகின் 1/4 பாகம் கச்சா எண்ணைக் கிடைக்கிறது.
என் நண்பர்களுடன் 4 வீல் ட்ரைவ் காரை எடுத்துக் கொண்டு பாலைவன சாவரி செய்வது தனி த்ரில். அப்பாலைவனங்களில் சுமார் 1 அடியிலிருந்து 3 அடி வரைத் தோண்டினால் மணலில் செய்த அழகிய ரோஜாப் பூக்கள் கிடைக்கும் மேலே உள்ளப் படத்தை காண்க.
இவை எப்படி உருவாங்கின்றன? சிறு விங்ஞான விளக்கம்:
கடல் நீர் சில சமயம் பொங்கி பாலைவனத்தில் புகுந்துவிடும். இந்நீர் வற்றி அதில் உள்ள ஜிப்ஸம் பொன்ற கனிமங்கள் மணலுடன் சேர்ந்து படிமங்களாக உருவாகும். அவை ரோஜா போல வடிவம் பெரும். இது இன்னும் ஒரு இயற்க்கையின் விளையாட்டு.
p.s. Picture from wikipedia
1 comments:
நல்ல தகவல் சிவா அண்ணா. இது தான் முதல் முறை நான் ஒரு மணல் ரோஜாவைப் பார்ப்பது.
Post a Comment