Monday, February 27, 2006

வெளி நாட்டில் என்னை திகைக்க வைத்த கேள்விகள்

--------------------------------------------------------------------------


1. கனாடா விமான நிலையத்தில்
கனாடா குடியேற்ற அதிகாரி : இவர் உஙகள் மனைவியா?
நான் : ஆம்
கனாடா குடியேற்ற அதிகாரி : இவர் உங்கள் மகனா?
நான் : ஆம்
கனாடா குடியேற்ற அதிகாரி : உங்கள் மனைவியின் மகனும் தானே?நான் : ????

-----------------------------------------------------------------------------------------------
2. கனாடாவில் உள்ள அமெரிக்க தூதரகம்
அதிகாரி: உங்களுக்கு அணு/வேதியியல்/உயிரியியல் ஆயுதங்களை உருவாக்கவோ, இயக்கவோ தெரியுமா?

நான் : ????

--------------------------------------------------------------------------------------------

3. லாஸ் வேகாஸ் தெருவில்

தரகர் : அழகானா பெண்கள் உங்களுக்குக்காக காத்திருகிறார்கள். உங்களுக்கு விருப்பமா?

நான் : விருப்பமில்லை

தரகர் : அப்படியென்றால் கட்டழகு ஆண்கள் வேண்டுமா?

நான் : ????

----------------------------------------------------------------------------------------
கால்கரி விமான நிலையத்தில் 3 வாரங்களாக தொடர்ந்து வாரம் ஒருமுறை பக்கத்து சீட்டில் உடன் பயணிக்கும் 55 வயது மூதாட்டி : இன்று இரவு நாம் இருவரும் டின்னர் அருந்தலாமா?

நான் : ஏன்?

மூதாட்டி : அட லூஸூ நான் உன்னை டேட்டிங்க்கு அழைக்கிறேன்

நான் : நற.. நற..

அடுத்த வாரத்திலிருந்து வெஸ்ட் ஜெட்டிலிருந்து ஏர் கனாடாவிற்க்கு டிக்கட்டுக்களை மாற்றி என் கற்பைக் காப்பாற்றிக் கொண்டேன்

19 comments:

said...

55 வயது பேரிளம்பெண் கேட்டதால் ஏர்லைன்ஸை மாற்றினீர்களா அல்லது 25 வயது இளம்பெண் கேட்கவில்லை என்ற கோபத்தில் மாற்றினீர்களா?:-))))

said...

வெளிநாட்ட்லி 55 வயதானாலும் மூதட்டி போலத் தெரியாதே? வயது குறைத்துச் சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன்.

டின்னர்தானே... வீட்டுக்கு வந்துவிடுங்கள் எனச் சொல்லியிருக்கலாமோ?

said...

ஹா..ஹா..ஹா...இங்கே (அமெரிக்காவில்) எல்லாம் சகஜமப்பா :-))..இன்னொன்னு 'நீங்க தண்ணி அடிப்பீங்களா..தம் அடிப்பீங்களா' - என் மனைவியிடம் இங்கே அமெரிக்க ஆஸ்பத்திரியில் வழக்கமாக கேட்கும் கேள்வி :-))

said...

Did you work for Syncrude?

said...

Did you work for Syncrude?
-Bobby
FortMac

said...

Hello MIT Sens,,,
This is balachandar ganesan
T:No: 47402. I am also in cananda now.

said...

செமக் காமெடி தான் போங்க. இது வரை இந்த கேள்விகளில் எதுவும் என்னிடம் கேட்கப் படவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஒரு வேளை கிழவிகளும் டேட்டிங் கூப்பிடாத அளவில் இருக்கிறேனோ என்னவோ? :-)

said...

அட என்னங்க நீங்க. உங்க பெயர்க்காரணம் வேற ஒன்னு நினைச்சேன் :) அப்புறமாத்தான் தெரிஞ்சுது அது ஊர் பேருன்னு.இதுதான் முதல் போஸ்டா? வாழ்த்துக்கள்

அன்புடன்

சிங்கை நாதன்

said...

செல்வன்,

என்னைப் பார்த்து எந்த ப்ளாண்ட்டும் ஜொள்ளவில்லை என்ற கோபம் தான், அடுத்த ஏர்லைன்ஸ்லே ட்ரை பண்ணினேன்

தங்கள் வருகைக்கு நன்றி

கால்கரி சிவா

said...

சிறில், என்ன நக்கலா? ஏற்கனவே நொந்து போயிருக்கேன்.

என் வீட்டுகாரியிடம் இந்த நிகழ்ச்சியை சொன்ன போது அவளும் ஆமாங்க பாட்டிங்க எல்லாம் உங்களைப் பார்த்து ஜொள்ளு விடற்ங்க. போன வார்ம் கூட அந்த முடி வெட்டினப் பாட்டி உங்களப் பார்த்து உன்னுடைய பார்ட்னர் அழகா இருக்கிறதா சொன்னா எனக் கூறி என்னை மேலும் கந்தலாக்கினாள்.

அந்தப் பாட்டியை வீட்டிற்க்கு அழைத்து அவள் என் வீட்டுக்காரியைப் பார்த்து ஜொள்ளினால் என் முதலுக்கே மோசம்.

சிறில் வருகைக்கு நன்றி

said...

நட்சத்திர சிவா, இதெல்லாம் சகஜம் தான்
வருகைக்கு நன்றி

said...

Bobby,

I worked in Albian Sands.

I told you in my previous post

said...

Hello MIT Juns,

Please send me your phone number I will call you. After seeing your T.No I am not wondering why pattis are trying to date me. Mine is 33435, I am 14 years senior to you. I am old, I am accepting the fact. My email address is sivasutty@yahoo.com

said...

Hello MIT Juns,

Please send me your phone number I will call you. After seeing your T.No I am not wondering why pattis are trying to date me. Mine is 33435, I am 14 years senior to you. I am old, I am accepting the fact. My email address is sivasutty@yahoo.com

said...

தம்பி குமரா,

சிறிது காலம் பொறு. பாட்டிகள் அழைக்கும் காலம் வெகுதூரமில்லை

said...

சிங்கை நாதா,

கரிகாலன் இருக்கலாம். கால் கரியாக எப்படி இருக்கமுடியும்.

வருகைக்கு நன்றி

said...

அன்பு நண்பரே.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

said...

கால்கரி சிவா

ரோஜா அணிக்கு நிறைய ஓட்டு இருக்கிறது.மல்லிகை அணிக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

www.holyox.blogspot.com

said...

கேள்வி கேட்பவர்கள் தெளிவாக புரியும்படி (!) கேட்ட கேள்விகள் உங்களுக்கு திகைப்பா?

:)))

நல்ல காமெடிதான் - கேள்வி கேட்ட மக்கள்.